இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Sunday, May 27, 2007

hyderabad bomb blast abusalih news in tamil


hyderabad bomb blast abusalih news in tamil

ஹைதராபாத் பயங்கரம்!தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான சதித்திட்டங்கள்...
அபூசாலிஹ்
ஆந்திரத் தலைநகர் ஹைதரா பாத்தில் பழம்பெருமை வாய்ந்த மக்கா மஸ்ஜித் (18லி05லி07) வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 16 பேர் உடல் சிதறி, ரத்த வெள்ளத்தில் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின் றனர்.
முஸ்லிம்களை குறிவைத்து திட்ட மிட்டு தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்வது நாடெங்கும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிவாசல் களின் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியேயும் முஸ்லிம்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.
2006 ஏப்ரலில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் குண்டு வெடித்தது. பலர் காயமடைந்தனர்.
2006 செப்டம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலம் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடித்தது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து பலர் மரணமடைந்தனர்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்காத நிலையில் கைப்பற்றி விட்டதாக ஆந்திர காவல்துறை தலைவர் பாஸித் தெரிவித்தார். குண்டு வெடிப்புகளால் அப்பாவி மக்கள் பலியாகி வருவது மக்க ளிடையே அவநம்பிக் கையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் சமூக பொருளாதார வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் இது நடத்தப்பட்டிருப்பதாகவும் சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மிகப்பெரிய சதிச்செயல்களான டெல்லி ஜும்மா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு ஊழியர்களிடையே ஏற்பட்ட தகராறு தான் காரணம் என காவல்துறை கூறியது. அதில் ஒரு கும்பல் இந்தச் சதிச்செயலை செய்தது என காவல்துறை விரிவுரை எழுதியது.
பள்ளிவாசல் குண்டு வெடிப்பு சிமி இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என மகாராஷ்ட்ர காவல்துறை தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் ஜெய்ஷிலிமுஹம்மத், லஷ்கர்லிஇலிதொய்பா, (முட்டை லாப்பா, கொத்துப் பரோட்டா என்று சொல்லாதது மட்டும் தான் பாக்கி) போன்ற இயக்கங்கள் இன்னும் பல இயக்கங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையே ஈயடிச்சான் காப்பியாக சன் டிவி (சங் டிவி?) உள்ளிட்ட ஊடகங்களும் செய்தி ஏடுகளும் பரபரப்பை ஏற்படுத்தின.அதற்கு காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு கூறும் காரணம் பள்ளிவாசல்களில் குண்டு வெடிப்பு சதி நிகழ்த்துவதின் மூலம் முஸ்லிம்களின் ஆத்திரத்தை ஹிந்துக் களின் மீது திருப்பி கலவரங்களை ஏற்படுத்துவதற்காக நிகழ்ந்த சதி என்று பக்கம் பக்கமாய் காரணம் கூறுகிறார்கள்.
குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு, சவூதியிலிருந்து அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்தன என முதலில் அந்திர மாநில புலனாய்வு அமைப்புகள் அறிவித்தன.
குண்டு வெடிப்பு சதிகாரனுக்கு சவூதி அரேபியாவிலிருந்து கட்டளையிடப் பட்டது என்ற செய்திகள் ஊடகங்களில் மதியம் செய்திகளாய் பரப்பப்பட்டது.அதன்பிறகு இரவு துபாய்யிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகள் பரப்பப்பட்டது.
அதன்பிறகு இரவு துபாய் இலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகளை அதே தொலைக்காட்சி சேனல்கள் வாசித்தன. வெடித்த குண்டு நாட்டு வெடிகுண்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறுகிறார்.
ஆர்.டி.எக்ஸ்லிவகையைச் சேர்ந்ததாக ஆந்திர காவல்துறை கூறுகிறது.வெடித்தது எதுவாக இருந்தாலும் பலியானவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள். தங்களின் உயிர் எதற்காக பறிக்கப் படுகிறது, யாரால் இது நடத்தப்பட்டது, ஏன் இது நமக்கு நிகழ்ந்தது என்பதை அறியாத நிலையிலே ரத்த வெள்ளத்தில் மாண்டு போனார்கள்.
