இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, June 10, 2009

கேரள முஸ்லிம்களின் செல்வாக்கு சரிகிறதா ?











கேரள முஸ்லிம்களின் செல்வாக்கு சரிகிறதா?
கேரளாவில் முஸ்லிம்களின் அரசியல் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக சமுதாய ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்து வதாகக் கூறிக்கொள்ளும் முஸ்லிம் லீக் என்ற கட்சியும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கேரளாவில் முடியாமல் தவிக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வடகரா தொகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம்கள் இருந்தும் அங்கு எங்குமே முஸ்லிம் வேட்பாளர்கள் காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்படவில்லை. கோழிக்கோட்டில் எம்.கே.ராகவன் வெறும் 838 வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரிகளின் முஸ்லிம் வேட்பாளரை தோற்கடித்தார். நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கால் தான் வெற்றி பெற்றேன் என ராகவன் நன்றி தெரிவித்தார்.கோழிக்கோடு, வடகரா, கண்ணூர் போன்ற தொகுதிகளில் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள் பெற்ற வெற்றிகளைக் குறித்து பெரிதாக கவலைப்படாத சமுதாய ஆர்வலர்கள் கூட எர்ணாக்குளம் நாடாளு மன்றத் தொகுதிகளின் முடிவு குறித்து ஆதங்கத்துடன் பேசிக் கொள்கிறார்கள். எர்ணாகுளத்தில் காங்கிரஸ் வேட்பாளரா கப் போட்டியிட்ட கே.வி.தாமஸ், இஸ்ரேலிய தொடர்புடையவராக கடுமையாக குற்றம்சாட்டப்பட்டவர். அதோடு சமூக நல்லிணக்கத்துக்கு விரோதமான சர்ச்சைக் குரிய தஸ்லிமா நஸ்ரீனின் நண்பர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்பவர். அவரை ஆதரிக்க வேண் டாம் என முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு களும் எதிர்த்தன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது முதல், இரண் டாம், மூன்றாம் சுற்றுக்களில் பின்தங்கிய கே.வி.தாமஸ், தலை தப்பித்தால் போதும் என 11,790 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரைக் காப்பாற்றிய வாக்குகள் எவை தெரியுமா?
மட்டஞ்சேரி என்ற பகுதியின் வாக்கு கள் தாமஸின் வெற்றிக்கு உறுதி கூட்டியது. மட்டஞ்சேரி பகுதி, முஸ்லிம் லீக்கின் கோட்டை போன்ற பகுதியாகும். தனது வெற்றிக்கு முஸ்லிம் லீக் தான் காரணம் என கே.வி.தாமஸ் கூறியிருப்பது நல்ல கூத்து.பொதுவாக கேரள முஸ்லிம்களில் கணிசமானவர்கள் முஸ்லிம் லீக்கி மீது கடந்த 60 வருடங்களாக பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். முஸ்லிம் லீகும் காங்கிரசும் ஏராளமான தேர்தல்களில் உறவு வைத்திருந்தாலும், ஏ.கே.