இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 16, 2007


இப்போது வீசுடா குண்டை! வீரச்சாவுக்குத் துணிந்த மாவீரர்கள்அபூசாலிஹ்
ஈட்டி முனையில் நிறுத்தினாலும் ஈமானை இழக்காத சமூகம், உயிரே போனாலும் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என ஆர்த்தெழுந்த வீரமிக்க நிகழ்வு நவம்பர் 18 அன்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
நவம்பர் 18 அன்று பாலஸ்தீன மக்கள் காட்டிய நெஞ்சுரம் யூதப் படைகளை திணறடித்தது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி போராளிகளின் பூமி. அதேநேரம் இஸ்ரேல் தனது மேய்ச் சல் நிலமாகக் கருதி வேட்டைக் காடாக மாற்றியது. திடீர் திடீரென வான் தாக்குதல் நடத்தி படுகொலைகளைத் தொடர்ந்து நடத் திவந்தது.
சமீபத்தில் யூத இனவெறி அரசு நிகழ்த்திய படுகொலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ என்ற மறுப்பாணையைக் கொண்டு செயலற்ற தாக்கியது. இரக்கமே இல்லாத யூத சக்திகளின் பாதுகாவலனான அமெரிக் காவைப் பழிக்காத நெஞ்சமே உலகில் இல்லை என்றானது.
சரி, நவம்பர் 18ல் என்னதான் நிகழ்ந்தது?
இரவானால் பாலஸ்தீன மக்கள் வெண்ணிலவையோ வெள்ளி நட்சத்திரங் களையோ பார்த்திருக்க மாட்டார்கள். பறந்துவரும் இஸ்ரேலியப் போர் விமானங்களையும், அதிலிருந்து சீறிவிழும் ஏவுகணைகளையும், எகிறி விழும் குண்டுகளையும் மட்டுமே பார்த்து வருகிறார்கள். அத்தகைய அச்சமுறு சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு மேலும் ஒரு பேராபத்து சூழ்ந்தது.
தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி அப்பாவிகளைப் படுகொலை செய்து வரும் இஸ்ரேலிய இனவெறிப் படை, பாலஸ்தீனத்தின வடக்கு நகரமான பைத் லஹியாவில் வெய்ல் பரோத் என்ற போராளித் தளபதியின் வீட்டை விமானம் மூலம் குண்டுவீசி தகர்க்கப் போவதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உடனே வெளியேற வேண்டும் அதுவும் அரை மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கெடு விதித்தது.
மக்கள் வெளியேறி விடுவார்கள். அஞ்சி நடுங்கி அவர்கள் ஓடிவிடுவார் கள். அவர்கள் உயிர் அவர்களுக்குப் பெரிதுதானே? அந்தப் பகுதியே காலியாகப் போ கிறது. அதன்பின்னர் நாம் போராளி வெல் பரோத்தின் வீட்டை குண்டு வீசி தரைமட்டமாக்குவோம். அதற்கிடையில் உயிருக்குப் பயந்து வெய்ல் பரோத் சரணடைந்தால் கைது செய்து இழுத்துச் செல்வோம். இல்லையென்றால் குண்டுவீசி வீட்டோடு கொன்று விடுவோம் என்றெல்லாம் வெறியோடு காத்திருந்த இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு மிகப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.
வெய்ல் பரோத் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு மாறாக அந்த அபாயப் பகுதியை நோக்கி மொய்க்கத் தொடங்கினர். 10 இருபதானது. 20 ஐம்பதானது. ஐம்பது பல நூறுகளானது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பொது மக்கள் யூத ராணுவம் குறிவைத்த பகுதியை நோக்கி குழுமத் தொடங்கினர். இது ஜனநாயக நாட்டில் நடக்கும் அறப்போராட் டம் அல்ல. அப்பாவி மக்களின் குருதி குடிக்கக் காத்திருக்கும் கொலைகார ராணுவத்தின் முன் உயிர் பயம் இன்றி கூடிய மாவீரர் கூட்டம்.
நிஸார் ரையான் என்ற ஹமாஸ் போராளியும் அந்த தீரர்களின் கூட்டத்தோடு இணைந்து கொண்டனர்.
யூத எதிர்ப்பு கோஷங்கள் வான மண்டலத்தை முட்டின. நாங்கள் வீரச்சாவுக்குத் தயார், ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம் என முழங்கினர்.
அல்ஜஸீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் நூல் ஒத்ஹு சம்பவ இடத்திற்கு வந்து இந்த வீர நிகழ்வுகளை உடனுக்குடன் பரப்பத் தொடங்கினார். சாவுக்கு அஞ்சாத கூட்டம் மேலும் மேலும் திரளத் தொடங்கவே, வெறுத்துப் போன யூத ராணுவம் தங்களது தாக்குதல் திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
உலக வரலாற்றில் எங்குமே காண முடியாத நிகழ்வு இது என அல்ஜஸீரா செய்தி யாளர் புகழ்ந்துரைத்தார்.
எதற்கும் அஞ்சாது துணிந்துவிட்ட மக்களின் முன் போர் விமானங்களும், கவச வாகனங்களும் ஏவுகணைகளும் உலக சரித்திரத்தில் முதன்முறையாக புறமுது கிட்டு ஓடின.

சச்சார் அறிக்கை சொல்வது என்ன?அபூசாலிஹ்
தீவிர கண்காணிப்பில் வைத்து பராமரிக்க வேண்டிய அபாய நிலையில் இந்திய முஸ்லிம்களின் நிலை உள்ளது. இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்த சச்சார் கமிட்டியின் முழு அறிக்கையையும் பார்த்தபின் மனிதநேய ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் வேதனையுடன் வெளிப்படுத்திய வாசகங்கள் தான் நாம் மேலே கண்டது.
முஸ்லிம்கள் குறித்து இந்த நாடும், ஏடும் ஏற்படுத்தியிருந்த கற்பிதங்களெல்லாம் கற்பனை என்பதை கடந்த வாரம் சச்சார் கமிட்டி அறிக்கையை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தன் பின்னர் இந்த உலகம் உணர்ந்து கொண்டது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் முகப்பு அட்டை
இந்த நாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்தார்கள், அற்புதமாக நிர்வகித்தார்கள். உள்ளாட்சி முறைகளும், வரிவிதிப்பு முறைகளும் இந்திய மண்ணிற்கு அறிமுகப் படுத்தினார்கள். நாட்டிற்கு ஒரு நிரந்தர ராணுவம் என்பது அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் தான் முதன்முறையாக செயற்படுத்தப்பட்டது. அதுவரை எதிரிநாட்டு மன்னன் படையெடுத்து வருவது தெரிந்தபின் தான் அரண்மனை உப்பரிகையிலிருந்து யுத்த அழைப்பு விடுக்கப்படும். காடுகளில் விறகு பொறுக்கிக் கொண்டி ருந்தவர்களும், பிறவேலைகளில் ஈடுபட்டவர்களும், போட்டது போட்டபடி கிடக்க கையில் கிடைத்த வாள்,வேல்,வில் அம்புகளுடன் போருக்கு ஆயத்தமாவார்களாம். போர் அறிவிப்பு கேட்டவுடன் பயந்து ஓடுபவர்களும் ஏராளம். இத்தகைய நிலையை மாற்றி நிலையான ராணுவம் ஏற்படுத்தினார். கில்ஜி வமிசமன்னன் அலாவுதீன் கில்ஜி. ராணுவத்துக்கு என திடகாத்திர மானவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். படைக்கலன்கள் தயாரிக்கப் பட்டன, பராமரிக்கப்பட்டன.
அவ்வாறே முஸ்லிம்களின் ஆட்சியில்தான் நிலங்கள் சர்வே செய்யப் பட்டன. சாலை வசதிகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டன. மன்னன் ஷேர்ஷாஹ் வின் ஆட்சி இந்தப் பெருமையை தட்டிச் சென்றது. ஷேர்ஷாவின் ஆட்சியில் தான் 80 வயது மூதாட்டியும் தலைமுதல் கால்வரை தங்க நகைகள் அணிந்து, நடுநிசியிலும் செல்லும் அளவுக்கு ஆட்சியின், பாதுகாப்பின் கூர்மை இருந்ததாக வரலாறு கூறுகிறது. முஸ்லிம் ஆட்சியின் பெருமையும் அருமையும் கூறிக் கொண்டிருக்க காலம் போதாது.
முஸ்லிம்களின் ஆட்சிக்கு முற்றுபெற்ற பின் அன்னியரான ஆங்கிலேயர் ஆட்சி வந்தது.
தாய்நாட்டை காக்க முஸ்லிம்கள் வீறுகொண்டு எழுந்தார்கள். வெஞ்சமரில் விளை யாடும் வீரத்தோள்களுடன் போரிட்டு ஆங்கிலேயரை அதிர வைத்தார்கள். சமுதாயத்தின் விகிதாச் சாரத்தை விட அதிகமாக இந்த நாட்டின் விடுதலைக்காக தங்கள் உடல் பொருள் ஆவியை தியாகம் செய்தார்கள்.
நரித்தனமூளை கொண்ட வெள்ளைக்காரர்கள் நயவஞ்சகமாய் சிந்தித்தனர். ஹிந் துக்களையும் இணைத்துக் கொண்டு ஒற்றுமையுடன் போராடும் முஸ்லிம்களுக்கு பாடம்(!) கற்றுக் கொடுக்காமல் இருந்து விட்டால் விஷயம் விபரீதமாகி விடும் என ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது இந்தியாவில் இருந்த ஒரு கூட்டமும் சிந்தித்தது. நாசகார கும்பல் கூடிப் பேசியது. இந்திய நாட்டை துண்டாடும் முயற் சிக்கு முன்னுரை எழுதப்பட்டது. காங்கிரஸின் முன்னனி தளகர்த்தராக விளங்கிய வழக்கறிஞர் முஹம்மதலி ஜின்னா தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார்.
முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் இந்திய வடமேற்கு மாகாணங்களில் தனி நாடு கோரிக்கை ஒருமித்து எழுப்பப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிராந்திய வாதமாக கணக்கெடுக்கப் படாமல் அது மதம் சார்ந்த கோரிக்கையாக பரப்பப் பட்டது. இந்தியா பிளக்கப்பட்டது. காந்தியிடம் மலர்ச்சியில்லை. இந்திய முஸ்லிம் கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந் தனர். ஆங்கிலேயர்களிடமும் இந்தியா வில் சில அதிகார வர்க்கத்தினரிடமும் அளவில்லாத குதூகலம் அவர்களின் மனதை ஆக் கிரமித்தது. ஏற்கெனவே இருந்த இடஒதுக்கீடு சலுகைள் கூட முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டன. அது ஆச்சு அறுபதாண்டுகாலம் இந்திய தேசத்தின் எல்லா சமூக ங்களும் எட்ட முடியாத உயரத்தில் சென்றுவிட அறுபதாண்டுகளாக அதனை அண்ணாந்து பார்த்தபடி காலம் கழிக்கும் அப்பாவி முஸ்லிம் இந்தியன். இவர்களின் வாக்குகளின் வலிமை அறிந்திருந்த அரசியல்வாதிகள் தேனொழுக பேசி ஆட்சிக் கட்டிலைப் பிடித்து பதவிகளில் அமர்ந்தார்கள். பாழாய்போன வாக்குறுதி கள் இவர்களுக்கு பகட்டு பல்லக்குகள் அவர்களுக்கு.
இவர்களின் நிலையை ஆய்வு செய்ய இதுவரை அமைக்கப்பட்ட கமிட்டிகள் தங்கள் ஆய்வுகள் சமர்ப்பிக்காமலும் முழுமையான முறையில் வெளியிடாமலும் இருந்த நிலைக்கு மாறாக நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையிலான பிரதமரின் உயர்மட்டக்குழு முழுமை யான ஆய்வுகளில் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சி யூட்டக் கூடியவை. கல் நெஞ்சங்களையும் கரைய வைக்கக் கூடியது.
இந்திய திருநாடு என்ற எழிலுறு கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் தங்களது கண்ணீராலும், நெந்நீராலும் வார்த்தெடுத்து கட்டமைத்த அந்த திருச்சமூகத் தின் அவலநிலையை சச்சார் ஆய்வுக்குழு விவரிக்கிறது.
2005 மார்ச் 9 உயர்மட்டக் குழுவுக்கு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் அலுவலகம் உத்திரவிட்டது.
நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தலைவராகவும், ஸயீத்ஹமீத், டி.கே.உமன், எம்.ஏ.பாஸித், டாக்டர்.ராகேஷ் பசந்த், டாக்டர் அக்தர் மஜீத் போன்றவர்களை உறுப்பினர்களா கவும், டாக்டர் அபூசாலஹ் ஷரீஃப்லிஐ உறுப்பினர் செயலராகவும் நியமித்து அறிவிக்கப்பட்ட இந்தக்குழு தனது ஆய்வினை மேற்கொண்டது. ஏப்ரல் 21, 2005 அன்று முதல் கூட்டத்திற்குப் பின் கூட்டப்பட்டடு செய்தியாளர் கூட்டத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரதமரின் உயர்மட் டக் குழுவான ராஜிந்தர் சச்சார் ஆய்வுக்குழுவுக்கு தங்களுக்கு தெரிந்த, விவரங் கள் தகவல்களை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர் சச்சார் ஆய்வுக்குழுவின் கோரிக்கை நாடெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாளேடுகளில் விளம்பரமாக வெளியிடப்பட்டது.
மத்திய மாநில அரசுகளின் முக்கிய துறைகளின் அதிகாரிகள், அனைத்து மாநிலங்களிலுமுள்ள தலைமைச் செயலாளர்கள் பிற அமைப்புகள் ரிஜிஸ்ட்ரர் ஜெனரல் ஆஃப் சென்சஸ், நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் (சநநஞ) இந்திய தேர்தல் ஆணையம் சிறுபான்மை ஆணையம், பிற்படுத்தப் பட்டோர் ஆணையம், பல்கலைக்கழகங்கள், நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு காவல் துறை இயக்குநர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் சென்ற போது அந்தந்த மாநில முதல்வர்களையும், அமைச்சரவை சகாக்களையும் இக்குழு சந்தித்தது.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, மத்தியப்பிரதேசம், குஜராத், பிகார் மற்றும் மகராஷ்ட்ரா மாநிலங்களுக்கு சச்சார் கமிட்டி விஜயம் செய்து தனது ஆய்வுகளை மேற் கொண்டது.
தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் லட்சத்தீவுகளுக்கும் சச்சார் குழு தனது ஆய்வு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது எனினும் கடந்த ஆண்டு தமிழகத் தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம், லட்சத்தீவுகளில் அப்போது நிலவிய கடுமையான சீதோஷ்னநிலை, ஜார்கண்ட் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆயத்தப் பணிகள் நடைபெற்றது இந்தக் காரணங்களால் மூன்று மாநிலங்களுக்கும் நேரடி ஆய்வுப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை எனினும் தேவையான தகவல்கள் திரட்டப்பட்டன. (இது சச்சார்குழு பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் நாம் அறிந்தது)
15 மாத கால ஆய்வுகளின் முடிவுகளை 12 பகுதிகளாக வகைப்படுத்தி சச்சார் ஆய்வுக்குழு பிரதமரிடம் சமர்பித்தது சிறுபான்மையினரை மேம்படுத்த, நெறிப் படுத்த வேண்டிய அரசின் பொறுப்புகள் பற்றி குறிப்பிடும் இக்குழு ஒரு நாடு பாரபட்சமற்ற முறையில் செயல்படும் அமிலப்பரிட்சை குறித்து கூறுகிறது.
முஸ்லிம்கள் தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்து அறியும் உணர்ச்சி இன்றி இருந்திருக்கிறார்கள். நாடு விடுதலைப் பெற்றதிலிருந்தே இந்நிலைதான் தொடருகிறது.
சம வாய்ப்பு இல்லாமை குறித்து அறியாத நிலையில் இருந்த தன்விளைவு அவர் கள் மீதான பாகுபாட்டுக்கு வழிகோலியது. தங்களின் தனித்தன்மையை காப்பாற்ற அவர்கள் போராட வேண்டியதாயிற்று.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கடன் வசதி, வாழ்க்கை கட்டமைப்பு மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து 12 அத்தியாயங்கள் விவரிக்கின்றன.
முஸ்லிம்கள் இரண்டு சுமைகளை சுமக்க வேண்டிய நிலையை அடைந்தி ருக்கிறார்கள். முஸ்லிம்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் கூறும் அவதூறு அதே வேளையில் அவர்கள் திருப்தி செய்யப்படுகிறார்கள் என்பதுமாகும்.
முத்திரைக் கருத்துக்கள்
எங்காவது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் முஸ்லிம் இளைஞர்களை அள்ளிச் செல்லுகிறார்கள், காவல்துறையினர். ஒவ்வொரு தாடி வைத்த மனிதனையும் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் என்பதைப் போல பார்க்கப்படுவதால் அவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் வாழவேண்டியுள்ளது. இந்த தேசத்தில் சில பகுதிகளில் முஸ்லிம்கள் சமூக பகிஷ்காரம் செய்யப்படுகிறார்கள். குடியிருக்கும் இடங்களிலிருந்து விரட்டப்படு கிறார்கள். குறைவான கல்வி பெற்றுள்ளதால், முறையான உயர்வான வேலை வாய்ப்புகளுக்கு உயர்கல்வி அவசியம் என்பதை அவர்களால் அறியவில்லை. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் குறைந்த அளவே உள்ளன. பாடநூல்களில் முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறி கருத்துகள் பரப்பப்பட்டது. ஏழை முஸ்லிம்களுக்கு மதரஸாக் கல்வி மட்டுமே எளிதாகக் கிடைக்கிறது. மதரஸாக்கள் குறித்து வேறுபாடான கருத்துகள் பரப்பப்படுவதால் இது விஷயத்தில் அரசு உடன் கவனம் செலுத்தி மதரஸாக்களை நவீனமயமாக்க வேண்டும். உருது முஸ்லிம்களின் மொழி என்று முத்திரை குத்தப்பட்டதால் அதன் வளர்ச்சி தேக்க நிலை அடைந்தது. முஸ்லிம் மாணவிகளை அதிக அளவு கல்வி நிலையங்களில் சேர்க்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிவருவதால் சமூகத்தின் பாதுகாப்பின்மையை உணரும் முஸ்லிம் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளை கல்விக் கூடங்களுக்கு அனுப்புவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுகிறார்கள். தேர்வுக்கு குழுக்களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை சேர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களில் முஸ்லிம்கள் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும். கடன்வசதிகள் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் இவர்களுக்கு மிகவும் குறைவு. முஸ்லிம் பெண்கள் தகுதியான வேலைக்கு போட்டியிட முடியவில்லை. பல வங்கிகளை முஸ்லிம்களை எதிர்மறையாகவும், முஸ்லிம் பகுதிகளை தங்க் ழர்ய்ங் ஆகவும் கருதி கடன் தர மறுக்கிறார்கள். இந்திய ஆட்சிப்பணி ஐ.ஏ.எஸ்.யில் 3 சதவீதமும், ஒஎந ல் 1.8 சதவீதமும் இந்திய காவல் பணியில் 4 சதவீதமும் முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். மொத்த முஸ்லிம்களில் 4.9 சதவீத ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் பங்கேற்கிறார்கள். இந்திய ரயில்வேத் துறையில் 4.5 சதவீதமே முஸ்லீம்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 98.7 சதவிகிதத்தினர் கடைநிலை ஊழியர்கள்

