இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, December 3, 2009

liberhan reort comments by abusalih

பாபரி மஸ்ஜித் இடிப்பு:குற்றவாளிகளை தப்பவிடாதே! கொந்தளிக்கும் இந்தியா!
abusalih article

பாபரி மஸ்ஜிதை தகர்த்து தரைமட்ட மாக்கி இந்தியத் திருநாட்டை அவமானச் சேற்றில் தள்ளிய குற்றவாளிகளை எந்த விதத்திலும் தப்பவிடக்கூடாது என்ற கோபக் குமுறல்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளது.
உலகமே கவனித்துக் கொண்டிருந்த இந்த இழிசெயலை செய்த குற்றவாளிகள் எண்ணற்றவர்களாக இருந்தும் வெறும் 68 பேர் மட்டுமே குற்றச் செயலுக்கு உடந்தை என குறிப்பிடப்பட்டிருப்பது நாட்டு மக்களின் கோபத்தையும் வேதனை யையும் அதிகப்படுத்தியுள்ளது.
நரசிம்மராவ் உத்தமரா?பாபரி மஸ்ஜிதை இடிக்க விட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்த அன்றைய பிரதமர் நரசிம்மராவையும், அன்றைய அவரது அமைச்சரவை சகாக்களைக் குறிப்பாக அன்றைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் உள்ளிட்டவர் கள் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் குறிப் பிடப்படாமல் விட்டுவிட்டது ஏன்? என்ற கேள்விகள் நாடெங்கும் எதிரொலிக்கின்றன.மஸ்ஜித் இடிப்பு ஒரு இழிவான செயல்தான் சங்பரிவார் ஒப்புதல் வாக்குமூலம்
பாபரி மஸ்ஜித் இடிப்பு இழிவான செயல், மனிதகுலம் வெட்கித் தலைகுனிய வேண் டிய செயல். ஒவ்வொரு இந்தியனையும் அவமானத்தில் ஆழ்த்திய செயல் என நீதி மனம் படைத்த ஒவ்வொருவரும் கடந்த 17 ஆண்டுகளாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் அது குறித்து எவ்வித வருத்தமும் தெரிவிக்காத சங்பரிவார் கூடாரம் முதன்முறையாக தன்னை அறியாமல் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு ஒரு இழிசெயல்தான் எனக் கூறியுள்ளது.பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளி களின் வரிசையில் வாஜ்பாயை லிபரான் அறிக்கை பட்டியலிட்டது. வாஜ்பாய், மஸ்ஜித் தகர்ப்பில் தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட முடி யாது என லிபரான் ஆணையம் கூறியது. வாஜ்பாய் பெயரை லிபரான் ஆணையம் கூறிய தைக் கண்டு மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஆனால் இன்னமும் வாஜ்பாயை ரொம்ப நல்லவர் என நம்பிக் கொண்டிருக்கும் சில அப் பாவி ஹிந்து சகோதரர்களுக்கும் வாஜ்பாயை உத்த மர் போல் சித்தரித்துக் காட்டியசில உள்நோக்க ஊடகங்களும் அதிர்ச்சி அடைந்தன.வாஜ்பாயை சங்பரிவாரின் மிதவாத முகமூடியாக அறிமுகப்படுத்தி பதவிகளில் குளிர்காய்ந்த சங் பிரமுகர்கள் வாஜ்பாயை இழிவுபடுத்தும் செயல் என தாண்டி குதித்தனர்.
தங்களையும் அறியாமல் பாபரி மஸ்ஜிதை தகர்த்தது ஒரு இழிவான செயல்தான் என்பதை ஒப்புக் கொண் டனர். மஸ்ஜிதை இடித்ததற்காக பெரு மைப்பட்டுக் கொண்டவர்கள் இது வாஜ்பாயை இழிவுபடுத்தும் செயல் எனக் கூறியது என நாட்டு மக்களை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியது. இருப்பினும் மஸ்ஜித் தகர்ப்பை வாஜ்பாய் ஊக்குவித்தார். உ.பி. தலைநகர் லக்னோவில் இருந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் என விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்திருப்பதை ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ செய்தி ஏடான ஆர்கனைஸர் குறிப்பிட்டுள்ளது.ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் கதி லிபரானுக்கு ஏற்பட்டால்...மும்பை கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை செயல்படுத்தப்படவில்லை. மும்பைக் கலவர படுகொலையாளர்கள் பால்தாக்கரே உள்ளிட்ட குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அதே போன்று ஒரு நிலை லிபரான் அறிக்கைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அத்தகைய நிலை ஏற்பட்டால் நாடு விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் எச்சரித்துள்ளது.இதனிடையே வாஜ்பாயை நடுநிலையானவர், நல்லவர், மிதவாத மதவாதி, மதவாதம் இல்லாத மதவாதி என்று கூறியவர்கள் எல்லாம் லிபரான் ஆணை யக் குற்றச்சாட்டுக்கள் குறித்து வெளிப் படையாக கருத்துகள் கூறவேண்டும். பாஜகவை ஆட்சியில் அமர்த்தியதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் தங்களது வருத்தத்தினை தெரிவிக்க வேண்டும் என அறிவுஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளன.குமுறல்கள் கொந்தளிப்புகள்பாபரி மஸ்ஜிதை இடித்த மாபெரும் குற்றத்திலிருந்து காங்கிரஸையும், நரசிம்ம ராவையும் விடுவித்து தூய யோக்கிய சிகாமணிகள் என சித்தரிக்கும் லிபரான் ஆணைய அறிக்கைக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.பாபரி மஸ்ஜித் தகர்ப்பு சம்பவ குற்றத் தில் சங் பயங்கரவாதிகளை சேர்த்திருக்கும் லிபரான் ஆணையத் திற்கு 450 ஆண்டுகால மஸ்ஜிதை தரைமட்ட மாக்கிய போது நாட்டின் பிரதமராக இருந்து வேடிக்கைப் பார்த்த நரசிம்மராவை குறிப்பிடாமல் விட்ட தற்கு பாபரி மஸ்ஜித் ஒருங் கிணைப்புக் குழுவின் முக்கியப் பிர முகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சையது ஷஹாபுத்தீன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.பாபரி மஸ்ஜித் தகர்ப்பு விவகாரத்தில் பா.ஜ.க, வி.எச்.பி. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் முக்கியக் குற்றவாளிகள் என்பது உல கிற்கே தெரிந்த விஷயம்.இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர் களின் பெயர்களைக் குறிப்பிட்டது சரி யான ஒன்றுதான். அன்றைய பாஜகவின் அகில இந்தியத் தலைவராக வாஜ்பாய் இருந்தார். அன்று நடைபெற்ற இழிசெயல்கள்ஒவ்வொன்றும் வாஜ்பாய்க்கு தெரிந்தே நடந்தது. அவர் ரதயாத்திரையில் கலந்து கொள்ள வில்லை. ஆனால் திட்டமிட்டே லக்னோவோடு தனது பயணத்தை முடித்துக் கொண்டார். குற்றச் செயலிலிருந்து நேரடியாகப் பங்கு பெறுவதிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு தன்னை மிகவும் உத்தமர் போல் பதிவு செய்ய முயன்றார். ஆனால் லிபரான் ஆணையம் அவரைக் குறிப்பிட்டு வாஜ்பாயியின் இமேஜுக்கு வேட்டு வைத்தது. அத்வானியையும் வாஜ்பாயியையும் ஒரே தட்டில் சமமாக வைக்க முடியாத வர்கள் என்பது தனது கருத்து எனக் கூறிய சையது ஷகாபுத்தீன் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றத்தில் நம்பர் ஒன் குற்றவாளியை லிபரான் ஆணையம் குறிப்பிடாமல் விட்டுவிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 1992 டிசம்பர் 6ஆம் தேதி மஸ்ஜித் தகர்ப்பை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நரசிம்மராவ் தான் முதல் குற்றவாளி. இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவை லிபரான் ஆணையம் குற்றம் இழைத்தவர்களில் சேர்க்காதது ஏன் என சஹாபுத்தீன் கேள்வி எழுப்புகிறார். பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட இரண்டாம் நாள் தான் பிரதமர் நரசிம்மராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் சங்பரிவார சதிகாரர்களை விட நீங்கள்தான் மிகப் பெரிய குற்றவாளி. ஏனெனில் நீங்கள் நாட்டின் பிரதமராக இருக்கிறீர்கள். பாபரி மஸ்ஜிதை காப்பாற்றுவதற்குரிய அனைத்து அதி காரங்களையும் கொண்ட சக்தி படைத் தவராக நீங்கள் இருந்தீர்கள். நடந்த அக்கிரமத்தைக் குறித்து ஒன்றும் அறியாதவர் போல் இருந்து கொண்டே சங்பரிவாருக்கு உடந்தையாக இருந்தீர்கள். பாபரி பள்ளிவாசலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு அதனை தேசியச் சின்னமாக அறிவித்திருக்க வேண்டும். ஏனெனில் மஸ்ஜி தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்று வலியுறுத்திக் கூறியதை பொருட்படுத்தாமல் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தீர்கள் என தான் அன்றே எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டும் சஹாபுத்தீன், பாபரி மஸ்ஜித் தகர்ப்பு விஷயத்தில் நரசிம்மராவ் சூப்பர் வில்லன் என்பதை மறுக்க முடி யாது என்றார். லிபரான் ஆணையம் நரசிம் மராவுக்கு உத்தமர் பட்டம் வழங்கியது ஏன்? என்ற வினாவுக்கு வரலாறு பதில் சொல்லும் என மேலும் குறிப்பிட்டார்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நான்கு ஆண்டுகளுக்கு முன்பே லிபரான் ஆணையம் தனது அறிக் கையை தயாரித்து முடித்துவிட்ட போதும் அதனை இந்த ஆண்டுதான் சமர்ப்பித்துள்ளது. ஏன் இந்த மர்ம இடைவெளி? எனக் கேள்வி எழுப்பிய அவர், முன்பு தயாரிக்கப்பட்டிருந்த அறிக்கையில் நரசிம்மராவ் குற்றவாளி என குறிப்பிட்டிருந்தது. அத்வானி, குற்றத்திற்கு தொடர்பில்லாதவர் போல் குறிப்பிட்டிருந்தது. திரைமறைவில் பல வேலைகள் நடந்துள்ளன என முன் னணி முஸ்லிலிலிம் பிரமுகர்கள் குமுறலுடன் குறிப்பிடுகின்றனர்.பாபரி மஸ்ஜிதை சங்பரிவார்களுக்காக திறந்துவிட்ட காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பஜ்ரங்தள், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பு களை மட்டும் பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றம்சாட்ட முடியாது. காங்கிரசும் குற்றம் செய்தவர்களின்பட்டியலில் சேர்க்க வேண்டும் என அகில இந்திய மஜ்லிஸே முஷாவராத் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் தெரிவித்தார்.சிலான்யாஸ் என்ற சிலை பூஜைகள் நடத்த அனுமதித்தது யார் என்பதை நாம் அறிவோம். பாபரி மஸ்ஜிதை பொறுப் பில்லாமல், பிரச்சினைகள் ஏற்படும் என தெரிந்தே திறந்து விட்டவர்கள் யார்? என்பதை இந்த நாடே அறியும்.காங்கிரஸ் மற்றும் அன்றைய பிரதமர் நரசிம்மராவின் துரோகத்தை மறைத் துவிட்டு பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றம் குறித்த அறிக்கை முழுமையானதாக இருக்காது என்கிறார் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம். நான் அறிந்த வகையில் லிபரான் தனது அறிக்கையை பலதடவை மாற்றியிருக்கிறார். பாஜக ஆட்சி செய்த போது காங்கிரஸை பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் பொறுப்பாளியாக்கியதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் பாஜகவை மட்டும் குற்றவாளியாக்கி அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் டாக்டர் ஜஃபருல் குறிப்பிட்டார்.லிபரான் ஆணையத்தின் அறிக்கை முன்பே வெளியாகி இருக்கவேண்டும் எனக் குறிப்பிடும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி, லிபரான் அறிக்கை யாருக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் 1992 டிசம்பர் 6ல் என்ன நடந்தது என் பதை உலகமே அறிந்ததுதான் என்றார். இப்போது தேவை குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுதான் என்றார்.குற்றவாளிகளை தண்டிக்க 70 வருடங்கள் ஆகுமா?
குற்றவாளிகளைக் கண்டறிந்து இன் னார் இன்னார் குற்றவாளிகள் என அறிவிப்பதற்கே 17 ஆண்டுகள் ஆகி விட்டனவே... இனி அவர்கள் மீதான தண்டனைகளை செயல்படுத்த எத் தனை ஆண்டுகள் ஆகும் என்ற கேள்விக்கு 70 ஆண்டுகள் ஆகும் என விரக்தியாக பதிலளித்தார். பாபரி மஸ்ஜித் ஒருங்கிணைப்புக் குழுவின் செய்யது சஹாபுத்தீன். சங்பரிவாரின் மிகமுக்கிய தலைவர்களுக்கு எதிரான வழக்குகளின் கதி நாம் அறிந்ததுதான். இதில் அரசுகளை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. ஐ.பி. என்ற உளவுத் துறைக்கும் இதில் பங்குண்டு. உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த இரண்டு முதலமைச்சர்கள் மீதும் நாம் குற்றம்சாட்ட முடியும். வழக்குகளை சிதைத்ததில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. உத்தரப் பிரதேசத்தின் இரண்டு முதல்வர்கள் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், முக்கியப் பிரமுகர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் என எந்த நம்பிக்கையில் கூறமுடியும் என சஹாபுத்தீன் தெரிவித்தார்.மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் இன்று நாட்டின் மிகமுக்கியப் பிரமுகர்கள், நாட்டையே ஆண்டவர்கள். பிரதமராக வும், துணைப் பிரதமராகவும், மத்திய அமைச்சர்களாகவும், முதலமைச் சர்க ளாகவும் இருந்தவர்கள். அவர்கள் அரசுகளின் முக்கிய அங்கமாக விளங்குகின்றனர். நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு அதிக அளவு வலிமை இன்னமும் உள்ளது. யாரும் அவர்களை தொடக்கூட முடியாது. இந்த அறிக்கை இறந்து கொண்டிருக்கும் அந்த இயக் கங்களுக்கு வாழ்நாளை நீட்டிக்க உதவும் ஒரு கருவியாகவே இருப்பதாக ஜஃபருல் உள்ளிட்ட முன்னணி மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.லிபரான் ஆணையம், அறிக்கை வெளியிட நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது. கோடிக்கணக்கான பணம் வாரி இறைக்கப்பட்டது. இவை அனைத் தும் இந்திய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை தண்டிப் பதற்கு காலதாமதம் ஏற்படுத் தினால் அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல என நுஸ்ரத் அலி எச்சரித்தார்.முஸ்லிம் இயக்கங்களை லிபரான் தனது அறிக்கையில் குற்றம்சாட்டி இருப்பதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.முஸ்லிலிம் தலைவர்கள், பாபரி மஸ்ஜித் ஒருங்கிணைப்புக்குழு, அகில இந்திய பாபரி மஸ்ஜித் செயல் கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் அனைத்தும் இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டன. சிக்கலான நேரத்தில் நாங்கள் போராட்டத்தை அறிவிக்கவில்லை. நாங்கள் அரசாங் கங்களிடம் ஒவ்வொரு நாளும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டி ருந் தோம். பல்வேறு அரசியல் கட்சிகளி டமும் எங்கள் தரப்பை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தோம். நாடாளுமன்றத்திலும் ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை எழுப்பி நாடு முழுவதும் மக்களைத் தட்டி எழுப்பினோம். ஆனால் நாங்கள் அப்பாவி மக்களிடம் பணம் வசூலிக்க வில்லை. ரத யாத்திரை நடத்தி நாட்டை ரத்தக் காடாக்கவில்லை என்றார் சையது சஹாபுத்தீன்.அரசுகள் அவர்களுக்கே ஆதரவாக இருந்தன. வெகுஜன ஊடகங்கள் சங்பரிவாரின் சிறு அறிவிப்பைக் கூட பெரிதுபடுத்தி பிரபலப்படுத்தின. ஏழு லட்சம் குண்டர்களை அவர்கள் திரட்டினர். அவர்களைத் தடுக்காத அரசு கள், மஸ்ஜித் தகர்க்கப்பட்ட பிறகும் கூட நீதியுடன் நடந்து கொள்ளவில்லை.பாபரி மஸ்ஜித் தகர்ப்புடன் தொடர்பு டைய ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்த கையோடு சேவை அமைப்பான ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பையும் தடை செய்தது அன்றைய மத்திய அரசு. இவர்களிடம் எவ்வாறு உறுதியான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்? என்கிறார் ஜஃபருல் இஸ்லாம்.மஸ்ஜிதை தகர்ப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனைபாபரி மஸ்ஜித் தகர்ப்பில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண் டும். தேசத்தின் இதயத்தை துண்டு போட்ட வேலையை சங்பரிவார் பயங் கர வாதிகள் செய்தனர். அதற்கு உறு துணையாக இருந்தவர்களும் தண் டிக்கப்பட வேண்டும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார். இனிமேலும் இத்தகைய செயல்கள் நேராத வண்ணம் அழுத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்மேலும் தெரிவித்தார்.மேலும் அவர் ரத்தம் கொதிக்கச் செய்யும் ஓர் அதிர்ச்சித்தகவலையும் அவர் அப்போது தெரிவித்தார். அந்த கறுப்பு நாளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஆகிய இருவர் தலைமையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அன்று பிரதமர் நரசிம்மராவை சந்தித்தனர்.வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும் பாப்ரி மஸ்ஜித் காக்கப்பட வேண்டும் என உருக்கமுடன் கோரிக்கை விடுத்தனர். அதே வேளையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நரசிம்மராவை சந்திப்பதற்காக பல மணி நேரங்கள் காத்துக்கிடந்தனர். அவர்களையும் பிரத மர் ராவ் சந்திக்கவில்லை. மஸ்ஜிதை யும் காப்பாற்ற வில்லை. இன்று ராவும் இல்லை. வி.பி.சிங், ஹரிகிசன் சிங் சுர்ஜித்தும் இல்லை. ஆனால் குற்றாவளி கள் அனைவரும் இன்று உயிருடன் உலாவுகின்றனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மத்திய அரசு விரைவில் தெரிவிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.68 பேர் மட்டும் தான் குற்றவாளிகளா?லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழக்கக் காரணமான ஒரு தேசிய அவ மானம் குறித்த விசாரணை அறிக்கையில் வெறும் 68 பேரை மட்டும்தான் குற்றம்சாட்ட முடிந்ததா? ஏனைய குற்றவாளிகள் பட்டியலிடப்படவில்லையே என்ற கேள்வி நாடெங்கும் எழுந்துள்ளது.அதிகார வட்டாரம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை1986லி-ருந்து மஸ்ஜித் தகர்க்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் முஸ்லிலிம்களுக்கு எதிராக வெறியூட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. நாடு முழுவதும் மூலைக்கு ஒன்றாக செங்கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்கெல்லாம் முஸ்லிலிம் களுக்கு எதி ராகவும், சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணமும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அனைத்து வெறிச் செயல்களும் வெளிப்படையாகவே நடை பெற்றன. வெறிக்கூச்சல் போட்டுச் சென்ற கூட்டத்தினர் மீதோ, வன்முறை தூண்டும் வண்ணம் மேடையில் பேசியவர்கள் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. பாஜக 90களின் இறுதியில் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 80களின் இறுதியிலும், 92ஆம் ஆண்டு வரை வெறியாட்டம் போட்ட மதவெறிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு எந்த ஒரு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி களுக்கும் இல்லாமல் போனது ஏன்? என்ற வினாவை சமூகநல ஆர்வலர் எழுப்பி வருகின்றனர்.சங்பரிவார் மதவாத சக்திகளை மட்டு மல்லாது மஸ்ஜித் இடிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவது மட்டுமே இந்திய மக்களின் ஆத்திரத் துக்கு அணை போடுவதாக அமையும்.அதுதான் வேதனை மிகுந்த சூழ்நிலையிலும் இந்த தேசத்தையும் தேச மக்களையும் நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலனத்தையும் மதித்து பொறுமை காத்து வரும் ஒரு உயர் சமூகத்தின் மனப்புண்ணுக்கு மருந்திடுவதாக அமையும்

