இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, July 5, 2007

இந்திய வரலாற்றிலும் பண்பாட்டிலும் முஸ்லிம்களின் சேவை

இந்திய வரலாற்றிலும் பண்பாட்டிலும் முஸ்லிம்களின் சேவை நீதிபதி சச்சார் பெருமிதம்
இந்தியாவின் நெடிய வரலாற்றிலும், பண்பாட்டிலும், கலாச்சாரச் செழுமையிலும் முஸ்லிம்களின் பங்கு குறித்து பெருமை கொள்வதாக நீதிபதி ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக் கிறார். கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற சமூக ஒற்றுமை குறித்த கருத்தரங்கில் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்தியா, ஹிந்துக்களுக்கு ஏகபோக உரிமை அல்ல என்று தெரிவித்த சச்சார், எந்த இந்தியக் குடிமகனையும் அவனது தேசப்பற்று குறித்து வினா எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என்றார். முஸ்லிம்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் பாகிஸ்தான் அனுதாபிகள் என்று மதவாத சக்திகள் தொடர்ந்து ஒரே பொய்யைக் கூறி வருகின்றனர் என்றார்.முஸ்லிம்கள் (மைனாரிட்டியாக) சிறுபான்மையினராக உள்ளனர் என்பதற்காக குறைவான உரிமைகளையே அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று ராஜீந்தர் சச்சார் தெரிவித்தார். அதோடு இதுகுறித்து எவராவது கேள்வி எழுப்பினாலோ, அல்லது கேலி செய்தாலோ அது இந்திய அரசியல் சாசனத்தை அவமதிப்பது ஆகும்.முன்னணிப் பத்திரிகையாளர் நுபுர்பாசு பேசும்போது, இந்திய ஊடகங்கள் முரட்டு விலங்குகளைப் போல மாறிவிட்டதாகவும், பிரச்சினைகளை உருவாக்குபவைகளாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.கர்நாடக மாநிலம் காவிமயமாக மாறிவிட்டதாக கவலை தெரிவித்த மூத்த எழுத்தாளர் பிரபுல் பித்வாய் மதக் கலவரங்களால் கடந்த 10 வருடங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவித்தார். இந்த எண்ணிக்கை இந்தியாவில் பயங்கரவாதிகளால் மக்கள் கொல்லப்படுவதை விட பன்மடங்கு அதிகம் என்றும் அவர் கூறினார்.குஜராத் முதல்வர் மோடி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைக்குக் காரணமாக இருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் 'அவலமாக' குஜராத் காட்சியளிக்கிறது என்றும் கூறியிருக்கிறார்

காஷ்மீர்:கற்பழிப்பு முயற்சியில் இறங்கிய ராணுவத்தினர்

காஷ்மீர்:கற்பழிப்பு முயற்சியில் இறங்கிய ராணுவத்தினர்
நையப் புடைத்த பொதுமக்கள்
காஷ்மீர் கன்னிப் பெண் ஒருவரை கற்பழிக்க முயன்ற ராணுவத்தினர் இருவர் கையும் களவுமாகப் பிடிபட்டனர். பிடிபட்ட அக்கயவர்கள் இருவரையும் கிராமப் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர். ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் லி 51 என்ற ராணுவ உளவுப் பிரிவின் தல்ஜித்சிங் மற்றும் ஜோகிந்தர்சிங் என்ற இரு ராணுவ அதிகாரிகளும் பட்டி குனான் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் ரஃபீக் கோஜ்ரி என்பவரின் 17 வயது மகள் ஜரீனாவை கற்பழிக்க முயன்றபோது அந்த இளம்பெண் அலறியதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காமவெறியர்களைப் பாய்ந்துப் பிடித்தனர். அதோடு அந்தக் காமவெறி பிடித்த இருவரின் தலைக்கும் மொட்டையடித்து ஆடைகள் களைந்தும், பெண் மானத்தை சீர்குலைக்க முனைந்த இழிசெயலைக் கண்டித்தும் கிராம மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.



அபலைப் பெண் கூக்குரல் எழுப்பியபோது வராத காவல்துறையினர் ராணுவத்தைச் சேர்ந்த இருவர் பொதுமக்களிடம் சிக்கி உதைபடும்போது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். தடியடி நடத்தினர். இதில் 30 பேர் காயமடைந்தனர். இத்தனையும் செய்த பிறகே காமவெறி பிடித்த இரு ராணுவத்தினரையும் காவல்துறையினர் மீட்டனர்.

தற்போது அந்த இருவரும் காவல்துறை யினரின் விசாரணை வளையத்தில் உள்ளனர். இருவர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டுள்ளது.

இவர்கள் பொதுமக்களிடம் மாட்டி உதைபடும்போது, ராணுவத்தினர் மீதான கற்பழிப்பு முயற்சி குற்றச்சாட்டினை உடனடியாக ஸ்ரீநகரில் பொதுத் தலைமை ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.ஆர்.ஷேகான் மறுத்தார். இரண்டு ராணுவ வீரர்களும் தேடுதல் வேட்டைக்குத்தான் சென்றனர் என மறுத்தது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் ஆயிற்று.

காஷ்மீரில் 1989லிருந்து இதுவரை 42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர் குறிப்பிடுகிறது. இதுவரை காஷ்மீரில் 60 ஆயிரம் பேருக்கு மேல் காணாமல் போயிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய ராணுவம் மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டும் சேர்ந்துகொள்ள, நாட்டின் மானம் காஷ்மீரில் பறப்பதாக உண்மை தேசப் பற்றாளர்கள் வேதனை அடைந்துள்ளன

Web Counter Code