இந்த நூற்றாண்டின் இணையற்ற மாவீரர் சதாம் படுகொலை:உலகை உறைய வைத்த வீர மரணம்அபூசாலிஹ்
தியாகச் செம்மல், இறை நம்பிக்கையாளர்களின் ஞானத்தந்தை நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை இவ்வுலகம் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து கொண்டிருந்தபோது உலகத்தைப் பதறச் செய்த, சரித்திரம் சந்தித்திராத சதிச் செயலை சண்டாளர்கள் நிகழ்த்தினர்.
ஈராக்கின் அதிபர் மாட்சிமிகு சதாம் ஹுசைன் ஆக்கிரமிப்பு சக்திகளாலும், அவர் களின் அடிவருடிகளாலும் படுகொலை செய்யப்பட்டார்.
கொடூரர்களான ஃபிர்அவ்ன், ஜெங்கிஸ்கான், ஹிட்லர் வரிசையில் வெள்ளை மாளிகை என்ற சாத்தான் குகையின் ஓநாய் மனிதனும் நவீனக் கொடூரனாக நான் காவதாக இடம்பெற்றார்.
2006 டிசம்பர் 29ஆம் தேதி அதிகாலை, இருவேறு மனிதர்களை இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது. ஒன்று, இந்த நூற்றாண்டின் சரித்திரம் இதுவரை கண்டி ராத மாவீரன். மற்றொன்று, உலகமகா கோழைகள்.
மரணம் என்ன செய்யும் என்பார்கள்? ஆனால் மரணம் வந்த பின்னர்தான் அதனை எதிர்கொள்பவர்களின் பரிதாப நிலை குறித்து நாம் காண முடியும். அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திகளின் பிடியில் சிக்குண்டு உரிமைகள் பறிக்கப் பட்ட மனிதராக இருந்தபோதும் துணிச்ச லாக ஆண்மையுடன் கம்பீரத்துடன் சதாம் மரணத்தை எதிர்கொண்டார்.
உயிரை துச்சமாக மதிப்பவர்கள் என்று கூறுபவர்கள், 'உயிர் எமக்கு தூசுக்கு சமானம்' என்பவர்களெல்லாம் அத்துனை நெஞ்சுரத்துடன் நடந்து கொண்டதாக வழிவழிக் கதைகள் வேண்டுமானால் கூறலாம். ஆனால் காவிய நாயகர்களையும் மிஞ்சி வரலாற்றில் இடம்பிடித்த மாமனிதராக சதாம், உலகின் வரலாற்று பிரமிப் பாகிறார்.
தனது உயிருக்கு உலைவைக்க முயன்ற கொலைகாரக் கூட்டத்தை காவல்படையினர் சுட்டுக் கொன்றதற்காக மாபெரும் மனிதகுலப் படுகொலையை நிகழ்த்தியதாகக் கூறி சதாம் ஹுசைனுக்கு அடிவருடி அரசின் நீதிமன்றம் தீர்ப்ப ளிக்கிறது. சட்ட உரிமைகள் மறுக்கப் படுகின்றன. அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். இறுதியாக நீதி மறுக்கப்படுகிறது. அல்ல முதலிலிருந்தே மறுக்கப்படுகிறது. சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பொம்மை நீதிமன்றம் பொய்மை தீர்ப்பை வழங்குகிறது. உலகமெங்கும் கண்டனக் கணைகள் எழுந்தன. சதாம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீடு மறுதலிக்கப்பட்டு தூக்குத் தண்டனை உறுதி செய்யப் படுகிறது. எப்போது வேண்டுமானாலும் தூக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்ற பதட்ட நிலையை அடிவருடி நீதிமன்றம் ஏற்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் நீதி பரிபாலனம் குறித்த நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பியது. வாடிகன் அரசும் தனது கண்டனத்தை எழுப்பியது. பிரேசில் தனது கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்தது. உலகம் மெல்ல மெல்ல சதாம் ஹுசைன் தூக்குத் தண்டனை குறித்த செய்திகளை அறிந்து செய்வதறியாது தவித்தன. அரசுப் பூர்வமான அறிவிப்புகளை வெளியிடும் ஆலோசனைகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதிதீவிர அமெரிக்க ஆதரவு நாடுகள் அமெரிக் காவுக்கு வலிக்காமல் எப்படி கண்டனங்களை(!) தெரிவிக்கலாம் எனத் திணறிய நேரத்தில் மணித்துளிகள் மளமளவென இறக்கை கட்டிப் பறந்தன.
உலகம் சுதாரித்து விட்டால் ஆபத்து. பொதுமக்கள் பொங்கி எழுந்தால் என்னா வது? ஒருவேளை அரபுலகத் திற்கு சொரணை ஏற்பட்டு தொலைத்து விட்டால் என்ன செய்வது என்கிற விபரீத சிந்தனையிலும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளும் அடிவருடி அரசும் யூகித்தன.
எவ்வாறாயினும் காலம் தாழ்த்தினால் தாழ்ந்து விடுவோம். சதாம் மீண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டு விடப் போகிறது என அஞ்சி சில மணி நேரங்களில் காரியத் தை கனகச்சிதமாக முடித்துவிட திட்டம் தீட்டப்பட்டு மரணத்துக்கு மணித்துளிகள் குறிக்கப்படுகின்றன.
ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தற்போதைய ஈராக் அடிவருடி அரசின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறார்.
ஜெனிவா ஒப்பந்தத்தின்படி போர்க் குற்றவாளிகளைக் கூட எதிரிகளிடம் ஒப்ப டைக்கக் கூடாது. ஆனால் ஒரு நாட்டின் அதிபரை ரவுடித்தனமாகக் கைது செய்து, குதறக் காத்திருந்த குள்ளநரிக் கும்பலின் கைகளில் திணித்தனர்.
இதுவரை மோசமான தீர்ப்பினை வழங்கியதாக கூறப்படும் 'ஜெயித்தவன் நீதியை' வன்மமாக வலியுறுத்திய 'நூரெம்பர்க்' தீர்ப்பாயம் கூட தனது எதிரியை (அதாவது) பாதிக்கப்பட்டவரின் கருத்தினை தெரிவிக்க ஒரு வாய்ப்பினை வழங்கியது. ஆனால் இந்த நீதிமன்றத்தில் அது கூட வழங்கப்படவில்லை. இருட்டு மனம் கொண்ட தீயவர்கள் திருட்டுத்தனம் செய்ததைப் போல உலகம் விழிக்கும் முன்பே கொடு மையை செய்யத் துணிந்தனர்.
அதிகாலை இந்தியா அலறலுடன் விழித்தது. இந்தியாவின் ஆங்கிலச் செய்திச் சேனல்கள், இன்னும் சிறிது நேரத்தில் சதாம் தூக்கிலிடப்படுவார் என்றே பதட்ட செய்தியை பரபரப்பாய் நகரும் எழுத்துக்களால் சொன்னது. சதாம் சார்பாக அமெரிக்க நீதிபதியிடம் செய்த முறையீடும் மறுதலிக்கப்பட்டது.
'அந்த நேரம் வந்துவிட்டது' என சதாமிடம் கூறப்பட்டது. சதாம் மரணத்தை நோக்கி அழைத்து வரப்பட்டார். அவரிடம் இருந்த உடைமைகள் திரும்பப் பெறப் பட்டன. அவர் தனது கையில் திருக்குர்ஆனை ஏந்தினார். சதாம் தனது முகத்திலிருந்து கழுத்து வரை மூடிக்கொள்ளும் துணியை போட்டுக் கொள்ள மறுத்தார்.
ஏற்கனவே அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து ஈராக்கின் அடிவருடி கொலைக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கறுப்பு வெள்ளை யில் கம்பீரமாக சதாம் நடை போட்டார். கறுப்புக் கோட்டும் வெள்ளைச் சட்டை யும் அணிந்து வந்திருந்த அவர் முகத்தில் மரணம் குறித்த எந்த சலனமும் சஞ் சலமும் ஏற்படவில்லை. ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என நூர் அல் மாலிக்கியின் அரசியல் ஆலோசகர் சாமி அல் அஸ்கரி கேட்டபோது, 'தேவையில்லை' எனக் கம்பீரமாக பதில் அளித்தார். அவரது கைகள் பின்னோக்கி கட்டப்பட்ட நிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முறை குறித்து சதாமிடம் விளக்கப்பட்டது. என்னவோ சுற்றுலா பயணத்திற்கு வந்தவர் அந்த இடங்களைப் பற்றிக் கூறுவதை கவனமாகக் கேட்பதைப் போல மிடுக்கு மிளிரும் அழகுடன் நெற்றிப் புருவத்தை நெறித்து கேட்டுக் கொண்டார்.
மார்க்க அறிஞர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார். இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என கம்பீர மொழியில் சாட்சி பகர்ந்தார். ஈராக் நேரம் சரியாக காலை 6.10க்கு சதாம் என்ற அரபுலகின் கம்பீர சகாப்தம் சதியால் சாய்க்கப்பட்டது. தூக்கில் போடப்பட்டார் சதாம்.
ஈராக் துயிலில் இருந்து முற்றிலும் விழிக்காத நிலையில் சதாம் நீடு துயிலில் ஆழ்ந்து விட்டார். சதாம் படுகொலை செய்யப்பட்ட செய்தி திக்ரித், சமாரா, ரமதி உள்ளிட்ட வீர பூமிக்குப் பரவியபோது பெண்களும் குழந்தைகளும் கதறி அழுத னர். ஆண்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சதாம் வீரத் தியாகியாகிவிட்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து அவரைப் பொருந்திக் கொள்வானாக! புனிதப் போராளியாக நம் அதிபர் உயிர் துறந்தார், நாம் யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம் என திக்ரிதின் பழம்பெருமை வாய்ந்த பள்ளிவாசலின் இமாம் ஷேக் யஹ்யா அல் அதாவி கூறி னார்.
திக்ரிதின் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன. திக்ரிதின் அருகே உள்ள கிராமமான அவ்ஜாவில்தான் சதாம் ஹுசைன் பிறந்தார். அவ்வூரில் அடக்கம் செய்ய அமெரிக்க ஆதிக்க மற்றும் அடிவருடிக் கூட்டம் முடிவெடுத்தது.
கொலைக் களத்திலிருந்து சதாம் ஹுசைன் உடல் 110 மைல் தூரத்தில் உள்ள அவ்ஜாவுக்கு பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் பறந்து சென்று வடக்கு திக்ரிதில் உள்ள கேம்ப் செபய்சர் என்ற அமெரிக்க ராணுவ தளத்தை அடைந்தது. (செபய் சர் என்பவர் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமான ஓட்டியாவார். 1991ல் முதல் வளைகுடாப் போர் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஈராக்கியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டவர். அவரது பெயரில் உள்ள விமான தளத்திலிருந்து சதாம் ஹுசைனின் உடல் ஈராக்கின் எடுபிடி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரணத்தை சதாம் எதிர்கொண்ட விதம் உலகம் உள்ளளவும் மறக்க முடியாததாக மாறிவிட்டது. கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது வழக்கமாக தூக்குத் தண்டனைக்கு ஆளானவர் முகம் மூடப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர்.ஆனால் சதாம் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தண்டனை நிறைவேற்றக் கூடியவர்கள் முகமூடி அணிந்து தங்களது அடையாளத்தை மறைத் துக் கொண்டனர். சடாரென்று பார்க்கும்போது அந்தக் காட்சி சதாம் அருகிலுள்ளவர்களை தூக்குத் தண்டனைக்கு அழைத்துச் செல்வதைப் போல் இருந்தது. சதாம் தூக்கிலிடப்பட்டதன் மூலம் ஏற்பட்ட எதிர்ப்பலையால் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு சக்திகள் சரித்திரத்தின் குப்பைக் கூடைக்குள் தள்ளப்பட்டு விட்டனர். சதாம் சரித்திரம் காணாத மாவீரராய் உலக சமூகத்தின் முன் போற்றப் படுகிறார். இரண்டு உலகப் போர்களிலும் ஜெர்மனியும் அதன் நட்பு நாடுகளும் படைகளை இழந்து, ஆட்சியைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் தோல்வி பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டனர்.
ஆனால் இன்று அமெரிக்காவும் அதன் சகாக்களும் பெரும் வல்லமை யுடன் படை பலத்துடன் பொருளாதாரச் செழுமையுடன் விஞ்ஞான உச்சத்தில் நின்றா லும், அன்று ஹிட்லரின் ஜெர்மனி அடைந்த இழிநிலையை அவர்கள் அடைந்து விட்டனர்.
சதாமின் படுகொலைக் குறித்து, அரபுலக மாவீரரின் வீரமரணம் குறித்து பங்காளிக் காய்ச்சலில் ஈரானும், ஜால்ரா சத்தத்துடன் ஜப்பானும் மட்டுமே வரவேற்றி ருக்கின்றன. புஷ்ஷும் பிளேரும் வரவேற்றிருந்தாலும் அமெரிக்க மக்கள் சபை யை ஆளும் ஜனநாயகக் கட்சியினரும், பிரிட்டனின் துணைப் பிரதமரும் சதாம் படுகொலை குறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
சதாம் இறந்தாலும் உலக மக்களின் இதயத்தை வென்றிருக்கிறார். ஆக்கிர மிப்பு சக்திகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற உலகம் தழுவிய எதிர்ப்புக் குரலின் மூலம் வாழ்ந்தும் இறந்து போனவர்களாய் சதாமை படுகொலை செய்தவர்கள் கருதப்படுகிறார்கள்.
அந்த நடமாடும் பிணங்களைப் பற்றி நாம் வேறென்ன சொல்வது? காத்திருங்கள் உங்கள் கொடுமைகளுக்கு பரிசு வழங்க நாளைய வரலாறு கொடுவாளோடு தயாராகிறது.
சதாம் கடற்கரையில் கண்டனக் கணைகள்
சதாம் ஹுசைன் பெயரில் கடற்கரை ஒன்று உள்ளது. இந்தக் கடற்கரை எங்கே உள்ளது என்றுதானே வினவுகின்றீர்கள்? இந்தக் கடற்கரை அரபு நாட்டில் இல்லை. நமது நாட்டில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பரப்பனங்காடி அருகில் உள்ளது சதாம் கடற்கரை. 1990ல் குவைத் போரின்போது அமெரிக்கா வை எதிர்த்து சதாம் துணிவுடன் நின்றதன் விளைவாக 'ஆரியான் கடல்புரம்' என்று அழைக்கப்பட்ட கடற்கரையை 'சதாம் கடல்புரம்' (சதாம் கடற்கரை) என்று இக்கடற்கரையைப் பயன்படுத்தும் மீனவர்கள் பெயர் மாற்றம் செய்தார்கள்.
சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்ட செய்தி வந்த நேரத்தில் இந்த கடற்கரையை பயன்படுத்தும் மீனவர்கள் பெரும் துயரம் அடைந்தனர். பல மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் செல்பேசி வழியாகச் செய்தியறிந்து உடனடியாக தாங்கள் பிடித்த லட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள மீன்களை கடலிலேயே விட்டுவிட்டு கரைக்குத் திரும்பினார்கள். ''நாங்கள் பிடித்த மீன்களின் பெறுமானத்தை விட சதாமின் இழப்பு எங்களுக்கு பெரியதாக உள்ளது. புஷ் மீதும், வஞ்சகம் நிறைந்த அமெரிக்காவின் மீதும் எங்களுக்குள்ள வெறுப்பிற்கு அளவே இல்லை'' என்று குன்ஹாலன் என்ற மீனவர் கூறினார்.
சதாம் கடற்கரையில் கறுப்புக் கொடிகள் எங்கும் பறந்தன. உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கொடியவன் ஜார்ஜ் புஷ்ஷின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சதாம் என் மகனைப் போன்றவர். இங்குள்ள அனைவருக்கும் ஒரு உந்துசக்தியாக அவர் விளங்கினார் என்று ஆமினா உம்மா என்ற மூதாட்டி தெரிவித்தார். சதாம் கடற்கரை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கு என்றும் உத் வேகம் அளிக்கும் வகையில் அவரது நினைவை என்றும் போற்றிக் கொண்டே இருக்கும்.
முக்ததா யார்?
சதாம் கொலைக் களத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது அவரை இழிவுபடுத் தும் விதமாக 'முக்ததா... முக்ததா' என சுற்றியிருந்தவர்கள் குரல் எழுப்பியதாகவும், சதாம் ஹுசைன் 'முக்ததா?' என ஆத்திரத்துடன் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
முக்ததா லி சதாமின் எதிரி என்றும், முக்ததாவின் தந்தை அல் சதரை சதாம் கொலை செய்ததாகவும், அந்தக் கொலைக்கு பழிதீர்க்கப்பட்டு விட்டது என முக்ததா அல்சதரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் என்றும் தகவல்கள் பரவின.
முதலில் முக்ததா யார்? அவரது தந்தை அல்சதர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் பார்த்தால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். முக்ததா அல்சதர் ஒரு ஷியா சமூகப் போராளி. அமெரிக்காவை எதிர்த்து நிழலுலகில் போர் புரிபவர்கள் முக்ததாவின் ஆதரவாளர்கள். அமெரிக்காவை எதிர்த்துப் போராடும் ஒரே ஷியா சமூகப் போராளிக் குழுவை முக்ததா அமைத்துள்ளார். அந்த கிளர்ச் சிப் படையின் பெயர் மஹ்தி சேனை என்பதாகும்.
கடந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தின்போது மார்க்க அறிஞரும் இளம் போராளியுமான முக்ததா அல்சதர் சென்றபோது, சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவரது குடிலுக்கே சென்று வரவேற்று அளவளாவினார். முக்ததா ஷியா, சன்னி சமூக மக்களிடையே இணக்கம் மென்மேலும் வளர பாடுபட்டு வருபவர்.
இந்நிலையில் சதாம் முக்ததாவின் தந்தையின் மரணத்திற்கு காரணம் என்பதையும் நடுநிலையாளர்கள் மறுக்கின்றனர். 1999ல் முக்ததாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மரணம் அடைந்தார். அதற்கு சதாம் ஆட்சியே கார ணம் என்று கண்மூடித்தனமாக முக்ததாவின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.
ஷியா பிரிவு அரசியல் குழுவினர் அனைவரும் அதிகார வெறியுடன் பதவியை நோக்கி நகர்ந்து அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தபோது முக்ததா அல்சதரின் குழுவினர் மட்டும் கிளர்ச்சிக் குழுவினராகவும் அமெரிக்க எதிர்ப்பு படையினராகவும் உருவெடுத்ததால் எரிச்சலின் உச்சத்தில் இருந்த அமெ ரிக்கா சதாம் கொலைக் களத்தில் தனது சித்து வேலையைக் காட்டியுள்ளது.
அமெரிக்க அடிவருடிக் கும்பலால் நியமிக்கப்பட்டவர்கள் திடீரென முக்ததா... முக்ததா என கூச்சல் போட்டதின் அறுவடையை அமெரிக்கா உடனடியாகப் பெற் றுக் கொண்டது.
முக்ததா என சதாமின் மரணச் சூழலில் குரல் எழுப்பப்பட்டதால் முக்ததாவின் மஹ்தி சேனைக்கும் சதாம் ஆதரவாளர்களுக்கும் இடையே உடனடி மோதல் அல்சதர் நகரில் ஏற்பட்டு எட்டு பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயம் அடை ந்தனர். மேற்குலக நரி புதிய கலகத்திற்கு பாதை அமைத்து கொடுத்து விட்டது.
முன்னேற்றப் பாதையில் நாட்டை அழைத்துச் சென்றவர் சதாம்
வளைகுடா பிராந்தியத்தில் அதிகப் பொறியாளர்களைக் கொண்ட ஒரே நாடாக வும், சிறப்பான சாலை வசதிகளையும் லி நவீன கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட தாகவும் சதாமின் ஆட்சிக் காலத்தில் ஈராக் விளங்கியது. கல்வியறிவில் ஈராக் சிறந்து விளங்கியது. அதிலும் சிறப்பாக பெண் கல்வியில் ஈராக் முன்னேற்றப் பாதையில் விரைந்து சென்றது. கல்வியில் உயர்நிலையை அடைந்ததற்காக சதாம் ஆட்சிக் காலத்தில் ஐ.நா.வின் யுனெஸ்கோ விருது ஈராக்கிற்கு வழங்கப்பட்டது.
மரணத் தருவாயிலும் இழிவுபடுத்த முயன்றவர்கள்
சதாம் ஹுசைன் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சூழலிலும் இழிமனம் படைத்த அமெரிக்கா மற்றும் அடிவருடிக் கும்பல் தமது விஷமத்தனத்தைக் கைவிடவில்லை. சதாமை கேலி செய்தும், பரிகசித்தும், தகாத வார்த்தைகளால் துன் புறுத்தியும் கொடுமை இழைத்தனர்.
மரணத்தைத் துணிச்சலுடன் பெருமிதத்துடன் எதிர்கொண்ட அந்த மனிதருக்கு எதிராக வெறிக் கூச்சலிட்டதோடு, அவர் சாகும் நேரத்திற்காக ஆவலுடன் காத்தி ருந்தனர். ஈராக்கிய தேசிய பாதுகாப்புப் படையின் ஆலோசகர் மொஃபாக் அல் ருபையி இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தியாளரிடம் குறிப்பிடும்போது காவலாளிகளில் ஒருவன் 'சதாம் நீ எங்களை சீரழித்து விட்டாய், எங்களில் ஏராள மானோரைக் கொன்றாய், நீ அழிவை சந்திக்கப் போகிறாய்' என வெறித்தனமாகக் கூச்சலிட்டார்.
நான் உங்களை ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து மீட்டேன். உங்கள் எதிரிகளையும் அழித்தேன், ஈராக்கியர்கள் அனைவரும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குள் மன்னிப்பை வழங்கிக் கொள்ள வேண் டும். ஈராக்கின் தற்போதைய அரசை நம்ப வேண்டாம். அமெரிக்கர்களை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் தூக்கு மேடையில் நின்று சூளுரைத் தார்
குஜராத் : அந்த 526 பள்ளிவாசல்கள்?குஜராத் கோர படுகொலைகளை யாராலும் மறக்க இயலாது. ஆயிரக்கணக்கான முஸ்­ம்கள் படுகொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள்.
இழப்பீடுகள், நிவாரண உதவிகள் அந்த அப்பாவிகளுக்கு மறுக்கப்பட்டன. முறையான நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை. நரேந்திர மோடி அரசு முன்நின்று நடத்திய வெறியாட்டங்கள் ஓர் தேசிய அவமானமாக கருதப்பட்டது.
இனப்படுகொலையின் சூத்திரதாரியான நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். அமெரிக்கா வுக்கும் லி பிரிட்டனுக்கும் செல்ல விசா மறுக்கப்பட் டது. அந்த வகையில் மோடி உலகப் புகழ்(!) பெற்று விட்டார்.
2002ல் நிகழ்ந்த குஜராத் கோரக் கலவரத்தில் 526 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்ததை எண்ணி முஸ்­ம்களும், நடுநிலையாளர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
அன்றி­ருந்து முஸ்­ம்கள் தங்கள் பள்ளிவாசல்களை மீண்டும் கட்ட, புனர மைக்க மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். இடிப்பதற்கு பேர் போண அவர்கள் கட்டுவதற்கு உதவுவார்களா என்ன?
கேளாக் காதினராய் மோடி அரசு இருந்து விட்டது. இதுகுறித்து தேசிய சிறுபான்மை ஆணையம் 2002 ஏப்ரல் இரண்டாம் தேதி கடிதம் ஒன்றை குஜராத் முதல்வர் மோடிக்கு எழுதியது. இக்கடிதம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத தோடு, அந்தக் கடிதம் வந்ததாகவே மோடி அரசு காட்டிக் கொள்ளவில்லை.
இதற்கிடையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் முஸ்­ம் களுக்கு சொந்தமான 294 பள்ளிவாசல் கட்டிடங்கள் ஓரளவு பழுது பார்க்கப் பட்டன. இதற்கு எந்த அரசும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையில் தேசிய சிறுபான்மை ஆணையம் மோடி அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தது. அண்மையில் கடந்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் கடிதத்திற்கு சுருக்கமான பதில் ஒன்றை குஜராத் அரசு அனுப்பியது.
அதில் நிவாரண உதவிகள் குறித்து எவ்வித விளக்கங்களும் குறிப்பிடப்பட வில்லை. மாறாக தேசிய சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் உள் நோக்கம் கொண்டது என்றும், தவறான வழிகாட்டுத­ல் எழுதப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் தெளிவான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
மீதமுள்ள 232 பள்ளிவாசல் கட்டிடங்களை மறுகட்டமைக்க போதிய நிதி உதவியை வழங்குமாறு மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேவையான பொருளாதார உதவியை வழங்கி குஜராத்தில் சிதிலமடைந்து கிடக்கும் முஸ்­ம்களின் வழிபாட்டுத் தலங்களை புதுப்பிக்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிற

