இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, October 31, 2007

சில காங்கிரஸ்காரர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்

சில காங்கிரஸ்காரர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்வி.எச்.பி. தலைவர் அனில் படேல்காங்கிரஸ்காரர்கள் சிலர் எங்க ளோடு சேர்ந்து கொண்டனர். மூத்த காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர் என்று அனில் படேல் கூறியுள்ளார். இக்காட்சி பதிவான தினம் ஜூன் 13, 2007
அனில் பட்டேல்: சபர்கந்தாவில் தான் அதிகப்படியான எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டன. 40லிருந்து 60 கொலை காரர்கள் இங்கு உண்டு. அவர்களுக்கு வேண்டியவைகளை நான் தான் செய்தேன். சபர்கந்தாவில் உள்ள முஸ்லிம் கிராமத்தை முழுவதும் கொளுத்தினோம். ஒருவன் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு மிகப் பெரிய பதிலடி எங்கள் பகுதியிலிருந்து தான் கிடைத்தது.
தெஹல்கா: இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் மட்டும் தான் ஈடுபட்டார் களா?அனில் பட்டேல்: எல்லா ஹிந்து இயக்கங்களும் ஏன் காங்கிரஸ்காரர்கள் கூட ஊருக்கு நான்கைந்து பேர் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிபாய் படேல் முஸ்லிம்களை காப்பாற்ற முயன்றார். இந்த முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? என அவர்களைக் குறித்து விளக்கிய பிறகு அவர்களை விட்டுவிட்டு ஹரிபாய் படேல் சென்று விட்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மீண்டும் மீண்டும் டி.வி.யில் காட்டப் பட்டது. டான்சுராவில் உள்ள பள்ளி வாசல் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஒரே பள்ளிவாசல் அதுதான்.
தெஹல்கா: அங்கிருந்த மவ்லவி உயிருடன் இல்லை. அவர் எரிக்கப் பட்டாரா?பட்டேல்: ஓடும்போதுதான் ஒருவர் அவர் தலையை வெட்டிவிட்டார்.
தெஹல்கா: வாளால்?
பட்டேல்: இல்லை. கோடரியால்.
தெஹல்கா: இது (கோத்ரா) உங்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினை இல்லையா?
படேல்: நான் 500 முஸ்லிம் களையாவது கொல்லாமல் நம் வேலை முடியாது என்று முடிவெடுத்தேன். உயிருடன் அவர்களை கொளுத்த முடிவு செய்தேன்.தெஹல்கா: குழந்தை களைக் கூடவா?
பட்டேல்: கதவை வெளிப் புறமாக பூட்டிவிட்டு தீவைத்து ஒவ்வொரு முழு குடும்பத்தையும் கொன்றேன். ஒருவர் கூட தப்பித்திருக்க முடியாது.
தெஹல்கா: டான்சுராவில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளனவா?
பட்டேல்: 126 முஸ்லிம் வீடுகள் அழிக்கப்பட்டன. மொத்த மாவட்டத்தி லேயே அவர்களுடைய எல்லாவற்றை யும் அழித்தோம். ஒரேயொரு கிராமத் தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கள் இன்னும் 75 சதவீதம் பேர் திரும்பவே முடியவில்லை.தெஹல்கா: முழு மாவட்டமும் உங்கள் பொறுப்புதானே?
பட்டேல்: நான்கு தாலுகாக்கள் தான் எனது பொறுப்பு.
தெஹல்கா: எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பட்டேல்: 30க்கும் மேல் பயாதில் மட்டும் 60 டிரைவர்கள் இன்னும் காணவில்லை.தெஹல்கா: ட்ரக் டிரைவர்கள் யார்?
பட்டேல்: ஆம். மும்பையைச் சேர்ந்தவர்கள்.