இந்த சதிக்கு சஹீத் பிலால் என்னும் நபர் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் புலனாய்வுத் துறையினரால் வெளியிடப் படுகின்றன.
பர்தா போட்ட பெண், குண்டு வெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன் செல்போனுடன் அலைந்தாக நேரில் பார்த்த ஒரு சாட்சி இருப்பதாக (21லி05லி07) நாளிதழ் ஒன்று குறிப்பிடுகிறது.
ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து காவல்துறை கூறும்போது ஹிந்துலிமுஸ்லிம் மத மோதல்களை ஏற்படுத்துவதற்காக இந்தச் சதிகள் முஸ்லிம் பயங்கரவாதி களால் நிகழ்த்தப்பட்டதாக கூறுகின்றன.
இந்த ஒரே ஒரு புள்ளியைச் சுற்றி 18 ஆம் தேதியிலிருந்து புலனாய்வு சுற்றி சுற்றி வருகின்றது. புலனாய்வுத்துறையின் இந்தப் பிரச்சாரம் குறித்து நடுநிலை ஊடகவியலாளர்களும் சமூக நல ஆர்வலர்களும், முஸ்லிம் உரிமை அமைப்புகளும் பெரும் வியப்பும்லி விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிவாசல்களில் குண்டு வெடித்து விட்டது. வைத்தது ஹிந்துக்கள் தான் என ஆத்திரம் கொண்டு முஸ்லிம்கள் கலவரம் விளைவிப்பார்கள் என மனதிலே திட்டம் போட்டு சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செயல்படுத்தி யிருக்கிறார்கள் என புலனாய்வுத்துறை யினர் கிட்டத்தட்ட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.
இங்கு தான் நடுநிலையாளர்கள் கடந்த கால சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகிறார்கள்.
1992 டிசம்பர் 6 அன்று மனித குலத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கும் வண்ணம் பாபரி மஸ்ஜித் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதை நிகழ்த்தியது சங்லிபரிவார் என்ற ஹிந்துத்துவ வெறியர்கள் தான். ரத்தத்தை கொதிக்கச் செய்யும் இந்த கொடிய செயல் நடந்த போது முஸ்லிம்கள் வேதனையில் துடித்தார்கள். ஆவேசத்தில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் ஹிந்து சகோதரர்களுக்கு ஒரு சிறு தீங்கும் நிகழா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
பாபரி பள்ளிவாசலை தகர்க்க விட்டு வேடிக்கை பார்த்த நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய அரசை எதிர்த்து அவர்களது கோபம் புறப்பட்டதே தவிர சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படவில்லை.ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புகளும் மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டன.
உ.பியின் பாஜக அரசை எதிர்த்துப் கூட போராட்டம் நடத்தப்படவில்லை. காரணம் உ.பி பாஜக அரசு அப்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
மும்பையில் (பம்பாய்) சிவசேனா வினரால் வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்பட்டன. மும்மை முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாயினர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை போன்ற இந்நிகழ்வை எதிர்த்துக் கூட ஆவேசம் கொண்டு அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது எந்த தாக்கு தலையும் தொடுக்காது கண்ணியம் காத்தனர்.
வேதனையின் விளிம்பில் இருந்தபோது கூட ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தபோது கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களை நேசித்தனர். இதில் முஸ்லிம்களை ஆத்திரம் கொள்ள செய்வதற்காக பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங் களால் நடத்தப் பட்டது என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
சமாதான சகவாழ்வை நேசிக்கும் இந்திய முஸ்லிம்களை உசுப்பி விட்டு மதக்கலவரங்களை நடத்தி விடலாம் என்று எந்த தீய சக்திகள் நினைத்தாலும் அது நிறைவேறாது என்பது ஏற்கெனவே (1992ல்) நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இது புரியாமல் எந்த மக்கு தீவிரவாதி இருக்கிறான் என்பது தெரியவில்லை.
