இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஷஹாபுத்தீன் யாகூப் குரைஷி குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியுள்ளார்.
63 வயதான இவர் டெல்லியைச் சேர்ந்தவர். 1947 ஜூலை 11ஆம் தேதி பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேறினார்.
வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற குரைஷி பாரசீகம், அரபி, ஜெர்மன் மொழிகளில் சிறந்த புலமை மிகுந்தவர்.
மக்கள் தொகை, பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதுக்கு வந்த இளம் தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சினைகளை தீவிர ஆய்வு செய்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் பல்வேறு சமூக நல அமைப்புகளோடு சிறந்த தொண்ட £ற்றியவர். தொடர்பியல் மற்றும் சமூக சந்தை என்ற பிரிவில் இவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.
புற்றீசல் போல் பெருகிவரும் புதிய கட்சிகள் குறித்து கவலை தெரிவித்த குரைஷி “அரை மணி நேரத்திற்கு ஒரு கட்சி தொடங்கப்படுகிறது. சில கட்சிக ளுக்கு தலைமையகமே இல்லை. சில கட்சிகள் டீக்கடைகளில் இயங்கு வதாக குறிப்பிட்டவர், இத்தகைய கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும்“ என்றார்.
No comments:
Post a Comment