இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, July 18, 2008

abusalih news analise about iran missile test

ஈரான் ஏவுகணை சோதனை பீதியில் இஸ்ரேல்!

-அபூசாலிஹ்


ஈரான் தனது ராணுவ வல்லமையை நிரூபித்திருக்கிறது. அத்தோடு எங்கள் நாடு தாக்கப்பட்டால் மேற்காசியாவின் கடல் வழிப்பாதையை முடக்குவோம் என்று அறிவித்ததோடு அதனை நிரூபிக்கும் விதமாக தொலை தூரம் சென்று எதிரி இலக்கை அழிக்கும் ஒன்பது ஏவுகணைகளை ஈரான் சோதனை செய்து வெற்றி பெற்றிருக்கிறது.



PROPHET -3 மூன்றாம் தீர்க்கதரிசி என ராணுவ ஒத்திகைக்கு பேர் வைத்த அந்த நாடு தனது ராணுவ பலத்தை தொடர்ந்து நிரூபிக்கும் முனைப்புடன் ஏவுகணை சோதனைகளை அடுத்தடுத்த நாட்களில் நிகழ்த்தியது.


எங்கள் நாட்டின் மீது வன் தாக்குதல் நிகழ்த்தினால் இஸ்ரேல் பற்றி எரியும் என ஈரானின் முன்னணி மார்க்க அறிஞர் அலி அல் சிஸ்தானி குறிப்பிட்டார்.
இஸ்ரேல் மே மாதம் இறுதி வாரத்திலிருந்து ஜூன் முதல் இரண்டு வாரங்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் தனது ராணுவ ஒத்திகையை நடத்தியது.


அப்போது இஸ்ரேலின் F-16, F-15, ரக போர் விமானங்கள் நூற்றுக்கு மேற்பட்ட அளவில் அந்த ஒத்திகையில் பங்கேற்று பயிற்சியை வெற்றிகரமாக நிகழ்த்தியதாக இஸ்ரேல் அப்போது குறிப்பிட்டது.


அந்த ராணுவப் போர் ஒத்திகையின் வாயிலாக இஸ்ரேல் ஓர் போர் வெறிச் செய்தியினை உலகுக்கு அறிவித்தது. ஈரானின் நடான்ஷ் நகரில் இருக்கும் அனு உலையை வெற்றிகரமாக தாக்கி அழிக்க முடியும் என இறுமாப்புடன் இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் யஹுத் பராக் அறித்தார்.


இஸ்ரேலின் வான் படைக்கு சொந்தமான F-16, F-15, விமானங்கள் 900 கி.மீ பறந்து சென்று ஈரானின் அனு உலையை தாக்கி அழிக்கும் பயிற்சியை பெற்றிருப்பதாகவும் இஸ்ரேலிய வான் படை தருக்குடன் கூறிக் கொண்டது.


வளைகுடாப் பிராந்தியத்தில் தற்போது இஸ்ரேல் மட்டுமே அணு ஆயுத வல்லமை கொண்ட நாடாக அறியப்படு கிறது. 1960களில் பிரிட்டன் தனது அணு ஆற்றல் ரகசியத்தை வாரி வழங்கியது. அமெரிக்கா நிதி ஆதரவையும், தொழில் நுட்ப அரவணைப்பையும் சளைக்காது வழங்கியது. இஸ்ரேல் என்ற தேசமே இவ்விரு நாடுகளின் கள்ளக் குழந்தை தானே.


இன்றைய தேதிக்கு இஸ்ரேலிடம் 150 முதல் 200 எண்ணிக்கை வரை அணுகுண்டுகள் உள்ளதாக ராய்ட்டர் குறிப்பிடுகிறது. ஆனால் இஸ்ரேலும் அதனை தாங்கி பிடிக்கும் மேற்குலகமும் வளைகுடாப் பிராந்தியத்தில் வேறெந்த நாடும் அணு ஆயுத வல்லமை பெறாமல் கச்சிதமாக பார்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன.


இந்நிலையில் 1980ல் இராக், மாவீரர் சதாம் ஹுசைன் தலைமையில் ராணுவ எழுச்சி பெற்று வரும் வேளையில் அணு ஆயுத ஆற்றலை உருவாக்கிக் கொள்ளும் வேளையில் இறங்கியது. அரபு நாடுகளில் ஒன்று அணு ஆயுத ஆற்றல் பெறுவதா? ஆகாது அது ஆபத்தாச்சே என அலறிய இஸ்ரேல் வஞ்சகமாக தனது போர் விமான தாக்குதலை ஈராக்கின் அணுக்கரு உலையின் மீது நிகழ்த்தி இராக்கின் அணு ஆயுதக் கனவை அணு அணுவாய் சிதைத்தது.