புலனாய்வுப் பிரிவினரின் கண்ணோட்டத்தை உடைப்பதைப் போன்றே ஹைதராபாத் பள்ளி வாசல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு ஒரு முஸ்லிம் எந்த ஹிந்துவையும் குதறியதாகவோ, குறைந்த பட்சம் கிள்ளிவிட்டதாக வோக் கூட தகவல்கள் இல்லை. மாலேகான் பள்ளிவாசலில் 50க்கும் மேற்பட்டோர் பலியான குண்டு வெடிப்பிலும் கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது பாயவில்லை. மதக் கலவரங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் புலனாய்வுத்துறையினர் மட்டும் ஒரே 'கதையை' அதே கற்பிதத்தை மீண்டும் மீண்டும் கூறி பதட்டத்தை ஏற்படுத்துவதோடு அப்பாவி முஸ்லிம்களை வளைத் துப் பிடிக்கும் சதி இருக்கக்கூடுமோ என சமூகவியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் இத்தகைய போக்குகளை புலனாய் வுத் துறையினர் கைவிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கை.
புலனாய்வு பல கோணங்களில் இருக்க வேண்டுமேயொழிய ஒரே செக்கு மாட்டுச் சிந்தனையை, முஸ்லிம்களை மட்டுமே குறைகூறி பழிபோடும் போக்கை கைவிட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
பள்ளிவாசல்களில் நடக்கும் குண்டு வெடிப்புகள் தொடர்பாக தீவிரவாத ஹிந்துத்துவ இயக்கம் ஒன்றின் மீது சந்தேகம் எழுப்பப் பட்டது.
மகராஷ்ட்ராவில் பார்பபானியில் உள்ள முஹம்மதி மஸ்ஜித் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிலர் காயம் அடைந்தனர்.
நான்டெட் என்ற இடத்தில் பஜ்ரங்தள் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தின் வெடி குண்டு தொழிற்சாலையில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது நால்வர் பலியாயினர். இதைப் போன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டும் நடந்தது.
பூனாவில் உள்ள மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
ஜால்னாவில் உள்ள மஸ்ஜிதி லும் குண்டுவெடிப்பு நடந்தது.
50லிக்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மாலேகான் குண்டு வெடிப்பிலும் பஜ்ரங்தள் இயக்கத் தினரின் கைவரிசை இருந்தாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். ஆனால் இந்திய அளவிலான ஊடகங்கள் எல்லாம் சிமி, சிமி என்றே அலறினநான்டெட்டில் பஜ்ரங்கதள் வெடிகுண்டு தொழிற்சாலையில் ஒட்டுத்தாடிகளும் தொப்பிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அவ்வாறே மாலேகானில் பள்ளிவாசல் குண்டு வெடிப்புக்குப் பிறகு பலியான உடல்களுக்கு நடுவே தாடியும் தொப்பியும் வைத்திருந்த உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது தாடி கையோடு வந்துவிட்டதாக பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிய உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவ்வாறு எந்த ஒரு பிணமும் இல்லை இல்லை என மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர். அதாவது எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்தாலும் இப்படித்தான் விசாரணையின் போக்கு அமைய வேண்டும் என்று எழுதப்படாத ஒரு விதியை வைத்துக் கொண்டே செயல் படுவதாகத் தெரிகிறது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் அவ்வாறு ஆகிவிடக்கூடாதே என்பது தான் நாட்டு மக்களின் கவலை. புலனாய்வுத் துறையினர் குறிப்பிடும் எந்த இயக்கத்தினர் மீதும் விசாரணை நடத்தட்டும். ஆனால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் அது அமைய வேண்டும்.
மாலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள் இயக்கத்தினர் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை என உள்ளூர் மக்களும் நடுநிலையாளர்களும் காவல்துறை யினரிடம் வினா எழுப்பிய போது அவ்வாறு நடத்தினால் பதட்டம் ஏற்படும் நிலைமை விபரீதம் ஆகும் என மகராஷ்டிரா மாநில காவல்துறை உயர் அதிகாரி பஸ்ரிச்சா அப்போது தெரிவித்தார்.( இது எப்படி இருக்கு)
குறிப்பிட்ட ஹிந்துத்துவ இயக்கத்தினர் தான் இதை நிகழ்த்தியிருப்பார்கள் என இங்கு வேண்டுமென்றே யாரும் கூறவில்லை, நாடெங்கும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி தமுமுக உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் அவ்வாறு இருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகளை மறுக்க முடியாது. பாப்பா கையில் இருக்கும் பலூன் வெடித்தால் கூட பாய்ந்து சென்று முஸ்லிம் இளைஞர்களை இம்சை செய்யும் காவல்துறை மேற்குறிப்பிட்ட இயக்கங்களை விசாரணை செய்வதற்கு தயங்குவது ஏன்?
தப்லீக் ஜமாத்தார்களைக் கொல்ல நடந்த சதியா?ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து மூன்று மணிநேரம் கழித்து சக்தி வாயந்த இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. அந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பள்ளிவாசல் வளாகத்தில் நுழைகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனார்.
குண்டு வெடித்த 100 மீட்டருக்கு இடைவெளியில் இந்த சக்திவாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குண்டு வெடிப்புகள் நடைபெற்ற பிறகு மக்கா மஸ்ஜிதில் அஸர், மக்ரிப், இஷா தொழுகைகள் வழக்கம்போல் நடந்தன. வழக்கம்போல் சிறிதுகூட கூட்டம் குறையாமல் மக்கள் தொழுகைக்காக குழுமினர். தப்லீக் ஜமாத் என்ற அமைப்பு உலகளாவிய மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. சிறிது தூரம் உள்ள மிமித பள்ளியில் நடைபெற இருந்தது. லட்சக்கணக்கான தப்லீக் ஜமாத்தினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
தப்லீக் ஜமாத் இஜ்திமா நடைபெறும்போது குண்டுகள் வெடிப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி குண்டூரில் தப்லீக் இஜ்திமா நடக்கவிருந்தது. இதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீன்தார் அன்ஜுமன் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தப்லீக் இஜ்திமாவின் சேவையைக் கண்டு எரிச்சலுற்ற வி.எச்.பி.யினர் மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவது ஹிந்து இயக்கத்தின் வெறித்தனத்திற்கு சான்றாக விளங்குகிறது.
குண்டுவெடிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் வெறிச்செயல்.
ஹைதராபாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை 18லி05லி07 அன்று ஜும்ஆ தொழுகையின்போது குண்டு வெடித்ததைக் கண்டு குமுறி எழுந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்மை குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தினர். 10,000 மக்கள் ஒரே நேரத்தில் தொழக்கூடிய அந்த மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் மக்களிடையே பதட்டம் ஏற்பட்டது உணர்ச்சி வசப்பட்ட மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். குண்டுவெடிப்பையும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் ஒரு தெலுங்கு தனியார் தொலைக்காட்சி படம் பிடித்துக் கொண்டிருந்தது.
ஆந்திர மாநில காவல்துறைத் தலைவர் பாசிச சம்பவ இடத்துக்கு விரைந்தார். மஜ்லீúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் அசதுத்தீன் ஒவைஸி முழுகடையடைப்புக்கு உத்தரவிட்டார்.