சோமாலியா: ஏழை தேசத்தில் முண்டா தட்டும் அமெரிக்கா

சோமாலியா: ஏழை தேசத்தில் முண்டா தட்டும் அமெரிக்கா!அபூசாலிஹ்
உலகத்தின் அமைதியை சீர்குலைத்து நாடுகளின் இறையான்மையை மாசுபடுத்தி அதிகாரப்பரவலையும் ஆதிக்க வெறியினையும் பரப்பி வரும் அமெரிக்க ஏகாதி பத்திய சக்தியின் அடுத்த குறி யார்? எந்த நாட்டில் அமெரிக்கா குண்டு போடும்? அமெரிக்க ஏவுகணைகள் எந்த நாட்டின் தரைப்பகுதியை, கடல் பகுதியை வான்வெளியை தாக்கப் போகிறது? தீவிரவாதிகளின் புகலிடம், உலகிற்கே அச்சுறுத்தல், அமெரிக்காவுக்கு ஆபத்து என வகை வகையாய் கள்ள காரணம் சொல்லி எந்த நாட்டை அமெரிக்கா அபகரிக்கும் என உலக அளவில் அரசியல் ஆய்வாளர்கள் விவாதங்கள் நடத்தி வந்தனர்.
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தொடங்கியாகி விட்டது. உலகின் மிகப்பெரிய நாசகார போர்விமானத்தை இஸ்ரேல் கட்டத் தொடங்கி விட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடை குறித்த தீர்மான வடிவங்களுக்கு 'ஒரு வேஸ்ட் பேப்பருக்கு' கொடுக்கும் மரியாதையைக் கூட நாங்கள் வழங்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத்அதிரடியாய் அறிவித்து விட்டார். அடுத்ததாக்குதல் ஈரானின் மீதா? அல்லது சிரியாவின் மீதா? அல்லது உலகிலேயே அதிபர் புஷ்ஷுக்கு அதிகமாக எதிரிகள் இருக்கும் அமெரிக்காவின் மீதே தாக்குதல் நடத்தி விடுவாரோ? என பட்டிமன்றங்கள் பட்டியல் கட்டி நிற்க சோமாலியாவின் மீது அமெரிக்கா தனது வான்தாக்குதலை நடத்தி முடித்திருக்கிறது.
அமெரிக்க ஆயுதங்கள் நவீன மானவை. அமெரிக்க போர் வியூகங்கள் நிபுணத்துவம் மிக்கவை. தொழில் நுட்பத்தில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அந்நாட்டின் தாக்குதல் திட்டங்கள் கண்டனத்திற்குரியவையாகவே இருக்கிறது. எவ்வளவுதான் அதிநவீன ரக ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும் அவை எதிர் படைகளுக்கு குறிவைப்பதற்கு பதில் மக்கள் வாழும் பகுதிகள் குறிப்பாக மருத்துவமனைகள் போன்றவற்றில் தான் ஏராளமான அப்பாவி பொது மக்கள் அமெரிக்க வன் தாக்குதல்களால் கொல்லப்படுகிறார்கள்.
கவச வாகனங்களை தாக்குவதற்கு பதில் உயிர்காக்க உதவும் ஊர்திகளை, ஆம்புலன்ஸ்களை அமெரிக்கப் படைகள் துல்லியமாக(!) தாக்கும். தவறாக நிகழ்ந்து விட்டது என ஒவ்வொரு முறையும் தவறாமல் சமாதானம் சொல்லவும் அவர்கள் தவறுவதில்லை.
இதைப் போன்ற ஒரு காட்சியை கடந்த 2006 டிசம்பரில் கிறிஸ்மஸ் தினத்தன்று சோமாலியாவில் அமெரிக்கப் படைகள் அரங்கேற்றின.
ஒரு திருமண நிகழ்ச்சியை 'சாவு நிகழ்ச்சியாக அமெரிக்கப் படைகள் மாற்றின'. மணமகன், மணமகள் உள்பட 30 பேரின் மூச்சை அமெரிக்க விமானங்களிலிருந்து புறப்பட்ட குண்டுகள் அழித்தன.
இதுவரை அமெரிக்கா நிகழ்த்திய ஆக்கிரமிப்பு போர்கள் நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்காகவே என்ற நிலையில் சோமாலியாவின் மீதான அமெரிக்க தாக்குதல் எதற்காக? என்ற கேள்வி இங்கு எழலாம்?
சோமாலியா என்பது சோக பூமியல்லவா? அந்த பட்டினிப் பிரதேசத்தில் 'நடமாடும் எக்ஸ்ரே மனிதர்களைத் தவிர வேறு என்ன உண்டு. அமெரிக்காவின் அடங்காத பசிக்கு தீனி போட அங்கு எதுவும் இல்லையே?
குழப்பங்கள் குழுமி நிற்கலாம். வரலாற்றுப் பக்கங்களை அதிகமில்லை ஓர் ஆறு மாத காலம் பின்னோக்கி புரட்டினால் அமெரிக்காவின் அந்தரங்க ஆசையும் சோமாலியாவின் மீதான தாக்குதலுக்கான உண்மைக் காரணமும் தெரியவரும்.
2006 ஜுன் ஐந்தாம் தேதி இஸ்லாமிக் கோர்ட் யூனியன் என்ற போராளி இயக்கம் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தி சோமாலியத் தலைநகர் 'மொகதிஸ்'ஐ கைப்பற்றியது.
இந்த முஸ்லிம் புரட்சிப் படைக்கு சோமாலிய மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த ஆதரவு உண்டு. திறமையற்ற ஆட்சியாளர் அப்துல்லாஹ் யூசுப் மீது சோமாலியா மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த வேளை அது.
மக்களின் முழுமையான ஆதரவுடன் இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தது. ஜூன் 14 ஆம் தேதி ஜவாஹா என்ற நகரம் இஸ்லாமிக் கோர்ட் யூனியன் படை வசமானது. செப்டம்பர் 24ல் ஹிஸமயோ என்ற பகுதியை யும் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏறக்குறைய நாற்பது சதவீத பகுதிகள் இஸ்லாமிக் கோர்ட் யூனியன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை சாதாரண புரட்சியாக மேற்குலகம் ஒத்துக் கொள்ள தயராக இல்லை. இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் வெற்றி பவனி தொடர்ந்தது. எத்தியோப்பிய எல்லைவரை அவர்களது ஆதிக்கத்தின் வீச்சு விரிவடையவே அதிபர் அப்துல்லாஹ் யூசுப் அலறத் தொடங்கினார். அமெரிக்கா உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது. அண்டை நாடான எத்தியோபியா தனது துருப்புகளை உஷார்படுத்தியது.
ராணுவ நடவடிக்கைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும் சீர்திருத்த நடவடிக்கைகளையும் இஸ்லாமிக் கோர்ட் யூனியன் முன்னெடுத்தது.
அரை நூற்றாண்டுகாலம் அமைதியற்ற சூழலே சோமாலியாவில் நிலவுகிறது. அதிலும் கடந்த 15 ஆண்டு காலம் அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலையில் அந்நாடு பின்னடைவை சந்திருக்கிறது.
இஸ்லாமிக் கோர்ட் யூனியன் ஆட்சிக்கு முன்பு நாடெங்கும் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தான் ஆதிக்கம் செலுத்தின. எதிர் எதிர் பகுதிகளுக்குச் செல்பவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. இஸ்லாத்தின் பேரைச் சொல்லிக் கூட சில குழுக்கள் புறப்பட்டன.(பின்னர் அவைகளில் சில இஸ்லாமிக் கோர்ட் யூனியனுக்கு ஆதரவு தெரிவித்தன) ஆங்காங்கே ரத்தக்களறிகள் தொடர்கதையாய் இருந்தன.
லட்சக்கணக்கான சோமாலிய இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வீழ்ந்து கிடந்தனர். இலவச இணைப்பாக எய்ட்ஸ் நோயும் இளைய தலைமுறை யினரின் வாழ்வை சிதைத்தது. போதை மருந்து கடத்தல்களும் ரெக்கை கட்டிப் பறந்தன. அனைத்தையும் அடக்கி நாட்டில் அமைதி நிலவச் செய்தனர் இஸ்லாமிக் யூனியன் கோர்ட் ஆட்சியாளர்கள். இஸ்லாமிய ஷரியத் முறையிலான ஆட்சியை அங்கு அறிமுகப்படுத்தினர். கொடுந்தீமைகளை இழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
தயவு தாட்சன்யமற்ற நடுநிலையான நீதி பரிபாலனத்தால் அமைதி நிலைநாட்டப் பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர். இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் சீரான ஆட்சிவர வேண்டும் என சோமாலியாவின் பிற பகுதிகளும் ஏங்கின.
இஸ்லாமிக் கோர்ட் யூனியன் தலைவர் ஷேக் அஹ்மத் ஷரீஃபின் ஆட்சி சோமாலியாவின் பிற பகுதிகளும் பரவி விட்டால் 'தாம் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கும் 'உலக அமைப்பு' க்கு ஆபத்து வந்து விடுமோ என அமெரிக்கா அஞ்சியது.
இஸ்லாமிய முறையிலான ஆட்சி என்றால் வன்முறைகள் வரையறை இன்றி இருக்கும். நாட்டு மக்கள் எல்லாம் 'அநியாயமாக' மாட்டிக் கொண்டோமே' எனக் கதறி கதறி கண்ணீர் சிந்துவார்கள்' என தங்கள் ஆதரவு ஊடகங்கள் மூலமாக பரப்பிவைத்த பொய்கள் தோலுரிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்க கலக்கமடைந்தது. சோமாலியாவை பிளவுபடுத்தி, காயப்படுத்தி இன்பம் காணும் அண்டை நாடான எத்தியோப்பியாவும் அச்சத்திலும், ஆத்திரத்திலும் ஆழ்ந்தது. பக்கத்து நாடு பலமிக்கதாக மாற பகைநாடு விரும்புமா என்ன?
தக்க தருணத்தை எதிர்நோக்கி அமெரிக்காவும், எத்தியோப்பாவும் காத்திருந்தன. தனது பிடியை படிப்படியாக இழந்து வந்த சோமாலிய அதிபர் அப்துல்லாஹ் அமெரிக்காவை நோக்கி அபயக்குரல் எழுப்பினார். இவர் அபயக்குரல் எழுப்பினார் என்பதற்காக அமெரிக்கா உதவிக்கு ஓடிவரமுடியுமா? அதற்கென்று ஒரு கவுரவம் உண்டே? அமெரிக்கா சும்மா அப்துல்லாஹ் யூசுப் உதவிக்காக போனால் நன்றாகவா இருக்கும்? அமெரிக்காவுக்கு பிரத்யேக காரணம் ஒன்று உண்டே.
அமெரிக்கா என்றால் சுதந்திரதேவி சிலை, அழுது வடிவதை மறைத்துக் கொண்டு மழுப்பல் சிரிப்புடன் காமிரா முன்பு காட்சியளிக்கும் சார்ஜ் போன ஜார்ஜ் புஷ் அதைப் போன்று உடனடியாக நினைவுக்கு வருவது அல்காய்தா என்ற வார்த்தை. ஆறுமாதத்திற்கு ஒரு தடவை இந்த சொல்லைக் கூறாவிட்டால், அல்காய்தா அச்சுறுத்தல் உண்டு என உரத்து முழங்காவிட்டால் அவர்களுக்கு உறக்கம் வராது. அல்லது உயிரே போய்விடும். இல்லையா!
அதையே இங்கும் சொன்னார்கள் 1990களில் கென்யா, தான்ஸானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்திய அல்காய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சோமாலியாவில் பதுங்கியிருக் கிறார்கள் அவர்களை பிடிக்கும் வரை போராடப் போவதாக அமெரிக்கா அறிவித்து சோமாலியாக் கடலோரங்களில் போர் விமானங்கள் தாங்கிய கப்பல்களை அனுப்பி வைத்தது.
அமெரிக்க வான்படைகள், போர்க் கப்பல்கள் சோமாலியாவை முற்றுகையிட, திறமையற்ற அதிபரும் மக்கள் செல்வாக்கிழந்த வருமான அப்துல்லாஹ் யூசுப் க்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் குதித்தது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எத்தியோப்பிய துருப்புகள் சோமாலிய அரசுத் துருப்புகளுடன் இணைந்து இஸ்லாமிக் கோர்ட் யூனியன் போராளி களை கருவறுக்கும் முயற்சியை தொடங் கியது. வறுமையிலும் வெறுமையிலும் வாழ்ந்து ஆனால் கடும் போர் பயிற்சி பெற்ற முஸ்லிம் போராளிகள் தற்காலிகமாக பின்வாங்கி இருப்பதாகவும் இஸ்லாத்துக்கு விரோதமான அமெரிக்க, எத்தியோப்பிய சக்திகள் தங்கள் சதியினை வலிந்து திணிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது எனவும் தாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம் என உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் தலைவர் ஷேக் ஷரீப் அஹ்மத் தெரிவித்திருந்தார்.
அதிபர் அப்துல்லாஹ் யூசுப்பின் ஆட்சி இஸ்லாத்துக்கு முரண்பட்டது. மேற்குலக சக்திகளுக்கு பணிவதையே தனது முழு முதல் கடமையாக அது கருதுகிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் சோமாலியாவின் முழு அதிகாரத்தையும் இஸ்லாமிய நெறியின் கீழ் கொண்டு வருவதே எமது இறுதி லட்சியம் எனவும் ஷேக் ஷெரீப் அஹ்மத் தெரிவித்திருந்தார். ஆயிரக்கணக்கான எத்தியோப்பிய துருப்புகளும், அமெரிக்கா வின் தாக்குதலும், சோமாலியாவின் மீதான தற்காலிக வெற்றியினை கடந்த வாரம் அவர்கள் பெற்றுவிட்டனர். போரின் உக்கிரத்தால் ஏதுமற்ற ஏழைமக்கள் நாட்டை விட்டே வெளியேற முயல அதற்கும் கூட ஆபத்து ஏற்பட்டது. அண்டை நாடுகளான கென்யா மற்றும் எரிட்டிரியா நாடுகளின் எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டன.
இஸ்லாமிக் கோர்ட் யூனியன் படைகளுக்கு ஆதரவாக எரிட்டிரியா தனது 2000 துருப்புகளை அனுப்பி வைத்தது. இஸ்லாமிக் கோர்ட் யூனியன் போராளிகள் எவ்வளவு பேர் வேட்டை யாடப் பட்டனர் என்பது போன்ற தகவல்களை தெளிவாக்க முடியாமல் அமெரிக்க ஆதரவு சக்திகள் தவித்தன.
சோமாலியர்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அமெரிக்க எத்தியோப்பிய சக்திகளின் அறிவிப்புக்கு சோமாலிய மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். தனி நபர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை மீண்டும் சோமாலியாவை தொற்றிக் கொண்டது. இஸ்லாமிய பாரம்பரிய பெருமைகளை தன்னகத்தே கொண்ட நாடு சோமாலியாவாகும்.
இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில் இந்நாடு ஹபஷா என அழைக்கப்பட்டது. கலீபா உஸ்மான் (ரலி) காலத்தில் இஸ்லாமிய நெறி இம்மண்ணை ஆட்கொண்டது. பல நபித் தோழர்களின் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்த பிரதேசமே சோமாலியாவாகும். ஐஞதச ஞஎ ஆஎதஒஈஆ (ஆப்பிரிக்காவின் கொம்பு) என அழைக்கப் படும் சோமாலியா பரப்பளவில் உலகில் 42லிவது பெரிய நாடாகும். எண்ணெய் வளம், அணு ஆயுதம் தயாரிக்க உதவும் யுரேனியம் போன்றவை இங்கு இருப்பதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் 100 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட அரபு மொழி பேசும் பெருன்பான்மை மக்களைக் கொண்டது சோமாலியாவாகும்.
சோமாலியா 1960 ஆம் ஆண்டு பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றது. அன்று முதல் இன்று வரை அரசியல் ஸ்திரதன்மையற்ற சூழலே நிலவி வந்தது. நான்கு உள்நாட்டுப் போர்களையும் (1986, 1991, 1992, 2006) அந்த பரிதாப தேசம் சந்தித்து வறுமை, வன்முறையோடு போதைப் பொருள் உற்பத்தி நுகர்தல், இவைகளோடு எய்ட்ஸும் சேர்ந்து கொள்ள சோமாலியா துன்பத்தில் உழன்றது. 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கொடிய வறுமையில் உழல்கின்றனர். 1992லில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இதுவரை 30 லட்சம் மக்கள் மாண்டுபோயுள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உள்நாட்டுப் போர்களின் விளைவாக சோமாலியாவின் வளமிக்க வடக்குப் பிரதேசம் சோமாலிலேண்ட் எனும் பெயரில் 1991ல் தன்னாட்சி கோரி பிரிந்தது. 1998ல் வடகிழக்கு சோமாலியப் பகுதியான 'பன்லான்ட்' பிரிந்து சென்றது. இவை இன்றும் நஊகஎ உஊஈகஆதஊஉ ஒசஉஊடஊசஉஊசப தஊஏஒஞச என அழைக்கப்படுகிறது.
தாங்கொணாதுயரம், தாளாத வறுமை இவைகளுக்கு கிடையில் இஸ்லாமிய நெறி முறையிலான அரசியல் அமைப்புகள் சோமாலியாவில் தலையெடுத்தன. கோரிக்கை வெல்வதற்கு ஆயுதம் ஏந்தி னாலும் தவறில்லை என்ற மனோபாவத் திற்கும் அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
1984ல் அல் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் என்ற இயக்கம் தோன்றி சோமாலியா, எத்தியோப்பியா, திபூத்தி, எரிட்டிரியா ஆகிய நாடுகளில் பரவி இயங்கத் தொடங் கியது. தனது தாய் இயக்கமான இத்திஹாதுல் முஸ்லிமீன் இயக்கத்தின் செயல்பாடு வீரிய மற்றதாக மந்தநிலையுடன் செயல்படுவதாக கருதிய துடிப்பு மிக்க இளைஞர் கள் தங்களின் ஒஈம என்ற இஸ்லாமிக் கோர்ட் யூனியன் அமைப்பை தனியாக இயக்கத் தொடங்கினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையில் பெரும்பான்மை சோமலிய மக்களின் இதயங்களை இஸ்லாமிக் கோர்ட் யூனியன் இயக்கத்தினர் வெற்றி கொண்டு விட்டனர்.
எந்த எதிர்மறை இமேஜையும் பெற்றுவிடாத இஸ்லாமிக் கோர்ட் யூனியனின் எழுச்சி அமெரிக்க ஆதரவு அதிபரான அப்துல்லாஹ்வுக்கு மட்டுமின்றி அண்டை நாடான எத்தியோப்பியாவுக்கும் கலக்கத்தைத் தரவே சோமாலிய முஸ்லிம் இயக்கம் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டது.
செப்டம்பர் 11 உலக வர்த்தக வளாக தாக்குதலுக்குப் பிறகு சூடான், சோமாலியா என்ற இருநாடுகளையும் பயங்கரவாத பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.
தற்போது சூடானில் 12 ஆயிரம் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதே நிலையை சோமாலியாவில் தொடர ஏகாதிபத்திய சக்திகள் முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது.
சோமாலியாவின் அண்டை நாடான எத்தியோப்பியாவை மேற்குலக சக்திகள் தங்களின் கைப்பாவையாக்கி அப்பிராந்தியத்தை அமைதிக்குலைந்த பிரதேசமாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். சோமாலியாவை துண்டாடிய மேற்கு சக்திகள் எத்தியோப்பியாவை பத்திரமாக பாதுகாத்து வருகின்றன. எத்தியோப்பியாவுக்கு அமெரிக்கா நவீனரக ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகிறது.
இன்று அப்பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடாக எத்தியோப்பியா விளங்குகிறது. எத்தியோப்பியா வுக்கும் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் உண்டு. இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில் அபிசீனியா என அழகுற அழைக்கப்பட்டது. முதல் உலகப் போருக்கு முன்பு வரை அபிசீனியா என்றே அழைக்கப்பட்ட நாடு மேற்குலக ஆதிக்கத்தில் அகப்பட்ட பின்னர் அபிசீனியா வுக்கு எத்தியோப்பியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரபு மொழியில் அபிசீனியா என்று அழைக்கப்பட்ட நாட்டை கிரேக்க மொழியில் இப்போது எத்தியோப்பியா என அழைக்கின்றனர்.
இஸ்லாமிய வரலாற்றின் முதல் ஹிஜ்ரத் (புலம் பெயர்தல்) அபிசீனியா என்ற எத்தியோப்பியாவை நோக்கியே இருந்தது. இஸ்லாமிய பாரம்பரியப் பெருமை கொண்ட எத்தியோப்பியாவை முஸ்லிம்களுக்கு எதிராகவே ஏகாதிபத்திய சக்திகள் கொம்புசீவி விட்டுள்ளன. இன்றும் எத்தியோப்பியாவிலுள்ள சில மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
உலகின் மிக ஏழ்மையான நாடுகள் என சோமாலியாவும், எத்தியோப்பியாவும் அழைக்கப் படுகின்றன. ஆனால் இருநாடுகளையும் மோதவிட்டு குருதிக்குடிக்க காத்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள். தற்காலிகமாக எத்தியோப்பிய படைகள் சோமாலியாவை விட்டு வெளியேறியிருக்கிறது. இஸ்லாமிக் கோர்ட் யூனியன் போராளிகள் தோற்கடிக்கப்படவில்லை. தற்காலிகமாக பின் வாங்கியிருப் பதாக அதன் தலைவர் ஷேக் ஷரீப் அஹ்மத் தெரிவித்திருக்கிறார். ஆயிரக்கணக் கான இஸ்லாமியப் போராளிகள் மக்களோடு மக்களாக கலந்து விட்டதாக அமெரிக்க எத்தியோப்பிய சக்திகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்நிலையில் நல்லாட்சி நடத்திய, இஸ்லாமிக் கோர்ட் யூனியன் அமைப்பினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கீகரிக்கும் முயற்சியை ஆப்பிரிக்க யூனியனும், எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளும் எடுக்க வேண்டும். உள்நோக்கத்தோடு இஸ்லாமிக் கோர்ட் யூனியனைச் சேர்ந்தவர்களை அல்காய்தா லொள்காய்தா என்று கூறும் அமெரிக்காவின் வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தை புறம் தள்ளி சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் அதுவே அந்த வறுமை தேசங்களை வளமிக்க பிரதேசமாக மாற்றும்

