இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, December 26, 2008

மாவீரன் கர்கரேயை காரில் கடத்தி படுகொலை செய்தது யார்?
நாடாளுமன்றத்தில் அப்துர் ரஹ்மான் அந்துலே எழுப்பிய புயல்


அபூசாலிஹ்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குறித்த தகவல்கள் மறைந்து போயின. அவை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதன் பின்னணியில் ஓர் அப்பட்டமான அரசியல் சதி காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கலந்த கவலை இந்திய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது.


குறிப்பாக மும்பை மீது பயங் கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளா கவே தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.


மாவீரன் கர்கரேயின் மரணம் குறித்து இந்தியாவே அதிர்ச்சி யில் ஆழ்ந்த போது சில சக்திகள் மட்டும் குதூகலத்துடன் கும்மாளமிட்டன. மாலே கான் குண்டுவெடிப்பு சதி குறித்த உண்மைகள் இனி வெளிவருமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழத் தொடங்கியது.


இந்நிலையில் கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்த மர்மங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சுதந்திர உணர்வுள்ள புலனாய்வு நிபுணர் கள் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது.


கர்கரேயின் மரணம் குறித்த மர்மம் நீடித்த நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் அமைச்சருமான அப்துல் ரஹ்மான் அந்துலே நாடு தழுவிய நியாயமான சந்தேகத்தை சதிகாரர்கள் உள்ளம் அதிர உரத்து முழங்கினார். “கர்கரேயின் படுகொலையில் சந்தேகம் இருக்கிறது, கர்கரேயைக் கொன்றது யார்? ஹிந்துத்துவ தீவிரவாதத்தை நேர்மையுடன் வெளியுலகிற்கு அம்பலப் படுத்திய அந்த நேர்மையான அதிகாரியை காமா மருத்துவமனைக்கு செல்லுமாறு தவறாக வழிநடத்தியது யார்? பயங்கர வாதிகள் குண்டு மழை பொழிந்த தாஜ் ஹோட்டலுக்கோ, டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கோ, நரிமன் இல்லத்திற் கோ செல்லவிடாமல் காமா மருத்துவ மனைக்கு செல்வதற்கு அவரை தவறாக தகவல் கூறி வழிநடத்தியது யார்?’’ என்ற அதிரடி வினாக்களை வீசி நாடாளு மன்ற அவையினைத் திணறடித்தார்.


கர்கரே மிகச்சிறந்த நேர்மையான அதிகாரி. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது, கர்கரேயை படுகொலை செய் தது யார்? என்பது குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என அந்துலே தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்துர் ரஹ்மான் அந்துலேயின் உரைக்கு கடும் இடையுறு விளைவித்தனர். இது அந்துலேயின் பாகிஸ்தானுக்கு சாதக மான வாதம் எனக் கூறும் அளவுக்கு தங்கள் நிலையை தாங்களே தாழ்த்திக் கொண்டனர். ஒரு நேர்மையான நெஞ் சுரம் மிக்க ஓர் அதிகாரியை இந்த தேசம் இழந்துவிட்டதே என்ற வேதனை கொஞ் சமும் இல்லாத பாஜக கும்பலின் வெற்றுக் கூச்சல் இந்திய மக்களின் மத்தியில் அவர்களுக்கு இழிவைத் தேடித்தந்தது.


அப்துர் ரஹ்மான் அந்துலே-யின் நாடாளுமன்ற அறைகூவல் நாட்டையே அவர் பின்னால் திரள வைத்துள்ளது. அந்துலே எழுப்பிய உரத்த சிந்தனை நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங் கியுள்ளது. அந்துலே இந்திய முஸ்லிம் களின் மனசாட்சியினை தட்டி எழுப்பி யுள்ளார். அதோடு அவரின் நாடாளு மன்ற அறைகூவல் இந்திய தேசத்தை உலுக்கியுள்ளது. அந்துலேவை அமைச்ச ரவையிலிருந்து அகற்றிவிட வேண்டும் என காங்கிரசுக்குள்ளே உள்ள பாசிச அடிவருடிகளும் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர். இதனிடையே அந்துலே தனது விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்திருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. பிரதமரும் சரி, அந்துலேயும் சரி அத்தகவலை உறுதிப் படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் அந்துலே எழுப்பியுள்ள கேள்வி களில் உள்ள சத்தியத்தை உணராமல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அப்துர் ரஹ்மான் அந்துலேக்கு எதிரான செய்திகளை மகிழ்ச்சியுடன் வெளியிட்டு வருகின்றன. அந்துலே யின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேசத்துரோகிகள் என்பதே நாட்டு மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.


இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் பொறியில் சிக்கிய எலியாக தவிக்கிறது. அந்துலே அவர்களை அமைச்சர் பதவியை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக உள்ளிட்ட சக்திகளும், காங்கிரசுக் குள் இருக்கும் பாஜகவின் ரகசிய ஆதரவாளர்களும் துடியாய்த் துடிக்கின்றனர். இந்நிலையில் பதவியை விட்டு நீக்கினால் அந்துலேயின் அரசியல் எழுச்சி உடையதாகவும், அந்துலேயை நீக்குவதால் காங்கிரஸ் மீள முடியாத வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும் என காங் கிரஸ் மேலிடம் முடிவெடுப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கிறது.




மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் படுகொலை செய்யப் பட்ட கர்கரேயின் விஷயத்தில் மகாராஷ் டிர அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை எனத் தெரிகிறது. கர்கரே படுகொலை குறித்து தனியாக விசாரணை ஏதும் செய்யப்பட்ட மாட்டாது என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.


நாட்டின் வர்த்தக தலைநகரத்தில் ஏற்பட்ட தாக்குதல் குறித்த தகவல் தெரிந்த உடனேயே உயிரை துச்சமென நினைத்து சிங்கமென பாய்ந்து சென்ற ஒரு கடமை வீரன் குண்டு துளைக்காத சட்டை அணிந்தும் கூட மார்பில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். காமா மருத்துவ மனைக்கு காரில் கடத்திச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது.


கர்கரேயை படுகொலை செய்த பயங் கரவாதிகள் அம்பலப்படுத்தப்படுவது எப்போது என்பதுதான் மக்கள் மனதில் உள்ள கேள்வி.
அந்துலேவிற்கு முஸ்லிம் அறிஞர்கள் ஆதரவு!

அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர் ஜஃபரியாப் ஜீலானி, அந்துலேயின் கருத்தை ஆதரித்திருக்கிறார். கர்கரே படுகொலை குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும், கர்கரே யின் மரணம் தெளிவுப் படுத்தப்பட வேண்டும், அதில் தவறுகள் இருந்தால் அவை மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்கரே போன்ற சிறப்பு மிக்க அதிகாரிகளின் வாழ்வும் மரணமும் குறித்த இறுதிக் கேள்வியாக இது அமைய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.


இந்திய உலமாக்குழுவின் பொதுச் செயலர் மௌலான நைமூர் ரஹ்மான், அனைத்திந்திய சன்னி முஸ்லிம் வாரியத் தின் தலைவர் மௌலான முகம்மது முஸ்தாக் ஆகியோரும் கர்கரேயின் மரணம் குறித்து விசாரணை தேவை என்று கூறியிருக்கிறார்கள். விசார ணையை மறுப்பவர்கள் உண்மை வெளிபடக் கூடாது என்று விரும்பு கிறார்கள். கர்கரே போன்ற அதிகாரி களின் மரணம் குறித்து கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது என்று மௌலானா முஸ்தாக் தெரிவித்திருக் கிறார்.


ஷியா பிரிவின் அறிஞர் மௌலானா கல்பே ஜாவத் கூறுகையில், `கர்கரே யின் தியாகம் குறித்து எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. பொருத்த மற்ற நேரத்தில் அவர் கொல் லப்பட்டிருப் பதால் அது சந்தேகத்தை கிளப்பியிருக் கிறது. வேறு பல இடங்களிலும் தாக்கு தல் நடத்தப்பட்ட நிலையிலும், கர்கரே காமா மருத்துவமனை நோக்கி தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறார்’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் கூறுகையில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு தீவிரவாதிகள் எளிதாக வருவதற்கு காரணமாக இருந்த பாதுகாப்பில் உள்ள பலகீனத்தை யும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவர் மௌலானா. காலித் ரஷித், ``விசாரணை நடத்துவதால் என்ன தீங்கு நேர்ந்து விடப்போகிறது?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கர்கரேயின் மரணத்திற்கு வேறு காரணம் இருக்க முடியுமோ என்ற சந்தேகத்தை தெளி வுப்படுத்துவதற்கு விசாரணை அவசியப் படுத்துகிறது. ஒவ்வொருவரும் சரியான தடத்தில் இருந்தால் பிறகு பி.ஜே.பி எதற்காக விசாரணையை எதிர்க்கிறது. கர்கரே உயிரோடு இருந்த போது அவரை தேச துரோகி என்று அழைத்தது. அவரு டைய விசாரணை முறைகளை கண் டித்தது. தற்போது அவர் மரணம் குறித்த விசாரணையை தடுக்கிறது. இதிலிருந்து உண்மை வெளிப்பட பிஜேபி விரும்ப வில்லை என்றே தெரிய வரு கிறது’ என்று காலித் ரஷித் கூறியிருக் கிறார்
அந்துலேக்கு ஆதரவாக முலாயம் சிங், மாயாவதி, திக்விஜய் சிங்!

ஹேமந்த் கர்கரே படுகொலை குறித்து மத்திய அமைச்சர் அந்துலே யின் கருத்துக்கு மத்தியப் பிரதேசத் தின் முன்னாள் முதல்வரும் காங்கிர ஸின் பொதுச் செயலாளருமான திக் விஜய் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.


