இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, August 20, 2010

மதானி கைது வெளிவராத தகவல்கள்

மதானி கைது வெளிவராத தகவல்கள்

ஹபிபா பாலன்


தந்தையை ஆரத் தழுவி வழி அனுப்புகிறர் மகன்.

தந்தையை ஆரத் தழுவி வழி அனுப்புகிறர் மகன்.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் மார்க்க அறிஞருமான அப்துன் நாசர் மதானி இன்று 17.08.2010 பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெங்களூரு குண்டுவெடிப்பில் பிடிபட்டதாகக் கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஸீர் என்பவர் மதானியின் பெயரைக் கூறினாராம். நஸீர் அளித்த வாக்குமூலத்தின்படி 31வது குற் றவாளியாக சேர்த்திருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது.

கர்நாடக மாநில குடகு மாவட்டத் தில் லகாரி எஸ்டேட்டில் சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டி பாஜக ஆளும் கர்நாடக மாநில காவல்துறையினர் மதானியின் வசிப்பிடமான கொல்லம் நோக்கி வந்தனர். மதானியின் அரும்பெரும் முயற்சியால் உருவாக் கப்பட்ட அன்வராசேரி மதரஸா கல்விக்கூடத்தில் “மதானியின் ஆதரவாளர்கள் மதானியை கைது செய்ய விடமாட்டோம்“ என உணர்ச்சிகர முழக்கமிட்டு மதானியை அரணாக காவல் காத்து நின்றனர்.

மதானியைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறை கையைப் பிசைந்து நிற்கிறது. கேரள அரசிடம் இருந்து முறை யான அறிவிப்போ அனுமதியோ பெறாமல் கர்நாடக காவல் துறையினர் கேரளாவில் நுழைந் துள்ளதாக கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இருப் பினும் மதானியைக் கைது செய்ய கர்நாடக காவல்துறைக்கு கேரள காவல்துறை தேவையான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் கேரள உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே மதானியின் இருப்பிடம் நோக்கிச் சென்று அவரைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறையினர் தவித்தனர்.

இதைப்போன்றுதான் 12 ஆண்டுகளுக்கு முன்பு கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக மதானியைக் கைது செய்ய தமிழகக் காவல்துறையினர் வந்த போது மதானியைக் கைது செய்ய விடமாட்டோம் என அவர் மீது பாசம் கொண்ட மக்கள் ஆவேசமாக எதிர்த்தனர். சட்டத்துக்கு உரிய மரியாதையை நாம் வழங்க வேண்டும். நீதித்துறையை, காவல்துறையை நாம் என்றுமே அவமதிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என தனது ஆதரவாளர்களை ஆறுதல் படுத் திவிட்டு தமிழகக் காவல் துறை யினருடன் கோவைக்கு பயணமானார்.

என் மீது போடப்பட்ட வழக்குகள், என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் பொய் என நிரூபித்து குற்றமற்றவனாக வருவேன் கலங்க வேண்டாம் என சென்ற மவ்லவி அப்துன் நாசர் மதானி நிரபராதியாக, குற்றமற்றவராக அவர் தனது அன்புக்குரியவர்களிடம் வாக்களித்தது போலவே வெளியே வந்தார்.

என்ன கொடுமை? அவர் சிறையில் அடைக்கப்பட்டு குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டு வெளியே வர ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 33 வயதில் சிறை சென்றவர் 42 வயதில் சிறை மீண்டார். பல்வேறு நோய்கள் என்ற கூடுதல் போனஸுடன் அவர் விடுதலையானார்.

விடுதலையாகி முழுக்க மூன்று ஆண்டுகளைக் கூட அவர் தம் குடும்பத்தினருடன், ஆதரவாளர் களுடன் மகிழ்ச்சியுடன் கழிக்கவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு சிறைவாசம் அவரை இருட்டில் தள்ளத் தயாராகிறது.

மதானியை வளைத்துப் பிடிக்க கேரளா வந்த கர்நாடக காவல்துறையினர் 13, 14ஆம் தேதிகளில் கேரளா சுற்றுப்பயணம் செய்த இந்தியக் குடியரசுத் தலைவர் தனது பயணத்தை முடித்த பின் கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என காத்திருந்ததாக தகவல்கள் வெளி வந்தன.

எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருந்த மதானி மீதான வழக்கு விவரம் அவர் மீதான அனுதாப அலை கேரள மாநில முஸ்லிம்களிடம் மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து சமூகங்களிலும் உள்ள நடுநிலையாளர்களின் மத்தியில் வீசுவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

யாரையாவது பிடிப்பது, பின்னர் அவர்மூலம் யாரை சிக்கவைப்பது என ஆலோசிப்பது குறிப்பாக தங்களது வெறுப்புப் பட்டியலில் இருக்கும் ஒருவரை சதியில் சிக்கவைப்பது என திட்டமிடும் தீய சக்திகள் மதானியின் விஷயத்தில் விளையாடி இருக்கக்கூடும் என கோழிக்கோட்டைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் தங்கச்சன் குறிப்பிடுகிறார்.

மதானியின் பெயரைக் குறிப்பிடு என உடல்ரீதியாகத் துன்புறுத்தி வாக்குமூலம் வாங்கியிருந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப் பின் முக்கியப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மதானி மீதான குற்றச்சாட்டுக்கு மதானியின் பதில் என்ன என்பதை கேரள ஊடகங்கள் உள்பட எந்த வெகுஜன ஊடகங்களும் கண்டுகொள்ளவே இல்லை என கண்டனம் தெரிவிக் கின்றனர் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியினர்.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சதி வழக்கில் மத்திய குற்றவியல் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே நாசர் மதானி தரப்பினரின் வாத மாகும்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 482ன்படி மவ்லவி அப்துன் நாசர் மதானிக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் குற்றப் பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நம்ப முடியாத, நடைபெறவே சாத்தியம் இல்லாத ஒரு சதித்திட்டத்தை தீட்டியதாகக் குற்றம்சாட்டி ஒரு பொய்வழக்கை குற்றவியல் பிரிவு பதிவு செய்துள்ளது என மதானியின் வழக்கறிஞர் உஸ்மான் தெரிவிக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள லகாரி எஸ்டேட்டில் மதானி ரகசிய திட்டம் தீட்டியதாக கர்நாடக காவல்துறை குற்றம்சாட்டிய விவகாரத்தில் மதானியின் பங்கு என்ன என்பது குறித்து உண்மை நிலையைக் கண்டறிய கேரள காவல்துறையினரையும் ஒருதரப் பாக சேர்க்க வேண்டும் என மதானியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு கோவை யிலிருந்து மதானி விடுதலையான பிறகு மதானி எங்கெல்லாம் சென்றார் என்பது கேரள காவல் துறைக்குத் தெரியும். எனவே அதுகுறித்த விவரங்களை கேரள காவல்துறை சேகரிக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளாக மதானிக்கு கேரள அரசு விசேஷ பாதுகாப்பை வழங்கியுள்ளது. மதானிக்கு கேரள அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக நீதிமன்றத்துக்கு புரியவைப்பதற் காக கேரள அரசையும் ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என மதானி தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சட்டவிரோத செயல்பாட்டு தடைச் சட்டத்தி ன்படி ஒருவருக்கு எதிராக வழக் குத் தொடரும் முன்னர் அந்த மனிதருக்கு எதிராக ஆதாரங்கள் உண்டா என தொடர்புடைய அதிகாரி தீவிரமாகப் புலனாய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால் மதானியின் விஷயத்தில் இந்த நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள் மதானியின் ஆதரவாளர்கள்.