அந்தோணி, உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதாலா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்ட போதும் முஸ்லிம் லீகர்களால் கூட்டணியை விட்டு வெளி யில் வரமுடியவில்லை. ஆனால் கேரள முஸ்லிம்கள் எப்போதும் கேபினட் அமைச்சர்களாக முடிவதில்லை. 2004லும், தற்போதும் ஈ. அஹ்மது, குட்டி அமைச் சராக தொடர்கிறார். ஆனால் கிறித்தவர் களும் நாயர்களும் முக்கியப் பதவிகளை அலங்கரித்தனர்.
கேரள மாநிலத்தில் முஸ்லிம் நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டால் வெறும் மூன்று பேர் மட்டுமே எம்.பி.யாகி உள்ளனர். ஆனால் கிறித்தவ நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக் கையோ ஆறு. நாயர் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களின் ஏழு பேர். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் கேரளாவில் 27 சதவீதம் முஸ்லிம்களும், நாயர்கள் 12 சதவீதமும், கிறித்தவர்கள் 19 சதவீதமும் உள்ளனர் என்பது விநோதமான விந்தையாகும்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மலபாரில் 50 ஆயிரம் மாணவர் களுக்கு +2 படிப்புக்கு பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை. தெற்கு கேரளாவில் ஏராளமான பள்ளிக்கூடங்களில் இடங் கள் காலியாக உள்ளன. இந்த அழகில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கல்வித்துறை முஸ்லிம் லீக் வசமே ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் மலபாரில் மட்டும் மாணவர் களுக்கு போதுமான சீட் கிடைக்கவில்லை என்ற அவல நிலை.
மலபார் பகுதியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மட்டுமே உள்ளது. தென் கேரளாவில் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் வடகேரளா வில் ஆறு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு மருத்துவக் கல்லூரிதான். தெற்கில் இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளன.
கணிசமாக வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் முதல்வராக வரமுடியாத நிலையே உள்ளது. இரண்டு மாதங்கள் மட்டும் முஸ்லிம் லீக் தலைவர் மறைந்த முகம்மது கோயா முதல்வராகப் பதவி வகித்தார். ஆனால் சிறுபான்மை சமூகங்களான ஈழவர்கள், நாயர்கள் மற்றும் கிறித்தவர்கள் பல அமைச்சரவைகளில் முதல்வராகப் பதவி வகித்திருக்கிறார்கள்.
ஓணம் என்றால் 10 நாள் விடுமுறை, கிறிஸ்துமஸ் என்றால் ஒரு வாரம் விடு முறை. ஆனால் பெருநாள் என்றால் ஒரு நாள் விடுமுறைதான்.
முஸ்லிம்களின் குறைவான பிரதி நிதித்துவம் குறித்தும், முஸ்லிம் லீக்கின் தூங்கி மூஞ்சித்தன்மை குறித்தும் கவலை கொண்ட கேரள முஸ்லிம்கள் விழிப் படையத் தொடங்கி விட்டனர் என்பதே மலையாளக் கரையோரத்திலிருந்து வரும் செய்தியாகும்

