இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, November 28, 2007

tamilnadu cm kajzhainchar speech in nandri arivippu maanaadu

தனி இட ஒதுக்கீடு கொடுத்ததற்காக நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டின் தலைவர் ஜனாப் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களே, வரவேற்புரையாற்றிய ஜனாப் ஹைதர் அலி அவர்களே, திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றிய ரிஃபாயி அவர்களே, விஞ்ஞானி அப்துல் ஜலீல் அவர்களே, நன்றியுரையாற்ற இருக்கும் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்களே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பர் நல்லக்கண்ணு அவர்களே, பேராயர் சேவியர் அருள்ராசு அவர்களே, எஸ்றா சற்குணம், பீட்டர் பெர்னாண்டோ அவர்களே, தொகுப்புரையாற்றும் தமிமுன் அன்சாரி அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே...
நன்றி கூறுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்



அரங்கத்தின் உள்ளும் புறமும் பல்லாயிரக்கணக்கிலே குழுமியிருக் கிறீர்கள் என்ற நிலையை நானும் அறிவேன். இது நம்முடைய உள்ளமும் புறமும் நிரம்பியிருக்கின்றது என்பதற்கு அடையாளம். உள்ளும் புறமும் நிரம்பியிருந்தால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உள்ளே காலியாக இருந்து, வெளியேயும் அதே நிலை என்றால் நமக்கு மக்கள் தருகின்ற ஆதரவு எவ்வளவு என்ற கணக்கை சுலபத்திலே எடுத்துவிட முடியும். ஆனால் இப்போதெல்லாம் நாட்டிலே நன்றி கூறுகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, எடுத்துக்காட்டாக இந்த விழா அமைந் திருக்கின்றது.

தமிழகத்தில் நன்றி கூறுகின்றவர் களா? அடடே, ஆச்சர்யமாக இருக் கிறதே என்று நாம் நினைத்த காலம் உண்டு. இப்போது நன்றி கூறுகின்றவர்கள் இவ்வளவு பேரா? ஆயிரக்கணக்கிலா, இலட்சக்கணக்கிலா? என்று நாம் மகிழ்ச்சி யடையக் கூடிய நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இது எண்ண கணிதம்



ஒன்றைக் கவனித்தால் வேடிக்கையாக அல்ல, ஏதோ ஒரு குறிப்பை உணர்த்து வதாக அமைந்திருக்கின்றது. இன்று விழா நடைபெறும் நாள் 24ஆம் தேதி. சிறுபான்மை சமுதாயத்தாருக்கு, முஸ்லிம் களுக்கும், கிறிஸ்தவ பெருமக்களுக்கும் இடஒதுக்கீடு சம நிலையிலே இருவருக் கும் அளிப்பது என்ற முடிவெடுத்து, அதை முதன்முதலாக அறிவித்தது, கவர்னர் பேரவையிலேயே உரையாற்றி யது போது தான்லிஅப்படி அவர் உரையாற்றியது 24லி05லி2006. கவர்னர் உரையில் நாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி இந்த அரசு விரைவில் சிறுபான்மை சமுதாயத்தினருக் கான இடஒதுக்கீட்டைச் செய்யுமென்ற செய்தியை அறிவிப்பாக வெளியிட்டது 24.05.2006. ஆளுநர் உரையிலே அறிவித்ததும் 24, அது நிறைவேறி நன்றி கூறுவதும் 24.

இன்னொரு ஒற்றுமை. நம்முடைய தமுமுக பொதுச் செயலாளர் அவர்கள் வரவேற்புரையாற்றும்போது சொன்னார், 1995ஆம் ஆண்டு தமுமுக உதயமாயிற்று என்று. நாம் இந்த நான்கு எண்களையும் கூட்டிப்பார்த்தால் அதுவும் 24. அவ்வளவு ஏன்? நான் பிறந்த ஆண்டே 1924. நம்மிடையே எவ்வளவு ஒற்றுமை இயல்பாகவே அமைந்திருக்கிறது என்பதை இதை விட அழுத்தந்திருத்த மாக, சிறப்பாக எண் வைத்து ஜாதகம் கணிப்பாளர்களே, எண் இல்லாமலே எண்ணத்தை வைத்து இந்த ஜாதகம் கணிக்கப்பட்டிருக்கின்றது.