பாரதீய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். போன்றவை மாலேகான் விசாரணை குறித்தும் கர்கரேயின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தன. இந்தப் பின்னணியை கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றே அந்துலே கருத்து தெரிவித்துள்ளார். இதில் தவறேதும் இல்லை. மும்பை பயங்கர வாத தாக்குதல் நடைபெறும் இடத் திற்கு உடனடியாக செல்லுமாறு உத்தர விட்டது யார்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என திக்விஜய் சிங் கூறியிருக்கிறார்.
கர்கரே ஹிந்துக்களை மட்டும் கைது செய்யவில்லை. எல்லாப் பிரிவு களில் உள்ள பயங்கரவாதிகளை, கொடிய குற்றவாளிகளைக் கைது செய்தவர் ஹேமந்த் கர்கரே என்று கூறிய திக்விஜய் சிங், பாபர் மஸ்ஜித் தகர்ப்பிற்காக மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ப தாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே அந்துலேவுக்கு முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் ஆதரவு தெரிவித்துள்ள
ABUSALIH NEWS ABOUT MALEGAUN HINDUTVA TERRRIST
மாலேகான் வழக்கின் கதி?
தீவிரவாதத் தடுப்பு படையினர் அச்சம்!

மாலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் கோர முகத்தை தோலுரித் துக் காட்டியவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே. ஹிந்துத்துவ பாசிச சக்திகள் விஷயத்தில் நாட்டு மக்கள் எச்சரிக்கை காட்ட வேண்டிய முக்கியமான தருணத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.


கர்கரேயின் திடீர்மறைவு மகாரஷ்ட்ர மாநில தீவிரவாதத்தடுப்பு படையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள் ளது. மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கு முன்பு போல் துரித கதியில் இயங்குமா? மாநில அரசிடம் இருந்து முன்பு போலவே ஒத்துழைப்பு கிடைக் குமா என்ற அச்சத்தில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் ஆழ்ந்துள்ளனர்.


அஞ்சா நெஞ்சன் கர்கரே இன்று இல்லை. கர்கரேவுக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய தீவிரவாதத் தடுப்பு படைக்காக பிரத்யேகமாக விமானத்தையே வழங் கிய சரத்பவாரின் தேசியவாதக் கட்சியைக் சேர்ந்த துணை முதல்வர் ஆர்.ஆர் பாட்டீல் இன்று பதவியில் இல்லை. இத்தகைய நிலையில் இந்த வழக்கு குறித்த கவலை காவல்துறை வட்டாரத்தில் பரவலாக நிலவுகிறது.


இருப்பினும் கர்கரேயின் தியாகம், அவர் பாடுபட்டதற்கான உரிய பலனை அடையாமல் விடக்கூடாது என்ற உறுதியில் தீவிர தடுப்புப் படையினர் உள்ளனர்.


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்கிறார் தீவிர வாதத் தடுப்புப் படையின் கூடுதல் ஆணையர் சுக் விந்தர் சிங்
புஷ்ஷுக்கு செருப்படி!
இராக்கில் உச்சகட்ட மரியாதை!!


அபூசாலிஹ்




அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வீர பூமியான ஈராக்கில் கிடைத்துள்ள வழியனுப்பு மரியாதை(!) பூமிப் பந்தெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


அடிமேல் அடிவாங்கிய நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபருக்கு ஈராக்கில் கிடைத்த உச்சக்கட்ட அவமானம் அந்நாட்டு மக்களின் விடுதலை வேட்கைக்கு சான்று கூறுவதாக அமைந்தது. ஈராக்கில் அமெரிக்கப் படைகள் 2011ஆம் ஆண்டு வரை இருப்பதற்கான ஒரு அடிமை சாசனத்தை பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் தனது அடிமைகளான ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி மற்றும் அதிபர் ஜலால் தலபானி இருவரின் முன்னிலையிலும் நிறைவேற்றி அதுகுறித்து உரையாற்றும் போது அதிபர் புஷ் செருப்படி வாங்கினார்.




பத்திரிகையாளர் சந்திப்பில் புஷ் உரையாற்றும் போது அல் பக்தாதியா தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர் முன்ததர் அல் ஜைதி ஆவேசமாக எழுந்து “ஈராக் மக்களின் வழியனுப்பு முத்தம் இது நாயே’’ என அரபி மொழியில் சிங்கமென கர்ஜித்து தனது ஷூவை வீசினார். ஈராக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக, பாதிக்கப்பட்ட விதவைகளுக்காக, அநாதைகளுக்காக என கூறிக்கொண்டே அடுத்த ஷூவையும் அந்த மாவீரன் (ஷூவீரன்) முன்ததர் வீசினார். அந்த ஷூவின் அளவு 10 என்பது தெரிய வந்துள்ளது. புஷ்ஷுக்கு கிடைத்துள்ள உச்சபட்ச மரியாதை (!) உலகெங்கும் மகிழ்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கொடுங்கோலர்களின் வரிசையில் முதலிடம் பெறும் ஜார்ஜ் புஷ்ஷை இனி ஜார்ஜ் புஷ்-ஷூ என யாராவது அழைத்தால் அவர் வெறுப்படையக் கூடும். பேரிலேயே ஷூவை வைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வெறியனுக்கு கிடைத்த ஷூ மரியாதை (!) ஒரு தொடக்கம் என்றே கருதப்படுகிற
குஜராத்தில் படுகொலைகள் இன்றும் தொடர்கின்றன...''
மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட்

மதச்சார்பற்றோர் மாமன்றம் சென்னையில் கடந்த 11.12.2008
அன்று நடத்திய கருத்தரங்கில் மனித உரிமைப் போராளி
தீஸ்தா செட்டில்வாட் ஆற்றிய சிறப்புரையின் தமிழாக்கம்.



தமிழாக்கம் : நாகூர் ரூமி


நண்பர்களே, கடந்த 25, 30 ஆண்டுகளாக, இந்தியாவில் கழிந்த ஒவ்வொரு கணமும் ஒரு நெருக்கடியான கட்டமாக, ஒரு கண்டம் போலத்தான் சென்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் நாம் தப்பிப்போமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. டிசம்பர் 6, 1992தான் இத்தகைய கண்டங்களை நிர்ணயிக்கும் கணமாக இருந்தது என்று ஏற்கனவே சொல்லப் பட்டது. நவம்பர் 26 அன்று பயங்கரவாதி களின் கடுமையான தாக்குதல் நிகழ்த்தப் பட்ட ஒரு மாநகரில் இருந்து நான் வருகிறேன்.


நம் நாடு சுதந்திரம் அடைந்துவிட்ட நிலையில், ஒரு அறுபது ஆண்டுகள் அல்லது அதற்குக் கொஞ்சம் மேல் நாம் பின்னோக்கிப் பார்ப்போமேயானால், மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் உண்மையான சவால் பெரிய அளவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு இலக்கானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் ஏற்பட்ட தோல்வி என்று நான் கருதுகிறேன். நம்முடைய அரசியல் அமைப்பின், சமுதாய மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு இருக்கும் இன்னொரு முக்கிய சவால் நம்முடைய எண்ண ஓட்டங்கள்தான், நம்முடைய சித்தாந்தங் கள்தான் என்று நான் நம்புகிறேன். அவை பெரும்பான்மை சமூகத்துடைய தாக இருந்தாலும் சரி, சிறுபான்மை சமுதாயத்தினதாக இருந்தாலும் சரி. அது பிரிவினையையும், தனிமைப் படுத்துதலையும், தன் சித்தாந்தத்துக்கு எதிரானவர்களை வெறுப்பதையும் தூண்டுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த நாடு முழுவதும் இதனால் மிகவும் கசப்பான வேதனையை அனுபவித் துள்ளது. ஹிந்து வலதுசாரியினராலும் அவர்களுக்கு இணையான முஸ்லிம் களது எதிரிகளாலும் இந்த தேசம் பிரிவினையை சந்தித்தது. நாம் அதை 1947ல் எதிர்கொண்டோம். மகத்தான இந்த தேசத்தில் மேலும் மேலும் பிரிவினை எற்படுவதை நாம் அனுமதிக் கவோ தாங்கவோ முடியாது.


நீண்ட காலத்துக்கு முன்பு முக்கிய ஆங்கில செய்தித்தாள்களும், தொலைக் காட்சிகளும் சித்தாந்தம் சார்ந்த பிரச்சனைகளில் ஆர்வம் காட்டின. எங்கள் பத்திரிக்கையான கம்யூனலிசம் காம்பாட் இந்த வெறுப்பு சித்தாந் தத்தைத் துருவித் துருவி ஆராய்ந்தது. அந்த சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியைக் கொன்றதா? அல்லது பாமியானில் புத்தர் சிலைகளை அழித்த சித்தாந்தமா? நண்பர்களே, பாமியா னால் புத்தர் சிலைகளை அழிப்பதற்கு முன்னர், தாலிபான் தன் மக்கள்மீதே, தன் பெண்கள் மீதே வன்முறையை ஏவிவிட்டிருந்தது. எனவே, அடிப்படை வாதமும், சாதீயமும் அதன் மக்களுக்கே எதிரியாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


ஜாதியைப் புரிந்து கொள்ளாமல் வகுப்புவாதத்தைப் பற்றிப் பேச முடியாது. திராவிட கலாச்சாரத்தின் இதயமாக இருக்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கு இந்த நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களைவிட இது மிக நன்றா கவே தெரியும். ஜாதி யத்தின் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள, ஒருங்கிணைக்கப்பட்ட ஹிந்து மதவாத அமைப் பின் கொடூரமான தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் ஹிந்து மதத்தின் ஜாதீய அமைப்பு. அது நம் மக்களையே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தள்ளி வைத்தது. தான் மரியாதைக் குறைவாகக் கருதிய மிகக்கடுமையான தொழில்களை அவர்கள் செய்யும்படிச் சொன்னது.


எனவே ஜாதியும், ஜாதியமும், ஜாதிக்கு எதிரான வன்முறையும், ஜாதியத்துக்கு எதிரான வன்முறையும் ஒன்றேதான். எனவே, வகுப்புவாதத்திற்கு எதிராகவும், சாதிய வெறுப்புக்கு எதிராகவும் போராடும் சக்திகள் ஒன்றிணைவது அவசியம்.


நமது பாராளுமன்றத்தைப் போலல் லாமல், நம் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு தருகிறது. தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள், சமூகத்தின் மிகக்கீழ் நிலையில் இருந்த பெண்கள், கிராம அளவிலான அரசியலில் பங்கெடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் நமது மதச்சார்பற்ற ஜனநாயகம் எப்படிப் பட்டது?


