இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, August 31, 2007

ஹைதராபாத் குண்டுவெடிப்பு
சூழ்ச்சியின் பின்னணி


ஹைதராபாத் நகரில் மக்கள் அதிகம் கூடும் லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் என்ற உணவகத்திலும் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி களில் இருந்து தடயங்களை சேகரித்த போது நியோஜெல்லி90 என்ற அமோனியம் நைட்ரோ ரசாயனம் கலந்த வெடிகுண்டு மருந்து பயன்படுத்தப்பட்டிருப் பதாக காவல்துறை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் அந்நிய நாட்டு தீவிரவாத சக்திகளின் கைவரிசை இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப் படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அறிவித்திருக்கிறார். ''மீண்டும் பொடா சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்'' என குண்டு வெடிப்பு சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த அத்வானி வழக்கம்போல தெரிவித்திருக் கிறார்.
இந்த குண்டுவெடிப்பில் முஹம்மது அலி என்ற 6 வயது சிறுவன், அமீர் என்ற 8 வயது சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 11 முஸ்லிம்களும் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா வின் அஹமது நகர் மாவட்டத் தில் அமிருத் வாகினி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் ஏழு மாணவர் களும் இச்சமயத்தில் கொல்லப் பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் ரஹீமுன்னிஸா பேகம் (48), முஹம்மது வாஹித் அலி (21), அஹ்யா அப்துல் காதர் (17), அக்ரமுல்லாஹ்கான் (22), அஹ்மது முஹினுத்தீன் (45), முஹம்மது சலீம் (47), ஃபரீதா நாஸ் (35), முஹம்மது அலி (6), அமீர் (8), இப்ராஹிம்கான் (43), மற்றும் இர்ஷாத் அஹ்மத் (19) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பமே கூண்டோடு பலியான பரிதாபச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோகுல் சாட் பண்டார் என்ற துரித உணவகத்தில் முஹம்மது சலீமின் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் பலியாகி விட்டனர். ஹுமாயுன் நகர் என்ற பகுதியில் கோல்கொண்டா அடுக்குமாடி குடியிருப்பில் சலீமின் குடும்பம் வசித்து வந்துள்ளது.
சிதறிய சலீம் குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்து கோல் கொண்டா குடியிருப்புவாசிகள் கதறியது நெஞ்சைப் பிழியும் காட்சியாக இருந்தது.''ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டதே'' என்று ஒரு பெண் கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கதறினார்.
குண்டுவெடிப்பு குறித்த செய்தி கிடைத்ததும் சலீமின் சகோதரர் சமீர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். செல்பேசி அழைப்புக்கு பதில் வராததால் ஒவ்வொரு மருத்துவ மனையாகச் சென்று பார்த்திருக் கிறார். இறுதியில் உஸ்மானியா மருத்துவமனையில் அந்தக் குடும்பமே உடல் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.''இந்த படுபாதகச் செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை இழுத்து வந்து பொது இடத்தில் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும்'' என பலியானவர் களின் உறவினர்கள் குமுறலுடன் கூறினர்.
''பயங்கரவாதிகள், மனித நேயத்திற்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள்; இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என ஆவேசமாகக் குறிப்பிட்டார் அஸதுல்லாஹ் கான். இவர் இந்த குண்டுவெடிப் பில் தனது ஒரே மகனான அக்ரமுல்லாகானை பறிகொடுத் தவர். அம்பர்பேட் மையவாடியில் தனது ஒரே மகனை அடக்கம் செய்துவிட்டு அவர் பயங்கரவாதி களுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காட்சி கூடியிருந்தவர் களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
''பயங்கரவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் ஹிந்துக்கள். முஸ்லிம் கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது ''என்கிறார் ஃபர்ஹா ஃபரூக்கி என்ற இளம்பெண் அதிர்ச்சி விலகாமல்.
இது மிகவும் கோழைத் தனமான செயல். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசாரணைகள் வெளிப்படையாகவும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என தமுமுக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்காக ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் நகரம் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு நடுநிலையாளர்கள் சில திடுக் கிடும் காரணங்களைக் கூறுகிறார் கள்.
நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆந்திர மாநிலப் பகுதியை சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கும் சதிகளுக்கான காரணங்கள் பற்றி கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறார்கள்.
1. ஹைதராபாத் அதிநவீன தொழில்நுட்ப நகராக விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. இது நம்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்காத சக்திகளின் கண்களை உறுத்துகிறது.
2. ஹைதராபாத் நகரம் முஸ்லிம் களின் பாரம்பரிய பெருமைமிக்க நகராகத் திகழ்கிறது.
3. தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸின் கோட்டையாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. காங்கிரசுக்கு அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கும் மாநிலமாக இருப்ப தோடு ஹிந்துத்துவ சக்திகள் சற்றே துளிர்விடக் கூட வாய்ப்பில்லாத பூமியாகவும் ஆந்திரம் விளங்குகிறது.
4. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்க ளாலும் விரும்பப்படும் தலைவராக ஆந்திர முதல மைச்சர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி விளங்கு கிறார். குறிப்பாக சமூகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் முஸ்லிம்களுக்காக, அவர்களது நிலையை மேம்படுத்த இடஒதுக் கீட்டுக்கு வழிசெய்தார்.
அதற்காக தடங்கல் ஏற்படுத்திய தடைகளை யெல்லாம் உடைத்து முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங் கிட மும்முரம் காட்டினார்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆந்திர அரசுக்கு இடைவிடாத தலைவலி கொடுத்து அரசியல் அரங்கில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளூர் பயங்கரவாதிகளும், வெளிநாட்டு பயங்கரவாதிகளும் கைகோர்த்திருக்கக் கூடும் என நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆந்திர காவல் துறையில் சில கறுப்பாடுகள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் விதமாக, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது, கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழைப் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்களை கவனத்தில் கொண்டு அனைத்துவித நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில் குண்டுவைத்த வர்களுக்கு உதவியவர் என கோழிக்கறி கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். மீண்டும் ஒரு காமெடிக் காட்சியை அரங்கேற்ற வேண்டாம் என காவல்துறையை நாட்டு மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள்.
இதற்கிடையில் மீண்டும் பொடா வேண்டும் என்ற கோரிக்கை காவி முகாமிலிருந்து எழுப்பப்படுகிறது. 'அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அறுபத் தெட்டு அரிவாளாம்' என்ற பழமொழியை அவர்களின் கூற்று நினைவூட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு உச்சக்கட்ட ஆபத்து இவர்களது ஆட்சியில் தான் ஏற்பட்டது என்பதை நாடு மறக்கவில்லை. இவர்கள் குட்டையைக் குழப்பாமல் விலகி இருப்பதே உத்தமம் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்க முயலும் பயங்கர வாதிகளின் படுபாதகச் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெங்களூரு அறிவியல் கழக துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்களை வளைத்து விசாரித்ததோடு சரி. ஓராண்டுக்கு மேல் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறே, மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருந்தால் இத்தகைய செயல்கள் தொடராது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆந்திர அரசும், மத்திய அரசும் இணைந்து சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்