மதானியை கைது செய்வதை தாமதப்படுத்துமாறும், ரமலான் மாதம் முடிந்த பிறகு மதானி கைது நடவடிக்கையை வைத்துக்கொள்ள வேண்டும் என கேரள மாநில அனைத்து முஸ்லிம் தலைவர்களும் முதலமைச்சர் அச்சுதானந்தனை சந்தித்து வேண்டுகோள் விடுத்துனர். அதற்கு அச்சுதானந்தன், ‘‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என பதில் கூறினார்.

வழக்குகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவே மதானி வாழ்க்கை

வழக்குகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவே மதானி வாழ்க்கை

ஹபிபா பாலன்


மதானி எப்போதுமே தலைப்புச் செய்திகளில் இடம் பெறுபவர் என்பதால் கேரள அரசியல் தலைவர்களுக்கு மதானி என்றால் எப்போதுமே வேப்பங்காய்தான்.

கோவை குண்டு வெடிப்பில் செய்யாத குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து மூன்றாண்டு முடிவதற்குள் மீண்டும் ஒரு சிறை வாசம் அவரை வா வா என அழைக்கிறது.

ஒரு மார்க்க அறிஞராக உலகத்தில் அறியப்பட்ட அப்துன் நாசர் மதானி அரசியல் தலைவராக தலித் மற்றும் ஒடுக் கப்பட்டோருக்காக அரசியல் அரங்கில் அவர்களின் உரிமைக் காக போராட ஆரம்பித்ததுதான் அங்குள்ள பழம்பெருச்சாளி அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையாக வாய்த்தது என கூறுகிறார்கள்.

அப்துன்நாசர் மதானி 1965 ஆம் ஆண்டு அப்துஸ்ஸமத் மாஸ்டரின் மகனாகப் பிறந்தார். அடிப்படை கல்வி கற்றபின் கொல்லத்தில் உள்ள மதீனுல் உலூம் அரபிக் கல்லூரியில் மார்க்கக் கல்வி கற்றார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜாமியா நூரிய்யாவில் கல்வி கற்று முடித்த அவர் மார்க்கப் பிரச்சாரகராக மாறினார். அவரது உரை தென்பகுதி கேரளாவில் மிகவும் பிரபலமான ஒன்றாக பாராட்டைப் பெற்றது. அவரது உரையை கேட்ககொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மக்கள் வெள்ளம் அணிதிரண்டது.

இதே காலகட்டத்தில் மதானி தனது தந்தையுடன் அன்வரா சேரி அநாதை நிலையத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். 1987&ல் உருவாக்கப் பட்ட அன்வராசேரி அநாதை நிலையத்தில் இலவச மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும் வழங்கப்பட்டதால் அன்வரா சேரி புகழ்பெறத் தொடங்கியது. மதானியின் அனல் பறக்கும் பேச்சால் அவருக்கு என தனி யான கூட்டம் ஒன்று உருவா கியது. 1990ம் ஆண்டு இஸ்லா மிய சேவா சங்கம் என்ற அமைப் பினை தொடங்கினார்.

பாசிஸ ஆர்.எஸ்.எஸ்&க்கு தனது இஸ்லாமிய சேவா சங்கம்(ஐ.எஸ்.எஸ்) அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்கும் எனக் கூறினார்.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட 1992ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதை அடுத்து மதானியின் ஐ.எஸ்.எஸ்&யையும் மத்திய அரசு தடை செய்தது. அதனால் தளர்ந்து விடவில்லை. 1993ம் ஆண்டு கேரள மக்கள் ஜனநாயகக்கட்சி என்ற அரசியல் கட்சியை மதானி தொடங்கினார். ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான இயக்கம் இது என பிரகடனப்படுத்தினார். பல தேர்தல்களில் இடது சாரிகளுக்காக மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சி பாடுபட்டது. மதானியின் சொந்த மாவட்டமான கொல்லம் பகுதியில் மட்டும் மதானியின் செல்வாக்கு இருந்தது. முஸ்லிம்களின் வாக்கு களை கேரளாவில் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் லீக் அதிக அளவில் சேகரித்து வந்ததால் முஸ்லிம்& தலித்&பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் என்ற முழக்கத்தினை மதானி முன்னெடுத்தார்.

1998&ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டார். முதலில் கேரள காவல்துறை அவரை கைது செய்து ஒருநாள் வைத்திருந்து தமிழக காவல்துறையிடம் ஒப்படை த்தது. கோவையிலும் சேலத்திலும் 9 ஆண்டுகள் மதானி சிறையில் அடைக்கப்பட்டார். முதல் நான்கு ஆண்டுகாலம் மதானி தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

மதானி உள்ளே தள்ளப்பட்டதால் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் லீக் அமைப்புகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

மதானியை விடுவிக்க தொடக்க முதலே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் குரல் கொடுத் தது. சமூக நல அமைப்புகளின் தீவிர முயற்சியால் கேரள அரசியலில் மதானி விவகாரம் பலத்த அதிர் வினை ஏற்படுத்தியது.

மதானியை மனிதாபிமான முறையில் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கேரள சட்டமன்றம் ஏகமனதாக தீர்மா னத்தை நிறைவேற்றியது.

கேரள அரசியல் தலைவர்கள் கோவை சிறையில் இருந்த மதானி யை சந்தித்தனர்.

மதானியை விடுவித்தால் கேரளாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறிய காங்கிரஸும் ஒரு வழியாக மதானி ஆதரவு நிலைக்கு திரும்பியது.

ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மதானி குற்றமற் றவராக கோவை குண்டுவெடிப்பு வழக்குகளிலிருந்து விடுவிக்கப் பட்டார். 40 வயதிலேயே தளர்ந்த உடல் நலத்துடன் வெறும் 40 கிலோ எடையுடன் மதானி விடுதலை யானார்.

விடுதலையான மதானி பெரும் மக்கள் திரளுக்கிடையே வரவேற்கப் பட்டார். மாநில அமைச்சர்கள் அங்கே வீற்றிருந்தனர். பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மதானியை வரவேற்கும் விழாவில் பங்கேற்றனர். வரவேற்பு விழாக் கள் கேரள மாநிலம் எங்கும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. முஸ்லிம் லீக் செல்வாக்கு நிறைந்த கோழிக்கோடு பொன்னானி பகுதிகளில் கூட மதானி மிகுந்த மக்கள் வெள்ளத்துக்கிடையே வரவேற்கப்பட்டார்.