ஜனவரி 26 அன்று முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து அமைப்பைச் சேர்ந்த தலித் பெண் தேசியக் கொடியை ஏற்ற முயற்சித்தால், அவரை நிர்வாணப்படுத்தி அவர் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது அவரது கிராமத்தில். அது ராஜஸ்தானாக இருந்தாலும் சரி, மஹாராஷ்டிராவாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசமாக இருந்தாலும் சரி, இதே கதைதான். ஏனெனில் ஒரு தலித் பெண்ணானவள் தேசம், தேசியம், தேசப்பற்று இதிலெல்லாம் உரிமை கொண்டாடக்கூடாது என்று அது கருதுகிறது. எனில், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் உண்மையான, உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகத்தை அடைய நாம் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துகிறோம், நமது தலைவர் களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனாலும் நமது சூழ்நிலை என்ன? முஸ்லிம் சமுதாய மக்கள் பொருளாதார, சமூக ரீதியாக உரிமைகள் மறுக்கப் படுகிறார்கள், கடந்த 55 ஆண்டுகளாக அவர்கள் நிலை மேலும் மேலும் மோச மாகிக் கொண்டு போகிறது என்பதை சச்சார் கமிட்டி அறிக்கை காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் 7000 குழந்தைகள் பசி, பட்டினியால் இந்தியாவில் இறந்து போகின்றனர். பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள வசதி படைத்த மேல்தட்டு மக்கள் பிரிவினரால் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே, கருவறையிலேயே கொல்லப்படுகிறார்கள். மக்களில் பெரும் பான்மையானோருக்கு பொருளாதார, சமூக உரிமைகளை வழங்காத இந்த ஜன நாயகம் எந்த வகை யானது? இந்த தரு ணத்தில் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.


குற்றங்களுக்கு தண்டனை வழங்கி நீதி நிலைக்கச் செய்யும் அமைப்பின் தோல்வி பற்றி இப்போது மறுபடியும் பார்ப்போம். நமது செஷன்ஸ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஏன், உச்ச நீதிமன்றத் தில் கூட நிறைய வழக்குகள் இன்னும் தீர்ப்பு சொல்லப்படாமல் தேங்கிக் கிடக்கின் றன. சராசரியாக, ஒரு சாதாரண குற்றவியல் வழக்கு முடிவுக்கு வர 15லிருந்து 20 ஆண்டு கள் ஆகின்றன. சொத்து தகராறு பற்றிய வழக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு நடக்கின்றது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட தற்கு ஒப்பாகும் என்று சொல்கிறோம். அப்படியானால், ஒவ்வொரு நாளும் நமது நீதிமன்றங்கள் குற்றம் சார்ந்த வழக்கு களில் நீதி மறுத்துக்கொண்டே இருக்கின்றன.


இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையில், வரலாற்றில் கும்பல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான தேதி களைப் பார்ப்போம். அத்தகைய வன்மு றைகள் மக்களில் ஒரு பிரிவினர் மீது மட்டும் ஏன் கட்டவிழ்த்துவிடப்பட்டது? ஏனென்றால் அவர்கள் வடிதட்டு மக்கள் அவர்கள் சிறுபான்மையினர், அவர்கள் தலித்துகள், வன்முறைக்கு இலக்கான அவர்களுக்கு நீதி வழங்கப்படவே இல்லை.


1984ல், நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, நாட்டின் தலைநகரில் 3006 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் 7000 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேர் மட்டும்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட சீக்கியர் ஒருவரின் விதவையான தர்பன் கௌர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எச்.கே.எல். பகத்தால் மிரட்டப்பட்டார். தனக்கு நீதி கிடைக்கும் என்று அவர் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார். 24 ஆண்டுகளுக்கு மேலாகியும்!


புது டில்லியிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடத்தப்பட்ட சீக்கியர் களுக்கு எதிரான போராட்டங்கள் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு போபால் விஷவாயுக் கசிவு துன்ப நிகழ்ச்சி நடந்தது. சட்டத்துக்குப் புறம்பாக பன் னாட்டு கம்பெனியால் கசியவிடப்பட்ட மிதைல் விஷ வாயுவினால் 3000 ஊழியர்கள் இறந்தனர். இன்னும் உயிரோடு இருப்பவர்களும் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட ரேடியேஷன் எனப்படும் வெப்பக்கதிர்வீச்சினால் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக் கின்றனர். அவர்களுக்கு இதுவரை எந்த நஷ்ட ஈடும் தரப்படவில்லை. பல அரசாங்கங்களை மாற்றிவிட்ட நமது மாநிலம், இப்போது யூனியன் கார்பைடின் மறு அவதாரம் போன்ற இன்னொரு வகையான கெமிக்கல் நிறுவனம் மஹாராஷ்டிராவின் உள்ளே வர, விரிந்த கைகளுடன் அன்புடன் வரவேற்றுள் ளது. இதுதான் உலகமயமாக்கல், இதுதான் தாராளமயமாக்கல்.


ஜட்ஜர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் தலித்துகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் எவ்வளவு பேர் பிடிபட்டுள்ளனர்? எவ்வளவு விழுக்காடு குற்றவாளிகள் கண்டுபிடிக்க தண்டிக்கப் பட்டுள்ளனரா?


மஹாராஷ்டிராவில் கயர்லாஞ்சி என்ற தலித் குடும்பத்தின் கதை உங்களுக்குத் தெரியும். பனிக்கால தலைநகரான நாக்பூருக்கு அருகில்தான் அவர்கள் இருந்தனர். குடும்பத்தில் இருந்த ஐவரில் இரண்டு பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர். மற்றவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட னர். ஏன்? சுரேகா போட்மாகே என்ற தாய் தன் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று, தங்களுக்குடைய நிலத்துக்கு உரிமை கொண்டாடி, அதை மீட்டு, தலை நிமிர்ந்து நின்று, தன் ஆண், பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்பினாள். உயர்சாதி என்று சொல்லப் பட்டவர்களுக்கு தலை வணங்க மறுத் தாள். தமிழ்நாட்டைப் போலவே, வரலாற்றுப் பூர்வமாக, மஹாராஷ்டிரா விலும் வலுவானதொரு சாதிக்கு எதிரான அமைப்பு இருந்தது. ஜோதிபாய் பூலே, சாவித்ரிதாய் பூலே, டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கார், ஏன் அதற்கு முன்னும் துகாராம், ஏக்நாத், நாம் தேவ் போன்ற ஞானிகள் சாதிய அமைப்பை எதிர்த்துள்ளனர். எனவே, மஹராஷ்டிரா வில் இதுமாதிரியான ஒரு சம்பவம் நடந்தது என்பது நம்ப முடியாதது. நாம் முன்னேறுவதற்கு பதிலாக பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்ப தையே இது காட்டுகிறது.


நாம் இப்போது டிசம்பர் 6, 1992க்கு வருவோம். பாபர் பள்ளியின் இடிப்பு. அந்த ஒரேயொரு பயங்கரவாதச் செயல், மென்மேலும் பயங்கரவாதம் பரவுவதற் கும் தனிமைப்படுத்துதல் அதிகமாவ தற்கும் வழிவகுத்தது. ஆனால் 1985க் கும் 1992-க்கும் இடைப்பட்ட காலத் தின் வரலாற்றை நாம் பார்ப்போமே யானால், ரத யாத்திரை நடத்தப்பட்ட இடங்களி லெல்லாம், கலவரம் நடை பெற்றது. நான் குறிப்பாக இரண்டு நிகழ்ச்சிகளை நான் குறிப்பிட விரும்பு கிறேன். மீரட், ஹாஷிம் புரா, 1987, மற்றும் பாகல் பூர் 89, இரண்டு நிகழ்ச்சி கள் ரதயாத்திரையின் போது நடந்தன. 51 முஸ்லிம் சிறுவர்கள் ஆயுதம் தாங் கிய உத்தரபிரதேச ஊர்க் காவல் படையினரால் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக் கிறது. சாட்சிகள் தொலைந்து விட்டனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி வேண்டி குரல் எழுப்பிக் கொண்டுள்ளனர்.


பகல்பூரில் சந்தேரி, லொகாயன் என்ற இரண்டு கிராமங்கள். ஒரே இரவில் எண்ணற்ற மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். சென்ற ஆண்டு சிலர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப் பட்டனர். ஆனால் கத்தி, லத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் யாரும் திட்டம் தீட்டியவர்களல்ல. வெறுப்பை உருவாக்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் எய்யப்பட்ட வெறும் அம்புகள் தான்.


இப்படிப்பட்ட வெறுப்பு உள்ளே வர தென்னிந்தியா அனுமதிக்காது என்றே என்னைப் போன்ற வரலாற்று மாணவர் கள் நம்புகிறோம். 1980களிலும், குறிப் பாக 1992லும் நாம் பார்த்ததோ, பேரா சிரியர் ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டது போல, டிசம்பர் 92லும், ஜனவரி 93-லும் மும்பை போன்ற ஒரு மாநகரில், காவல் துறையினரின் சார்புத் தன்மை கொண்ட முகத்தையும், பெரும் பான்மை சமூகத்த வருக்கு ஆதரவாக இருந்ததையும், சிறுபான்மைச் சமுதா யத்தைச் சேர்ந்த அப் பாவி மக்களுக்கு எதிராக இருந்ததை யும் நாம் பார்த்தோம். 1980கள் முழுவதும் இதுதான் நிகழ்ந்தது. அதன்பிறகு 92ல் பள்ளிவாசல் இடிப்பு, பின் திட்டமிடப் பட்ட படுகொலை பம்பாயில் நிகழ்ந்தது. அப்போது அது பம்பாய்தான். மும்பை ஆகவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை என்ற ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையையும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டார்.


