இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, July 11, 2007

தூய உள்ளங்களுக்கு ஓர் ஒத்தடம்

200பேரை ப்லி கொண்ட அந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து இன்று ஓராண்டு ஆகிவிட்டது
.ஈடு செய்யமுடியாத இழப்பினை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூறும் மனோதிடம் யாருக்கும் இல்லை எனினும் அவர்களின் ஆறுதலுக்காகவும் மனநிம்மதிக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
கொடுமையான அந்த நிகழ்வுக்குப்பிறகு ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடித்து சிறைகொட்டடிகளில் அடைக்கப்பட்ட மனித உரிமை மீறலை மன்னிக்கவே முடியாது
.ஆனால் அதே வேளையில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்புனர்வை புல்லுருவிகள் எங்கும் பரப்பிய நேரத்திலும் கூட தங்கள் உயிரை துச்சமாக எண்ணிஉயிர் காக்க விரைந்த அந்த தியாக உள்ளங்களை மறக்கமுடியுமா?
அந்த தூய உள்ளங்களை பாராட்டும் விதமாக அவர்கள் இதயங்களுக்கு ஒத்தடம் போடும் வகையில் இந்த செய்திக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமிதம்கொள்கிறோம்..

மும்பை: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முஸ்லிம்கள்!அபூசாலிஹ்

