பாகிஸ்தானின் புகழ்பெற்ற லால் மஸ்ஜிதில் பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
அதில் பெரும்பாலானோர் அப்பாவி மதரஸா மாணவர்கள் மற்றும் மாணவிகள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இதயப் பகுதியில் அமைந்துள்ளது லால் மஸ்ஜித்.
இந்த சிவப்பு பள்ளிவாசல் வளாகத்தில் ஜாமியா ஹஃப்ஸா என்ற பெண்கள் மதரஸாவும், ஜாமியா ஃபரிதிய்யா என்ற ஆண்கள் படிக்கும் மதரஸாவும் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே 'லால் மஸ்ஜித்' முதல் பக்க செய்தியானது. மார்ச் மாதம் 27ல் விபச்சார விடுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி குற்றவாளிகளை சிறைப்பிடித்தது.
மார்ச் 28ல் இதைத் தட்டிக் கேட்ட மதரஸா மாணவிகளை சிறைப் பிடித்ததற்கு பதிலடியாக, மூன்று காவல்துறையினரை மதரஸா மாணவிகள் சிறைப்பிடித்தனர்.மார்ச் 30ல் ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்துவரும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஏப்ரல் 6ல் லால் மஸ்ஜிதில் ஷரீஅத் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
ஏப்ரல் 9ம் தேதி ஷரீஅத் நீதிமன்றத்தில் முதன்முதலாக ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது. கிளைடர் விமானத்தில் பறந்த அமைச்சர் நிலோஃபர் பக்தியார் ஆபாச உடை உடுத்தியதற்காக அவர் மீது ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது.
மே 19ம் தேதி மதரஸா மாணவர்களை கைது செய்ததற்காக நான்கு காவல்துறையினரை மதரஸா மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.
ஜூன் 23ம் தேதி அக்குபஞ்சர் மருத்துவமனை என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம்சாட்டி சீனாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 9 பேர் கடத்தப்பட்டனர். அத்தோடு சீன அரசின் கடும் ஆட்சேபனை பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவிக்கப் பட்டது.
இதனிடையில் அரசுக் கும் லால் மஸ்ஜிதுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடை வதைத் தடுக்க இருதரப் பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சவுத்ரி சுஜாத் ஹுஸைன் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புனித மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் சுதைஷ் முயற்சி மேற்கொண்டு நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில் சீனப் பெண்களைக் கடத்திய சம்பவத்தால் இருதரப்புக்கும் இடையிலான தொடர்பு மோசமானது.
ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து 1,250 மாணவர்கள் சரணடைந்தனர்.
'ஆபரேஷன் சைலன்ஸ்' ஆரம்ப மானது. முதலில் ராணுவத்தை எதிர்த்து மாணவர்கள் தாக்குப் பிடித்தனர். ராணுவ துணைத் தளபதி உள்பட 10 கமாண்டோக்கள் பலியாயினர்.
லால் மஸ்ஜிதின் மீது தாக்குதல் நடத்தினால், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிப்பார் கள் என தப்புக் கணக்கு போட்டனர் அப்துல் அஜீசும் அப்துல் ரஷீதும். தேவ்பந்த் (5,400 மாணவர்கள்) பர்லவியில் (3000 மாணவர்கள் லி 46 மதரஸாக்கள்) அஹ்லே ஹதீத் (200 மாணவர்கள் லி 2 மதரஸாக்கள்) எட்டு ஷியா மதரஸாக் களில் 700 மாணவர்கள் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ரபிதா அல் மதரஸா (இதில் 18 மதரஸாக்களில் உள்ள 1500 மாணவர்களும்) இவர்கள் அனை வரும் தங்களுக்காக போராட்டத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்த்து ஏமாந்தனர்.
கடைசியில் மாணவிகளோடு மறைந்து பர்தா அணிந்து தப்பிக்க முயன்ற அப்துல் அஜீஸ் கைது செய்யப்பட்டார்.
இறுதிவரை போராடி இளையவர் அப்துல் ரஷீத் மரணமடைந்தார். அப்துல் ரஷீத், அப்துல் அஜீஸ் சகோதரர்களின் 80 வயது தாயாரும் மரணமடைந்தார்.
இதில் அப்துல் ரஷீத், ராணுவ தாக்குதலில் பலியான நேரத்தில், அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரது மனைவி ஹுமைரா தனது சகோதரன் வீட்டில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நூற்றுக்கும் குறைந்த அளவே ராணுவ நடவடிக்கையில் பலியானதாக அரசு தெரிவித்தது. ஆனால் அதே அரசு 400 கஃபன்களை (சவத்துணி) தயாரிக்குமாறு அப்துல் சத்தார் எத்ஹி பவுன்டேஷன் எனும் தன்னார்வ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அப்துல் சத்தார் ஊடகங் களிலும் உண்மையை போட்டுடைத்தார்.
ஏராளமான அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் அளவு நிலைமையை முற்றவிட்ட லால் மஸ்ஜித் நிர்வாகத்தின்இந்த முதிர்ச்சியற்ற செயல் அனைத்து மார்க்க பெரியவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
வன்முறைகளாலும் கட்டாயப்படுத்து தலாலும் மிரட்டலினாலும் 'நல்ல குறிக்கோள்களே' ஆனாலும் அது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அநேகமாக இந்த 21ஆம் நூற்றாண்டில் சொந்த மக்களைக் கொன்ற ஒரே நாட்டின் அதிபர் முஷாரப் மட்டுமே என நடுநிலையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு நிலைமையை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சி செய்யாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
சீன அதிபரும், அமெரிக்க நிர்வாகமும் திருப்தியடைந்தால் போதும் என்ற அளவில் செயல்பட்ட முஷாரப், முழுமையான ஆதரவை அரசியல் கட்சிகளிடம் பெற்று விட்டாலும், உலக அளவில் தனது கவுரவத்தை சற்றுக் குறைத்துக் கொண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பாகிஸ்தான் இன்று முஷாரப் எதிர்ப்புணர்வால் தகித்துக் கொண்டிருக் கிறது. மேற்குலகில் முஷாரப் தனது நடவடிக்கைகளுக்காக பாராட்டப் படுகிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி களின் உயிர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment