இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, March 15, 2008

செப்டம்பர் 11: நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!


பொய் வழக்கிலிருந்து 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உலக வர்த்தக மைய கட்டடங்கள் மீதும் தலைநகர் வாஷிங்ட னில் உள்ள அமெரிக்க ராணுத் தலைமை யகமான பெண்டகனிலும் விமானங்கள் மூலம் பயங்கரத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டன. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.

இந்நிலையில் உலக வர்த்தக மையத்தி லும் பெண்டகனிலும் விமானங்களை மோதி வெடிக்கச் செய்த விமானிகளுக்கு பயிற்சி அளித்ததாக லத்தீஃப் ரயீஸி என்ற இளம் விமானி மீது குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது.

அவர் மீது பிரிட்டன் நீதிமன்றத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் லத்தீஃப் ரயீஸியின் மீதான குற்றச்சாட்டு கள் பொய்யானவை, புனையப்பட்டவை எனக் கூறி பிரிட்டன் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. ஏழாண்டுகளாக தன்னுடைய வாழ்க் கையைப் பாழ்படுத்தி விட்டதால், பிரிட்டிஷ் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கேட்க வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் லத்தீப் ரயீஸி குரல் எழுப்பி வருகிறார்.

ரயீஸியின் வாழ்வில் இழந்துவிட்ட அமைதியை மீட்டெடுக்க முடியுமா?

இவ்வாறான தவறான செயல்களால் பிரிட்டிஷ் நீதித்துறையின் மாண்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்றும் கண்டித்த நீதிமன்றம், இழப்பீடு கோர லத்தீப் ரயீஸிற்கு உரிமை உண்டு என்றும் கூறியுள்ளது.

தான் அல்ஜீரியாவைச் சேர்ந்தவன் என்பதற்காக தன் மீது இந்தப் பழியை சுமத்தினார்கள் என வேதனை தெரிவித்த ரயீஸி, 60 ஆயிரம் இங்கிலாந்து பவுண்ட் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார்

Web Counter Code