இந்தியாவின் 'நியூயார்க்' என அழைக்கப்படும் மும்பையில் ஜூலை 11ஆம் தேதி பதற வைக்கும் பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உழைத்து களைத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் பரபரப்பான மாலை நேரத்தில் போர்வில்லி, ஜோகேஸ்வரி, பாந்த்ரா, மாதுங்கா உள்ளிட்ட ஏழு புறநகர் ரயில் நிலைய மின்சார ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தகவல் கள் பரவின. 200க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட ஏறக்குறைய 700 பேருக்கு மேல் படுகாயம் அடைந்த இந்தக் கோர நிகழ்வில் தன்னலம் கருதாது சேவைகளாற்றிய கருணை உள்ளங்களைப் பற்றி தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
காவல்துறைக்கு முன்பாகவே களத்தில்...
ஃபயாஸ் என்ற 30 வயது இளைஞர் தனது வீடு இருக்கும் நவ்படா பகுதியை நோக்கி மேம்பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இதயத்தை அதிர வைக்கும் சத்தம் ரயில் பாதையில் கேட்டது. ரயில் வரும் திசை நோக்கி ஃபயாஸ் ஓடினார். ஏதோவொரு பெட்டியிலிருந்து கறும்புகை வந்து கொண்டிருக்கிறது. ரயில் நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மனிதர்கள் வெளியே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். பிணமாகவும், குற்று யிராகவும் அருகிலுள்ள பாலத்தை அடைந்தபோது ரயில் தானாகவே நின்றுவிட்டது. குண்டுவெடிப்பினால் ரயில் பெட்டியின் துண்டுகள் 80லிருந்து 100 மீட்டர்கள் வரை சிதறி இருக்கின்றன.
இதயத்தைக் கிழித்துப் போடும் கூக்குரலைக் கேட்ட ஃபயாஸ், உதவிக்கு ஆட்களை அழைத்துவர ஓடினார். நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் மீட்புப் பணிகளில் இறங்கினர்.
கோர நிகழ்வு நிகழ்ந்து நெடுநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும் வரவில்லை, ரயில்வே அதிகாரிகளும் வரவில்லை. நாங்கள் செல்லத் தேவையில்லை, நீங்கள் முதலில் செல்ல வேண்டும் என்று இரண்டு துறையினருக்கும் குடுமிபிடிச் சண்டைகள் நடந்த தகவல் பின்னர் தெரிய வந்தது. ரயில்வே எல்லைக்குள் பொது காவல் துறையிருக்கு அதிகாரம் இல்லை என்பதும் ஒரு காரணம்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்ததாக சொலன்கர் கூறுகிறார். இவரைப் போன்ற இளைஞர்கள் 'அல்லிஹிந்த் ஏக்தா சொஸைட்டி' ஒருங்கிணைத்தது.
பல உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. சில மட்டுமே எளிதில் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தன. சில உடல்கள் திகிலூட்டும் வண்ணம் இருந்தன. தாமதமாக வந்த காவல்துறையினர், நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சொலன்கர் குறிப்பிடுகிறார்.
பிணங்களையோ, படுகாயமுற்றவர்களையோ அவர்கள் தொட்டுத் தூக்க முயற் சிக்கக் கூட இல்லையாம். கைகளை இழந்த மக்கள், தோள்பட்டை நசுங்கிய வர்கள், மற்றும் உறுப்புகள் இடுக்குகளில் சிக்கி வேதனை பொறுக்க இயலாமல் கதறியவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய மிகக்கடினமான பணி இந்த இளைஞர்களுக்கு. பாதிக்கப்பட்டோரை உடைந்த ரயில் பெட்டி யில் இருந்து மீட்கும்போது மிகுந்த உடல் சிரமமும் சமயோகிதமும் தேவைப் பட்டது. ரயில் நிலையத்தில் இரண்டு ஸ்ட்ரெச்சர் மட்டுமே இருந்தன. படுகாயம் அடைந்த வர்களையும், பலியானவர்களையும் போர்வைகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.
படுகாயம் அடைந்தவர்களை தூக்கிச் செல்லும்போது தோள் பட்டைகள் வலியெடுக்க ஆரம்பித்ததால் அடுத்து பாதிக்கப்பட்டவர்களைத் தூக்குவதற்கு முன் நொறுங்கிக் கிடந்த முதல் வகுப்பு பெட்டியிலிருந்த இருக்கைகளை முழு பலத்தையும் பிரயோகித்து எடுத்து அந்த இருக்கைகளின் மீது பாதிக்கப்பட்டவர் களும், படுகாயம் அடைந்தவர்களும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
முஸ்லிம் சேவைப் படையினர் சுற்றுப்புறங்களில் கிடந்த மொபைல் போன்களையும், உடைமைகளையும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து, அதை முறைப்படி அறிவிக்கவும் செய்தனர்.
குண்டு வெடித்தபோது பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கரிப் நகர மக்கள் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக நினைத்திருந்தனர். ஆனால் சலீம் குரைஷி என்ற காங்கிரஸ் பிரமுகர் மட்டும் தனது வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உள் மனது கூறியதாம். நில அதிர்வும் கரும்புகையும் நடந்தது குண்டுவெடிப்புதான் என்பதை உணர்த்தவே, தனது வீடியோ காமிராவில் நடப்பதைப் பதிவு செய்யத் தொடங்கி யுள்ளார். இறந்த உடல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
காயம் அடைந்தவர்களில் பெரும் பாலோரின் நிலை மிகவும் அபாயக் கட்டத்தில் இருந்ததையும் அது காட்டியது. சில உடல்கள் தலைகள் இல்லாமல் கிடந்தன. சலீம் குரைஷியின் வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. பல மீட்புப் பணிகள் பதிவாகி உள்ளன. அஸ்லம் என்ற ரிக்ஷாகாரர் உடல்களை அடுக்கி நகர்த்த முடியாமல் கிட்டத்தட்ட தவழ்ந்து செல்வதைப் போல தனது ரிக்ஷா வாகனத்தில் உடல்களைக் கொண்டு சென்றதையும் அந்த படப்பதிவு காட்டியது.