ரத்தத்தில் ஊறிய ஒன்று.

இன்று நேற்றல்ல, நெடுங்காலமாக நாம் உறவு கொண்ட இரு சமுதாயத்தினர். மன்னிக்க வேண்டும். இரு சமுதாயம் என்று சொன்னதற்காகலிஒரு சமுதாயத் தினர் தான்லிஎல்லோருக்கும் சகோதரர்கள் தான்லிசிறுபான்மைச் சமுதாயம் முன்னேற வேண்டும், உரிமைகளைப் பெறவேண்டு மென்பதற்காக நீண்டகாலமாக கோரிக்கை வைத்து, குரலெழுப்பி, போராடி இந்த உண்மையை உணர்ந்து உணர்வுகளை மதித்து, நாங்கள் செயல்பட்டு தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோமென்றால்லிஅது மன்னிக்க வேண்டும்லியாரும் தவறாக கருதிக் கொள்ளக்கூடாதுலிஇது எங்களு டைய ரத்ததோடு ஊறிய ஒன்று.

1920லி25ம் ஆண்டுகளில் இந்த மாநிலத்தை ஆண்ட கட்சி, முழுமையான பலத்தோடு ஆண்ட கட்சி என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒருபுறத்திலே வெள்ளைக்காரர்களுடைய ஆதரவோடும், மக்களுடைய வாக்கு களைப் பெற்றும் நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்ற போதே, இப்போது இடஒதுக்கீடு என்று சொல்கிற இந்தத் தத்துவத்திற்கு , இந்தக் கொள்கைகைக்கு அப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தின் பயனை சிறுபான்மைச் சமுதாயத் திற்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு லிபச்சையாகச் சொல்ல வேண்டுமேயானால் மேலார், உயர்ந்தோர், என்று சொல்லப்படு கின்ற பார்ப்பனர்களை அன்னியில் உள்ள பார்ப்பனர் அல்லாத சமுதாயத்திற் காக நீதி வழங்கிய ஆட்சிதான் லிநீதிக்கட்சியின் ஆட்சி. 1920லி25ஆம் ஆண்டுகளில் எப்படி எங்களுக்கு திடீரென்றுலிகருணாநிதிக்கு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் நினைவு வந்ததென்றால், இது ரத்ததிலே ஊறிய உணர்வு. இன்று நேற்றல்லலிநீங்கள் கூறுகின்ற நன்றி இதற்கெல்லாம் நமக்கு ஆதரவளித்த, மத்தியிலே இருக்கின்ற காங்கிரஸ் கட்சியினுடைய துணையாக, வழிகாட்டுதலாக இருக்கின்ற அம்மையார் சோனியா காந்தி அவர்களுடைய ஆதரவோடு மாத்திரமல்லலிபிரதமர் மன்மோகன் சிங் அவர்களுடைய ஆதரவோடு மாத்திரமல்ல, குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால்லிநான் அல்ல, என்னுடைய அமைச்சரவை யிலே இருக்கின்ற நண்பர்கள் அல்லலி எங்களையெல்லாம் இப்படிப்பட்ட கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்து, நீங்கள் சொன்னவுடன் அதைப் புரிந்து கொள்கின்ற சக்தியையும் அளித்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழி இதுலிஎனவே இந்த நன்றியெல்லாம் அவ்வழி செல்ல வேண்டிய நன்றியே தவிர இவ்வழி எனக்குத் தர வேண்டிய நன்றியல்ல. நன்றி கூறியிருக்கிறீர்கள். நான் நன்றிக்கு நன்றி கூறுகிறேன். நன்றி கூறிய உங்களுக்கெல்லாம் நன்றி கூறுகிறேன்.

நலிந்தோருக்கு உதவும் தமுமுக

நம்முடைய வரவேற்புரை ஆற்றிய பொதுச் செயலாளர் (ஹைதர் அலி) குறிப்பிட்டார், நம்முடைய மாநாட்டின் தலைவரிடமும் அதைப் பற்றிய விவரங் களைக் கேட்டறிந்தேன். அவர் களும் 'ஆமாம்' என்றார்கள். இந்த தமுமுக இயக்கம் 1995ஆம் ஆண்டிலே தோன்றிய போது அப்போது ஐந்து ஆம்புலன்ஸ் வண்டிகளோடு பணிகளை ஆற்றியது என்றும், இப்போது 31 ஆம்புலன்ஸ் வண்டிகள் என்றும் சொன்னார்கள். ஆக இந்த இயக்கத்தி னுடைய பணி, ஆக்க வேலை மக்களுக்குத் தொண்டாற்றுவதுலி மக்கள் சமுதாயத்திலே நலிந்த பிரிவினருக்கு நன்மைகளைச் செய்வது, அவர்களுடைய உடனடி உதவிகளிலே ஒன்றாக இயலாதவர்களுக்கு, ஆதரவற்ற வர்களுக்கு, அனாதைகளுக்கு உதவு கின்ற இந்தப் பணியையும் சில கருணை இல்லங்களைப் போல, அன்பு இல்லங்களைப் போல, இந்தப் பணிகளை யும் இவ்வளவு பெரிய இயக்கம், தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கின்ற தமுமுக என்ற இந்த இயக்கம் ஏற்றுக் கொண்டு அதற்காக மிகக் குறுகிய காலத்திலே ஐந்தாக இருந்த ஆம்புலன்ஸ் வண்டி களை 31, என்ற அளவிற்கு பெருக்கி யிருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க, மகிழத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.

என் சொந்த செலவில்

ஆம்புலன்ஸ் அதிகமாகப் பயன் படுகின்ற அளவிற்கு நோய்நொடிகள், நலிவுகள் வரவேண்டுமென்று நான் விரும்பவில்லை. ஆனால் வந்த நலிவு களைப் போக்க ஆம்புலன்ஸ் வண்டிகள் தேவை. அப்படிப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டிகளின் உதவிகளை அளிக்க, சில ஆண்டுகளிலேயே லி ஐந்தாக இருந்தது 31 ஆக ஆகியிருக்கின்றது. எனக்கு அவர்கள் நன்றி பாராட்டுகின்ற இந்த விழாவிலே நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பொறுப்பில் உங்களுடைய 31 ஆம்புலன்ஸ் வண்டிகளோடு இன்னும் இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகளை நீங்கள் வாங்கிக் கொள்ள அதற்குரிய நிதி எவ்வளவு என்று இந்த அமைப்பின் சார்பில் தலைவரும், பொதுச் செய லாளரும் எனக்கு எடுத்துச் சொன்னால், என் சொந்தப் பொறுப்பிலே நான் இந்தத் தொகையை வழங்கிலிஇந்த நாள் நம்முடைய நினைவிலே நிற்க வேண்டிய நாள், நலிந்தோருக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள லி நமக்கு வழிகாட்டியாக உள்ளவர்களின் பெயரால் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறை வேற்றிய நாள் என்ற வகையிலே இது அமையும் என்ற முறையிலே நான் இதை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் உங்களில் ஒருவன்

நான் சிறப்பு விருந்தினர் என்று இங்கே வாழ்த்துரை வழங்கியவர்கள் எல்லாம் சொன்னார்கள். நான் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன் என்றார்கள். மன்னிக்க வேண்டும், நான் விருந்தினர் அல்ல லி விருந்தினர்களாக உள்ளவர்களையெல்லாம் வரவேற்கின்ற உங்களில் ஒருவன். என்னைப் பெருமைப்படுத்துவதாக எண்ணி விருந்தினர் என்று சொல்லி, என்னை வேறுபடுத்த வேண்டாம், நீங்கள் வேறு, நான் வேறல்ல என்ற இந்த தத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடிப்போம்.

நாம் தமிழ்நாட்டிலே இன்று நேற்றல்ல, இங்கே என்னை அறிமுகப்படுத்திப் பேசிய நண்பர் (தமிமுன் அன்சாரி) குறிப்பிட்டதைப் போல தாருல் இஸ்லாம் ஒரு கையிலே, குடியரசு பத்திரிக்கை இன்னொரு கையிலே என்ற அளவிற்கு இளம்பிராயத்திலேயே முஸ்லிம் லீக்கின் பிறைக் கொடியை ஒரு கையிலும், திராவிட இயக்கத்தின் கொடியை ஒரு கையிலுமாக வளர்ந்தவன் நான்.

காப்பாற்றிய லுங்கி

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பொது வாழ்வுக்கு சொந்தக் காரன். நான் பாண்டிச்சேரியிலே அடிபட்டு, உதைப்பட்டு, உயிர் போய் விட்டது என்று என்னை குண்டர்கள் விட்டு விட்டு சென்ற பிறகு, நான் அங்கிருந்து தப்பித்து பெரியார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது, மீண்டும் யாரும் என்னை அடையாளம் கண்டு தாக்கிவிடக் கூடாது என்பதற்காக நான் கட்டிச் சென்ற ஆடை 'லுங்கி' தான் என்பதையும் லி நான் இன்று நேற்றல்ல, இந்த விழாவிற்காக அல்ல, இதை என்னுடைய 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தி லேயே குறிப்பிட்டிருக்கிறேன் என்பதைச் சொல்லி லி நாம் ஆடையில், எண்ணத்தில், உணர்வுகளில், ஒன்றுபட்டு நிற்கின்றோம். அப்படிப்பட்ட சமுதாய ஒற்றுமையைப் பேணிக்காக்கின்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டிருக் கிறோம். ஒரு பக்கத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா. இன்னொரு பக்கத்திலே கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இவர்கள் எல்லாம் இணைந்து நம்மை வழி நடத்திச் சென்றிருக் கின்றார்கள். தொடர்ந்து இந்த வழியிலே சகோதரர்களாக செல்வோம் என்று குறிப்பிட்டு, நான் ஒரு கூட்டத்தில் சொன்னதைப் போல, 'இந்து முஸ்லிம் சீக் ஈசாயி. ஆபஸ் மே ஹை பாயி பாயி' என்ற அந்தத் தத்துவத்தை இந்தியா விலே கடைப்பிடிப்போம், அதுதான் இந்த விழாவின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டு, நீங்கள் இதயம் மலர்ந்து உங்களுடைய மனம் கனிந்து நன்றியை அரும்புகளாக, மலர்களாக, ஆக்கி என் தலையிலே சொரிந்தமைக்காக என்னுடைய வணக்கத்தை, நன்றியை, மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டுலிஇவைகள் எல்லாம் தொடர்ந்து நான் உங்களுக்கு பணியாற்றுவதற்காக தரப்பட்ட முன்பணம் என்பதைச் சுட்டிக்காட்டி இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கின்றேன்

Friday, November 16, 2007

நிவாரண முகாம்களில் தவிக்கும் முஸ்லிம்களை சோனியா காந்தி ஏன் பார்க்கவில்லை..

வெடிக்கும் வேதனைக் குரல்கள்

தெஹல்கா பதிவுகளின் மூலம் வெளி வந்த உண்மைகள் உலகை உலுக்கின. முஸ்லிம்கள் இதயங்களை எரிஈட்டி கொண்டு கிழித்ததைப் போல வேதனை யில் வெம்பினர். பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் ஓரணியில் திரண்டு எதிர்த்தன. மோடி அரசுக்கு எதிராகவும், காவிக் கொலைக் கும்பலின் வெறிச் செயலுக்கு எதிராகவும் முஸ்லிம் சமூகம் பிரளயமாய் பொங்கியது.

1986லில் உச்ச நீதிமன்ற நீதிபதி இஸ்லா மிய ஷரிஅத்துக்கு எதிராக ஷாபானு வழக்கு விவகாரத்தில் கருத்துக்கள் கூறியதால் முஸ்லிம் அமைப்புகள் ஒன்று திரண்டதற்கு போராட்டங்களை நடத்தின.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 21ஆம் நூற்றாண்டின் கொடூர இனப்படு கொலையாளனான மோடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

ஜமிய்யத்தே உலமா இ ஹிந்த், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்து உள்ளிட்ட இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தன. முஸ்லிம் அமைப்புகள் அல்லாது பிற அரசியல் அமைப்புகளும் இனப்படு கொலையாளர்களைக் கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டன.

மதவாதத்தை எதிர்ப்பதில் சமரசம் செய்து கொள்ளாத இடது சாரிகளும், 'மோடி, அத்வானிக் கும்பலை கைது செய்ய வேண்டும்' என தெஹல்கா பதிவுகள் வெளியானவுடன் பிரதமரை சந்தித்து தனது குமுறலைக் கொட்டிய லாலுவின் கட்சி யான ராஷ்ட்ரிய ஜனதாதளமே நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி இனப்படுகொலை யாளன் மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களால் தினம்தோறும் திணறத் தொடங்கியது.

பயங்கரவாத எதிர்ப்பு இளைஞர் படை என்ற முஸ்லிம் இளைஞர் அமைப்பின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்திலும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்றனர். பாஜக, வி.எச்.பி மற்றும் பஜ்ரங்தள் உள்ளிட்ட இயக்கங்களை தடைசெய்ய வேண்டும் என்றும், இனப்படுகொலையாளன் மோடிக்கு மரணதண்டனை விதித்து சாகும் வரை தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவர் ஷகீல் ஷைஃபி பேசினார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் நடை பெற்ற ராஷ்டிரிய ஜனதாதளத்தின் கண்டனக் கூட்டத்தில் மோடிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தின் அனைத்து நகரங்களிலும் குஜராத் இனப்படுகொலை குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ராம்பூர், சஹரான்பூர், கைரானா, முஷாஃபர் நகர் போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்திலும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெஹல்கா பதிவுகள் அம்பலப்படுத்திய மறுநாளே ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்தன. செப்டம்பர் 25 வியாழன் அன்று ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கிலத் தொலைக்காட்சியிலும், ஆஜ்தக் ஹிந்தி தொலைக்காட்சியிலும் வெளியான மறுநாள் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப்பிறகு திரண்ட மக்கள் தங்கள் குமுறலை வெளியிட்டனர்.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடை பெறப் போகிறது. இந்திய அரசியல் சாசனத்தை மீறிய இனப்படுகொலை யாளன் மோடி மீது இதுவரை எவ்வித சட்டப்பூர்வ நடவடிக்கை யையும் மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்யாதது ஏன்? என ஜும்ஆ உரைக்குப் பின் ஹைதராபாத் பள்ளிவாசல் வளாகத்தில் திரண்ட மக்கள் காரசாரமாக தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
''குஜராத் இனப்படு கொலையாளர்கள் குறித்து ஏற்கனவே உலகம் அறிந்துகொண்டது'' தெஹல்கா காட்சிப் பதிவுகளின் மூலம் உலகம் சங்பரிவாரின் பாசிஷ முகத்தை மீண்டும் ஒருமுறை மக்கள் அறிந்து கொண்டார்கள். அவ்வளவு தான் என ஃபதேபூர் ஷாஹி இமாம் டாக்டர் முஃப்தி முகர்ரம் தெரிவித்தார்.

'குஜராத் கோரப் படுகொலைகளின் மூலம் மோடியின் கோர முகம் எப்போதோ வெளிப்பட்டு விட்டது. தற்போது மோடி அரசைக் கலைப்பது, மோடி உள்ளிட்ட இனப்படுகொலையாளர்களை கடுமையாக தண்டிப்பது என காங்கிரஸுக்குத் தான் பரீட்சை நடக்கப்போகிறது. காங்கிரஸ் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது? என்பது தான் இப்போது நம்முன் உள்ள கேள்வி'' என டெல்லி பிரதேச சட்ட மன்றத்தின் துணை சபாநாயகர் சோஹப் இக்பால் கர்ஜித்தார். மோடியையும் அவரது கும்பலையும் தேர்தலில் போட்டியிட தடைசெய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

மோடி அரசு பொய்யான வாக்கு மூலங்களைக் கொடுத்து உச்ச நீதிமன்றத் தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது என்பதும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக்கீறி சிசுவை வெளியே எடுத்து இருவரையும் கொன்றதையும், உச்சநீதி மன்றத்தில் மறுத்த கயமைத் தனத்தையும், பின்னர் அந்த கிரிமினல்கள் மறுத்து உண்மைகளைப் பேசியதை அடிப்படை யாக வைத்து உச்சநீதிமன்றம் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மாநிலத்தின் ஜனதாதள எஸ் கட்சியினர் தலைவர் ஹாஜி இக்ராம் ஹஸன் தெரிவித்துள்ளார்.

'இனப்படுகொலையாளன் மோடி மீதும் அவரது கும்பல் மீதும் நடவடிக்கை இனியும் எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்களின் விஷயத்தில் காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும்' என ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் என்ற உருது செய்தி ஏடு குறிப்பிடுகிறது.

'முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதை விட, முஸ்லிம் களுக்கு எதிரான நிலையை எடுத்தவர்கள் ஆதரவாளர்களைப் போல நடிப்பவர்கள் அனைவருக்கும் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்' என அன்ஸர் ஷா காஷ்மீரி எனும் மார்க்க அறிஞர் தெரிவிக்கிறார்.

''மோடி இழைத்த கொடுமைகள் ஹிட்லர் செய்த குற்றங்களை விட அதிகம்'' என்றார் அன்ஸர் ஷா. மோடியை எதிர்க்கும் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? தேர்தலுக்கு முன்பாகவே இன வெறி மோடியையும் அவரது கும்பலையும் கை விலங்கிட்டு கைது செய்து இழுத்து வரவேண்டும்'' என ஸயீத் ஹமீத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு மத்திய அரசு 'இல்லை' என்பதையே பதிலாக்கினால் 'தெஹல்கா' பதிவுகளால் ஒரு காசுக்கும் பயன் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் மிதவாத ஹிந்துத்துவாவை ஆதரிப்பதாக ஷகீல் சம்ஸி குற்றம் சாட்டினார். மோடிக்கு எதிராக எதையும் செய்ய காங்கிரஸ் நினைக்கவில்லை. தெஹல்கா பதிவுகளின் மூலமாக உண்மை கள் வெளிவந்து விட்டன. இறைவனுக்கு நன்றி என்ற ஷகீல் ஷம்ஸி, சோனியா காந்தி தனது குஜராத் பயணத்தின் போது கொலை வெறியர்களால் கொடூரமாகக் கொன்று எரிக்கப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவியார் ஜாஹியா ஜாஃப்ரியை சந்திப்பதற்கு திட்டமிட்டிருந் தார். பின்னர் அந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. நிவாரண முகாம்களில் கிடந்து உழலும் அப்பாவி முஸ்லிம்களைப் பார்க்க நேரம் ஒதுக்க வில்லையே ஏன்? என்றும் வினாவிடுக் கிறார். இதிலிருந்தே இவர்கள் மோடியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்பது தெரிந்து விட்டது என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் இனவெறிக் கும்பலுக்கு எதிராக திரளத் தொடங்கி விட்டனர். மத்திய அரசும் மதசார்பற்ற கட்சிகள் என்று (தங்களைத் தாங்களே தமாஷாக சொல்லிக் கொள்ளும்) கட்சிகளும் என்ன செய்யப் போகின்றன?

Wednesday, November 14, 2007

கருநாகம் புகுந்த கர்நாடகம்
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகவில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. 20 மாதங்கள் மதசார்பற்ற (?) ஜனதாதளத்தின் தலைமையில் ஆட்சியும், அடுத்த 20 மாதங்களுக்கு பாரதீய ஜனதா தலைமையிலும் ஆட்சி செய்வது என வாய்மொழியாக முடிவு செய்யப்பட்டது.

