இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, July 18, 2007

கலாம் அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு

கலாம்
அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்த ஓய்வு பெற்ற உடன் அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பணியை துவங்குகிறார். இத்தகவலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார். தான் குடியரசுத் தலைவர் பதவியை விட்டு ஓய்வு பெற்றதும் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

கலாமின் பதவிக்காலம் இம்மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு மறுநாளே அவர் அண்ணா பல்கலைக் கழத்துக்கு வருவதும் கௌரவ பேராசிரியர் பணியில் இணைவதும் சிறப்புக்குரியது. அண்ணா பல்கலைக் கழகக்ததிலிருந்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக தமிழகத்தின் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கலாம் வகுப்பெடுக்க உள்ளதாக அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அண்ணாப் பல்கலைக் கழக துணை வேந்தர் டி. விசுவநானிடம் கலாம் தொலைபேசியில் பேசியுள்ளார். எனினும் தனக்கு வரவேற்பு விழா எதையும் ஏற்பாடு செய்யக் கூடாது என திட்டவட்டமாக கலாம் தெரிவித்து விட்டார்.

இன்றைய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் மாநிலங்களின் தலைநகரங்களில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் 13 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலில் மக்களை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 4,120 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர். நியமன எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை.

எட்டு துறைகளில் 61 திட்டங்களுக்கு தமிழகத்துக்கு 38 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மத்திய அரசு திட்டங்களின் மூலம் ஒதுக்கீடு செய்து உள்ளதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.

திருவான்மியூர், வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதையில் இன்றும் நாளையும் இறுதி கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் ஆகஸ்டுக்குப் பிறகு சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் பறக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு 676 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளர் தேர்வுக்கு 44 ஆயிரத்துக்கு 346 ஆண்களும் 7 ஆயிரத்து 104 பெண்களும் விண்ணப்பம் செய்திருந்தனர். உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டபின் 566 ஆண்களும், 110 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் காவல்துறை விசாரணைக்குப் பிறகு அவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் ராஜேந்திரன் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தினமலர் அந்துமணி ரமேஷ் பெண் செய்தியாளர் உமாவுக்கு செய்த பாலியல் கொடுமைகளுக்கு இந்திய தேசிய மாதர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. தினமலர் நிர்வாகியின் கொடுமைகள் குறித்து அவ்வமைப்பின் மாநிலக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இப்பிரச்சினையில் உமாவுக்கு ஆதரவு வழங்கி போராட்டத்தில் குதிக்க தயாராக இருப்பதாக இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தலைவர் ஆர். சுசீலா மற்றும் மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இடமில்லாமல் ''பிறந்த குழந்தையுடன் தாயும் சேயும்'' தரையில் படுத்து கிடக்கும் நிலை மாற வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசு தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஹனீஃபின் விசாவை ரத்து செய்த ஆஸ்ரேலிய அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள் சங்கம் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்ரேலிய அரசின் முடிவு ஹனீஃபின் உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்று கூறியுள்ள சர்வதேச பொது மன்னிப்பு சபை (ஆம்நெஸ்டி இன்டர் நேசனல்) ஹனீஃபின் விசா ரத்து செய்யப்பட்டதற்கு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது. ஹனீஃப் மீதான வழக்கை வாபஸ் பெற்று அவரை கௌரவத்துடன் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என டாக்டர் ஹனீஃபின் மனைவி பிர்தவ்ஸ் அர்ஷியா கோரிக்கை விடுத்திருக்கிறார்

Web Counter Code