இளம்பெண்கள் கற்பழித்து கொலை பாதுகாப்பு படையினரை எதிர்த்து காச்மிரில் கொந்தளிப்பு







இளம்பெண்கள் கற்பழித்துக் கொலைபாதுகாப்பு படையினரை எதிர்த்து காஷ்மீர் மக்கள் கொந்தளிப்பு!நிலோஃபர் என்ற இளம்பெண் ணும் அவரது கணவர் ஷகீல் அஹமதின் தங்கையான ஆசியாவும் (11ஆம் வகுப்பு படிக்கிறார்) மே 29ஆம் தேதி தங்கள் ஆப்பிள் தோட்டத்தை பார்க்கச் சென்ற னர். சுற்றிப் பார்க்கச் சென்ற அவர்கள் திரும்பவே இல்லை. பீதியில் உறைந்த பெற்றோர்களும், உறவினர்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் நாலாபுறமும் தேடியும் இரண்டு இளம் பெண்களையும் கண்டுபிடிக்க முடிய வில்லை. மறுநாள் காலை இருவரின் உயிரற்ற உடல்களும் நல்லாரமிபாரா கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சோஃபியான் பகுதியே பரபரப்படைந்தது.
இரண்டு இளம் பெண்களின் உயிரற்ற உடல்களும் கிடந்த பகுதிக்கு வெகு அருகில்தான் மத்திய ரிசர்வ் படையின் முகாம் இருந்தது.
உடல்கள் கிடந்த நிலையைப் பார்த்த தும் இருவரும் பா­யல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். குறிப்பாக இரண்டு இளம்பெண்களும் தங்களது பழத்தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் மத்திய ரிசர்வ் படை முகாமில் இருந்த சில கறுப்பு ஆடுகள் கடத்தி கற்பழித்துக் கொலை செய்தனரா என ஐயம் எழுப்பிய சோஃபியான் பகுதி மக்கள் பெரும் போராட்டத் தில் குதித்தனர்.
மாநில அரசுக்கு எதிராகவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு எதிராகவும் முழக்கங்களை சோஃபியான் பகுதி மக்கள் எழுப்பினர். வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப் பட்ட இரண்டு பெண்களின் உடல்களை யும் சோஃபியான் மாவட்ட மருத்துவ மனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை தாமதமானதால் மக்கள் மேலும் ஆத்திர மடைந்தனர். மருத்துவமனைப் பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காயின. உள்ளூர் மருத்துவர்கள் வேண்டாம், வேறு மாவட்டத்தி­ருந்து மருத்துவர்களை வரவழைத்து உடல்களை ஆய்வு செய்ய வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக் கையை ஏற்று புல்வாமா மாவட்டத்தி­ ருந்து சிறப்பு மருத்துவர் படை அனுப்பப் பட்டது. இறுதியில், இளம்பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது மாவட்ட டாக்டர்கள் பிரிவு.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வெடித்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்பு படை முயன்றது ப­க்கவில்லை. அவர்களது போராட்டம் தொடர்ந்தது.
''காஷ்மீரில் வாழும் பெண்களின் கற்புக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லை, இதை இந்த நாடு எவ்வாறு இன்னும் சகித்துக் கொண்டிருக்கிறது'' என காஷ்மீர் மாநில முக்கியப் பிரமுகரும், ஹுரியத் கமிட்டியின் தலைவருமான மீர் வாய்ஸ் உமர் பாரூக் தெரிவித்தார்.
மக்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ''எங்கள் அரசு வெளிப் படையான அரசு. சோஃபியான் பகுதி கற்பழிப்புக் கொலைகள் உள்ளிட்ட இதற்கு முன் நடைபெற்ற வன்கொடுமை களுக்கான முக்கியக் குற்றவாளிகளை யும் விரைவில் கொண்டு வந்து நிறுத்துவோம். சோஃபியான் கற்பழிப்புக் கொலைகாரர்களை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்து வோம்'' என உமர் அப்துல்லா தலைமை யிலான மாநில அரசு அறிவித்துள்ளது

Saturday, June 6, 2009

புதிய அமைச்சரவை பட்டியல்: சமூக நீதிக்கு பின்னடைவா?




புதிய அமைச்சரவை பட்டியல்: சமூக நீதிக்கு பின்னடைவா?காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, சமூகநீதி தத்துவத்திற்கு பின்னடைவைத் தரும் வகையில் அமைச்சரவைப் பட்டியல் அறிவிக் கப்பட்டுள்ளதை சமூகவியலாளர்கள் கவலையோடு சுட்டிக் காட்டுகின்றனர்.
கடந்த ஆட்சியில் சமூகநீதிக் கொள்கைக்கு பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்காத நிலையிலும் பெயரளவில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை மக்கள் நலன் நாடும் அம்சமாக விளங்கியது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக சச்சார் கமிட்டியின் அறிக்கைகள் சிறுபான்மை மக்களின் அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
ராஜிந்தர் சச்சாரின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அப்துர் ரஹ்மான் அந்துலேயும், உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டிற்காக அதிகாரத்தில் இருந்துகொண்டே சமூக நீதிக்காகப் போர் தொடுத்த அர்ஜுன்சிங் கும், ரயில்வே துறையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் போவதாக அறிவித்த லாலுவும், பாஸ்வான் போன்ற அரசியல் தலைவர்கள் தற்போது அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெற முடியவில்ல
தற்போதைய நிலையில் சமூக நீதி தத்துவத்தை உரத்து ஒ­க்கும் தலைவர் கள் இடம்பெறவில்லை. இதனை கவனத்தில் கொண்டு சமூகநீதி தத்து வத்தை செயல்படுத்தும் முகமாக ஆக்கப் பூர்வ அறிவிப்புகளை வெளியிட வேண் டும். ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை யின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். செய்வார்களா

திருக்குர்ஆன் பிரதிகளை கரையில் இறக்க அனுமதி மறுப்பு!




