இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, August 31, 2007

ஹைதராபாத் குண்டுவெடிப்பு
சூழ்ச்சியின் பின்னணி


ஹைதராபாத் நகரில் மக்கள் அதிகம் கூடும் லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் என்ற உணவகத்திலும் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி களில் இருந்து தடயங்களை சேகரித்த போது நியோஜெல்லி90 என்ற அமோனியம் நைட்ரோ ரசாயனம் கலந்த வெடிகுண்டு மருந்து பயன்படுத்தப்பட்டிருப் பதாக காவல்துறை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் அந்நிய நாட்டு தீவிரவாத சக்திகளின் கைவரிசை இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப் படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அறிவித்திருக்கிறார். ''மீண்டும் பொடா சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்'' என குண்டு வெடிப்பு சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த அத்வானி வழக்கம்போல தெரிவித்திருக் கிறார்.
இந்த குண்டுவெடிப்பில் முஹம்மது அலி என்ற 6 வயது சிறுவன், அமீர் என்ற 8 வயது சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 11 முஸ்லிம்களும் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா வின் அஹமது நகர் மாவட்டத் தில் அமிருத் வாகினி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் ஏழு மாணவர் களும் இச்சமயத்தில் கொல்லப் பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் ரஹீமுன்னிஸா பேகம் (48), முஹம்மது வாஹித் அலி (21), அஹ்யா அப்துல் காதர் (17), அக்ரமுல்லாஹ்கான் (22), அஹ்மது முஹினுத்தீன் (45), முஹம்மது சலீம் (47), ஃபரீதா நாஸ் (35), முஹம்மது அலி (6), அமீர் (8), இப்ராஹிம்கான் (43), மற்றும் இர்ஷாத் அஹ்மத் (19) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பமே கூண்டோடு பலியான பரிதாபச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோகுல் சாட் பண்டார் என்ற துரித உணவகத்தில் முஹம்மது சலீமின் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் பலியாகி விட்டனர். ஹுமாயுன் நகர் என்ற பகுதியில் கோல்கொண்டா அடுக்குமாடி குடியிருப்பில் சலீமின் குடும்பம் வசித்து வந்துள்ளது.
சிதறிய சலீம் குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்து கோல் கொண்டா குடியிருப்புவாசிகள் கதறியது நெஞ்சைப் பிழியும் காட்சியாக இருந்தது.''ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டதே'' என்று ஒரு பெண் கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கதறினார்.
குண்டுவெடிப்பு குறித்த செய்தி கிடைத்ததும் சலீமின் சகோதரர் சமீர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். செல்பேசி அழைப்புக்கு பதில் வராததால் ஒவ்வொரு மருத்துவ மனையாகச் சென்று பார்த்திருக் கிறார். இறுதியில் உஸ்மானியா மருத்துவமனையில் அந்தக் குடும்பமே உடல் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.''இந்த படுபாதகச் செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை இழுத்து வந்து பொது இடத்தில் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும்'' என பலியானவர் களின் உறவினர்கள் குமுறலுடன் கூறினர்.
''பயங்கரவாதிகள், மனித நேயத்திற்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள்; இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என ஆவேசமாகக் குறிப்பிட்டார் அஸதுல்லாஹ் கான். இவர் இந்த குண்டுவெடிப் பில் தனது ஒரே மகனான அக்ரமுல்லாகானை பறிகொடுத் தவர். அம்பர்பேட் மையவாடியில் தனது ஒரே மகனை அடக்கம் செய்துவிட்டு அவர் பயங்கரவாதி களுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காட்சி கூடியிருந்தவர் களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
''பயங்கரவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் ஹிந்துக்கள். முஸ்லிம் கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது ''என்கிறார் ஃபர்ஹா ஃபரூக்கி என்ற இளம்பெண் அதிர்ச்சி விலகாமல்.
இது மிகவும் கோழைத் தனமான செயல். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசாரணைகள் வெளிப்படையாகவும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என தமுமுக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்காக ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் நகரம் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு நடுநிலையாளர்கள் சில திடுக் கிடும் காரணங்களைக் கூறுகிறார் கள்.
நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆந்திர மாநிலப் பகுதியை சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கும் சதிகளுக்கான காரணங்கள் பற்றி கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறார்கள்.
1. ஹைதராபாத் அதிநவீன தொழில்நுட்ப நகராக விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. இது நம்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்காத சக்திகளின் கண்களை உறுத்துகிறது.
2. ஹைதராபாத் நகரம் முஸ்லிம் களின் பாரம்பரிய பெருமைமிக்க நகராகத் திகழ்கிறது.
3. தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸின் கோட்டையாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. காங்கிரசுக்கு அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கும் மாநிலமாக இருப்ப தோடு ஹிந்துத்துவ சக்திகள் சற்றே துளிர்விடக் கூட வாய்ப்பில்லாத பூமியாகவும் ஆந்திரம் விளங்குகிறது.
4. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்க ளாலும் விரும்பப்படும் தலைவராக ஆந்திர முதல மைச்சர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி விளங்கு கிறார். குறிப்பாக சமூகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் முஸ்லிம்களுக்காக, அவர்களது நிலையை மேம்படுத்த இடஒதுக் கீட்டுக்கு வழிசெய்தார்.
அதற்காக தடங்கல் ஏற்படுத்திய தடைகளை யெல்லாம் உடைத்து முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங் கிட மும்முரம் காட்டினார்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆந்திர அரசுக்கு இடைவிடாத தலைவலி கொடுத்து அரசியல் அரங்கில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளூர் பயங்கரவாதிகளும், வெளிநாட்டு பயங்கரவாதிகளும் கைகோர்த்திருக்கக் கூடும் என நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆந்திர காவல் துறையில் சில கறுப்பாடுகள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் விதமாக, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது, கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழைப் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்களை கவனத்தில் கொண்டு அனைத்துவித நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில் குண்டுவைத்த வர்களுக்கு உதவியவர் என கோழிக்கறி கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். மீண்டும் ஒரு காமெடிக் காட்சியை அரங்கேற்ற வேண்டாம் என காவல்துறையை நாட்டு மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள்.
இதற்கிடையில் மீண்டும் பொடா வேண்டும் என்ற கோரிக்கை காவி முகாமிலிருந்து எழுப்பப்படுகிறது. 'அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அறுபத் தெட்டு அரிவாளாம்' என்ற பழமொழியை அவர்களின் கூற்று நினைவூட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு உச்சக்கட்ட ஆபத்து இவர்களது ஆட்சியில் தான் ஏற்பட்டது என்பதை நாடு மறக்கவில்லை. இவர்கள் குட்டையைக் குழப்பாமல் விலகி இருப்பதே உத்தமம் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்க முயலும் பயங்கர வாதிகளின் படுபாதகச் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெங்களூரு அறிவியல் கழக துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்களை வளைத்து விசாரித்ததோடு சரி. ஓராண்டுக்கு மேல் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறே, மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருந்தால் இத்தகைய செயல்கள் தொடராது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆந்திர அரசும், மத்திய அரசும் இணைந்து சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்

Web Counter Code