மதானியிடம் முன்பு இருந்த அனல்பொறி பேச்சை கூடியிருந்த மக்கள் எதிர் பார்த்தனர். ஆனால் மதானியின் மனப்பாங்கை சிறை வாழ்க்கை மாற்றியிருந்தது. கடந்த காலங்களில் தான் பேசிய வேக மான பேச்சுக்களுக்காக மதானி பகிரங்க மன்னிப்புக் கேட்டார். முஸ்லிம் & தலித் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது என்றும் முழங்கினார். உடல் பரிசோதனை மற்றும் சிகிக்சைக்கு பின் தீவிர அரசியலில் மதானி இறங்கினார்.

2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதர வாக களம் இறங்கினார் மதானி. இந்த தேர்தலில் மதானியின் வேட்பாளராக பொன்னானி தொகுதியில் போட்டியிட்ட ஹூஸைன் ரன்ததானி முஸ்லிம் லீகின் ஈ.டி.முஹம்மது பஷீரிடம் பெருவாரியான வாக்குகளின் வித்தியாசத்தில் தோற்றார். இடது சாரிகளுக்கு நாடாளுமன் றத்தில் ஏற்பட்ட தோல்வி முதன் முதலாக நாடாளுமன்ற தேர்த லில் போட்டியிட்ட மதானி கட்சியையும் தொற்றியது. மதானி&மார்க்சிஸ்ட்டுகள் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

தற்போது மதானி மீது பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதானியை கைதுசெய்ய கர்நாடக காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டுவரும் சூழலில் பிணை கோரி மதானி பெங்களூரு நீதிமன்றத்துக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கும் மனு செய்தார். பெங்களூரு நீதிமன் றத்தில் மதானி மீதான ஜாமீன் மனு உடனடியாக நிராகரிக்கப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் மதானி மீதான ஜாமீன் மனுவை ஆகஸ்ட் மூன்றாம் தேதி தள்ளுபடி செய்தது.

மதானியை கைது செய்ய தீவிரம் காட்டும் அளவுக்கு மாலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டுவெடிப்பில் குற்றம்சாட் டப்படும் ஹிந்துத்துவ பெரும்புள் ளிகள் மீது பாயாதது ஏன் என்ற கேள்வி இந்தியர்கள் அனைவர் உள்ளங்களில் எழுகிறது.

முக்கிய குற்றவாளியா?

மதானி பெங்களூரு குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என சன்.டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது. மதானி குற்றம் சாட்டப்படுபவர் பட்டியலில் 31 வதாக சேர்க்கப் பட்டிருக்கிறார். 31-&வது நபர் எப்படி முக்கிய குற்றவாளியாவார்-? இது பொருத்தமற்ற ஒரு சொல் என்பது சராசரி அறிவுள்ளவனுக்கு கூட தெரியும். ஆனாலும் பெங்களூரு குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளி மதானி என்றே தொடர்ந்து ஊடகங்களில் வெளியிட்டு வரும் அறிவு சூன்யங் களை என்னவென்று சொல்வது?

நசீர் கைது செய்யப்பட்ட ஐந்து மாதத்திற்கு பிறகு குற்றப்பத்திரிகை

பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண் டும் என்பார்கள். ஆனால் பொய் கூட இங்கு பொருத்தமாக சொல்லப்படவில்லை.

பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட நசீர் மதானியின் பெயரை குறிப்பிட்டது எப்போது தெரி யுமா? கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களுக்குப்பிறகு தான். இது நசீர் தானாக அளித்த வாக்கு மூலமா? வற்புறுத்தி, துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலமா? என்ற சந்தேகம் நடுநிலையாளர்களின் உள்ளங்களில் கனன்று எழுகிறது.

மதானி பற்றி கூறவில்லை - நசீர்

மதானிக்கும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக காவல் துறையினரிடம் கூறியதாக சொல் லப்பட்ட வாக்குமூலத்தை கொச்சி நீதிமன்றத்தில் நசீர் மறுத்தார். பெங்களூரு குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு இருப்பதாக தான் கூறவே இல்லை என்றார். இது எந்த வெகுஜன ஊடகத்திலும் வரவில்லை. கர்நாடக காவல்து றையின் குற்றச்சாட்டிலும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத் தவில்லை. இதுவும் நடுநிலை யாளர்கள் மனதில் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

மன்னிப்பு வழங்கியவருக்கு இந்த நிலையா?

1990&ம் ஆண்டு மதானியை கொல்ல ஆர்.எஸ்.எஸ். பயங் கரவாதிகள் சதி செய்தனர். மதானி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடந்ததில் மதானி தனது வலது காலை இழந்தார். ஆனால் அவர்களையும் மதானி மன்னித்து விட்டார். கோவை வழக்கில் இருந்து நிரபராதியாக வெளிவந்த மதானி தன்னை கொல்ல முயற்சித்தவர்களை மன்னிப்பதாக அறிவித்தார்.

இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!

இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!

E-mail Print PDF


இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஷஹாபுத்தீன் யாகூப் குரைஷி குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியுள்ளார்.

63 வயதான இவர் டெல்லியைச் சேர்ந்தவர். 1947 ஜூலை 11ஆம் தேதி பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேறினார்.

வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற குரைஷி பாரசீகம், அரபி, ஜெர்மன் மொழிகளில் சிறந்த புலமை மிகுந்தவர்.

மக்கள் தொகை, பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதுக்கு வந்த இளம் தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சினைகளை தீவிர ஆய்வு செய்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் பல்வேறு சமூக நல அமைப்புகளோடு சிறந்த தொண்ட £ற்றியவர். தொடர்பியல் மற்றும் சமூக சந்தை என்ற பிரிவில் இவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.
புற்றீசல் போல் பெருகிவரும் புதிய கட்சிகள் குறித்து கவலை தெரிவித்த குரைஷி “அரை மணி நேரத்திற்கு ஒரு கட்சி தொடங்கப்படுகிறது. சில கட்சிக ளுக்கு தலைமையகமே இல்லை. சில கட்சிகள் டீக்கடைகளில் இயங்கு வதாக குறிப்பிட்டவர், இத்தகைய கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும்“ என்றார்.

விரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம்

விரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம்

E-mail Print PDF

இந்திய அளவில் முதன் முறையாக இட ஒதுக் கீட்டு விழிப்புணர்வை அனைத்து இயக்கங்களுக்கும் வழங்கிய தமுமுகவிற்கு வெற்றி.


முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கைப் போர் அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் தொடுக்கும் காலகட்டம் இது.

முஸ்லிம்களை இன ஒதுக்கல் முறையில் காலங்காலமாக ஒடுக்கி வந்த ஆதிக்க சக்திகள் முஸ்லிம்கள் பெற்றுவந்த உரிமை களை படிப்படியாக பறித்துக் கொண்டது. இந்த நாட்டின் கெடுதல்களுக்கு எல்லாம் முக்கிய காரணியான சங்பரிவார் சதி சக்திகள் ஒருங்கிணைந்த இந்திய நாட்டை துண்டாடியதில் முக்கிய பங்கு வகித்தன.

ஆனால் நாட்டு பிரிவினைக்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்ற துடைக்க முடியாத களங்கத்தையும் முஸ்லிம்கள் மீது சுமத்தினர்.