நண்பர்களே, 1984, 1992, 2002 குஜராத். இடையே, 1998லிருந்து இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தவர் 1998 முதலே தெளிவாகத் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டனர். ஒரிஸ்ஸாவும் கர்நாடகாவும் அந்த திட்டத்தின் இறுதிக்கட்டம் என்று கூற வேண்டும். ஒரே ஆண்டில் 48 தாக்கு தல்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ நிறுவனங்களையும், குறிவைத்து நிகழ்த் தப்பட்டது என்பதை அகில இந்திய கத்தோலிக்க யூனியனோடு சேர்ந்த நாங்கள் பதிவு செய்தோம். 1998ல், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஏன் தமிழ்நாட்டின் ஊட்டியிலும் ஒரு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. குஜராத்தில் தான் மிக அதிகமான எண்ணிக்கையில் அது நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்தப்பட்ட முறையில் வித்தியாசம் இருந்தது. ஆனால், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் கிறிஸ்தவ சமுதாயம் செய்த, செய்து கொண்டிருக்கும் சேவைகளை யெல்லாம் மீறி, தூரமாக இருக் கும் பகுதிகளில் கூட ஆதிவாசி களுக்கு கிறிஸ் தவ சமுதாயத் தினர் செய்த சேவைகளை யெல்லாம் கூட கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்யப்படுகிறது என்று சொல்லி அந்த சமூகத்தை கொச்சைப் படுத்தும் வேலை நடந்தது. எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தின ரின் சேவைகள் இருந்தாலும், அந்த சமுதாயமும் மதமாற்றம் செய்கிறது என்று சொல்லி கேவலப்படுத்தப்பட்டது. மறுபடியும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியது. குற்றவாளிகள் ஹாயாக திரிந்து கொண்டிருக்க நாம் அனுமதித்தோம்.


2002ல் என்ன நடந்தது, தொடர்ந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாமனைவரும் அறிவோம். முடிந்துபோன கதை அல்ல இது. ஆண்டுதோறும், அதிக எண்ணிக்கை யில் படுகொலைகளை ஒரு சமூகமும், அரசும், நாடும் அனுமதிக்குமானால், குற்றவாளிகளை தண்டனைக்குரியவர் களாக அடையாளம் காட்டாது விடுமா னால், பெரிய அளவில் தனிமைப்படுத்து தலையும், காழ்ப்புணர்வையும் தேக்கி வைக்க உதவும். ஒரு சமூகம் என்ற அளவிலும், அரசாங்கம் என்ற அளவி லும் நாம் இதைச் சரி செய்யத் தவறி விட்டோம். அப்படி ஒன்று நடந்தது என்று கூட நாம் ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.


29, பிப்ரவரி 2002-க்கு வெகுகாலத் துக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. திட்டமிட்டு சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துதல், குஜராத் நகர்ப் புறத்தை ஒரு சமுதாயத்தினர் வாழும் பகுதியாக ஒதுக்கி வைத்தல், பாடப் புத்தகங்களில் சிறுபான்மை சமூகத் தினரை கேவலப்படுத்தி எழுதுதல் இந்தக் காரியங்கள் யாவும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு குறைந்தது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செய்யப்பட்டன. இனப்படு கொலை ஒரு இரவில் நடப்பதல்ல. அது ஒன்றும் மேஜிக் அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட செயல். மௌனமாக இருப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததை பெரும்பான்மை சமூகம் ஒத்துக்கொள்கிறது. குஜராத் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.


கம்யூனலிசம் காம்பாட் பத்திரிக்கையின் இனப்படுகொலை பற்றிய இதழின் தமிழாக்கத்தை நான் செய்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது சென்னையில் இருக்கும் தோழகளால் வெளியிடப்பட்டது. அதை நான் ஜனாதி பதி அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமென்றே தமிழில் கொடுத்தேன். ஏனெனில் குஜராத்தில் ஒரு நிவாரண முகாமில் அவர் முதலமைச்சருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். நிவாரண முகாமுக்குள் செல்லக்கூடா தென எனக்கு மாவட்ட அதிகாரி தடை விதித்து இருந்தார். எனவே, நான் புர்கா அணிந்து உள்ளே சென்று தமிழ் இதழை ஜனாதிபதியிடம் கொடுத்தேன்.


நண்பர்களே, 29, பிப்ரவரி, 2009 இனப்படுகொலை நடந்து எட்டாண்டுகள் நிறைவடைந்திருக்கும். பெஸ்ட் பேக்கரி வழக்கு பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டுள்ளது. நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இன்றுகூட, சிறப்பு புலனாய்வு குழு, முன்னாள் சிபிஐ இயக்குனர், சென்னை யைச் சேர்ந்த திரு. ராகவன் அவர்கள் தலைமையில் கோத்ரா, குல்பர்க், நரோடாகாம், நரோடா பாட்டியா, ஓட், மற்றும் சர்தார்பூர் படுகொலைகளை மறுபுலனாய்வு செய்து கொண்டிருக் கிறது.


வழக்கை உயிருடன் வைத்தி ருக்க மூன்று நான்கு ஆண்டு களாக நாங்கள் உச்சநீதிமன்றத் தோடு போராட வேண்டி யிருந்தது. காலம் கடந்துவிட்டது, இந்த வழக்குகள் எல்லாம் குஜராத்தி லேயே அழுகிச் சாகட்டும் என்று சொல்லி தடுப்பதற்கு தன் சக்தியை யெல்லாம் பிரயோகித்துப் பார்த்தது குஜராத் அரசு. ஆனால் குஜராத்தில் பயங்கரமான சூழ்நிலைகளில் வசிக்கும் 468 சாட்சிகள் இன்னும் துணிச்ச லோடும் மனசாட்சியோ டும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள் என்று பெருமை யோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. தங்களது பண்ணை நிலத் தில் கூடாரம் அடித்துக் கொண்டு வசிக்கும் அவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் துணிச்சல் நீடித்திருக்க எங்களில் சிலர் எங்களால் ஆனதைச் செய்து கொண்டி ருக்கிறோம். இதுவரை அவர்கள் எந்த அச்சுறுத்த லுக்கும் பணிந்துவிடவில்லை. உங்களைப் போன்ற மக்களின் ஆசி களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


ஜஹீராவை நான் பழிசொல்ல மாட்டேன். பெரியதொரு விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. வடோதரா பி.ஜே.பி எம்.எல்.ஏ செய்த காரியம் அது. தூக்கி எறிவதற்கு ரொம்ப எளிமை யானது பணம்தான். பலவீனமான இளம்பெண் என்ன செய்வாள்? உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு என்னிடம் இன்னும் உள்ளது. பொய் சாட்சி சொன்னதற்காக அவளுக்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு லஞ்சம் கொடுத்த மது ஷிவாசுக்கு ஒரு மாதம்கூட தண்டனை கொடுக்கவில்லை. நமது அமைப்பு முறையில் எங்கோ தவறு உள்ளது. வேறுபாடு காட்டி நீதிமன்றத் தின் கோபத்துக்கு நான் ஆளாகி இருக்கிறேன்.
நான் இதையெல்லாம் ஏன் சொன்னேன் என்றால், குஜராத் துக்குப் பிறகு, ஒரிசாவும் கர்நாட காவும் வந்துள்ளன. ஒரிசாவில் பயங்கரம் இன்னும் தொடர்கிறது. 35000 பேருக்கு மேல் நிவாரண முகாமில் உள்ளனர். ஜூலை மாதத்திலிருந்து இதுவரை நான் மூன்று முறை அங்கு சென்று வந்து விட்டேன்.


குஜராத்தில் இன்னும் கும்பல் கும்ப லாக கல்லறைகள் உள்ளன. பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் நேசத் துக்கு உரியவர்களின் உடல்களை கேட்டுப் பெறுவதற்கும் முடியாமல் இருக்கின்ற னர். குஜராத்தில் தற்போது எப்படி சூழ்நிலை இருக்கிறது? என்று பேரா. ஜவாஹிருல்லாஹ் என்னிடம் கேட்டார். இன்னும் கதை முடிந்துவிட வில்லை என்று சொன்னேன். தீவிரம் குறைந்து படுகொலைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கேமராக்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டன. சிறுபான்மையின உயர் பிரமுகர்கள் சமரசம் செய்து கொண்டு விட்டனர். இதைச் சொல்வதற்கு வருந்து கிறேன். சாட்சிகளும், பாதிக்கப்படடவர் களும்தான் இப்போது களத்தில் தனியாக உள்ளனர். நாம் இதையெல் லாம் கேட்பதற்கு ஒரு மேடையைத் தயார் செய்தோமெனில், காயங்களை மறுபடியும் திறப்பதாக நாம் குற்றம் சுமத்தப்படுகிறோம். நான் கேட்கிறேன், ரத்தம் ஓடுமாறு விடப்படா விட்டால், எந்தக் காயமாவது குணமடையுமா?


ஒரிசா பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசே முன் நின்று நடத்திய பயங்கர வாதம்தான் குஜராத்தில் அரங்கேறியது. கிறிஸ்தவர்கள் மீதும், தலித்துகள் மீதும் நடத்தப்பட்டது பயங்கரவாதச் செயல் பாடுகள். பெண் குழந்தைகளைக் கருவில் கொல்வதும் பயங்கரவாதச் செயல்பாடுதான். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறோம் இன்று. ஆனால் நாம் எங்கே தொடங்கி எங்கே முடிக்கிறோம்?


கயர்லாஞ்சி, திருநெல்வேலியில் நடந்தது பயங்கரவாதச் செயல் இல்லை யா? அது அந்தப் பகுதியில் அச்ச உணர்வை ஏற்படுத்தவில்லையா? பாம்பேயில் நடந்த ரயில்வே குண்டு வெடிப்புகள், 92, 93 படுகொலை களுக்குப் பிறகு நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், அந்த ஆண்டுகளுக்குப் பிறகு பாம்பேயில் 12 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. வடகிழக்கு, காஷ்மீரை யெல்லாம் விட்டுவிடலாம். அவை மெயின் ஸ்ட்ரீம் இந்தியாவுக்குள் வருவ தில்லை. நமது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க வெளியிலிருந்து எதிரிகள் இருப்பார்கள். பல நூற்றாண்டுகளாக பல மதங்களையும் சேர்ந்த நாம் ஒற்றுமை யாக வாழ்ந்திருக்கிறோம். அது பாகிஸ் தானின் ஐஎஸ்ஐ பிரிவோ, அல்லது அமெரிக்காவால் நிதி கொடுக் கப்பட்ட அமைப்புகளோ, ஆப்கானிஸ்தானில் இருந்து ரஷ்யப்படைகளை வெளியேற்ற அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள்தான் மதரீதியான தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கின. அந்த வரலாற்றை நாம் மறந்துவிடக்கூடாது.


