இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, November 16, 2007

நிவாரண முகாம்களில் தவிக்கும் முஸ்லிம்களை சோனியா காந்தி ஏன் பார்க்கவில்லை..

வெடிக்கும் வேதனைக் குரல்கள்

தெஹல்கா பதிவுகளின் மூலம் வெளி வந்த உண்மைகள் உலகை உலுக்கின. முஸ்லிம்கள் இதயங்களை எரிஈட்டி கொண்டு கிழித்ததைப் போல வேதனை யில் வெம்பினர். பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் ஓரணியில் திரண்டு எதிர்த்தன. மோடி அரசுக்கு எதிராகவும், காவிக் கொலைக் கும்பலின் வெறிச் செயலுக்கு எதிராகவும் முஸ்லிம் சமூகம் பிரளயமாய் பொங்கியது.

1986லில் உச்ச நீதிமன்ற நீதிபதி இஸ்லா மிய ஷரிஅத்துக்கு எதிராக ஷாபானு வழக்கு விவகாரத்தில் கருத்துக்கள் கூறியதால் முஸ்லிம் அமைப்புகள் ஒன்று திரண்டதற்கு போராட்டங்களை நடத்தின.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 21ஆம் நூற்றாண்டின் கொடூர இனப்படு கொலையாளனான மோடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

ஜமிய்யத்தே உலமா இ ஹிந்த், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்து உள்ளிட்ட இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தன. முஸ்லிம் அமைப்புகள் அல்லாது பிற அரசியல் அமைப்புகளும் இனப்படு கொலையாளர்களைக் கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டன.

மதவாதத்தை எதிர்ப்பதில் சமரசம் செய்து கொள்ளாத இடது சாரிகளும், 'மோடி, அத்வானிக் கும்பலை கைது செய்ய வேண்டும்' என தெஹல்கா பதிவுகள் வெளியானவுடன் பிரதமரை சந்தித்து தனது குமுறலைக் கொட்டிய லாலுவின் கட்சி யான ராஷ்ட்ரிய ஜனதாதளமே நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி இனப்படுகொலை யாளன் மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களால் தினம்தோறும் திணறத் தொடங்கியது.

பயங்கரவாத எதிர்ப்பு இளைஞர் படை என்ற முஸ்லிம் இளைஞர் அமைப்பின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்திலும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்றனர். பாஜக, வி.எச்.பி மற்றும் பஜ்ரங்தள் உள்ளிட்ட இயக்கங்களை தடைசெய்ய வேண்டும் என்றும், இனப்படுகொலையாளன் மோடிக்கு மரணதண்டனை விதித்து சாகும் வரை தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவர் ஷகீல் ஷைஃபி பேசினார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் நடை பெற்ற ராஷ்டிரிய ஜனதாதளத்தின் கண்டனக் கூட்டத்தில் மோடிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தின் அனைத்து நகரங்களிலும் குஜராத் இனப்படுகொலை குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ராம்பூர், சஹரான்பூர், கைரானா, முஷாஃபர் நகர் போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்திலும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெஹல்கா பதிவுகள் அம்பலப்படுத்திய மறுநாளே ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்தன. செப்டம்பர் 25 வியாழன் அன்று ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கிலத் தொலைக்காட்சியிலும், ஆஜ்தக் ஹிந்தி தொலைக்காட்சியிலும் வெளியான மறுநாள் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப்பிறகு திரண்ட மக்கள் தங்கள் குமுறலை வெளியிட்டனர்.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடை பெறப் போகிறது. இந்திய அரசியல் சாசனத்தை மீறிய இனப்படுகொலை யாளன் மோடி மீது இதுவரை எவ்வித சட்டப்பூர்வ நடவடிக்கை யையும் மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்யாதது ஏன்? என ஜும்ஆ உரைக்குப் பின் ஹைதராபாத் பள்ளிவாசல் வளாகத்தில் திரண்ட மக்கள் காரசாரமாக தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
''குஜராத் இனப்படு கொலையாளர்கள் குறித்து ஏற்கனவே உலகம் அறிந்துகொண்டது'' தெஹல்கா காட்சிப் பதிவுகளின் மூலம் உலகம் சங்பரிவாரின் பாசிஷ முகத்தை மீண்டும் ஒருமுறை மக்கள் அறிந்து கொண்டார்கள். அவ்வளவு தான் என ஃபதேபூர் ஷாஹி இமாம் டாக்டர் முஃப்தி முகர்ரம் தெரிவித்தார்.