காஷ்மீர் படுகொலைகள்


காஷ்மீர் படுகொலைகள்: காவல்துறை லி ராணுவம் கூட்டு பயங்கரவாதம்?
ஜம்மு காஷ்மீர் இந்தியத் திருநாட்டிற்கே கிரீடம் போல் அமைந்திருக்கும் அழகிய பூமி. அறுபதாண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சனையாக நீண்டு வருகிறது. ஏற்கெனவே அதற்கு இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று புதிய புதிய பிரச்சனைகளும் அரசியல்வாதிகளின் கைங்கர்யமாக அங்கு முளைத்தபடியே இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் மக்களின் வீரத்தியாகம், நூறு கோடி இந்தியர்களும் என்றும் நினைவில் வைத்து போற்றக் கூடிய ஒன்றாகும். இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மக்களின் தியாகம் என்பது ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிதோடு போயிற்று. கார்கில் போன்ற திடீர் போர்கள் வெடிக்கும் போது கணிசமாக நிதி திரட்டி கொடுப்பதோடு திருப்திபடும் நிலைமை.
ஆனால் காஷ்மீர் மக்கள் வெஞ்சமரில் விளையாடும் வீரத்தோள்களுடன் தாய் மண்ணைக் காக்கவும் மக்களைக் காக்கவும் என்றும் களத்தில் நிற்பவர்கள் அவர் களுக்கு ஒரு எதிரி மட்டும் தான் உண்டு என்று நாம் நினைத்து விட முடியாது. எங்கு நோக்கிலும் எதிரிகள் தான். எதிரிகள் நுழைந்து விடக் கூடாது என எல்லை யோரத்தில் கண்துஞ்சாது கடமையாற்றும் ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக காஷ்மீர் மக்கள் விளங்குகிறார்கள்.
எழில் நிறைந்த பூமி, பதட்ட பூமியாக மாறியதற்கு அப்பாவி காஷ்மீரிகள் எப்படிக் காரணமாவார்கள்? என்ற கேள்விக் குறியையும் புறக்கணிக்க முடியாத நிலையில் அங்கிருந்து வரும் தகவல்கள் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காஷ்மீரில் அநாதைகள் அதிகம், விதவைகள் அதிகம், இன்னும் திருமணமே ஆகாத பெண்கள் அதிகம், தங்களின் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற கவலையில் திருமணமே செய்யாமல் இருக்கும் ஆண்களும் அதிகம். மொத்தத்தில் பரிதாபத்துக்குரிய அப்பாவிகள் நிறைந்த காஷ்மீரில் அவர்களைச் சுற்றி படுபாவிகள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் அப்பாவிகளைக் கடத்தி அவர்களைக் கொலை செய்ததாகவும் இதில் காஷ்மீர் மாநில காவல்துறையினரும், இந்திய ராணுவத்தினரும் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் கள் வெளிவந்துள்ளன.
ஏழைகள் ஏதுமற்றோர், ஏனென்று கேட்க நாதியற்றோரை அதிரடியாய் மடக்கிப் பிடித்து தீவிரவாதி என குற்றம்சாட்டி காவல்துறை வாகனங்களில் அள்ளிச் செல்வது, பாகிஸ்தானில் ஏதோவொரு இயக்கத்தின் கீழ் பயிற்சி பெற்றதாக குற்றம் சாட்டி அதைப் பதிவு செய்துவிட்டு பின்னர் பிடித்து வைத்திருந்தவரை, 'தப்பிக்க முயற்சி செய்ததாக'க் கூறி சுட்டுக் கொன்று விடுவது என செய்வதற்கு மிக எளிதான(?) காரியத்தை காவல்துறையும் ராணுவமும் அரங்கேற்றி வந்துள்ளன.
இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் ஊடகங்கள் அனைத்தும் செய்திகள் வெளியிடும் சூழலில் இதில் மனித உரிமை மீறல் இருந்ததா? உண்மை யில் சுட்டுக் கொல்லப்பட்டவர் தீவிரவாதிகளா? அல்லது அப்பாவிகளா? என்ற எந்த அக்கறையும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இல்லை. புலனாய்வு பத்திரிக் கைகள், புடலங்காய் பத்திரிகைகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் பத்திரிகைகள் கூட செய்தியின் உண்மையை உணர ஆர்வம் காட்டு வதில்லை. பரிதாபத்துக்குரிய அந்த ஜீவன்களைப் பற்றி நாட்டில் யாருக்கும் அக்கறையில்லை.
இந்நிலையில் தங்கள் அன்புக்குரிய குடும்பத் தலைவர்கள் திடீர் திடீரென காணாமல் போவது குறித்து காஷ்மீர் மக்கள் மாநில அரசை நெருக்கத் தொடங்கினர். ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைக் கழகமும் இப்பிரச்சனையை கையி லெடுக்கவே, விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் குலாம் நபி ஆஸாத் உத்தரவிட்டார்.
விசாரணையில் வெளிவந்த தகவல்கள் ஜம்மு காஷ்மீரை ஒரு புரட்டுப் புரட்டிப் போட்டது. உலகிலுள்ள மனித உரிமை ஆர்வலர்களை ஒட்டுமொத்தமாக அதிருப் தியில் தள்ளியது. சர்வதேச அளவில் நாட்டின் புகழுக்கே பங்கம் ஏற்பட்டது.
விருதுகள், பணப்பரிசு, பதவி உயர்வு பெறுவதற்காக அப்பாவிகளைப் பிடித்து தீவிரவாதிகள் என லாக்கப்புகளில் அடைத்துவிட்டு பின்னர் அவர்கள் தப்பி யோட முயற்சித்தார்கள் எனக் கூறி சுட்டுக் கொன்று நாடகமாடுவது. இந்த படுகொலை வெறியாட்டத்தை தீவிரவாதிகளுக்கு எதிராக நிகழ்த்திய வீரதீரச் சாதனையாகக் காட்டி விருதுகள், பணப் பரிசுகள், பதவி உயர்வு பெறுவது என தெளிவான சதித்திட்டம் வகுக்கப் பட்டுள்ளது அம்பலமானது.
இந்திய ராணுவமும், காவல் படையும் இந்த இரக்கமற்ற செயலை செய்வதற்கு, காஷ்மீர் மாநில காவல்துறையிலுள்ள மனித மிருகங்கள் உடந்தையாக இருந்து படுகொலை செய்வதற்கு ப­யாடுகளை (அப்பாவிகளை) பிடித்துக் கொடுப்பது என விரிவான செயல்திட்டத்தின்படி(?) ஒரு வெறிக்கும்பல் ஈடுபட்ட சம்பவம் வெளிவந்துள்ளது. இந்தச் சதியில் இந்திய ராணுவத்தின் மூன்று படைப் பிரிவு களுக்கு தொடர்பிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. 5வது ராஷ்ட்ரிய ரைஃ பிள்ஸ் அதிகாரிகள், மற்றும் 24வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவுகளின் அதிகாரி களுக்கும் இந்த சதிச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விபரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
போலி என்கவுண்டர்களை உறுதிப்படுத்திய போலி எப்.ஐ.ஆர்.கள்
முதல் தகவல் அறிக்கை (எஒத) 09லி12லி06 ஏஹய்க்ங்ழ்க்ஷஹப் காவல் நிலையம்:
ஜம்மு காஷ்மீர் சிறப்பு காவல் படையும் மத்திய ரிசர்வ் காவல்படையும் அடையாளம் தெரியாத பாகிஸ்தான் தீவிரவாதியை சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. (அவரது உண்மைப் பெயர் அப்துல் ரஹ்மான் பட்டார்)
எப்.ஐ.ஆர்.203 அக்டோபர் 5 2006 சம்பல் காவல் நிலையம்
13வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவு பதிவு செய்தது. பாகிஸ்தானின் ஜெய்ஷே முஹம்மத் இயக்கத்தைச் சேர்ந்த ஜாஹித் அ­ சுட்டுக் கொல்லப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளது. (இவரது உண்மை பெயர் சவுகத் அஜீஸ்)
எப்.ஐ.ஆர். (மார்ச் 14 2006) சம்பல் காவல் நிலையம்
அடையாளம் தெரியாத தீவிரவாதி என்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. (பின்னர் இவர் குலாம் நபி வானி என இப்போது அடையாளம் காணப்பட்டது)
எப்.ஐ.ஆர். 25 (மார்ச் 8 2006) கன்கன் காவல் நிலையம்
24வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவு. அடையாளம் தெரியாத தீவிரவாதியை சுட்டுக் கொன்றதாக பதிவு செய்துள்ளது. இவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இவர் அ­ முஹம்மது பத்ரு என பின்னர் அடையாளம் காணப்பட்டது)
எப்.ஐ.ஆர். (பிப்ரவரி 17 2006) ஏஹய்க்ங்ழ்க்ஷஹப் காவல் நிலையம்
அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரிடமிருந்து கலாஷ்ரி கோவ் ரைஃபிள் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும் இவரிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் (இவர் நாஸிர் அஹ்மத் டெகா என பின்னர் தெரியவந்தது)
இந்த ஐந்து என்கவுண்டர் படுகொலை களைக் காட்டி விருதுகள், பணப்பரிசுகள், பதவி உயர்வு என்பவற்றை வாங்கி அனுபவித்தார்கள். தங்கள் குடும்பத் தலைவர் களை இழந்து அப்பாவி காஷ்மீரி குடும்பங்கள் கண்ணீர் கட­ல் தத்தளிக்க ஏதோ செயற்கரிய சாதனை செய்ததைப் போல குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்த அயோக்கியர்கள் மாவீரன்கள் போல் உலா வந்தனர். காஷ்மீர் மனித உரிமை ஆர்வலர்கள் மட்டும் குமுறி எழாமல் இருந்திருந்தால் இந்த அயோக்கியர்களின் முகத்திரை கிழிக்கப்படாமலேயே போயிருக்கக் கூடும்.
2006 டிசம்பர் மாதம் இவர்கள் கண்டர்பல் காவல்நிலையத்தில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், பாகிஸ்தான் தீவிரவாதி, முல்தானில் பயிற்சி பெற்றவர். கொடிய ஆயுதங்களுடன் சுட்டுக் கொல்லப்பட்டவர் என இவர்கள் குறிப்பிடுவது உண்மையில் யார் தெரியுமா?
நடைபெற்ற போ­ எண்கவுண்டர் படுகொலை புகார்களினால் உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் குலாம் நபி ஆஸாத் உத்தரவிட்டதினால் உண்மைகள் தோலுரிக்கப்பட்டன. புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டியெடுக்கப் பட்டன லி உண்மைகளும்.
பாகிஸ்தான் தீவிரவாதி என்றும், முல்தானில் பயிற்சி பெற்றவர் என்றும் கூறப்படும் அவரது பெயர் அபூஹபீஸ் என்றும் (இவர்களே பேர்களையும் வைத்து விடுகிறார்கள்) லஷ்கர்லிஇலிதய்யிபா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறி சுட்டுக் கொல்லப்பட்டவரின் உண்மைப் பெயர் அப்துல் ரஹ்மான் பட்டார். ஏழை கார்பண்டர். தினக் கூ­க்காக தினமும் ஸ்ரீநகர் சென்று வருபவர்.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அவர் காணாமல் போனார். இரண்டு மாதங்களுக்கு முன்பு போலீஸ்காரர்கள் ஒரு மையவாடிக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்ட அப்துல் ரஹ்மான் உடலை புதைத்துள்ளனர். புதைக்கும் முன்பாக அவர் கா­ல் அணிந்திருந்த ஷுக்களை கழற்றிவிட்டுத் தான் புதைத்ததாக மையவாடியின் காவலாளி தெரிவித்தார்.
காவல்துறை துணை ஆய்வாளர்கள், இரண்டு பொதுமக்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் நால்வர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சம்பல் பகுதி படா மொஹல்லாவில் ஆவேசமடைந்த ஜனத்திரளில் ஆத்திரம் அலை மோதியது. ஸ்ரீநகருக்கு வெளியே ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இப்பகுதியில் ஆத்திரம் அடைந்த மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
'அமைதி காக்க வேண்டும்' 'பொறுமையைக் கைவிட வேண்டாம்' என பள்ளிவாசல் ஒ­பெருக்கி மீண்டும் மீண்டும் கெஞ்சியது. காவலர்கள் கண்ணீர் புகைக் குண்டுகள் தீரும்வரை வீசினர். பொதுமக்கள் கீழே கிடந்ததையெல்லாம் காவல்துறையின் மீது வீசியெறிந்தனர் மேசை நாற்கா­கள் பறந்தன.
செய்தியாளர்களும், தொலைக்காட்சி புகைப்படக்காரர்களும் ஓட ஓட விரட்டப்பட் டனர். 'என்றாவது உண்மையை எழுதியிருக்கிறாயா?' என ஆவேசமாக கேட்டுக் கேட்டு உதைத்து விரட்டினர். மகனை இழந்த தந்தையின் வருகை, ஆவேசமாக நடந்த மக்களின் வேதனையை அதிகப்படுத்தியது.
தோண்டியெடுக்கப்பட்ட சடலம் மீண்டும் புதைக்கப்பட அங்கு கொண்டு வரப்பட்டது. சடலத்தின் வலது தோள் பட்டையி­ருந்து ரத்தம் கசிவு இருந்தது. முகம் சிதைக்கப்பட்டிருந்தது.
மத்திய தடயவியல் துறையி­ருந்து இரண்டு மருத்துவர்கள் சண்டிகரி­ருந்து புறப்பட்டு வந்தனர். பிப்ரவரி முதல் தேதி புதன்கிழமையன்று வந்த அவர்கள் கொல்லப்பட்ட அப்துர்ரஹ்மான் உடலி­ருந்தது ரத்த மாதிரிகளையும் அவரது பெற்றோரின் உட­­ருந்த ரத்தம் மற்றும் திசு மாதிரிகளையும் எடுத்தனர்.
குண்டுகள் பாய்ந்த அடையாளம் அப்துர் ரஹ்மான் உட­ல் நான்கு பகுதிகளில் இருப்பதாகவும், மார்பின் நடுப்பகுதி, தாடை, கால் மூட்டு மற்றும் இடது வயிறு போன்றவற்றில் தோட்டாக்கள் துளைத்த அடையாளம் காணப்பட்டதாகவும் தடயவியல் குழுவில் இடம்பெற்றிருந்த உள்ளூர் அறுவை சிகிச்சை மருத்துவர் முஹம்மத் ஹயாத் குறிப்பிட்டார்.
அப்துர் ரஹ்மான் மனைவி முனீரா மற்றும் பெண்கள், அப்துர் ரஹ்மானின் உடலைக் காண வந்த போது முனீரா மயங்கி சரிந்தார்.
வேதனையில் ஆழ்ந்த கூட்டத்தின் இந்திய ராணுவத்துக்கு எதிரான முழக்கங்கள் இமயத்தில் முட்டி எதிரொ­த்தது.
வெளியே தெரியாமல் செய்த இந்த கோரக் கொலை எவ்வாறு உலகிற்கு தெரிய வந்தது தெரியுமா?
டிசம்பர் 8ஆம் தேதி அப்துர் ரஹ்மான் காணாமல் போகிறார். ஊரெங்கும் தேடிப் பார்த்த பின் ஸ்ரீநகர் தெற்கு துணைக் கண்காணிப்பாளர் உத்தம்சந்த்திடம் முறை யிடச் சென்றபோது அப்துர்ரஹ்மானை விசாரணைக்காக கொண்டு சென்ற தகவலையும், அவர் பெயர் காணாமல் போனோர். பட்டியலில் பதிவு செய்யப் பட்டது. அவர் எங்கு போனார் என்பது குறித்து தேடப்பட்டு வரும் நிலையில் அப்துர்ரஹ் மானின் அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பி.எஸ்.என்.எல். துறை யினரின் உதவியுடன் மொபைல் போனின் ஒஙஊஒ எண் 357054000874988 வேறொரு சிம்கார்டில் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது 9419901156 என்ற எண்ணுடன் பொருத்தப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது. அது ஹஜன் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரின் மொபைல் பேசி எண்ணாகும். அவர் பெயர் அப்துல் ரஷீத் வாகே. அவரை விசாரித்தபோது காவல்துறை உதவி ஆய்வாளர் இவருக்கு மொபைல் போன் கொடுத்த விஷயம் தெரியவந்தது.
நூல் பிடித்தாற்போல் விசாரணை தொடர, உயர்காவல்துறை அதிகாரிகள் ஹன்ஸ் ராஜ் பரிஹார், ராம்பஹதூர் மற்றும் ராணுவத்தின் மூன்று பிரிவுகளை நோக்கி சுட்டுவிரல்கள் நீளத் தொடங்கின. காஷ்மீர் அரசியல் தலைவர்கள் கட்சிப் பாகுபாடின்றி ஒன்று சேர்ந்தார்கள். கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
நாஸிர் அஹ்மத் டேகா. அத்தர் வியாபாரியான அவர் ஸ்ரீநகர் லால் சவுக்கிலிருந்து நம்பர் பிளேட் இல்லாத ஜிப்ஸி ஜீப்பில் காவல் காலிகளால் கடத்தப் படுகிறார். ராணுவ துப்பாக்கிப் பிரிவான ராஷ்ட்ரீய ரைபிளும், மாநிலக் காவல் துறையும் இவரையும் பாகிஸ்தான் தீவிரவாதி என முத்திரைக் குத்தி சுட்டுக் கொன்று விட்டனர். அவரிடமிருந்து ஏ.கே.47 துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வழக்கம்போல் செய்தி வாசித்தனர்.
ஆனால் ஏ.கே.47 துப்பாக்கியின் தோட்டாக்கள் அவர் உடலைத்தான் துளைத்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் காணாமல் போனவர்களின் கதி குறித்து அச்சம் எழுந்துள்ளது.
இதற்கிடையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாநிலமெங்கும் பற்றிப் பரவுகிறது. போலித்தனமான என்கவுண்டர் மூலம் அப்பாவிகளை படுகொலை செய்யும் போக்கு நீண்ட நாட்களாகவே இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் ஒரு நோய் போலவே பரவி விட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை இயக்கத்தின் ஆசிய இயக்குநர் ப்ராட் ஆடம்ஸ் தெரிவித்தி ருக்கிறார். நியூயார்க்கை தளமாகக் கொண்டு இந்த மனித உரிமை இயக்கம் ''தவறான தகவல்களைக் கூறி அப்பாவிகளைப் படுகொலை செய்து அடர்ந்த காட்டுப் பகுதியில் வீசிவிட்டு வெளிநாட்டு தீவிரவாதிகளை சுட்டுவிட்டோம்'' என்று இந்தியப் பாதுகாப்பு படையினர் பொய்ச் செய்தி பரப்புவதாக குற்றம்சாட்டினர். இந்த அமைப்பினர் உண்மை அறியும் ஆய்வுக் காக காஷ்மீர் சென்றிருந்த போது மக்கள் தங்கள் மனக்குறையை கொட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு இவ்வாறு ஏராளமானோர் காணாமல் போனதாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். கடந்த இருபதாண்டுகளுக்குள் 8 ஆயிரம் பேர் இவ்வாறு காணாமல் போய் விட்டதாகவும், இது குறைந்தபட்ச கணக்காக இருக்குமே தவிர இதன் எண்ணிக்கை மேலும் கூடுதலாகவே இருக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மனிதர்களை கொலை செய்வதற்கு பணப்பரிசு, விருது, பதவி உயர்வு என அரசாங்கத்தால் வழங்கப்படுவது கேவலமான கலாச்சாரம் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறுகிறது. இதுவே நீதியை சாகடித்து அப்பாவிகளின் படுகொலைக்கு வழிவகுத்து விடுகிறது என்றும் சாடியுள்ளது.
மனித உரிமை மீறும் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும், 'இவர்கள் ஒன்றும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல என்பதை அவர்களுக்கு அழுத்தமாக அறிவித்துவிட வேண்டும்' என்றும் அவ்வமைப்பு மேலும் கூறியுள்ளது.
இதே அமைப்புதான் செப்டம்பர் 2006ல் 'காஷ்மீரில் ஒவ்வொரு மனிதனும் அச்சத் துடனே வாழ்க்கையைக் கழிக்கிறான்' என தெரிவித்திருந்தது.
இம்மாதிரியான நிகழ்வுகளால் காஷ்மீர் பிரச்சினை மேலும் மோசமடைவதை தடுக்க முடியாது என்றும் மனித உரிமை அமைப்பு எச்சரித்துள்ளது.
காஷ்மீரில் மட்டும்தான் காணாமல் போன குழந்தைகளின் பெற்றோர்கள் சங்கம் உண்டு. கடந்த ஆகஸ்டு 30ஆம் தேதி காணாமல் போனவர்களின் தினம் நினைவு கூறப்பட்ட போது கண்ணீருடன் தாங்கள் இழந்த குழந்தைகளையும், அன்புக்குரியவர்களையும் எண்ணி வேதனையில் ஆழ்ந்தனர்.
காஷ்மீருக்கு உள்ளேயும், வெளியேயும் தலைநகர் டெல்லியிலும், குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் விசாரணைக் கணைகளால் காஷ்மீரிகள் துளைத்தெடுக்கப் படுகின்றனர். விசாரணைக் காலங்கள் விடியா இரவுகளாய் நீள்கின்றன. ராணுவத்தினர் பாலியல் வன்முறை உட்பட பல குற்றங்கள் புரிந்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல ஆண்டுகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அவை தனிநபர் ஒழுக்க குறைபாடு சம்பந்தமான விஷயமாகக் கருதப்பட்டு விமர்சிக்கப்பட்டது. திடீர் திடீரென நிகழ்ந்த அப்பாவிகளின் படுகொலை குறித்தும் அத்தகைய முத்திரையே குத்தப்பட்டது. எந்த குற்றச்சாட்டுக்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற நிலையில் மனித உரிமை மீறல்கள் தற்போது திட்டமிடப்பட்டவை (எண்ஷ்ங்க் ஈழ்ண்ம்ங்ள்)யாக அமைப்பு ரீதியிலான படுகொலையாக (ஞழ்ஞ்ஹய்ண்ள்ங்க் ஈழ்ண்ம்ங்ள்) மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலை இந்தியாவுக்கு அழகல்ல. காஷ்மீரைக் காப்பது என்று சொல்வது காஷ்மீரிகளை காப்பதாகவே இருக்க வேண்டும். காஷ்மீரிகளை நேசிப்பது காஷ்மீரை நேசிப்பதன் பொருளாகும். சின்னஞ்சிறிய நிலப்பரப்பின் மீது ஏன் இவ்வளவு ராணுவக் குவிப்பு. ஒரு சிவிலியனுக்கு ஏழு ராணுவ வீரர்கள் என்ற ரீதியில் படைக்குவிப்பு தேவையா? கார்கிலும், டால் ஏரியும், பாரமுல்லாவும், சீறிப்பாய்ந்து ஓடும் ஜீலம் நதியும், அழகிய ஆப்பிள் தோட்டங்களும், மயக்கும் பள்ளத்தாக் குகளும், பரவசமடையச் செய்யும் பனிமலைகளும் முதலில் காஷ்மீரிகளுக்குத் தான் சொந்தம் என்பதை நாம் மறக்கக் கூடாது. காஷ்மீரில் நம் படைபலத்தை வைத்துக் கொண்டு அச்சுறுத்தக் கூடாது.
தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் இருட்டு நேரத்தில் அப்பாவிகளை தூக்கிச் சென்று படுகொலை செய்யும் ராணுவ வீரர்கள், பாதுகாவல் படையினர் என்ற பெயரில் உலாவரும் கடைந்தெடுத்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி முறையான விசாரணை நடத்தி அந்த மனிதகுல விரோதிகளை தண்டிக்க வேண்டும்.
காஷ்மீர் மக்களின் இதயங்களை வென்றெடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்க வேண்டும். மக்களின் இதயங்களை வென்றுவிட்டால் அந்த நிலப்பரப்பு மன மகிழ்வுடன் நம்முடன் இணையும். அதை விடுத்து காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்காமல் காஷ்மீரிகளைத் தீர்க்கும் மூர்க்கத்தனம் களையப்பட வேண்டும்.

