இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, July 19, 2007

இன்றைய முக்கிய செய்திக்ள்

தமிழக அரசு புதிதாகப் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளை அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த அண்ணா பல்கலைக் கழகங்களே நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார். இதன்படி நெல்லையில் புதிய அண்ணாப் பல்கலைக் கழகம் துவங்கப்பட உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. நேற்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதனால் 11 மாவட்டங்களில் குறுவை 1.50 லட்சம் ஏக்கரும், 11 லட்சம் ஏக்கர் சம்பா நிலமும் பயனடையும் என பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கிகள், பெட்ரோல் நிலையங்களை அடுத்து நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலங்களில் ரயில் டிக்கட்டுகள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் புதிய குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதன் முடிவுகள் சனிக்கிழமை தெரியவரும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்தை ஜெயலலிதா கூட்டியிருக்கிறார். இதனிடையில் பிரதீபா பற்றி குற்றச்சாட்டுகள் குறித்த புதிய புத்தகம் இன்று காலை டெல்லியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் உளவு செயற்கை கோளை வாணிப ரீதியில் எதிர்வரும் செப்டம்பரில் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு 60 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
1993லில் நிகழ்ந்த மும்பை குண்டு வழக்கில் மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரையும் சேர்த்து மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்ற சாட்டப்பட்ட நூறு பேரில் 81 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு உதவியுடன் மருத்துவம் படித்துவிட்டு பாமர மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் பேசி மருத்துவம் செய்வது வேதனை அளிப்பதாக இருக்கிறது என கவிஞர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தினமலர் நாளேட்டின் நிர்வாகியும் ராமசுப்பு என்ற அந்துமணி என்ற ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட்ட மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்துமணி முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

ஹனீஃப்23 மணி நேரம் தனிமைச் சிறை

ஹனீஃப்23 மணி நேரம் தனிமைச் சிறை

அனைத்து வசதிகளும் உரிமைகளும் ஹனீஃபுக்கு வழங்க வேண்டும் பிரதமர் வலியுறுத்தல்.

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் ஹனீஃபை தீவிரவாதி போன்றே நடத்த முடிவு செய்திருப்பதாகவும், ஒரு நாளுக்கு 23 மணி நேரம் தனிமைச் சிறையில் அடைக்கப்படுவதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. போலீஸ் காவல் முடிந்து குயின்ஸ்லான்ட் சிறை அதிகாரிகளிடம் ஹனீஃப் ஒப்படைக்கப்பட்டார். தமது வழக்கறிஞரை சந்திக்கவும், தொழுகைக்காக இமாமை சந்திக்கவும் மட்டுமே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாக்டர் ஹனீஃபுக்கு சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து வசதிகளையும் உரிமைகளையும் வழங்குமாறு ஆஸ்திரேலிய அரசை பிரமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
டாக்டர். ஹனீஃப் நடத்தப்படும் விதம் குறித்து ஏற்கெனவே இந்தியா கவலை தெரிவித்தது.
செவ்வாய் கிழமை டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரை வெளியுறவுத் துறை அதிகாரிகள் அழைத்து ஹனீஃபை நியாயமாக நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் முதன்முறையாக ஹனீஃப் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே ஹனீஃபின் மனைவி பிர்தௌஸின் விசாவையும் ஆஸ்திரேலியா ரத்து செய்து விட்டது. என்ஜினியரான பிர்தவ்ஸ் தனது முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காகவே இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய இளைஞர்களை குறி வைக்கும்

இந்திய இளைஞர்களை குறி வைக்கும் சர்வதேச பயங்கரவாதம் அதிர்ச்சி தகவல்கள்

பிரிட்டனின விமான நிலையத்தின் முன்புறம் கஃபில் என்பவர் கேஸ் சிலிண்டர்களை நிரப்பிய வாகனத்துடன் தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு மோதியதால் வாகனம் தீப்பிடித்தது. கஃபில் மனையில் தற்போது பிரிட்டன் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடி வருகிறார். 92 சதவீதம் உடல் எரிந்த நிலையில் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ள தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளாஸ்கோ விமான நிலையத்தின் முன்புறத் தில் இருந்த பாதுகாப்புத் தடுப்புகளை மீறிச் சென்று காரிலிருந்து குதித்த நபரை கைது செய்து விட்டதாக பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் ஈராக்கைச் சேர்ந்த டாக்டர் பிலால் அப்துல்லாஹ் என்றும் அவரும் இந்த வெடிக்காத குண்டு வெடிப்பில் முக்கிய தொடர்புடையவர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
டாக்டர்களின் சதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நிகழ்வில் எட்டு பேருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என பிரிட்டிஷ் புலனாய்வுத்துறையினரால் நம்பப்படுகிறது.
