இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, July 5, 2007

இந்திய வரலாற்றிலும் பண்பாட்டிலும் முஸ்லிம்களின் சேவை

இந்திய வரலாற்றிலும் பண்பாட்டிலும் முஸ்லிம்களின் சேவை நீதிபதி சச்சார் பெருமிதம்
இந்தியாவின் நெடிய வரலாற்றிலும், பண்பாட்டிலும், கலாச்சாரச் செழுமையிலும் முஸ்லிம்களின் பங்கு குறித்து பெருமை கொள்வதாக நீதிபதி ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக் கிறார். கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற சமூக ஒற்றுமை குறித்த கருத்தரங்கில் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்தியா, ஹிந்துக்களுக்கு ஏகபோக உரிமை அல்ல என்று தெரிவித்த சச்சார், எந்த இந்தியக் குடிமகனையும் அவனது தேசப்பற்று குறித்து வினா எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என்றார். முஸ்லிம்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் பாகிஸ்தான் அனுதாபிகள் என்று மதவாத சக்திகள் தொடர்ந்து ஒரே பொய்யைக் கூறி வருகின்றனர் என்றார்.முஸ்லிம்கள் (மைனாரிட்டியாக) சிறுபான்மையினராக உள்ளனர் என்பதற்காக குறைவான உரிமைகளையே அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று ராஜீந்தர் சச்சார் தெரிவித்தார். அதோடு இதுகுறித்து எவராவது கேள்வி எழுப்பினாலோ, அல்லது கேலி செய்தாலோ அது இந்திய அரசியல் சாசனத்தை அவமதிப்பது ஆகும்.முன்னணிப் பத்திரிகையாளர் நுபுர்பாசு பேசும்போது, இந்திய ஊடகங்கள் முரட்டு விலங்குகளைப் போல மாறிவிட்டதாகவும், பிரச்சினைகளை உருவாக்குபவைகளாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.கர்நாடக மாநிலம் காவிமயமாக மாறிவிட்டதாக கவலை தெரிவித்த மூத்த எழுத்தாளர் பிரபுல் பித்வாய் மதக் கலவரங்களால் கடந்த 10 வருடங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவித்தார். இந்த எண்ணிக்கை இந்தியாவில் பயங்கரவாதிகளால் மக்கள் கொல்லப்படுவதை விட பன்மடங்கு அதிகம் என்றும் அவர் கூறினார்.குஜராத் முதல்வர் மோடி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைக்குக் காரணமாக இருந்தார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் 'அவலமாக' குஜராத் காட்சியளிக்கிறது என்றும் கூறியிருக்கிறார்

No comments:

Web Counter Code