தெஹல்கா: பிரவிண் தொகாடியா உங்களோடு பேசினாரா?
பட்டேல்: பேசினார். கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்
சிலர் எங்க ளோடு சேர்ந்து கொண்டனர். மூத்த காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர் என்று அனில் படேல் கூறியுள்ளார். இக்காட்சி பதிவான தினம் ஜூன் 13, 2007
அனில் பட்டேல்: சபர்கந்தாவில் தான் அதிகப்படியான எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டன. 40லிருந்து 60 கொலை காரர்கள் இங்கு உண்டு. அவர்களுக்கு வேண்டியவைகளை நான் தான் செய்தேன். சபர்கந்தாவில் உள்ள முஸ்லிம் கிராமத்தை முழுவதும் கொளுத்தினோம். ஒருவன் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு மிகப் பெரிய பதிலடி எங்கள் பகுதியிலிருந்து தான் கிடைத்தது.
தெஹல்கா: இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் மட்டும் தான் ஈடுபட்டார் களா?அனில் பட்டேல்: எல்லா ஹிந்து இயக்கங்களும் ஏன் காங்கிரஸ்காரர்கள் கூட ஊருக்கு நான்கைந்து பேர் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிபாய் படேல் முஸ்லிம்களை காப்பாற்ற முயன்றார். இந்த முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? என அவர்களைக் குறித்து விளக்கிய பிறகு அவர்களை விட்டுவிட்டு ஹரிபாய் படேல் சென்று விட்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மீண்டும் மீண்டும் டி.வி.யில் காட்டப் பட்டது. டான்சுராவில் உள்ள பள்ளி வாசல் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஒரே பள்ளிவாசல் அதுதான்.
தெஹல்கா: அங்கிருந்த மவ்லவி உயிருடன் இல்லை. அவர் எரிக்கப் பட்டாரா?பட்டேல்: ஓடும்போதுதான் ஒருவர் அவர் தலையை வெட்டிவிட்டார்.
தெஹல்கா: வாளால்?
பட்டேல்: இல்லை. கோடரியால்.
தெஹல்கா: இது (கோத்ரா) உங்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினை இல்லையா?
படேல்: நான் 500 முஸ்லிம் களையாவது கொல்லாமல் நம் வேலை முடியாது என்று முடிவெடுத்தேன். உயிருடன் அவர்களை கொளுத்த முடிவு செய்தேன்.தெஹல்கா: குழந்தை களைக் கூடவா?
பட்டேல்: கதவை வெளிப் புறமாக பூட்டிவிட்டு தீவைத்து ஒவ்வொரு முழு குடும்பத்தையும் கொன்றேன். ஒருவர் கூட தப்பித்திருக்க முடியாது.
தெஹல்கா: டான்சுராவில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளனவா?
பட்டேல்: 126 முஸ்லிம் வீடுகள் அழிக்கப்பட்டன. மொத்த மாவட்டத்தி லேயே அவர்களுடைய எல்லாவற்றை யும் அழித்தோம். ஒரேயொரு கிராமத் தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கள் இன்னும் 75 சதவீதம் பேர் திரும்பவே முடியவில்லை.தெஹல்கா: முழு மாவட்டமும் உங்கள் பொறுப்புதானே?
பட்டேல்: நான்கு தாலுகாக்கள் தான் எனது பொறுப்பு.
தெஹல்கா: எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பட்டேல்: 30க்கும் மேல் பயாதில் மட்டும் 60 டிரைவர்கள் இன்னும் காணவில்லை.தெஹல்கா: ட்ரக் டிரைவர்கள் யார்?
பட்டேல்: ஆம். மும்பையைச் சேர்ந்தவர்கள்.
தெஹல்கா: பிரவிண் தொகாடியா உங்களோடு பேசினாரா?
பட்டேல்: பேசினார். கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்