சந்தர்ப்பவாத தேவேகவுடா கட்சியினர் தங்களுக்கு வாக்களித்த மக்களை மடையர்களாக எண்ணிக்கொண்டு மதவாத பாஜகவுடன் கை கோர்த்தனர். 20 மாதங்கள் முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த தேவேகவுடாவின் புதல்வர் குமாரசாமி பதவி சுகத்தில் திளைத்திருந்த வேளையில் உடுப்பியும் மங்களூரும் காவி பாசிஷவாதிகளிடம் மாட்டிக்கொண்டு திணறித் தவித்தது. அப்பாவி முஸ்லிம்கள் சொல்லொணா துயரத்திற்கு இலக்காயினர்.

மதசார்பற்ற ஜனதாதளம் என்ற பெயரில் கட்சி நடத்துபவர்கள் வைத்துக் கொண்ட வெட்கங்கெட்ட கூட்டணியால் இத்தகைய அவலம் நடந்தது.

மதசார்பற்ற ஜனதாதளம் தனது கொள்கையைக் காற்றில் பறக்கவிட, பாஜக கொள்ளை பிடிப்பு பிசகாமல் நடந்து கொண்டது. அதோடு கர்நாடகாவை குஜராத்தாக மாற்றுவதே தமது இலட்சியம் என்றும் முழங்கினார்கள்.

பலதரப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மதசார்பற்ற(?) ஜனதா தளம், மக்களின் பார்வையில் மிகவும் இழிந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

'முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது பன்முக நடிப்புத் திறமையைக் காட்டியதன் மூலம் ஆஸ்கார் விருது கூடப் போதாது இவரின் திறமைக்கு'' என தொழில் முறை நடிகர்கள் கூட மூக்கில் விரலை வைத்தனர்.

பாஜகவினர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாநிலத்தை சுரண்டி காவிக் காடாக்கி கலவரப் பிரதேசமாக்கினர்.

மதசார்பற்ற ஜனதாதளத்தின் காலம் முடிந்த பிறகு பாஜகவின் வன்முறை என காவிப்பட்டாளம் ஆவலோடு காத்திருந்தது.

பதவியைப் பிரிய மனமில்லாத தேவேகவுடா கட்சியினர் பாஜகவைப் பற்றி புதிதாக அறிந்து கொண்டதைப் போல, மதவாத கட்சி என்றும், கலவர பூமியாக கர்நாடகாவை மாற்றப் போகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

முதன்முறையாக தென்னிந்தியாவில் ஆட்சியமைக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்ற தவிப்புடன் பாஜக கிடந்து அல்லாட வேறு வழியில் முதல்வர் பதவியை பெற முடியுமா என மதசார்பற்ற (?) ஜனதா தளம் வெறியுடன் திண்டாட இந்திய ஜனநாயகத்தை இழிவுப்படுத்திய பெருமைக்கு (!) இவ்விரு தரப்பினரும் ஆளானார்கள்.

சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக டெல்லியிருந்து தினமும் புறப்பட்டு வந்த பாஜக தலைவர்கள் தேவேகவுடா தரப்பினரை தாஜா செய்வதை தொடர்ந்தனர். அது பாஜகாவா இல்லை 'தாஜா'வா என்று சந்தேகம் எழுப்பும் அளவுக்கு அவர்களது நடவடிக்கை இருந்தது.

தேவேகவுடா குடும்பம் நாசமாக போகட்டும் என கிராமத்துக் மூதாட்டி போல சாபம்விட்டனர் பாஜகவினர்.

தற்போது திரை மறைவில் நடந்த பேரங்களால் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தேவேகவுடா கட்சி ஆதரவு வழங்குவதோடு அமைச்சரவையிலும் இடம் பெறப்போகிறது.

முதல்வராக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான எடியூரப்பா முதல்வராகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அத்வானிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் முகமெல்லாம் மலர்ச்சி அகமெல்லாம் பூரிப்பு.

சமூக நீதிக்கான தளமாக இருந்த கர்நாடகாவில் கருநாகப் பாம்பு குடி புகுந்ததைப் போன்று காவி பாசிஷ வாதிகள் அரசமைத்து விட்டனர்.

உலகம் மறக்க முடியாத பாசிஷ பயங்கரவாதிகள் இவர்கள் என்பதை காந்தியாரின் படுகொலையும், பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பும், குஜராத் இனப்படுகொலையும் நிரூபித்திருக்கிறது.