Thursday, August 16, 2007

மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்புகள்:
நெஞ்சில் அலைபாயும் அனல்கள்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
மும்பையில் 1993 மார்ச் 12 அன்றும், கோவையில் 1998 பிப்ரவரி 14 அன்றும் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த தீர்ப்புகள் கடந்த ஜூலை மற்றும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளன.
இந்த தீர்ப்புகள் குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் மும்பையிலும் கோவையிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக அம்மாநகரங்களில் முறையே டிசம்பர் 1992 லி ஜனவரி 1993 மற்றும் நவம்பர் லி டிசம்பர் 1997ல் நடைபெற்ற முஸ்லிம் இன படுகொலைகள் குறித்து மவுனம் சாதித்து நடுநிலையைத் தவறிவிட்டன.
அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த குண்டுவெடிப்புகளை நாம் நியாயப் படுத்தவில்லை. ஆனால், அத்தகைய நாசகாரச் செயல்களை செய்வதற்கு தூண்டுகோலாக இருந்த முஸ்லிம் இன பேரழிவு கலவரங்களை மறப்பது நியாயமா?
மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்ட விதம் மாறுபட்டவை. ஆனால், அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைந்த பொதுவான நிகழ்வு முஸ்லிம் இன பேரழிவு கலவரங்களை நடத்தியவர்கள் மீது அன்றைய அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாததுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த உண்மைகள் குறித்து மூச்சு விடாத செய்தி ஊடகங்கள், குண்டுவெடிப்புகள் பற்றிய படங்களை பிரசுரித்து, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை பேட்டி கண்டு, குண்டுவெடிப்பில் ஈடுபட்டோ ருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தைச் செய்து வருகின்றன.
இச்சூழலில் மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்புகளுக்கு காரணமாக இருந்த முஸ்லிம் பேரின அழிவு கலவரங்கள் குறித்தும் அதனை நடத்தியவர்கள் குறித்தும் அறிவது அவசியம். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு முற்றிலும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு முற்றுப் பெறாத நிலையில் இந்த வாரம் கோவை குண்டுவெடிப்பு குறித்து சில உண்மை களை மக்கள் மன்றத்தில் வைப்பது அவசியமாகிறது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அனைவரையும் கருணையின் அடிப்படையில் அவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கருதி விடுதலைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
சாதாரணமாக நீதிமன்றங்களில் கொலை வழக்குகள் நடைபெறும்போது, அதற்கான தண்டனைகளை நீதிபதி அளிக்கும்போது கொலைக்கான உள்நோக்கம் (ம்ர்ற்ண்ஸ்ங்) என்ன என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ அல்லது அதற்கு குறைவான தண்டனையோ அளிப்பார். அதேபோல் கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றம் குண்டு வெடிப்புகளுக்கான உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக அறிந்து தீர்ப்பளிக்க வேண்டும்.
குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள சிலர் மீது 153ஏ குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான முடிவு என்பது நமது கருத்து. குண்டு வைக்க துணிந்தவர்களின் நோக்கம் நவம்பர் டிசம்பர் கலவரத்திற்கு காரணமானவர்களை, அவர்களது தலைவர்களை தாக்க வேண்டுமென்பது தான். எனவே, இதனை மதமோதல் என்றோ, மதத்தினருக்கிடையே பகைமையை ஏற்படுத்தும் செயல் என்றோ கூற முடியாது.
பாபரி மஸ்ஜிதை இடித்து, முஸ்லிம்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டும் அத்வானி போன்றோர் அனைத்து ஹிந்துக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார்கள் என்றோ அல்லது அனைத்து ஹிந்துக்களும் தங்கள் தலைவர்களாக அவரை போன்றோரை கருதுகிறார்கள் என்றோ கருதுவது முட்டாள்தனமாகும்.
இவர்கள் இந்து மதத்தின் பெயரைப் பயன்படுத்தி உலாவரும் பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளின் தலைவரான அத்வானிக்கு ஹிந்து மதக் கோட்பாடு களின் மீது நம்பிக்கை கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே அத்வானி கோவை வருவதை கருத்தில் கொண்டு அவரையும் அவரது ஆதரவாளர்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். மதத்தினருக்கிடையே பகைமையே ஏற்படுத்தும் செயல் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
இனி நவம்பர் டிசம்பர் 97ல் நடைபெற்ற கலவரத்திற்கு செல்வோம்.
நவம்பர் 29, 1997 சனிக்கிழமை. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் டிசம்பர் 6 அன்று சென்னையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை முன்வைத்து பேரணி மற்றும் மாநாட்டிற்காக பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாக பிரச்சாரம் செய்துவந்த வேளையில் தான் அந்த செய்தி 39, இப்ராஹீம்ஜி சாஹிப் தெரு, இரண்டாம் சந்து என்ற முகவரியில் அப்போது இருந்த தமுமுகவின் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தது.
கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் படுகொலைச் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டில் உள்ள அல்உம்மா அலுவலகத்திற்கு காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்கு தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களை காவல்துறையிடம் ஒப்படைப்பதாக அல் உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்று முஸ்லிம் வாலிபர்கள் அப்பாஸ் (22), ஷபி (22) மற்றும் ஷபி (20) ஆகியோர் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
இத்துடன் பிரச்சனை முடிவடைந்து விட்டது என்பதுதான் அந்த செய்தி. ஆனால் இதற்கு பிறகு வந்த செய்திகள் நமது இதயங்களைப் பிளப்பதாக இருந்தது. காவலர் செல்வராஜ் படுகொலைக்கு பிறகு அன்று என்ன நடந்தது என்பது குறித்து தி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி பின்வருமாறு பதிவுச் செய்துள்ளார்:
''நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட (முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதை கடைகள் முதல் தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர் தான் தீ வைப்பு சம்பவங்களுக்கு தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில்: 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட சில காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்'' (ஆதாரம்: தீ வீக், 14 டிசம்பர் 97 இதழில் இ. விஜயலட்சுமி எழுதிய இங்ஹற் ஸ்ரீர்ய்ள்ற்ஹக்ஷப்ங்ள் கட்டுரை)
மறுநாள் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்கள் கோவை முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல தமிழகத்தில் வாழும் அனைத்து மனிதநேயர்களுக்கும் தலைக் குனிவை ஏற்படுத்திய நாள். கோவை தீப்பிடித்து பற்றி எரிந்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில்தான் நானும் நமது கழகத்தின் அன்றைய துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ்வும் நேரடியாக கோவைக்கு கிளம்பி னோம்.
கோவை கலவரத்தை காவல்துறையில் உள்ள சில கருப்பாடுகள் தலைமையேற்று நடத்தின. இவர்களுக்கு தலைமை தாங்கியவர் அன்றைய கோவை காவல்துறை தலைமையக துணை ஆணையாளர் இருந்த ஈ மாசானமுத்து.
ஆனால், காவல்துறையில் நல்ல நெஞ்சங்களும் உண்டு என்பதை பறைச்சாற்றும் நிகழ்வு நாங்கள் கோவைக்கு சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்டது. கோவை நகர எல்லைக்கு சற்று தூரத்தில் ஒரு காவல்துறைச் சாவடியில் நமது வாகனத்தை நிறுத்தி கோவைக்கு செல்லும் வழியை கேட்டோம். வழியைச் சொன்ன காவலர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களில் கோவையில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்விற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதை உணர்த்தியது.
அந்தக் காவலர் எங்களிடம்: ''உங்களையெல்லாம் பார்த்தால் நல்லவர்கள்போல் தெரிகின்றது. கோவையில் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். தயவு செய்து நீங்கள் கோவை செல்ல வேண்டாம். இந்தப் பாதையில் திரும்பி திருப்பூருக்கு செல்லுங்கள்'' என்று அந்தக் காவலர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இருப்பினும் நாம் கோவை நோக்கியே நமது பயணத்தைத் தொடர்ந்தோம். டிசம்பர் 2 அன்று காலை கோவை சென்று சேர்ந்தோம். அங்கு நாம் பார்த்தவை, கேட்டவை, அனுபவித்தவை இன்னும் ஆறாத தழும்புகளாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 அன்று கோவையில் என்ன நடந்தது. நாம் சொல்வதை நடுநிலையானதாக சிலர் கருதமாட்டார்கள். எனவே, கோவை முஸ்லிம் இன பேரழிவை பதிவு செய்துள்ள சில பத்திரிக்கையாளர்களின் கருத்துகளை இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.
பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழில் (டிசம்பர் 13லி26, 1997) அதன் சிறப்பு செய்தியாளர் டி.என். சுப்ரமணியன் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
''மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) அன்று வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்து காவலர்கள் மட்டுமில்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்பு பட்டைகளை அணிந்து திருச்சி சாலை லி டவுன் ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல்துறையினரின் மனைவி மார்களும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.
''உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதியில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கைய்ய கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைய்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடைவீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டன. கோவையில் மிகப் பிரபலமான முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான சோபா கிளாத் சென்டர் என்ற மூன்று மாடி கட்டிடம் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதில் அந்த கட்டிடம் தரைமட்டமாகியது. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகார கடைகள், காலணி கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை தெருவில் போட்டு தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
''காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் சி.டி. தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி. ரவி அங்கே வந்தபோது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்து தீவிரவாதிகள் அவர்களை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதலில் சி.டி. தண்டபாணிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன.
''காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு முஸ்லிம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர், அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹபிபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார் (அவர் நடுரோட்டில் தீக்கிரையாக்கப்பட்ட காட்சி தினமணி இதழில் வெளியானது). இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஒரு அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.''
தி வீக் இதழின் செய்தியாளர் விஜயலட்சுமி முஸ்லிம்களின் வீடுகள் எவ்வாறு தாக்கப்பட்டன என்பது குறித்து பின்வருமாறு வர்ணிக்கிறார்:
''வன்முறையாளர்கள் வீடுகளையும் விட்டு வைக்கவில்லை. பி1 காவல் நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள கனி ராவுத்தர் வீதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. பிளாஸ்டிக் மொத்த வியாபாரி ஒருவர் நம்மிடம் 'எனது மனைவி, ஆறு வயது, மூன்று வயது மற்றும் 6 மாதங்கள் கொண்ட எனது 3 குழந்தைகள் ஆகியோருடன் வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து எனது வீட்டை தீக்கிரையாக்கியது' என்றார்.' எங்களுக்குச் சொந்தமான கிட்டங்கியும் வியாபாரப் பொருட்களுடன் சேர்த்து எரிக்கப்பட்ட. 'எல்லா திசைகளில் இருந்தும் புகை வந்து கொண்டிருந்தது. நான் பி1 காவல் நிலையத்திற்கு மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்கள் கடைசிவரை வரவேயில்லை. இறுதியாக நான் என் குடும்பத்தினருடன் மேல் மாடிக்குச் சென்று பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் குதித்தோம். அப்போது எனது ஆறு மாத குழந்தை வாந்தி எடுத்துக் கொண்டிருந்தது. மற்ற குழந்தைகளுக்கு புகை மூட்டத்தினால் மூச்சுத் திணறியது' என்றார்.