இஸ்ரேலைத் தவிர ஏதாவது ஒரு அரபு நாடு அந்தப் பிராந்தியத்தில் அணு ஆற்றல் பெற்று விட்டால் அப்பாவி பாலஸ்தீனர்களை தொடர்ந்து கருவறுக்க முடியாதோ? லெபனானின் அகதிகள் முகாம்களில் மற்றும் ஆம்புலன்ஸ் எனும் அவசர வாகனங்களின் மீதும் குண்டுகளை வீச முடியாதோ? என்ற அச்சத்தின் உச்சத்திலேயே இஸ்ரேல் இந்த வலு தாக்குதலை ஈராக்கின் அணு நிலையின் மீது நிகழ்த்தியது.


பெட்ரோல் என்ற வீழ்த்த முடியாத செல்வத்தை பெற்ற களிப்பில் அரபு நாடுகள் ஆனந்தத்தில் இருந்தபோது ஆயுத சாகசத்தின் நிதர்சனம் மெள்ள புரிய அந்த கள்ளம் கபடம் அறியாத முற்றிய அரபுக் குழந்தைகள் (அரபுலக தலைவர்கள்) நெளிய ஆரம்பித்தன.


ராணுவத்தை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து அரபுகள் சிந்திக்கத் தொடங்கியபோது இஸ்ரேல் உலகின் முன்னணி அணு ஆற்றல் பெற்ற நாடாக உருவெடுத்த விபரீதத்தையும் அனுபவிக்கத் தொடங்கினார்கள்.


அதன் பின்னர் வல்லரசுகளின் திரை மறைவு சதியினால் ஈரான்லிஈராக் போர் என்ற 10 ஆண்டு துயரத்தை வளைகுடாப் பிராந்தியம் அனுபவித்தது.


சகோதர யுத்தத்தால் ஈரான் கடுமை யாக தாக்கப்பட்ட போதும் ஈரான் தன்னம்பிக்கையுடன் தனது அடிகளை யும் அழுத்தமாக எடுத்து வைத்தது மார்க்க அறிஞர் அலி அக்பர் ஹாஷ்மி ரஃப் சஞ்சானி, மார்க்க அறிஞர் முஹம்மது ஹாத்தமி என அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த அதிபர்களின் ஆட்சியில் ஈரான் தனது அணு ஆய்வினை தொடர்ந்தது. யுரேனிய செழுமைப் படுத்தலை முயற்சித்துக் கொண்டே இருந்தது.



சோவியத் ரஷ்யாவின் சிதைவும் முன்பு சக்தி வாய்ந்த கட்டமைப்பாக இருந்த அந்த ஒன்றியத்திலிருந்து கவனிப்பாரற்று கிடந்த விஞ்ஞானிகள் சத்தமில்லாமல் ஈரானுக்கு இடம் பெயர்ந்ததாக பெயர்ந்ததாக ஊர்ஜிதப்படுத் தப்படாத ஒரு தகவலும் உண்டு.


இந்நிலையில், சதாம் ஹுஸைனின் அரசியல் அதிரடிகளைக் கண்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் ஈராக்கின் மீது தங்களின் பார்வையை பதித்த போது ஈரான் சந்தடியில்லாமல் ஒரு சக்தியாக மாறத் தொடங்கியது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானின் மேயராக பதவி வகித்த அஹ்மது நிஜாத் அடுத்து அதிபரானார். உலகின் பார்வை அதிபரின் மீது பதியத் தொடங்கியது. ஒட்டு மொத்த மீடியாக்களையும் தன்னை நோக்கி கவனத்தை திசை திருப்பச் செய்தார். அதிலும் 2006 ஆம் ஆண்டு ரமலானின் கடைசி வாரத்தில் 'அல்குத்ஸ்' பேரணியின் போது மஹ்மூத் அஹ்மதி நிஜாத் தெரிவித்த அதிரடி கருத்து ஆக்கிரமிப்பு சக்திகளை அலற வைத்தது.