Sunday, November 22, 2009

அபுஸாலிஹ் செய்திகள்

மும்பை தாக்குத லில் அமெரிக்க பயங்கரவாதியின் சதி

E-mailPrintPDF

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து ஓராண்டு முடிந்து விட்டது. அந்த சோக நிகழ்வை வெறுமனே வேத னைப்படும் சோக நிகழ்வாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது.

நாட்டிற்கு ஏற்பட்ட பெரிய அபாய மாகவே கருதிட முடியும். தென்கிழக்கு ஆசியாவின் வல்லரசாக விளங்கும் இந்தியாவின் பெருமைக்கும் வல்லமைக் கும் எதிராக இழிவுபடுத்தும் நோக்கம் அதில் இருந்தது.


இந்தியாவின் நியூயார்க் என செல்ல மாக அழைக்கப்படும் இந்தியாவின் வர்த் தக தலைநகரமான மும்பை மாநகரம் பல மணிநேரங்கள் பயங்கரவாதிகளின் முற்றுகையில் தவித்தது. மும்பை மாநகரில் முக்கியப் பகுதிகள் குறிப்பாக சத்ரபதி சிவாஜி தொடர் வண்டி நிலையம், தாஜ் ஹோட்டல், நாரிமண்பாயிண்ட் என பல்வேறு பகுதிகளும் தாக்குதலுக்கு இலக்காயின.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற நவம்பர் 20லிம் தேதிக்கு முந்தைய தினம் வரை நாட்டையே பரபரபுக்குள்ளாக்கிய மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து இந்திய நாட்டையே அதிரச் செய்தது.
பெண்சாமியார் பிரக்யாசிங், ராணுவத் தில் உயர் பதவி வகித்துக் கொண்டே நாட்டிற்கு எதிராக தொடர்ந்து துரோகம் இழைத்த தீவிரவாதி கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்ட 11 பேரின் அனைத்து துரோகச் செயல்களையும் நிரூபித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என சபதம் செய்தார் மகராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த்கர்கரே எத்தகைய உயர்ந்த இடத்தில் உள்ளவர்களின் மிரட்டலுக்கும் நான் அஞ்சப்போவதில்லை என்றும் அதிரடியாக அறிவித்தார் மாவீரன் ஹேமந்த்கர்கரே.

இந்த துணிச்சலான பேட்டி இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பரபரப்பு சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்த நிலை யில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து குறுகிய நேரத் தில் தீவிரவாத தடுப்புபடையின் தலைவர் ஹேமந்த்கர்கரேயின் மர்ம படு கொலையும் நிகழ்ந்தது.

நாட்டின் முக்கிய துறைமுக நகரத்துக் குள் புகுந்து பல மணிநேர தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்களுக்கு அத்தகைய துணிச்சல் எங்கிருந்து வந் தது? ஒரு வலுவான பின்னணி இல்லாமல் இந்த தாக்குதலை யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது! என்ற பலத்த சந்தேகங்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல் யூகங்களுக் கும் கால காலமாக திட்டமிட்டு வரும் வியூகங்களுக்கும் வலுசேர்க்கும் வித மாகவே செய்திகள் புறப்பட்டனவே தவிர மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் மும்பையையே முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகள் குறித்தும் கூர்மையான தகவல்கள் கண்ட றியப்படவில்லை என்பதை உணர்த்தும் விதமாக அன்மையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அவை சர்வதேச அளவில் பதட்டத்தையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹேட்லி என்ற பயங்கரவாதி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹேட்லி மற்றும் தஹாவுர்ரானா ஆகிய இருவரும் பாகிஸ்தானி ருந்து செயல்படும் லஷ்கர்லிஇலிதொய்பா வோடு சேர்ந்து கொண்டு இவர்கள் இயங்குவதாகவும் இந்தியாவிலும் டென் மார்க்கிலும் பயங்கர வாதத் தாக்குதல்களை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் இவர்களை சமீபத்தில் கைது செய்த அமெரிக்க உளவுத்துறை கூறியது.

டேவிட் கோல்மேன் ஹேட்லி என்ற அமெரிக்கன் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒன் பது முறை இந்தியா வந்துள்ளான். ஒவ்வொரு தடவையும் படுபயங்கர திட்டத்துடன் தான் இந்த சதிகாரன் இந்தியா வந்து சென்றுள்ளதாக இந்திய புலனாய்வு வட்டாரங்கள் இப்போது தெரி வித்துள்ளன.

2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை குடியரசு தினங்களும், சுதந்திர தினங்களும், டிசம்பர் 6 உள்ளிட்ட பாது காப்பு கெடுபிடி மிகுந்த நாட்களில் பல முறை வந்து சென்றுள்ளான். ஆனால் அப் போதெல்லாம் பாதுகாப்பு கெடுபிடிகள் ரெய்டுகள் என்ற பெயரில் அப்பாவிகள் வளைத்து பிடித்து விசாரிக்கப்பட்டார்களே தவிர டேவிட்கோல்மேன் ஹேட்லி போன்ற அதி பயங்கரவாதிகள் அந்தக் காலகட்டங்களில் பிடிக்கப்பட்டதாகவோ ஏன் விசாரிக்கப்பட்டதாகவே, எந்தச் செய்தியும் ஏன் செய்தியின் சுவடுகூட இல்லை.