நம்மிடையே அமெரிக்க, இங்கிலாந்து அரசுகளால் அவிழ்த்துவிடப்பட்ட ஒரு மிருகம் நம்மிடையே உள்ளது என்று ஆசிப் ஜர்தாரி கூட இன்று சொல்கிறார். அந்த மிருகத்தின் கூர் நகங்களில் அகப்பட்டு பாகிஸ்தான் இப்போது வேதனைப்பட்டுக் கொண்டி ருக்கிறது. உள்நாட்டிலேயே வளரும் பயங்கரவாதத்தை அடக்க என்ன செய்யப்போகிறீர்கள் என்பதுதான் நான் கேட்கும் கேள்வி. உள்நாட்டிலேயே முளைத்து வளர்ந்த அந்நியப்படுத்துதல், உள்நாட்டிலேயே வளர்ந்த வன்முறை. உள்நாட்டிலேயே வளர்ந்த அநீதி.


சீர்த்திருத்தப்பட வேண்டிய



1.காவல்துறை


கடந்த 15 ஆண்டுகளில் நான்கு முக்கிய சீர்திருத் தங்கள் வேண்டுமென்று நாம் கேட்டு கொண்டிருக் கிறோம். ஒன்று, காவல் துறை சீர்திருத்தம். அது தொடர்பான சட்டதிட்டங் கள் எல்லாம் நமது காலனிய முதலாளியாக இருந்த பிரிட்டிஷாரால் வகுக்கப்பட்டவை. அவை நமது அடிமை மனப் பான்மை கொண்ட மக்கள் தொகையை அடக்கியாள் வதற்காக, நம் அரசியல் சாசனம் 100 ஆண்டு களுக்குப் பிறகு வந்தது. நமது காவல்துறையை நாம் அரசியல் சாசன ரீதியாக அமைக்கவோ, ஜனநாயகப்படுத்தவோ இல்லை. எனவே காவல்துறையினர் இந்திய மக்களுக்கு சேவை செய்யவில்லை. மாறாக, இந்திய மக்களை அடக்கியாளவே அவர்கள் விரும்புகின்றனர். இந்த உறவுமுறை மாற வேண்டும். சட்டம் மாற வேண்டும்.



ஓய்வு பெற்ற நமது மூத்த காவல்துறை அதிகாரிகளும், 1975லிருந்து 1999 வரையிலான நேஷனல் போலீஸ் கமிஷன் அறிக்கைகளும் “காவல்துறையில் சீர்திருத்தங்கள் தேவை’’ என்று பலமாக சிபாரிசு செய்துள்ளன. ஆனால் நமது அரசியல் கட்சிகள், அது யாராக இருந்தா லும், காவல்துறை மீது உள்ள கட்டுப் பாட்டை இழக்க விரும்பவில்லை.



காவல்துறை சீர்திருத்தத்துக்கான கோரிக்கையை மக்கள் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். ஜவாஹிருல் லாஹ் போன்றவர்களாலும், இங்கு என் பேச்சை கேட்க வந்திருப்பவர்களில் பலராலும் அதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அறிவு ஜீவித்தனமான கோரிக்கை அல்ல. இது நமது பாதுகாப்பு தொடர்பான விஷயம். சார்பு எதுவும் இல்லாமல் காவல்துறை நடக்க வேண்டும் என்பதற்காக. சிறுபான் மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக. காவல்துறையை ஜனநாயகப் படுத்த வேண்டும் என்பதற்காக. எனவே பொதுமக்கள் அமைப்புகள் இந்த கோரிக் கையை நிச்சயம் முன்வைத்துப் போராட வேண்டும்.


2. நீதித்துறை


இரண்டாவது, நீதித்துறைச் சீர்திருத் தம். நீதித்துறை கோபப்பட்டாலும் பரவா யில்லை என்று நாம் இந்த சீர்திருத் தத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். இந்திய நாட்டின் குடிமகன் என்ற நிலையில், ஒருமுறை ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதென்றால், நீதிபதியின் நோக்கத் தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை யெனில், அந்த தீர்ப்பை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கு இருக்க வேண்டும்.


நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் எல்லா ஜனநாயக நாடுகளிலும் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் நமது நீதித்துறைக்கு அதை விட்டுவிட மனசில்லை. ஆனால் அது நிச்சயம் ரத்து செய்யப்பட வேண்டி யது. அது ஒரு தொன்மையான சட்டம். தவறான தீர்ப்புகளை விமர்சனம் செய்வதி லிருந்து அது நம்மைத் தடுக்கிறது. மக்களின் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எந்த அமைப்பும் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. நீதித்துறை மட்டும் இதற்கு ஏன் விதிவிலக்காக இருக்க வேண்டும்?


நாம் அரசியல்வாதிகளை திட்டுகி றோம். அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மக்களை சந்திக்கச் செல்கின்றனர். ஆனால், ஒரு காவல் துறை ஊழியரை ஒருமுறை நியமனம் செய்துவிட்டால், ஒரு நீதிபதியை ஒருமுறை நியமனம் செய்துவிட்டால், பிறகு அவர் மக்களின் விமர்சனத்துக்குள் எப்போதுமே வருவதில்லை. அவருடைய செயல்பாடுகளில் குறை காண்கின்ற வாய்ப்பு மக்களுக்கு எப்போதுமே கிடைப் பதில்லை. ஆனால் ஒரு நாகரீகமான நேர்மையான தணிக்கை அவசியம். யார் மீதும் சேற்றை வாரி இறைப்பது நமது நோக்கமல்ல. எந்த அமைப்பையும் குறைத்து மதிப்பிடுவது நமது எண்ண மல்ல.


ஆனால், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தில் பன்வரி தேவி வழக்கில் நடந்தது போன்ற ஒரு தீர்ப்பு கொடுக்கப்படுமா னால், உங்களுக்கு அது பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். பன்வரி தேவி ஒரு துணிச்சலான பெண். ராஜஸ்தானில் பால்ய விவாகத்துக்கு எதிராகப் போராடிய ஒரு தலித் அவர். அவர் ஒரு சதின். சதின் என்றால் சமூக ஊழியர் என்று பொருள். உயர்சாதி ஆண்களால் அவர் கொடூர மான முறையில் கற்பழிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அப்படி குரல் எழுப்பக் கூடாது என்பதற்காக அது ஒரு பாடமாம். ஆனால் அவர் உயர்நீதிமன்றத்துக்கு சென்றார். ஆனால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் என்ன சொன்னது? ஒரு உயர் ஜாதி ஆண் ஒரு தாழ்ந்த ஜாதிப் பெண்ணை கற்பழிப்பது சாத்தியமில்லை என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சொன்னது!


தலித் பெண்கள் இயக்கத்தில் இருக் கும் எனது நண்பர்கள் ஒரு ஸ்லோகன் சொல்வார்கள். பகலில் தீண்டத்தகாதவர், இரவில் தீண்டத்தக்கவர். இது சிரிப்பதற் கல்ல. நமது கலாச்சாரத்தின் துயரக் கதை இது. ஒரு நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பு வழங்குவாரென்றால், அவரை விமர்சிக்க நமக்கு உரிமை இல்லையா? அதற்கு எதிராக போராட நமக்கு உரிமை இல்லையா?


3.உளவுத்துறை


நமது உளவுத் துறை பற்றியும் நான் கொஞ்சம் பேசி விட விரும்புகிறேன். ஐ.பி.மற்றும் ரா. இவை எந்த பாராளு மன்றத்தின் விமர்சனப் பார்வைக்கும் படாமல் இயங்கும் அமைப்புகள் இவை. எவ்வளவு நிதி அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது, எப்படி அந்தப் பணத்தை அவர்கள் செலவு செய்கிறார்கள், அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், எந்த இயக்கங்களை அவர்கள் ஆதரிக் கிறார்கள் எதுவுமே ஆராயப்படுவ தில்லை. எனவே காவல்துறை, நீதித் துறைக்கு அடுத்தபடியாக, உளவுத் துறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும், அதற்காக போராட வேண்டும் என்று மக்கள் தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.


மத்திய ஐ.பி.யில் ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம்களுக்கு மேல் பார்க்க முடியாது. ஒரு பொதுக் கூட்டத்தில் இந்த கருத்தை நான் பிரதம மந்திரிக்கு முன்னால் வைத்தேன். இந்திய ஐ.பி.யில் ஹிந்து வலது சாரியை நோக்கிய சித்தாந்த சாய்வு இருக்கி றது. நான் இதை மிகுந்த பொறுப்புணர் வோடுதான் சொல்கி றேன். ஏனெனில் நான் இதுபற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளேன்.


நான்டெட் வழக்கை நான் புலனாய்வு செய்து கொண்டிருந்த நேரத்தில், பூனாவில் பணி புரிந்து கொண்டிருந்த ஒரு மத்திய புலனாய்வு அதிகாரி ஒரு பஜ்ரங்தள் உறுப்பினருக்கு ஆயுதம் செய்வதும், பயன்படுத்துவதும் எப்படி என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். எனவே புலனாய்வுத் துறையும் மக்கள் ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் உட்பட்டதாக வர வேண்டிய அவசியமுள்ளது.


முன்னாள் புலனாய்வுத்துறை அதி காரிகள் எழுதிய மூன்று புத்தகங்களை இங்குள்ள அறிஞர் பெருமக்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன். நான் அவற் றைப் படித்துள்ளேன். அவர்கள் சொல் வதையெல்லாம் நாம் ஏற்றுக்கொள் ளாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவருமே ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறார்கள். இந்திய உளவுத்துறை தொழில்ரீதியான திறமைகளில் குறை யுள்ளதாக உள்ளது என்பதுதான் அது. இந்திய அரசியல் சாசனத்தின்படி உளவுத் துறை சீர்திருத்தத்துக்கும் விமர்சனத் துக்கும் உட்பட்டதுதான்.