சதியின் கால அட்டவணை

சதியின் கால அட்டவணை2002ல் கோத்ராவிற்கு நரேந்திர மோடி வந்து பார்வையிட்டபின் சாதாரண விபத்து சதியாக பரப்பப்படுகிறது.அஹ்மதாபாத், வடோதரா மற்றும் சபர்கந்தா போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம் பகுதிகளை சங்பரிவாரங்கள் சூழ்ந்தனர். நரேந்திர மோடியின் முதல் சமிக்ஞைகளுக்குப் பிறகு திட்டங்கள் தயாராயின. கலவரங்கள் விளைவிக்கப் போகும் குற்றவாளிகளை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து முன்னணி வழக்கறிஞர்களும், மூத்த காவல்துறை அதிகாரிகளும் ரகசியமாகக் கூடிப் பேசினர். காவிப் பிரமுகர்கள் இவ்வாறு கூறினர். 'மோடி' உங்களுக்கு ஆதரவாக பின்னணியில் இருப்பார் என தைரியம் கூறினார்.இவையெல்லாம் தானாகவே ஏற்பட்டதல்ல; இது திட்டமிடப்பட்டது. இது மிகப்பெரிய இனப்படுகொலை.

9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை

9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்தேன்...லி பாபு பஜ்ரங்கிதெஹல்கா: பாட்டியா சம்பவத்தில் மோடி உங்களுக்கு ஆதரவாக இருந் தாரா?
பஜ்ரங்கி: ஆமாம். எங்களுக்கு ஆதரவாக பக்கபலமாக இருந்தார். எல்லாமே மோடி கண்ட்ரோலியே இருந்தது. எங்களுக்கு உரிமைகள் தந்தார்.காவல்துறையினரிடம் வித்தியாசமாக கட்டளையை பிறப்பித்திருக்க வேண்டும். அதனால் அவர்களின் (சங்பரிவாரின்) முழுக் கட்டுப்பாட்டில் குஜராத் வந்தது.
தெஹல்கா: அவர்களே கட்டுப் பாட்டை வைத்துக் கொண்டார்களா?
பஜ்ரங்கி: அவர்களே நகரம் முழுவதையும், குஜராத் முழுவதையும் இரண்டு நாள் கட்டுப்பாட்டில் வைத்திருந் தார்கள். இரண்டு நாள் தான் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடிந்தது. அதற்கிடையில் டெல்லியிலிருந்து அழுத்தங்கள் வர ஆரம்பித்தன. சோனியாலிவோனியா விடமிருந்து புகார்கள் வர ஆரம்பித்து விட்டன.
இந்த வெறியன் தான் கவுசர் பானு என்ற 9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்துவிட்டு தாயையும், சேயையும் கொளுத்திய கொடுமையை பெருமையாகக் கூறிய அவன் முஸ்லிம்களைக் கொன்றதனால் நான் ராணா பிரதாப் சிங்கைப் போல உணர்ந்தேன் என்றான்.
காவல்துறையினர் எங்களுக்கு தோட்டாக்கள் உள்பட எல்லாம் வழங்கினார்கள் என்று கூறிய பாபு பஜ்ரங்கி போன்ற பயங்கரவாதிகள் மற்றும் காக்கி உடையில் நடமாடிய காவி பயங்கரவாதிகளின் கோரச் செயல்களைக் கண்டு உலகம் வேதனையில் ஆழ்ந்தது. இந்த மாமிச வெறியர்களின் ரத்த வேட்டையைக் குறித்தும், முகமூடி கிழித்தெறியப்பட்ட கயவர்களின் கயமைத் தனம் குறித்தும் முழுவதும் விவரிக்கப் புகுந்தால் இந்த நாடும், இந்த ஏடும் தாங்காது.
தெஹல்கா அம்பலப்படுத்திய இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படு கொலையில் கயவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை தமுமுக இணைய தளத்தில் வீடியோவாக காண்க

Wednesday, October 24, 2007

இந்தியாவிற்கு அதிக வருவாயைத் தருவது யார்?