அதைவிட வேதனை என்னவெனில் பயங்கரவாதிகள் ஹேட்லி 9 முறையும் வந்து சென்ற இடங்கள் எவைஎவை தெரியுமா?


டெல்லி , மும்பை, லக்னோ, அஹமதா பாத் ஆகிய நகரங்களுக்கு ஹேட்லி வந்து சென்றுள்ளதாகவும், அங்கு பயங்கரவாதத் தளங்களையும் உருவாக்கியுள்ளதாக இப்போது உளவுத்துறை அமைப்புகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அலறுகின்றன. ஹேட்லி 9 முறை வந்து சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படும் இடங் களை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.


பயங்கரவாதி ஹேட் லி வந்து பயங்கர வாதத் தளங்கள் அமைத்த டெல் லியை ஆளும் ஷீலாதீட்சித் தலைமையிலான அரசு ஜாமியாநகரில் நடைபெற்ற போலிஎன்கவுண்டரில் இரண்டு அப்பாவி முஸ்லி ம் இளைஞர்களை மண்ணில் சாய்த் தும் அப்பாவி இளைஞர்களை எவ்வித விசாரணையும் இல்லாமல் துன்புறுத்தும் போக்கை நோக்கமாகக் கொண்ட அரசு.

லக்னோவுக்கு ஹேட்லி பலமுறை வந்துள்ளார். லக்னோவை நிர்வகித்து வரும் உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் செல்வி மாயாவதி அவர்கள் உ.பியின் ஆசம்கார் என்ற மாவட்டத்தில் உள்ள அப்பாவி முஸ்லி ம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கடுமையாக துன்புறுத்திய நிகழ்வுகள் எண்ணற்றவை நடைபெற்றன.

ஒரு கட்டத்தில் வெளியூர்களில் தங்கி மேல்படிப்பு படித்து வரும் தங்கள் வீட்டுப்பிள்ளைகளை ஊருக்கு வரவேண்டாம் என பெற்றோர்களே கெஞ்சும் அளவுக்கு உ.பி. காவல் துறையினரின் கெடுபிடி இருந்தது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மும்பையில் விசாரணை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமூக இளைஞர்கள் அடைந்த துன்பங்கள் யாராலும் மறுக்க முடியாதவை.

குஜராத் மாநில அகமதாபாத்தில் குறித்தும் மோடி அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் நாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் மூலம் அப்பாவி முஸ் லிம் இளைஞர்களை கருவறுத்த மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தான் உலக மகா பயங்கரவாதிகள் டேவிட் கோல்மேன் ஹேட்லி சொந்த நந்தவனத்தில் உலவுவதைப் போல் உலாவியுள்ளான்.

அப்போதெல்லாம் பயங்கரவாதி ஹேட்லி யைக் குறித்து எந்த தகவலையும் பெற திராணியற்ற நிலையிலேயே டெல்லி, மும்பை, லக்னோ, அகமதாபாத் நகரங் ககளை கண்காணிக்கும் அந்தந்த மாநில புலனாய்வு அமைப்புகள் இருந்துள்ளன அவர்களுக்கு தீவிரவாதிகள் என்றாலே சிறுபான்மை சமூக இளைஞர்கள் தானே நினைவுக்கு வருவார்கள் இல்லையா?

ஏதாவது அப்பாவி இளைஞனை குறிப்பாக முஸ்லி ம் இளைஞனை பிடித்து சித்திரவதை செய்தால் போதும் அடிதாங்காமல் அந்த இளைஞன் தானே தீவிரவாதி என ஒப்புக்கொள்வான் அவன் தீவிரவாதி என தாங்களே கண்டுபிடித்ததை போல பக்கம் பக்கமாக கற்பனைக் கட்டுக் கதைகளை கட்டவிழ்த்து விட ஏராளமான வெகுஜன ஊடகங்கள் நம் நாட்டில் உண்டு. இத்தகைய முக்கிய(?) கடமைகள் இருக்கும் போது ஹேட்லி போன்ற உத்தமர்களை(!)க் கண்காணிக்க குறிப்பிட்ட அந்த மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு பாவம் ஏதுநேரம்? ஏதாவது நாச வேலைகள் நடந்தால் எங்காவது தாடிவைத்த தொப்பி அணிந்த ஒரு இளிச்சவாய் இளைஞன் நமக்கென்று கிடைக்காமலா போவான் என்ற வக்கிர சிந்தனையைத் தாண்டி புத்திசா லித் தனமாக யோசிக்க சில புலனாய்வுப் பு லிகளுக்கு இயலாமலே போய்விட்டதோ என்ற வலுவான சந்தேகம் ஹேட்லியின் விஷயத்தில் உறுதியாகி விட்டது. (இந்தப் புலனாய்வு மேதாவிகள் பேசாமல் விஜய் காந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதப் போகலாம் என்கிறீர்களா?)

2006-லி ருந்து 2009 வரை நாட்டில் நடந்த அனைத்து அசம்பாவிதங்களிலும் பயங்கரவாதி டேவிட் கோல் மேன் ஹேட் லிக்கு உள்ள தொடர்பை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.

இதனிடையே அமெரிக்க புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்ட டேவிட்கோல்மேனை விசாரிக்க அமெரிக்கா சென்ற இந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு அனுமதி கிடைக்காத தால் இந்தியக்குழு வெறுங்கையுடன் தொங்கிய முகத்துடன் ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பியது.

அமெரிக்கா சென்றிருந்த இந்திய புலனாய்வுக் குழுவினர் வாஷிங்டனில் தங்கி அந்நாட்டு புலனாய்வுக் குழு வினருடன் டேவிட் கோல் மேனின் சதித்திட்டம் குறித்து விரிவான ஆலோச னைகள் மற்றும் தகவல்கள் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட போதும் சிகாகோ சிறைச்சாலையில் அடைக் கப்பட்ட டேவிட் கோல் மேனை தாங்கள் விசாரிக்க வேண்டும் என்ற இந்தியக்குழுவினரின் கோரிக்கைக்கு அமெரிக்கா செவிசாய்க்கவேயில்லை.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலி ல் வெளிநாட்டுக்காரர்கள் குறிப்பாக யூதர் கள் கொல்லப்பட்டனர் என்ற ஒரே காரணத்துக்காக விமானங்களில் சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக அமெரிக்கா உள்ளிட்டமேற்கு நாடுகளி ருந்து புல னாய்வு குழுக்கள் வந்தவண்ணம் இருந்தன.

ஆனால், மும்பை பயங்கரவாதத் தாக்குதலி ன் மூலம் பெரும் இழப்பினை சந்தித்த இந்தியத் திருநாட்டின் புல னாய்வுக் குழுவினை விசாரிக்க அனுமதி மறுத்த அமெரிக்க அரசின் அடா வடித்தனம் கண்டிக்கத் தக்க செயல் அல்லவா?

இந்தியக் குழு முதன் முறையாக ஹேட்லி யை விசாரிக்கச் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் ஆய்வாளர்கள் முக்கியமான ஒரு கருத்தி யலைக் குறிப்பிடுகிறார்கள்.

அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறையான எ.இ.ஒ.யின் ஆலோசனைப்படி அவர்களது விருப்பப்படியே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தந்திர யுக்தியின் படியே முத ல் அனுமதி மறுக்கப்டடிருக்கிறது. விரைவில் ஹேட்லி இந்திய புலனாய்வுக் குழுவினரால் விசாரணை என்ற நாடகம் அரங்கேற்றப் படலாம் முத ல் இந்திய குழுவினருக்கு ஹேட் லியை விசாரிக்க அனுமதி மறுக்கப் பட்டதற்கு காரணம் விசாரணை என்ற பெயரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு யூதனுக்கு (ஹேட்லி க்கு) இந்தியக் குழுவினரால் ஒரு தொந்தரவும் ஏற் படக்கூடாது என்பதற்காகவே ஒரு அமெரிக்கனுக்கு குறிப்பாக ஒரு யூதனுக்கு அந்நிய நாட்டினரால் அவமரி யாதை நடக்கக்கூடாது என அமெரிக்கா நினைக்கிறது. அது தான் அமெரிக்கா.

200 பேரை பறிகொடுத்த மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசார ணையில் ஒத்துழைப்பு கிடைக்காமல் அமெரிக்காவி ருந்து ஏமாற்றத்துடன் திரும்பியது இந்தியா. ஒரு யூதன் மீது விசாரணை செய்தது 200 இந்தியர்களின் உயிரிழப்புகளை விட பெரியது என்று சொல்லாமல் சொன்னது அமெரிக்கா. மௌனத்தை கடைப்பிடித்தது இந்தியா. மவுனம் என்பது சம்மதத்துக்கு அறிகுறிதானே.
-அபுசாலிஹ்

Tuesday, September 8, 2009

ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்! -அபூசாலிஹ்







ஹிஜாபுக்காக உயிரை தியாகம் செய்த வீரத்தாய்!

-அபூசாலிஹ்

நாம் நாகரீக உலகில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் உலகம் முழுமையும் பரவி வருகிறது. நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்களே, உரிமைகளை முழுக் குத்த கைக்கு எடுத்தவர்கள் நாங்களே என உரத்து முழங்கும் ஐரோப்பாவில், ஜெர் மனியில் நிகழ்ந்த ஒரு இரக்கமற்ற செயல் உலகத்தையே அதிர வைத்தது.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வும், இனவெறியும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகமாகவே பரவி வருகிறது. முஸ்லிம் கள் அணியும் உடையைக் கண்டுதான் சிலருக்கு காழ்ப்புணர்வு, எல்லை மீறி அணையுடைக்கிறது. காழ்ப்புணர்வின் உச்சக்கட்டமாக பிரான்ஸ் அதிபர் சர்கோஸியும் இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் தலைவரும் தனது வெறுப்பினை வெளிக்காட்டினர்.

வெறுப்பு கருக் கொண்ட இதயங்களில் இனவெறி நெருப்பு பற்றிப் பரவியது.இதன் காரணத்தால் மேற்கத்திய நாடு களிலும் மேற்கத்திய நாகரீக சாயலை அடிமைத்தனத்துடன் பின்பற்றிவரும் நாடுகளும் முஸ்லிம் பெண்களின் உடை விஷயத்தில் கெடுபிடி காட்ட ஆரம்பித்தன.

இதன்விளைவாக இனவெறி பிடித்த சிலர் ஐரோப்பிய நாடுகளில் பர்தா அல்லது ஹிஜாப் அணிந்த பெண்களிடம் வம்பு வளர்ப்பதும், அவர்களை 'பெண் தீவிரவாதி' என வெறுப்பு மூட்டுவதும் வாடிக்கையானது.

கடந்த 2008ஆம் ஆண்டு டாக்டர் எல். ஷெர்பினி என்ற பெண் ஹிஜாப் அணிந்ததைக் கண்டு என் ஆக்ùஸல் என்னும் வெறியன் 'பெண் தீவிரவாதி இவள்' என பொது இடங்களில் கலாட்டா செய்துள்ளான. அவமானத்துடன் வேதனை யும் சேர, அமைதியாகச் சென்றார் ஷெர்பினி.
மீண்டும் மீண்டும் அந்த வெறியனால் தொல்லைகள் தொடரவே, இனவெறி யனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கி னைத் தொடர்ந்தார்.

இதன்மூலம் ஜெர்மனியிலும் அவரது பூர்வீக நாடான எகிப்திலும் டாக்டர் ஷெர்பினி போற்றப்பட்டார். ஹிஜாப் வீரப் பெண்மணி என்ற பட்டமும் அவரை வந்தடைந்தது.

இந்தச் சூழ்நிலையில் பரபரப்பான அந்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது. அதில் ஹிஜாப் அணிந்த ஷெர்பினியை அவமதித்த செயலுக்காக 790 யூரோக் கள் அபராதமாக நீதிபதி விதித்தார்.

அந்த அபராதத்தினை செலுத்த வந்த வெறியன் ஆக்ùஸல் டாக்டர் ஷெர்பினியை பழிதீர்க்கும் வெறி யோடு அந்த 31 வயது சகோதரியை 3 மூன்று மாத கருவினை சுமந்தி ருந்த இளம்பெண்ணை ஒன்றல்ல, இரண்டல்ல 18 முறை கத்தியால் குத்தினான்.

ஹிஜாப் அணிந்த ஒரே குற்றத்திற்காக சகோதரி ஷெர்பினியின் உயிர் பறிக்கப் பட்டுள்ளது.

