இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 30, 2007

hyderabad bomb blast -fact finding commitee statemment news from aabusalih in tamil


hyderabad bomb blast -fact finding commitee statemment news from aabusalih in tamil

ஹைதராபாத் பயங்கரம்இரத்த தானம் கொடுக்கச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை உண்மை அறியும் குழுவின் 'திடுக்' அறிக்கை!
லிஅபுசாலிஹ்ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு குறித்தும், அப்பாவி மக்களின் மீது நிகழ்ந்த காவல்துறை யினரின் துப்பாக்கிச்சூடு குறித்தும் உண்மை அறியும் குழு ஆய்வு நடத்தியது.
உண்மை அறியும் குழு மே 20ஆம் தேதி ஹைதராபாத்தில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. அசம்பாவி தத்தை கண்ணால் பார்த்த சாட்சிகளிடம், நடந்தவைகள் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஒவைஸி மருத்துவ மனையில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் பாதிக்கப்பட்டோரை சந்தித்தனர்.
பள்ளி மீதான குண்டுவெடிப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது என்றதுடன், அதன் பிறகு நடைபெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டையும் வன்மையாகக் கண்டித்தது உண்மை அறியும் குழு. இரண்டுமே சமமான அளவு கண்டிக் கப்பட வேண்டிய குற்றங்கள் என்றும் அது மேலும் தெரிவித்தது.
மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கும், அவர்களது நம்பிக்கை சிதைப்பதற்கும் நிகழ்த்தப்பட்டது என்றும், அதன்பிறகு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதான தாக்குதலிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதம் வெளிப்பட் டுள்ளது. சிறிய ஆர்ப்பாட்டத் தைக் கூட நசுக்கும் காவல் துறையினரின் முதிர்ச்சியற்ற போக்கும் தெரிய வந்தது எனவும் உண்மை அறியும் குழு கருத்து தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு, பள்ளி வாசலிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நிகழ்ந்துள்ளது. பள்ளிவாசலிலிருந்து வெளி யேறுபவர்களை நோக்கி காவல்துறை யினரின் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒர் இளைஞர் அவரது வீட்டுக்கு அருகி லேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மற்றொரு 17 வயது முஸ்லிம் இளைஞர், படுகாயம் அடைந்தவர் களுக்கு ரத்த தானம் செய்வதற்காக அஸ்ரா மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது காவல்துறை துப்பாக்கி குண்டு அவரை சாய்த்தது. துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்து தரையில் விழுந்து கிடந்த ஒரு மனிதரைக் காப்பாற்ற தரையில் குனிந்து அவரைத் தூக்க முயன்ற இளைஞரின் உயிரையும் காவல்துறையின் குண்டு குடித்தது.
காவல்துறையினர் பாரபட்சமான முறையில் நடந்து கொண்டனர். காவல் துறையினர் தங்களது செய்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித் துள்ளனர்.
ஒரு பெட்ரோல் பங்க்கையும், ஒரு மதுக்கடையையும் ஒரு கும்பல் தாக்க வந்ததாகவும், அதனைத் தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறினர். உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை.
பெட்ரோல் பங்க்கின் மூன்று வழிகளும் ஏற்கனவே அடைக்கப் பட்டிருந்தது. ஒரேயொரு வழி மட்டும் தகுந்த கட்டுக்காவலுடன் திறந்திருந்தது. மதுக்கடையைத் தாக்க வந்திருந்தார்கள் என்று கூறி துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரைக் கொன்று விட்டார்கள். 25 பேரை படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். சொத்துக்களைப் பாதுகாக்கும் அக்கறை இருந்த அளவுக்கு மனித உயிர்களின் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.
காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சாலையிலிருந்து பள்ளிவாசல் திசையை நோக்கி நடத்தப்பட்டது கடும் கண்டனத் திற்குரியது. காவல்துறையினரின் நடவடிக்கை மிகவும் பாரபட்சமான முறையில் இருந்ததாக நேரில் பார்த்த சாட்சியான முஹம்மத் கவுஸ் உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடன் அந்த இடத்தைவிட்டு ஓடிய அச்சமடைந்த மக்களை மேலும் பயமுறுத்தும் நோக்கத்துடன் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஒருமணி நேரத்திற்குள் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொழுகைக்குச் சென்றிருந்த தங்களது உறவினர்களின் நிலை என்ன ஆனதோ என்ற பதைபதைப்புடன் வந்திருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கட்டுப்பாடு இழந்து பதறி சிதறி ஓடிவரும்போது, எவ்வித முன்னெச் சரிக்கையும் விடுக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கூட்டத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர ரப்பர் குண்டுகளை பயன் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் உண்மையான குண்டுகளே பாதிக்கப்பட்ட வர்களின் உடலைத் துளைத் துள்ளது தெரிய வந்துள்ளது.
எந்த உயரதிகாரியின் அனுமதியின் பேரில் இவ்வாறு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எத்தனை பேர் என்ற உண்மையையும், துப்பாக்கிச் சூட்டில் எவ்வளவு பேர் பலியானவர்கள் என்ற உண்மை கணக் கையும் இதுவரை அரசு வெளியிட வில்லை. குண்டுவெடிப்பில் பலியானவர்களை விட காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்தான் அதிகம் என்ற உண்மை விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளதாக உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பின் பின்னணி யில் இந்தியாவிற்கு வெளியே இருந்து இயக்கப்படும் இரண்டு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முக்கிய சதிகாரன் என முஸ்லிம் பெயரைக் கொண்ட ஒருவரையும் கூறுகிறது. ஆனால் குண்டுவெடிப்பில் காயடைந்தவர்களின் உடல்களிலிருந்து நகத்துகள், கதவு கைப்பிடி, மற்றும் பிரிஃப்கேஸின் கைப்பிடியின் துண்டு போன்றவை எடுக்கப்பட்டதாக அஸ்ரா மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இக்குண்டு வெடிப்பில் பெட்ரோல் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து ஆர்.டி.எக்ஸ். டி.என்.டி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதும் இரண்டு இஸ்லாமிய அமைப்பு கள் சதியில் சம்பந்தப்பட்டிருக் கின்றன என்ற தகவலிலும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை. இது பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சி என்றும் உண்மை அறியும் குழு தெரிவித்திருக்கிறது.
குண்டுவெடிப்பும், அதன்பிறகு நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் முஸ்லிம் களை அச்சுறுத்துவதற்காகவே நடத்தப் பட்டன என உண்மை அறியும் குழு கருதுகிறது. இரண்டு சம்பவங்களுக்கும் மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரித்தது. இதை ஆந்திர காவல்துறை பொருட்படுத்தாதது ஏன்? வழிப்பாட்டுத் தலங்கள் மீதான பாதுகாப்பை பலப்படுத்தாது ஏன்? என்றும் உண்மை அறியும் குழு வினா விடுத்தது.
வழக்கமாக ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜிதில் பாதுகாப்பு பரிசோதனை செய்யப்படும். ஆனால் அன்று பாதுகாப்பு பரிசோதனை நடத்ததப்படவேயில்லை என உண்மை அறியும் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. மாநில காவல்துறைத் தலைவர் (டிஜிபி) இடைநீக்கம் செய்யப் படவேண்டும் என்றும் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உண்மை அறியும் குழு அறிவித்துள்ளது.இந்த உண்மை அறியும் குழுவில்1) ஆந்திர மாநில குடியரசுக் கட்சித் தலைவர் போஜா தாரகம்.2) சிவில் உரிமை கண்காணிப்புக் குழுவின் செயலாளர் லத்திஃப் முஹம்மத் கான்.3) வரவரராவ்4) ஏ.பி.சி.எல்.ஸி.தலைவர் சுரேஷ் குமார்5) பிரபாகர் (பி.கே.எம்) 6) அபினோவா கே.என்.பி.எஸ்7) ராதா ஏ.பி.சி.எம்8) முஜாஹித் ஹாஷ்மி ஏ.எம்.ஏ 9) லியோ ஜஸ்டின்10) கிரியாதுவோ பிராஜபாதி ஆகிய சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்றன

Web Counter Code