''தனது ஆயுட்கால சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்யேக பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத்தலைவி அழுதுக் கொண்டே நம்மிடம் ''எனது கல்யாண பட்டுச்சேலை எரிந்துவிட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை'' என்றார். அருகில் உள்ள பி1 காவல் நிலையத்திற்கு தகவல் தந்த போதினும் அவர்கள் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்''
பிரபல பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நய்யார் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் 'ஆ ஸ்ரீர்ஞ் ண்ய் ற்ட்ங் ரட்ங்ங்ப்' என்ற தலைப்பில் 1998 ஜனவரி 3 அன்று எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
''நாடாளுமன்றத்தின் கவனத்திலிருந்து தப்பும் அளவிற்கு கோவை கலவரங்கள் லேசானது அல்ல. ராஜ்யசபையில் நடைபெற்ற விவாதங்கள் காயமடைந்த, அநாதரவாக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கலாம். நான் அந்த நகரத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்பு 200 கோடியைத் தாண்டும்.
இதனை ஹிந்துலிமுஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கரியத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. 'காவல்துறையினர், ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தை திட்டமிட்டு நடத்தினர்' என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது. ராஜ்யசபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இதனை தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு சிறிய பிரச்சனை அல்ல.
12 வயது பாலகன் அபுபக்கர் சித்தீக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரது தம்பி முஹம்மது ஆரிப் கர்ணகொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறக்க முடியாதவை.'
நமது வர்ணனையை விட தலைசிறந்த பத்திரிகையாளர் குல்திப் நய்யார் மற்றும் மதிப்புமிக்க பிரண்ட்லைன் மற்றும் தி வீக் செய்தியாளர்களின் வர்ணனை நடுநிலையாளர்களின் மனசாட்சியை உறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு மேற்கோள் காட்டுகிறோம்.
கோவையில் நவம்பர்லிடிசம்பர் 1997ல் நடந்த அராஜகங்களை அரங்கேற்றிய கயவர்கள் யாரும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படவில்லை. இந்த வன்முறைகளுக்காக கைது செய்யப்பட்ட அனைவரும் தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று கூறி குறுகிய காலத்தில் விடுதலைச் செய்யப்பட்டனர். இந்த கலவரங்களை முன் நின்று நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது அல்லது ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர்கள் மீது 120பி, 153 பிரிவுகள் நிரூபிக்கப்பட்டது என்று தீர்ப்பும் கூறப்படவில்லை.
செல்வராஜ் கொல்லப்பட்ட சூழலில் சதி ஆலோசனைகளை அளித்த ராமகோபாலன், அப்துன் நாசர் மஃதனியை போல் வருடக்கணக்கில் அல்ல, இந்த வன்முறைகளுக்காக ஒரு நாள் கூட சிறையில் தள்ளப்படவில்லை.
மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் எவ்வாறு கலவரத்தை தூண்டினார்கள், நடத்தினார்கள் வேடிக்கைப் பார்த்தார்கள் என்பதையெல்லாம் தரம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் வழியாக மேலே கண்டோம். இது சாதாரண முஸ்லிம்களின் உள்ளங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதை நடுநிலையாளர்கள் உணர வேண்டும்.
எனது தலைமையில் கோவை முஸ்லிம்கள் டிசம்பர் 3ம் தேதி கோவையில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களில் 17 பேரின் உடல்களை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று அதனை கோட்டைமேட்டிற்கு எடுத்து வந்து. இறுதி தொழுகையை நிறைவேற்றினோம். பிறகு அனைத்து உடல்களும் ஒன்று சேர ஊர்வலமாக கோவை சுண்ணாம்பு கால்வாய் அடக்கவிடத்தில் அடக்கப் பட்டது.
கோவை வரலாற்றில் இறுதி ஊர்வலங்களின்போது எப்போதும் கலவரம் ஏற்படுவது உண்டு. ஆனால், அமைதியாக அந்த ஊர்வலம் நடந்து முடிந்தது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் நான் உரையாற்றியபோது, ''நல்ல காவல்துறை அதிகாரிகள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். நமக்கு நீதி கிடைக்கும். வன்முறைக்கு வன்முறை பதில் ஆகாது. அமைதி காப்போம். நீதி கண்டிப்பாக கிட்டும்'' என்று குறிப்பிட்டேன்.
அன்றைய கோவை மாவட்ட கலெக்டர் சந்தானமும், ஊர்வல பாதுகாப்பிற்கு தலைமை தாங்கிய ஐ.ஜி. ஆர்.வி.கோபாலனும் எனது உரையை பாராட்டினார்கள். அத்துடன் நின்று விட்டார்கள். நீதி கிடைக்கவில்லை.
வன்முறையில் கிஞ்சிற்றும் நம்பிக்கை இல்லாத, ஒரு வன்செயலுக்கு இன்னொரு வன்செயல் தீர்வாகாது என்ற கொள்கையுடைய தமுமுக இந்திய வரலாற்றில் முதன் முறையாக கோவை கலவரத்தை வீடியோ ஆவணமாகப் பதிவு செய்தது. தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையத்திடம் நாம் அதனை டெல்லியில் நேரடியாக சமர்ப்பித்து நீதி கேட்டோம். நீதி கிடைக்கவில்லை.
இந்த பின்னணியில் தான் தனது சகோதரனை இழந்த, தனது உறவினரை இழந்த, தனது சமுதாயத்தினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதைக் கண்ட கோவை சகோதரர்களில் ஒரு சிலர் அவர்களுக்கு நீதி என்று தெரிந்த அநீதியான செயலில் பிப்ரவரி 14 அன்று ஈடுபட்டனர். உணர்ச்சிப் பெருக்கில், நீதி இல்லை இந்த நாட்டில் என்ற கோபதாபத்தில் ஏற்பட்டது தான் குண்டு வெடிப்புகள்.
சுமார் ஒன்பதரை ஆண்டுகள் கழித்து ஜூலை இறுதி வாரம் கோவை கலவரத்தில் கைதான சகோதரர்களில் பெரும்பகுதியினரை சிறையில் சந்தித்தபோது அவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிந்தது. தாங்கள் செய்தது பெரும் தவறு என்பதை உளப்பூர்வமாக அவர்கள் உணர்ந்துள்ளார்கள். தங்கள் நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பதை உணர முடிந்தது.
தி ஹிந்து நாளிதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஒன்பதரை ஆண்டுகள் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டதே அவர்களுக்கு பெரும் தண்டனையாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் அவர்களுக்கு சிறைவாசம் அளிப்பது பெரும் அநீதியாகத் தான் அமையும்.
நீதிபதி உத்திராபதி நீதி வழுவாமல் தனது இறுதித் தீர்ப்பை வழங்க இறைவனை பிரார்த்தனை செய்வோம்

