இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, August 20, 2010

காஷ்மீர் :படுகொலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை

காஷ்மீர் :படுகொலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை

ஹபீபா பாலன்


காஷ்மீரில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியோடு துப்பாக்கிச் சூட்டில் பலியான வர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துவிட்டது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை மட்டும் 9 அப்பாவிகள் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். ஞாயிற்றுக்கிழமை பலியான 9 பேர்களில் அஃப்ரோஸ் என்ற 17 வயது இளம் பெண்ணும் ஒரு வர்.

நூற்றுக்கணக்கானவர்கள் படு காயம் அடைந்துள்ளனர். ஸ்ரீநகர், பாரமுல்லா, சோழ, நைதா ஹால், கண்டர்பால், ஃபரிஸ் டாபால், பர்சோ, கட்லா பால், ஹன்னாபல், பிங்லனா, சிங்ஃபியாரா மற்றும் அனந்தனாக் பகுதிகள் இன் னும் ஊரடங்கு உத்தரவால் அடக்கப் பட்டுள்ளன.

காஷ்மீரின் நிலை குறித்து அகில உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் கவலை யடைந்துள்ளனர்.

அடிப்படை மனித உரிமைகள் அங்கு பேணப்படுகிறதா? என்ற கவலை மனித உரிமை ஆர்வலர் களிடையே எழுந்துள்ளது. சுதந்தி ரமாக வாழும் உரிமை, முறையான நீதி விசாரணை கேட்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மீறப்படுவதாக The Universal Declaration Of Human Rights மற்றும் Human Rights Convenants போன்றவை வலியுறுத்திய அனைத்து கோட்பாடுகளும் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் புறம் தள்ளப்பட்டிருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு Medicinis Sams Frontieres என்ற பிரெஞ்சு பத்திரிகை, காஷ்மீர் பெண்களின் நிலை குறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டது.
2007 ஆம் ஆண்டு வரை 9 ஆயிரத்து 800 பெண்கள் பாலியல்வன்முறைக்கு இலக்கானதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. 22 ஆயிரத்து 100 பெண்கள் இளம் விதவைகளாக உள்ளனர். இலங் கையிலும், செசன்யாவிலும் பாதிக்கப்பட்டவர்களை விட, அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் காஷ்மீர் பெண்களே. இதில் ஏராளமான வண்புனர்வு சம்பவங்கள் வெளி உலகுக்கு பாலியல் வன்கொடுமை ஐக்கிய நாடுகள் சபையின் 1994 வது வெளியீட்டில் (E/CN4/1995/42 PP 63 - 69) இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 1990 லிருந்து 1996 வரை மட்டும் 882 பெண்களை பாதுகாப்பு படையினர் வன்கொடுமை செய்து ள்ளனர் என்ற வேதனைச் செய்தி கள் வெளிவந்துள்ளன.

இன்னமும் அடையாளம் காணப் படாத புதை குழிகள் ஏராளமாய் காஷ்மீரில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சுட்டுக் கொல் லப்பட்ட வெளிநாட்டுத் தீவிர வாதிகளின் புதை குழிகள் என இந்திய அரசு கூறுகிறது. ஆனால் அவையனைத்தும் அப்பாவி காஷ்மீர் கிராமவாசிகள் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங் கியதும் இதுகுறித்து மனித நேயம் மிகுந்த பல பத்திரிகைகள் சர்வதேச பொது மன்னிப்பு சபை மற்றும், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் போன்றவற்றுக்கு முறையீடுகளை அனுப்பத் தொடங்கினர்.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம் (The Association Of The Parents Of Disappeared Persons) APDP அமைப்பு கூற்றின்படி 1989 வரை 8 ஆயிரம் பேர் காணாமல் போனார்கள்.

முறையான நீதி விசாரணை செய்யப்பட வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

இதனிடையே காஷ்மீர் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கிமூன் தெரிவித் திருக்கிறார்.

இதுகுறித்து பான்கிமூனின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஷ்மீரில் நிகழ்ந்த 17 பேரின் படுகொலைகள் கவலையளிப்ப தாகவும் கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரில் நிலைமை கட்டுக் கடங்காமல் போவது கவலை அளிப்பதாகவும் பான்கிமூன் தெரி வித்திருக்கிறார்.

இதனிடையே காஷ்மீரில் நிலை மை கொந்தளிப்பில் தான் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். காஷ்மீரில் இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை. தொடர் வேலை நிறுத்தங்களால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய சிதம்பரம், அரசு எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

No comments:

Web Counter Code