இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, October 29, 2008

abusalih news about malegaun blast involved sangparivaar

மாலேகான் குண்டுவெடிப்பு: பெண் சாமியார் உட்பட
"சங்' பயங்கரவாதிகள் சிக்கினர்!

ஸப்ரன் ஹபீப்



(பிடிபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்)
மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சங்பரிவார் பயங்கரவாதி களின் சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை சங்பரிவார் சதிகாரர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை செய்து வருகிறது.


செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகான் நகரத்தில் குண்டுவெடித்தது. குஜராத் தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரத்திலும் குண்டு வெடித் தது. மாலேகானில் ஐந்து பேரும், மொடா சாவில் ஒரு சிறுவனும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


ரமலான் மாதத்தில் ஈகைத் திரு நாளுக்கு முந்தைய நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்த சதிச் செயலைக் கண்டித்து முஸ்லிம்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின் போதும் நேர்மையான - நடுநிலையான விசாரணை வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமானதாகவே உள்ளன. செக்கு மாட்டு புத்தியாய் ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே வதைப்பது காவல்துறையினரின் வழக்க மாகவே மாறிவரும் சூழலில் மாலே கானில் செப்டம்பர் 29ம் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலியான வர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் விசாரணையின் வீச்சு முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது. சிமி அமைப்பைச் சேர்ந்த வர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்தி யன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயர் கொண்ட அமைப்புதான் இதன் பின்னணியில் இருந்தது என்றும் உளவுத்துறையும் உளவுத்துறையின் அடிப்பொடிகளான சில ஊடகங்களும் குறிப்பிட்டன.




இதில் நேர்மையான வழக்கு விசா ரணை நடத்தப்பட வேண்டும். சங் பரிவார பயங்கரவாத இயக் கங்களின் சதி பின்னணி யில் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசா ரணை நடத்த வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வரு வது நாடறிந்த ஒன்று.


இந்நிலையில் நாட்டின் நல்லோர்களின் ஐயங்களை ஊர்ஜிதம் செய்வதைப் போன்று மாலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்பு களின் மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.




இந்த குண்டுவெடிப் பின் பின்னணி யில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஹக்ஷஏஞ)-க்கு நெருங்கிய தொடர்புடைய “ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்’’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஐந்து சங்பரிவார் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மகா ராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்தார்.


விசாரணையில் மேலும் பல திடுக்கி டும் தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுவதாக நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார்.


உயிரைக் குடிக்கும் குண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வைத்த பயங்கரவாதி - ஒரு பெண் என்பதும், அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற சேதத்துரோக அமைப்பின் பெண்கள் பிரிவான துர்க்கவாஹினியைச் சேர்ந்த 30 வயதேயான பிரக்யாசிங் என்பதும் அம்பலமாகியுள்ளது.



(பிரக்யா சிங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது)


நாட்டில் நடைபெறும் பெரும்பாலான தீய செயல்களுக்கு முக்கியக் காரண மாக விளங்கும் சங்பரிவார் சதிச் செயல்களை முளையிலே கிள்ளி விடாததின் விளைவு நாடெங்கும் பயங்கரவாதச் செயல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.


நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்றே ஹிந்துத்துவ பாசிச இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பிலும் இந்த சதிகாரர்களின் கைவரிசை பின்னணி யில் இருப்பதால் இதுவரை நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து இருள் சிறைக்குள் தள்ளிய அந்த வஞ்சக வலை அறுத்தெறியப்பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத் தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு சங்பரிவார் இயக்கங்களின் மீது விசாரணையின் போக்கு இம்மியளவு கூட சென்றுவிடக் கூடாது என்பதற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப் படும் போலி விசாரணைகள் மற்றும் தவறான தண்டனைகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.


இதற்குக் காரணமான தீவிரவாதத் தடுப்பு முயற்சிகளில் படுதோல்வி அடைந்த திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்

abusalih news about delhi

என்கவுண்டரில் தப்பினார் அமீர்!

அபூசாலிஹ்




டெல்லி ஜாமியா நகர் கடந்த சில வாரங்களாக பரபரப்புடன் பத்திரிக்கை களில் அடிபட்ட பகுதியாகும். டெல்லி குண்டு வெடிப்புகளில் குற்றவாளிளை கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவிய மத்திய உள்துறை தனது தோல்வியை திசை திருப்ப டெல்லி ஜாமியா நகர் பகுதியில் போலி என் கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்திய தாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


பொதுவாகவே சர்ச்சைக்குரிய என்கவுண்டர்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து அப்போது மட்டுமே பெரிதாக பேசப்பட்டு சில நாட்களில் அடங்கிவிடும் ஆனால் டெல்லி ஜாமியா நகர் பகுதியில் நிகழ்ந்த என்கவுண்டர் போலி என்கவுண்டர் என்றே அப்பகுதி மக்களாலும் நடு நிலை ஊடகங்களாலும். மனித உரிமை ஆர்வலர்களாலும் அழைக்கப்பட்டது.
சரித்திர சிறப்புமிக்க ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் பெருமைக்கு பங்கம் ஏற்படும் வண்ணம் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜி புக்கர், பரிசுபெற்ற சர்வதேச மனித உரிமை ஆர்வலர் அருந்ததிராய், முன்னணி வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி போன்றோர் டெல்லி போலி என்கவுண்டர் பிரச்சினையில் ஜாமியா நகர் பகுதி மக்களின் சார்பாக வாதாடினர்.