நடைபெற்ற கொடூரத்தைக் கண்டு தன் மனைவி ஷெர்பினியின் உயிரைக் காக்க போராடினார். அவரது கணவர் எல்.வி. ஓக்ஸா. தனது மனைவி உயிரைக் காப் பாற்ற வந்த கணவரும் காவல்துறை யினரால் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

மூன்று மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான மர்வான் ஷெர்பினி ஹிஜாப் அணிந்த காரணத்தினால் தனது இன்னு யிரை இழந்திருக்கிறார்.

தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது பரப்பப்பட்டது. பரப்பப்பட்டதன் விளைவு ஓர் இளம்பெண் கருவறுக்கப்பட்டிருக் கிறார். 29 வயது இளைஞன் வெறியனாகி கொலைத் தண்டனை அடையப் போகிறான்.

ஷெர்பினியின் அடக்கம் சொந்த நாடான எகிப்தில் நடந்தது. ஜெர்மனி கடும் கண்டனத்திற்கு இலக்கானது. உலகெங்கிலுமுள்ள ஜெர்மனி தூதரங்களின் வளாகங்கள் பல, செருப்புகளாலும், அழுகிய முட்டைகளாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளன.

ஷெர்பினியின் கணவரின் கதி என்ன ஆயிற்று என்பது இன்னும் வெளிவர வில்லை. ஷெர்பினியின் கணவனை சந்திக்க முயன்ற ஈரானின் பிரஸ் டி.வி. செய்தியாளர் தாக்கப்பட்டிருக்கிறார்.

வீரப்பெண்மணி மர்வா ஷெர்பினி யின் மறுமை வெற்றிக்காக உலகெங்கும் பிரார்த்தனைகள் தொடர்கின்ற


ராஜசேகர ரெட்டியும்! ஆந்திர முஸ்லிம்களும்!

ஒரு மாநில முதல்வரின் திடீர் மறைவுக்காக ஒட்டுமொத்த தேசமே கலங்கி நின்றது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இருக்கக்கூடும்.


ஒய்.எஸ்.ஆர். என அன்பாக அழைக்கப்படும் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த செய்தி அரசியல் அரங்கை உலுக்கியது.

அவரது நலத்திட்டங்கள் பல மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்கு முன்னோடித் திட்டங்களாக அமைந்துள்ளன என்றால் மிகையல்ல.

டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி யின் 'ராஜீவ்காந்தி காப்பீடு திட்டம்' நம் தமிழகத்தில் பிரபலமாக பேசப்படும் 'கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்கு' முன்னோடித் திட்டமாகும்.

ஆந்திரா என்றால் கடன் தொல் லையால் கொத்து கொத்தாக தற் கொலை செய்யும் விவசாயிகள்தான் நினைவுக்கு வரும். சந்திரபாபு நாயூடுவின் ஆட்சிகால சோகத்தை மாற்றி விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்தவர் ஒய்.எஸ்.ஆர்.

ஒய்.எஸ்.ஆரின் அதிரடி அகில இந்திய அளவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஒய்.எஸ்.ஆரின் அரும் முயற்சியால் பாரதீய ஜனதாவின் ஆட்சிக் கனவு தகர்ந்தது. பிரதமர் இருக்கையில் துண்டு போட்டு சீட் பிடிக்கலாம் என கனவில் மிதந்த அத்வானிகளின் கதி அதோகதியாகிப் போனது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி தங்களது தயவில்தான் ஆட்சி நடத்த வேண்டும் என பிளாக்மெயில் செய்து மிரட்டியே காரியம் சாதித்துக் கொள்ளலாம் என ஆசைப்பட்டவர்களின் கனவில் வண்டி வண்டியாக மண் அள்ளிப் போட்டவர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் 33 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மதவாத கும்பலின் ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். காங்ரஸின் வெற்றிக்கு ஆந்திரா கைகொடுத்தது.

டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் மறைவு நாட்டின் சகல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒய்.எஸ்.ஆர். சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து மர்மங்களும், யூகங்களும் புற்றீசல்களாக புறப்பட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் எல்லோருக்கும் இனியவராக வாழ்ந்த ராஜசேகர ரெட்டியின் மறைவு ஆந்திர முஸ்லிம் சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டுக்காக போர்க் கோலம் பூண்டவர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர். தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றியே தீருவேன் என சூளுரைத்தார்.

டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004ல் முதன்முறையாக ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியபோது முஸ்லிம்களுக்கு, தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினார்.

ஆந்திராவில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம் களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப் பித்தார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடா? அனுமதிக்க மாட்டோம் என சதிகார கும்பல் சதி வலைகளைப் பின்னியது. நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி சூழ்ச்சிகளைத் தொடர்ந்தனர்.

முஸ்லிம்களுக்கு பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக் கைகளை நிறைவேற்றுவோம் என பேச்சளவில் முழங்கும் வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே கண்ட இந்த கள்ளம்கபடமற்ற சமுதாயம் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக் காகப் போடப்பட்ட முட்டுக்கட்டைகளை தகர்த்தெரிய வெகுண்டெழுந்த ஒய்.எஸ். ஆரைக் கண்டு வியந்தது.

எதற்கும் கலங்காது தனது முடிவில் உறுதியாக இருந்து முஸ்லிம் இடஒதுக் கீட்டுக்கு எதிராகப் போடப்பட்ட முட்டுக் கட்டைகளையும் சூழ்ச்சிகளையும் எதிர்த்து சட்ட யுத்தம் நடத்தி வெற்றி வாகை சூடினார்.

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. செயற் கரிய செயல் செய்த ராஜ சேகர ரெட்டி நாட்டு மக்க ளால் பாராட்டப் பெற்றார்.

ராஜசேகர ரெட்டி யின் ஆற்றலும், எடுத்தக் காரியத்தை எப்பாடுபட் டேனும் நிறைவேற்றும் உறுதியும் ஒவ்வொரு அரசியல் தலைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்று.

அரசு நிறுவனங்களால், அரசியல் பெரும்புள்ளிகளால் அபகரிக்கப்பட்ட வக்ஃபு நிலங்களை மீட்டு உரிய முறை யில் வாரியத்திடம் ஒப்படைப்பதில் ஒய்.எஸ்.ஆர். பெரிதும் ஆர்வம் காட்டினார்.

அரசு நிறுவனம் ஒன்று 50 ஏக்கர் வக்ஃபு நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. அது ஹஜ்ரத் பாபா ஷர்ஃபுதீன் தர்காவுக்குச் சொந்தமான நிலம். அதன் இன்றைய மதிப்பு 350 கோடியாகும். அதனைத் தயங்காமல் அரசு ஆக்கிரமிப் பிலிருந்து அகற்றி வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைத்தார். இவரைப் போன்ற ஒரு சிறந்த முதல்வரை நாங்கள் எப்போது காணப் போகிறோம் என தேம்புகிறார் ஹைதராபாத்தின் முஸ்லிம் பிரமுகர் மவ்லவி ஆகில் காசிமி.

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பழைய ஹைதராபாத்தின் வளர்ச்சித் திட்டங்களுக் காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். காங்கிரஸ் பெரும் புள்ளிகளால் எப்போதும் கருவேப்பிலையாக மட்டுமே கருதப்பட்டு வந்த (ஹைதராபாத் முஸ்லிம் களிடையே செல்வாக்கு பெற்றிருந்த) அகில இந்திய மஜ்லிúஸ இத்திஹாத்துல் முஸ்லிமீன் அமைப்பினரிடையே சிறந்த முறையில் நட்பு பாராட்டினார் முதல்வர் ராஜசேகர ரெட்டி. முதல்வரும் ஏ.ஐ.எம். எம்.முடன் இணைந்து சிறுபான்மை வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் அயராது பாடுபட்டார்.

ஆந்திராவில் (தமிழ்நாட்டை விட) மிக சிறுபான்மையினராக உள்ள கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்தவரான டாக்டர் ஒய்.எஸ்.ஆர். அனைத்துப் பிரிவு மக்க ளின் பேரன்புக்கு உரியவராக திகழ்நதார்.

சமூக நல்லிணக்கம் நாளும் வாழ வேண் டும் என விரும்பும் ஒவ்வொரு வரும் நெகிழ்ச்சியோடு போற்றும் சரித்திரமானார் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்

ஜின்னா ரொம்ப நல்லவரு...! உருகு




ஜின்னா ரொம்ப நல்லவரு...! உருகும் ஆர்.எஸ்.எஸ்.

-மருதநாயகம்

பாரதீய ஜின்னா பார்ட்டியின் ஜின்னா ஆதரவு கானங்கள் இந்திய அரசியல் அரங்கில் அந்தக் கட்சியின் பெயரை ஜின்னாபின்னப்படுத்திய பிறகு அந்தக் கட்சியின் ஆதாரப் பீடமான ஆர்.எஸ்.எஸ். குரு பீடத்தின் முக்கியப் பெருந்தலை களில் ஒருவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் முன்னோடிகளில் ஒருவராக அழைக்கப்படும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன், ஜின்னா பற்றி தெரிவித்த கருத்தினால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பாகிஸ்தானின் சிற்பியான முஹம்மது அலி ஜின்னா, பிளவுபடாத மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டமைப் பதில் உறுதியுடன் நின்றார். ஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் அவரை மூளைச்சலவை செய்ததால் முஸ்லிம் களுக்கு தனி நாடு உருவாக்கும் அளவுக் குச் சென்றார்.

'ஜின்னா ரொம்ப நல்லவரு' பிரிட்டிஷ் காரர்கள்தான் அவரைக் கொடுத்தார்கள் என்ற ரீதியில் சுதர்சன் தெரிவித்திருக்கும் கருத்து அரசியல் அரங்கில் புதிய விவாத அலையை உருவாக்கியுள்ளது.

ஜின்னா குறித்து வெறுப்பு வெறுப்பின்றி விமர்சனம் செய்யும் திறனாய்வாளர்கள், ''ஜின்னா சிறந்த இந்தியர்; ஒன்றுபட்ட இந்தியாவை கட்டமைக்கும் ஆர்வத்துடன் இயங்கினார்; ஜின்னா போன்ற விடுதலைப் போராட்டத் தளபதிகள் நாட்டில் தோன்று வது மிகவும் அரிது'' என்றே சிலாகித்துக் கூறுகிறார்கள்.

இந்திய வரலாற்றில் மூன்று பெருந் தலைவர்களின் அருமையான பக்கம் அறியப்படாமலே போய்விட்டது என்பது உண்மை தேசப்பற்றார்களின் ஏக்கமாக இருந்தது.

ஒருவர் பெரியார் ஈ.வே.ரா., இரண் டாமவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார், மற்றொருவர் முஹம்மது அலி ஜின்னா.

இவர்கள் மூவரின் சாதனை சரித்திரங் கள் இவற்றின் அரசியல் முக்கியத்துவம் மிகுந்த ஆளுமை அனைத்துமே சரிவர இந்திய மக்களால் அறியப்படாத அவல மாகவே அமைந்திருக்கின்றன. இன்று வரை இதுதான் நிலவரம் என்பது ஓர் உறுத்தலுக்குரிய உண்மையாகும்.

எந்த அளவு சிறந்த மனிதராக இருந் திருந்தால் அவரை காலகலமாக விமர் சித்த முகாமைச் சேர்ந்தவர்களால் கூட உண்மைகளை மறைக்க முடியாமல் உள்ளது உள்ளபடி உரைத்தே தீரவேண் டிய நிலையில் ஜின்னாவைக் குறித்த உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன.

அத்வானிகள், ஜஸ்வந்த் சிங்குகள் மட்டுமல்லாமல், சுதர்சனங்களும் கூட உண்மைகளை உரைத்தே தீரவேண்டிய கட்டாயம் வந்திருக்கிற

Saturday, September 5, 2009

மாவீரன் முன்ததர் விரைவில் விடுதலை! -அபூசாலிஹ்

மாவீரன் முன்ததர் விரைவில் விடுதலை!

-அபூசாலிஹ்

ஈராக்கை ஆக்கிரமித்து ஆறு ஆண்டுகளாக மனித உரிமைகளை மீறிவரும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்தியின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த ஜார்ஜ் புஷ் மீது தார்மீக கோபம் கொண்டு தனது காலனிகளை வீசி மரியாதை(!) செய்தவர் ஈராக்கிய பத்திரிகையாளர் முன்ததர் அல்ஜைதி.


ஈராக்கில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களும் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களும் உயிர்பலியாகக் காரணமாக இருந்த ஜார்ஜ் புஷ் தனது பதவியின் கடைசி காலத்தில் பிரிவு உபச்சார நிகழ்ச்சிக்காக ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றார்.