திருக்குர்ஆன் பிரதிகளை கரையில் இறக்க அனுமதி மறுப்பு!4000 குர்ஆன் பிரதிகள் நடுக்கடலில் பறிமுதல்!
சர்ஜுன்
குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகத்தில் திருக்குர்ஆன் பிரதிகள் கொண்டு வரப்பட்ட பெட்டகத்தை தரை இறக்க சுங்கத் துறை அனுமதி மறுத்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.
கோரெவல்லி கிராமத்தில் உள்ள டூபன்னி என்ற முஸ்லிம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இந்த குர்ஆன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி, கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ளது.
4000 குர்ஆன் பிரதிகள் மற்றும் பல்வேறு ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்ட 500 குறுந்தகடுகளும் அங்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் விற்பனைக்காக அனுப்பப்பட்டவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குர்ஆன் பிரதிகள் மற்றும் குறுந்தகடுகள் அனைத் தும் டூபன்னி கடற்கரையோர மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காகவே அனுப் பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரியான ஆவணங்கள் இல்லாமை யால் சம்பந்தப்பட்ட பொருட்களை கரை யிறக்க அனுமதிக்க முடியாது என முந்த்ரா துறைமுக சுங்கத்துறையின் உதவி ஆணை யர் அசோக் நகாடே தெரிவித்தார்.
குர்ஆன் பொதுமக்களுக்கு விநியோ கிப்பது ஒன்றும் சட்டவிரோதமான காரியமல்ல. எனவே அதனை கரை யிறக்க அனுமதி மறுத்தது தவறு என பிரபல பத்திரிகையாளர்கள் தெரிவித்த னர். விசாரணைகளின் முடிவில் அதனை உரியவரிடம் ஒப்படைப்பதே சரியானதாக இருக்க முடியும் என சமூகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த 4000 குர்ஆன் பிரதிகளும் காரவல்லியில் உள்ள அப்துல் கய்யூம் கான் என்பவருக்கு அனுப்பப்பட்டுள் ளது. இவர் காரவல்லியில் ஜாமியா தாருல் மஸீஹா என்ற பெயரில் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் ஒன்றை நடத்தி வருகிறார். இது அவரது பாட்டனார் ஹாஜி தலில்கான் என்ப வரால் 1952ல் தொடங்கப்பட்டதாகும்.
அப்துல் கய்யூமின் தந்தையார் ஹைதர் கான் துபையில் பணிபுரிந்து வருகிறார். அவர் இந்த குர்ஆன் பிரதி கள் மற்றும் குறுந்தகடுகளை அனுப்பி யிருக்கிறார். நான் முறையான ஆவணங்களை சமர்ப்பித்திருக் கிறேன். ஒவ்வொரு குர்ஆன் பிரதியை யும் குறுந்தகடையும் சோதித்த பின்னரும் இன்னும் அனுமதி மறுப்பது உரிமை மீறலாகும் என அப்துல் கய்யூம் தெரிவித்தார்.
அப்துல் கய்யூமின் தாருல் மஸீஹா மதரஸா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஜாமியா ஸலஃபியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் வருவதாகும். துபையில் உள்ள குஜராத் வாழ் முஸ்லிம்கள் மன முவந்து தந்த அன்பளிப்புகளால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் பிரதி களை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு என்ன நிர்பந்தம் வந்தது?
இஸ்ரேலுடன் இந்திய அரசு வைத்திருக்கும் கூடா நட்பு தன் வேலையைக் காட்டுகிறதா?

