இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, August 9, 2007

மதானி மீது பொய் குற்றம் சாட்டியவர்கள்

மதானி மீது பொய் குற்றம் சாட்டியவர்கள்
மக்கள் மன்றத்தின் முன்பு தலை குனிந்து நிற்கிறார்கள்

ஒன்பது வருடங்களாக உளுத்துப் புளுவாய்ப் போன நீதியின் கோரப் பிடியில் சிக்கியிருந்த கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துன் நாசர் மதானி, தன் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப் படாமல் கடந்த ஆகஸ்ட் 1 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் ஒன்பது வருடத்திற்கு முன்னர் தமிழக காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மதானி, இறுக்க மூடப்பட்ட நீதிமன்றத்தாலும், கண்ணிருந்தும் பார்க்க முடியாத குருட்டு அரசாலும் கவனிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வெளியில் வந்திருக்கிறார். ஒன்பது ஆண்டுகளாக மதானிக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து தங்களது கருத்துகளை ஆணித்தரமாக பதிவு செய்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பழ.நெடுமாறன்தமிழர் தேசிய இயக்கம்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அப்துன் நாசர் மதானி மீது பொய் வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகச் சிறையிலிருந்து 'கேரள மக்கள் ஜனநாயகக்கட்சி'த் தலைவர் மதானி குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுகளும் மெய்ப்பிக்கப் படவில்லை என சிறப்பு நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
ஆயுதத் தடைச் சட்டம், மற்றும் வெடிமருந்து தடைச்சட்டம், கூட்டுச்சதி போன்ற மிகக்கடுமையான சட்டப்பிரிவு களின்படி அவர் மீது சுமத்தப்பட்டிருந்த ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட வில்லை என நீதிபதி தமது தீர்ப்பில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
கடந்த 9 ஆண்டுகாலமாக கோவைச் சிறையில் அவர் அனுபவித்த கொடுமை களுக்கு யார் பொறுப்பு? மாநிலம் விட்டு மாநிலம் மாற்றி, பிணை விடுதலை கூட அளிக்க மறுத்து சிகிச்சைப் பெறுவதற்கு கூட உயர்நிதிமன்றம் வரை சென்று போராடிப் பெற வேண்டிய நிலைக்கு மதானி ஆளாக்கப்பட்டார். இறுதியாக நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.
அவர் மீது பொய்யாகக் குற்றம் சாட்டிய அதிகாரிகள், அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல் வாதிகள் ஆகியோர் இப்போது மக்கள் மன்றத்திற்கு முன்னால் தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டும் போதாது. பொய் வழக்கு தொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் இது போன்ற பொய் வழக்குப் போடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
''குடும்பம், குழந்தைகள் உள்பட மிக நெருங்கியவர்களை விட்டுப் பிரிந்து, ஒன்பது ஆண்டுகாலம் சிறையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த மதானிக்கு தகுந்த இழப்பீட்டினை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்'' என தமது அறிக்கையில் மிழூஜிறூசிøகி குறிப்பிட்டுள்ளார்.
சுப. வீரபாண்டியன்திராவிடர் இயக்க தமிழர் பேரவை