இறந்தவர்களின் போஸ்ட் மார்ட்டம் (பிரேத பரிசோதனை அறிக்கை) அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இறந்தவர்கள் அனைவரும் நங்ப்ச் ப்ர்ஹக்ண்ய்ஞ் தண்ச்ச்ப்ங் (நகத) என்னும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இறந்தவர் களின் உடல்களில் குண்டுகள் துளைத்து வெளியேறியுள்ளன என பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட உஸ்மானியா மருத்துவமனையின் தடய வியல் துறைத்தலைவர் எம்.நாராயணரெட்டி குறிப்பிடுகிறார்.
காவல்துறையினரால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அஹ்மத்(35) காலில் தோட்டா துளைத்த காயம் உள்ளது. இவர் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவரை, தூக்கிக் கொண்டு செல்லும் போது இரக்கமே இல்லாமல் காவல்துறை யினர் காலில் சுட்டதால் அளவுக்கதிகமாக ரத்தம் வெளியேறி இறந்திருக்கிறார். இவர் உடனடியாக கொண்டு வரப்பட்டால் உயிர் பிழைத்திருப்பார் என பேராசிரியர் டாக்டர். நாராயணரெட்டி தெரிவித்தார்.
பழைய ஹைதராபாத்தின் மொகல்புரா பகுதியைச் சேர்ந்தவர் இஃப்திகாருத்தீன். இவர் தொழுகையை முடித்து விட்டு தனது குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்குவதற்காக சென்ற போது காவல் துறையினரால் சுடப்பட்டு இறந்திருக்கிறார். நாங்கள் கூட்டத்தை கலைப்பதற்காக ரப்பர் குண்டுகளைத் தான் பயன்படுத்தினோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் உயிரைப் பறித்தது ரப்பர் குண்டுகள் அல்ல என தெரிவிக்கிறார் இஃப்தி காருத்தீனின் மாமா ரியாஸ் ரவூஃப்.
முஹம்மத் ஜஹிருத்தீன்(27) இவர் நியூ அஹாபுரா பகுதியைச் சேர்ந்தவர். ஜஹீருத்தினின் இடுப்பெலும்பிலிருந்து டாக்டர் குண்டை வெளியிலெடுத்ததை பார்த்த ஜஹீருத்தினின் சகோதரர் குறிப்பிடுகிறார். எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சுடப்பட்ட இந்தச் சம்பவம் கண்டிக்கத் தக்கது என்கிறார். ஜஹீருத்தீன் சகோதரர் முஷீர் இவர் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்ததைக் கேள்விப் பட்டு சம்பவ இடத்துக்கு வந்தவர்.
மிஸ்ரி கஞ்சை சேர்ந்த முஹம்மத் அக்தர் முஹியுத்தீன் (15) இவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. முஹம்மத் சலிம்கான் (35) இவர் கலாபட்டாரைச் சேர்ந்தவர், சையத் ஆதில் அலி(17) இவர் ஃபலருமா பகுதியைச் சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் மார்பின் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. இவை அனைத்துமே முகல்புரா காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. மேலும் காவல்துறையினரின் கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் படுகாய மடைந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் நெஞ்சுக்கு மேல் குறி வைத்து காவல்துறை யினரால் குறிவைத்து சுடப்பட்டவர்கள் இவர்கள் ஓவைஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு 1.30க்கு நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து மக்களின் கோபம் வெடித்தது. சரியாக 2.20 க்கு பொதுமக்களை நோக்கி காவல்துறையினர் 12 ரவுண்டு சுட்டுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டில் முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இருவரும் மக்கா மஸ்ஜிதிற்கு சனிக்கிழமை வந்தபோது ஆத்திரம் கொண்ட மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வெறித்தனமாக சுட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குண்டு வெடிப்புக்கும் காவல்துறையினரின் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்காக முதல்வர் ராஜசேகர ரெட்டி மன்னிப்புக் கேட்டார். குண்டு வெடிப்பில் 16 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டிலே ஏழு பேர் பலியானார்கள். இந்த சமூகம் சந்திக்கும் கொடுமைகளுக்கு விடிவே கிடையாதே

Web Counter Code