கஃபில் இனி உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாத நிலையில் பிரிட்டிஷ் புலனாய்வுத் துறை வெளியிடும் தகவல்கள் மட்டுமே உலகம் நம்ப வேண்டியதாயிற்று.
எரிவாயு நிரம்பிய வாகனத்தை கஃபில் ஒட்டி வந்ததாக பிரிட்டன் காவல்துறை கூறுகிறது. எரிவாயுவால் வாகனம் ஓட்டப்படுவது பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது. உலகின் பல நாடுகளில் வாகனங்கள் எரிவாயு சிலிண்டர்களில் ஓடுகின்றன.
ஆனால் எரிவாயு சிலிண்டர் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்தாரா? மோதினாரா? அல்லது நடந்தது விபத்தா? உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி வந்த வாகனத்தை மோதச் செய்த போது 90 சதவீதத்திற்கும் மேலாக கஃபிலின் உடல் எரிந்து போனதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் அருகிலிருந்து அதே ஜீப்பிலிருந்து குதித்தாகக் கூறப்படும் பிலால் அப்துல்லாஹ்வுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பத்திரமாக குதித்தது எப்படி? என்பது போன்ற விடை தெரியாத வினாக்கள் விடைத்து நிற்கின்றன.
ஆனால் இது குறித்து எந்த மேற்குலக ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை. இந்திய ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.
கஃபிலை யாரும் பார்க்கவும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இன்னும் அவரை விசாரித்து வருவதாகக் கூறிக் கொள்கிறது.
கிளாஸ்கோ விமான நிலைய முகப்பில் எரிந்த நிலையில் விழுந்தவன் தனது மகன் தான் என கஃபிலின் பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்தாகவும் செய்திகள் வெளியாயின.
இந்திய புலனாய்வுத் துறையும் கஃபிலின் மீது சந்தேகம் இருப்பதாகவே தெரிவித்திருக்கிறது.
ஒரு தலைச்சார்பான இந்த தகவல்களே சந்தேகத்திற்குரியவை தான் என்பதே நடுநிலையாளர்களின் வாதம்.
இந்நிலையில் கிளாஸ்கோ சம்பவம் நிகழ்ந்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூருக்கு செல்ல விமான நிலையம் வந்த டாக்டர் ஹனீஃப் என்ற 27 வயது இளைஞரை ஆஸ்திரேலிய நிர்வாகம் விசாரணை வளையத்தில் வைத்தது.
டாக்டர் ஹனீஃப் சமீபத்தில் பிறந்த தனது பெண் குழந்தையை பார்ப்பதற்காக ஆசையுடன் புறப்பட்டவருக்கு ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் இச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹனீஃபின் குடும்பத்தினரும் கடும் சோகத்தில் மூழ்கினர்.
ஏதும் குற்றச்சாட்டுகள் அவர் மீது நிரூபணமாகாத நிலையில், அவரை விசாரணைக்காக முடக்கி வைத்த ஆஸ்தி ரேலிய நிர்வாகத்தின் மீது கடும் விமர்சனங் கள் எழுந்தன.
ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரென்டன் நெல்சனும், பிரதமர் ஜான் ஹோவர்டும் ஹனீஃபின் மீது இது வரை எந்தக் குற்றச் சாட்டும் நிரூபிக்கப் படவில்லை என்று கூறினார். அவர் மீதான விசாரணை முடிந்த பிறகு அவர் விடுவிக்கப்படுவார், நாளை விடுவிக்கப்படுவார் என இந்திய செய்தி ஏடுகளும் ஆருடங்களை கூறிவந்தன.
ஏற்கனவே பெங்களூர் காவல்துறை யும் டாக்டர் ஹனீஃபை குற்றவாளியாக உறுதிபடுத்தும் விதத்தில் எந்தவகையான ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹனீஃப் ஆஸ்ரேலிய நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் ஒரு நிமிடம் தனது மனைவியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது தான் விரைவில் விடுவிக்கப்படுவேன் என்று நம்பிக்கை யுடன் பேசினார். தனக்காக வீட்டிலுள் ளோர் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனை டாக்டர் ஹனீஃபின் மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா தெரிவித்திருந்தார்.14.07.07 அன்று டாக்டர் ஹனீஃப் தாயகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 14 நாட்கள் விசாரணையில் வைத்திருந்து திடீரென அவர் மீது குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய அரசு சுமத்தியது.
இதனிடையே டாக்டர் ஹனீஃபை விரைவில் விடுவிக்க வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை வேண்டுகோள் விடுத்தது.
அனைத்தையும் அலட்சியம் செய்து ஆஸ்திரேலிய அரசு டாக்டர் ஹனீஃப் மீது குற்றச் சாட்டை பதிவு செய்தது. ஹனீஃப் தனது தூரத்து உறவினரான கஃபீலுக்கு சிம்கார்டு ஒன்றை கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறது.
ஆஸ்திரேலிய அரசின் இந்தச் செயல் ஒரு நாடகம் என ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய தூதரகம் கூறியது. இது நாடகக் காட்சி போன்றே இருப்பதாக ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் சி.ஜே. ராவ் தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு உத்தரவாதம் தரவேண்டும் என சி.ஜே. ராவ் தெரிவித்தார்.
ஒருவருக்கு சிம்கார்டு கொடுப்பது ஒன்றும் குற்றச்செயலல்ல. இது அடிப்படையற்றது என ஹனீஃபின் மனைவி அர்ஷியா தெரிவித்தார்.
இதற்கிடையில் ஹனீஃபுக்கு ஜாமீன் தரக்கோரி அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூசோ நீதிமன்றத்தில் மனு செய்தார். 16.07.07 அன்று ஹனீஃபுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
வெடிக்காத குண்டு விவகாரத்தில், உண்மை நிலவரங்கள் வெளிவராத நிலையே நீடிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல், தீவிரவாத தாக்குதல் என பீடிகைகள் பலமாக இருந்தாலும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவன் ஒரு முஸ்லிம் இளைஞர்தான். இந்நிலையில் எங்கும் எவரும் பாதிக்கப்படாத சூழ்நிலையில் இந்திய முஸ்லிம்கள் குறித்து உலகெங்கும் வாதப் பிரதிவாதங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
உலகம் தழுவிய ஜிஹாத் இந்தியாவில் பரவி வருவதாக ஒரு சாரார் இது போன்ற சம்பவத்துக் காகவே காத்திருந்தது போல் தங்கள் கண்டுபிடிப்புகளை (!) கருத்துக்களாக தெரிவித்து வருகிறார்கள்.