கேரள மக்கள் ஜனநாயக, கட்சியின் தலைவர் அப்துன் நாசர் மதானி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியை தந்தாலும், கடந்த 9 வருடங்களாக சிறையில் அவர் அனுபவித்த கொடுமைக்கு பிறகு தான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தடா, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் கூட குற்றம் நிரூபிக்கப்படாமல் நீண்டநாள் கொடிய சிறைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்கள். பொதுவாக ஒருவரை கைது செய்து தீர விசாரித்த பின்னரே அவரை தண்டிக்க வேண்டும். ஆனால் 'ரௌலட் சட்டம்' தொடங்கி அனைத்து கறுப்புச் சட்டங்களிலும் குற்றம் மெய்ப்பிக்கப்படுவதற்கு முன்பே தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மதானி போன்றவர்களுக்கு அவர்கள் இழந்த வாழ்க்கையை கடந்த காலத்தை யார் திருப்பிக் கொடுக்கப்போகிறார்கள்.
இதுபோன்ற விசாரணைக்கு பின்தான் தண்டிக்க வேண்டும் என்று பொடா சட்டத்தில் ஒரு பிரிவு இருந்தாலும் அது மேலோட்டமாகத்தான் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.
குற்றம் செய்யாத ஒருவர் தண்டனை பெற்று விடுதலை செய்யப்படும் பொழுது, கைது செய்த புலனாய்வு அதிகாரிகளை தண்டிக்கலாம் என்று சட்டம் உள்ளது. அதற்கான நிபந்தனை உள்நோக்கத்துடன் செய்ததாக மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு யாரை கைது செய்யச் சொன்னாலும் அதிகாரிகள் செய்வார்கள். எனவே, அரசை விட்டு விட்டு அதிகாரி களை எப்படி குற்றம் சொல்ல முடியும். அதிலும் எப்படி உள்நோக்கத்துடன் செய்தார் என்பதை நிரூபிக்க முடியும்.. எனவே ஒன்பது ஆண்டுகள் மதானி அனுபவித்த இக்கொடுமை ஜனநாயகத் திற்கும், மனித நேயத்திற்கும் எதிரானது. எனவே இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாமல் பாதுகாப்பதோடு தடா, பொடா சட்டங்களையும் நீக்க வேண்டும். தற்போது மதானியின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என சில சுயநலவாதிகள் கூறினாலும் கடந்த ஒன்பது ஆண்டு களாக அவர் அனுபவித்த கொடுமைக்கு யார் பொறுப்பாவார்.
ரஜினி வழக்கறிஞர்
சென்னை
ஒன்பது வருடங்களாக சிறைக் கொட்டடியில் தத்தளித்த மதானியின் விடுதலை எந்த சந்தோஷத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் மனித உரிமை மதிக்கப்படாமல் அவர் நடத்தப்பட்டிருக்கிறார்.
தலித்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்திய அற்புதமான அரசியல் இயக்கத் தலைவர் அவர். எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் அவரை கைது செய்து அவரது அரசியல் வாழ்க்கையையும், குடும்ப அமைப்பையும் சீர்குலைத்து விட்டனர்.
ஒன்பது ஆண்டுகளாக அவர் அனுபவித்த கொடுமைக்கு கோடிக் கணக்கில் அரசும், நீதித்துறையும் இழப்பீட்டை அவருக்குத் தர வேண்டும்.தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் மக்களுக்கெதிராக ஆதிக்க சக்திகள் செய்த கூட்டுச் சதிதான் இது.
உலகமே பார்த்துக் கொண்டிருந்த போது வெட்ட வெளிச்சத்தில் பாபர் மசூதியை தாக்கிய பயங்கரவாதிகளான அத்வானி, உமாபாரதி ஆகியோரை இன்னமும் கைது செய்யாத, வக்கற்ற காவல்துறையும், அரசு நிர்வாகமும் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு கட்சியின் தலைவரை கைது செய்து. வைத்திருப்பது, ஆதிக்க சக்திகளின் குரோதப் போக்கையே காட்டுகிறது.
மதானிக்கு எதிராக தமிழக போலீசார் சரியான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று பிஜேபிகாரர்கள் சொல்வது அவர்களது இயலாமையை காட்டுகிறது. ஏனெனில் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் பிஜேபி காரர்களின் இந்த பிதற்றல் நாடகம்.
பேரா. அ.மார்க்ஸ்