முதல் புத்தகம் Open Secrets: India’s Intelligence Unveiled மலாய் க்ருஷ்ண தாத் எழுதியது. இரண்டாவது புத்தகம் ஐனேயை’ள நுஒவநசயேட ஐவேநடடபைநnஉந: ளுநஉசநவள டிக சுநளநயசஉh யனே ஹயேடலளளை றுiபே. வி.கே.சிங் எழுதியது. மூன்றாவது புத்தகம் தமிழ் நாட்டில் பிரபலமான பி.ராமன் எழுதிய கூhந ஊடிறbடிலள டிக சுஹறு: னுடிறn ஆநஅடிசல டுயநே தயவு செய்து இப்புத்தகங்களைப் படியுங் கள். அதிர்ச்சியூட்டும் சில உண்மைகளை இப்புத்தகங்கள் சொல்லும், சுருக்கமாகச் சொல்வதானால், அரசியல் ரீதியான தாக்கம் கொண்டதாக உளவுத்துறை உள்ளது. உண்மையான உளவு இல்லை என்பதே.


ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒடுக்க, ஒரு முன்னாள் அரசு ஆர்எஸ்எஸ் உதவியை நாடலாமா என்று கூட யோசித் தது என்று ஒரு புத்தகம் கூறுகிறது. இந்தப்போக்கு எவ்வளவு அபாயகர மானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.


4. கல்வித்துறை


மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான சவால்களைப் பற்றிப் பேசும்போது ஒரு சில ஆலோசனைகளை நான் வழங்க ஆசைப்படுகிறேன். அதில் முக்கியமா னது கல்வி. 13 ஆண்டுகள் பள்ளி வாழ்க்கையில் நம் குழந்தைகளுக்கு நாம் தரும் பாடப்புத்தகங்கள், சொல்லித்தரும் வரலாறு, உருவாக்கும் சமூக உணர்வு இதெல்லாம் முக்கியம். தமிழ்நாட்டில் சரியாகத்தான் இருக்கும். ஆனால் குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பாடப்புத்தங்களில் ஜாதியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிகக் குறைந்த இடமே அளிக்கப்பட்டுள்ளது. பெயருக்காக. உடல் உழைப்புக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை. சொல்லப்போனால் உடல் உழைப்பை மரியாதைக் குறைவாகப் பார்க்கவே குழந்தைகள் கற்பிக்கப்படுகிறார்கள். மிகவும் ஜாதியம் சார்ந்த அணுகுமுறை. அதிலும் குஜராத் தான் மிகமிக மோசம். பொருளாதார ரீதியாக ஜெர்மனியையும் இத்தாலியையும் சக்தி மிகுந்த நாடுகளாக மாற்றியதற்காக ஹிட்லரும் முசோலினி யும் புகழப்படுகிறார்கள். மோடி இன்று குஜராத்தை மாற்றிக் கொண்டிருப்பதைப் போல.


எனவே என்னவிதமான வரலாற்றை நாம் நம் குழந்தைகளுக்குப் போதிக் கிறோம்? நாட்டில் இருந்த ஒவ்வொரு ஜாதியும் காலனிய ஆதிக்கத்தை எதிர்த் துப் போராடிய வரலாற்றைச் சொல்கி றோமா? இல்லை. விடுதலைப் போராட் டத்தில் பெண்களுக்கு உறுதியான பங்கிருந்தது என்பதைச் சொல்கி றோமா? இன்னும்கூட அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறோமா? இல்லை. காலனிய சக்திகள் நம் நாட்டுக்குள் வருவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே, கிபி 58ல், மலபார் கடல் பகுதி வழியாக, தூய தாமஸ் என்பவர் மூலமாக, கிறிஸ்தவம் இந்தி யாவுக்குள் வந்தது என்று சொல்கி றோமா? இஸ்லாம் வணிகர்கள் மூலமாக வந்தது என்று சொல்கிறோமா? சிந்துப் பகுதி படையெடுக்கப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, 110 ஆண்டு களுக்கு முன்பே, சேரமான் பெருமான் என்ற அரசன் முஸ்லிமாகி இஸ்லாத்தைப் பரப்பினான் என்ற வரலாற்றைச் சொல் கிறோமா?


இப்படியெல்லாம் சொல்லித் தராத தனால், ஜாதியம் சார்ந்த வரலாறுதான் அவர்கள் மனதில் வேர் விடுகிறது. விடுதலை, சமத்துவம் ஆகிய கொள்கை களுக்காகவே பெருமளவில் கீழ்ஜாதி இந்தியர்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் மாறினர் என்ற வரலாற்றைச் சொல்கிறோமா? கேரளா வில் கொத்தடிமைச் சட்டம் ரத்தான போதுதான் அதிக அளவிலான மதமாற் றங்கள் நிகழ்ந்தன என்பதைச் சொல்கி றோமா? ஏனெனில் அடிமைகளாக இருந்த மக்கள் விடுதலை அடைந்த போது இஸ்லாத்திலோ, கிறிஸ்தவத் திலோ தங்கள் சுயமரியாதையும் கண்ணி யமும் காக்கப்படும் என்று நம்பினார்கள்.


தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம் களுடைய பிரச்சனை இன்று ஒரு அரசி யல் பிரச்சனை. இன்றைய காலகட்டம் உரிமை மறுக்கப்படும் காலகட்டமாக உள்ளது. சோழர்களின் ஆட்சிக் காலத் தில் எப்படி ஹிந்து மதம் தென் கிழக்கு ஆசியாவில் பரவியது என்றும் நாம் சொல்லித் தருவதில்லை. இதையெல் லாம் நாம் சொல்வதில்லை.


திடீரென்று நாம் நமது பாடப் புத்தகங் களில் இருந்து கான் அப்துல் கப்பார் கானைத் தூக்கிவிடுகிறோம். 1970களில் அவர் இருந்தார். பின்னர் திடீரென்று மறைந்து போனார். ஏனெனில், எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட ஒருவர், நாட்டின் அந்தப் பக்கத்தில் இருந்து கொண்டு பிரிவினையை எதிர்க்கிறார். அது அந்தக்கால முஸ்லிம்கள் எதற்காக போராடினார்களோ அதோடு ஒத்துப் போக வில்லை.


டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கரின் உரைகள் பற்றி நம் குழந்தைகளுக்கு நாம் எதுவும் சொல்லித்தருவதில்லை. ஜோதிபா புலே ஏன் பேசினார் என்று விளக்குவதில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே பெரியார் கற்பிக்கப்படு வதில்லை. மௌலானா அபுல் கலாம் ஆசாத், ஜும்ஆ மசூதியின் படிக்கட்டு களில், இந்தியா பாகிஸ்தான் பிரிந்த நாளன்று நடந்தது என்ன என்பதை யெல்லாம் சொன்னால் நானும் நீங்களும் அழுது புலம்புவோம். ஆனால் இதெல்லாம் நம் குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படுவதில்லை.


நமது கல்வி அமைப்பில் உள்ள உள்ளடக்கத்தில் பெரும் மாற்றம் தேவைப்படுகிறது. நாம் சொல்லிக் கொடுக்கும் வரலாற்றில், சமூக சேவை யில் எல்லாம் பெண்களையும், சமுதாயத் தையும் நாம் எப்படி பிரதிநிதித்துவப் படுத்துகிறோம்? இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் ஒவ்வொரு சமுதாயமும் செய்த பங்களிப்பு என்ன? இதையெல்லாம் மனதில் கொண்டு நமது கல்வி உள்ளடத்தை நாம் சீரமைக்க வேண்டும்.


நமது தேசத்தின் அரசியல் சாசனத் தின் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பை எதிர்க்கும் இளம் மனதுகளை நாம் உருவாக்குகிறோம். இன்னும் தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள மிகப் பெரிய ஆபத்து கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் அல்ல. மதச்சார்பற்ற தனியார் அறக்கட்டளைகளும் அல்ல. உலகமயமாதலின் காரணமாக, கல்வியில் இருந்து ஒருபக்கம் நாம் பின்வாங்கிக் கொண்டிருக்கிறோம்.


இந்த சூழ்நிலையில் கல்விக்கூடங் கள் மூலமாக நமக்கு இருக்கும் பெரிய சவாலும் ஆபத்தும் ஆர்எஸ்எஸ்ஸின் சிஷு மந்திர், சரஸ்வதி சிஷு மந்திர் மற்றும் விஎச்பியின் ஏகல் வித்யாலயா ஆகியவையாகும். குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஒரிஸ்ஸா போன்ற மத்திய பழங்குடி இந்தியாவில், அந்த பழங்குடி இனத்தவருக்கு எந்த அரசும் கல்வி கொடுக்காத சூழ்நிலையில், விஎச்பி ஒரு ஏகல் வித்யாலயாவைத் திறந்து வைக்குமானால், உங்கள் குழந்தைகளை அந்த பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள் என்று அந்த பழங்குடி யினரிடம் சொல்லும் தகுதியோ உரிமையோ நமக்கு எப்படி வரும்? இன்றைக்கு உள்ள பெரிய பிரச்சனை அதுதான்.


நமது நாட்டை ஆக்கிரமிக்கும் சவால்களை எதிர்கொள்ள விரும்பினால், `சட்டத்தின் ஆட்சி’ தொடர்பான இந்த பிரச்சனைகள், மற்றும் கல்விக்கான சமூக மாற்றம் குறித்தான பிரச்சனை, இவையெல்லாம் தேர்தலின்போது நமது அரசியல் கட்சிகளின் பிரச்சனையாக மாற வேண்டும். இவற்றை மக்கள் முன் வைத்து அவை செல்ல வேண்டும். உங்களுக்கும் எனக்குமான அறிவு தளத்தில் இயங்கும் பிரச்சனைகள் மட்டும் அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டிருக்க முடியாது. தீவிரவாதம் நாட்டின் எந்த மூலையில், எந்த சமூகத்தில் இருந்து வந்தாலும், எல்லை தாண்டி வந்தாலும், நாம் அதை எதிர்க்கிறோம். அதுபோல, வெறுப்பை உமிழும், வெறுப்பைத் தூண்டும், வெறுப்பை வளர்க்கும் எல்லாப் பேச்சை யும் நாம் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அசிங்கமான வசவு மொழி களைத் தடை செய்ய வேண்டும். நம் நாடு துண்டாடப்படுவதை நாம் ஒருக்காலும் அனுமதிக்கக்கூடாது.




