இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, November 14, 2007

கருநாகம் புகுந்த கர்நாடகம்
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகவில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. 20 மாதங்கள் மதசார்பற்ற (?) ஜனதாதளத்தின் தலைமையில் ஆட்சியும், அடுத்த 20 மாதங்களுக்கு பாரதீய ஜனதா தலைமையிலும் ஆட்சி செய்வது என வாய்மொழியாக முடிவு செய்யப்பட்டது.

சந்தர்ப்பவாத தேவேகவுடா கட்சியினர் தங்களுக்கு வாக்களித்த மக்களை மடையர்களாக எண்ணிக்கொண்டு மதவாத பாஜகவுடன் கை கோர்த்தனர். 20 மாதங்கள் முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த தேவேகவுடாவின் புதல்வர் குமாரசாமி பதவி சுகத்தில் திளைத்திருந்த வேளையில் உடுப்பியும் மங்களூரும் காவி பாசிஷவாதிகளிடம் மாட்டிக்கொண்டு திணறித் தவித்தது. அப்பாவி முஸ்லிம்கள் சொல்லொணா துயரத்திற்கு இலக்காயினர்.

மதசார்பற்ற ஜனதாதளம் என்ற பெயரில் கட்சி நடத்துபவர்கள் வைத்துக் கொண்ட வெட்கங்கெட்ட கூட்டணியால் இத்தகைய அவலம் நடந்தது.

மதசார்பற்ற ஜனதாதளம் தனது கொள்கையைக் காற்றில் பறக்கவிட, பாஜக கொள்ளை பிடிப்பு பிசகாமல் நடந்து கொண்டது. அதோடு கர்நாடகாவை குஜராத்தாக மாற்றுவதே தமது இலட்சியம் என்றும் முழங்கினார்கள்.

பலதரப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மதசார்பற்ற(?) ஜனதா தளம், மக்களின் பார்வையில் மிகவும் இழிந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

'முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது பன்முக நடிப்புத் திறமையைக் காட்டியதன் மூலம் ஆஸ்கார் விருது கூடப் போதாது இவரின் திறமைக்கு'' என தொழில் முறை நடிகர்கள் கூட மூக்கில் விரலை வைத்தனர்.

பாஜகவினர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாநிலத்தை சுரண்டி காவிக் காடாக்கி கலவரப் பிரதேசமாக்கினர்.

மதசார்பற்ற ஜனதாதளத்தின் காலம் முடிந்த பிறகு பாஜகவின் வன்முறை என காவிப்பட்டாளம் ஆவலோடு காத்திருந்தது.

பதவியைப் பிரிய மனமில்லாத தேவேகவுடா கட்சியினர் பாஜகவைப் பற்றி புதிதாக அறிந்து கொண்டதைப் போல, மதவாத கட்சி என்றும், கலவர பூமியாக கர்நாடகாவை மாற்றப் போகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

முதன்முறையாக தென்னிந்தியாவில் ஆட்சியமைக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்ற தவிப்புடன் பாஜக கிடந்து அல்லாட வேறு வழியில் முதல்வர் பதவியை பெற முடியுமா என மதசார்பற்ற (?) ஜனதா தளம் வெறியுடன் திண்டாட இந்திய ஜனநாயகத்தை இழிவுப்படுத்திய பெருமைக்கு (!) இவ்விரு தரப்பினரும் ஆளானார்கள்.

சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக டெல்லியிருந்து தினமும் புறப்பட்டு வந்த பாஜக தலைவர்கள் தேவேகவுடா தரப்பினரை தாஜா செய்வதை தொடர்ந்தனர். அது பாஜகாவா இல்லை 'தாஜா'வா என்று சந்தேகம் எழுப்பும் அளவுக்கு அவர்களது நடவடிக்கை இருந்தது.

தேவேகவுடா குடும்பம் நாசமாக போகட்டும் என கிராமத்துக் மூதாட்டி போல சாபம்விட்டனர் பாஜகவினர்.

தற்போது திரை மறைவில் நடந்த பேரங்களால் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தேவேகவுடா கட்சி ஆதரவு வழங்குவதோடு அமைச்சரவையிலும் இடம் பெறப்போகிறது.

முதல்வராக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான எடியூரப்பா முதல்வராகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அத்வானிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் முகமெல்லாம் மலர்ச்சி அகமெல்லாம் பூரிப்பு.

சமூக நீதிக்கான தளமாக இருந்த கர்நாடகாவில் கருநாகப் பாம்பு குடி புகுந்ததைப் போன்று காவி பாசிஷ வாதிகள் அரசமைத்து விட்டனர்.

உலகம் மறக்க முடியாத பாசிஷ பயங்கரவாதிகள் இவர்கள் என்பதை காந்தியாரின் படுகொலையும், பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பும், குஜராத் இனப்படுகொலையும் நிரூபித்திருக்கிறது.