Thursday, August 9, 2007

மதானி மீது பொய் குற்றம் சாட்டியவர்கள்

மதானி மீது பொய் குற்றம் சாட்டியவர்கள்
மக்கள் மன்றத்தின் முன்பு தலை குனிந்து நிற்கிறார்கள்

ஒன்பது வருடங்களாக உளுத்துப் புளுவாய்ப் போன நீதியின் கோரப் பிடியில் சிக்கியிருந்த கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துன் நாசர் மதானி, தன் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப் படாமல் கடந்த ஆகஸ்ட் 1 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் ஒன்பது வருடத்திற்கு முன்னர் தமிழக காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட மதானி, இறுக்க மூடப்பட்ட நீதிமன்றத்தாலும், கண்ணிருந்தும் பார்க்க முடியாத குருட்டு அரசாலும் கவனிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வெளியில் வந்திருக்கிறார். ஒன்பது ஆண்டுகளாக மதானிக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து தங்களது கருத்துகளை ஆணித்தரமாக பதிவு செய்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பழ.நெடுமாறன்தமிழர் தேசிய இயக்கம்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அப்துன் நாசர் மதானி மீது பொய் வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகச் சிறையிலிருந்து 'கேரள மக்கள் ஜனநாயகக்கட்சி'த் தலைவர் மதானி குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுகளும் மெய்ப்பிக்கப் படவில்லை என சிறப்பு நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
ஆயுதத் தடைச் சட்டம், மற்றும் வெடிமருந்து தடைச்சட்டம், கூட்டுச்சதி போன்ற மிகக்கடுமையான சட்டப்பிரிவு களின்படி அவர் மீது சுமத்தப்பட்டிருந்த ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட வில்லை என நீதிபதி தமது தீர்ப்பில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
கடந்த 9 ஆண்டுகாலமாக கோவைச் சிறையில் அவர் அனுபவித்த கொடுமை களுக்கு யார் பொறுப்பு? மாநிலம் விட்டு மாநிலம் மாற்றி, பிணை விடுதலை கூட அளிக்க மறுத்து சிகிச்சைப் பெறுவதற்கு கூட உயர்நிதிமன்றம் வரை சென்று போராடிப் பெற வேண்டிய நிலைக்கு மதானி ஆளாக்கப்பட்டார். இறுதியாக நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என விடுதலை செய்துள்ளது.
அவர் மீது பொய்யாகக் குற்றம் சாட்டிய அதிகாரிகள், அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல் வாதிகள் ஆகியோர் இப்போது மக்கள் மன்றத்திற்கு முன்னால் தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டும் போதாது. பொய் வழக்கு தொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் இது போன்ற பொய் வழக்குப் போடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
''குடும்பம், குழந்தைகள் உள்பட மிக நெருங்கியவர்களை விட்டுப் பிரிந்து, ஒன்பது ஆண்டுகாலம் சிறையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்த மதானிக்கு தகுந்த இழப்பீட்டினை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்'' என தமது அறிக்கையில் மிழூஜிறூசிøகி குறிப்பிட்டுள்ளார்.
சுப. வீரபாண்டியன்திராவிடர் இயக்க தமிழர் பேரவை