மதானியின் இந்த சிறைத் தண்டனை என்பது நீதிமன்றத்தின் அபத்தமான, முறையற்ற தன்மையையே காட்டுகிறது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பெரும்பாலான எழுத்தாளர்கள் இணைந்து அனைவரும் கையொப்பமிட்டு மதானியை ஜாமினில் விடுதலை செய்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம், அது நடைபெற வில்லை. தற்போது மதானியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்படாததால் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக் கிறார். கடந்த ஒன்பது வருடங்களாக சிறையில் மதானி அனுபவித்த கொடுமை களுக்கு எத்தகைய இழப்பீட்டை அரசும், நீதித்துறையும் தரப்போகிறது.
மக்கள் ஆதரவு பெற்ற ஜனநாயக முறையின் மீதும், தேர்தல் அமைப்பின் மீதும் முழு நம்பிக்கை வைத்து 'கேரள மக்கள் ஜனநாயகக் கட்சி' என்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான ஒரு அமைப்வை நடத்தி வந்த ஒரு தலைவரை இதுபோன்ற கொடுமையான முறையில் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்விஷயத்தில் தமிழகத்தை பொறுத்தவரை கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் எந்த விதமான வேறுபாடும் கிடையாது.
மதங்களுக்கிடையே பிளவை உண்டாக்குபவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்றால், முதலில் பிஜேபிக்காரர்களுக்கு தண்டனை அளிக்கட்டும். அதை விட்டு விட்டு இது போன்ற அப்பாவிகளை தண்டிப்பது அபத்தமானது. தற்போது கூட கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் அப்பாவிகளாக இருக்கும் போது, 158 பேரை குற்றவாளிகளாக அறிவித்ததே அரசும், நீதித்துறையும் மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.
புனித பாண்டியன்ஆசிரியர்லிதலித் முரசு

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துன் நாசர் மதானி தற்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிற அதே நேரத்தில், அவர் சிறையிலிருந்து வெளிவந்த முதல் பேட்டியிலேயே தலித் மக்களுக்காகவும், முஸ்லிம் மக்களுக்காகவும் நான் பாடுபடுவேன் என அவர் தெரிவித் திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
ஆனால், எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் அவரை கைது செய்த தமிழக அரசின் மீது வழக்கு தொடுக்க மாட்டேன் என்பது வேதனைக்குரிய விஷயம். அவரைப் போன்ற போராளி அப்படி சொல்லியிருக்க கூடாது. ஏனெனில் அவரைப் போன்றவர் இந்த விஷயத்தில் பின் வாங்கினால் சாதாரண மக்கள் எப்படி அரசுக்கு எதிராக போராட முடியும்.
தற்போது மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக் காக பாடுபடுவேன் என அவர் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. ஏனெனில் இந்தியா முழுவதும் இது போன்ற மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
கேரளத்தின் முதல்வர் அச்சு தானந்தன் உட்பட கேரளத்தின் அனைத்து கட்சிகளும் (ஒரு காலத்தில் கேரளா, பிஜேபி உட்பட) அனைவரும் மதானியின் விடுதலையை ஆதரித்து அறிக்கை விட்டனர். ஆனால் மதானி விடுதலை செய்யப்பட்ட பின் மதானிக்கு எதிராக தமிழக காவல்துறையினர் சரியாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவில்லை என்று பிஜேபியினர் தற்போது சொல்வது மிக வேடிக்கையாக உள்ளது. எனவே, நிமிடத்திற்கு நிமிடம் நிறம் மாறும் பிஜேபியினரை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை

கிருஷ்ணா கமிஷன் அறிக்கை

கிருஷ்ணா கமிஷன் அறிக்கை
குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நடவடிக்கை உறுதி

மகாராஷ்ட்ரா அரசுஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தக் கோரி நாடேங்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மகராஷ்ட்ராவின் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை மகராஷ்ட்ரா மாநில அரசின் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் நடந்தது.
முன்னதாக துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டிலை முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று சந்தித்தது. முன்னனி வழக்கறிஞரும் தேசியவாதக் கட்சியின் முக்கிய பிரமுகருமான மஜீத்மேமன் இக்குழுவிற்கு தலைமை வகித்தார். 1993ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தாமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார்கள். முஸ்லிம் குழு சங்கத்துடன் தொடர்ச்சியாக காவல்துறை உயர் அதிகாரிகளுடனான மற்றும் துணை முதலமைச்சரின் கூட்டம் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. உடனடியாக அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளைக் கூட்டி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மஜீத் மேமன் தெரிவித்திருந்தார். மும்பைக் கலவரக் குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்டும் என ஆர்.ஆர்.பாட்டீல் உறுதி அளித்தார்.

Web Counter Code