கண்றாவி தினம்

கண்றாவி தினம் கண்ணின் கடைப்பார்வைகாதலியர் காட்டிவிட்டால்மண்ணில் குமரர்க்குமாமலையும் ஓர் கடுகாம்
லி என்றான் பாவேந்தர் பாரதிதாசன். உண்மையான அன்பு, உள்ளார்ந்த காதல், இணை பிரியா தன்மையுடன் உள்ள நேசிப்பின் மகத்துவத்தைக் கூறி காதலியின் கடைக்கண் பார்வையைப் பெற்றால் மலையைக் கூட ஒரு கடுகாக எண்ணி, எவ்வாறெனில் மலையைப் போன்ற ஒரு கடினமான செயலைக்கூட கடுகினைப் போல் எளிதாகக் கருதி சடுதியில் முடிப்பான் என ஆக்கப்பூர்வ சிந்தனையுடன் பாரதிதாசன் பாடியுள்ளார்.
ஆனால் பெண்மையை, இளமையை, பண்பாட்டுப் பெருமையைக் கூறுபோடும் விதமாக காதலர் தினம் என்ற பெயரில் கன்றாவி தினத்தை மேற்கத்திய கலாச்சார சீரழிவை நம்நாட்டிலும் சில வேலையற்றது இறக்குமதி செய்து தொலைத்துள்ளனர்.விற்பனைக் கண்காட்சிகளை நடத்துவதைப் போல வாழ்த்து அட்டைகளும், காதல் ஈமெயில்களும் தடபுடலாய் பரிமாறிக் கொள்கின்றனர். கலாச்சார சீரழிவின் மொத்த குத்தகைதாரர்களான தொலைக்காட்சி சேனல்கள் காதலர் தினத்தை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தி கணிசமாய் காசு பண்ணி விடுகின்றன.
இளசுகள் கூடும் இடங்களில் பச்சை வண்ண உடை அணிந்து சென்றால் நான் ரெடி (இன்னும் எனக்கு காதலர் (அ) காதலி இல்லை) என்பதை உணர்த்தும் சிக்னலாம். இதை வைத்து புதிதாக தங்கள் காதல் ஜோடியை தேடிக் கண்டுபிடிக்கின்றனர். ரோஜாக்களின் மவுசு கூடுகிறது. மணக்கும் ரோஜா, மயக்கும் மல்லிகை, கசங்கும் காகிதப் பூ வரை விலை ஏற்றத்தில் இறக்கை கட்டி பறக்கும். இளைய தலைமுறை யினரின் சிந்தனையில் சிதிலங்களை ஏற்படுத்திவரும் இத்தகைய கொண்டாட்டங்கள் கண்டிக்கப்பட வேண்டும்.
கல்வி கற்க வேண்டிய வயதில், தனது எதிர்கால வாழ்க்கைப் பாதையை தெரிந் தெடுத்துக் கொள்ள வேண்டிய சரியான பருவத்தில் நற்குணங்களுடன், நன்னடத்தையுடன் தனது தாய் தந்தையரையும் சுற்றத்தாரை யும் பெருமைப்படுத்த வேண்டிய பருவத்தில், சில்லறைத்தனமான இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மனதை இளைய தலைமுறையினர் பறிகொடுத்து விடக்கூடாது.
நமக்குத் தெரிந்த எத்தனையோ இளைஞர்கள், இளைஞிகள் இந்தக் காதல் கன்றாவியால் தங்கள் எதிர்காலத்தைத் தெளிவாக தெரிந்தெடுக்கும் வாய்ப்பினை இழந்து துயரப்படுகிறோம் என்றும் மற்றும் இளைஞர் இளைஞிகள் காதல் செய்யும்போது வசந்த மாகத் தெரிந்த வாழ்வு பின்னர் இருண்டு வறண்டு காட்சி யளிக்கிறது என்றும் மனம் வெறுத்து சொன்னதைக் கண்ணால் பார்த்திருக்கிறோம். இன்னும் சிலர் எனக்கு அருமையான வாழ்க்கையை அமைத்துத்தர என் பெற்றோர் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அவசரத் துடுக்கினால் அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டேனே எனக் கதறியவர்களும் உண்டு.
விபரம் அறியாது, விபரீதம் புரியாது காதல் கட்டுக் கதைகளை இளைஞர்கள் தங்களுக்குள் ஊக்குவிப்பதால் அந்தப் பகுதியிலுள்ள இளம்பெண்களின் இதயமும் நஞ்சாகிறது.
இளைஞன் ஒருவன் ஜம்பமாக, பந்தாவாக கல்லூரியில் தன்னை மஞ்சுளாவும், மரிக்கொழுந்தும் மாறி மாறி காதலிப்பதாக கதை விடுவதும், அதைக்கண்டு தானும் ஒரு மாரிமுத்துவையோ, மாயாண்டியையோ விரும்பினால் ஒன்றும் தவறல்ல எனும் விபரீத முடிவுக்கு அவனது சகோதரியோ அல்லது அடுத்த வீட்டு இளம் பெண்ணே வரும் அபாயத்தையும் எதிர்கொள்ள வேண்டிவரும். அருமை அருமையாய் வளர்த்தெடுத்த மக்களால் அவமானம் சுமக்கும் அவல நிலைக்கு பெற்றோர்கள் ஆளாகலாம்.
இன்னும் சிலர் காதலித்த பெண்ணை முஸ்லிமாக மாற்றித்தானே திருமணம் செய்து கொள்கிறோம். இவருக்கு ஏன் பொறாமை, போய்யா பொத்திக்கிட்டு என்று கோபத்துடன் குமுறுகிறார்கள்.
எத்தனை சமாதானங்கள் கூறினாலும் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே என்பதை அடித்துக் கூற முடியும். சமுதாயத்தில் திருமணமாகாமல் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் தொகை விலைவாசி போல் உயர்ந்து வரும்போது குறைந்தபட்சம் தனக்கு ஏற்ற பெண்ணை இங்கே தேடி மணமுடிக்க வேண்டும். அதை விடுத்து இவனே இன்னும் சிலகாலம் கழித்து கறுப்பு வெள்ளைத் தாடியுடன் நீண்ட காலமாக திருமணமாகாமல் இருக்கும் தனது சகோதரிக்காக (அ) மகளுக்காக கவலைப்பட்டுக் கொண்டு 'இந்த சமுதாயம் ஏன் இப்படி இருக்கிறது' என்று புலம்பும் நிலை அவனுக்கும் வரும்.
சமுதாயத்தின் சரிபாதியாகத் திகழும் பெண்களின் பல்வேறு நலன் நாடும் விஷயங்களில் இதை நாம் எவ்வாறு மறந்தோம்.
காதல், காதலர் தினம் போன்றவற்றை கழிவுகளாகக் கருதி, திருமண இணை தேடும் விஷயத்தில் தெளிவினைப் பெறுவோம்.
ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றும் புதிய பள்ளிவாசலை கட்டுவோம்'இஸ்லாத்தைத் தழுவிய கரசேவகர்கள் உறுதி...
ஸப்ரன் ஹபீப்
பாபர் மஸ்ஜித் எனும் இந்தியாவின் 400 ஆண்டு கால பெருமைக்குரிய பள்ளிவாசல் தகர்ப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவர் முஸ்லிமாக மாறியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய உருது இதழான ராஷ்ட்ரிய சஹாரா செய்தி ஏடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் மனப் பூர்வமாக இஸ்லாத்தில் இணைந்த போது அவர்களுக்கு கலிமா சொல்லிக் கொடுத்த மார்க்க அறிஞரின் பேட்டியோடு இச்செய்தியை வெளியிட்டு தகவலை உறுதிப்படுத்தியுள்ளது ராஷ்ட்ரிய சஹாரா பத்திரிகை.
மனித குலமே வெட்கித் தலைகுனியத்தக்க அந்தக் கொடிய செயலை செய்ய ஆயிரக் கணக்கான கரசேவைக் காலிகள் வெறி கொண்டு பாப்ரி மஸ்ஜிதை நோக்கி புறப்பட்டபோது தர்மேந்திரா, பல்பீர் என்ற இரு இளைஞர்களும் மஸ்ஜிதை மண் மேடாக்கும் ஆவலோடு பாய்ந்து சென்றனர்.
தர்மேந்திரா ஹரியானா மாநிலத்தின் சோனி பட் பகுதியைச் சேர்ந்தவர். பாப்ரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட போது மஸ்ஜித்தின் இடிபாடுகளின் மீது சிறுநீர் கழித்தார். சிறிது காலத்தில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறிப் போனார்.
மகனின் மனநிலை பாதிக்கப்பட்டதால் வேதனை உறுத்தலுடன் இருந்த தர்மேந்திராவின் தந்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவும் தனது மகனையும் இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்தார்.
இரண்டாவது கரசேவகரான இவரது பெயர் பல்பீர். இவர் ஹரியானா மாநிலத்தின் பானிபட் பகுதியைச் சேர்ந்தவர். இவரும் அந்த டிசம்பர்லி6 என்ற தேசத்தின் கறுப்பு நாளில் பாப்ரி மஸ்ஜிதை தகர்த்தவர்களில் ஒருவர்.
கரசேவை செய்யப் போகிறோம் என்றுதான் உச்சநீதிமன்றத்திடமே பொய்யான வாக்குறுதி கொடுத்து அயோத்தி சென்றனர் சங்கும்பல். அவ்வாறே நாட்டின் பெரும்பாலான மக்களும் எண்ணியிருந்தனர். அவ்வாறே பல்பீரின் தந்தையும் எண்ணியிருந்தார்.
1992லிடிசம்பர் 6 சூரியன் மறைவதற்குள் பாபர் மஸ்ஜிதை தகர்த்து இந்தியாவின் பெருமையையும் இருட்டுக்குள் தள்ளிய தேசத் துரோகிகள் குறித்து நாடெங்கும் செய்தி பரவத் தொடங்கியது.
மஸ்ஜிதை இடித்தாயிற்று. மனமகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். பல்பீரின் தந்தையார் ஒரு கண்ணியவான். மகனின் செயல் கண்டு கடும் ஆத்திரம் அடைந்தார். கடவுளின் வீட்டை ஏன் இடித்தீர்கள் என சீறித்தள்ளினார். வேதனை பொங்க விளாசினார்.
சிறிது காலம் கழிந்த பின்னர் தீய செயலைக் கண்டித்த தந்தை மரணமடைந்தார். தந்தையின் மறைவைத் தொடர்ந்து பல்பீர் மனசஞ்சலமடைந்தார், நிம்மதி இழந்தார்.மவ்லானா கலீம் சித்திக்கி என்னும் மார்க்க அறிஞரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் ஜமியத் இமாம் வலியுல்லாஹ் என்ற அறக்கட்டளை அமைப்பின் ஆன்மீகப்பணி, கரசேவகர்கள் இருவரையும் அரவணைத்தது.
முதலில் கூறப்பட்ட தர்மேந்திராவும் அவரது தந்தையும் ஜமியத் இமாம் வலியுல்லாஹ் அறக்கட்டளையின் தலைவர் கலீம் சித்திக்கியின் கரம் பற்றி சத்திய தீனுல் இஸ்லாத்தில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து தர்மேந்திராவின் மனநிலை சீராகத் தொடங்கி ஆரோக்கிய மனநிலையுடன் வாழ்வதாகவும் ஜனவரி 30 ஆம் தேதி வெளிவந்த ராஷ்ட்ரிய சஹாரா செய்தி குறிப்பிட்டுள்ளது. தர்மேந்திரா உமர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
பல்பீரின் மனவேதனைக்கு அருமருந்தாகவும் இஸ்லாம் மாறியது. மார்க்க அறிஞர் கலீம் சித்திக்கி இவருக்கு கலீமா (உறுதிமொழி) சொல்லிக் கொடுத்து சத்திய தீனுல் இஸ்லாத்தை தழுவ உதவினார். பல்பீர் தற்போது ஆமிர் என அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினமான டிசம்பர் 6 அன்று ஒரு புதிய பள்ளிவாசலை திறப்போம் என ஆமிர் (பல்பீர்) உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
ஜமிய்யத் இமாம் வலியுல்லாஹ் அறக்கட்டளை சேவையின் விளைவாக ஏராளமானோர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருவதாக தெரிவித்த மவ்லான சித்திக்கு பாரதிய ஜனதாவின் முன்னணித் தலைவரான விஜய் குமார் மல்ஹோத்ராவின் சகோதரரும் தங்கள் அறக்கட்டளை நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தில் இணைந்தார் என்றும் அவரது பெயர் டாக்டர். சயீத் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் சித்திக்கி தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தைத் தழுவினார் அமெரிக்க மேயர்




இஸ்லாத்தைத் தழுவினார் அமெரிக்க மேயர்அமெரிக்காவில் ஜார்ஜியா மாகா ணத்தில் உள்ள Macon மாநகர மேயர் ஜேக் எல்லிஸ் இஸ்லாமிய நெறியை ஏற்றுக் கொண்டுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி யில் இஸ்லாமிய நெறியினை அவர் ஏற்றுக் கொண்டார்.

மத்திய ஜார்ஜியாவில் உள்ள கிறிஸ் தவர்கள் நிறைந்து வாழும் Macon நகரத்தின் கிறிஸ்தவ மேயர் ஜேக் எல்லிஸ் முஸ்லிமாக மாறியது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக அவர் தனது ஜேக் எல்லிஸ் என்ற பெயரை ஹக்கீம் மன்சூர் எல்லிஸ் என சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்து கொண்டார். தனது மனமாற்றம் தற்செயலானதல்ல. தான் கடந்த பல வருடங்களாக திருக்குர்ஆனை ஓதி, அதன்படி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நான் முஸ்லிமாக மாறியது வியப்பிற்குரியதல்ல. இஸ்லாம் எமது முன்னோர்களின் மார்க்கம் என மகிழ்வுடன் தெரிவித்தார்.

கறுப்பின மக்கள் அமெரிக்க கண்டத்துக்கு அடிமைகளாக ஆப்ரிக்க கண்டத்திலிருந்து கொண்டு வரப் பட்டபோது அவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தனர். எனவே 'இஸ்லாம் எமது முன்னோர்களின் மார்க்கம்' என ஜேக் எல்லிஸன் ஆக இருந்த ஹகீம் மன்சூர் தெரிவித்தார்.

61 வயதாகும் ஹகீம், ஆப்பிரிக்க வம்சாவழி கறுப்பின சமூகத்தை சேர்ந்தவராவார். அமெரிக்காவின் மதச் சுதந்திரம் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் ஹக்கீம் மன்சூர் எல்லீஸ் தெரிவித்தார்.

தனது மனமாற்றம் குறித்தும் இஸ்லாத்தைத் தழுவிய சம்பவம் குறித்தும் அல்ஜஸீரா ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு நீண்ட நேர்காணலை வழங்கினார்.

அல்ஜஸீரா ஆங்கிலச் சேனலின் வட அமெரிக்க செய்தியாளர் விவியானோ ஹர்டடோவுக்கு அளித்த நீண்ட பேட்டியில் ''வேறுபாடுகளிலிருந்து சகிப்புத் தன்மையிடம் சேர்ந்த புதிய பிறப்பு'' என தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது குறித்து தெரிவித்தார். ஆண்டுகள் பலவாக குர்ஆனைக் கற்றுத் தெளியும் நான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் Macon இஸ்லாமிய சென்டரில் தொழுகை க்கு செல்வதாகக் குறிப்பிட்டார்.

ஏசு - இறைவனின் திருத்தூதர்களில் ஒருவர் என்பதையும், முஹம்மத் (ஸல்) இறைவனின் இறுதித்தூதர் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

மேயர் ஹகீம் எல்லீஸின் மனமாற்றம் குறித்து அதிர்ச்சியடைந்த பிற்போக்கு சக்திகள் மேயரைக் குறித்து அவதூறான செய்திகளை பரப்பத் தொடங்கினர். வாழ்த்துக்களும் குவியத் தொடங்கின.


உலகம் முழுவதும் இருந்து 5000 ஈமெயில்கள் மேயர் ஹகீம் எல்லீஸை மொய்க்கத் தொடங்கின.

ஏராளமான ஈமெயில்கள் மேயரை வாழ்த்தியே அனுப்பப்பட்டன. ஜார்ஜியாவின் மத்தியப் பகுதியிலிருந்து அவருக்கு ஆதரவான தகவல்களே அனுப்பப்பட்டன.

அல்லாஹ், மேயர் எல்லிஸின் அனைத்து செயல்களையும் அங்கீகரித்து அருள் புரிய வேண்டும் என ஸ்வீடனிலிருந்து வந்த ஈமெயில் பிரார்த்தனையுடன் அனுப்பப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டார் எல்லிஸ்.

கொலராடோவிலிருந்து ஈமெயிலில் தகவல் அனுப்பிய எழுத்தாளர் 'எங்கள் நாட்டை விட்டு ஓடு' என்ற வெறித்தனமான கருத்துக்களை புறம் தள்ளியதாகக் குறிப்பிட்ட எல்லிஸ், தன்னை அமெரிக்காவை விட்டு பிரிக்க முடியாது. தனது தேசப்பற்று குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது என்றும் தெரிவித்ததோடு தான் வியட்நாம் போர்க்களத்தில் அமெரிக்காவுக்காகப் போராடிய முன்னாள் வீரர் என்றும் தெரிவித்தார்.

61 வயதான ஙஹஸ்ரீர்ய் மேயர் ஹகீம் எல்லீஸ் தான் இப்போது மனநிறைவுடன் வாழ்வதாகத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற அமெரிக்கக நாடாளுமன்றத் தேர்தலில் மிக்சிகனைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கீத் எல்லிசன் முதல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அமெரிக்க மக்களின் மேம்பாட்டுக்காகவும் அமெரிக்க முஸ்லிம்களின் உரிமைக் காகவும் பாடுபடப் போவதாக கீத் எல்லிசன் சூளுரைத்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் ஏற்கும்போது திருக்குர்ஆனை ஏந்தி உறுதிமொழி ஏற்றார். அமெரிக்க வரலாற்றில் இதுவரை பைபிள் ஏந்தியே அனைவரும் தங்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துள்ளனர். குர்ஆனை வைத்து உறுதிமொழி ஏற்பதை அனுமதிக்கக் கூடாது என நிறவெறியர்கள், மதவெறியர்கள் ஒன்றாக கூக்குரலிட்டனர். எந்த சர்ச்சைகளையும் சலசலப்பையும் கண்டு அஞ்சாத கீத் எல்லிசன் எம்.பி., அஞ்சாத நெஞ்சுரத்துடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் திருக்குர்ஆனுடன் நுழைந்தார். பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஆர்ப்பாட்டம் செய்த ஷைத்தான் தற்காலிகமாக வாய் மூடினான். இது கடந்த மாதத்தின் நிகழ்வு.

பிப்ரவரி மாதம் ஙஹஸ்ரீர்ய் மாநகர மேயர் ஜேக் எல்லிஸ் இஸ்லாமிய நெறியை ஏற்று ஹக்கீம் மன்சூர் எல்லிஸாக தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

மேயர் எல்லிஸ் 1999 ஜூலையில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் 176 ஆண்டு களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கறுப்பின மேயராக எல்லிஸ் அறிவிக்கப் பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

18 ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்க இஸ்லாமிய வரலாறு துவங்குகிறது. முஸ்லிம்கள் அதிகமாக அமெரிக்காவில் குடியேறத் தொடங்கினர். அமெரிக்க முஸ்லிம்களில் பெரும் பாலனோர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆப்ரிக்க வம்சாவழி கறுப்பின மக்கள் என்றும், கடந்த எழுபது ஆண்டுகளாக இஸ்லாம் வேகமாக பரவி வருவதாக ரண்ந்ண்ல்ங்க்ண்ஹ குறிப்பிடுகிறது.

இஸ்லாத்தைப் பற்றி அறிவார்ந்த விவாதத்துக்கு தான் தயாராக இருப்பதாக மேயர் ஹகீம் மன்சூர் எல்லீஸ் அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்