கேரள மக்கள் ஜனநாயக, கட்சியின் தலைவர் அப்துன் நாசர் மதானி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியை தந்தாலும், கடந்த 9 வருடங்களாக சிறையில் அவர் அனுபவித்த கொடுமைக்கு பிறகு தான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தடா, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் கூட குற்றம் நிரூபிக்கப்படாமல் நீண்டநாள் கொடிய சிறைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்கள். பொதுவாக ஒருவரை கைது செய்து தீர விசாரித்த பின்னரே அவரை தண்டிக்க வேண்டும். ஆனால் 'ரௌலட் சட்டம்' தொடங்கி அனைத்து கறுப்புச் சட்டங்களிலும் குற்றம் மெய்ப்பிக்கப்படுவதற்கு முன்பே தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மதானி போன்றவர்களுக்கு அவர்கள் இழந்த வாழ்க்கையை கடந்த காலத்தை யார் திருப்பிக் கொடுக்கப்போகிறார்கள்.
இதுபோன்ற விசாரணைக்கு பின்தான் தண்டிக்க வேண்டும் என்று பொடா சட்டத்தில் ஒரு பிரிவு இருந்தாலும் அது மேலோட்டமாகத்தான் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.
குற்றம் செய்யாத ஒருவர் தண்டனை பெற்று விடுதலை செய்யப்படும் பொழுது, கைது செய்த புலனாய்வு அதிகாரிகளை தண்டிக்கலாம் என்று சட்டம் உள்ளது. அதற்கான நிபந்தனை உள்நோக்கத்துடன் செய்ததாக மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு யாரை கைது செய்யச் சொன்னாலும் அதிகாரிகள் செய்வார்கள். எனவே, அரசை விட்டு விட்டு அதிகாரி களை எப்படி குற்றம் சொல்ல முடியும். அதிலும் எப்படி உள்நோக்கத்துடன் செய்தார் என்பதை நிரூபிக்க முடியும்.. எனவே ஒன்பது ஆண்டுகள் மதானி அனுபவித்த இக்கொடுமை ஜனநாயகத் திற்கும், மனித நேயத்திற்கும் எதிரானது. எனவே இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாமல் பாதுகாப்பதோடு தடா, பொடா சட்டங்களையும் நீக்க வேண்டும். தற்போது மதானியின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என சில சுயநலவாதிகள் கூறினாலும் கடந்த ஒன்பது ஆண்டு களாக அவர் அனுபவித்த கொடுமைக்கு யார் பொறுப்பாவார்.
ரஜினி வழக்கறிஞர்
சென்னை
ஒன்பது வருடங்களாக சிறைக் கொட்டடியில் தத்தளித்த மதானியின் விடுதலை எந்த சந்தோஷத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் மனித உரிமை மதிக்கப்படாமல் அவர் நடத்தப்பட்டிருக்கிறார்.
தலித்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்திய அற்புதமான அரசியல் இயக்கத் தலைவர் அவர். எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் அவரை கைது செய்து அவரது அரசியல் வாழ்க்கையையும், குடும்ப அமைப்பையும் சீர்குலைத்து விட்டனர்.
ஒன்பது ஆண்டுகளாக அவர் அனுபவித்த கொடுமைக்கு கோடிக் கணக்கில் அரசும், நீதித்துறையும் இழப்பீட்டை அவருக்குத் தர வேண்டும்.தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் மக்களுக்கெதிராக ஆதிக்க சக்திகள் செய்த கூட்டுச் சதிதான் இது.
உலகமே பார்த்துக் கொண்டிருந்த போது வெட்ட வெளிச்சத்தில் பாபர் மசூதியை தாக்கிய பயங்கரவாதிகளான அத்வானி, உமாபாரதி ஆகியோரை இன்னமும் கைது செய்யாத, வக்கற்ற காவல்துறையும், அரசு நிர்வாகமும் எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு கட்சியின் தலைவரை கைது செய்து. வைத்திருப்பது, ஆதிக்க சக்திகளின் குரோதப் போக்கையே காட்டுகிறது.
மதானிக்கு எதிராக தமிழக போலீசார் சரியான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று பிஜேபிகாரர்கள் சொல்வது அவர்களது இயலாமையை காட்டுகிறது. ஏனெனில் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் பிஜேபி காரர்களின் இந்த பிதற்றல் நாடகம்.
பேரா. அ.மார்க்ஸ்