பாக்தாதில் ஒன்றுபட்ட பத்திரிகையா ளர் கூட்டத்தில் பேசும்போது, ''ஈராக்கிற்கு மக்களாட்சியை வழங் கினோம்; மறுமலர்ச்சி வழங்கினோம்'' என தனது சாதனைகளாக சகட்டு மேனிக்கு அள்ளிவிட்டுக் கொண்டி ருந்தபோது, புஷ்ஷின் பொய்களைத் தடுத்து நிறுத்தியது ஒரு ஷூ.


அமெரிக்க பொய்யைத் தடுத்து நிறுத்தியது அரபு ஷூ. தனது பெயரி லேயே ஷூவை சூட்டி யிருக்கும் அன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷூ, தன்னால் ஆக்கிரமிக்கப் பட்ட நாட்டைச் சேர்ந்த குடிமகனின் காலணி யால் மரியாதை(!) செய்யப்பட்டார்.


பாதுகாப்பு அதிகாரி களின் கடுமையான கெடுபிடி களுக்கிடையில் முன்ததர் அல்ஜைதி, சிறையில் தள்ளப் பட்டார்.


உலகுக்கு காவல் தலை வனாக தன்னை எண்ணிக் கொண்டிருந்த சர்வாதிகாரி ஜார்ஜ் புஷ் மீதான காலணி தாக்குதல் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய தோடு, முன்ததர் அல்ஜை தியை மாவீரனா கவும், கதாநாயகனாகவும் போற்றியது. முன்த தரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஈராக்கில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடு களிலும் இதே கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில் முன்ததருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. தற்போது அந்தத் தண்டனை ஓராண்டாகக் குறைக்கப்பட்டிருப்பதாக ஈராக்கின் ராணுவ நீதிமன்றம் தெரிவித் திருக்கிறது.


முன்ததர் அல் ஜைதியின் நன்னடத் தையின் காரணமாக அவருக்கு இந்த தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. முன்ததர் அல் ஜைதி தற்போது அனுப வித்து வரும் ஓராண்டோடு அவர் சிறையிலிருந்து மீளவிருக்கிறார்.


கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி புஷ் மீது ஷூ வீசி சிறை சென்ற முன்ததர் மீது இதற்கு முன்பு எந்தக் கிரிமினல் வழக்கும் இல்லாத காரணத்தால் ஓராண்டு தண்டனை காலத்தைக் கூட முழுவதும் அனுபவிக்காமல் மூன்று மாதத்திற்கு முன்பாகவே அதாவது எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முன்ததர் அல் ஜைதி விடுதலையாகிறார்.


இத்தகவலை ஈராக் அரசின் ராணுவத் தலைமை வழக்கறிஞர் கரீம் அல் சுஜைரி தெரிவித்திருக்கிறார்


போலி ஏவுகணைகள் விற்பனை இந்தியாவை ஏமாற்றிய இஸ்ரேல்!

கிழக்காசியாவின் வளர்ந்துவரும் வல்லரசான இந்தியாவின் ராணுவ ஆயுதங்களின் திறன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய ஆயுதங்களின் புதிர், வெடிக்கத் தவறும்குண்டுகள், அதிநவீன உபகரங்களைப் பெறுவதற்காக அந்நிய நாடுகளிடம் கொட்டியழுத கோடிகள் என ராணுவ வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் கவலை அளிக் கக்கூடியதாக உள்ளது. எவராலும் முறிய டிக்க முடியாத திறன் படைத்த நம் பாதுகாப்புத் துறையிலா இந்நிலை? என்ற அதிர்ச்சி அனைத்து தரப்பிலும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று இந்த அதிரவைக்கும் உண்மையை அம்பலப்படுத்தி உள்ளது.


இந்திய விமானப் படையில் இடம் பெற்றுள்ள பல ஏவுகணைகள், சக்திமிகுந்த குண்டுகள் அனைத்தும் சரியான இலக்கை நோக்கிச் சென்று அழிக்கும் திறன் உடையவை அல்ல. குறிப்பாக இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஹார்பி ஏவுகணை, இலக்குகளைக் குறிவைப்பதில் சொதப்பும் திறனுடையது. ஆனால் இந்த ஏவுகணைக்கான ஆன செலவு 750 கோடி ரூபாய்.


பாப்பிபா செண்ட் என்ற ஏவுகணை யின் விலை 350 கோடி ரூபாய்கள். இது தரைப் பகுதியிலிருந்து விண்ணை நோக்கிப் பாய்ந்து எதிரியின் இலக்கை அழிக்க வேண்டும். ஆனால் இந்த ஏவுகணை ஆரம்பக்கட்ட சோதனைக்கு கூட உட்படுத்தப்படவில்லை என்பது வேதனை. இதன் இறக்கைகள் சரியான முறையில் வடிவமைக்கப்பட வில்லையாம்.


போர்க் கப்பலுக்கு எதிராக ஏவப்பட்டு இலக்கைத் தாக்க வேண்டிய கடல் கழுகு என்ற ஏவுகணை 120 கோடி ரூபாய் மதிப் புடையது. அது நெடுங்காலம் செயல் படக் கூடியதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆன்டி ரேடியேஷன் ஏவுகணைகள் பல சரியான உதிரி பாகங்கள் இல்லா மையால் குறட்டை விட்டுத் தூங்குகின்றன. இவை அனைத் தும் ரஷ்ய தொழில்நுட்பத்தின் கைங்கர்யம்.


சிட்டா ஃபால் என்ற கொத்து குண்டுகள் 450 கிலோ மீட்டர் துரித வேகத்தில் செல்ல வேண்டும். அவையும் முழுமையாக பயன் படும் நிலையில் இல்லை என்றும், அதன் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


இந்தியக் கப்பல் படையின் கடல் கழுகின் திறன் குறைந்த நிலை என்பது சிறிய பிரச்சினைதான், அவை விரைவில் சரிசெய்யப்படும் என இந்தியக் கப்பற் படை தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்தார்.
உலகின் அநேக நாடுகள் ஆயுத தயாரிப்பில் இறங்கியிருக்கும் நிலையில், நாம் பிற ஏஜென்சிகளை நம்பியதன் விளைவு இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகி இருக்கக்கூடும் என்று தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்தார்



மோதி மிதித்துவிடு! முகத்தில் உமிழ்ந்துவிடு!!-யூசுப் இஸ்லாம்


இந்தியப் பிரமுகர்கள் அமெரிக் கர்களால் அவமானப்படுத்தப்பட்டு வருவது சீசனாகவும், ஃபேஷனாகவும் மாறிவரும் நிலையில், தன்னை அவ மானப் படுத்தியவர்களை சட்டரீதியாக சந்தித்து தண்டனை வாங்கிக் கொடுத்த ஒரு பெருமகனைக் குறித்து இங்கு குறிப்பிடுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.

ஒரு காலத்தில் கேட் ஸ்டீவன்ஸ் என அழைக்கப்பட்டு பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட யூசுப் இஸ்லாம் குறித்து பிரிட்டனின் சன் செய்தி ஏடு கடுமையான களங்கத்தை சுமத்தியது.

யூசுப் இஸ்லாத்திற்கு தீவிரவாதத் தொடர்பு உண்டு என சிறிதும் பொறுப் பற்ற முறையில் அந்தப் பத்திரிகை எழுதியதை எதிர்த்து சட்ட யுத்தத் தினை துவங்கினார் யூசுப் இஸ்லாம். ஆம், சன் பத்திரிகையின் மீது வழக்கு தொடர்ந்தார். பல மாதங்கள் கழித்து யூசுப் இஸ்லாம் மீது களங்கம் சுமத்தி யதற்காக சன் பத்திரிகைக்கு கடுமை யான கண்டனம் தெரிவிக்கப்பட்ட தோடு, மன உளைச்சலுக்கு உள்ளான யூசுப் இஸ்லாமுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என நீதி மன்றம் உத்தரவிட்டது.

யூசுப் இஸ்லாம் வெற்றி வீரராக உலாவந்தார். இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த தொகையை சுனாமியால் சூறையாடப்பட்ட இந்தோனேஷியா வின் அஷே பகுதி மக்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

தனது தன்மானத்திற்கு களங்கம் ஏற்படுத்திய சக்திகளை மன்னிப்புக் கேட்க வைத்தார். ஆனால் நம் பிர பலங்கள் வீராவேசமாக செய்தியாளர் களிடம் பேசுவதோடு கப்சிப் ஆகிவிடு கிறார்கள்.

தரம் குறைந்த செயலைச் செய்தவர் களுக்கு தகுந்த தண்டனை அமெரிக்கா விலும் வழங்கப்பட வேண்டும். இந்தியாவிலும் இச்செயலுக்கான பதிலடி கொடுக்கப்பட வேண்டும். அமெரிக்கர்களை பிடித்தாட்டும் இஸ்லாம்ஃபோபியா குறித்து திரையு லகப் புள்ளிகள்தான் வாய்திறந்தார் களே தவிர, வேறு யாரும் திறக்க வில்லை. ஷாருக் கான், தான் ஒரு முஸ்லிம் என்பதால்தான் அவமானப் படுத்தப்பட்டேன் என்று கூறியதை (வெளிநாட்டு ஊடகங்களைத் தவிர) இந்தியப் பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை. இதுபோன்ற கண்டுகொள்ளா நிலைக்கு விடை கொடுத்தால் மட்டுமே அடுத்தடுத்த அவமானங்கள் அந்த அவமானச் சின்னங்களால் நேராமல் இருக்கும்

உலகின் அவமானச் சின்னம் -அபூசாலிஹ்

உலகின் அவமானச் சின்னம்

-அபூசாலிஹ்
அமெரிக்க அதிகார வர்க்கத்தினரால் இந்தியப் பிரபலங்கள் அவமதிக்கப் படுவது வாடிக்கையாகி வருகிறது.

தங்கள் நாட்டில் நுழைவதற்கு முன்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் என அமெரிக்க அதிகார வர்க்கம் மனிதர் களின் தகுதி அறியாது தன்மானத்திற்கு இழுக்கு நேரும் வகையில் நடந்துகொள் வது வேதனைக்குரிய ஒன்றாகும்.

இந்தியாவின் பிரபலங்கள் அவமதிக் கப்பட்டுவரும் தொடர் நிகழ்வில் இப்போது இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திர மான ஷாருக்கான அவமானப்பட்டிருக் கிறார்.

நியூ ஜெர்சியில் உள்ள நியார்க் விமான நிலையத்தில் (நியூயார்க் அல்ல) அமெரிக் கக் குடியுரிமை அதிகாரிகளால் இரண்டு மணி நேரம் சிறை பிடிக்கப் பட்டிருக் கிறார்.

இந்த நிகழ்வு இந்திய அரசியல் தலைவர்களாலும், மும்பை பட உலகத் தினராலும் கடுமையான கண்டனத்திற்கு இலக்கானது. இந்திய அரசு, தலைநகர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத் திடம் விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை தரவேண்டும் என்று கேட்டுக் கொண்ட தோடு தனது சீறலையும் வெளிப்படுத் தியுள்ளது.

ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானம் குறித்து தான் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்பதாக டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதர் திமோதி ரிவோமர் தெரிவித்தார். ஷாருக்கான உலகப் புகழ்பெற்ற கலைஞர், அவரை வரவேற்க அமெரிக்கா எப்போதும் தயாராக இருக்கிறது என்றார். முன்னதாக, தான் சிறை வைக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு மனம் வெதும்பிய ஷாருக்கான், தான் இனி அமெரிக்காவில் கால்வைக்கப் போவதில்லை என தெரிவித்ததற்கு தாஜா செய்யும் விதமாக அமெரிக்கத் தூதர் இவ்வாறு வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 63வது விடுதலை நாள் தொடர்பான விழாவுக்காக குறிப்பிட்ட நடிகர் அமெரிக்காவுக்குச் சென்றார். அவரது சுதந்திரத்திற்கு இடையூறு செய்யும் விதமாகவும், உரிமைக்கு ஊறு செய்யும் விதமாகவும் அவர் மீது அவமானச் சேறு வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. அவமானத் தில் சுருண்டுவிட்ட அந்த திரையுலகப் பிரபலத்தை அவமானத்திலிருந்து மீட்டு இரண்டு மணி நேர கேள்விக்கணை டார்ச்சரிலிருந்து மீட்டவர் ராஜீவ் சுக்லா என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பி னர். அவர்தான் அமெரிக்க அதிகாரி களிடமும், இந்திய தூதரகத்திடமும் பேசி, கிட்டத்தட்ட விடுதலையை(!) வாங்கிக் கொடுத்தவர் என முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நடிகர் பெயரின் பின்பகுதியான 'கான்' என்பதுதான் அமெரிக்க குடியுரிமைத் துறை கம்ப்யூட்டரின் அலறலுக்கு காரண மாக அமைந்துள்ளது. 'கான்' என்ற வாசகம் சந்தேகத்துக்குரிய ஒரு சொல்லாகக் குறிப்பிட்டு அபாய எச்சரிக்கை ஒலியை எழுப்பியிருக்கிறது.

