இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, August 3, 2007

உ.பி.யில் ஒரு குஜராத் துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்

உ.பி.யில் ஒரு குஜராத்
துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
சத்தியப்பிரியன்
சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒரு அக்கிரமம் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் புகுந்து பாலியல் வன்முறைகள், வீடுகள் தீ வைப்பு, சூறையாடு தல் என அத்தனைக் கொடுமைகளும் ஒரு கிராமத்தினரின் மீது ஏவப் பட்டன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்தக் கொடுமைகளை பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடிப்பொடிகளும் இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சரஸ்வதி மாவட்டத்தில் தானிதீ கிராமம். இங்கு 50 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பண்டிட் திடுவதியின் 20 வயது மகள் வந்தனா. இவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே காதலித்த முஸ்லிம் வாலிபர் சலீமுடன் ஓடிவிட்டார்.
பிராமணர்களின் ரிமோட் கண்ட்ரோலில் நடப்பதாகக் கூறப்படும் மாயாவதி ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவம் அவர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த ஒரு சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த கிராம முஸ்லிம்கள் அனைவரையும் குற்றவாளிகளாய் ஆளும் வர்க்கத்தினர் சித்தரித்தனர். அதனால் பழிவாங்கும் நடவடிக்கை களைத் தொடங்கினர்.
மாயாவதி அமைச்சரவையில் ஆயுர்வேதத்துறை அமைச்சரான மிஸ்ராவின் சகோதரர் அசோக் மிஸ்ராவின் ரவுடிகள் ஆயிரக்கணக் கானோர் வாகனங்களில் அந்த குட்டிக் கிராமத்தை சூழ்ந்தனர். ஆறு மணி நேரம் அது மோடியின் குஜராத்தாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. சிறுமிகளையும், இளம் பெண்களையும் அடித்து ஆடை களைக் களைந்து அவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் ஏளனமாக வும் சிரித்தனர். அதோடு அவமானத்தோடு ஓடி ஒளிந்த அந்த அபலைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காயினர்.
காலை 10 மணிக்கு வந்த அவர்கள் வெறியாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுச் சென்றனர். தங்களது பெண் வந்தனா வந்து சேரவில்லை என்றால் கிராமத்தையே நிர்மூலமாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர். இவர்க ளோடு சில காவல்துறையினரும் வந்துள் ளனர். 13 முஸ்லிம் இளைஞர்களை இழுத்துச் சென்று காவல்துறையினர் லாக்கப்பில் அடைத்தனர்.
பாலியல் வன்முறைக்கு இலக்காக் கப்பட்ட பெண்களில் இருவர் 50 வயது மேற்பட்டவர்கள்.
காலை 9.30 மணிக்கு ஒருசில காவலர்கள் வந்து நோட்டமிட்டுச் சென்ற பிறகே இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலை திட்டமிட்ட முக்கிய விஷமிகள் அசோக் மிஸ்ரா மற்றும் ஞானஷ்யாம்பதக் என்ற இருவரும் ஆவர். இவர்களது தாக்குதலில் யாருக்கும் தலையில் காயமோ, வெளிக்காயமோ ஏற்படவில்லை. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மிகவும் மோசமாக தாக்கப்பட் டனர். கச்சிதமாக கடுமையான உள்காயங் கள் ஏற்படும் வண்ணம் அவர்களது தாக்குதல் அமைந்திருந்தது. சங்பரிவாரத் தினர் மட்டுமே இவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடூரமான இந்நிகழ்வை அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் மறைத்து விட்டனர். உண்மை அறிந்து அந்தப் பகுதி காங்கிரஸ் தலைவர் முஹம்மது அஸ்லம் ரைனி செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார். அதோடு காவல்துறை அலுவலகத்திற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தார்.
அரசியல் கட்சிகள் வரிசையாக போராட்டத்தை அறிவித்தன. தானிதீனி கிராமத்தின் முஸ்லிம்களில் அதிகம் பேர் இன்னும் மறைந்ததே வாழ்கின் றனர். கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிக்கிறது. மாற்றங்களை ஏற்படுத்து வதாக நினைத்து மாயாவதி சிக்கலில் மாட்டிக்கொண்டார்

No comments:

Web Counter Code