Wednesday, June 3, 2009

என் சுவாசத்தை திருடிய புலிகளுக்கு




என் சுவாசத்தை திருடிய புலிகளுக்கு
(புலிகளால் கொல்லப்பட்ட ஒரு நல்ல ஆத்மாவிட்காக எழுதப்பட்டது )
நண்பனே…
துப்பாக்கி ரவையால்
என் தலையைத் துளைத்த புலித்தோழனே
நான் உன்னை மன்னித்து விடுகின்றேன்

எனது மனைவியும்
எனது செல்வங்களிரண்டும்
எனது தாயும் தகப்பனும்
எனது உறவுகளும்
உன்னைத் திட்டலாம்

எனது சமூகமும்
நான் நேசிக்கும் எனது மக்களும்
எனது சக ஊழியர்களும்
உன்னைத் தூற்றலாம்

ஆனாலும் புலி நண்பனே
நான் உன்னை மன்னித்து விடுகின்றேன்
உண்மையாகவே மன்னித்து விடுகின்றேன்

“அப்பா கொழும்பு போயிருக்கிறார்
வரும் வரை காத்திருக்கிறேன்” என்று
வெள்ளையுடுத்த மனைவியிடம்
என் பிள்ளை சொல்கிறான்

என்னையிழந்து ஏழைகளெல்லாம்
கதறி அழுகிறார்
நான் திரும்பி வர வேண்டுமென்று
விரும்பி நிற்கிறார்

காணமல் போன
எனது விலாசத்தை விசாரித்து கொண்டிருக்கும்
இவர்களை கண்டு
நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன்

ஆகவே புலி நண்பனே
என் தலையில் ரவைகளை பீச்சிய
உன் துப்பாக்கியிடம் கேட்டுச்சொல்

எனது உயிரை ஒரு கணம்
திருப்பி தரலாமா என்று

எனது மரணத்தை கண்டு
நீ புளங்கித்ததாயும்
எனது ரத்தத்தை கண்டு
நீ சப்தித்ததாயும்
இங்கே பேசிக்கொள்கிறார்கள்
ஆனாலும் புலி நண்பனே
நானுன்னை மன்னித்து விடுகின்றேன்
இறப்பு
மனிதனின் பிறப்புரிமையல்லவா
அதனால் நானுன்னை மன்னித்து விடுகின்றேன்

என் அன்பிற்குரிய சோதரனே
என்னை உனக்கு தெரியும்
எனது கண்ணாடியும்
எனது காற்சட்டையும்
எனது சேட்டும் செருப்பும்
எனது சிரிப்பும் விருப்பும்
எனது முகமும் முதிர்வும்
ஈரமுள்ள எனது ஹிருதயமும் கூட
உனக்கு தெரியும்

அஹிம்சையை மட்டுமே
அர்த்தமுள்ளதாக்கி கொண்ட
எனது நட்ப்பும்
எனது நடப்பும் கூட
உனக்கு நன்றாகத் தெரியும்

ஆனாலும்….
உனது ஹிம்சைக்குள்
நான் வம்சிக்கபட்ட காரணம் மட்டும்
எனக்கு தெரியாது
உண்மையாகவே எனக்கு தெரியாது

எந்த நியாயங்களுக்காய்
நீ என்னை காயப்படுத்தினாய்?
என்ன காரணங்களுக்காய்
நீ என்னை வேரறுத்தாய்

சொல்….
உன்னை
உனது தாயை
உனது தகப்பனை
உனது உடன் பிறப்புகளை உறவுகளை
நான் உளம் நோகச்செய்தேனா?

ஈழ தேசத்திற்க்கான
உனது போராட்டத்தை
நான் நாசப்படுத்தினேனா?
உனக்கு சேரவேண்டிய
ஒரு கவளம் உணவு
சில லீற்றர் தண்ணி
ஆடையணி
இவற்றிலெதையேனும்
நான் தட்டி பறித்தேனா?

இல்லை நானுன்னை
மானபங்கம் செய்தேனா?
இல்லையே….
இருந்தாலும் நண்பனே
நானுன்னை மன்னித்து விடுகின்றேன்

எனது தலைக்கு
நீ இலக்கு வைக்கும் போது
எனது ரத்தம்
இந்த மண்ணில் சிந்தியபோது
எனது உடலம்
இந்த நிலத்தில் சாய்ந்தபோது
என்னை வீழ்த்திவிட்ட
கழிப்பில் நீ குதாகலித்த போது
என்ன நினைத்தாய்?
நண்பா
நீ என்னைப்பற்றி என்ன நினைத்தாய்?

