இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, May 26, 2007


காந்தியைக் கொல்ல பிராமணர்கள் சூழ்ச்சி செய்தனர்

காந்தியைக் கொல்ல பிராமணர்கள் சூழ்ச்சி செய்தனர்காந்தியின் கொள்ளுப்பேரன் தகவல்
காந்தியடிகளைப் படுகொலை செய்தவன் நாதுராம் கோட்சே என்ற ஹிந்துத்துவ வெறியன் என்பதும், ஆர்எஸ்எஸ் இயக்கப் பின்னணியை உடைய அந்த ஆசாமி, மகாராஷ்ட் டிரவின் சித்பவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதும் வரலாற்று உண்மை.
காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது மட்டுமே உண்மை என்பதுபோலவும் கொலையாளிகள் குறித்து எந்தவித விரிவான தகவல்களும் விவரிக்கப்படாத நிலையே இன்றுவரை தொடர்ந்து வருகிறது. காந்தியின் படுகொலையில் சங்பரிவார் அமைப்பின் சதியும், பிராமணர்களின் கைவரிசையும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளாய் சரித்திரத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட பின்பும்கூட இன்றுவரை முஸ்லிம்களை குற்றப்பரம்பரை யைப் போல அவர்கள் சித்தரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை தோலு ரித்துக் காட்டும் வகையில் காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உலுக்கும் உண்மைகளை வெளியிட்டார்.
தமது ''கங்ற்'ள் ஃண்ப்ப் ஏஹய்க்ட்ண்'' என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில், ''காந்தியடிகளை கொலை செய்ய நடந்த பல்வேறு சம்பவங்களில் பிராமணர்களின் சதி இருந்துள்ளது'' என்று குறிப்பிட்ட துஷார் காந்தி, ''பிராமண சமூகம் இந்தியாவை ஹிந்துத்துவா நாடாக மாற்ற விரும்புகின்றனர்'' என்றும் கூறினார்.
'காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு அவர் தேசப் பிரிவினைக்கு காரணமாக இருந்தார். பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை காந்திதான் வற்புறுத்தி கொடுக்க வைத்தார்; அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்' என வரலாற்றை திரித்துக்கூறும் சங்பரிவார் இயக்கத்தின் செயலை துஷார் காந்தி வன்மையாகக் கண்டித்தார்.
பிராமண சமூகம் இந்தியாவை ஒரு ஹிந்துத்துவ தேசமாக மாற்றும் முயற்சியிலே காந்தியை கொலை செய்ய நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் அவர்கள் செயல்பட்டனர் என அழுத்தமாக தமது நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்

Web Counter Code