இந்தியாவிற்கு அதிக வருவாயைத் தருவது யார்?
அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டுவதில் சீனா, மெக்சிகோ ஆகிய முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளி, நம்நாடு முதன்மை பெற்றுள்ளது.
உலக வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் இதைத் தெரிவிக்கிறது.வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மூலம், இந்தியாவுக்கு ஓர் ஆண்டுக்குக்கு 25.7 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் ஆகும். உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவுக்கு 22.5 பில்லியன் டாலரும், மெக்சிகோவுக்கு 24.7 பில்லியன் டாலரும் அந்நிய செலாவணியாகக் கிடைக்கின்றன.
இந்தியாவிற்கு வெளிநாட்டில் பணிபுரிபவர் களின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி மேற்கண்ட முன்னணி நாடுகளையும் முந்தி விட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் ஈட்டுகின்ற வருவாய் நாட்டின் நட்டுமொத்த ராணுவ செலவினைக்கு நிகரானதாகும்.
தேசிய நிதிநிலை அறிக்கையில், கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையை விட, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியா ஈட்டும் தொகை 5 மடங்கு அதிகமாகும்.
வருமான வரி, மற்றும் சொத்துவரி மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருவாயை விடவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகமாகும்.வெளிநாடுகள் நம் நாட்டில் செய்துள்ள நேரடி முதலீடுகளை விடவும் இத்தொகை மூன்று மடங்கு அதிகம் என்பது வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய செய்தியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 விழுக்காட்டிற்கு இது சமமானதாகும்.
இந்தியாவிற்குக் கிடைக்கும் அந்நிய செலா வணியை அளிப்பதில் கேரளமும், தமிழகமும் முன்னிலை வகிக்கின்றன. கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன. திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கல்வி மையம் நடத்திய ஆய்வில் கேரளத்தில் 25 விழுக்காடு ஊர்களில், குடும்பத்திற்கு குறைந்த பட்சம் நால்வர் வெளிநாட்டில் பணிபுரிவது தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலிருந்து சுமார் 10 மில்லியன் பேரும், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவிலிருந்து சுமார் 11.5 மில்லியன் பேரும் வெளிநாட்டில் பணிபுரிவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அந்நியச் செலாவணியின் பெரும் பகுதி நிதியை அனுப்புபவர்கள், மருத்துவ, பொறி யியல், கணிணித்துறை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அல்ல, சாதாரணக் கூலி வேலைக்காகச் சென்றவர்கள் என்பது ஆச்சர்யமான உண்மையாகும்.மேற்கண்ட தகவல்கள் உலக வங்கியால் வெளியிட்டப்பட்டவை ஆகும். சொந்தங் களைப் பிரிந்து, பிறந்த மண்ணைத் துறந்து, வெளிநாடுகளில் கடும் உடலுழைப்பை மேற் கொள்பவர்கள் தான் இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டையே ஈடு செய்கின்றனர். இவற்றில் மிகப்பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. இத்தகைய மிகப்பெரிய உதவியை சொந்த நாட்டிற்குச் செய்து கொண்டிருப்பவர்களின் நிலை இங்கு எப்படி உள்ளது?
வருவாய் தேடி, பாலைவனம் நோக்கி சிறகடித்த, விசாப் பறவைகளின் நிலை, பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. சிறப்புச் சலுகைகள் தரப்பட வேண்டிய அவர்களுக்கு, உரிய உரிமைகள் கூட மறுக்கப்படுவதை அறிந்தால் மனம் கசக்கும்.
வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நாடுதோறும் சொந்த பந்தங்களைப் பிரிந்து தூரதேசங்களில் உழைப்பவர்களின் குடும்பங் களில் பிரச்சினை என்றால், அவர்களை அலைக்கழிப்பது, பணம் பிடுங்குவது, போன்ற மனசாட்சியற்ற செயல்களும் இங்கு அரங்கேறுவது நம் கவனத்திற்கு வருகின்றன. நாட்டிற்கு வருமானம் ஈட்டிக் கொடுப்பவர் களின் பிள்ளைகளுக்கு கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க மற்றவர்களை விட அதிகக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது.
இந்தக் குறைபாடுகள் களையப்படுவது தான் நாட்டின் நன்றியுணர்ச்சிக்கு அடையாளமாக இருக்கும்

நவீன நீரோ மன்னன் மோடி பேட்டியிலிருந்து ஓட்டம் (வீடியோ)