'குஜராத் கோரப் படுகொலைகளின் மூலம் மோடியின் கோர முகம் எப்போதோ வெளிப்பட்டு விட்டது. தற்போது மோடி அரசைக் கலைப்பது, மோடி உள்ளிட்ட இனப்படுகொலையாளர்களை கடுமையாக தண்டிப்பது என காங்கிரஸுக்குத் தான் பரீட்சை நடக்கப்போகிறது. காங்கிரஸ் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது? என்பது தான் இப்போது நம்முன் உள்ள கேள்வி'' என டெல்லி பிரதேச சட்ட மன்றத்தின் துணை சபாநாயகர் சோஹப் இக்பால் கர்ஜித்தார். மோடியையும் அவரது கும்பலையும் தேர்தலில் போட்டியிட தடைசெய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

மோடி அரசு பொய்யான வாக்கு மூலங்களைக் கொடுத்து உச்ச நீதிமன்றத் தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது என்பதும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக்கீறி சிசுவை வெளியே எடுத்து இருவரையும் கொன்றதையும், உச்சநீதி மன்றத்தில் மறுத்த கயமைத் தனத்தையும், பின்னர் அந்த கிரிமினல்கள் மறுத்து உண்மைகளைப் பேசியதை அடிப்படை யாக வைத்து உச்சநீதிமன்றம் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மாநிலத்தின் ஜனதாதள எஸ் கட்சியினர் தலைவர் ஹாஜி இக்ராம் ஹஸன் தெரிவித்துள்ளார்.

'இனப்படுகொலையாளன் மோடி மீதும் அவரது கும்பல் மீதும் நடவடிக்கை இனியும் எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்களின் விஷயத்தில் காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும்' என ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் என்ற உருது செய்தி ஏடு குறிப்பிடுகிறது.

'முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதை விட, முஸ்லிம் களுக்கு எதிரான நிலையை எடுத்தவர்கள் ஆதரவாளர்களைப் போல நடிப்பவர்கள் அனைவருக்கும் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்' என அன்ஸர் ஷா காஷ்மீரி எனும் மார்க்க அறிஞர் தெரிவிக்கிறார்.

''மோடி இழைத்த கொடுமைகள் ஹிட்லர் செய்த குற்றங்களை விட அதிகம்'' என்றார் அன்ஸர் ஷா. மோடியை எதிர்க்கும் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? தேர்தலுக்கு முன்பாகவே இன வெறி மோடியையும் அவரது கும்பலையும் கை விலங்கிட்டு கைது செய்து இழுத்து வரவேண்டும்'' என ஸயீத் ஹமீத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு மத்திய அரசு 'இல்லை' என்பதையே பதிலாக்கினால் 'தெஹல்கா' பதிவுகளால் ஒரு காசுக்கும் பயன் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் மிதவாத ஹிந்துத்துவாவை ஆதரிப்பதாக ஷகீல் சம்ஸி குற்றம் சாட்டினார். மோடிக்கு எதிராக எதையும் செய்ய காங்கிரஸ் நினைக்கவில்லை. தெஹல்கா பதிவுகளின் மூலமாக உண்மை கள் வெளிவந்து விட்டன. இறைவனுக்கு நன்றி என்ற ஷகீல் ஷம்ஸி, சோனியா காந்தி தனது குஜராத் பயணத்தின் போது கொலை வெறியர்களால் கொடூரமாகக் கொன்று எரிக்கப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவியார் ஜாஹியா ஜாஃப்ரியை சந்திப்பதற்கு திட்டமிட்டிருந் தார். பின்னர் அந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. நிவாரண முகாம்களில் கிடந்து உழலும் அப்பாவி முஸ்லிம்களைப் பார்க்க நேரம் ஒதுக்க வில்லையே ஏன்? என்றும் வினாவிடுக் கிறார். இதிலிருந்தே இவர்கள் மோடியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்பது தெரிந்து விட்டது என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் இனவெறிக் கும்பலுக்கு எதிராக திரளத் தொடங்கி விட்டனர். மத்திய அரசும் மதசார்பற்ற கட்சிகள் என்று (தங்களைத் தாங்களே தமாஷாக சொல்லிக் கொள்ளும்) கட்சிகளும் என்ன செய்யப் போகின்றன?

Web Counter Code