பாலஸ்தீன்: சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது



பாலஸ்தீன்: சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது
குண்டுகளின் மழையில் தீக்குளித்த தியாக பூமியான பாலஸ்தீனத்தின் சமீபத்திய சகோதர யுத்தம் முடிவுக்கு வந்தது.
1948ல் வஞ்சகமாய் வளைகுடாப் பகுதியில், மேற்கு சக்திகளால் வ­ந்து திணிக்கப்பட்ட இஸ்ரேல் என்ற செயற்கை அரசு பாலஸ்தீனப் பகுதிகளை அபகரித்து மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனர்களை நாடற்ற அகதிகளாக் கியது. வல்லரசுகளின் ஆயுத உதவியுடன் பாலஸ்தீனர்களின் விடுதலைப் போராட்டத்தை இரக்க மற்று நசுக்கியது இஸ்ரேல்.
யாசர் அராபாத் எனும் தியாகத் தலைவன் பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்தார். பாலஸ்தீன விடுதலை முன்னணி (பி.எல்.ஓ) உருவானது. விடுதலைப் போராட்டம் வலுவடைந்தது. அதே வேளையில் இஸ்ரே லும் வ­மைமிக்க சக்தியாக மாறியது.
நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் தனது மக்களுக்காக சமாதான உடன் பாட்டுக்கும் உடன்பட்டார் அராபத். 1993ல் இஸ்ரே­ய சக்திகளுடன் உடன்பாடு செய்து கொண்டார். சமாதான பேச்சுவார்த்தையின் •மூலம் இஸ்ரே­ன் ராஜ வியூகத்தை உடைத்தார். மிதவாதிகளிடம் செல்வாக்கு ஏறுமுகமாய் சென்றாலும் உணர்ச்சிக் கொந்தளிப்புடைய மக்களிடம் தனது பெருமையை இழக்க வேண்டிய தாயிற்று.
காலமெல்லாம் களத்தில் நின்றார். ராஜதந்திர ரீதியில் மேற்குலக சூழ்ச்சிகளை சுட்டெறித்தவரின் புகழ் ஒளி கொஞ்சம் மங்கத்தான் செய்தது. இருப்பினும் தனது மக்களின் உரிமை களை விட்டுக் கொடுக்காமல் விழுப்புண்களுடன் விழாமல் போராடினார். தாளத்துக்கு தலையாட்டாத ஆத்திரத்தில் இஸ்ரேல் அரசு அரபாத் தின் அலுவலகத்தின் மீதே குண்டு வீசியது. மிருகத்தனமாக மின் இணைப்பை கூட துண்டித்தது, தனது மக்களின் துன்பம் கண்டு மெழுகாய் உருகிய
அந்த மனிதன் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மக்கள் பணி ஆற்றினார். வஞ்சகத்தையே வாழ்க்கை பாதையாக கொண்டிருந்த யூதர்கள் மெல்ல மெல்ல கொல்லும் நஞ்சினை ஊட்டி படுகொலை செய்தனர். அராபாத் மறைந்தார். ஆனால் ஃபதாஹ் மறையவில்லை. ஏதோ தானும் இருக்கிறேன் என்பதைப் போல அதன் செயல் பாடுகள் மந்த கதியில் இயங்கியது.
ஃபதாஹ் இயக்கத்தின் கூர்மை குறைந்த செயல்பாடுகளால் ஹமஸ் பாலஸ்தீன அரங்கில் உதித்தது. அராபத்தின் காலத்திலே இளைஞர்களின் இதயங்களை கவர்ந்த இயக்கமாக ஹமஸ் உருவெடுத்தது. உலகெங்கும் வாழும் விடுதலைப் போராளிகளின் ஞானத் தந்தையான ஷேக் அஹ்மது யாசின் இளைஞர்களை வார்த்தெடுத்தார். ஹமஸின் எழுச்சி, யூத ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தியது. வஞ்சகமாய் குண்டு வீசிக் கொன்றது. தொடர்ந்து வந்த ஹமாஸ் தலைவர் அப்துல் அஜீஸ் ரந்திஸியையும் படுகொலை புரிந்தது. ஹமஸ் தனது உரிமைப் போராட்டத்தினை சளைக்காமல் முன்னெடுத்தது.மேற்குலகும் இஸ்ரேலும், இந்த சக்திகளின் அடியொற்றி செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் ஹமஸை பயங்கரவாத இயக்கம் என தொடர்ந்து கூறிவந்த நிலையில், நெஞ்சுருத்துடன் ஹமஸ் ஜனநாயகப் பாதைக்குள் நுழைந்தது. அதன் அரசியல் ராஜதந்திரியுமான ஹா­த் மிஷால் இஸ்ரே­ன் சதிச் செயலை முறியடிக்கவும் தன்னை தற்காத்துக் கொள்ளவும், தற்போது சிரியாவில் வாழ்ந்து வருகிறார்.
ஹா­த் மிஷாலை கொலை செய்ய இஸ்ரேல் பலமுறை முயற்சிகளை மேற் கொண்டது. இறையருளால் அவர் இன்று வரை உயிர் பிழைத்து தனது மண்ணுக் காகவும், மக்களுக்காகவும் போராடி வருகிறார். சரி ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய ஹமஸ் நாடாளுமன்றத் தேர்த­ல் குதித்தது, பெரிவாரியான வெற்றியும் பெற்றது. இஸ்மாயில் ஹனியா தலைமையில் அமைச்சரவை அமைத்தது. ஓர் நிழல் இயக்கம் ஜனநாயகப் பாதைக்கு வந்ததை வரவேற்க மனமின்றி அமெரிக்கா வும், இஸ்ரேலும், மேற்குலகும் ஹமஸிற்கு வாக்களித்த மக்களுக்கு பொருளாதார உதவிகளை முடக்கி பட்டினியில் தள்ளியது. வறுமையின் பிடியில் தள்ளப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஏனென்று கேட்க யாருமற்ற நிலையில் ஈரான் நிதியுதவி புரிந்தது. அது எப்படியோ பாலஸ்தீன அரசுக்கு போய்ச் சேர்ந்து விட்டது எனினும், பிற நிதி உதவிகள் யூத சக்திகளால் முடக்கப்பட்டன. அரசு ஊழியர் களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாமல் புதிதாகப் பதவியேற்ற ஹமஸ் அரசு தவித்தது.
ஃபதாஹ் இயக்கத்துக்கும், ஹமஸுக்கும் மோதல் வேறு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் முதல் அது பெரும் மோதலாக மாறியது. அரபுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. நடுநிலை யாளர்கள் வேதனை யில் ஆழ்ந்தனர். இதற்கிடையில் ஃபதாஹ், ஹமஸ் மோத­ல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ப­யாக உலக முஸ்­ம்களின் மன வேதனை அதிகமாகியது. ஏகாதிபத்திய சக்திகள் மகிழ்ச்சியில் கூத்தாடினர்.
அனைத்துக்கும் முடிவுரை எழுதும் முகமாக பாலஸ்தீனத்தில் சகோதர யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அவர்களின் சீரிய முயற்சியால் பேச்சுவார்த்தை தொடங் கியது. அல்ஃபதாஹ் இயக்கத்தின் சார்பாக அதிபர் மஹ்மூத் அப்பாஸும், ஹமஸ் இயக்கத்தின் சார்பாக அதன் அரசியல் ராஜதந்திரி ஹா­த் மிஷால் மற்றும் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவும் பங்கேற்றனர்.
கஃபத்துல்லாஹ்விற்கு அருகிலேயே அல்சஃபா அரண்மனையில் இந்தப் பேச்சு வார்த்தை தொடங்கியது. அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளே சகோதரத்துவ உணர்வு உடைந்து பீறிட்டது. மக்கள் நலன் நாடும் புரிந்துணர்வுடன் கூடிய ஒரு ஒப்பந்தத்தை எட்டாமல் இந்த புனித நகரை விட்டு நாங்கள் செல்லமாட்டோம் என ஹா­த் மிஷால், இஸ்மாயில் ஹனியா உணர்ச்சிப் பெருக்குடன் கூறினர்.
எங்கள் புதல்வர்களும், புதல்விகளும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்காக நாங்கள் பாடுபடுகிறோம் என அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார்.
தொலைக்காட்சி வாயிலாக ஹா­த் மிஷால் மற்றும் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்த சமாதான செய்தி பாலஸ் தீனத்தில் பரவி சந்தோஷ அலைகளை எழுப்பியது.
அல் அக்ஸா மஸ்ஜிதில் அகழ் வாராய்ச்சி என்ற பெயரில் புனிதப் பள்ளிவாசலுக்கு இஸ்ரேல் சேதம் விளைவிக்க முயல்வதை அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
நாம், எதிர் காலத்தில் இறையான்மை பெற்ற நாட்டில் வாழ்வதற்கு வேண்டிய ஆயத்தங்களை முன்னெடுக்க வேண் டும். அதற்கான உத்வேகம் இப்போது புறப்பட்டு விட்டது. நாம் ஒன்றுபட வேண்டிய வேளையும் வந்து விட்டது. பிரச்சினைகளுக்கு முடிவு காண வேண் டிய தருணம் இது. எங்களுக்கு பெரிய ஆசைகள் இல்லை. நாங்கள் எங்கள் உரிமைகளை மட்டுமே கேட்டிருக் கிறோம். இதை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும். நாம் புதிய அத்தியாயம் படைக்க வேண்டும். போனவை போகட்டும். நமக்கு ஒரேயொரு எதிரி மட்டுமே. நாம் எதிர்க்கும் காரணம் ஒன்று மட்டுமே. நாம் நம் எதிரியை ஒன்றாகவே எதிர்கொள்வோம் என்றும் ஹா­த் மிஷால் தெரிவித்தார்.
பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா நபிகள் நாயகத்தின் இறுதி உரையை மேற்கோள் காட்டி உரையாற்றினார். 'ஒவ்வொரு முஸ்­மும் மற்றொரு முஸ்­முக்கு சகோதரர் ஆவார். உங்களுக்குள் அநீதி புரிந்து கொள்ளாதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ஒரு நாள் நீங்கள் இறைவனை சந்திக்க வேண்டும். உங்கள் செயல்கள் அனைத்துக்கும் நீங்கள் பதில் சொல்­யே தீர வேண்டும் என்றார். சமாதான முயற்சிகள் குறித்த தகவல்கள் அரபுலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மூன்று நாள் பேச்சுவார்த்தைக்குபின் ஒற்றுமை உடன்பாடு எட்டப் பட்டது.
'மக்கா உடன்பாடு' என்று பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தம் ஹமஸின் ஹா­த் மிஷாலுக்கும் ஃபதாஹ் இயக்கத்தின் சார்பில் அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கும் இடையில் கையெழுத்தானது.
எமது மக்கள் வீழ இனி அனுமதிக்க மாட்டோம் என இருவரும் சூளுரைத்தனர். பாலஸ்தீனத்தின் ஒற்றுமைக்கு குலைவான, கறுப்பு நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்த புனித நகரத்தின் கஃபதுல்லாஹ்வை சாட்சியாய் வைத்து உறுதி ஏற்போம் என உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்டனர். நாம் பாலஸ்தீனர் களின் ரத்தத்தையும் பெருமிதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பிலும், உடன்பாட்டிலும் முக்கிய பங்கு வகித்த சவூதி மன்னர் அப்துல்லாஹ்வை பாலஸ்தீன தலைவர்கள் மனமார வாழ்த்தினர். மன்னர் தனது புதல்வர்களிடம் உரையாடுவதுபோல் எங்களிடம் கனிவாக உரை யாற்றினார் என இஸ்மாயில் ஹனியா கூறினார். இறைவன் சவூதி அரேபியாவை யும் அதன் அரசையும் பாதுகாத்து சிறப்பிக்க வேண்டும் என்றும் இறைஞ்சுவ தாகக் குறிப்பிட்டார்.
தங்கள் மகிழ்ச்சியை மன்னர் அப்துல்லாஹ்வுக்கும், வாழ்த்துக்களை பாலஸ்தீன தலைவர் களுக்கும் தெரிவிக்க ஆசைப்படுவதாக பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி யுடன் குறிப்பிட்டனர்.
நாம் நமது மக்களுக்கு சேவை புரிவதற்காகவே இச்சாதனையை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனடி யாக ஒருங்கிணைந்த அமைச்சரவையை அமைக்குமாறு பிரதமர் இஸ்மாயில் ஹனியா வைக் கேட்டுக் கொண்டார்.
இவ்வொப்பந்தத்தின்படி இஸ்மாயில் ஹனியா பிரதமராகத் தொடர்வார். ஃபதாஹ் இயக்கத்தின் அஜ்ஜாம் அல் அஹ்மத் துணைப் பிரதமராகிறார். ஹமஸ் இயக்கத் தின் சார்பில் 9 அமைச்சர்கள் இடம்பெறுவர். ஃபதாஹ் சார்பில் ஆறுபேருக்கும் பிற அமைப்புகளின் சார்பில் நான்கு பேருக்கும் மேலும் ஐந்து அமைச்சர் பதவி கள் சுயேச்சை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் சுயேச்சை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டது. உள்துறையை யார் பெறுவது என்பதில் ஹமஸுக்கும் ஃபதாஹுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. உள்நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உள்துறையைப் பெறுவதில் ஏற்பட்ட கடும் போட்டியால் சுயேட்சை உறுப்பினருக்கு உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது.