ஏதோ ஒரு நடிகரைச் சுற்றி நிகழ்ந்த ஒரு செய்தியில் நாமும் ஈடுபாடு காட்ட வேண்டிய அவசியம் உடனடியாக வந்தது.

கடும் பதட்ட சூழ்நிலைக்குப் பின் கசப்பான உணர்வுகளுக்குப் பின் விடுவிக்கப் பட்ட ஷாருக்கான், ''எனது அமெரிக்க வருகைப் பற்றி கடுமையான கேள்வி களால் துளைத்தெடுக்கப்பட்டேன்'' என்றார்.

''என்னுடைய லக்கேஜ்கள் அணுஅணு வாக சோதனையிடப்பட்டன. நான் சமீபத்தில் கூட அமெரிக்காவுக்கு வந்திருக் கிறேன். என்னுடைய பெயர் கான். தெற்காசிய சமூகம் என்ற அமைப்பு இந்திய விடுதலை நாள் தொடர்பாக எனக்கு அழைப்பு விடுத்திருந்ததால் இங்கு வந்திருக்கிறேன். இங்கு எனக்கு பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்திருக்கும் நண்பர் களைத் தொடர்பு கொள்ள அனுமதி தாருங்கள் என்று கேட்டதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது'' என்று கூறி கான், அடுத் துக் கூறிய வார்த்தைகள் அணுகுண்டு ரகத்தைச் சார்ந்தவை.

''நான் குறிவைக்கப்பட்டேன். காரணம் நான் ஒரு முஸ்லிம் என்பதும், எனது துணைப் பெயர் 'கான்' என்பதும்தான்'' என கோபக் குமுறலுடன் செய்தியாளர்களிடம் பேசி முடித்திருக்கிறார். அதோடு விட்டாரா? ''எனது பாதுகாப்பாளருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் அவரது பெயரின் கடைசியிலும் 'கான்' உள்ளது'' என்றார்.

இவ்வாறு கூறிய ஷாருக்கான், ''எனது பாதுகாப்பாளரை என்னோடு வர அனுமதி யுங்கள். நான் எங்கள் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக செல்கிறேன்'' என கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

இதுகுறித்து மும்பைப் படவுலகின் முன்னணி தயாரிப்பாளரும் இயக்குநரு மான கரன்ஜோஹர் கூறும்போது, ''எனது உயிர் நண்பர் கானுக்கு நேர்ந்தது அதிர்ச் சியையும் அயர்ச்சியையும் ஏற்படுத் தியுள்ளது. ஷாருக்கானை நடத்திய விதம் கொடூரமானது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் ஷாருக் ஒரு முஸ்லிம் என்பதால் தான்'' என்று தனது உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளது.

இதுபோன்ற செயல்கள் நிறவெறி நெருப்புக்கு பெட்ரோல் ஊற்றியதைப் போலாகும் என பாலிவுட் கலைஞர்கள் எச்சரித்துள்ளனர். செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா போன்ற நாடுகளை இஸ்லாம் ஃபோபியா என்ற நோய் பிடித்தாட்டு கிறது. முஸ்லிம்களை வேறுபடுத்திப் பார்க்கும் இந்த செயலை நாம் அனுமதிக் கக் கூடாது என பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான மகேஷ்பட் கூறுகிறார்.

ஷாருக் அவமானப்படுத்தப்பட்டது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதது, சகித்துக்கொள்ள முடியாதது என இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச் சர் அம்பிகா சோனி குறிப்பிட்டிருக்கிறார்.

திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவர், கவுரி என்ற பிற சமய சகோதரியை திருமணம் செய்துகொண்டவர், முஸ்லிம் களின் பிரச்சினைகளைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர் என பல்வேறு சிறப்புகளுக்கு(!) உரிய ஷாருக் கானுக்கு அவர் முஸ்லிம் என்பதாலேயே அவமானம் நேர்ந்துள்ளது விநோத மாகவே உள்ளது. இவர்கள் என்னதான் 'எம்மதமும் சம்மதம்' என நீட்டி முழக்கி னாலும், மேற்கத்திய கலாச்சாரத்துக்கு தாசானுதாசர்களாக காட்டிக் கொண்டாலும் இவர்கள் சார்ந்த சமயம், இவர்களது இயற் பெயர் ஆதிக்க சக்திகளுக்கு அச்சுறுத்தும் ஒன்றாகவே உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் முஹம்மது குட்டி என்ற மம்மூட்டி, அமெரிக்க மண்ணில் அவமானப்படுத்தப் பட்டார். அவர் அவமானப்பட்டதற்கு முக்கியக் காரணம் அவரது பெயரில் உள்ள இஸ்மாயில் முஹம்மது குட்டி என்பதுதான் முக்கியக் காரணம் என்பது அப்போதே சமூகநல ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

சமீபத்தில் இந்திய எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக விளங்கிய வரும் இந்திய ஏவுகணை இயலின் வித்தகரும் இந்திய அணு விஞ்ஞானத் தின் தந்தையாக போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் இந்திய மண்ணிலேயே அமெரிக்க அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டார். அவரது காலணி)று) களையும், காலுறைகளையும் கழற்றி சோதனை செய்யப்பட்டது. அப்போதும் கண்டனங் கள் எழுந்தன. ஆனால் அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் என்ற அவரது பெயர்தான் அவரை சோதனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளி விட்டது என்பதை யாரும் அப்போது சுட்டிக் காட்டவில்லை.

ஆச்சரியப்படும் விதமாக ஷாருக் விஷயத்தில் விம்மிப்புடைத்து எரிமலை யாக இஸ்லாம்ஃபோபியாவில் நடுநடுங்கும் அமெரிக்கத்தனம் பற்றிய குமுறல் வெளிப்பட்டிருக்கிறது.

ஒபாமாக்கள் என்னதான் இஸ்லாமிய உலகில் சென்று 'அஸ்ஸலாமு அலைக் கும்' என்று கூறி தன் நாட்டின் தவறு களுக்காக தன்னிலை விளக்கம் அளித் தாலும், ஒவ்வொரு மில்லி மீட்டரி லும் பரவி இருக்கும் இனவெறி, மதவெறி, நிறவெறி துவேஷங்களை அடியோடு அழிக்க சூளுரைக்க வேண்டும்.

இது ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்கா அல்ல என்பதை நிலைநாட்ட ஒபாமா மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டிருக் கிறார். இருப்பினும் அடிமட் டத்தில் உள்ள சில்லறைகள், பிற்போக்குத் தனத்தின் மொத்த உருவமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. தனது கடந்தகால தவறு களிலிருந்து பாடம் கற்காத அமெரிக்கா, உலகின் அவமானச் சின்னம் என அழைக்கப்படும் நேரம் விரைவில் வரக்கூடும்.

கிழிந்தது சீனாவின் முகமூடி தொடரும் அதிர்ச்சித் தகவல்கள்! -ஹபீபா பாலன்








கிழிந்தது சீனாவின் முகமூடி தொடரும் அதிர்ச்சித் தகவல்கள்!


-ஹபீபா பாலன்

சீனா சமதர்மத்தின் தாயகம் என்றும், கம்யூனிசத்தின் தொட்டில் என்றும், மதச்சார்பற்ற தத்துவத்தின் மகோன்னத பூமி என்றும் சிலாகித்துக் கொண்டு திரிந்தவர்கள் அனைவரும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை அவர்களுக்கு வந்திருக்கிறது.

சீனா பல பத்தாண்டுகளுக்கு முன்பு தலைநகர் பெய்ஜிங்கில் உரிமைகளுக்காக முழக்கமிட்ட ஏராளமான மாணவர்களை அரச வன்முறையின் மூலம் கொடூரமாக நசுக்கியது. ஏராளமான மாணவர்களின் கதி என்னவாயிற்று என்பதே இன்னும் தெரியாத நிலையில், மாணவர்களின் உற்றோரும் பெற்றோரும் கதறும் நிலை இன்றுவரை நீடிக்கிறது.

திபெத் மக்களின் உரிமைகளை நசுக்கி சீனா தன்னை ஒரு வெகுஜன விரோத சக்தி என்பதைத் தொடர்ந்து நிலை நாட்டி வந்தது.

இவற்றுக்கும் மேலாக, 60 ஆண்டு காலத்திற்கு முன்பு சுதந்திர நாடாகத் திகழ்ந்து முழுவதும் முஸ்லிம்களையே பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு துர்க்மினிஸ்தானைக் கைப்பற்றி அடிமைப் படுத்தி வந்தது. முஸ்லிம்களின் பாரம் பரியப் பெருமை மிகுந்த அப்பகுதிக்கு 'ஜின்ஜியாங்' என்று பெயரிட்டு முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தையும் அழித்தது.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு விவசாயத்தில் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்த சீனா, கனிம வளங்களிலும், அணு சக்தியிலும், இயற்கை வளங்களி லும் சிறப்புடன் விளங்குகிறது. பெட்ரோலியம் லி இயற்கை எரிவாயு வளங்களிலும் சீனா முன்னிலையில் இருப்பதற்கும், செல்வ வளம் கொழிப்பதற்கும் ஜின்ஜியாங் மாகாணம் என அழைக்கப்படும் கிழக்கு துர்க்மினிஸ்தான் பகுதியே முக்கியக் காரணம் என்பதும் வரலாறாகிவிட்டது.

வெறும் பூச்சி பல்லிகளை உணவாகக் கொண்டு வாழ்ந்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களாக வாழ்ந்த சீனர்களின் நிலை உலகம் மறக்க முடியாத உண்மையாக கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறி, கிழக்கு துர்க்மினிஸ் தான் இணைந்த பிறகு வளம் கொழிக்க ஆரம்பித்ததன் நன்றியை மறந்த சீன அரசின் கொடுஞ்செயல் சமீபகால சரித்திரமாகும்.

ஹான் இன மக்களை அதிக அளவில் குடியமர்த்தி, ஜின்ஜியாங் என்ற கிழக்கு துர்க்மினிஸ்தான் மக்களின் உரிமைகளை நசுக்கிய சீனாவின் இழிசெயல் மேலும் தொடர்வதோடு, தேவையற்ற செயல்களி லும் சீனா தனது மூக்கினை நுழைத்து வருகிறது.

அத்துடன், நெருப்போடு விளை யாடும் விபரீத விளையாட்டினை சீனா தொடங்கியுள்ளது. இந்தியாவின் இறை யாண்மைக்கும், ஒற்றுமைக்கும் சவால் விடுக்கும் ஓர் அடாத செயலை சீனா செய்துள்ளது. அது, ஒட்டுமொத்த இந்தியர் களின் மீது தொடுக்கப்படும் போராகவே நாம் கருதலாம்.

சீன அரசின் அதிகாரப்பூர்வ வலை தளத்தில் தனது விஷம வேலையைத் தொடங்கியுள்ளது. இந்தியாவுடனான உறவு எவ்வாறு சீரழிந்தாலும் கவலை இல்லை என்ற எண்ணத்தில் அந்த சீன அரசு வலைதளம் விஷமத்தனமாகக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா லி பல்வேறு மாநிலங்களாக சிதறடிக் கப்பட வேண்டும், 20 நாடுகளாக துண் டாடப்பட வேண்டும், துண்டாடப்பட்ட பகுதிகள் தனி நாடுகளாக்கப்பட வேண் டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், நாகலாந்து, தமிழ்நாடு, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் தனி நாடுகளாக சிதறடிக்கப்பட வேண்டும் என்று தனது வக்கிர ஆசையை வலை தளம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது சீனா. அதற்கு இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் மறைமுகமாக உதவ வேண்டும் என்று படுபயங்கரமான, முட்டாள்தன மான, கீழ்த்தரமான தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறது சீனா.

அண்டை நாடு, உடைந்து சிதற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத் தியதன் மூலம் சீனா உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இந்தியாவைக் குறித்து தனது இழிகருத் தைத் தெரிவித்த சீனா அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அரசியல் முக்கியத் துவம் மிகுந்த இலங்கையில் குழப்பத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.

இலங்கை, இனவெறிப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் திறந்தவெளி அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு அவதியுறு கின்றனர். அப்பாவி மக்களின் அவல நிலை தீர்க்க நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் எதிரொலித்து நிற்கும் நிலையில், சீனாவின் செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல் உள்ளது.