நவீன நீரோ மன்னன் மோடி பேட்டியிலிருந்து ஓட்டம்
ஹபீபா பாலன்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சி.என்.என்லிஐ.பி.என் தொலைக்காட்சியில் பிரபல இதழியலாளர் கரண்தாப்பரிடம் பேட்டியளிக்க வந்தபோது கோத்ரா முஸ்லிம்கள் கோரக் கொலைகள் பற்றியும், அப்பாவி முஸ்லிம்கள், பெண்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரங்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஓடினார்.
நவீன நீரோ மன்னன் என்று உங்களை உச்சநீதிமன்றம் கூறியிருக் கிறதே போன்ற பல்வேறு கேள்வி கணைகளுக்கு மோடி திக்கினார் திணறினார். மூன்று நிமிடத்துக்குள் பேட்டியை முடித்துக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார் மோடி பேட்டி முடித்து விட்டது. மோடி ராஜ்யம் இந்த சட்டமன்றத் தேர்தலுடன் முடிந்து விடுமா?
மோடியின் பேட்டி...
கரண்தாப்பர்: நீங்கள் இனப்படுகொலைகளை நிகழ்த்தியதற்காக வெறுக்கப்படுகிறீர்கள். முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்கள் இதை ஒரு இமேஜ் பிரச்சினையாக படவில்லையா?நரேந்திர மோடி: இரண்டு அல்லது மூன்று நபர்கள் இந்த பாணியில் பேசிக்கொள்கிறார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்.
கரண்தாப்பர்: இது உங்களுக்கு எதிரான இரண்டு அல்லது மூன்று நபர்களின் சதி என்று சொல்கிறீர்களா?
நரேந்திர மோடி: நான் அதைப் பற்றி பேசவில்லை?
கரண்தாப்பர்: ஆனால் வெறும் இரண்டு அல்லது மூன்று பேர் பற்றிய விஷயம் என்று கூறுகிறீர் களா?
நரேந்திர மோடி: இது எனக்கு வந்த தகவல். இது மக்களின் குரல்.
கரண்தாப்பர்: 2003 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் 'குஜராத் அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறியது. பெண்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி செப்டம்பர் 2004ல் 'நவீன நீரோ மன்னன் போல நீங்கள் நடந்து கொண்டதாக கூறினார். பிரச்சினை உங்களிடம் தான் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
நரேந்திர மோடி: கரண், உங்களிடம் நான் சிறிய வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பு விஷயத்திற்குப் போகவேண்டாம். அதில் என்னைப் பற்றி என்ன எழுதியிருந்தாலும் எனக்கு சந்தோஷமே.
கரண்தாப்பர்: அதில் உங்களைப் பற்றி நல்லவை எதுவும் எழுதப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் கருத்து இது.
நரேந்திர மோடி: இதுதான் தீர்ப்பு என்றால் அதற்கு பதில் கூறுவதில் எனக்கு சந்தோஷமே.கரண்தாப்பர்: தலைமை நீதிபதியின் விமரிசனம் ஒரு 'பெரிய விஷயமே இல்லை என்று சொல்கிறீர்களா?நரேந்திர மோடி: தயவு செய்து நீதிமன்ற விஷயத்தை விட்டு விடுங்கள். அந்த வாசகங்களையும், உதாரணங்களை யும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
கரண்தாப்பர்: ஒ.கே. இது தலைமை நீதிபதியின் வெளிப்படையான கருத்து இல்லையா? 4,600 வழக்குகளில் 2,100 வழக்குகளை மறுவிசாரணை செய்ய உச்சநீதிமன்றம் கூறுகிறது. குஜராத்தில் நீதி கிடைக்காது என்றே மக்கள் நம்புகிறார்கள்.
நரேந்திர மோடி: .....?
கரண்தாப்பர்: இந்தியாடுடே உங்களை சிறந்த முதல்வர் என்று கூறினாலும் ராஜிவ்காந்தி அறக்கட்டளை குஜராத் சிறந்த நிர்வாகத்துடன் செயல்படுகிறது என்று கூறினாலும் வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்றே கூறுகிறார்கள். ஏன் இதை உங்களது இமேஜ் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை.நரேந்திர மோடி: நான் குஜராத்துக் காகவே என் வாழ்வை அர்ப்பணித்து விட்டேன் (அடங்கப்பா) போதும் ப்ளீஷ் கரண்.கரண்தாப்பர்: ஆனால் மோடி நான் ஒன்றும் தவறாக பேசி விடவில்லை. உங்கள் இமைஜை சரி செய்ய முயலாதது ஏன் என்பதுதான் என் கேள்வி?நரேந்திர மோடி: அதற்கு இது நேரமல்ல என்று மழுப்பிய மோடி தண்ணீர் வேண்டும் என்று கேட்டு மிடறு விழுங்கினார்.
குஜராத் இனப்படுகொலைகள் குறித்த கேள்வியால் திணறிய மோடி, உச்சநீதி மன்றத்தின் கருத்து குறித்த கேள்விக்கு ஆத்திரம் அடைந்தார். ஆத்திரமும் அவமானமும் ஒருசேர மோடி கோழை போல ஓடினார்

