இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, February 21, 2008

உதயமானது கொசோவா
ஐரோப்பியாவில் மற்றொரு இஸ்லாமிய தேசம்!

அபூசாலிஹ்



கொசோவாவின் வரலாற்றில் இது ஒரு பொன்னாள். கொசோவா சுதந்திர நாடாக பிப்ரவரி 17 அன்று பிரகடனம் செய்யப்பட்டது.

ஐரோப்பாவில் மற்றுமொரு முஸ்லிம் தேசம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இனவெறி செர்பியர்களால் கொசோவா மக்கள் கொடூரமாக நசுக்கப்பட்டனர். செர்பியர் களின் இனசுத்திகரிப்பு கொள்கையால் ஏராளமான கொசோவா மக்கள் கருவறுக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த வேதனைகளையும் மறக்க மாட்டோம், கொசோவாவில் வாழும் 10 சதவீத சிறுபான்மை செர்பியர்களையும் பழிவாங்க மாட்டோம், செர்பிய சமூகத் தினர் உரிய கண்ணியத்துடன் வாழ அனுமதிப்போம் என கொசோவாவின் பிரதமர் ஹாசிம் தாய்க் தெரிவித்தார்.

கொசோவா மக்களில் 99 சதவீதம் அல்பேனிய முஸ்லிம்கள். கொசோவா வின் மக்கள் தொகை 20 லட்சமாகும். செர்பியாவை ஆண்ட இனவெறி அதிபர் சுலோபோதன் மிலோசெவிச் வீழ்ந்த பிறகு 1999 முதல் செர்பிய பிராந்திய பகுதிகளில் நேட்டோ படைகள் முகா மிட்டு வந்தன. கொசோவா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து செர்பியாவில் மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரம் மூண்டுள்ளது. இதனால் அங்கு முகாமிட்டுள்ள நேட்டோ படைகள் நிம்மதி இழந்தன. செர்பியர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெறும் ஆறாவது தேசமாக கொசோவா விளங்குகிறது. சுலோவேனியா, குரோ ஷியா, மாசிடோனியா, மான்டிநீக்ரோ மற்றும் போஸ்னியா என அனைத்தும் செர்பிய ஆதிக்கத்திலிருந்து முன்னரே விடுதலைப் பெற்றுவிட்டன.
இவை முன்னர் செர்பியாவின் மாகாணங்களாக இணைக்கப்பட்டிருந்தன. செர்பியர்களின் கொடுங்கோன்மையால் போஸ்னிய முஸ்லிம்கள் சொல்லொண்ணா துயரங் களுக்கு ஆளாகினர். போஸ்னிய முஸ்லிம்களின் நிலைகண்டு உலகமே கண்ணீர் வடித்தது. 1995ல் போஸ்னியா, தன்னுரிமைப் பெற்றது. தற்போது கொசோவாவும் விடுதலைப் பெற்று விட்டது. மக்கள் வானவேடிக்கை களையும் பட்டாசுகளையும் வெடித்த தோடு தங்கள் வாகனங்களின் ஒலிப்பான் களை இடைவிடாது இயக்கக் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொசோவாவின் விடுதலையை எதிர்த்து செர்பியாவும், ரஷ்யாவும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. கொசோவா விடுதலைக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பையே தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கொசோவா வின் உதயம் ரஷ்யாவினால் அடக்கப் பட்டு வரும் செசன்யா விலும் விடுதலை வேட் கையைத் தூண்டிவிடும் என்பதே ரஷ்யாவின் அச்சம். அதனால் ரஷ்யா, கொசோவா விடுதலையை எதிர்க்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொசோவா விடுதலையை வரவேற்றிருக்கின்றன.

நேற்று போஸ்னியா, இன்று கொசோவா. நாளை செச்சன்யா! (இன்ஷா அல்லாஹ்)

இஸ்லாமிய உலகத்தின் ஆதரவு அவசியம்!

இஸ்லாமிய உலகத்தின் முழுமை யான ஆதரவு எங்களது புத்தம் புதிய சுதந்திர நாடான கொசோவாவுக்குத் தேவை என்றும், முஸ்லிம் உலகம் எங்கள் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கொசோவாவின் தலைமை இமாம் சப்ரி பஜ்கோரா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சின்னஞ்சிறிய நாடான கொசோவா வின் தொழில் முன்னேற்றத்திற்கு முஸ்லிம் நாடுகள் தங்கள் முதலீடு களின் மூலம் உதவிகள் புரிய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் இளைஞர்கள் படித்து முடித்து வேலை தேடி தவிக்கும் நிலை ஏற்படு கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். கொசோவாவின் சாலைகள், ரயில் பாதைகள் 1998லி99ல் நிகழ்ந்த இன சுத்திகரிப்பு போரில் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கொசோவா பெண்கள் செர்பிய ராணுவ வெறிநாய்களால் மானபங்கப்படுத்தப் பட்டனர். ஆயிரக்கணக்கான குழந்தை கள் தங்கள் பெற்றோரை இழந்து வாழ் கின்றனர்.

புதிய சுதந்திர நாடு கொசோவா இஸ்லாமிய உலகின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஆக்கிரமிப்பினால் வீழ்த்தப்பட்ட முஸ்லிம் தேசங்களான ஈராக், ஆப்கா னிஸ்தான் என பார்த்து வேதனையுற்ற முஸ்லிம் சமூகத்திற்கு கொசோவாவின் உதயம் ஒரு புன்னகையை அரும்ப வைத்திருக்கிறது

Web Counter Code