இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, July 25, 2007

செய்தி கதம்பம்

இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இன்று மதியம் பதவியேற்றார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தனிப்பட்ட முறையில் திட்டியதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் 15க்குள் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.

சத்தியம் கம்யூட்டர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த பொது மேலாளர் சத்திய நாராணயனன் செகந்திராபாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். ஹைதராபாத்துக்க்கு 150 கிலோமீட்டர் தூரத்தில் சத்திய நாராயனன் மீட்கப்பட்டார்.கடத்தல் காரர்க்ள் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

சேது சமுத்திர திட்டப்பணிகளுக்கு இதுவரை 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அத்திட்ட தலைவர் என்.கே. ரகுபதி தெரிவித்திருக்கிறார்.

சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை உறுதிப்படுத்த தேவைப்பட்டால் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஜம்முலிகாஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் ராணுவ மேஜரை சுட்டுக் கொன்றுள்ளார். இவ்வாறு ராணுவத் துறையினருக்குள்ளே மோதல் நடைபெறுவது இது ஆறாவது தடவையாகும்.

மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பா.ம.கவின் ஜனநாயகக் கடமை தொடரும் இதற்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது என ராமதாசு தெரிவித்திருக்கிறார். இது கருணாநிதியின் நேற்றைய பேச்சுக்கு பதிலளித்த அறிக்கையாக கருதப்படுகின்றது.

இன்று பதவி ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் பதவியிருந்து ஓய்வு பெற்றாலும் மக்களை தொடர்பு கொள்ளும் பணியில் இருந்து, ஓய்வு பெறப்போவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் அனைத்து இதயங்களும் இணைக்கப்பட வேண்டும் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் 2020ல் இந்தியாவை வல்லரசாக ஆக்கும் முயற்சியில் உங்களுக்கு துணை நிற்பேன் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் பிரியா விடை பெற்றார்.

திமுக அரசு மீதும் உயர் கல்வித்துறை மீதும் ராமதாஸ் கடும் விமர்சனங்களை கூறிவருவதைத் தொடர்ந்து எதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பொன்முடி மீது டாக்டர் ராமதாசு கூறும் விமர்சனம் குறித்து கருணாநிதி பேசும்போது உயர்கல்வித் துறை அமைச்சர் அவருடைய சொந்த மாவட்டம் அல்லவா? அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நல்ல பெயர் எடுக்க வேண்டும் எண்ணத்துடன் ராமதாசு தெரிவித்திருக்கக் கூடும். ஆனால் அதற்கும் ஓர் எல்லையும் அளவும் வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததால் சிங்கப்பூர் சிறையில் வாடும் தமிழர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.

பொறியியல் கல்விக்கான கலந்தாய்வில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் இந்த ஆண்டு உருவாக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரி உள்பட 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான சங்கராச்சாரி உள்பட 12 பேரின் குற்றச்சாட்டை நீதிபதி முஹமது இஷாக் வாசித்தார்.

ஹனீஃப் விவகாரத்தில் ஆஸ்திரேலிய காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் உலக அளவில் நகைப்புக்குரியதாகி விட்டது என அந்நாட்டு எதிர்கட்சியான கிரீன்ஸ்கட்சி தெரிவித்துள்ளது.

எங்கள் மண்ணின் மீது குண்டுகள் வீச அமெரிக்காவை அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது

Web Counter Code