மும்பை நன்றாக எதிர்வினையாற்றி யுள்ளது. 26 நவம்பர் அன்று இழக்கப்பட்ட 180க்கும் மேலான உயிர்களில், 35 சதவீதத்துக்கு மேல் இறந்தவர்கள் முஸ்லிம்கள். வி.டி. ஸ்டேஷனில் இறந்தவர்கள் மட்டும் 56 பேர். சுட்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று துப்பாக்கி குண்டு பார்க்கவில்லை. ஏழு மாநகர்களிலும் இருந்த முஸ்லிம்கள் அந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பினர். பக்ரீதை மிகுந்த துக்கத்துடனேயே அவர்கள் கழித்தனர். சிறுபான்மையினரை பரீட்சை செய்து பார்த்துக் கொண்டே இருக்கக்கூடாது. அவர்கள் நம்மோடு தோளோடு தோளாக எப்போதுமே இருந்திருக்கிறார்கள். தீவிரவாதத்துக்கும், அவ்வகையான குண்டுகளுக்கும் எதிராக அவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்துக்கான போராட் டத்தில் நாம் அவர்களை நம்மோடே அழைத்துச் செல்ல வேண்டும். மிக்க நன்றி
மும்பை சம்பவம் துளைக்கும் வினாக்கள்

*

ஒவ்வொரு பயங்கரவாத சம்ப வங்கள் நடக்கும் போதும் இதுகுறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும் மோடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை மோடி மீது விசாரணைக் கணைகள் பாயாமல் இருப்பது ஏன்? மோடியை விசாரணைக்கு உட்படுத்து வதில் என்ன பிரச்சினை?
*

தீவிரவாத தடுப்பு படை தலை வர் ஹேமந்த் கர்கரே சங்பரிவார் அமைப்பினரால் தனக்கு மிரட்டல்கள் வந்ததையும், அவர்கள் தன்னை தவறாக சித்தரித்ததையும் குறித்து வேதனை தெரிவித்த கர்கரே, பிரத மரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து பிரதமரிடமோ, உள்துறையிடமோ கர்கரே கடிதம் மூலம் ஏதேனும் தெரிவித்திருக்கிறாரா?
*

முதல் நாள் டெக்கான் முஜாஹி தீன் இயக்கம்தான் இதற்குக் காரணம் என ஊடகங்கள் பரபரப்பாக அறிவித் தன. இத்தகவலை இவர்களுக்கு தெரிவித்தது யார்?
*

இரண்டாவது நாள் லஷ்கரே தொய்பா தான் காரணம் என பெரும் பாலான ஊடகங்கள் அறிவித்தன. லஷ்கரே தொய்பாதான் காரணம் என இவர்களுக்கு யார் சொன்னார்கள்? இல்லையெனில், `டெக்கான் முஜாஹி தீன் காரணமில்லை, அந்தப் பெயரை இரண்டாவது நாள் குறிப்பிட வேண் டாம்’ எனக் கூறியது யார்? ஆனால் செய்திகளின் போக்கை கணிக்காமல் பெரிய அறிவாளித்தனமாக இன்ன மும் `டெக்கான் முஜாஹிதீன்தான் காரணம்’ என செய்தி கூறிக் கொண் டிருக்கும் சன் தொலைக்காட்சிக்கு மட்டும் முக்கியத் தகவல்களைக் கொடுத்தது யார்?
*

டெக்கான் முஜாஹிதீன் ஆயிற்று, லஷ்கர்-இ-தொய்பா போயாச்சு, மூன்றாவது நாள், `தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக’ கூறப்பட்டது. அப்படியானால் மேற் கூறப்பட்ட இரண்டு பயங்கரவாத அமைப்புகளையும் காப்பாற்றி வேறொரு நபரைப் பற்றி குறிப்பிடப்படுகிறது என்றால், இடையில் என்ன மாற்றம் அல்லது குழப்பம் நிகழ்ந்தது?
*

பயங்கரவாதிகள் போர்பந்தரில் இருந்துதான் வந்திருக்கிறார்கள் என் றால், இதற்கு குஜராத் அரசின் கையாலாகத்தனம்தான் முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஆனால் இதுகுறித்து மோடி அரசை விசாரிக் காமல் காலம் தாழ்த்துவது ஏன்? இதுகுறித்து எந்த புண்ணியவானும் (!) வாய் திறக்கவில்லையே ஏன்?
*

இவ்வளவு ஆயுதங்களுடன் சதிகாரர்கள் ஊடுருவ முடிந்தது என்றால் பாஜகவுக்கு நெருக்கடியான சூழ்நிலையில் குண்டுகள் வெடிக்கின் றன. இவ்வாறு கூறியவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய்சிங். தற்போதும் சட்டமன் றத் தேர்தல்கள் நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என செய்திகள் வெளிவந்த சூழ்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எந்த புலனாய்வு அமைப்பும் ஊடகங்களும் வாய்திறக்கவில்லையே ஏன்?
*

தீவிரவாதிகள் பஞ்சாபி மொழி பேசியதாக முதலில் ஊடகங்கள் குறிப்பிட்டன. உருதுமொழி பேசிய தாகக் கூட பல ஊடகங்கள் குறிப்பிட் டன. மராத்திய மொழியில் பேசியதாக மராட்டிய டைம்ஸ் குறிப்பிடுகிறது. அவ்வாறெனில், அவர்கள் யார்? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.



மோடி ஆடிய நாடகம்

மோடி, ஓபராய் ஹோட்டலுக்குச் சென்று பார்வையிடு வது போல சென்றதை பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டை நடத்திய கமாண்டோ படையினர் கோபத்துடன் குறிப்பிட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டிய லிஸ்ட்டில் உள்ள மோடி எந்த பயமும் இல்லாமல் நாடகமாடியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது
மும்பை பயங்கரம்: வெளிவராத உண்மைகள்!


மும்பை மீது பயங்கரவாதிகள் தொடுத்த யுத்தம் உலகத்தையே அதிரச் செய்துள்ளது. ஆசியாவின் நியூயார்க் என அழைக்கப்படும் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை முதன்முறையாக பயங்கரவாதி களின் துப்பாக்கிச் சூடுகளுக்கு இலக் கானது. மும்பைக்கு மட்டுமல்ல, இந்திய வல்லரசுக்கு இதுவே கசப்பான முதல் அனுபவமாக இருந்தது.


உலகின் நான்காவது தரைப்படையைக் கொண்டிருந்த இந்திய வல்லாண்மைக்கு, 100 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மாபெரும் ஜனநாயக நாட்டின் மீது பயங்கர வாதிகள் தொடுத்த போர், அவர்களை முறியடித்து முற்றிலும் அழித்தால் மட்டும் போதாது. இனி நம் இந்தியத் திருநாட்டின் மீது எந்த தீய சக்தியும் எந்த தாக்குதலையும் நிகழ்த்த இனி கனவிலும் கூட நினைக்காத வண்ணம் என்றுமே மறக்க முடியாத பதிலடியைக் கொடுக்க தயாராக வேண்டும் என்ற உறுதியையும் ஏற்க வைத்துள்ளது.


பத்து பரதேசி நாய்கள் மட்டுமே ஒரு மாபெரும் நகரத்தின் முக்கிய பகுதிகளைப் பிடித்து ஏராளமான மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து அப்பாவி மக்களை குலைநடுங்க வைத்த கொலைகாரப் பாவிகளை கிஞ்சிற்றும் மன்னிக்க முடியாது. பாவிகளின் கைகளில் மும்பை மாநகரம் சிக்கித் தவித்தபோது உள்துறை அமைச்சர் வழக்கம்போல் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். 60 மணி நேரத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட மூன்று நாட்களாக நடைபெற்ற போர் நாட்டையே நிலைகுலைய வைக்கக்கூடியதாகவும், அதிர்ச்சியில் உறைய வைக்கக் கூடியதாகவும் இருந்தது.


நாரிமன் ஹவுஸில் 26.11.08 இரவு 8.20க்கும், விக்டோரியா டெர்மினஸில் 9.24க்கும், லிபோ போர்டு கபேயில் இரவு 9.15க்கும், டிரைடன்ட் ஹோட்டலில் 8.25க்கும், விபோபார்லேவில் 9.55க்கும், காமா மருத்துவமனைக்கு வெளியே 10.15க்கும், மெட்ரோ சினிமா தியேட்டருக்கு வெளியே 10.30 மணிக்கும், வாடி பந்தரில் 10.45க்கும், ஜிர்காம்சல்பதியில் 10.50க்கும் குண்டுகள் வெடித்தது.


வெளிநாட்டிலிருந்து 20 முதல் 25 பயங்கரவாதிகள் மும்பையில் புகுந்ததாக மகாராஷ்டிர மாநில காவல் துறைத் தலைவர் ஜி.பி.ராய் தெரிவித்தார். ஒரு நகரமே முற்றுகையில் சிக்கித் தவித்த போது அதனை மீட்க நடந்த முயற்சி உடனடி யாக ஏன் நிகழ வில்லை என்பதை ஆய்ந்தால் 9.30க்கு மகாராஷ்டிரா முதல் வருக்கு தகவல் தெரிந்த போது அவர் கேரளாவில் இருந்தார்.முழு விவரத்தையும் நிலை மையின் தீவிரவாதத் தையும் அவர் புரிந்து கொண்ட போது கூடுதலாக ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டிருந்தது.