சீனா, மதவெறியை ஊட்டும் பௌத்த மடாலயங்களுக்கு நிதி உதவியை வாரி வழங்கி வருகிறது. 691 பௌத்த மத பள்ளிக் கூடங்களுக்கு 10 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது. இலங்கையின் முக்கிய பௌத்த மடாலங்களும் ராஜ பக்ஷே போன்ற வர்களை வார்த் தெடுத்த கேந்திரங் களாக விளங்கும் மல்வெத்தை, அஸ்கிரியா, அமர புரா மற்றும் ரமயனா என்ற நான்கு கேந்தி ரங்களிலும் ஏராள மான பௌத்த மத குருமார்களை சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இலங்கைக்கு ஆயுத உதவிகளையும் ஏராள மாக வழங்கிவரும் சீனா, மதரீதியாகவும் உதவி வரும் விஷ யம் வெளியானதால் உலக அளவில் சீனா விற்கு வக்காலத்து வாங்கி உலாவந்த காம்ரேடுகள் கடுப்பில் ஆழ்ந்துள்ள னர். செஞ்சீனம், ஆரஞ்சு சீனம் என அடை மொழியிட்ட அவர்கள், மக்கள் சீனம், மண்ணாங்கட்டி சீனம் என நீட்டி முழக்கிய இவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இது போதாதென்று, இலங்கையில் ஹம்பன்டோட்டாவில் ஒரு மெகா துறை முகம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சி யில் சீன அரசு இறங்கியுள்ளது. தலைநகர் கொழும்பிற்கு அருகே சீன முதலீட்டாளர் களுக்கு என்றே சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்று விரைவில் திறக்கப்பட இருக் கிறதாம். சீனாவின் இனவெறி ஜின்ஜியாங் விவகாரத்தில் அம்பலமா கியது. அந்நாட்டின் மதவெறி இலங்கை விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது. சீனா வின் விஷமத் தனம் வலைதளத்தில் இந்தியாவை சீண்டும் விதமாக தொடங்கியிருக்கிறது. மொத்தத்தில் சீன தேசத்தின் முகமூடி சீன பெருஞ்சுவர் நீளத்திற்கு கிழிந்து தொங்குகிறது.

Tuesday, August 4, 2009

Saturday, July 18, 2009

Thursday, July 16, 2009

Wednesday, June 10, 2009

கேரள முஸ்லிம்களின் செல்வாக்கு சரிகிறதா ?











கேரள முஸ்லிம்களின் செல்வாக்கு சரிகிறதா?
கேரளாவில் முஸ்லிம்களின் அரசியல் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக சமுதாய ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்து வதாகக் கூறிக்கொள்ளும் முஸ்லிம் லீக் என்ற கட்சியும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கேரளாவில் முடியாமல் தவிக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வடகரா தொகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம்கள் இருந்தும் அங்கு எங்குமே முஸ்லிம் வேட்பாளர்கள் காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்படவில்லை. கோழிக்கோட்டில் எம்.கே.ராகவன் வெறும் 838 வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரிகளின் முஸ்லிம் வேட்பாளரை தோற்கடித்தார். நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கால் தான் வெற்றி பெற்றேன் என ராகவன் நன்றி தெரிவித்தார்.கோழிக்கோடு, வடகரா, கண்ணூர் போன்ற தொகுதிகளில் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள் பெற்ற வெற்றிகளைக் குறித்து பெரிதாக கவலைப்படாத சமுதாய ஆர்வலர்கள் கூட எர்ணாக்குளம் நாடாளு மன்றத் தொகுதிகளின் முடிவு குறித்து ஆதங்கத்துடன் பேசிக் கொள்கிறார்கள். எர்ணாகுளத்தில் காங்கிரஸ் வேட்பாளரா கப் போட்டியிட்ட கே.வி.தாமஸ், இஸ்ரேலிய தொடர்புடையவராக கடுமையாக குற்றம்சாட்டப்பட்டவர். அதோடு சமூக நல்லிணக்கத்துக்கு விரோதமான சர்ச்சைக் குரிய தஸ்லிமா நஸ்ரீனின் நண்பர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்பவர். அவரை ஆதரிக்க வேண் டாம் என முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு களும் எதிர்த்தன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது முதல், இரண் டாம், மூன்றாம் சுற்றுக்களில் பின்தங்கிய கே.வி.தாமஸ், தலை தப்பித்தால் போதும் என 11,790 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரைக் காப்பாற்றிய வாக்குகள் எவை தெரியுமா?
மட்டஞ்சேரி என்ற பகுதியின் வாக்கு கள் தாமஸின் வெற்றிக்கு உறுதி கூட்டியது. மட்டஞ்சேரி பகுதி, முஸ்லிம் லீக்கின் கோட்டை போன்ற பகுதியாகும். தனது வெற்றிக்கு முஸ்லிம் லீக் தான் காரணம் என கே.வி.தாமஸ் கூறியிருப்பது நல்ல கூத்து.பொதுவாக கேரள முஸ்லிம்களில் கணிசமானவர்கள் முஸ்லிம் லீக்கி மீது கடந்த 60 வருடங்களாக பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். முஸ்லிம் லீகும் காங்கிரசும் ஏராளமான தேர்தல்களில் உறவு வைத்திருந்தாலும், ஏ.கே.அந்தோணி, உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதாலா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்ட போதும் முஸ்லிம் லீகர்களால் கூட்டணியை விட்டு வெளி யில் வரமுடியவில்லை. ஆனால் கேரள முஸ்லிம்கள் எப்போதும் கேபினட் அமைச்சர்களாக முடிவதில்லை. 2004லும், தற்போதும் ஈ. அஹ்மது, குட்டி அமைச் சராக தொடர்கிறார். ஆனால் கிறித்தவர் களும் நாயர்களும் முக்கியப் பதவிகளை அலங்கரித்தனர்.
கேரள மாநிலத்தில் முஸ்லிம் நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டால் வெறும் மூன்று பேர் மட்டுமே எம்.பி.யாகி உள்ளனர். ஆனால் கிறித்தவ நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக் கையோ ஆறு. நாயர் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களின் ஏழு பேர். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் கேரளாவில் 27 சதவீதம் முஸ்லிம்களும், நாயர்கள் 12 சதவீதமும், கிறித்தவர்கள் 19 சதவீதமும் உள்ளனர் என்பது விநோதமான விந்தையாகும்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மலபாரில் 50 ஆயிரம் மாணவர் களுக்கு +2 படிப்புக்கு பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை. தெற்கு கேரளாவில் ஏராளமான பள்ளிக்கூடங்களில் இடங் கள் காலியாக உள்ளன. இந்த அழகில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கல்வித்துறை முஸ்லிம் லீக் வசமே ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் மலபாரில் மட்டும் மாணவர் களுக்கு போதுமான சீட் கிடைக்கவில்லை என்ற அவல நிலை.
மலபார் பகுதியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மட்டுமே உள்ளது. தென் கேரளாவில் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் வடகேரளா வில் ஆறு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு மருத்துவக் கல்லூரிதான். தெற்கில் இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளன.
கணிசமாக வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் முதல்வராக வரமுடியாத நிலையே உள்ளது. இரண்டு மாதங்கள் மட்டும் முஸ்லிம் லீக் தலைவர் மறைந்த முகம்மது கோயா முதல்வராகப் பதவி வகித்தார். ஆனால் சிறுபான்மை சமூகங்களான ஈழவர்கள், நாயர்கள் மற்றும் கிறித்தவர்கள் பல அமைச்சரவைகளில் முதல்வராகப் பதவி வகித்திருக்கிறார்கள்.
ஓணம் என்றால் 10 நாள் விடுமுறை, கிறிஸ்துமஸ் என்றால் ஒரு வாரம் விடு முறை. ஆனால் பெருநாள் என்றால் ஒரு நாள் விடுமுறைதான்.
முஸ்லிம்களின் குறைவான பிரதி நிதித்துவம் குறித்தும், முஸ்லிம் லீக்கின் தூங்கி மூஞ்சித்தன்மை குறித்தும் கவலை கொண்ட கேரள முஸ்லிம்கள் விழிப் படையத் தொடங்கி விட்டனர் என்பதே மலையாளக் கரையோரத்திலிருந்து வரும் செய்தியாகும்

இளம்பெண்கள் கற்பழித்து கொலை பாதுகாப்பு படையினரை எதிர்த்து காச்மிரில் கொந்தளிப்பு







இளம்பெண்கள் கற்பழித்துக் கொலைபாதுகாப்பு படையினரை எதிர்த்து காஷ்மீர் மக்கள் கொந்தளிப்பு!நிலோஃபர் என்ற இளம்பெண் ணும் அவரது கணவர் ஷகீல் அஹமதின் தங்கையான ஆசியாவும் (11ஆம் வகுப்பு படிக்கிறார்) மே 29ஆம் தேதி தங்கள் ஆப்பிள் தோட்டத்தை பார்க்கச் சென்ற னர். சுற்றிப் பார்க்கச் சென்ற அவர்கள் திரும்பவே இல்லை. பீதியில் உறைந்த பெற்றோர்களும், உறவினர்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் நாலாபுறமும் தேடியும் இரண்டு இளம் பெண்களையும் கண்டுபிடிக்க முடிய வில்லை. மறுநாள் காலை இருவரின் உயிரற்ற உடல்களும் நல்லாரமிபாரா கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சோஃபியான் பகுதியே பரபரப்படைந்தது.
இரண்டு இளம் பெண்களின் உயிரற்ற உடல்களும் கிடந்த பகுதிக்கு வெகு அருகில்தான் மத்திய ரிசர்வ் படையின் முகாம் இருந்தது.
உடல்கள் கிடந்த நிலையைப் பார்த்த தும் இருவரும் பா­யல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். குறிப்பாக இரண்டு இளம்பெண்களும் தங்களது பழத்தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் மத்திய ரிசர்வ் படை முகாமில் இருந்த சில கறுப்பு ஆடுகள் கடத்தி கற்பழித்துக் கொலை செய்தனரா என ஐயம் எழுப்பிய சோஃபியான் பகுதி மக்கள் பெரும் போராட்டத் தில் குதித்தனர்.
மாநில அரசுக்கு எதிராகவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு எதிராகவும் முழக்கங்களை சோஃபியான் பகுதி மக்கள் எழுப்பினர். வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப் பட்ட இரண்டு பெண்களின் உடல்களை யும் சோஃபியான் மாவட்ட மருத்துவ மனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை தாமதமானதால் மக்கள் மேலும் ஆத்திர மடைந்தனர். மருத்துவமனைப் பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காயின. உள்ளூர் மருத்துவர்கள் வேண்டாம், வேறு மாவட்டத்தி­ருந்து மருத்துவர்களை வரவழைத்து உடல்களை ஆய்வு செய்ய வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக் கையை ஏற்று புல்வாமா மாவட்டத்தி­ ருந்து சிறப்பு மருத்துவர் படை அனுப்பப் பட்டது. இறுதியில், இளம்பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது மாவட்ட டாக்டர்கள் பிரிவு.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வெடித்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்பு படை முயன்றது ப­க்கவில்லை. அவர்களது போராட்டம் தொடர்ந்தது.
''காஷ்மீரில் வாழும் பெண்களின் கற்புக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லை, இதை இந்த நாடு எவ்வாறு இன்னும் சகித்துக் கொண்டிருக்கிறது'' என காஷ்மீர் மாநில முக்கியப் பிரமுகரும், ஹுரியத் கமிட்டியின் தலைவருமான மீர் வாய்ஸ் உமர் பாரூக் தெரிவித்தார்.
மக்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ''எங்கள் அரசு வெளிப் படையான அரசு. சோஃபியான் பகுதி கற்பழிப்புக் கொலைகள் உள்ளிட்ட இதற்கு முன் நடைபெற்ற வன்கொடுமை களுக்கான முக்கியக் குற்றவாளிகளை யும் விரைவில் கொண்டு வந்து நிறுத்துவோம். சோஃபியான் கற்பழிப்புக் கொலைகாரர்களை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்து வோம்'' என உமர் அப்துல்லா தலைமை யிலான மாநில அரசு அறிவித்துள்ளது

Saturday, June 6, 2009

புதிய அமைச்சரவை பட்டியல்: சமூக நீதிக்கு பின்னடைவா?