மருத்துவமனை நோக்கி...
ஜோகேஸ்வரி ரயில் நிலையத்துக்கு வெளியே தையற்கடை வைத்திருக்கும் அக்தர் ஹுஸைன், குண்டுவெடித்த சப்தத்தைக் கேட்டவுடன் நண்பர்களை அழைத்துக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மீட்புப் பணிக்கு வசதியாக மதில் சுவரின் ஒரு பகுதியை இடித்த பின்பு அவர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். தங்கள் தோள்களில் காயம்பட்டோரையும், பலியானோரையும் சுமக்க ஆரம்பித் தனர்.
13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜோகேஸ்வரி பகுதியில் இருந்த முஸ்லிம்கள் பலர் இருப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டனர். இன்றுவரை அந்தக் காட்சி என் முன்பே நிழலாடியது. ஆனால் இப்போது அது மறைந்து என் ஹிந்து சகோதரர்களை காப்பாற்றுவதே என் முன் உள்ள ஒரே குறிக்கோளாக இருந்தது என்கிறார் அக்தர் ஹுஸைன்.
மீட்புப் பணிகளுக்கு மேலும் ஆட்கள் தேவையாக இருக்கவே முமீன் காலனி மற்றும் ஹாஜுர்வாடி பகுதியிலுள்ள இளைஞர்களும் அழைக்கப்பட்டனர். ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கவும் உதவிகளும் வரத் தொடங்கின.
முமீன் காலனி முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிறிய மெத்தை கள், மற்றும் போர்வைகள் எடுத்து வந்தனர். அந்த மெத்தைகளும், போர்வைகளும் இறந்தவர்களை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்டன. இந்த சேவையில் 65 வயது முதியவரான அக்தரின் தந்தையும் பங்கேற்றார்.
மருத்துவமனைகளில் காத்திருந்த அதிர்ச்சி
பாதிக்கப்பட்டவர்களையும், பலியானவர்களையும் சுமந்து சென்ற கருணை உள்ளங்கள் மேலும் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாடே பதறிய மும்பை மாநகரே கதறிய அந்தக் கொடிய சம்பவத்தைக் கண்ட பிறகும் தனியார் மருத்துவமனை கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது. இளைஞர்களுக்கு ஆத்திரம் பீறிட்டது, எனினும் அடக்கிக் கொண்டனர். இதில் சில மருத்துவ மனைகள் கதவுகளை அடைத்துக் கொண்டன (என்னே மனிதாபிமானம்?)
படுகாயம் அடைந்தவர்களையும், பலியானவர்களின் உடல்களையும் சுமந்து கொண்டு கூப்பர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
ரத்த தானம் செய்வதிலும் முன்னின்ற முஸ்லிம் இளைஞர்கள்
சித்தார்த் மருத்துவமனையின் ரத்த வங்கியில் முண்டியடித்துக் கொண்டி ருக்கும் ஒரு முஸ்லிம் இளைஞர் கூட்டம்.
இந்த ரத்தம் ஒரு உயிரைக் காக்கப் பயன்படும் என்றால் எனக்கு மகிழ்ச்சியே என்கிறார் அப்துல் கான். இதை ராய்ட்டர் செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.
சிலர் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் தோற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் முக்கியஸ்தர் பாஷா மியான் ஷேக்.
மக்களைப் பிரிக்கும் கொள்கையாளர்கள் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முன்னணி முஸ்லிம் பிரமுகர் மவ்லானா ஜலாலுத்தீன் உமரி.
குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மும்பை மாநகரில் பிரபல இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் கதவுகள் நாள் முழுவதும் திறந்திருந்தன. காயம் அடைந்தவர்களுக்கு உறைவிடம், உணவு, குடிநீர், அவசர மருத்துவ வசதிக்கான பணியில் மும்பை இஸ்லாமிய அராபியா பள்ளிவாசல் சேவை சின்னமாக பாராட்டப் பெற்றது.
ரத்தம் வழங்கிய முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்களின் கண்ணீரால் நன்றி செலுத் தினர் ஹிந்து சமுதாய மக்கள்.
இது மும்பையின் நிஜ முகம். இனி இதை யாராலும் வெல்ல முடியாது என்று கூறுகிறார் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் லதா சிரிஷா என்ற ஹிந்து சகோதரி.
குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ வேதனைப்படுத்தும் வண்ணமே செய்திகளை வெளியிடுகின்றன.
அவர்களுக்கெல்லாம் 'சகோதரத்துவ' பாடங்களை வழங்கும் வண்ணம் முஸ்லிம் இளைஞர்களின் சேவை அமைந்திருக்கிறது.
நவ்படா, கரிப் நகர், பெஹ்ராம்படா போன்ற பகுதிகள் 1992லி93ல் சிவசேனையினர் நிகழ்த்திய வெறியாட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் உடமைகளை இழந்தனர். உறைவிடங்களையும் இழந்தனர். அப்போது நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்ற அவர்கள் தற்போது தேசத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் பெற்று விட்டார்கள்.
குண்டு வெடிப்பினைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவை எவராலும் மண்டியிட வைக்க முடியாது என்றார்.
உண்மைதான். ஃபயாஸ் போன்ற வர்களும், அக்தர் ஹுஸைன் போன்ற வர்களும் இருக்கும்வரை இந்திய மக்களின் ஒற்றுமையை எவனும் குலைக்க முடியாது.
பதவி சுகத்திற்காக மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் உள்நாட்டு பயங்கர வாதிகளும், அன்னிய நாட்டின் ஒத்துழைப்போடு சதிச்செயல் புரியும் வெளிநாட்டு பயங்கரவாதிகளும் தோல்வியைத் தழுவுவது திண்ணம்

Web Counter Code