இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, December 26, 2008

மாவீரன் கர்கரேயை காரில் கடத்தி படுகொலை செய்தது யார்?
நாடாளுமன்றத்தில் அப்துர் ரஹ்மான் அந்துலே எழுப்பிய புயல்


அபூசாலிஹ்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குறித்த தகவல்கள் மறைந்து போயின. அவை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதன் பின்னணியில் ஓர் அப்பட்டமான அரசியல் சதி காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் கலந்த கவலை இந்திய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது.


குறிப்பாக மும்பை மீது பயங் கரவாதிகள் தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளா கவே தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சாலஸ்கர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.


மாவீரன் கர்கரேயின் மரணம் குறித்து இந்தியாவே அதிர்ச்சி யில் ஆழ்ந்த போது சில சக்திகள் மட்டும் குதூகலத்துடன் கும்மாளமிட்டன. மாலே கான் குண்டுவெடிப்பு சதி குறித்த உண்மைகள் இனி வெளிவருமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழத் தொடங்கியது.


இந்நிலையில் கர்கரேயை படுகொலை செய்தது யார்? என்பது குறித்த மர்மங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சுதந்திர உணர்வுள்ள புலனாய்வு நிபுணர் கள் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது.


கர்கரேயின் மரணம் குறித்த மர்மம் நீடித்த நிலையில், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் அமைச்சருமான அப்துல் ரஹ்மான் அந்துலே நாடு தழுவிய நியாயமான சந்தேகத்தை சதிகாரர்கள் உள்ளம் அதிர உரத்து முழங்கினார். “கர்கரேயின் படுகொலையில் சந்தேகம் இருக்கிறது, கர்கரேயைக் கொன்றது யார்? ஹிந்துத்துவ தீவிரவாதத்தை நேர்மையுடன் வெளியுலகிற்கு அம்பலப் படுத்திய அந்த நேர்மையான அதிகாரியை காமா மருத்துவமனைக்கு செல்லுமாறு தவறாக வழிநடத்தியது யார்? பயங்கர வாதிகள் குண்டு மழை பொழிந்த தாஜ் ஹோட்டலுக்கோ, டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கோ, நரிமன் இல்லத்திற் கோ செல்லவிடாமல் காமா மருத்துவ மனைக்கு செல்வதற்கு அவரை தவறாக தகவல் கூறி வழிநடத்தியது யார்?’’ என்ற அதிரடி வினாக்களை வீசி நாடாளு மன்ற அவையினைத் திணறடித்தார்.


கர்கரே மிகச்சிறந்த நேர்மையான அதிகாரி. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது, கர்கரேயை படுகொலை செய் தது யார்? என்பது குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என அந்துலே தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்துர் ரஹ்மான் அந்துலேயின் உரைக்கு கடும் இடையுறு விளைவித்தனர். இது அந்துலேயின் பாகிஸ்தானுக்கு சாதக மான வாதம் எனக் கூறும் அளவுக்கு தங்கள் நிலையை தாங்களே தாழ்த்திக் கொண்டனர். ஒரு நேர்மையான நெஞ் சுரம் மிக்க ஓர் அதிகாரியை இந்த தேசம் இழந்துவிட்டதே என்ற வேதனை கொஞ் சமும் இல்லாத பாஜக கும்பலின் வெற்றுக் கூச்சல் இந்திய மக்களின் மத்தியில் அவர்களுக்கு இழிவைத் தேடித்தந்தது.


அப்துர் ரஹ்மான் அந்துலே-யின் நாடாளுமன்ற அறைகூவல் நாட்டையே அவர் பின்னால் திரள வைத்துள்ளது. அந்துலே எழுப்பிய உரத்த சிந்தனை நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங் கியுள்ளது. அந்துலே இந்திய முஸ்லிம் களின் மனசாட்சியினை தட்டி எழுப்பி யுள்ளார். அதோடு அவரின் நாடாளு மன்ற அறைகூவல் இந்திய தேசத்தை உலுக்கியுள்ளது. அந்துலேவை அமைச்ச ரவையிலிருந்து அகற்றிவிட வேண்டும் என காங்கிரசுக்குள்ளே உள்ள பாசிச அடிவருடிகளும் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர். இதனிடையே அந்துலே தனது விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்திருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. பிரதமரும் சரி, அந்துலேயும் சரி அத்தகவலை உறுதிப் படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் அந்துலே எழுப்பியுள்ள கேள்வி களில் உள்ள சத்தியத்தை உணராமல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அப்துர் ரஹ்மான் அந்துலேக்கு எதிரான செய்திகளை மகிழ்ச்சியுடன் வெளியிட்டு வருகின்றன. அந்துலே யின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேசத்துரோகிகள் என்பதே நாட்டு மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.


இந்நிலையில் காங்கிரஸ் மேலிடம் பொறியில் சிக்கிய எலியாக தவிக்கிறது. அந்துலே அவர்களை அமைச்சர் பதவியை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக உள்ளிட்ட சக்திகளும், காங்கிரசுக் குள் இருக்கும் பாஜகவின் ரகசிய ஆதரவாளர்களும் துடியாய்த் துடிக்கின்றனர். இந்நிலையில் பதவியை விட்டு நீக்கினால் அந்துலேயின் அரசியல் எழுச்சி உடையதாகவும், அந்துலேயை நீக்குவதால் காங்கிரஸ் மீள முடியாத வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும் என காங் கிரஸ் மேலிடம் முடிவெடுப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கிறது.




மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் படுகொலை செய்யப் பட்ட கர்கரேயின் விஷயத்தில் மகாராஷ் டிர அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை எனத் தெரிகிறது. கர்கரே படுகொலை குறித்து தனியாக விசாரணை ஏதும் செய்யப்பட்ட மாட்டாது என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.


நாட்டின் வர்த்தக தலைநகரத்தில் ஏற்பட்ட தாக்குதல் குறித்த தகவல் தெரிந்த உடனேயே உயிரை துச்சமென நினைத்து சிங்கமென பாய்ந்து சென்ற ஒரு கடமை வீரன் குண்டு துளைக்காத சட்டை அணிந்தும் கூட மார்பில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். காமா மருத்துவ மனைக்கு காரில் கடத்திச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது.


கர்கரேயை படுகொலை செய்த பயங் கரவாதிகள் அம்பலப்படுத்தப்படுவது எப்போது என்பதுதான் மக்கள் மனதில் உள்ள கேள்வி.

No comments:

Web Counter Code