இந்த கறை மிகுந்த களங்கத்தை சுமக்க முடியாமல் நலிந்து கிடந்த இந்த சமுதாயம் அரசியல் அரங்கில் தங்களுக்கென ஓர் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை.

கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு அம்சத்திலும் பின்தங்கியிருந்த இந்த சமூகம் நத்தை தன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வதைப் போல சுருக்கிக் கொண்டது.

இடையில் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகள் வேறு இந்த இடிதாங்கி சமுதாயத்தின் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டது.

இத்தனையும் சதிக்கூட்டம் செய்ததற்கு முக்கியக் காரணம், எக்காரணம் கொண்டும் முஸ்லிம் கள் சமூக அளவில் எழுச்சியுடன் எழுந்து நின்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.

கொடு மதியாளர்கள் கனவு கண்டதைப் போல அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் எழுச்சிப் பெறும் வழியைக் காணவில்லை.

கண்ணிருந்தும் குருடராக, வாயிரு ந்தும் ஊமையராய் சோர் ந்திருந்த அகில இந்திய முஸ்லிம் சமுதாய த்திற்கு பாலைவனத்தில் ஒரு சோலைவனமாக வாய்த்தது தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையாக இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை முன் முழங்கியது தமுமுக. தமுமுக ஒவ்வொரு அசைவும், இலக்கும் இலட்சியமும் இந்திய விடுதலைக்கு முன்பாக இழந்த இடஒதுக்கீட்டு உரிமையை மீட்க வேண்டும் என்பதே.

அதற்காக தமுமுக கண்ட களங்கள் எண்ணற்றவை. பிரச்சார வியூகங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. தமிழ கம் மற்றும் புதுவையின் பட்டி தொட்டியெங்கும் இழந்த இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்க களமி றங்கியது தமுமுக. அகில இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெற தலைநகர் டெல் லியில் களம்கான முடிவு செய்தது. 2007 ஆம் ஆண்டு மார்ச் 7&ல் டெல்லியில் கூடிய மாபெரும் பேரணி இரண்டு இலக்குகளை வென்றெடுத்தது.

ஒன்று அகில இந்திய ஆட்சி யாளர்களை சிறுபான்மையின ருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்ற சிந்தனைப் பொறிகளை தட்டி விட்டு இட ஒதுக்கீட்டினை நிறை வேற் றுவதற்கான அடுத்த கட்டத்தை நகர்வதற்கான ஒரு முன் முயற்சியை தமுமுக&வின் டெல்லி பேரணி ஏற்படுத்தியது. இரண்டாவதாக தமுமுக அடைந்த இலக்கு வென்றெடுத்த இலட்சியம் என்னவெனில் இட ஒதுக்கீடு என்ற ஜீவாதார உரிமை குறித்து அகில இந்திய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

நாடாளுமன்றம் நோக்கி நடந்த பேரணியிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமூக நீதி மாநாட்டிலும் பங்கேற்காத, உரையாற்றாத பிரபலமான சமுதாய இயக்கங்களின் தலைவர்களே இல் லை என்ற அளவுக்கு அனைத்து தலைவர்களும் பங்கேற்றனர். சமூக நீதிப் போராட்டத்தில் தமுமுக இந்தியாவிலேயே முன்னோடியாக விளங்குகிறது என பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

தமுமுகவின் போராட்ட வியூகத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள இயக்கங்கள் இட ஒதுக்கீட்டு போராட்டங்களை முன்னெடுத்தன. அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான ஓபிசி பிரிவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் இறங்கியிருப்பதாகவும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச் சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருக்கிறார்.

நாங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். காங் கிரஸ் அதன் செயல்திட்டத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடிவெடுத் துள்ளதாகவும் காங்கிரஸ் நிச்சயம் இதனை செயல்படுத்தும் இதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.


ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம் களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் இதை செயலாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன.

மண்டல் கமிஷன் அறிக்கை யில் கூறியுள்ளவாறு பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட் டில் 8.4 சதவீதம் சிறுபான் மையி னர் விரிவாக் கத்திற்காக உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரையரை செய்யப்பட்டுள்ள மொத்த 27 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 8.4 சதவீதம் சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்டதில் 6 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.

மிஸ்ரா ஆணையம் சிறுபான் மையினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அல்லது ஓபிசி என்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து பகிர்ந்து அளிக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதில் இரண்டாவதை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் என் றும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பாக கடந்த மே மாதம் முஸ்லிம் தலைவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு இன்னும் 6 மாதங்களில் செயல்படுத் தப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.

மிஸ்ரா ஆணையம் பரிந்துரை யின்படி முஸ்லிம்களுக்கு 10 சதவீ தம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே த.மு.மு.கவின் கோரிக்கையாகும். இடஒதுக்கீடு விவ காரத்தில் இதுவரை மவுனம் சாதித்து வந்த மத்திய அரசு இணக்கமான நடவடிக்கை நோக்கி பயணிப்பதை பாராட்டும் அதேவேளையில் முஸ் லிம்களுக்கு ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் படி 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த தேசத்தில் காலகா லமாக ஒடுக்கப்பட்டுவரும் முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவு என்ற நோயை நீதியரசர் ராஜிந்தர் சச்சார் கண்டறிந்தார் என்றால் அதற்கான தீர்வினை நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா வின் பரிந்துரைகள் அடித்துக் கூறிய து. 10 சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஷ்மீர் :படுகொலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை

காஷ்மீர் :படுகொலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை

ஹபீபா பாலன்


காஷ்மீரில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியோடு துப்பாக்கிச் சூட்டில் பலியான வர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துவிட்டது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை மட்டும் 9 அப்பாவிகள் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். ஞாயிற்றுக்கிழமை பலியான 9 பேர்களில் அஃப்ரோஸ் என்ற 17 வயது இளம் பெண்ணும் ஒரு வர்.

நூற்றுக்கணக்கானவர்கள் படு காயம் அடைந்துள்ளனர். ஸ்ரீநகர், பாரமுல்லா, சோழ, நைதா ஹால், கண்டர்பால், ஃபரிஸ் டாபால், பர்சோ, கட்லா பால், ஹன்னாபல், பிங்லனா, சிங்ஃபியாரா மற்றும் அனந்தனாக் பகுதிகள் இன் னும் ஊரடங்கு உத்தரவால் அடக்கப் பட்டுள்ளன.

காஷ்மீரின் நிலை குறித்து அகில உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் கவலை யடைந்துள்ளனர்.

அடிப்படை மனித உரிமைகள் அங்கு பேணப்படுகிறதா? என்ற கவலை மனித உரிமை ஆர்வலர் களிடையே எழுந்துள்ளது. சுதந்தி ரமாக வாழும் உரிமை, முறையான நீதி விசாரணை கேட்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மீறப்படுவதாக The Universal Declaration Of Human Rights மற்றும் Human Rights Convenants போன்றவை வலியுறுத்திய அனைத்து கோட்பாடுகளும் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் புறம் தள்ளப்பட்டிருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு Medicinis Sams Frontieres என்ற பிரெஞ்சு பத்திரிகை, காஷ்மீர் பெண்களின் நிலை குறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டது.
2007 ஆம் ஆண்டு வரை 9 ஆயிரத்து 800 பெண்கள் பாலியல்வன்முறைக்கு இலக்கானதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. 22 ஆயிரத்து 100 பெண்கள் இளம் விதவைகளாக உள்ளனர். இலங் கையிலும், செசன்யாவிலும் பாதிக்கப்பட்டவர்களை விட, அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் காஷ்மீர் பெண்களே. இதில் ஏராளமான வண்புனர்வு சம்பவங்கள் வெளி உலகுக்கு பாலியல் வன்கொடுமை ஐக்கிய நாடுகள் சபையின் 1994 வது வெளியீட்டில் (E/CN4/1995/42 PP 63 - 69) இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 1990 லிருந்து 1996 வரை மட்டும் 882 பெண்களை பாதுகாப்பு படையினர் வன்கொடுமை செய்து ள்ளனர் என்ற வேதனைச் செய்தி கள் வெளிவந்துள்ளன.

இன்னமும் அடையாளம் காணப் படாத புதை குழிகள் ஏராளமாய் காஷ்மீரில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சுட்டுக் கொல் லப்பட்ட வெளிநாட்டுத் தீவிர வாதிகளின் புதை குழிகள் என இந்திய அரசு கூறுகிறது. ஆனால் அவையனைத்தும் அப்பாவி காஷ்மீர் கிராமவாசிகள் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங் கியதும் இதுகுறித்து மனித நேயம் மிகுந்த பல பத்திரிகைகள் சர்வதேச பொது மன்னிப்பு சபை மற்றும், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் போன்றவற்றுக்கு முறையீடுகளை அனுப்பத் தொடங்கினர்.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம் (The Association Of The Parents Of Disappeared Persons) APDP அமைப்பு கூற்றின்படி 1989 வரை 8 ஆயிரம் பேர் காணாமல் போனார்கள்.

முறையான நீதி விசாரணை செய்யப்பட வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

இதனிடையே காஷ்மீர் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கிமூன் தெரிவித் திருக்கிறார்.

இதுகுறித்து பான்கிமூனின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஷ்மீரில் நிகழ்ந்த 17 பேரின் படுகொலைகள் கவலையளிப்ப தாகவும் கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரில் நிலைமை கட்டுக் கடங்காமல் போவது கவலை அளிப்பதாகவும் பான்கிமூன் தெரி வித்திருக்கிறார்.

இதனிடையே காஷ்மீரில் நிலை மை கொந்தளிப்பில் தான் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். காஷ்மீரில் இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை. தொடர் வேலை நிறுத்தங்களால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய சிதம்பரம், அரசு எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

நான்கு வாரமாக ஜும்ஆ தொழுகை நடைபெறாத ஸ்ரீநகர்

நான்கு வாரமாக ஜும்ஆ தொழுகை நடைபெறாத ஸ்ரீநகர்

அபுஸாலிஹ்

E-mail Print PDF

நான்கு வாரமாக ஜம்மு காஷ்மீர் மாநில தலை நகரான ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜிதில் தொழுகை நடை பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீநகர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அந்நகரை சுற்றியுள்ள முக்கிய பள்ளிவாசல்களிலும் தொழுகை நடைபெற அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது.

பள்ளிவாசல்களை நோக்கி செல்லும் சாலைகள் சி.ஆர்.பி.எஃப் காவல்துறையினரால் மூடி வைக்கப்பட்டிருப்பதாக ஏஜென்சி இந்தியா பிரஸ் கூறியிருக்கிறது.

ஆனால் காவல்துறை இதனை மறுத்திருக்கிறது. பள்ளிவாசல் பகுதிகளில் ராணுவம் நிலைநிறுத் தப்படவில்லை என காவல்துறை கண்காணிப்பாளர் ஷவுகத் ஹூஸைக் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு 100 மீட்டருக்கு இடையிலும் வாகனத்தடையை சி.ஆர்.பி.எப் காவல்துறையினர் ஏற்படுத்தியிருப்பதாக காஷ்மீர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


ஜம்முகாஷ்மீர் மக்களின் வழி பாட்டு உரிமை நான்காவது வார மாக மறுக்கப்பட்டிருக்கிறது இது தொடர்வது நல்லதல்ல என சமூகநல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள் ஹபீபா பாலன்

காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள்

ஹபீபா பாலன்

ஓடுங்கள். பள்ளிவாசலுக்குள் நுழையாதே. தடுக்கப்பட்ட மக்கள். மறுக்கப்பட்ட ஜூம்ஆ தொழுகை. மூடப்பட்ட பள்ளிவாசல்கள்.

இவையெல்லாம் கடந்த ஆண்டு சீனாவின் ஜின்ஜியாங் மாகா ணம் என்று அழைக்கப்பட்ட துருக்மினிஸ்தானில் நடை பெற்ற காட்சியல்ல. 9.7.2010 வெள்ளிக் கிழமையன்று ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மஸ்ஜித்தை நோக்கி தொழச் சென்ற மக்கள் விரட்டப்பட்டனர்.
ஸ்ரீநகர் ஜாமியா மஸ்ஜித் மற்றும் ஹஜ்ரத்பால் தர்கா வளாகத்தில் உள்ள பெரிய மஸ்ஜித்திலும் ஜும் ஆ தொழுகை நடத்த விடாமல் தடுக்கப்பட்டது. ஓடுங்கள். இங்கே நுழைய உங்களுக்கு அனுமதி இல் லை எனக் கூறி விரட்டியதாக ஹஜ்ரத்பால் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் கூறுகிறார்.

ஜாமியா மஸ்ஜிதை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு தடை செய்யப்பட்டி ருந்ததாக நவ்ஹாட்டா பகுதி மக்கள் தெரிவித் தனர். பள்ளிவாசலுக்கு யாரும் வரக்கூடாது. தெருவில் யாரும் நடமாடக்கூடாது. பள்ளி வாசலில் யாரும் உள்ளே தங்கிவிடவும் கூடாது என்று சி.ஆர்.பி.எப். காவல்துறையினரும் ராணுவத்தினரும் தடை விதித்துள்ளனர்.

பள்ளிவாசல்களில் யாரும் கூடக் கூடாது. பள்ளிவாசல் இருக்கும் பகுதியை நோக்கிக் கூட யாரும் கூட்டமாக சேர்ந்து போகக் கூடாது&என்று கண்டிப்பு காட்டும் பாதுகாப்பு படையினர் அவ்வாறு பள்ளிவாசலை நோக்கி செல்ல முயலும் மக்கள் கூட்டத்தை கடுமை யாகத் தாக்குகின்றனர். மாநிலத்தில் உள் பகுதிகளில் உள்ள சிறிய பள்ளிவாசல்களில் மட்டும் தொழ அனுமதிக்கப்பட்டதாகவும் செய்தி கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு&காஷ்மீரில் உள்ள அமர் நாத் என்ற ஹிந்துக்களின் புனித தலத்தில் கடந்த வாரம் வரை ஒரு லட்சம் ஹிந்து பெரு மக்கள் பத்திரமாக சகல சவுகரியத்துடன் அமர்நாத் யாத்திரையை மேற் கொண்டுவருகின்றனர்.