போலி என்கவுண்டருக்கு மற்றொரு முயற்சியா?


ஆதிஃப் மற்றும் ஷாஹித் என்ற இரண்டு இளைஞர்களின் மீது பிரயோகிக் கப்பட்ட போலி என்கவுண்டர் விவகாரத் தால் மனம் நொந்து வேதனையில் ஆழ்ந்திருந்த அந்த மக்களுக்கு மேலும் ஒரு விபரீதத்தை எந்த தீய சக்தியாவது நிகழ்த்த திட்டமிட்டால் அவர்களால் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும். பொறுத்தது போதும் - பொங்கியெழு என எழுந்து சாதித்த சம்பவத்தைத்தான் நாம் இனி காணப் போகிறோம்.


நம்பர் பிளேட் இல்லாத மர்மங்கள்




இரவு எட்டு மணி கறுப்பு நிற கார் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட நிலையில் ஷஹீன் பாக் பகுதியில் நுழைகிறது. அந்தக் காரில் நம்பர் பிளேட்டும் இல்லை. ஆனால் அந்தக் காரில் ஓர் இளை ஞனின் அபயக் குரல் மட்டும் கேட்கிறது.


சுதாரிப்படைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு பரிதாபப் படுகொலை நிகழ்ந்துவிடக் கூடாது என எண் ணியோ என்னவோ கூடுதல் எச்சரிக் கையுடன் மக்கள் அந்த மர்ம காரை சூழ்ந்தனர்.


எவனா இருந்தால் எங்களுக்கு என்ன?




உடனடியாக காரை நிறுத்து. நீங்கள் எல்லாம் யார்? யாரை கடத்திக் கொண்டு போகிறீர்கள்? என கேள்விக் கணை களை துளைத்தபடி மக்கள் சூழ்ந்தனர். மக்களின் கெடுபிடியினால் “நாங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நொய்டா பகுதியைச் சேர்ந்த தீவிரவாத தடுப்புப் படைக் காவல்துறையினர்’’ என்று கூறினர். அவர்கள் ஐந்து பேர் இருந்தனர். அங்கு சற்று பதுங்கி இருந்தபடி பயந்துபோய் காட்சியளித்த அந்த இளைஞனின் பெயர் அமீர் என்பதும் தெரிய வந்தது.


சுற்றி வளைத்த கூட்டத்தைக் கண்ட அந்த சீருடை அணியாமல் வந்த காவல் அதிகாரிகளில் நால்வர் தடாலென சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். ஒரு போலிஸ்காரரும் கடத்தப்பட்ட அமீர் என்ற இளைஞரும் மட்டுமே இப்போது ஷஹீனாபாத் மக்களின் வசம்.


அமீரை சுட்டுக்கொன்று விட்டு அவன் பயங்கரமான பயங்கரவாதி எனவே அவனை சுட்டுக் கொன்றோம் என அறிவிப்பதாக இருந்த சதி திட்டம் மாட்டிக் கொண்ட அந்த போலிஸ் காரரின் வாக்கு மூலத்தில் இருந்து வெளிவந்தது. இந்த நிலையில் மக்க ளின் கூட்டம் அந்த கறுப்பு நிற ஹுண் டாய் காரை சூழ்ந்து கொள்ள பதட்டத்தின் கொதிநிலை அதிகரித்துக் கொண்டே இருந்தது.


காரை சோதனைப் போடுப்பா

காரை சோதனைப் போடு, காரை சோதனைப் போடு என மக்களின் ஆத்திரம் வானத்தை முட்டியது. அந்தக் காரை துடுக்கான இளைஞர்கள் பாய்ந்து விழுந்து சோதனையிட்டனர். அதில் பல ஆவணங்கள் சிக்கின. அதில் பான் கார்டுகள், மொபைல் சிக்கின. கம்ப்யூட் டர் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர் களின் ஐடென்டிட்டி கார்டு போல் போலியாகத் தயாரிக்கப்பட்டவை. அந்தக் காரின் உள்ளே நம்பர் பிளேட் கண்டெடுக்கப் பட்டது. னுடு1கூறு 1596 என அதில் காணப்பட்டது. அந்த நம்பர் பிளேட் புதிதாகவும் இதுவரை பயன் படுத்தப்படாததாகவும் இருந்ததைக் கண்டதும் கூடியிருந்த மக்களிடையே ஆத்திரம் அலை பாய்ந்த்து.