Wednesday, October 10, 2007

ramadan news from abusalih in tamil

உலகமெங்கும் புனித ரமலான்
ஹபீபா பாலன்
எல்லாம் வல்ல இறைவனிடம் தன்னை முழுமையாக சமர்ப்பித்து, பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் வணங்கி தனது வருமானத்தில் இல்லாதோருக்கு ஈந்து மகிழும் உயர்ந்த செயலை உலக முஸ்லிம்களின் உயர் கடமையாக்கிய உன்னத ரமலான் இதோ நம்மை விட்டு விடை பெறுகின்றது.
இப்பரந்த பூமிப்பந்தில் கிழக்கிலிருந்து மேற்கிலும், தென்முனையிலிருந்து வடபுலத்திலும், சமவெளிகளிலும், மலைப்பிரதேசங்களிலும், பீட பூமிகளிலும், நெய்தலிலும் பாலையிலும் புனித ரமலான் நோன்பு நெக்குருகி மெய்சிலிர்த்து நோற்கப்பட்டது.. உலகத்தில் உள்ள 140 கோடி முஸ்லிம்களும் புனித ரமலானை போற்றதற்கரிய பேறாக எண்ணி பூரித்துப் போயினர்.
ரமலான், ஈகையின் பெருமையை நமக்கு வலியுறுத்துகிறது. முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை உறுதிப் படுத்துகிறது. இறைவன் தங்களுக்கு வழங்கிய அனைத்திலும் இருந்து மனித சமூகத்திற்கு வழங்க இறைவன் கட்டளையிட்ட மாதமே ரமலான். ரமலான் முஸ்லிம்களுக்கும் பிற சகோதர சமுதாயத்தினருக்கும் இடையிலான உறவின் பிணைப்பை உறுதிப்படுத்துகிறது. அதோடு சோர்வில்லாத இறைவணக்கத்தின் மூலம் படைத்தவனுக்கும் மானிடர் களுக்கும் இடையிலான உறவும் நெருக்கம் அடைகிறது.
காஷ்மீரில்...
''இந்த ஆண்டிலிருந்தாவது தங்களுக்கு அமைதிவாழ்வு வேண்டும் என காஷ்மீர் மக்கள் புனித ரமலான் மாதத்தில் உள்ளம் உருக பிரார்த்தித்தனர். இது சமாதானத்தின் மாதம் எல்லாம் வல்ல கருணையான அல்லாஹ் எங்களுக்கும் சமாதானத்தை அருளுவானாக.
ஸ்ரீநகர் பள்ளிவாசல் இமாம் அலி முஹம்மத் கூடியிருந்த மக்களிடையே உருக்கத்துடன் பிரார்த்தித்தார். அவர்களது வேதனையை அதிகப்படுத்தும் வண்ணம் ஒரு அராஜக நிகழ்வு இந்த ரமலான் மாதத்தில் நிகழ்ந்தது. தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் பெண்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு படையினர் மூர்க்கத்தனமாக தாக்கினர். 55 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் என்ற படைப்பிரிவினர் தான் இந்த கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது தாக்குதலுக் கான ஒரே ஆதாரம் இவர்கள் மீது காஷ்மீர் மாநில காவல் துறையினரால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. இத்தகவலை குப்வாரா பகுதி காவல்துறை கண்காணிப் பாளர் அப்துல் கையூம் உறுதிசெய்தார். ஹாஜரா பேகம், சமீனா அக்தர் உள்பட பல பெண்களும், படுகாயம் அடைந்தவர் களாக நாசிர் அஹ்மத் பட், நாசிர்தர், முக்தர் அஹ்மத் மற்றும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ருகையா பேகம் பேசும் நிலையில் இல்லை. இவருக்கு தலையில் பலமாக காயம் பட்டிருக்கிறது. எனது மகள் என்ன பாவம் செய்தாள்? ஏன் அவளை காட்டுத்தனமாக தாக்கினார்கள் என வெடிக்கிறார் அவரது தந்தை. ருகையாவின் சகோதரர் தாளாத ஆத்திரத்துடன் குமுறினார். இது இரண்டாவது தடவை, இவர்களது அக்கிரமத்துக்கு, அதிகாலை 5:30 மணிக்கு குல்போரா கிராமவாசிகள் அனைவரையும் அருகில் உள்ள பள்ளிக் கூட மைதானத்தில் கூடுமாறு கட்டளையிட்டுள் ளனர்.. 