இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, March 4, 2011

மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்!

மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்!


எகிப்தின் மக்கள் புரட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு ஈரானில் ஏற்பட்ட புரட்சிபோல நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத் தின் பிடியில் இஸ்ரேல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக உரிமைகள் அடக்கப்பட்ட நிலையில் கட்டமைக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய சக்திக்கு நாட்டின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர இயலும், என இஹ்வான்களை பெயர் குறிப் பிடாமல்கூறியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. ஈரானில் அதுதான் நடந்தது. மற்ற சில இடங்களிலும் அதுதான்நிகழ்ந்தது என ஜெர்மனி அதிபர் ஆஞ்சலா மெர்க்கலுடன் நடத்திய ஒருங்கிணைந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

தங்களின் நெருங்கிய நண்பன் ஹோஸ்னி முபாரக் மடக்கப்படுவதை இஸ்ரேல் கவலையுடன் பார்க்கிறது ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவேண்டாம் என இஸ்ரேல் அமெரிக்காவிடமும், ஐரோப்பிய நாடுகளிடமும் கெஞ்சுகிறது.

இந்நிலையில் ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியை விட்டு விரட்டுவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியிருக்கும் லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் தார்மீக ஆதரவினையும் வாழ்த்துகளையும் வழங்கியுள்ளன.

எகிப்து நாட்டில் சர்வாதிகாரி ஹோஸ்னிக்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி இரண்டு வாரம் கழிந்தபிறகும் வாய்திறக் காமல் மௌனம் காத்த துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப்ஏற்தொகன் தற்போது எகிப்திய மக்களுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைத்தன்மையும், பாதுகாப்பும் நிலைப்பெற வேண்டு மானால் மக்களின் உரிமைக்குரலுக்கு மதிப்பளிக்க வேண்டுமென நாடாளு மன்றத்தில் நடத்திய உரையில் அவர் தெரிவித்தார்.

எகிப்து அமைதியான வழியில் மாறினால் தான் கெய்ரோவுக்குச் செல்லப்போவதாக அவர் அறிவித்துள் ளார். அதேவேளையில், போராட்டம் அமைதியான வழியில் நடத்த வேண்டுமெனவும், நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் எகிப்து நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஈரானும் தனதுமுழு ஆதரவை தெரிவித்துள்ளது. உலகில்ஜனநாயக உரிமைக்காக போராடக் கூடியவர்களுடன் நாங்கள் என்றும் இருப்போம்என்றும் பாரம்பரிய இஸ்லாமிய மாண்புகள் கொண்ட. மகத்தான நாடான எகிப்தின் புரட்சிக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை பகிரங்கமாகதெரிவிப்பதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

எகிப்தின் புரட்சி இஸ்லாமியபாரம்பரிய மத்திய கிழக்கு உருவாக உதவும் என தாங்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில் உலகை அதிரவைத்துள்ள புரட்சிப் போராட்டத்தில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாக இரான்வன்மையாக குற்றம் சாட்டியுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில்எழுச்சி மாற்றம் தேவை. மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சிகள் தூக்கி எறியப்படவேண்டும் மேற்கத்திய சக்திகளின்அடி வருடி அரசுகள் கவிழ்வதற்கான நேரம் வந்துவிட்டது. அதைத்தான் தற்போதைய மக்கள் புரட்சிகள் நிரூபித்துள்ளதாக இரான் கூறியிருக்கிறது.

தற்பொழுது எகிப்தின் வீதிகளில் நடைபெறும் மக்கள் புரட்சி திடீரென உருவானது அல்ல.நாட்டிற்கு நன்மைகளை நாடியவர்கள் ஹோஸ்னி முபாரக்கை பலமுறை இடித்துரைத்து எச்சரித்தும், அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்கஹோஸ்னி பாரக் மறுத்ததினால். இப்போது அவரது ஆட்டத்திற்கான இறுதி தீர்ப்பு தீட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முஸ்லிம் சிந்தனாவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில், எகிப்தில் மேற்குலகின் ஆசி பெற்ற பொம்மை ஆட்சியை கொண்டு வர முயற்சி நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளிவந்த நிலையில், முன் யோசனையில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் இஹ்வான்கள் முன் யோசனையுடன் மிக சாதுர்யத்துடன் காய்களை நகர்த்திவருகிறார்கள்

கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போராட்ட வீரியம் வலுவாக உள்ளது. ஆதலால் தேர்தல் நடந்தால் இவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

ஆனால், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தலை அசைக்கும் ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் என்ன நிகழும்? என்பது குறித்த அச்சத்தின் உச்சத்தில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன.