மதானியின் இந்த சிறைத் தண்டனை என்பது நீதிமன்றத்தின் அபத்தமான, முறையற்ற தன்மையையே காட்டுகிறது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பெரும்பாலான எழுத்தாளர்கள் இணைந்து அனைவரும் கையொப்பமிட்டு மதானியை ஜாமினில் விடுதலை செய்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம், அது நடைபெற வில்லை. தற்போது மதானியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்படாததால் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக் கிறார். கடந்த ஒன்பது வருடங்களாக சிறையில் மதானி அனுபவித்த கொடுமை களுக்கு எத்தகைய இழப்பீட்டை அரசும், நீதித்துறையும் தரப்போகிறது.
மக்கள் ஆதரவு பெற்ற ஜனநாயக முறையின் மீதும், தேர்தல் அமைப்பின் மீதும் முழு நம்பிக்கை வைத்து 'கேரள மக்கள் ஜனநாயகக் கட்சி' என்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான ஒரு அமைப்வை நடத்தி வந்த ஒரு தலைவரை இதுபோன்ற கொடுமையான முறையில் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்விஷயத்தில் தமிழகத்தை பொறுத்தவரை கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் எந்த விதமான வேறுபாடும் கிடையாது.
மதங்களுக்கிடையே பிளவை உண்டாக்குபவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்றால், முதலில் பிஜேபிக்காரர்களுக்கு தண்டனை அளிக்கட்டும். அதை விட்டு விட்டு இது போன்ற அப்பாவிகளை தண்டிப்பது அபத்தமானது. தற்போது கூட கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் அப்பாவிகளாக இருக்கும் போது, 158 பேரை குற்றவாளிகளாக அறிவித்ததே அரசும், நீதித்துறையும் மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.
புனித பாண்டியன்ஆசிரியர்லிதலித் முரசு

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துன் நாசர் மதானி தற்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிற அதே நேரத்தில், அவர் சிறையிலிருந்து வெளிவந்த முதல் பேட்டியிலேயே தலித் மக்களுக்காகவும், முஸ்லிம் மக்களுக்காகவும் நான் பாடுபடுவேன் என அவர் தெரிவித் திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
ஆனால், எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் அவரை கைது செய்த தமிழக அரசின் மீது வழக்கு தொடுக்க மாட்டேன் என்பது வேதனைக்குரிய விஷயம். அவரைப் போன்ற போராளி அப்படி சொல்லியிருக்க கூடாது. ஏனெனில் அவரைப் போன்றவர் இந்த விஷயத்தில் பின் வாங்கினால் சாதாரண மக்கள் எப்படி அரசுக்கு எதிராக போராட முடியும்.
தற்போது மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக் காக பாடுபடுவேன் என அவர் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. ஏனெனில் இந்தியா முழுவதும் இது போன்ற மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
கேரளத்தின் முதல்வர் அச்சு தானந்தன் உட்பட கேரளத்தின் அனைத்து கட்சிகளும் (ஒரு காலத்தில் கேரளா, பிஜேபி உட்பட) அனைவரும் மதானியின் விடுதலையை ஆதரித்து அறிக்கை விட்டனர். ஆனால் மதானி விடுதலை செய்யப்பட்ட பின் மதானிக்கு எதிராக தமிழக காவல்துறையினர் சரியாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவில்லை என்று பிஜேபியினர் தற்போது சொல்வது மிக வேடிக்கையாக உள்ளது. எனவே, நிமிடத்திற்கு நிமிடம் நிறம் மாறும் பிஜேபியினரை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை

கிருஷ்ணா கமிஷன் அறிக்கை

கிருஷ்ணா கமிஷன் அறிக்கை
குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நடவடிக்கை உறுதி

மகாராஷ்ட்ரா அரசுஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையை செயல்படுத்தக் கோரி நாடேங்கும் அழுத்தங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மகராஷ்ட்ராவின் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டில் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை மகராஷ்ட்ரா மாநில அரசின் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் நடந்தது.
முன்னதாக துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டிலை முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று சந்தித்தது. முன்னனி வழக்கறிஞரும் தேசியவாதக் கட்சியின் முக்கிய பிரமுகருமான மஜீத்மேமன் இக்குழுவிற்கு தலைமை வகித்தார். 1993ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தாமதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினார்கள். முஸ்லிம் குழு சங்கத்துடன் தொடர்ச்சியாக காவல்துறை உயர் அதிகாரிகளுடனான மற்றும் துணை முதலமைச்சரின் கூட்டம் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. உடனடியாக அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளைக் கூட்டி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மஜீத் மேமன் தெரிவித்திருந்தார். மும்பைக் கலவரக் குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்டும் என ஆர்.ஆர்.பாட்டீல் உறுதி அளித்தார்.