சேதப்படுத்தப்பட்ட வாகனம்


கறுப்பு நிற ஹுண்டாய் கார் உடைத்து நொறுக்கப்பட்டது. கார் கண்ணாடிகள் சிதறின. இதற்கிடையில் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஜாமியா நகர் ஷஹீனாபாத் பகுதி மக்களால் சிறை பிடிக்கப்பட்ட உ.பி காவல்துறை அதிகாரியையும் அவரால் கடத்தப்பட்ட அமீரையும் ஜாமியா நகர் காவல் நிலையத்தினரிடம் ஒப்படைக்கு மாறு ஜாமியா நகர் காவல்துறையினர் கெடுபிடி காட்டத் தொடங்கினர். பிரச் சினை மிகப்பெரியது உள்ளூர் மேலதி காரிகள் வரவேண்டும். அவர்களிடம் தான் ஒப்படைப்போம் என பொது மக்களும் பதிலுக்கு கெடுபிடி காட்டினர். விடிய விடிய காவல் நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை மக்கள் திரண்டு காத்திருந்தனர். காவல்துறை உயர் அதிகாரி குருசரண்தாஸ் வந்த வுடன் அவர்கள் இருவரையும் ஜாமியா நகர் மக்கள் ஒப்படைத்தனர். அத்தோடு மக்கள் அமைதி அடையவில்லை. அத்து மீறி ஆள்கடத்தல் கிரிமினல் செயலில் ஈடுபட்ட நொய்டா காவல்துறை அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை உயர் அதிகாரி னு.ஊ.ஞ அஜய் சவுத்ரி `நொய்டா விலிருந்து வந்த ஆள்கடத்தல் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உபி மாநில காவல்துறையினரிடம் தெரிவிக் கப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து ஜாமியா நகர் பகுதி மக்கள் வீடு திரும்பினர்.


திரண்ட மக்கள் கூட்டத்தில் ஸஹாரா உர்தூ நாளேட்டின் ஆசிரியர் அஜீர் பர்னி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பிரமுகர்களும் திரண்டிருந்தனர்.


நொய்டா நொந்து போனோமடா


இதனிடையில் நொய்டா ஆள் கடத் தல் காவல்துறை அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்து இருக்கிறார்.


எங்கள் இளைஞர்களை கடத்தி கண் மூடித்தனமாக கொலை செய்யும் அளவுக்கு சில காவல்துறை அதிகாரிகள் துணிந்த பிறகு நாங்கள் ஒவ்வொரு உள்நோக்கம் கொண்ட காவல்துறை அதிகாரியையும் பத்திரமாக (? ) கவனிப்பது எங்கள் அன்றாட வேலையாக மாறிவிட்டது. எங்கள் இளைஞர்களின் உயிர்கள் எங்க ளுக்கு முக்கியம் அல்லவா? என்கிறார் ஜாமியா நகர் சமூக சேவகர் அமீருல் ஹஸன்
குர்அன் வசனங்களை வைத்து விளையாட்டு!
மன்னிப்புக் கேட்டது சோனி நிறுவனம்!!






உலகின் மிகப்பெரிய வீடியோ விளையாட்டுக்களை தயாரிக்கும் சோனி நிறுவனம், குர்ஆனின் வசனங்களை தனது வீடியோ கேமில் பயன்படுத்தியதற் காக மன்னிப்புக் கேட்டுள்ளது. இத்த கவலை அமெரிக்காவின் சிக்காகோ டைம்ஸ் வெளியிட்டுள்ளது.


முஸ்லிம்களிடம் மனம் வருந்தி மன் னிப்புக் கேட்பதாகவும், லட்சக்கணக்கான தங்களது கணினி மற்றும் வீடியோ கேம் பிரதிகளை திரும்பப் பெறுவதாகவும் சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின் மெண்ட் ஆஃப் அமெரிக்காவின் இயக்குநர் பேட்ரிக் செய்போல்டு அறிவித்திருக்கிறார்.


சோனியின் `லிட்டில் பிக் பிளானெட் கேம்’ எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்க்கெட்டுக்கு வருவதாக இருந்தது. இந்த வீடியோ விளையாட்டில் இடம் பெறும் இசையுடன் கூடிய பாட்டில் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்கள் தேவையே இல்லாமல் (முஸ்லிம்களை சீண்டுவதற்காகவே) இடம்பெற்றதால் சர்ச்சைகள் எழுந்தன.


இன்றைய தேதி வரை சோனியின் பி53 மட்டுமே பிரபலமான வீடியோ விளை யாட்டாக இருந்து வந்தது.


தற்போது அந்த சாதனையை முறியடிப்பதற்காக வெளிவந்த சோனியின் லிட் டில் பிக் பிளானட் முஸ்லிம் களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபிள்ளை விளையாட்டில் குர்ஆன் வசனங்களை சேர்த்தது சிறு பிள்ளை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் விதமாக வீடியோ மார்க்கெட்டுக்கு வரு வது இது முதல்முறையல்ல. ஜப்பான் நிறு வனம் ஒன்றும், அமெரிக்க நிறுவனம் ஒன்றும் இதைப்போன்று மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது

Web Counter Code