இஸ்ரேல் என்ற நாட்டை உலக வரைப்படத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும் என அறை கூவல் விடுத்தார். உலகளாவிய பெருமையும் வலிமையும் கொண்ட நாடாகவும் அதிகாரப் பகிர்வு கொண்ட நாடாகவும் அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சு வார்த்தைகளில் குரலுயர்த்தி பேசும் வலிமை மிகுந்த பெரும் புள்ளியாகவும் தன்னைத் தானே நினைத்துக் கொண்ட இஸ்ரேலின் தருக்குக்கு விழுந்த முதல் அடியாக அஹ்மதி நிஜாத்தின் அறைகூவல் அமைந்திருந்தது.


அரபுலகம் தங்களைப் பற்றிய இலட்சியங்களை எட்டிப் பிடிப்பதற்கு 'தற்காப்பு ராஜதந்திரதை பிரயோகித்த போது உத்வேகத்துடன் அடித்துத் தாக்கி முன்னேறும் அரசியல் அதிரடியை அஹ்மதி நிஜாத் அசத்தலாகத் தொடங்கினார்.


அத்தோடு விட்டாரா? 'இஸ்ரேலை ஐரோப்பாவுக்கு மாற்று என சாட்டையை சொடுக்கினார். ஹோலோ காஸ்ட் என்ற இனப்படுகொலையை யூதர்களின் மீது நடத்தியவர்கள் ஜெர்மனியர்கள் தான் எனினும் (அது கடைந்தெடுத்த கப்சா என்பது ஈரான் அதிபரின் வாதம் எனினும் அவர்களின் வாதத்தை மடக்கினார். அதற்காக பாலஸ்தீனர்கள் ஏன் தங்களின் தாயகத்தை பறிகொடுக்க வேண்டும். இஸ்ரேல் ஐரோப்பாவுக்கு அல்லது அமெரிக்காவின் டெக்சாஸுக்கு மாற்று என இடி முழக்கம் செய்தார்.


கனவுகளின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட யூத ராஜ்யம் என்ற கருத்தோட்டம் கருகத் தொடங்கியது.


அஹ்மதி நிஜாத் மேற்குலகின் கவனிப்புக்கு உரியவரானார். ஈரானோ காண்காணிப்புக்கு உரிய தேசமாக மாறியது. ஈரான் மீது பல்வேறு அழுத்தங்களை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கொடுத்து வந்தன. பன்னாட்டு அணு ஆற்றல் முகமையின் தொடர் மேலாய்வு களால் ஈரானிய அதிகாரிகள் வெறுப்பின் எல்லைக்கே சென்றனர்.


நாங்கள் அணு ஆய்வை ஆக்கப் பூர்வ வழிகளுக்காகவே பயன்படுத்துகி றோம். ஆயுதம் தயாரிக்கும் நோக்கத் தோடு அல்ல. எங்களின் மின்சார தேவைகளுக்காக யுரேனிய செழுமைப் படுத்தலை தொடர்கிறோம் என பலமுறை விளக்கி கூறியும் மேற்குலகம் ஈரானின் கருத்தை விளங்காதது போன்றே நடித்தது.


விளங்காமல் போன மேற்குலகை திருப்தி செய்ய தாஜா செய்ய ஈரான் தயாராக இல்லை. ஈரான் அதிபரோ அடிபணிய தயாராக இல்லை. போடு தோப்புக் காரணம் என அமெரிக்கா கட்டளையிட்டால் சரிங்க எஜமான் தயவு செய்து எண்ணிக் கொள்ளுங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என தோப்புக் கரணம் போடுவதற்கு அவர் என்ன மழுப்பல் மன்னன் மன்மோகன் சிங்கா? இல்லையே?


ஈரானை கொஞ்சம் மிரட்டி பணிய வைக்க வேண்டும் என அரதப் பழசான ஒரு தந்திரத்தில் இஸ்ரேல் (அமெரிக்கா வின் ஆலோசனையுடன்) இறங்கியது. அதுதான் சுமார் 100 F-16, F-15. போர் விமானங்களை அள்ளிக் கொண்டு போய் மத்திய தரைக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் இறங்கியது இஸ்ரேல். ஈரானின் நடான்ஷ் அணு நிலையத்தை தாக்கி முற்றாக அழிப்பதே இந்த புண்ணியவான்களின் (!) திட்டம்.


900 கிலோ மீட்டர் தூரம் பறந்து இஸ்ரேலிய போர் விமானங்கள் பூச்சாண்டி காட்டின.