அதே மாநிலத்தில் ஜும்ஆ தொழுகைக்கு தடைவிதிக் கப்பட் டுள்ளது. அதையும் மீறி வீதியில் இறங்கி தொழச்சென்றால் உயி ருக்கு உத்தரவாதமில்லாத நிலை.

காஷ்மீரிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? அரசியல் திறனாய் வாளர்களைக் கேட்டால் அது 60 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சினை. இந்தியா&பாகிஸ்தான் பிரிவினையின்போது வெடித்த பிரச் சினை என்கிறார்கள். நேரு வின் தவறால் விளைந்தது இது என்கிறார்கள்.

இன்னும் சில அரசியல் ஞானிக ளோ 20 ஆண்டுகளாக உள்ள சிறப்பு ஆயுதப்படை சட்டம் என்று கூறப்படும் கறுப்பு சட்டம் பயன் படுத்த தொடங்கியதிலிருந்து இந்த நிலை மிகவும் மோசமாகியது என்கிறார்கள்.

மற்றும் சில அரசியல் திறனாய் வாளர்கள், அல்ல அல்ல; கடந்த ஆண்டு சோபியன் என்ற இடத்தில் தங்கள் குடும்பத் தினருக்கு சொந்தமான ஆப்பிள் தோட்டத்தை பார்க்கச் சென்ற இளம்பெண்கள் கற்பழித்து படு கொலை செய்யப்பட்டு ஓடையில் வீசப்பட்டனர். இந்தக் கொடும் செயலை செய்தவர்கள் பாது காப்புப் படையினர் தான் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.- ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக் கப்படவில்லை. இது காஷ்மீர் மக்களின் ஆத்திரத்தையும் வேத னையையும் அதிகரித்ததாக சொல் லப்படுகிறது.

சோபியன் துயரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாகியும் நீதி கிடைக்காத நிலை நீடித்ததால் அம் மக்களின் கோபம் அதிகரித்தது.

ஆனால் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அந்தப் பனிமலையை பற்றவைக்கும் முயற்சியாக அடுத்தடுத்து சம்ப வங்கள் நடைபெற்றன.

ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப் பயணம் சென்றார். ஆனால் காஷ்மீர் மக் கள் அவரது பயணத்தை முழு மகிழ்ச்சியுடன் வரவேற்கவில்லை. மாறாக வெறிச்சோடிய வீதிகளை யும் மூடப்பட்ட கதவுகளையும் அவர்எதிர் நோக்க வேண்டி வந்தது.

சில நாட்களுக்கு முன்பு தான் காஷ்மீர் மக்கள் மிகுந்த மகிழ்ச் சியுடனும் கொண்டாட்டத் தில் திளைத்திருந்தனர். ஐ.ஏ.எஸ் என்ற ஆட்சி பணி தேர்வில் இந்தியா விலேயே முதலிடம் பெற்றார் ஷா பைசல் என்ற டாக்டர். இந்த மகிழ்ச்சிக்குரிய நிகழ்வில் நெகிழ் ந்திருந்த மக்களை வெகுண்டு எழச் செய்தது மச்சில் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் நிகழ்ந்த போலி என் கவுண்டர் சம்பவங்கள்.

வட காஷ்மீர் பகுதியில் அந்த சம்பவத்தில் மூன்று இளைஞர் கள் என்கவுண்டர் செய்யப்பட்ட னர். இவர்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு நுழையமுய ன்றவர்கள் என பாதுகாப்புப் படை யினர் குறிப்பிட்டனர். ஆனால் அவர்கள் அப்பாவி இளைஞர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

இது ஷேக் அப்துல்லாஹ் மற்றும் நேருவின் காலமும் அல்ல. இந்திரா ராஜீவ் காலத்து பத்திரிகைகளின் வாய்ப்பூட்டு காலமும் அல்ல.

கிளர்ந்து எழுந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் உள்ளக் குமுறலை உலக ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை படம்பிடித்தன. டைம்ஸ் ஆஃப் இந்தியா முதல் ஆம்னெஸ்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச அமைப்புவரை இந்தப்பிரச்சினையை விட்டு விடு வதாக இல்லை.

காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய அளவில் மட்டும் அல்ல சர்வதேச அளவில் நீதி விசாரணை செய் யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

போலி என்கவுண்டரில் உண்மையாக கொல்லப்பட்ட அப்பாவி களின் எண்ணிக்கை வெளியே தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

அண்மைக்காலங்களில் போராட்டத்தில் ஈடுபடும் ஆர்ப் பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் இரக்கமற்ற முறை யில் சுட்டுக் கொல்லப்படும் அவலம். 67-க்கும் மேற்பட்டோர் பாது காப்பு படையினரால் கொல்லப் பட்டிருக்கின்றனர். கடந்த ஜூன் 27&ம் தேதியிலிருந்து ஜூலை 10&ம் தேதி வரை 30&க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகொலை செய் யப்பட்டுள்ளனர்.

இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களும் அடங்குவர்.

இந்த அநீதியை தட்டிக்கேட்க யாருமே இல்லையா? என்ற அவலக் குரல் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் எதிரொலிக்கிறது.

கொந்தளிக்கும் காஷ்மீர்: மறைக்கப்படும் உண்மைகள்

E-mail Print PDF

2010. காஷ்மீரைப் பொறுத் தவரை மக்களுக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக வாலிபர்களை கொல்லும் ஆண்டாக அமைந்துள்ளது. ஜன வரி 2010 முதல் ஜூன் 30 வரை 16 சிறுவர்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள் ளார்கள். இது போன்ற சம்பவங் கள் மீண்டும் மீண்டும் நடை பெறும் போது மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இது போன்ற படுகொலைகளை பொது மக்கள் இன அழிவு என்றே கருதுகிறார்கள்.
இனாயத் கான்

இராணுவத்தின் பைத்தியக்கார நடவடிக்கைக்கு இந்த ஆண்டு முதலில் ஜனவரி 8 அன்று பலி யானது இனாயத் கான் என்ற 16 வயது சிறுவன். இனாயத் அப்போது தான் பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருந்தான். அந்த சோக தினத்தன்று டியூசன் படிப்பதற்காக சென்றுக் கொண்டிருந்த இனா யத் கான் ஸ்ரீநகரில் உள்ள புது ஷாஹ் சௌக்கில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல் லப்பட்டான். இனாயத்தின் வீடு இசைத்துறையைச் சேர்ந்த இன் னொரு இனாயத்தின் வீட்டின் அருகே உள்ளது. இந்த இனாயத்தும் 2006ல் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது இருவரும் நீதிக்காக உலகை விட்டு மறைந்த நிலையில் காத்திருக்கிறார்கள்.