ஒரு எதிரியை அழித்ததாய் நினைத்தாயா?
ஒரு திருடனை ஒழித்ததாய் நினைத்தாயா?
என்ன நினைத்தாய்?
எனது உயிரிலும் பெரிய புலி நண்பனே
பிரிய சகோதரனே
நான் உன்னை மன்னித்து விடுகின்றேன்
உண்மையாகவே நான் உன்னை மன்னித்து விடுகிறேன்

நண்பனே
என் ஆத்மாவிற்க்காக
என் வேண்டுதலுக்காக
நீ என்னை தேடி வா
மௌனம் புதைத்த
என் மண்ணறைக்குள்
உன்னை மன்னித்தவனாக
நான் காத்திக்கறேன்

வா
உன்னிடமிருந்தும்
உன் தோழர்களிடமிருந்தும்
வாத்ஸல்யமான மனிதநேயத்தை
நான் எதிர்பார்க்கிறேன்
வா

இது எனது இறுதி பிரார்தனை
தயவு செய்து
என் ஜீவிதத்தை சிதைத்தது போல
என் மேலான வேண்டுதலையையும்
சிதைத்து விடாதே
வருவாய் என்று
என் ஆத்மா சொல்கிறது
நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை
பரிசுத்த நிலையில்
என் மரணத்தின் முடிவிலும்
நான் உன்னை மன்னித்து விட்டேன் வா

இன்றோ அல்லது நாளையோ
காலப்போக்கிலோ
எனது குரல்
உனது செவிப்புலனுக்கு எட்டலாம்
அப்போதவது
என் மரணத்தைப்பற்றி
உனது கையிலுள்ள துப்பாக்கி பற்றி
உன்னை சுற்றியிருப்போர் பற்றி
என்னை எதிர்பார்த்து
எனக்காக ஏங்கும்
என் குழந்தைகளைப்பற்றி
என்ன நினைப்பாய் புலித்தோழனே?

தனிமையில் இரு
நடந்ததை மீட்டிப்பார்
என் உருவத்தை
உன் மனக்கண்முன் கொண்;டு வா
உன் காதை
உன் பார்வையை
என் வீட்டுப்பக்கம் திருப்பு
என் குழந்தைகளின் அழுகை
எனது சுற்றத்தின் சோகம்
இவை உனது மனசாட்சியை தொடவில்லையா?
கண்களை ஈரமாக்கவில்லையா?
இப்போது என்ன நினைக்கிறாய்?
எனது குழந்தைகளுக்கு
என் சொந்தங்களுக்கு
என் சமூகத்திற்க்கு
நீ என்ன செய்ய நினைக்கிறாய்

நண்பனே
நான் உன்னை மன்னித்து விட்டேன்
நீ நேராக வா
எப்போதும்
என் வீட்டுக்கதவுகள் சாத்தப்பட்டிபருப்பதில்லை

அழுது கொண்டிருக்கும்
என் குழந்தைகளை பார்
தலையை தடவு
ஆறதல் கூறு
அது கூட உனக்கு சம்மதமில்லையா?
என்றாலும் நான் உன்னை மன்னித்து விடுகிறேன்
உண்மையாகவே மன்னித்து விடுகிறேன்

என் மண்ணறையைத் தேடி
என் குழந்தைகளைத் தேடி
என் சொந்தங்களைத் தேடி
நீ வராவிட்டாலும் நண்பனே
உனது விழித்திரைகள் மூடிக்கொள்ளும்
ஒவ்வோர் இரவின் கனவிலும்
நான் உன்னைத்தேடி வருவேன்
மனம் விட்டு பேசுவேன்
உன்னை மன்னித்ததாய் கூறுவேன்

தோழமைகளுடன்.. அ.பஞ்சலிங்கம், அரசாங்க அதிபர் -யாழ்ப்பாணம்

Web Counter Code