கர்நாடகத்தின் சமாதானத்தை சாய்க்க வடநாட்டில் தங்கள் தளங்களை இங்கு இழந்தவர்கள் இங்கு வந்துவிட்டனர். பதவிக்காக பாசிஷவாதிகளுக்கு பல்லக்கு தூக்கியவர்களுக்கு வாக்களித்தோமே என வேதனையில் விம்முகிறார்கள் சிறுபான்மை சமூகத்தினர்.

சந்தர்ப்பவாத சதிகாரர்களுக்கும் பாசிஷ பயங்கரவாதிகளுக்கும் வாக்குச்சீட்டின் மூலம் பதிலடி கொடுக்க அவர்கள் தயாராகி வருகிறார்கள்
ராஜஸ்தான்
மார்க்க அறிஞர்கள் கைது லி சித்திரவதை! பாஜக அரசு அட்டூழியம்!

ஹபீபா பாலன்

அஜ்மீர் தர்ஹாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பள்ளிவாசல் இமாம்களை துன்புறுத்தி கைது செய்யும் போக்கு ராஜஸ்தான் மாநில முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரமலான் மாதம் கடைசி நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த அந்த அசம்பாவிதத் தில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்களாக பள்ளிவாசல் இமாம்களை கைது செய்தது அராஜகத்தின் உச்சக்கட்டமாகும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அஜ்மீர் தர்ஹா குண்டு வெடிப்புக்காக துப்பறிய அமைக்கப்பட்ட சிறப்புக் காவல் படை, இதுவரை 12 இமாம்களை சிறையில் அடைத்துள்ளது. பள்ளிவாசல் பேஷ் இமாம், மவ்லவிகள் மற்றும் மதரஸா ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் அடங்கு வர். அந்த அப்பாவி மவ்லவிகளை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தாமல் காவல் துறை லாக்அப்லிகளிலேயே அடைத்து தாக்கி துன்புறுத்துவதாகவும் முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சட்டவிரோதமாக வளைத்துச் செல்லப் பட்ட அவர்களிடம் துன்புறுத்தி தீவிரவாத ஆதரவு ஒப்புதல் வாக்குமூலங்களை வாங்கியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஷிபுர் ரஹ்மான் என்ற மதரஸா ஆசிரியர் ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஷிகார் மாவட்டத்தில் உள்ள கண்டேலா கிராமத்தின் பள்ளிவாசல் பேஷ்இமாமான அப்துல் ஹபீஸ் ஷமீம் சட்டவிரோதமாக வளைக்கப்பட்டார்.

ச்ரூ மாவட்டத்தின் சர்தாசாஹர் பகுதியில் உள்ள மதரஸா ஜாமியா லத்தீஃபிய்யாவின் ஆசிரியரான ரஹ்மான், மற்றும் மகராஷ்ட்ரா மாநிலத் தின் உஸ்மானாபாத் பகுதியைச் சேர்ந்த மவ்லவி இம்ரான் அலி உட்பட 12க்கும் மேற்பட்டோர் ராஜஸ்தான் காவல்துறை யினரால் சட்டவிரோத காவலில் வைக்கப் பட்டு துன்புறுத்தப்பட்டனர்.

குண்டு வெடிப்பினால் இழப்பினை சந்தித்த முஸ்லிம்களை ஆறுதல்படுத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க திராணியற்ற ராஜஸ்தான் பாஜக அரசு, முஸ்லிம் மார்க்க அறிஞர்களை துன்புறுத்தும் செயல் உள்நோக்கம் கொண்ட ஈனத்தனமான செயல்.

முஸ்லிம்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இடையே கடும் கொந்தளிப் பினை ஏற்படுத்தியது.

உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்க எத்தகைய முயற்சியும் மேற் கொள்ளாமல் முஸ்லிம்களை மட்டுமே வஞ்சம் தீர்க்கும் செயல் மூலம். குண்டு வைத்த சதிகாரர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே இச்செயல் உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் ஆத்திரம் கொப்பளிக்க கருத்து தெரிவித்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட மவ்லவி இம்ரான் அலி உள்பட மற்றவர் கள் விடுவிக்கப்படவில்லை. இது மனித உரிமையையும் அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் என ராஜஸ்தான் முஸ்லிம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் காரி மொயினுத்தீன் தெரிவித்துள்ளார்.

அப்பாவி முஸ்லிம்கள் 3000 பேர்களை போலி என்கவுண்டர் மூலமும் நெருப்பிலிட்டும் கொன்றும் கொன்ற குஜராத் அரசைப் போன்று ராஜஸ்தான் பாரதீய ஜனதா அரசும் மனித உரிமை களை காலில் போட்டு மிதிக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உடுப்பியை யும் மங்களூரையும் கலவரக் காடாக்கி யவர்கள் முதல்வர் பதவியை பிடித்துள்ள னர். இது சமூகநல ஆர்வலர்களையும் தேசப்பற்றாளர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இத்தகைய சக்திகள் தண்டிக்கப் படுவது எப்போது?

Web Counter Code