இந்தச் சதிச்செயலுக்கு 'டாக்டர்கள் சதி' என்று பெயரிடப்பட்டது ஏன்? கைது செய்யப்பட்டுள்ள கஃபிலின் சகோதரர் சபீல் மற்றும் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது ஹனீஃப் இருவர் மட்டுமே டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடக்காதவைகளை பெரிதுபடுத்தி அதன் விசாரணை விவரங்களைக்கூட வெளியிடாமல் முஸ்லிம்களை சந்தேக வளையத்தில் சிக்க வைக்கும் செயலை முன்னணிப் பத்திரிக்கையாளர் அஸ்கர் அலி என்ஜினியர் கண்டித்திருக்கிறார்.இந்த சமுதாயம் தீவிரவாதிகளை ஆதரித்ததற்கு எந்த ஆதாரமும் இதுவரை கிடைத்ததில்லை என பொருளாதார அறிஞரும் சச்சார் குழுவின் உறுப்பினருமான டாக்டர் அபூசாலிஹ் ஷெரிப் தெரிவித்தார்.
உலகளாவிய பயங்கரவாதம் என்பது மேற்குலகால் உருவாக்கப்பட்டது அதற்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஜமியத்தே உலமாயே ஹிந்த்தின் மஹ்மூத் மதானி தெரிவித்தார்.
இந்த ஒரு சமுதாயத்தை மட்டும் முத்திரை குத்தி குற்றம் சாட்டுவது ஏன் ஐ.ஆர்.ஏ என்ற ஐரீஷ் தேச தீவிரவாதப் படை எந்த செயலை செய்தாலும் அதற்கு கத்தோலிக்கர்களை குற்றம் சாட்டுவ தில்லையே? ஆனால் முஸ்லிம்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன் என குமுறுகிறார் டெல்லிப் பல்கலைக் கழக மாணவர் அக்தர் அலிகான்.
மும்பை ரெயில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஓராண்டுக்குப் பிறகு அதன் சோக சம்பவங்களை அனைத்து ஊடகங்களும் விரிவாக வெளியிடுகின் றன. ஆனால் மும்பையில் நிகழ்ந்த முஸ்லிம் விரோத வன்முறை குறித்தோ, குஜராத் கலவரங்கள் குறித்தோ இதுவரை அவர்கள் சிறிய செய்தியையாவது வெளியிட்டது உண்டா? என ஆவேசமாகக் கேட்கிறார் அஸ்கர் அலி என்ஜினியர்.
முஸ்லிம்கள் மீதான கொடுமைகளை மீடியாக்கள் மறந்து விடுகின்றன. 92ல் நடந்த மும்பைகுண்டு வெடிப்பில் தொடர்புடையவரூக்கு தண்டணை வழங்கப்பட்டதைப்போல் கலவரத்தில் தொடர்புடை யவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. மீடியாக்கள் கூறாமல் கூறும் மவுனச் செய்தி இது தான் ''முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாங்கள் கண்டு கொள்ளவும்மாட்டோம் ஆனால் முஸ்லிம்களை பிரச்சினைக்குரியவர்களா சித்தரிப்போம்'' என்பதே அது. எந்த இந்திய முஸ்லிமும் எந்த சர்வதேச தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் அல்ல என ராஜ்யசபா எம்.பியும் ஜமாத்தே உலமாவின் பொதுச் செயலாளருமான மஹ்மூத் மதானி தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம் அறிவுஜீவிகள், இந்தியா விலும் உலக அளவிலும் தற்போது நடைபெற்று வரும் சில மின்னல் வேக மாற்றங்களுக்கும் தற்போது வரும் செய்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
'அல்காய்தா ஹிந்த்' என்ற பெயரில் அல்காயிதாவின் இந்தியப் பிரிவு ஒன்று வீடியோ மூலம் இந்திய அரசுக்கும், காஷ்மீர் மாநில தலைவர்களுக்கும் மிரட்டல் விடுத்திருந்தது. இந்தியாவில் அல்காய்தா என்று இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தியை பரப்பின.