புதிய அமைச்சரவை பட்டியல்: சமூக நீதிக்கு பின்னடைவா?காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, சமூகநீதி தத்துவத்திற்கு பின்னடைவைத் தரும் வகையில் அமைச்சரவைப் பட்டியல் அறிவிக் கப்பட்டுள்ளதை சமூகவியலாளர்கள் கவலையோடு சுட்டிக் காட்டுகின்றனர்.
கடந்த ஆட்சியில் சமூகநீதிக் கொள்கைக்கு பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்காத நிலையிலும் பெயரளவில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை மக்கள் நலன் நாடும் அம்சமாக விளங்கியது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக சச்சார் கமிட்டியின் அறிக்கைகள் சிறுபான்மை மக்களின் அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
ராஜிந்தர் சச்சாரின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அப்துர் ரஹ்மான் அந்துலேயும், உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டிற்காக அதிகாரத்தில் இருந்துகொண்டே சமூக நீதிக்காகப் போர் தொடுத்த அர்ஜுன்சிங் கும், ரயில்வே துறையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் போவதாக அறிவித்த லாலுவும், பாஸ்வான் போன்ற அரசியல் தலைவர்கள் தற்போது அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெற முடியவில்ல
தற்போதைய நிலையில் சமூக நீதி தத்துவத்தை உரத்து ஒ­க்கும் தலைவர் கள் இடம்பெறவில்லை. இதனை கவனத்தில் கொண்டு சமூகநீதி தத்து வத்தை செயல்படுத்தும் முகமாக ஆக்கப் பூர்வ அறிவிப்புகளை வெளியிட வேண் டும். ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை யின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். செய்வார்களா

திருக்குர்ஆன் பிரதிகளை கரையில் இறக்க அனுமதி மறுப்பு!




திருக்குர்ஆன் பிரதிகளை கரையில் இறக்க அனுமதி மறுப்பு!4000 குர்ஆன் பிரதிகள் நடுக்கடலில் பறிமுதல்!
சர்ஜுன்
குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகத்தில் திருக்குர்ஆன் பிரதிகள் கொண்டு வரப்பட்ட பெட்டகத்தை தரை இறக்க சுங்கத் துறை அனுமதி மறுத்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.
கோரெவல்லி கிராமத்தில் உள்ள டூபன்னி என்ற முஸ்லிம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இந்த குர்ஆன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி, கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ளது.
4000 குர்ஆன் பிரதிகள் மற்றும் பல்வேறு ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்ட 500 குறுந்தகடுகளும் அங்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் விற்பனைக்காக அனுப்பப்பட்டவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குர்ஆன் பிரதிகள் மற்றும் குறுந்தகடுகள் அனைத் தும் டூபன்னி கடற்கரையோர மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காகவே அனுப் பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரியான ஆவணங்கள் இல்லாமை யால் சம்பந்தப்பட்ட பொருட்களை கரை யிறக்க அனுமதிக்க முடியாது என முந்த்ரா துறைமுக சுங்கத்துறையின் உதவி ஆணை யர் அசோக் நகாடே தெரிவித்தார்.
குர்ஆன் பொதுமக்களுக்கு விநியோ கிப்பது ஒன்றும் சட்டவிரோதமான காரியமல்ல. எனவே அதனை கரை யிறக்க அனுமதி மறுத்தது தவறு என பிரபல பத்திரிகையாளர்கள் தெரிவித்த னர். விசாரணைகளின் முடிவில் அதனை உரியவரிடம் ஒப்படைப்பதே சரியானதாக இருக்க முடியும் என சமூகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த 4000 குர்ஆன் பிரதிகளும் காரவல்லியில் உள்ள அப்துல் கய்யூம் கான் என்பவருக்கு அனுப்பப்பட்டுள் ளது. இவர் காரவல்லியில் ஜாமியா தாருல் மஸீஹா என்ற பெயரில் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் ஒன்றை நடத்தி வருகிறார். இது அவரது பாட்டனார் ஹாஜி தலில்கான் என்ப வரால் 1952ல் தொடங்கப்பட்டதாகும்.
அப்துல் கய்யூமின் தந்தையார் ஹைதர் கான் துபையில் பணிபுரிந்து வருகிறார். அவர் இந்த குர்ஆன் பிரதி கள் மற்றும் குறுந்தகடுகளை அனுப்பி யிருக்கிறார். நான் முறையான ஆவணங்களை சமர்ப்பித்திருக் கிறேன். ஒவ்வொரு குர்ஆன் பிரதியை யும் குறுந்தகடையும் சோதித்த பின்னரும் இன்னும் அனுமதி மறுப்பது உரிமை மீறலாகும் என அப்துல் கய்யூம் தெரிவித்தார்.
அப்துல் கய்யூமின் தாருல் மஸீஹா மதரஸா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஜாமியா ஸலஃபியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் வருவதாகும். துபையில் உள்ள குஜராத் வாழ் முஸ்லிம்கள் மன முவந்து தந்த அன்பளிப்புகளால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் பிரதி களை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு என்ன நிர்பந்தம் வந்தது?
இஸ்ரேலுடன் இந்திய அரசு வைத்திருக்கும் கூடா நட்பு தன் வேலையைக் காட்டுகிறதா?

Wednesday, June 3, 2009

என் சுவாசத்தை திருடிய புலிகளுக்கு




என் சுவாசத்தை திருடிய புலிகளுக்கு
(புலிகளால் கொல்லப்பட்ட ஒரு நல்ல ஆத்மாவிட்காக எழுதப்பட்டது )
நண்பனே…
துப்பாக்கி ரவையால்
என் தலையைத் துளைத்த புலித்தோழனே
நான் உன்னை மன்னித்து விடுகின்றேன்

எனது மனைவியும்
எனது செல்வங்களிரண்டும்
எனது தாயும் தகப்பனும்
எனது உறவுகளும்
உன்னைத் திட்டலாம்

எனது சமூகமும்
நான் நேசிக்கும் எனது மக்களும்
எனது சக ஊழியர்களும்
உன்னைத் தூற்றலாம்

ஆனாலும் புலி நண்பனே
நான் உன்னை மன்னித்து விடுகின்றேன்
உண்மையாகவே மன்னித்து விடுகின்றேன்

“அப்பா கொழும்பு போயிருக்கிறார்
வரும் வரை காத்திருக்கிறேன்” என்று
வெள்ளையுடுத்த மனைவியிடம்
என் பிள்ளை சொல்கிறான்

என்னையிழந்து ஏழைகளெல்லாம்
கதறி அழுகிறார்
நான் திரும்பி வர வேண்டுமென்று
விரும்பி நிற்கிறார்

காணமல் போன
எனது விலாசத்தை விசாரித்து கொண்டிருக்கும்
இவர்களை கண்டு
நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன்

ஆகவே புலி நண்பனே
என் தலையில் ரவைகளை பீச்சிய
உன் துப்பாக்கியிடம் கேட்டுச்சொல்

எனது உயிரை ஒரு கணம்
திருப்பி தரலாமா என்று

எனது மரணத்தை கண்டு
நீ புளங்கித்ததாயும்
எனது ரத்தத்தை கண்டு
நீ சப்தித்ததாயும்
இங்கே பேசிக்கொள்கிறார்கள்
ஆனாலும் புலி நண்பனே
நானுன்னை மன்னித்து விடுகின்றேன்
இறப்பு
மனிதனின் பிறப்புரிமையல்லவா
அதனால் நானுன்னை மன்னித்து விடுகின்றேன்

என் அன்பிற்குரிய சோதரனே
என்னை உனக்கு தெரியும்
எனது கண்ணாடியும்
எனது காற்சட்டையும்
எனது சேட்டும் செருப்பும்
எனது சிரிப்பும் விருப்பும்
எனது முகமும் முதிர்வும்
ஈரமுள்ள எனது ஹிருதயமும் கூட
உனக்கு தெரியும்

அஹிம்சையை மட்டுமே
அர்த்தமுள்ளதாக்கி கொண்ட
எனது நட்ப்பும்
எனது நடப்பும் கூட
உனக்கு நன்றாகத் தெரியும்

ஆனாலும்….
உனது ஹிம்சைக்குள்
நான் வம்சிக்கபட்ட காரணம் மட்டும்
எனக்கு தெரியாது
உண்மையாகவே எனக்கு தெரியாது

எந்த நியாயங்களுக்காய்
நீ என்னை காயப்படுத்தினாய்?
என்ன காரணங்களுக்காய்
நீ என்னை வேரறுத்தாய்

சொல்….
உன்னை
உனது தாயை
உனது தகப்பனை
உனது உடன் பிறப்புகளை உறவுகளை
நான் உளம் நோகச்செய்தேனா?

ஈழ தேசத்திற்க்கான
உனது போராட்டத்தை
நான் நாசப்படுத்தினேனா?
உனக்கு சேரவேண்டிய
ஒரு கவளம் உணவு
சில லீற்றர் தண்ணி
ஆடையணி
இவற்றிலெதையேனும்
நான் தட்டி பறித்தேனா?

இல்லை நானுன்னை
மானபங்கம் செய்தேனா?
இல்லையே….
இருந்தாலும் நண்பனே
நானுன்னை மன்னித்து விடுகின்றேன்

எனது தலைக்கு
நீ இலக்கு வைக்கும் போது
எனது ரத்தம்
இந்த மண்ணில் சிந்தியபோது
எனது உடலம்
இந்த நிலத்தில் சாய்ந்தபோது
என்னை வீழ்த்திவிட்ட
கழிப்பில் நீ குதாகலித்த போது
என்ன நினைத்தாய்?
நண்பா
நீ என்னைப்பற்றி என்ன நினைத்தாய்?

ஒரு எதிரியை அழித்ததாய் நினைத்தாயா?
ஒரு திருடனை ஒழித்ததாய் நினைத்தாயா?
என்ன நினைத்தாய்?
எனது உயிரிலும் பெரிய புலி நண்பனே
பிரிய சகோதரனே
நான் உன்னை மன்னித்து விடுகின்றேன்
உண்மையாகவே நான் உன்னை மன்னித்து விடுகிறேன்

நண்பனே
என் ஆத்மாவிற்க்காக
என் வேண்டுதலுக்காக
நீ என்னை தேடி வா
மௌனம் புதைத்த
என் மண்ணறைக்குள்
உன்னை மன்னித்தவனாக
நான் காத்திக்கறேன்

வா
உன்னிடமிருந்தும்
உன் தோழர்களிடமிருந்தும்
வாத்ஸல்யமான மனிதநேயத்தை
நான் எதிர்பார்க்கிறேன்
வா

இது எனது இறுதி பிரார்தனை
தயவு செய்து
என் ஜீவிதத்தை சிதைத்தது போல
என் மேலான வேண்டுதலையையும்
சிதைத்து விடாதே
வருவாய் என்று
என் ஆத்மா சொல்கிறது
நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை
பரிசுத்த நிலையில்
என் மரணத்தின் முடிவிலும்
நான் உன்னை மன்னித்து விட்டேன் வா

இன்றோ அல்லது நாளையோ
காலப்போக்கிலோ
எனது குரல்
உனது செவிப்புலனுக்கு எட்டலாம்
அப்போதவது
என் மரணத்தைப்பற்றி
உனது கையிலுள்ள துப்பாக்கி பற்றி
உன்னை சுற்றியிருப்போர் பற்றி
என்னை எதிர்பார்த்து
எனக்காக ஏங்கும்
என் குழந்தைகளைப்பற்றி
என்ன நினைப்பாய் புலித்தோழனே?

தனிமையில் இரு
நடந்ததை மீட்டிப்பார்
என் உருவத்தை
உன் மனக்கண்முன் கொண்;டு வா
உன் காதை
உன் பார்வையை
என் வீட்டுப்பக்கம் திருப்பு
என் குழந்தைகளின் அழுகை
எனது சுற்றத்தின் சோகம்
இவை உனது மனசாட்சியை தொடவில்லையா?
கண்களை ஈரமாக்கவில்லையா?
இப்போது என்ன நினைக்கிறாய்?
எனது குழந்தைகளுக்கு
என் சொந்தங்களுக்கு
என் சமூகத்திற்க்கு
நீ என்ன செய்ய நினைக்கிறாய்

நண்பனே
நான் உன்னை மன்னித்து விட்டேன்
நீ நேராக வா
எப்போதும்
என் வீட்டுக்கதவுகள் சாத்தப்பட்டிபருப்பதில்லை

அழுது கொண்டிருக்கும்
என் குழந்தைகளை பார்
தலையை தடவு
ஆறதல் கூறு
அது கூட உனக்கு சம்மதமில்லையா?
என்றாலும் நான் உன்னை மன்னித்து விடுகிறேன்
உண்மையாகவே மன்னித்து விடுகிறேன்

என் மண்ணறையைத் தேடி
என் குழந்தைகளைத் தேடி
என் சொந்தங்களைத் தேடி
நீ வராவிட்டாலும் நண்பனே
உனது விழித்திரைகள் மூடிக்கொள்ளும்
ஒவ்வோர் இரவின் கனவிலும்
நான் உன்னைத்தேடி வருவேன்
மனம் விட்டு பேசுவேன்
உன்னை மன்னித்ததாய் கூறுவேன்

தோழமைகளுடன்.. அ.பஞ்சலிங்கம், அரசாங்க அதிபர் -யாழ்ப்பாணம்

Web Counter Code