ஒரு வழியாக மத்திய உள்துறை அமைச் சர் சிவராஜ் பாட்டீலுக்கு மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தொலை பேசியில் தகவல் தெரிவித்து கமாண்டோ படைகளை அனுப்புமாறு கேட்கும் போது நேரம் இரவு 11.30 ஆனது. எத்தனைப் பேர் வேண்டும். எத்தனைப் பேர் வேண்டும் என சிவராஜ் பாட்டீல் கேட்கிறார். 200 பேர் வேண்டும் என்கிறார். சிவராஜ் பாட்டீல் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ தலைவர் ஜி.கே.தத்-ஐ அழைத்து, தீவிரவாதிகளை ஒடுக்க 200 கமாண்டோக்களை தயாராக்கி அனுப்புமாறு உத்தரவிடுகிறார்.


உள்துறை அமைச்சரும் மகாராஷ்டிர முதலமைச்சரும் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வருவதற்குள் பெரும்பாலான கமாண்டோ படையினர் தூங்கவே போய் விட்டார்கள். அதன்பிறகு அவர்களிடம் விஷயத்தைக் கூறி சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுதங்கள் அனைத்தையும் திரட்டிய பின் 200 பேரும் தயாராக இருக்க இவர்களைக் கொண்டு செல்ல வேண்டிய விமானம் அங்கு இல்லை. 11.76 என்ற விமானம் டெல்லியில் இல்லை. அது சண்டீகரில் இருந்தது. சண்டீகருக்கு தகவல் அனுப்பப்பட்டது. விலை மதிப்பு மிக்க நேரம் வீணாகிக் கொண்டிருந்தது. விலை மதிக்கவே முடியாத உயிர்களும் தான்.


சண்டீகரில் 11.76 என்ற அந்த விமானத்தின் பைலட்டை உறக்கத்தில் இருந்து எழுப்பி விமானம் புறப்பட, நேரம் அதிகாலை 2 மணி ஆகியிருந்தது. 200 கமாண்டோ படையினரை சுமந்து வந்த விமானம் மும்பை வந்து சேர விடியற்காலை 5 மணி ஆனது. இருப்பதிலேயே மிகவும் வேகம் குறைந்த விமானமாம் 11.76.


விமான நிலையத்தில் காத்திருந்த இவர்கள் சம்பவ இடத்திற்காக சிறப்பு பேருந்துகள் வருவதற்காக 5.30 மணி வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. கமாண்டோ படையினர் அனைவரையும் கொண்டு செல்ல பேருந்துகள் அனைத்தும் மொத்தம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டன.


பயங்கரவாதிகளோடு யுத்தம் செய்வதற்காக ஆயத்தமாக குழு குழுவாக அவர்கள் பிரிந்து தங்கள் கடமையைத் தொடங்கிய போது காலை 7 மணி.


இந்திய தேசிய பாதுகாப்பு படை சாமான்யமான படை அல்ல. அதிரடி சாகசங்களுக்கும் அநாயச துணிச்சலுக்கும் பெயர் பெற்றது. சம்பவம் நிகழ்ந்த அரை மணி நேரத்தில் தேசிய பாதுகாப்பு படையினர் சென்றிருந் தால் நிச்சயம் பயங்கரவாதிகளை துவம்சம் செய்திருப்பார்கள். எதிரிகள் பின்னங் கால் பிடறியில் பட ஓடியிருக்கக் கூடும். ஆனால் ஒன்றல்ல, இரண்டல்ல, 9 1/2 மணி நேரம் தாமதம் என்பது ஜீரணிக்கவே முடியாதது; மன்னிக்கவே முடியாதது.


தேசிய பாதுகாப்பு படை என்பது தலைநகர் டெல்லியில் மட்டுமே இருக்க வேண்டிய படைப் பிரிவா என்ன? நாட் டின் முக்கிய நகரங்களிலும், பாதுகாப்பு முக்கியத்துவம் மிகுந்த கேந்திரங்களிலும் என்.எஸ்.ஜி. என்ற தேசிய பாதுகாப்பு படை நிலை நிறுத்தப்பட வேண்டும்.


ஆனால்பயங்கர வாதம் நடந்தபோது முதல மைச்சர் முறையான உத்தர வுகளை பிறப்பிக்கவே இல்லை என்கிறார்கள்.


இது ஒன்றும் மன்னர் காலம் அல்ல. மன்னர் காலத்தைப் போல் தளபதிகள் படையினை வழிநடத்திச் செல்வதைப் போன்ற ஓர் அவசியம் இல்லை. வீரர்களை சிப்பாய்களை அனுப்பி அவர்களை களத்திலே நிறுத்தி பின்னால் இயக்கி வெற்றி பெறு வது இன்றைய உலகின் வழமை. ஆனால் நிலைமையை நேர் மாறாக்கி விட்டிருக்கிறார்கள்.


ஹேமந்த் கர்கரே, சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத் திற்குச் சென்றதோடு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே கொடூரமாக கொல்லப்பட்டிருக் கிறார்கள். இது எதிரிகள் தீட்டிய சதியின் வெற்றியா? நம்மவர் களின் மதியின் தோல்வியா? வெறும் பத்து பேர்கள்தான் இந்த பயங்கரவாதத்திற்கு காரணமா? என்பதை நம்ப முடியவில்லை. பல்வேறு முரண்பாடான தகவல்கள் ஏற்கனவே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இதுவரை நடைபெற்று வந்த பயங்கரவாத நிகழ்வுகள் குறித்த வழக்குகளில் மர்மமான ஒரு போக்கை இதுவரை இந்நாடு பார்த்திருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் யாரையாவது கைது செய்வது பின்னர் அதுகுறித்த எந்த ஆதாரப்பூர்வ தகவல்களும் வெளிவராமல் மர்மத்தை பாதுகாத்துக் கொண்டே இருப்பது என்ற நிலை. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் போக்கு அவ்வாறு இருக்கவில்லை. முறையாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு பின்னர் அவை ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்காளக மாறிய பின்னரேமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது.


ராணுவத்தில் பணியாற் றிய கர்னல் புரோஹித்தை விசாரிக்கத் தொடங்கி பல வாரங்களாயின. ஆனால் அவர் வீட்டில் இதுவரை சோதனை போட தீவிரவாத தடுப்புப் படை செல்லவே யில்லை. வீட்டுக்கு செல்லா மலே தீவிரவாத தடுப்புப் படையினருக்கு தேவை யான ஆதாரங்கள் கிடைத்து விட்டன.


தெளிவாக சதிகாரர்களை அடையாளம் காட்டும் வழக்கிலேயே இவ்வளவு கனத்துடன் செயல்பட்ட போது, இதுவரை நிகழ்ந்த அசம்பாவிதங்களில் முதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வீட்டைத்தான் முதலில் தட்டு வார்கள். அப்புறம் ஆளை தட்டுவார்கள். சரியான ஆளை தப்பிக்கவிட்டு தப்புத் தப்பாக எல்லாமே செய்வார்கள். தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் விதம் அதிர்ச்சியளிக் கக் கூடியதாகவே இருக்கிறது.


இந்நிலையில் உள்நாட்டு தீவிரவாதம் வெளிநாட்டு பயங்கரவாதம் என வகையாய் பிரச்சாரம் செய்வது மட்டும் போதாது. இந்திய மக்கள் அனைவரின் நம்பிக் கையைப் பெறும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் உறுதி காட்ட வேண்டும்.


நாட்டில் எத்தனையோ விசாரணைகள் குறித்து கவலைப்படாத பாஜக தலைவர் அத்வானி, பெண் சாமியார் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி மிகப் பெரிய அழுகுணி ஆட்டமே ஆடினார். இதற்காக நாம் அத்வானியைக் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அதற்கு பணிந்து நடந்த மன்மோகன்சிங் மீதுதான் நமது ஆதங்கம் அதிகரிக்கிறது. அத்வானி போன்றவர்களின் அதீத ஆர்வம் மாலேகான் வழக்கின் கதி இனி என்ன ஆகும் என்ற கேள்வியையும், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள் தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரமும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. இதுவும் நாட்டு மக்கள் ஏராள மானவர்களுக்கு பல்வேறு சந்தேகங் களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் மும்பை பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய அதிர்ச்சி செயல் நம் மனதை வெகுகாலம் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கக் கூடும். வெளிநாட்டு தீவிரவாதமோ உள்நாட்டுத் தீவிர வாதமோ எதுவாக இருப்பினும் அதனை எதிர்கொள்ள வேண்டிய கடமை ஒவ் வொரு இந்தியனுக்கும் உண்டு. இந் நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வரை ராணுவத்திற்கென செலவழிக்கப் படுகிறது. காவல்துறைக்கும் கோடி கோடியாக கொட்டப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடும்போது 10 மணி நேரம் கழித்தே நடவடிக்கையில் இறங்கும் அவல நிலையே நாம் காணும் காட்சியாகியிருக்கிறது.


ராணுவத்தில் ஆகட்டும், என்.எஸ்.ஜி. என்ற தேசிய கமாண்டோ படையிலும் மற்றும் பல பாதுகாப்பு படைகளிலும், ரா உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் முஸ்லிம்களை அதிக அளவு சேர்க்க வேண்டும். அரசுகள் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட விதம் பரிதாபத்தை வரவழைத்தது.


எனவே நாட்டை அச்சுறுத்தும் நிஜமான பயங்கரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த அனைத்து மாணவர் களுக்கும் பள்ளி இறுதி படிப்பு காலத்தி லேயே இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்க இந்திய அரசு முன்வர வேண் டும். அதற்கான முதற்கட்ட முன்னேற் பாடுகளைத் தொடங்க வேண்டும்.


அப்போதுதான் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதம் குறித்து பயங்கரமாக கட்டுக்கதைகள் பரப்பும் சக்திகளையும், தாங்களே சதிகளை செய்து அப்பாவிகள் மீது பழிபோடும் பயங்கரவாத சதிக் கும்பலையும், வெளிநாட்டு சதி என்று கூப்பாடு போட்டுக் கொண்டு நம்நாட்டில் - நமது வரிப் பணத்திலே டேரா போட்டு காலத்தைத் தள்ளலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கும் மாடி வீட்டு பிச்சைக் காரனின் (!) பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்தி அழித்தொழிக்க முடியும்.


நாங்கள் தயார்

Web Counter Code