இந்த பரபரப்பான செய்தி குறித்து முஸ்லிம் அறிவு ஜீவிகள் குழு சந்தேகம் தெரிவித்தது. இஸ்ரேலியப் படைப்பிரிவு இந்தியா வந்த பிறகே இம்மாதிரியான வினோதமான செய்திகள் வெளிவருவ தாகவும் இஸ்ரேலிய உளவுப் பிரிவுக்கும், இந்த புதிர் செய்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என ஙஒஎ எனும் அந்த அமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. ஙஒஎலின் ஒருங்கிணைப்பாளர் பெரோஸ் மிதிபோர்வாலா வெளியிட்ட அறிக்கை யில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அல்காயிதா வீடியோ இஸ்ரேலிய உளவுப் பிரிவின் ஆலோசனையின்படி வெளியிட்டதாக இருக்கலாம் என ஙஒஎ தெரிவித்திருக்கிறது. இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும் உதவிகரமாக விளங்கியுள்ளது.
அல்காய்தா என்பது சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் முன்னணி அமைப்பே தவிர வேறல்ல, அமெரிக்க யூத உளவுத்துறை யினரே உலகமெங்கும் பயங்கரவாதங் களை கட்டவிழ்த்து விடுகின்றன என்பது சமீபத்தில் லண்டன் மற்றும் லால் மஸ்ஜித் சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது. மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபாத் பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கையில் மொசாத் அல்காய்தாவின் திட்டங்களை அட்டவணை போட்டுக் கொடுக்கிறது என்று தெரிவித்ததை பெரோஸ் நினைவு கூர்ந்தார்.
சிரியாவின் அதிபர் பஷருல் ஆஸாத் தும் அல்காய்தா அமைப்பு இஸ்ரேலின் மொசாட்டால் இயக்கப்படுகிறது என்று கூறினார். இன்று 50 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் 9/11 நியூயார்க் உலக வர்த்தக வளாகத் தாக்குதல் சி.ஐ.ஏ மற்றும் மொசாட்டின் கைவரிசையே என்றும் நம்புவதாக பெரோஸ் தெரிவித்திருக்கிறார்.
பொறியாளர் கஃபீலின் பெற்றோர்
இந்தியாவில் மதக்கலவரங்களால் முஸ்லிம்கள் மோசமாக பாதிக்கப்படும் பொழுது அதை சிறிதாக்கி காட்டுவதற்காக அதை மறக்கடிப்பதற்காக குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்களின் மாண்பினை குலைக்கும் சதி அகில இந்திய அளவில் திட்டமிடப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகின்றது.
பயங்கரவாதத்திற்கு எதிரான பேரில்(?) தற்போது ஆஸ்திரேலியாவும் இணைக் கப்படுகிறது. விசாரணையில் வைக்கப் பட்டிருந்த டாக்டர். ஹனீப் 10 நாட்களுக்கும் மேலாக எவ்வித குற்றச் சாட்டையும் சுமத்தாமல் இருந்தபோது பிரிட்டினிலிருந்து காவல்துறை படை ஒன்று ஆஸ்திரேலிய அதிகாரிகளை சந்தித்த பின்பு திடீரென டாக்டர் ஹனீஃப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பெங்களூரில் அறிவியல் கழகத்தில் விஞ்ஞான பேராசிரியர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அள்ளிச்சென்று அக்குவேறு ஆணிவேறாக விசாரித்தனர். விசாரிக்கப்பட்ட அனைவரும் எவ்வித குற்றமும் செய்யவில்லை என விடுவிக்கப்பட்டனர். ஆனால் அப்போது பெங்களூர் தீவிரவாதிகளின் குறியாக மாறிவிட்டது என்றார்கள். ஓராண்டு கடந்த பின்பும் உண்மைக் குற்றவாளி யைக் கண்டு பிடித்த பாடில்லை.
தற்போது பிரிட்டன் கிளாஸ்கோ விமான நிலைய சம்பவம் தொடர்பாக தெளிவற்ற ஒரு கதையைக் கூறி குழப்பி வருகிறார்கள்.