ஹமஸால் பரிந்துரை செய்யும் சுயேட்சை உறுப்பினர் ஒருவரை உள்துறை அமைச்சராக அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தேர்வு செய்வார்.
நிதித்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிகளுக்கான பெயர்களை ஹமஸ், ஃபதாஹ் இரு அமைப்பினரின் ஒப்புதலைப் பெற்று அறிவிக்கப்பட்டன. முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜியாத் அழ அம்ரு வெளியுறவுத்துறை அமைச்சராக அறிவிக்கப்ட்டிருக்கிறார். இவர் ஜார்ஜ் டவுண் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஃபையாத் நிதித்துறை அமைச்ச ராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு ஃபதாஹ் அமைத்த இடைக்கால அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். சீர்திருத்தவாதியாக மதிக்கப் படுபவர். டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவராவார்.
இரு தரப்பினரும் நான்கு முக்கிய அம்சங்களை வ­யுறுத்தினர்.
1. குழு மோதல்களை முடிவுக்குப் கொண்டு வருதல்2. ஹமஸ் ஃபதாஹ் இரு இயக்கத்தவரும் ஒன்று பட்டு தேசத்திற்காக சேவை புரிதல்3. அனைவரும் இணைந்து பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை மீண்டும் கட்ட மைத்தல் (இது மேற்குலக சக்திகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் அதிரடி அறிவிப்பல்லவா?)
4. ஒன்றுபட்ட தேசிய அரசு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையை அமைப்பது.
லி என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த உடன்பாடு வெற்றிகரமாக எட்டப்பட முக்கிய காரணமாக விளங்கிய சவூதி மன்னர் பாலஸ்தீன மக்களின் போற்றுதலுக்கு உரியவரானார். அனைத்து முஸ்­ம் சமுதாயத்தினரின் பிரதிநிதியாகவும் சவூதி மன்னர் விளங்குவதாக பெருமிதத் துடன் பாலஸ்தீன மக்கள் குறிப்பிடுகின்றனர்.
வேற்றுமை மறைந்து ஒற்றுமை நிலவினால் வெற்றி கைகூடும் நாள் தொலைவில் இல்லை அல்லவா?
முகப்பு ஒ சமுதாய கண்மணிகளே ஒ ஊடகங்களில் ஒ தொடர்புக்கு ஈர்ல்ஹ்ழ்ண்ஞ்ட்ற் பி 2004 லி 2005 ற்ம்ம்ந்ர்ய்ப்ண்ய்ங்.ர்ழ்ஞ். ஆப்ப் தண்ஞ்ட்ற்ள் தங்ள்ங்ழ்ஸ்ங்க்.

மாணவர்களுக்கு உதவிய இந்திய கிரிக்கெட் அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கி விட்டது. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ஹோமங்களும், யாகங்களும் தூள் கிளப்பின. ஹோமங்களில், யாகங்களில் கிளம்பிய புகை மேற்கிந்தியத் தீவு மைதானங்களில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் கண்களில் நீர் வரும் அளவுக்கு உக்கிரமாக இருந்ததால் சிறிய பங்களா தேஷ் அணியிடம் உதை வாங்கினார்கள்.
தங்கள் அணிக்காக ஹோமம் வளர்த்து பிரார்த்தனை செய்தவர்களை உடனடியாக பார்த்தே தீர வேண்டும் என்று ஆசை வந்து தொலைத்ததோ என்னவோ இதோ இந்திய வீரர்கள் விரைவிலேயே நாடு திரும்பி விட்டனர்.
இந்திய வீரர்கள் அடித்து விளையாடுவதில்லை என்பது ஒரு பெரிய குறையா கவே சொல்லப்படுகிறது. அதிகமாக விஷமம் செய்யும் இரண்டு சிறுவர்கள் பேசிக் கொள்வதாக ஒரு ஜோக் உண்டு. அதைச் செய் இதைச் செய்யாதே என்று கூறி அப்பாவும், அம்மாவும் மாறி, மாறி அடிக்கிறார்கள். நான் என்ன செய்வேன்? எங்கே தான் போவேன்? என ஒரு சிறுவன் புலம்ப அவனிடம், வீட்டை விட்டு வெளியேறி இந்தியன் கிரிக்கெட் அணியினரிடம் போய் வளரு, அவங்க தான் எப்பவும் 'அடிக்கவே மாட்டாங்க என்று அந்த மற்றொரு சிறுவன் சொல்கிறானாம்.
எதிரி அணி பேட்ஸ்மேனால் பவுண்டரியை நோக்கி விரட்டப்படும் பந்தை தடுத்து நிறுத்தாமல் 'எனக்குத் தனியாக செல்ல பயமாக இருக்கிறது கொஞ்சம் துணைக்கு வர முடியுமா? என அந்த பந்து இந்திய ஃபீல்டர்களிடம் கெஞ்சிக் கேட்டதைப் போல' நம் வீரர்கள் பவுண்டரி லைன் வரை அந்த பந்துக்கு துணையாகச் சென்று பத்திரமாகக் கொண்டு விட்டு வருவார்கள். சிரமப்பட்டு பாய்ந்து விழுந்து ஃபீல்டிங் செய்வது எல்லாம் அஸருத்தீனோடு போச்சு.
இந்திய வீரர்கள் அடித்து நொறுக்குவதில்லையா? தூள் கிளப்புவதை பார்த்ததே இல்லையா? பார்த்திருக்கிறோமே! விளம்பரப் படங்களில் என்று மட்டுமே சொல்ல முடியும்.
கிரிக்கெட்டுக்கு நாம் அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ? என்ற உறுத்தல் இந்த நாட்டின் சமூகவியலாளர்களுக்கு உண்டு. பிரிட்டிஷ் ஆதிக்கம் நம்மிடம் விட்டுச் சென்ற மிச்சங்களில், எச்சங்களில் கிரிக்கெட்டும் ஒன்று.
கிரிக்கெட்டின் தாயகமான பிரிட்டனில் கூட கிரிக்கெட் மீதான மவுசு குறைந்து கால்பந்துக்கு செல்வாக்கு பெருகியுள்ளது.
இந்திய மக்கள் கிரிக்கெட் மீதும், கிரிக்கெட் வீரர்கள் மீதும் காட்டும் அக்கறையை யும் நேசத்தையும் கிரிக்கெட் வீரர்களால் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லை என்றே தெரிகிறது.
எது எப்படியோ போகட்டும். இனியாவது நம் வீட்டு பொடிசுகள் ஒழுங்காகப் படிக்க வேண்டும். தேர்வு நடைபெறும் வேளை. கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். கவனமாக மாணவர்களை படிக்க வைப்பதற்காக பாடுபட்ட இந்திய கிரிக்கெட் அணியினரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை

ஜெருசலம்: அகழ்வாராய்ச்சியில் பள்ளிவாசல் கண்டுபிடிப்புபுனித அல்அக்ஸா

பள்ளிவாசல் வளாகத்தில் அல்மஹ்ரிபா நுழைவாயிலில் இஸ்ரேல் அடாவடியாய் தனது அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது. முஸ்லிம் உலகின் கடும் கண்டனத்தையும் பொருட்படுத்தாது இஸ்ரேல் தனது அடாவடி யைத் தொடர்ந்து வந்தது. அல்அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் மஹ்ரிபா நுழைவாயிலில் தோண்டும் வேலையைத் தொடங்கியுள்ள நிலையில் 11ஆம் நூற்றாண்டில் மாவீரன் சலாஹுத்தீன் காலத்திய தொழுகைக்கூடம் உள்ளிட்ட சிறிய மதரஸா கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அது 2004ல் இஸ்ரேல் அல்மஹ்ரிபா நுழைவாயிலில் தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பிரபல யூத அகழ்வாராய்ச்சி நிபுணர் யுவல்பரோச்சி தெரிவித்துள்ளார். சலாஹுத் தீன் காலத்திய பள்ளிவாசல் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை ரகசியமாகவே வைத்து தனது சதிவேலையை இஸ்ரேல் தொடருவதைக் கண்டு இஸ்லாமிய உலகம் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளது.
இஸ்ரேலிய அகழ்வாராய்ச்சி நிபுணர் பரோச்சி இதுகுறித்து இணையதளத்தில் எழுதிய கட்டுரை தற்போது வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்மஹ்ரிபா வளாகத்தில் இஸ்ரேலின் அகழ்வாராய்ச்சி ஓர் உரிமை மீறல் பிரச்சினை எனப் போராடி வரும் நிலையில் சலாஹுத்தீன் காலத்திய பள்ளிவாசல் மற்றும் மதரஸா கண்டுபிடிக்கப்பட்டது இஸ்ரேலின் வாதத்தை வலுவிழக்கச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, புனித அல்அக்ஸா மஸ்ஜிதை படிப்படியாக பலமி ழக்கச் செய்யும் முயற்சியாகவே இஸ்ரேல் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜெருசலமின் முஃப்தி ஷேக் முஹம்மத் ஹுஸைன் இஸ்ரேலின் அகழ்வாராய்ச்சி முஸ்லிம்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிக்கும் முயற்சி என தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே இது அகழ்வாராய்ச்சியில் தெரிந்த உண்மை களை இஸ்ரேல் மறைத்திருக்கிறது. பல விஷயங்களை இஸ்ரேல் தொடர்ந்து திட்டமிட்டு மறைத்து வருகிறது. மேற்கு சுவர், அதன் பல பகுதிகள், அதன் வாயில்கள், அந்தப் பகுதிகளின் அழிக்கப்பட்ட பெயர்கள், அதன் கட்டமைப்பு, பிரிக்கப்படாத அல்அக்ஸா அனைத்துமே முஸ்லிம்களுக்கு சொந்தமானது என இதன்மூலம் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஷேக் ரயீத் சலாஹ் அறிவித்திருக்கிறார். மேற்கு சுவர் அல்அக்ஸாவின் மேற்கு மினாரா வாகும். அதையே யூதர்கள் 'ரஹண்ப்ண்ய்ஞ் ரஹப்ப்' (புலம்பும் சுவர்) எனக் கூறுகிறார்கள். எல்லாமே முஸ்லிம்களுக்கு உரிமையானது என்கிறார் சலாஹ்.
முஸ்லிம்களின் ஆதாரங்கள் அழிக்கப்படுவதின் முதல் முயற்சியே இது என சலாஹ்வின் கண்டனத்தை ஒப்புக் காண்ட இஸ்ரேலின் மற்றொரு பிரபல அகழ்வாய்வு நிபுணர் மீர்மென்டவ், ''இஸ்ரேல் மூன்று ஆண்டுகளாக இந்த விஷயத்தை ஏன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் ரயீத் சலாஹ் போன்றவர்களுக்கு ஆயுதமாக மாறிவிடுகிறது'' என இஸ்ரேலைக் கண்டித்தார். இதுவரை நடந்த அகழ்வாய்வு விஷயங்களை முறைப்படி அறிவிக்காதது உலக அரங்கில் நமது (இஸ்ரேல்) பெயரை மேலும் மோசமடையவே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் அல்அக்ஸா பள்ளிவாசலில் தடையை மீறி தொழச் சென்ற பாலஸ்தீன தலைமை நீதிபதி ஷேக் தமிமி கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 18ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மீதான விசாரணை மே 8ஆம் தேதி விசார ணைக்கு வருகிறது. இஸ்ரேலை எதிர்த்து உள்நாட்டிலே சதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி யான தமிமியின் மீதான விசாரணை மேலும் காலதாமதமாகிக் கொண்டே வருகிறது. விசாரணைகள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தின்படியே நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் நீதிமன்றங் களில் அல்அக்ஸா தொடர்புடைய வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. ஜெருசலம் தொடர்பான விவகாரங்களும் அவ்வாறே.
சர்வதேச உடன்பாடுகள் குறிப்பாக நான்காவது ஜெனிவா கன்வென்சன், ஜெருசலம் நகரை ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்றே குறிப்பிடுகிறது. அதோடு மேற்குக்கரை காஸா பகுதிகளையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே அறிவித் திருக்கிறது. அல்அக்ஸா பள்ளிவாசலில் நுழைய முழு உரிமை எனக்குண்டு. இந்த உரிமையை உயிர் போகும் வரை ஆதிக்க சக்திகளிடம் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார் பாலஸ்தீன தலைமை நீதிபதியும் அல்அக்ஸாவுக்கான உரிமைக்குரல் எழுப்புபவருமான ஷேக் தய்ஸீர் தமிமி