1980களில் கொஞ்சம் அசந்திருந்த காலக் கட்டத்தில் ஈராக் அணு நிலையத்தை அழித்ததைப் போல் தற்போது ஈரானின் நடான் அணு நிலையத்தை முதலிலும், இஸ்பஹானை இரண்டாவதாகவும் தாக்கி கலவரப்படுத் தலாம் என நினைத்து மனப்பால் குடித்திருந்த இஸ்ரேலின் எண்ணத்தில் ஈரானில் ஏவி விடப்பட்ட ஒன்பது ஏவுகணைகளும் மண்ணையள்ளிப் போட்டன.


900 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பாய்ந்து சென்று தாக்கும் வண்ணம் போர் ஒத்திகையாய் ஈடுபட்ட இஸ்ரேலின் கெடு மதிக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஈரான் தனது ஏவுகணைச் சோதனையை அல்ல சாதனையை நிகழ்த்திக் காட்டியது.


தொலைதூர நடுத்தர ஏவுகணைகளும் அப்போது ஏவி விடப்பட்டன. சஹாப் 3 என்ற ஏவுகனை 2000 கிலோ மீட்டர் பறந்து சென்று தரையிலிருந்து தரை இலக்கையும், நிலத்திலிருந்து கடலையும், கடலிருந்து வான்படையையும் குறி பார்த்து தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகள் ஏவி விடப் பட்டன.


இந்த ரக ஏவுகணைகள் பாரசீக வளைகுடாவையே முடக்கி விட வல்லவை. பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து தான் அரபுலகத்தில் 40 சதவீத எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல முடியும் என்ற நிலையில் பாரசீக வளை குடா கடல் பிராந்தியத்தையே அதில் நங்கூரம் பாய்ச்சிய, நங்கூரம் பாய்ச்சாத கப்பல்களையும் ஈரானின் சஹாப் 3 ஏவுகணைகள் மண்டையில் தட்டி என்ன சேதி என குசலம் விசாரிக்கும்.


அது மட்டுமா? ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதி, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் வான்படைத்தளம், தரைப்படைத்தளம் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களைக் கூட சின்னாப் பின்னப் படுத்த முடியுமாம். ஒரு டன் எடையுள்ள வெடிமருந்துகளைக் கூட (அணு ஆயுத மாகக் கூட இருக்கலாம்) சுமந்து சென்று தாக்கும் திறன் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.


அதோடு மற்றொரு புதிய தகவலும் வெளியாகி டெல் அவிவ்வை கலங்கடித் திருக்கிறது. 2006 ஆம் ஆண்டிலேயே ஈரான் 2000 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிர் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


ஈரானின் ஏவுகணைகளா? ஆக்கிர மிப்பு சக்திகளின் சாவுகணைகளா? என புஷ்லிஉல்மர்ட் கூட்டணி விட்டத்தை வெறிக்கும் போது ஒரு வேளைமோதி ஜெயிக்க முடியாவிட்டால் களங்கபடுத்தி சுற்ப சந்தோஷம் அடையும் தங்களது பாரம்பரிய பாணியை மேற்குலகம் பிரயோகிக்கத் தொடங்கியது.


ஈரானின் ஏவுகணை சோதனையில் ஒரு ஏவுகணை சொத்தையானது. அது இலக்கை சென்றடையவில்லை. அந்த சோதனை தோல்வியில் முடிந்தது என தொடர் பொய்கள் அணி வகுக்கத் தொடங்கின.


ஈரானின் ஏவுகணைச் சோதனையில் தொழில் நுட்ப மாயை ஏதும் உண்டா? ஒட்டு வேலை இருந்ததா? என்ற கேள்விகளை ஆய்வுக்கு உட்படுத் தாமலே அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் படு சந்தோஷமாக வதந்தி தீயைப் பற்ற வைத்தன. நம்மூரு மாலை ஏடு ஒன்று 'டுபாக்கூர்' என்பதாக படத்துடன் செய்தி வெளியிட்டது.


இந்நிலையில் இந்த படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என ஒற்றாடல் செய்தபோது இந்த ஈரானின் ஏவுகணைச் சோதனை தோல்வி என கதை பரப்பும் படம் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் AFP என்ற இரு ஊடகங்களாலும் வெளியிடப்பட்டது என்ற தகவல் கசிந்தது.


நீங்கள் கொடுத்த ஸ்டில்லின் ஆதா ரம் எது? என மடக்கிப் பிடித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோது ஈரானின் பாதுகாப்புத்துறை இணையதளம் தங்க ளுக்கு இந்த ஸ்டில்லை வழங்கியதாக அசோசியேட்டட் பிரஸ் மற்றும் AFP குறிப்பிட்டது.