வாமிக் பாரூக்

ஜனவரி 31, 2010 அன்று கனி நினைவு விளையாட்டரங்கில் விளையாடிக் கொண்டிருந்தான் ரைனாவாரி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வாமிக் பாரூக். போராட்டக்காரர்கள் சிலரை விரட் டிக் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர் விளையாட்டரங்கில் நுழைந்து கண்ணீர்புகை குண்டு பிரயோகம் செய்தனர். படையின ருக்கு அருகில் இருந்த வாமிக் இதில் கொல்லப்பட்டான். அறி வார்ந்த மாணவனாகவும், தனது பெற்றோரின் நம்பிக்கை நட்சத் திரமாகவும் வாமிக் திகழ்ந்தான்.

ஜாஹித் பாரூக்

ஐந்து நாட்கள் கழித்து பிப்ர வரி 5, 2010 அன்று தனது பெற் றோருக்கு ஒரே மகனாக இருந்த 16 வயது சிறுவன் ஜாஹித் பாரூக் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டான்.

ஏப்ரல் 13, 2010&ல் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் ஜுபைர் அஹ்மது பட் என்ற 17 வயது பையன் தனது நண்பர்களுடன் ஜீலம் ஆற்றங்கரையில் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டிரு ந்தான். அப்போது அங்கே வந்த படையினர் இந்த சிறுவர்களை விரட்டி ஆற்றில் விழ வைத்தனர். ஜுபைரின் நண்பர் நீந்தி மறு கரையை அடைந்து விட்டார். ஆனால் ஜுபைரினால் நீந்த இயல வில்லை. சில படகோட்டிகள் ஜுபைருக்கு உதவ முன்வந்தனர். ஆனால் படையினர் அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டை வீசினர். ஜுபைர் ஆற்றில் மூழ்கி இறந்து போனான். சோப்பூரைச் சேர்ந்த மாணவனான ஜுபைர் ஸ்ரீநகரில் பகுதி நேர தொழிலா ளியாகவும் பணியாற்றி வந்தான். நேரடி சாட்சிகளின் வாக்குமூலங் களைப் புறக்கணித்து விட்டு இதனை ஒரு விபத்து என்று வர் ணித்து இந்த வழக்கை காவல்துறை மூடி விட்டது.

ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு 2010ல் மிகவும் அச்சத்திற்குரிய மாதமாக 2010&ல் ஜூன் மாதம் அமைந்து விட்டது. பெரும்பாலான மக்கள் அரசின் நீதி பரிபாலனத்தின் மீதான நம்பிக்கை இழக்கும் வகை யில் இந்த மாத நிகழ்வுகள் அமை ந்து விட்டன.

துபைல் அஹ்மது

17வயது சிறுவன் துபைல் அஹ்மது ஸ்ரீநகர் சாதாகடல் பகுதி யைச் சேர்ந்தவன். சமீபத்தில் தான் பள்ளி இறுதித் தேர்வில் மிக அதிக பட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருந்தான். கனி நினைவு விளையாட்டரங்கில் ஜுன் 5 அன்று விளையாடிக் கொண்டிருந்த துபைல் அஹ்மது படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். தலை யில் சுடப்பட்டதால் துபைல் அஹ்ம தின் மூளை சிதறி புல்வெளியில் விழுந்தது.

ரபீக் பங்ரூ

முஹம்மது ரபீக் பங்ரூவின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு உறுப் பினர்கள் ஏற்கெனவே படையி னரால் கொல்லப்பட்ட நிலையில் துப்பட்டி நெசவாளரான இவரும் படையினரால் சித்தரவதைச் செய் யப்பட்டு கொல்லப் பட்டார். ஜூன் 19 அன்று இராணுவத் தினரால் பிடிக்கப்பட்ட ரபீக் கடுமையாக சித்தரவதைச் செய்யப்பட்டு உயிர் இழந்தார். மறுநாள் இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்ற போது அரசுக்கு எதிராக முழக் கங்கள் எழுப்பப்பட்டதினால் படையினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ரபீக் பங்ரூவின் உறவினர் 17வயது ஜாவித் அஹ்மது மல்லா கொல் லப்பட்டார். குடும்ப வறுமையின் காரணமாக ஒரு பை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான் ஜாவித் அஹ்மது.

சக்கீல் அஹ்மது

இந்த சோகத்தில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்பு ஜூன் 25 அன்று நிலவரம் மேலும் மோசமாகியது. வடகாஷ்மீரில் சோப்பூர் பகுதி யில் படையினர் ஒரு போலி மோதல் சாவை ஏற்படுத்தினர். இதனை எதிர்த்து மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திய போது படையினர் கண்மூடித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு சாகுபடி செய்து கொண்டிருந்த 17வயது சிறுவன் அஹ்மது காக்ரூவை படையினர் சுட்டுக் கொன்றனர். இதே தினத் தில் சில மின்பொருட்களை வாங்க கடைக்கு சென்று கொ ண்டிருந்த எலெக்ட்ரிசியன் சக்கீல் அஹ்மதையும் பாதுகாப்பு படை யினர் சுட்டுக் கொன்றனர்.

பிலால் அஹ்மது

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலைகளை கண்டித்து சோப்பூர் மக்கள் வீதிக்கு வந்து ஜூன் 27 அன்று போராட்டம் நடத் தினார்கள். 22 வயது வாலிபர் பிலால் அஹ்மது தொலைவில் இருந்து ஒரு கண்டன ஊர்வலத் தைப் பார்த்துக் கொண்டிருந் தார். அப்போது அங்கு வந்த படையினர் பிலால் அஹ்மதின் தொண்டைக்குழிக்குள் சுட அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந் தார்.

தவ்கீர் அஹ்மது மற்றும் தஜாமுல் பஷீர்

ஜூன் 28 அன்று வடகாஷ்மீரில் இருந்து தெற்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவிற்கு படையினரின் கொலைவெறி பரவியது. 9 வயது சிறுவன் தவ்கீர் அஹ்மது மற்றும் 20 வயது தஜாமுல் பஷீர் ஆகியோர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உயிர் இழந்த ஒருவரது குடும் பத்தினருக்கு சொந்தமான புல்த ரையில் இஸ்தியாக் அஹ்மது காந்தே (வ 15), இம்தியாஸ் அஹ்மது இட்டூ (வ 18), சஜ்ஜாத் அஷ்ரப் பாபா (வ 19), ஜூன் 29 அன்று பேசிக் கொண்டிருந்தனர். இஸ்லாமாபாத் நகரில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவர்களை விரட்டிக் கொண்டு வந்த காவல்துறை ஆய்வாளர்கள் அய்யூப் ராத்தர் மற்றும் ரவூப் அஹ்மது ஆகியோர் உதவி ஆய்வாளர்கள் மஸ்ரத் ஆலம் மற்றும் பர்வேஸ் அஹ்மது ஆகியோருடன் புல் தரைக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஆறு வாலிபர்களை வரிசையாக நிறுத்தி வைத்து அவர்களை நோக்கி சுட் டதாக சொல்லப்படுகின்றது. இதில் இஸ்தியாக் அஹ்மதும் இம்தியாஸ் அஹ்மதும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சுஜாத் இஸ் லாம் (வயது 19) மற்றும் மூவர் ஆனந்தநாக்கில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சுஜாத் இஸ்லாம் உயிர் இழந்தார். மேலும் ஒருவரது நிலை மிக மோசமாக உள்ளது. மற்ற இருவர் ஆபத்தான நிலையைக் கடந்து விட்டனர்.