Friday, August 3, 2007

உ.பி.யில் ஒரு குஜராத் துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்

உ.பி.யில் ஒரு குஜராத்
துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
சத்தியப்பிரியன்
சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒரு அக்கிரமம் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் புகுந்து பாலியல் வன்முறைகள், வீடுகள் தீ வைப்பு, சூறையாடு தல் என அத்தனைக் கொடுமைகளும் ஒரு கிராமத்தினரின் மீது ஏவப் பட்டன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்தக் கொடுமைகளை பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடிப்பொடிகளும் இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சரஸ்வதி மாவட்டத்தில் தானிதீ கிராமம். இங்கு 50 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பண்டிட் திடுவதியின் 20 வயது மகள் வந்தனா. இவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே காதலித்த முஸ்லிம் வாலிபர் சலீமுடன் ஓடிவிட்டார்.
பிராமணர்களின் ரிமோட் கண்ட்ரோலில் நடப்பதாகக் கூறப்படும் மாயாவதி ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவம் அவர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த ஒரு சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த கிராம முஸ்லிம்கள் அனைவரையும் குற்றவாளிகளாய் ஆளும் வர்க்கத்தினர் சித்தரித்தனர். அதனால் பழிவாங்கும் நடவடிக்கை களைத் தொடங்கினர்.
மாயாவதி அமைச்சரவையில் ஆயுர்வேதத்துறை அமைச்சரான மிஸ்ராவின் சகோதரர் அசோக் மிஸ்ராவின் ரவுடிகள் ஆயிரக்கணக் கானோர் வாகனங்களில் அந்த குட்டிக் கிராமத்தை சூழ்ந்தனர். ஆறு மணி நேரம் அது மோடியின் குஜராத்தாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. சிறுமிகளையும், இளம் பெண்களையும் அடித்து ஆடை களைக் களைந்து அவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் ஏளனமாக வும் சிரித்தனர். அதோடு அவமானத்தோடு ஓடி ஒளிந்த அந்த அபலைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காயினர்.
காலை 10 மணிக்கு வந்த அவர்கள் வெறியாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுச் சென்றனர். தங்களது பெண் வந்தனா வந்து சேரவில்லை என்றால் கிராமத்தையே நிர்மூலமாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர். இவர்க ளோடு சில காவல்துறையினரும் வந்துள் ளனர். 13 முஸ்லிம் இளைஞர்களை இழுத்துச் சென்று காவல்துறையினர் லாக்கப்பில் அடைத்தனர்.
பாலியல் வன்முறைக்கு இலக்காக் கப்பட்ட பெண்களில் இருவர் 50 வயது மேற்பட்டவர்கள்.
காலை 9.30 மணிக்கு ஒருசில காவலர்கள் வந்து நோட்டமிட்டுச் சென்ற பிறகே இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலை திட்டமிட்ட முக்கிய விஷமிகள் அசோக் மிஸ்ரா மற்றும் ஞானஷ்யாம்பதக் என்ற இருவரும் ஆவர். இவர்களது தாக்குதலில் யாருக்கும் தலையில் காயமோ, வெளிக்காயமோ ஏற்படவில்லை. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மிகவும் மோசமாக தாக்கப்பட் டனர். கச்சிதமாக கடுமையான உள்காயங் கள் ஏற்படும் வண்ணம் அவர்களது தாக்குதல் அமைந்திருந்தது. சங்பரிவாரத் தினர் மட்டுமே இவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடூரமான இந்நிகழ்வை அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் மறைத்து விட்டனர். உண்மை அறிந்து அந்தப் பகுதி காங்கிரஸ் தலைவர் முஹம்மது அஸ்லம் ரைனி செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார். அதோடு காவல்துறை அலுவலகத்திற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தார்.
அரசியல் கட்சிகள் வரிசையாக போராட்டத்தை அறிவித்தன. தானிதீனி கிராமத்தின் முஸ்லிம்களில் அதிகம் பேர் இன்னும் மறைந்ததே வாழ்கின் றனர். கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிக்கிறது. மாற்றங்களை ஏற்படுத்து வதாக நினைத்து மாயாவதி சிக்கலில் மாட்டிக்கொண்டார்

ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்

ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்
முஹம்மத் ஹனீஃபுக்கு தீவிரவாத பழி சுமத்தி திருதிருவென விழித்து திக்கு முக்காடி தவித்த ஆஸ்திரேலியாவைப் பற்றி தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது. ஆனால் டாக்டர் ஹனீஃபை விட பல மடங்கு வேதனையையும் துன்பங்களையும் அனுபவித்த இளைஞர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக இரண்டு இந்திய இளைஞர்களை குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை அமெரிக்க அரசு முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
முஹம்மது அய்யூப், ஜாவித் அஹ்மத் இருவரையும் இரட்டைக் கோபுர தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்கள் என பல ஆண்டுகளாக சிறையி லடைத்தது.
கடந்த ஆண்டு இருவரையும் அமெரிக்க அரசு விடுதலை செய்தது. இவர்கள் இருவர் மீதான தீவிரவாத தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்ப தால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
முஹம்மத் ஹனீஃப், அவரது மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நாங்களும் அதைப் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்த வர்கள் என்று ஜாவீத் அஸ்மத்தும் அவரது மனைவி தஸ்லீமும் கூறுகின் றனர்.
முஹம்மத் ஹனீஃப் என்ற கர்நாடக சகோதரருக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்தது தான் அமெரிக்காவில் எனக்கும் நடந்தது என்று குறிப்பிடும் ஜாவித் அஸ்மத், நான் உலக வர்த்தக வளாகத்தை தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவன் என என்னைக் கைது செய்தார்கள். நான் சவூதி அரேபியாவின் பிரஜை என்றார் கள். அதற்கு போலியாக பாஸ்போர்டும், பிறப்புச் சான்றிதழும் புனைந்தார்கள். எனக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்று பொய்யாக ஒரு ஆவணத்தை தயார் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் எனக்கு விமானம் ஓட்டத் தெரியாது. எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் எதையும் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்க முடிய வில்லை. வழக்கை இழுத்தடிக்கும் மிகக் கேவலமான தந்திரத்தை கையாண்டார் கள். இறுதியில் நீதிமன்றத்தால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
ஹனீஃபுக்கு ஆதரவாக இந்திய அரசு களம் இறங்கியது. ஹனீஃப் குறித்த அனைத்து வி'யங்களும் பகிரங்கப் படுத்தன. அதனால் புனையப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகள் மறைந்து உண்மைகள் வெளிவரத் துவங்கின என்று கூறிய ஜாவீத் இதற்கென இந்திய அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
தங்களை சிறையில் தள்ளியதற்கும் கண்ணியக் குறைவை ஏற்படுத்தியதற்கும் இழப்பீடு கோரி அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஜாவீத் அஸ்மத் விரைவில் வெற்றி கிடைக்கும் என்றும் நம்புகிறார்

Web Counter Code