இந்த கூற்றுக்கு பலமான மறுப்பும் எதிர்ப்பும் எழுந்தது. மறுப்பு வழங்கியது. பிபிஸி, எங்கள் நிறுவனத்திற்கும் ஈரான் பாதுகாப்புத்துறை இணையதளம் தான் புகைப்படங்களை வழங்கியது. அவை களில் எந்த தொழில் நுட்ப தந்திரங்களும் இல்லை என உண்மையை போட்டு உடைத்து விட்டார். பிபிஸியின் தலைமை படத்தொகுப்பாளர் பில் கூம்ஸ். இதனைத் தொடர்ந்து அவதூறு பரப்பிய ஊடகங்கள் மீது நடவடிக்கை தேவை என குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.


எமக்கு வேறு முக்கியமான பணிகள் காத்திருப்பதால் அவதூறு நோக்கத்துடன் படங்கள் வெளியிட்ட செய்தி நிறுவனங்களின் மீது இப்போதைக்கு நடவடிக்கை இல்லை என்றும் அவைகளை அப்புறமாக கவனித்துக் கொள்ளலாம் என ஈரான் அரசு கூறிவிட்டது. ஈரான் விவகாரத்தில் மேற்குலக ஊடகங்கள் பாரபட்சம் காட்டுவது இது புதிதல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் அதிபரின் உரையை தவறாக மொழி பெயர்த்து வெளியிட்டதற்காக சி.என்.என் செய்தி நிறுவனம் பகிரங்க மன்னிப்புக் கேட்டது.


நாங்கள் ஆக்க வழியிலேயே அணுவை பயன்படுத்துவோம் என பெர்சியன் மொழியில் ஈரான் அதிபர் பேசியதை நாங்கள் அழிவு வேலை களுக்காக அணுகுண்டுகளை தயாரிப் போம். எங்களை எவனும் கேள்வி கேட்க முடியாது. என சி.என்.என் செய்தி வெளியிட்டு பல மாத தடைக்குப் பிறகே ஈரானில் நுழைய முடிந்தது.


ஈரான் சோதனை ஏவுகணை படுதோல்வி என்று செய்தி பரவிய நேரத்தில் இஸ்ரேலில் அடுத்தடுத்த பரப்பரப்பான திருப்பங்கள் அரங்கேறின.


இஸ்ரேலிய ரகசிய உளவுப்படை மொசாட்டின் தலைவர் மீர் தெகான் உடனடியாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் சென்றார். ஈரானின் ஏவுகணைத் திட்டம் குறித்து ஒரு பாட்டம் அழுது தீர்த்து மூக்கை சிந்தி முடித்த பாடில்லை. அடுத்த சில நாட்களிலே இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் யஹுத் பராக் அமெரிக்கா பறந்தார். இவர் இஸ்ரேலில் தனியாக இருக்கப் பயந் தாரோ என்னவோ? அவர் வாஷிங்டனில் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், துணை அதிபர் டிக்செனி, வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டி, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டிஃபன் ஹேட்லி போன்றோரை சந்தித்து ஈரான் மீது எப்படியாவது போரை அறிவியுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.


அடுத்த வாரம் இஸ்ரேலிய தரைப் படைத் தளபதி கபி அஸ்கனாஜி அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அவர் அமெரிக்க ராணுவ தளபதிகளை சந்தித்து ஆலோசனை நிகழ்த்த உள்ளதாகவும் இஸ்ரேலிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேலின் ஒரே ஆசை அமெரிக்கா தலைமையில் ஈரானுடன் ஒரு போர் நடத்தப்படவேண்டும் என்று அந்த தைரியசாலிகள் அமெரிக்காவிடம் 'அழுகாச்சி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.


இதனிடையே ஈரானுடன் போர் தொடுத்து வெற்றி பெறும் வல்லமை இஸ்ரேலுக்கு இல்லை என அமெரிக்க அனைத்துப் படைவீரர்களின் தலைவர் தளபதி அட்மிரல் மைக்கேல் முல்லன் தெரிவித்து இருக்கிறார். இஸ்ரேலின் பலவீன உளவுத்துறையும் திறமையற்ற ராணுவமும் ஈரானுடன் போரிட்டு வெற்றி வெற்றுவிட முடியாது என தெரிவித்தார்.


2003க்குப் பிறகு ஈரானில் சி.ஐ.ஏவோ, மொசாட்டோ நுழைய முடியவில்லை என்று பெயர் கூற விரும்பாத பெண்டகன் உயர் அதிகாரி கூறியதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.