குஜராத்:போலி என்கவுண்டர் படுகொலைகள் ரத்த வெறி தீராத மோடி அரசு



குஜராத்தில் அப்பாவி ஒருவரை என்கவுண்டர் எனும் பெயரில் படுகொலை செய்த ரத்த வெறி பிடித்த மோடி அரசின் அராஜகம் அம்பலமாகியுள்ளது.
முஸ்லிம்களின் ரத்தம் குடிக்கும் மோடி அரசின் மற்றொரு அரச பயங்கரவாதம் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளது.
சங்பரிவார் வெறி இயக்கங்களைத் தூண்டி 2002 பிப்ரவரியில் ஆயிரக்கணக் கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று தீர்த்த மோடி அரசு உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு இலக்கானது.
பெஸ்ட் பேக்கரி நெருப்பு படுகொலைகள் போன்ற வழக்குகளின் உலுக்கும் உண்மைகள் வெளியாயின. தற்பொழுது போலி என்கவுண்டர் எனும் பெயரால் மோடி கும்பலின் அரசப் பயங்கரவாதத் தின் கோர முகம் வெளிப்பட்டுள்ளது.
2005 நவம்பர் 26 ஆம் தேதியன்று குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு படையின் உயர் அதிகாரியும் சேர்ந்து ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றதாகவும் அவரது பெயர் ஷெôராப்தீன் என்றும் லஷ்கர்லிஇலி தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அவர் மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கியத் தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டு வந்ததாகவும் அதனைத் துப்பு துலுக்கி (!) என்கவுண்டர் மூலம் அந்த தீவிரவாதியை சுட்டுக்கொன்றதாகவும் குஜராத் அரசின் தீவிரவாதத் தடுப்புப் படை அறிவித்தது.
என்கவுண்டர் படுகொலைகள் என்றால் ஊடகங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடும். அரசுகள், ஏதோ வீர தீரச் செயல்களை காவல்துறை அதிகாரிகள் செய்து விட்டதாக பூரித்துப்போய் விருதுகளையும், பண முடிப்புகளையும், பதவிகளை யும் வழங்குவார்கள்.
இதில் கடுமையான முறைகேடுகளும், இரக்கமற்ற மனித விரோதச் செயல்களும் நடந்ததாக மனிதநேய ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தாலும் பாராமுகமாகவே அரசுகள் இருந்தன.
சமீபத்தில் காஷ்மீரில் நிகழ்ந்த போலி என்கவுண்டர் படுகொலைகள் அம்பலத் திற்கு வந்தது. கட்டுப்பாடும் கடமையுணர்வும் மிகுந்த இந்திய பாதுகாப்பு;த் துறை யிலும் இரக்கமற்ற மனித மிருகங்கள் நடமாடிய தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்து நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
அப்பாவி காஷ்மீர் மக்கள் படுந்துயரங்களை எண்ணியெண்ணி வேதனையில் வெம்பித் துடித்து, வடித்த கண்ணீரின் ஈரம் காய்வதற்குள் குஜராத் போலி என் கவுண்டர் படுகொலைகள் குறித்த உலுக்கும் உண்மைகள் வெளியாகி, நடுநிலையாளர்களின் நெஞ்சங்களி, நெருப்பினை அள்ளிக் கொட்டி விட்டதைப் போல் ஆகிவிட்டது.
ஷெôராப்தீன் என்ற அப்பாவி முஸ்லிமை என்கவுண்டர் எனும் பெயரில் வஞ்சமாய் கொன்று தீர்த்த குஜராத் மாநில தீவிரவாதத் தடுப்புப் படை பிரிவின் இயக்குனர் வன்சரா, தீவிரவாதத் தடுப்புப்படை பிரிவின் கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன் மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புக் காவல்படையின் அதிகாரி தினேஷ் குமார் ஆகிய மூவரும் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜ்குமார் பாண்டியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

தற்பொழுது இந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரி களுக்கு இந்தப் போ­ என்கவுண்டர் படுகொலையில் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
நவம்பர் 22, 2005ல் ஷெôராப்தீன் ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து மஹாராஷ்டிராவின் சங்க்லிக்கு அவரது மனைவியுடன் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல்துறை அதிகாரிகளும் சீருடை அணியாத மற்றொரு மர்ம நபரும் கடத்திச் சென்று கொன்று விட்டதாக ஷெôராப்தீனின் சகோதரர் ருபாப்தீன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்றம் முறையான விசாரணை மேற்கொள்ளும்படி குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
நடந்தவை அனைத்தும் என் கவுண்டர் என்ற பெயரில் நடந்த படுகொலைகளே என குஜராத் மாநில சிஐடி பிரிவு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
வன்சரா மற்றும் பாண்டியன் என்ற இரு காவல்துறை அதிகாரிகளும் (போலி என்கவுண்டர் கொலையாளிகள்) உடனடியாக காவல்துறை தலைமை அலுவலகத் திற்கு அழைக்கப்பட்டு டி.ஜி.பி முன்னிலையில் கைது செய்யப்பட்டனர்.
இது அரசியல் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என மனித உரிமைப் போராளி தீஸ்தா செதல்வாட் குற்றம்சாட்டுகிறார்.
அதிகாரி வன்சரா, முதலமைச்சர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் அதுவே அவருக்கு எல்லையற்ற துணிச்சலைக் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
சிறிதும் இரக்கமின்றி, சட்டம் நியாயம் பேண வேண்டும் என்ற பொறுப்பின்றி தார்மீக நெறியை வீசி எறிந்து போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்திய மோடி அரசின் காவல்துறை உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பது, இந்தியாவின் ஹிட்லர் மோடியின் கோரமுகம் உலகின் முன் வெளிச்சத்திற்கு மீண்டுமொருமுறை வந்துள்ளது.
இந்தப் படுகொலைகளுக்காக மோடியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க பாரதிய ஜனதா தயாரா? (காமெடி பண்ணாதீங்கப்பா..) என குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத் சோலங்கி தெரிவித்தார்.
மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இத்தகைய போலி என்கவுண்டர் படுகொலைகள் நடந்து வருகின்றன. தன்னை ஒரு வீரமிக்க கதாநாயகனாக காட்டுவதற்காக இத்தகைய செயல்களை இழைப்பதாக குஜராத் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அர்ஜுன் மொதவாடியா தெரிவித்தார்.
போலி என்கவுண்டர் படுகொலைகள் குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என இடது சாரிகள் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக நாடாளுமன்றதில் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதனை காங்கிரஸ் வலிமொழிந்தது. தற்பொழுது சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் நிகழ்ந்த 6 என்கவுண்டர் படுகொலைகள் குறித்த விவரங்களை காங்கிரஸ் வெளியிட்டது. அக்டோபர் 2002ல் நிகழ்ந்த என்கவுண்டர் படுகொலை களிலும் மோடிக்கு நெருக்கமான காவல்துறை இயக்குநர் வன்சரா சம்பந்தப் பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் வெளியிட்ட போலி என்கவுண்டர் பட்டியலில் உள்ளது.
சமீர்கான் பதான் என்ற 30 வயது இளைஞர் ஒரு போலிஸ்காரரை கொன்றதாகக் கூறியும், பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றதாகக் கூறியும் என்கவுண்டர் எனும் பெயரில் கொன்று தீர்த்துள்ளனர்.
இதுவரை 21 என்கவுண்டர் படுகொலைகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் மது சூதனன் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். இதற்கு வேர் காரணமாக விளங்கும் முதலமைச்சர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாமீதும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போலி என்கவுண்டர் படுகொலைகள் நீண்டகாலமாகவே நடைபெற்று வந்ததை தற்போது மோடிக்கு நெருக்கமான அதிகாரிகள் கைது செய்யப்பட்டதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஷெôராப்தீனோடு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அவர் மனைவி கவுசர் பீவியின் கதி என்னவாயிற்று? என்பது குறித்து மோடி அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட ஷெôராப்தீன் ஷேக் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தின் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக ஷெôராபுதீனின் தாயார் ஜைபுன்னிசா பீவி இருந்து வருகிறார்.
ஷெôராப்தீனை இப்போதும் ஒரு கிரிமினைலைப் போல் பல ஊடகங்களில் சித்தரிக்கிறார்கள். 1995 ஆம் ஆண்டு ஜரானியா கிராமத்தின் கிணறு ஒன்றிலிருந்து ஏகே,36 மற்றும் ஏகே, 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. காவல் துறையின் சந்தேகப் பார்வை முதல்முறையாக ஷெôராப்தீன் மீது விழுந்தது. பின்னர் அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார்.
ஷெôராப்தீன் விவகாரத்தில் காவல் துறையினர் எவ்வாறு காட்சிகளை போலியாக கட்டமைத்து சுட்டுக் கொன்றனர் என்பதையும் திருடிய வாகனத்தில் அவரது தடயங்களை பதித்து விட்டு அநியாயமாக ஷெôராபுதீனை படுகொலை செய்த சதிச் செயலையும் காவல்துறை அதிகாரி ராஜ்குமார் பாண்டியனின் அந்தரங்க உதவியாளர் அஜய் பர்மர் விவரிக்கிறார்
'என்னை எனது மேலதிகாரி ராஜ்குமார் பாண்டியன், ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தின் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விடுதியில் தங்குமாறு உத்தர விடுகிறார். உண்மையில் அது காவல்துறை உயர்அதிகாரி பாண்டியன் பெயரில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான அறை புக் செய்யப்பட்டிருக்கிறது.நவம்பர் 22 ஆம் தேதிக்கு சரியாக புக் பண்ணப் பட்டிருக்கிறது. பர்மர், அஹமதாபாத்துக்கு நவம்பர் 23 ஆம் தேதி பாண்டியனின் டிக்கட்டிலியே திரும்புகிறார். அதே நாளில் ஷெôராப்தீன் ஹைதராபாத்தி­ருந்து, 180 கிலோமீட்டர் தூரமுள்ள டன்டோலா கிராமத்துக்கு அருகில் சொகுசு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்து அவரை அஹ்மதாபாத்துக்கு தனது குவாலிஸ்காரில் ராஜ்குமார் பாண்டியன் கடத்திக் கொண்டு செல்கிறார்.
காவல்துறையைச் சேர்ந்த குரு தபாள் சிங் ஜாட்டின் டாடா சுமோ கார், குவாலிஸை தொடருகிறது. நவம்பர் மாதம் 22லி23 தொடங்கும் வேளை ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் மும்பைலிபெல்காம்லிபகுதி, ஹைதராபாத்லி மும்மை நெடுஞ்சாலையின் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது.
ஷெôராப்தீன் பயணம் செய்யும் பேருந்து நிறுத்தப்படுகிறது. நள்ளிரவு 1.30 மணி. சீருடை அணியாத ஆயுதம் ஏந்திய மூன்று பேர் அந்தப் பேருந்தில் ஏறுகின்றனர். டார்ச் லைட் அடித்து பேருந்தில் உள்ள ஒவ்வொரு பயணியையும் உற்று நோக்குகின்றனர்.
'கிடைத்துவிட்டான்' என உற்சாக மிகுதியில் கத்துகிறார் ஒருவர், டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருவரை பேருந்துக்கு வெளியே இழுக்கிறார்கள். அவர் பெயர் பிரஜாப்தி, மற்றொருவரை இழுத்து வருகிறார்கள் அவர் பெயர் ஷெôராபுதீன், அடுத்து தரதரவென இழுத்து வருகிறார் கள். பர்தா அணிந்த கவுசர் பீவி தன்னோடு வருவதைப் பார்த்து ஷெôராப் தீன் கத்துகிறார் நீ வராதே உள்ளே போ!. ஆனால் கவுசர் பீவி கணவனைப் பிரிய மனமில்லாது பிடிவாதமாக உடன் செல்கிறார்.(இதை உடன் பயணம் செய்த ஷரத் அப்தி கூறினார்)
அஹ்மதாபாத்தில் சோக்சிங் யாதவ் என்பவர் மோட்டார் பைக்கை காணவில்லையே எனத் தவிக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து அவரது மோட்டர் பைக் படத்துடன் ஒரு செய்தி வருகிறது. லஷ்கர்லிஇலிதொய்பா தீவிர வாதி, குஜராத் முதல்வர் மோடி உள்பட முக்கிய புள்ளிகளை சுட்டுக்கொல்ல வந்த போது, அவனின் முயற்சி முறியடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்டதாக காவல்துறையினர் வெளியிட்ட தகவலையும், அதற்கு அருகில் தனது பைக்கை, கண்ட ஷோக் சிங் யாதவ் அதிர்ச்யில் உறைந்தார்.
சதீஷ் சர்மா என்பவரிடம் ஊருக்கு வெளியே ஒரு பண்ணை வீடு, உடனடியாக தேவை என காவல்துறை உத்தரவிடுகிறது.
காந்தி நகரின் ஜமியத் புராபகுதியில், தனது நண்பர் கிரிஷ் பாட்டிலின் தோட்டத்து வீட்டை போலிஸ்காரர் களுக்கு என்று ஒதுக்கிக் கொடுக்கிறார். நவம்பர் 24 ஆம் தேதி இரவு ஷெôராபுதீனும், கவுசர் பீவியும் கொண்டு செல்லப்படுகின்றனர் என சிஜடி போலிஸாரிடம் சதிஷ்சர்மா தெரிவிக்கிறார்.
நவம்பர் 26 ஆம் தேதி சரியாக 10 மணிக்கு கவுசர் பீவி தனது கணவர் தோட்டத்து வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்படுவதை பார்க்கிறார். ஒரு மணிநேரத்தில் ஷெôரபுதீன் என் கவுண்டர் என்னும் பெயரில் படுகொலை செய்யப்படுகிறார்.
இது உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் குஜராத் சிஐடி போலீஸாரின் வழியாக வெளிவந்த உண்மை.
கவுசர் பீவியின் கதி என்னவாயிற்றோ என ருபாபுதீன் பதைபதைப்புடன் வேதனையுடன் உச்சநீதிமன்றதில் முறையீடு செய்ய கவுசர் பீவியும் கொல்லப் பட்டிருக்கலாம் என குஜராத் அரசு, நீதிமன்றத்தில் பதில் அளித்திருக்கிறது.
என்கவுண்டர் என்னும் பெயரில் 21 படுகொலைகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாக, மேலும் போலி எண்கவுண்டர் படுகொலைகள் தொடர்பாக பல காவல்துறை அதிகாரிகள் விசாரணை வளைத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடியின் ஆட்சிகாலத்தில் அனைத்து சம்பவங்களுக்கும் விரிவான விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை கள் நாடெங்கும் எதிரொலித்து வருகின்றன.
மோடியின் 'ஒப்பந்த கொலைகாரர் களாக' கருதப்படும், மோடிக்கு நெருக்கமான காவல் அதிகாரிகளால் நடத்தப்பட்ட 15 போலி என்கவுண்டர் படுகொலைகள் குறித்து, விசாரணை நடத்தப்படவேண்டும் என மோடிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பாஜக தலைவர் நளின்பட், சித்தார்த் பர்மர் மற்றும் ரமீலா தேசாய் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராஜஸ்தானில் ஒரு ஹிந்துத்துவ பிரமுகரோடு ஷெôராபுதீனுக்கு ஏற்பட்ட மோதலால் ஷெôராபுதீனை தீர்த்துக் கட்ட வேண்டும் என ராஜஸ்தான் மாநிலத் தி­ருந்து சதித்திட்ட கால அட்டவணை குறிக்கப்பட்டிருக்கலாம் என தீஸ்தா செதல்வாட் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். குஜராத்தில் அப்பாவி முஸ்லிகளின் உயிர்கள் பறிக்கப்படுவது அன்றாட நடவடிக்கைப் போன்றே மாறிவிட்டது.
கவுசர் பீவியின் கதி குறித்து ஷெôரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தார் அல்லவா? கவுசர் பீவி கொல்லப்பட்டிருக்கலாம் என குஜராத் அரசு கூறியுள்ளது. தங்களுக்கும் அந்த கொடூர சம்பவத்துக்கும் தொடர்பே இல்லாததைப் போல அரசின் பதில் இருந்தது.
கவுசர் பீவி படுகொலை குறித்த திடுக்கிடும் தகவல்கள் விசாரணையின் போது வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட தீவிரவாதத் தடுப்புப் படையின் அதிகாரிகள், கவுசர் பீவியின் படுகொலை குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர். கவுசர் பீவி கொல்லப்பட்டு அவர் உடல் எரிக்கப்பட்டது. அவர் உடலை எரிப்பது தெரியாமல் இருக்க ஏராளமான மரத்துண்டுகள் மரக்கட்டையிலிருந்து வாங்கப்பட்டன.
ஷெôரப்தின் கொல்லப்பட (26 நவம்பர் 2005) இரண்டாவது நாள் (நவம்பர் 28, 2005) கவுசர் பீ படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் தீவிரவாதத் தடுப்புப் படையின் காரில் கொண்டு செல்லப்பட்டது.
400 கிலோ கிராம் எடையுள்ள மரக்கட்டைகள் டிம்பர் டிப்போவில் இருந்து வன்சராவின் சொந்த கிராமமான ஹிம்மத் நகருக்கு டாடாலி407 என்ற வண்டியில் கொண்டு செல்லப்பட்டு, இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள வயல்வெளியில் வைத்து கவுசர் பீவியின் உடல் எரிக்கப்பட்டது.
சாம்பல் கவுசர் பீவியின் வயலிலும் கிணறுகளிலும் தூவக்கப்பட்டன. உடலைக் கொண்டு வந்த 407 வாகனமும் சாம்பலை வீசி எறிந்த கிரேன் (ஜி.ஜெ.9.பிலி4355) (இது கனேஷ் மூவர்ஸ் என்ற நிறுவனத்தை சேர்ந்தது) மற்றும் குவாலிஸ் ஜி.ஜெ.25லி7007 என்ற வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. (இது போர்பந்தர் மீனவருக்கு சொந்த மானது) இந்த வாகனத்தில் தான் ஷெôராப்தீன் மற்றும் கவுசர் பீ கடத்தப்பட்டுள்ளனர்.
உயிரற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முக்கியத் தடயங்களாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மோடி அரசில் உயருள்ள அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்படும் நிலை ஆபத்தான கட்டத்தையடைந்து வெகுநாட்களாகி விட்டது.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள், மோடியும்லி குஜராத் உள்துறை அமைச்சரும். மோடியின் நிழலாகவே செயல்படும் அமித் ஷா வையும் மோடியைக் கொல்ல முயற்சி செய்தார்கள் என்று கூறி 13 பேரை கொலை செய்த வன்சாராவுக்கு பக்கபலமாக இருந்த வஞ்சகக் கூட்டத்தையும் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். குஜராத் மாநிலம் முஸ்லிம்களின் ரத்தத்தால் ஈரமாவாது என்றுதான் நிற்குமோ?.

Web Counter Code