இந்தியா சுயசார்புடன் எழுந்து நின்று விடக்கூடாது. இனமோதல்களை உருவாக்க பிணங்களை குவித்தால் தங்கள் நாட்டின் பொருளாதாரவளத் தினை மேம்படுத்த முடியும். வல்லரசுக் கனவில் இருக்கும் இந்தியாவை இற்றுப் போக செய்யலாம் என முடிவெடுத்தே அமெரிக்க மற்றும் இஸ்ரேலில் சக்திகள் செயல்படத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் முப்பது கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த சக்தியான முஸ்லிம்களை பலவீனப் படுத்தினால் விளையும் குழப்பங்களை வைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவே மேற்குலக சக்திகள் முனைப்போடு செயல்படுகின்றன.
சொல்லி வைத்தாற்போல் இந்திய ஊடகங்கள் இந்திய முஸ்லிம் இளைஞர் களுக்கும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்கள் என்று அழைக்கப்படும் அமைப்புகளுக்கும் தொடர்புண்டா? இல்லையா? என்பது குறித்து விவாதங்கள் தொடங்கி விட்டன.
அனைத்துக் காட்சிகளையும் தயாரித்து இயக்குபவர்கள் யார் என்பது விவர மறிந்தோர் அனைவருக்கும் தெரியும். புல்லுருவிகளின் வஞ்சகங்களுக்கு இடம் அளிக்காது 100 கோடி இந்தியர்களும் ஒற்றுமையுடன் கை கோர்ப்பதே அந்த கருங்காலிகளின் முகங்களில் கரி பூசுவதாக அமையும்

அப்பாவிகளின் ரத்தத்தால் சிவந்த சிவப்பு மஸ்ஜித்

பாகிஸ்தானின் புகழ்பெற்ற லால் மஸ்ஜிதில் பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
அதில் பெரும்பாலானோர் அப்பாவி மதரஸா மாணவர்கள் மற்றும் மாணவிகள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இதயப் பகுதியில் அமைந்துள்ளது லால் மஸ்ஜித்.
இந்த சிவப்பு பள்ளிவாசல் வளாகத்தில் ஜாமியா ஹஃப்ஸா என்ற பெண்கள் மதரஸாவும், ஜாமியா ஃபரிதிய்யா என்ற ஆண்கள் படிக்கும் மதரஸாவும் செயல்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே 'லால் மஸ்ஜித்' முதல் பக்க செய்தியானது. மார்ச் மாதம் 27ல் விபச்சார விடுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி குற்றவாளிகளை சிறைப்பிடித்தது.
மார்ச் 28ல் இதைத் தட்டிக் கேட்ட மதரஸா மாணவிகளை சிறைப் பிடித்ததற்கு பதிலடியாக, மூன்று காவல்துறையினரை மதரஸா மாணவிகள் சிறைப்பிடித்தனர்.மார்ச் 30ல் ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்துவரும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஏப்ரல் 6ல் லால் மஸ்ஜிதில் ஷரீஅத் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
ஏப்ரல் 9ம் தேதி ஷரீஅத் நீதிமன்றத்தில் முதன்முதலாக ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது. கிளைடர் விமானத்தில் பறந்த அமைச்சர் நிலோஃபர் பக்தியார் ஆபாச உடை உடுத்தியதற்காக அவர் மீது ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது.
மே 19ம் தேதி மதரஸா மாணவர்களை கைது செய்ததற்காக நான்கு காவல்துறையினரை மதரஸா மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.
ஜூன் 23ம் தேதி அக்குபஞ்சர் மருத்துவமனை என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம்சாட்டி சீனாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 9 பேர் கடத்தப்பட்டனர். அத்தோடு சீன அரசின் கடும் ஆட்சேபனை பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவிக்கப் பட்டது.

இதனிடையில் அரசுக் கும் லால் மஸ்ஜிதுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடை வதைத் தடுக்க இருதரப் பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சவுத்ரி சுஜாத் ஹுஸைன் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புனித மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் சுதைஷ் முயற்சி மேற்கொண்டு நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில் சீனப் பெண்களைக் கடத்திய சம்பவத்தால் இருதரப்புக்கும் இடையிலான தொடர்பு மோசமானது.
ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து 1,250 மாணவர்கள் சரணடைந்தனர்.
'ஆபரேஷன் சைலன்ஸ்' ஆரம்ப மானது. முதலில் ராணுவத்தை எதிர்த்து மாணவர்கள் தாக்குப் பிடித்தனர். ராணுவ துணைத் தளபதி உள்பட 10 கமாண்டோக்கள் பலியாயினர்.
லால் மஸ்ஜிதின் மீது தாக்குதல் நடத்தினால், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிப்பார் கள் என தப்புக் கணக்கு போட்டனர் அப்துல் அஜீசும் அப்துல் ரஷீதும். தேவ்பந்த் (5,400 மாணவர்கள்) பர்லவியில் (3000 மாணவர்கள் லி 46 மதரஸாக்கள்) அஹ்லே ஹதீத் (200 மாணவர்கள் லி 2 மதரஸாக்கள்) எட்டு ஷியா மதரஸாக் களில் 700 மாணவர்கள் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ரபிதா அல் மதரஸா (இதில் 18 மதரஸாக்களில் உள்ள 1500 மாணவர்களும்) இவர்கள் அனை வரும் தங்களுக்காக போராட்டத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்த்து ஏமாந்தனர்.
கடைசியில் மாணவிகளோடு மறைந்து பர்தா அணிந்து தப்பிக்க முயன்ற அப்துல் அஜீஸ் கைது செய்யப்பட்டார்.
இறுதிவரை போராடி இளையவர் அப்துல் ரஷீத் மரணமடைந்தார். அப்துல் ரஷீத், அப்துல் அஜீஸ் சகோதரர்களின் 80 வயது தாயாரும் மரணமடைந்தார்.
இதில் அப்துல் ரஷீத், ராணுவ தாக்குதலில் பலியான நேரத்தில், அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரது மனைவி ஹுமைரா தனது சகோதரன் வீட்டில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நூற்றுக்கும் குறைந்த அளவே ராணுவ நடவடிக்கையில் பலியானதாக அரசு தெரிவித்தது. ஆனால் அதே அரசு 400 கஃபன்களை (சவத்துணி) தயாரிக்குமாறு அப்துல் சத்தார் எத்ஹி பவுன்டேஷன் எனும் தன்னார்வ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அப்துல் சத்தார் ஊடகங் களிலும் உண்மையை போட்டுடைத்தார்.
ஏராளமான அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் அளவு நிலைமையை முற்றவிட்ட லால் மஸ்ஜித் நிர்வாகத்தின்இந்த முதிர்ச்சியற்ற செயல் அனைத்து மார்க்க பெரியவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
வன்முறைகளாலும் கட்டாயப்படுத்து தலாலும் மிரட்டலினாலும் 'நல்ல குறிக்கோள்களே' ஆனாலும் அது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அநேகமாக இந்த 21ஆம் நூற்றாண்டில் சொந்த மக்களைக் கொன்ற ஒரே நாட்டின் அதிபர் முஷாரப் மட்டுமே என நடுநிலையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு நிலைமையை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சி செய்யாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
சீன அதிபரும், அமெரிக்க நிர்வாகமும் திருப்தியடைந்தால் போதும் என்ற அளவில் செயல்பட்ட முஷாரப், முழுமையான ஆதரவை அரசியல் கட்சிகளிடம் பெற்று விட்டாலும், உலக அளவில் தனது கவுரவத்தை சற்றுக் குறைத்துக் கொண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பாகிஸ்தான் இன்று முஷாரப் எதிர்ப்புணர்வால் தகித்துக் கொண்டிருக் கிறது. மேற்குலகில் முஷாரப் தனது நடவடிக்கைகளுக்காக பாராட்டப் படுகிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி களின் உயிர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்

Web Counter Code