சுருங்கக் கூறினால் ஈரானின் ஏவுகணைச் சோதனை இஸ்ரேலை பீதியில் பிதற்ற வைத்திருப்பதே உண்மை

நான்டெட் மீண்டும் சங்பரிவார பயங்கரவாதிகள் சிக்கினர்

நான்டெட் மீண்டும் சங்பரிவார பயங்கரவாதிகள் சிக்கினர்

கடந்த ஆண்டு மகாராஷ் டிர மாநிலம் நான்டெட் பகுதியில் சங் பயங்கரவாதிகள் ஏராளமான ஆயுதங்களைத் தயாரித்து வந்ததையும், தயா ரித்த ஆயுதங்களை பதுக்கி வைத்தபோது அது வெடித்த தால் சங் கும்பலைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பலியானதும் இந்த நாடு அறியும்.


2008 ஜூலை 5ஆம் தேதி நான் டெட்டில் மீண்டும் சங் பயங்கரவாதி களின் சதிச்செயல்கள் வெளியாகி உள்ளன.


மோகன்லால் ஹர்தியோஜி மற்றும் போர்லால் பக்சு என்ற இருவரும் நான்டெட் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். இவர்களது வீடுகளை சோதனையிட்டபோது படுபயங்கர வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட் கள் கிடைத்துள்ளன.


இரண்டு அதிபயங்கர தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து உடனடியாக செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் வேண்டுமென்றே அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்யும் போது ஒரு டஜனுக்கு மேற்பட்ட ஒலிபெருக்கி களுக்கும், ஏராளமான கேமராக்களுக்கும் நடுவில் ஜம்பம் அடிப்பது போன்ற குரூரமான நகைச்சுவை காட்சிகள் இந்த பயங்கரவாதிகளின் கைது சம்பவத்தில் நடக்கவில்லை. இதுகுறித்து சமாதானம் மற்றும் நீதிக்கான சமூக அமைப்பை நடத்திவரும் ஃபெரோஸ்கான்காஜி, ''ஜூலை 5ஆம் தேதி நடந்த இந்த கைது நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக ஏன் வெளியிடப்படவில்லை?'' என்று கேள்வி எழுப்பியவர், ''முஸ்லிம் அல்லாதவர்கள் கைது செய்யப்பட்டால் அதுகுறித்து உண்மைகளை வெளியிடுவதற்கு காவல் துறை ஏன் தயங்க வேண்டும்?'' என்றார்.


நான்டெட்டில் மீண்டும் வெடிகுண்டு கள் சிக்கியதையும், சங் பயங்கரவாதிகள் கையும் களவுமாக பிடிபட்டதை 'இன்குலாப்' என்ற உருது செய்தி ஏடு அம்பலப்படுத்தி இருக்கிறது.


பிடிபட்ட சங்பரிவார் பயங்கரவாதி களில் மோகன்லால் ஹர்தியோஜி (வயது 20) ராஜஸ்தானின் ஜத்ராஸ் பகுதியைச் சேர்ந்தவன். மற்றொருவனான போர்லால் பக்சு (35) ராஜஸ் தானின் கோவிந்த்புரா பகுதி யைச் சேர்ந்தவன். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த பயங்கரவாதிகளின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் விவரம்:


1) எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் 365


2) ஜெலட்டின் குச்சிகள் 400


3) பேட்டரிகள் பொருத்தப்பட்ட அதிபயங்கர வெடிபொருட்கள் கைப் பற்றப்பட்டன.


இந்தியாவில் கடந்த 60 ஆண்டு களாகவே சங்பரிவார் பயங்கரவாதிகள் தீவிரவாதத்தை நிகழ்த்தி வருகிறார்கள். அது தற்போது அவர்கள் அம்ப லமாகும் வேளை வந்துவிட்டது.


1) நான்டெட் (2006)
2) தென்காசி (2008)
3) தானே (2008)
4) நவி மும்பை (2008)
5) தற்போது மீண்டும் நான்டெட் (2008)


என சங் பயங்கரவாதிகளின் தீவிர வாதச் செயல்கள் தொடர்ந்து அம்பல மாகி வரும் நிலையில் நாட்டையும் மக்களையும் காக்கும் பொறுப்பிலுள்ள அரசுகள் ஐந்து காசுக்கு பெறுமான மில்லாத அமெரிக்க அணுசக்தி ஒப்பந் தம் குறித்து தனது முழு கவனத்தையும், சக்தியையும் அதற்காக விரயமாக்கிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு

Web Counter Code