காஸாவிலிருந்து எகிப்தில் நடைபெறும் போராட்டத்தில் ஹமாஸ் இயக்கத்தினர்வேறு வேறு தோற்றங்களில் கலந்துகொள்கின்றனர் என்ற பரப்புரையும் மிக தீவிரமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஹோஸ்னி முபாரக்கை விமர்சித்தது ஏதோ ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமை குறித்த கவலையினால் அல்ல! மாறாக, 82 வயதான பிறகு ஏன் பதவியில் தொடர வேண்டும், வேறொரு இளம் அடிமையிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டியதுதானே என்ற எரிச்சலே முக்கியக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

எகிப்திய பாதுகாப்பு படையில் இஸ்லாமிய சிந்தனாவாதிகளுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. என்னவாயினும், இதுவரை ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவை தெரிவித்த பாதுகாப்புப் படையினர் தற்போது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மறுக்கின்றனர். அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை உறுதி செய்துவிட்டு ஹோஸ்னி முபாரக் நாட்டைவிட்டு வெளியேறு என ராணுவம் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதா ஆன்லைன் இண்டலிஜன்ஸ் மாத இதழான ஸ்ட்ராட் ஃபோர் தெரிவிக்கிறது.

1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்தது போல ராணுவம் தங்களுடன் இணையும் என போராளிகள் கருதுகின்றனர்.

சர்வாதிகாரிக்கு ஆதரவாக களம் இறங்கும் அமெரிக்க போர் விமானங் கள் எகிப்தின் சினாய் தீவில் சர்வாதிகார சக்திகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமெரிக்க விமானப்படை அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உரிமை போராட்டக்காரர்களுக்கு சந்தேகத்தையும் அச்சத்தையுமேற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித் துள்ளனர்.

எகிப்தில் குவியும் இஸ்ரேல் ஆயுதங்கள் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் மீது கொடும் தாக்குதல் நடத்த அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுதங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் தடைச் செய்யப் பட்டுள்ளஅதிநவீன நாசகார ஆயுதங்கள் எகிப்திற்கு வந்துள்ளன. மக்கள் போராட்டத்தை பூண்டோடு அழிக்க முனையும் முக்கிய சதியாக இது கருதப்படுகிறது.

இருப்பினும் மக்கள் புரட்சிகள் தோற்றதாக சரித்திரம் இல்லை .மத்திய கிழக்கு நாளை உரிமை மீட்பு போராட்டத்தின் முன்னோடி பிராந்தியமாக மாறப்போகிறது. ஆம் வரலாறு காத்திருக்கிறது.


-ஹபிபா பாலன்

லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை!

லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை!

E-mail Print PDF

லிபியாவில் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்டு தாயகத்திற்கு கொண்டு வருவதில் இந்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. லிபியாவில் வாழும் இந்திய மக்கள் 18 ஆயிரம் பேரையும் பாகுபாடு காட்டாமல் காக்க வேண்டிய இந்திய அரசு பொறியாளர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட உயர் பணியில் இருப்பவர்களை மட்டும் விமானங்களில் இந்தியாவிற்கு வரவழைப்பதாகவும் இதர கடைநிலை தொழிலாளர்களை கப்பல்கள் மூலம் வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகி வரும் தகவல்கள் தங்கள் உறவினர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அப்பாவி ஏழை மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

லிபியாவில் இந்தியர்கள் பலர் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் தலைவன்கோட்டையைச் சேர்ந்த முருகைய்யா மற்றும் அசோக் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பேராசிரியர்கள், மருத் துவர்கள், பொறியாளர்கள் உள் ளிட்டவர்கள் மட்டுமே விமானம் மூலம் இந்தியா வரவழைக்கப்படுவதாகவும், கடைநிலை மற்றும் நடுத்தர தொழி லாளர்கள் கப்பல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியா திரும்பிய மக்கள் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அலைகளை லிபியாவில் வாடும் இந்தியர்களின் குடும்பத்தினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

பாரபட்சமின்றி தொழிலாளர்களையும் விமானம் மூலம் விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் குமுற லுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக் கப்பட்ட கிராம மக்கள் மத்திய அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே லிபியா வில் போராட்டங்களில் பலியாகும் மக்களின் பிணங்கள் குப்பையில் வீசப்படுவதாக அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

லிபியாவில் வெடித்துள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தினால் மிகக் கடுமை யான தாக்குதல்கள் நடந்து வருகிறது. வீதி களெங்கும் உடல்களாகக் கிடக்கின்றன. அவை புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டு குப்பை களில் வீசப்படுவதாக அதிர்ச்சித் தகவலை மீண்டுவந்த இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க முதல்கட்டமாக இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கியது. இந்த விமானங்கள் லிபியா சென்று 528 இந்தியர்களை மீட்டுக்கொண்டு வந்துள்ளன.
முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் ஷ்வந்து சேர்ந்தது. இரு விமானங்களிலும் ஏராளமான தமிழர்களும் இருந்தனர்.

விமான நிலையத்தில் முகம்மது ஸாலிஹ் என்ற பொறியாளர் கூறுகையில், லிபியா வில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக் கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் பீதியில் உறைந் துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இறந்தவர்களின் உடல் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

மக்கள் கிளர்ச்சி பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு அறவே இல்லை என தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு திரும்பியுள்ள பலரும் வலி யுறுத்தியுள்ளனர்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, வெளியுறவுத்துறை செய லாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வர வேற்றனர்.

முதலில் வந்த விமானங்களில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள் ளிட்டோர் இருந்தனர்.

-ஹபீபா பாலன்

Web Counter Code