55வது ராஷ்ட்ரிய ரைபிள் படைப்பிரிவின் முன்னிலையில், இந்த பாதுகாப்புப் படையினரின் இன்ஃபார்மர்கள் என்று கூறப்படும் ஆள்காட்டிகள் முன்னிலையில் கிராமவாசிகள் நிறுத்தப் பட்டனர். அன்று மாலை வரை நிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டனர். மறுநாள் அதிகாலை அவர்களது துன்பம் தொடர்ந்தது. பாதுகாப்புப்படையினர் முன் நிறுத்தப்பட்ட அக்தர் என்ற இளைஞரை இழுத்துச் சென்றனர். அதோடு அந்த மைதானத்தில் இருந்த காஷ்மீர் மாநில காவல்துறையினர் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று கட்டளையிடப்பட்டனர். அக்தர், ருகையா உள்ளிட்ட அப்பாவிகள் இழுத்து செல்லப்பட்ட போது பெண்கள் பகுதியிலிருந்து அழுகை பீறிட்டது. ஆடவர்கள் ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்தனர். அக்தர் தற்போது கோமாவில், ருகையா வாய் பேச முடியாதவராகி விட்டார். பாதகம் இழைத்த பாதுகாப்பு படையினர் மீது காஷ்மீர் மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கம் போல ராணுவ உயர் அதிகாரிகள் எடுத்த எடுப்பிலேயே இதை மறுக்கத் தொடங்கியுள்ளனர். ரமலானின் முதல் நாள் நடைபெற்ற இச்சம்பவம் காஷ்மீர் முழுவதும் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஸ்ரீநகரில் முக்கிய பள்ளிவாசல் இமாம் அமைதிக்காக பிரார்த்தனை செய்வதைத்தான் நம்மால் அறிய முடிகிறது. குல்ப்போரா கிராமமக்களின் கதி என்ன என்பது யாருக்குத் தெரியும்.
இந்தோனேஷியாவில்...
இந்தோனேஷியாவில் 'பெங்களு பகுதி மக்கள் இந்த ஆண்டு முதல் நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற முடிய வில்லையே என்ற ஏக்கத்தில் இருக்க வேண்டியதாயிற்று. ரமலானுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக அந்தப் பிராந்தி யத்தில் நிலநடுக்கம் 8.4 என்ற அளவில் ஏற்பட்டது. 10 பேரை பலிவாங்கிய இந்த நிலநடுக்கம் அங்குள்ள கட்டடங்களை ஒருக்களித்து படுக்க வைத்தது. வியப்பூட்டும் விதமாக நிலநடுக்கம் நிகழ்ந்த பகுதிக்கு அருகிலேயே இருந்த கோடா அகுனுங் பகுதியில் அதன் சிறிய சீற்றத்தைக் கூட காண முடியவில்லை. இது நிச்சயம் இறை அருள்தான் என சிலிர்க்கின்றனர். அப்பகுதி மக்கள் கடலுக்கடியில் உருவான சுனாமி நிலநடுக்கமாக மாறி ரமலானுக்கு முதல் நாள் கோடா அகுங் மக்களின் வீடுகளைப் புரட்டிப் போட்டாலும் அவர்கள் கலங்காது வெட்டவெளியில் வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி முதல் நோன்பை துவக்கினர். அடுத்தடுத்த நாட்களில் மண்ணெண்ணெய், ஸ்டவ்களை ஏற்பாடு செய்து ரெடிமேட் நூடில்ஸ்களை உணவாக உட்கொண்டு நோன்பை கடைப்பிடிக்கத் தொடங்கினர். இறைவனுக்கு நன்றியுடைய மக்கள் என்றால் இவர்கள் அல்லவா என சிலிர்க்கிறார். ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர்.
பெல்ஜியம், பிரான்ஸ்...
இஸ்லாமியக் கொள்கைகள் வேகமாகப் பரவிவரும் ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்புணர்வும் பரவி வருகிறது. அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் நிகழ்ந்து ஆறு ஆண்டு ஆனதை நினைவூட்டி பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் ஆயிரக்கணக்கானோர் முஸ்லிம் விரோத ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஏறக்குறைய செப்டம்பர் மாதம் முழுவதும் இத்தகைய வெறியூட்டும் பேரணிகள் ஐரோப்பா முழுவதும் நடத்தப்பட்டது. இஸ்லாமிய மயமாக்கல் தடுத்து நிறுத்தப் படவேண்டும் என அவர்கள் கத்தித்தீர்த்தனர். ரமலான் மாதம் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது அவர்களது வெறியுணர்வின் உச்சம் என பெல்ஜியம் இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் தலைவர் உமர் ப்ராதி தெரிவித்தார். இவற்றை ரமலான் மாதத்தில் நடத்தி முஸ்லிம்களின் உணர்வை காயப்படுத்து வதே அவர்களது நோக்கம் என்றும் உமர் தெரிவித்தார். ஒரு கோடி மக்கள் வாழும் பெல்ஜியத்தில் நான்கரை லட்சம் பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் அச்ச சூழ்நிலையை உருவாக்க சிலர் முனைந்து வருகிறார்கள். சமீபத்தில் பிரான்ஸின் பொதுத் தகவல்துறை ஒரு திடுக்கிடும் செய்தியைக் கூறியுள்ளது. பிரான்ஸில் மதரஸாக்கள் கடுமையான கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தி ருக்கிறது.. அதாவது இன்றைய தலைமுறையினர் அரபி மொழியை விருப்பப்பாடமாக படிப்பதால் பிரான்ஸ் உளவுத் துறை எரிச்சலடைகிறதாம். இதே நேரத்தில் பள்ளிவாசல்கள் நிறைந்து நடைபாதைகளிலும் தெரு வோரங் களிலும் முஸ்லிம் இளைஞர்கள் தராவீஹ் என்ற ரமலான் தொழுகையை பேணுவதும் தொடர்கிறது.