காஷ்மீரில் வாழ்வது ஒவ்வொரு மணி நேரமும் வேறுபட்ட அனு பவங்களை அளிக்கின்றது. ஊர டங்கு உத்தரவின் காரணமாக மக் கள் வீட்டிற்குள் அடைந்து கிடக் கின்றனர். மாநில அரசு முழு மையாக தனது சொந்த மக்களை வெறுத்து வருகின்றது. தங்கள் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் கோபமடைந்துள்ள ஆயு தம் தரிக்காத மக்கள் தொடர்ந்து போராடுவார்களா? இன்னும் எத்தனை பேர் கொல்லப்படுவ தற்காக காத்திருக்க வேண்டும்?

(கட்டுரையாசிரியர் இன்ஷா மாலிக் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து வரும் மாணவர் ஆவார்)

காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

அபுஸாலிஹ்

2009 அக்டோபர் மாதம் ராபர்ட் பிராட் ராக் என்ற பிரிட்டன் அறி-ஞர் இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதி இரண்டிலும் சேர்த்து ஒரு கருத்துக்கணிப்பினை நடத்தினார். 37 பக்கங்களைக் கொண்ட அந்த கருத்துக் கணிப்பில் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர் மக்களில் 44 சதவீதம் பேர் காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என விரும்புகிறார்களாம். இந்தியாவில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த 43 சதவீதம் பேர் தனி காஷ்மீரக் கொள்கைக்கு பச்சைக் கொடி காட்டுபவர்கள் என அந்த கருத்துக் கணிப்பு குறிப்பிடுகிறது.

1948-49 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் மக்களின் மனப்பான்மை இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்ற குறிக் கோள்களுடன் இருந்ததாகவும் ஆனால் தற்போது 75 சதவீதத்திலிருந்து 95 சதவீத மக்கள் ‘ஆஜாதி’ சுதந்திர இறுதித்தீர்வு எனக் கருதுவதாக சர்வே கூறுகிறது.

எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு நிரந்தரமாக இருப்பினும் தவறில்லை. ஆனால் இருபுறமும் உள்ள காஷ்மீர் மக்கள் சந்தித்துக் கொள்வதற்கும், வணிகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் அனுமதிக்க வேண்டும் என 58 சதவீத மக்கள் கூறுகின்றனர்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடா? தேவையே இல்லை என்கிறார்கள் ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள். 8 சதவீதமக்கள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை எதிர்க்கிறார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என ஜம்மு காஷ்மீரில் 20 சதவீதம் பேர் நம்புகிறார்கள். பாகிஸ்தான் காஷ்மீரில் 40 சதவீதம் ஆயுத வழிப்போராட்டமே தீர்வு என நம்புகிறார்கள்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.06.2010)

குறிப்பு: இக்கருத்து கணிப்பை கவனத்தில் கொண்டு காஷ்மீரிகளின் உள்ளங்களை வென்றெடுக்கும் பணிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

போபால் விழித்துக் கொள்வோம் சர்ஜுன்

போபால் விழித்துக் கொள்வோம்

E-mail Print PDF

போபால் விஷவாயு துயரம் நாட்டை உலுக்கியது. அது குறித்த தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து நாட்டு மக்களின் சோகத்தையும் ஆத்திரத்தையும் பன்மடங்கு அதிகமாக்கியது.

மும்பை தாஜ்ஹோட்டல் தாக்குதல் போன்ற மேல்தட்டு மக்கள் பாதிப்பு தொடர்பான வழக்குகள் ஓராண்டுக்குள் முடிந்து குற்றவாளியின் மீது தூக்குத்தண்டனையும் அறிவிக் கப்பட்டுவிட்டது.

ஆனால் போபால் விஷவாயு படுகொலைகளுக்கு காரணமாக அன்னிய நாட்டை சேர்ந்த ஆண்டர்சனை நோக்கி அதிகார வர்க்கத்தின், நீதித்துறையின் சுண்டு விரல்கள் கூட அசையவில்லை.

அது மட்டுமின்றி எம் மக்களை ஆயிரமாயிரமாய் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமான பாதகனை நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட்டுக் கொண்டு காப்பாற்றி, பாராட்டி சீராட்டி சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

பாபரி பள்ளிவாசலை தகர்த்து, தேச வளர்ச்சியின் சக்கரங்களை பின்னோக்கி தடம் புரள வைத்த நயவஞ்சக ந(ரி)ரசிம்மராவ் தான் இந்த நல்ல காரியத்திலும் (?) முக்கியப் பங்காற்றியுள்ளார்.

போபால் விஷவாயு தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் செய்திஏடு "உலகத்திலேயே இவ்வளவு ஆமை வேக வழக்கினை பார்க்கவேயில்லை" என வேதனையுடன் குறிப்பிட்டது.

தீர்ப்பு வெளிவருவதற்கே இத்தனை ஆண்டுகாலம் ஆனது. இதற்கு மேல்&முறையீடு சென்று பின்னர் தீர்ப்பு வரும் போது நாங்கள் உயிரோடு இருப்போமா? என விரக்தியுடன் வினா விடுத்தவர் யார் தெரியுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டக்களம் கண்ட சமூகநல ஆர்வலரும் வழக்கறிஞருமான அப்துல் ஜப்பார்.

நீதித்துறையின் முகத்தில் அறைவதைப் போன்ற வினாக்கள் எழுப்பப்பட்டபின். பிரதமர் தலையிட்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 9 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்தார். அது 10 நாளில் தனது அறிக்கையினை தாக்கல் செய்யுமாறும் பணித்திருந்தார்.

ஒரு வழியாக தனது அறிக்கையை சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. அதில் போபால் விஷவாயு வழக்கை சீராய்வு செய்ய முடிவு செய்து சிபிஐ&க்கு உத்தரவிட்டுள்ளது. வாரன் ஆண்டர்சனை நாடுகடத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வருவது மட்டுமின்றி உயிர்களைப் பறிகொடுத்த மக்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாயும், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் ரூபாயும், ஓரளவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று லட்ச ரூபாயும் வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் 1,500 கோடி ரூபாய் நிவாரண நிதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இழப்பீடுகள் எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இனி இது போன்ற உலகப் பேரழிவுகள் நடைபெறா வண்ணம் தடுப்பதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? குமுறும் எரிமலைகளைப் போல் இன்னும் ஆபத்துக்கள் புறப்படுகின்றன.

கூடன்குளம், கல்பாக்கம் என பல்வேறு நடமாடும் ஆபத்துக்களை எதிர்கொள்ள என்ன செயல்திட்டங்களை; முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை & அரசுகள் செய்யப் போகின்றன?

போபால் போன்ற துயரங்கள் நிகழும் முன்பே விழித்துக் கொள்வோம்.

-சர்ஜுன்

Web Counter Code