பிரிட்டன்
பிரிட்டன் முஸ்லிம்கள் ரமலானை ஒரு சமாதான மீட்பு பிரச்சார சாதனமாக பயன்படுத்தினார்கள். அக்டோபர் ஒன்றாம் தேதி தேசிய அளவிலான ஒரு கருத்தாய்வை முஸ்லிம்கள் ஏற்படுத்தினர். பரஸ்பர சந்தேகங்கள் களைந்து உலகிற்கு இஸ்லாம் வழங்கிய நன்கொடைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இஸ்லாம் குறித்தும் பிரிட்டிஷ் முஸ்லிம் கள் குறித்தும் அச்ச உண்வை களைய வேண்டும் 'இஸ்லாம்லிஇன்லிபீஸ்' ஒருங்கிணைப்பாளர் இஃப்ஹாப் ஷாஹீன் தெரிவித்தார். பாதாள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அனைத்திலும் முஸ்லிமாக இருப்பதில் பெருமையடைகிறோம் என்ற பதாகைகள் பிரிட்டன் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டன. இது பிரிட்டிஷ் சமூகத்தில் மத மாச்சரியங்களை அகற்றும் என பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பி னரும் அரசுக் கொறடாவுமான சாதிக்கான் தெரிவித்தார்.
ரஷ்யாவில்
ரஷ்யாவில் ரமலானின் சிறப்பம்சமாக ஹலால் உணவகங்கள் திறக்கப்பட்டன. மாஸ்கோவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஹலால் உணவகம் அமைக்கப்பட்டதாக மாஸ்கோ நகர சமய விவகாரத்துறை தலைவர் இகோர் எலிஃபிரின் கோ தெரிவித்தார். ஹலால் உணவகங்கள் பள்ளிவாசல் வளாகங் களிலே அமைக்கப்பட்டு வருகின்றன வாம். இதில் முஸ்லிம் அல்லாதவர் களையும் ஹலால் உணவின் நேர்த்தியும் சுவையும் ஈர்த்து வருகிறதாம்.
வெள்ளை மாளிகையில் இஃப்தார்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் முக்கியப்பிரமுகர்களும் அமெரிக்காவின் முஸ்லிம் பிரமுகர்களும், முஸ்லிம் தூதுவர்களும் கலந்து கொண்ட ரமலான் இஃப்தார் விருந்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேசினார்.
நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தூய்மை உணர்வில் பங்கேற்கிறோம். 90 சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர். இஸ்லாத்தையும் அதன் செழுமிய பண்பாட்டை யும் கொண்டாட வேண்டிய முக்கிய தருணம் இது என்றார் அமெரிக்க அதிபர் புஷ்.
இஸ்லாம் வன்முறைக்கு எதிரானது. நாம் தீவிரவாதத் தையும் இஸ்லாத்தையும் வேறுபடுத்தியே பார்க்கிறோம். முஸ்லிம்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பதில் நாம் பின் வாங்குவதில்லை. போஸ்னியாவிலும், கொசாவாவிலும் குவைத்திலும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே நாம் இருந்தொம் இங்குள்ள முஸ்லிம்கள் அமெரிக்கர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க ராணுவ தலைமை யகமான பெண்டகனில் முஸ்லிம் ராணுவ அதிகாரிகள் நூறு பேரும் இப்ஃதார் நிகழ்வில் அவர்களது குடும்பத்தினருடன் முதன் முறையாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோமாலியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளிலும் ரமலான் தியாக உணர்வுடன் நெறியுடன் பேணப்பட்டது.
உலகின் 140 கோடி முஸ்லிம்களின் இதயங்களிலும், இமைகளிலும் நெகிழ்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி, எல்லாம் வல்ல இறைவனின் நற்கூலிக்காக அனைத்து இதயங்களும் காத்திருக் கின்றன.

Web Counter Code