கர்நாடகத்தின் சமாதானத்தை சாய்க்க வடநாட்டில் தங்கள் தளங்களை இங்கு இழந்தவர்கள் இங்கு வந்துவிட்டனர். பதவிக்காக பாசிஷவாதிகளுக்கு பல்லக்கு தூக்கியவர்களுக்கு வாக்களித்தோமே என வேதனையில் விம்முகிறார்கள் சிறுபான்மை சமூகத்தினர்.

சந்தர்ப்பவாத சதிகாரர்களுக்கும் பாசிஷ பயங்கரவாதிகளுக்கும் வாக்குச்சீட்டின் மூலம் பதிலடி கொடுக்க அவர்கள் தயாராகி வருகிறார்கள்
ராஜஸ்தான்
மார்க்க அறிஞர்கள் கைது லி சித்திரவதை! பாஜக அரசு அட்டூழியம்!

ஹபீபா பாலன்

அஜ்மீர் தர்ஹாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பள்ளிவாசல் இமாம்களை துன்புறுத்தி கைது செய்யும் போக்கு ராஜஸ்தான் மாநில முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரமலான் மாதம் கடைசி நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த அந்த அசம்பாவிதத் தில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்களாக பள்ளிவாசல் இமாம்களை கைது செய்தது அராஜகத்தின் உச்சக்கட்டமாகும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அஜ்மீர் தர்ஹா குண்டு வெடிப்புக்காக துப்பறிய அமைக்கப்பட்ட சிறப்புக் காவல் படை, இதுவரை 12 இமாம்களை சிறையில் அடைத்துள்ளது. பள்ளிவாசல் பேஷ் இமாம், மவ்லவிகள் மற்றும் மதரஸா ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் அடங்கு வர். அந்த அப்பாவி மவ்லவிகளை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தாமல் காவல் துறை லாக்அப்லிகளிலேயே அடைத்து தாக்கி துன்புறுத்துவதாகவும் முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சட்டவிரோதமாக வளைத்துச் செல்லப் பட்ட அவர்களிடம் துன்புறுத்தி தீவிரவாத ஆதரவு ஒப்புதல் வாக்குமூலங்களை வாங்கியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஷிபுர் ரஹ்மான் என்ற மதரஸா ஆசிரியர் ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஷிகார் மாவட்டத்தில் உள்ள கண்டேலா கிராமத்தின் பள்ளிவாசல் பேஷ்இமாமான அப்துல் ஹபீஸ் ஷமீம் சட்டவிரோதமாக வளைக்கப்பட்டார்.

ச்ரூ மாவட்டத்தின் சர்தாசாஹர் பகுதியில் உள்ள மதரஸா ஜாமியா லத்தீஃபிய்யாவின் ஆசிரியரான ரஹ்மான், மற்றும் மகராஷ்ட்ரா மாநிலத் தின் உஸ்மானாபாத் பகுதியைச் சேர்ந்த மவ்லவி இம்ரான் அலி உட்பட 12க்கும் மேற்பட்டோர் ராஜஸ்தான் காவல்துறை யினரால் சட்டவிரோத காவலில் வைக்கப் பட்டு துன்புறுத்தப்பட்டனர்.

குண்டு வெடிப்பினால் இழப்பினை சந்தித்த முஸ்லிம்களை ஆறுதல்படுத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க திராணியற்ற ராஜஸ்தான் பாஜக அரசு, முஸ்லிம் மார்க்க அறிஞர்களை துன்புறுத்தும் செயல் உள்நோக்கம் கொண்ட ஈனத்தனமான செயல்.

முஸ்லிம்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இடையே கடும் கொந்தளிப் பினை ஏற்படுத்தியது.

உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்க எத்தகைய முயற்சியும் மேற் கொள்ளாமல் முஸ்லிம்களை மட்டுமே வஞ்சம் தீர்க்கும் செயல் மூலம். குண்டு வைத்த சதிகாரர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே இச்செயல் உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் ஆத்திரம் கொப்பளிக்க கருத்து தெரிவித்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட மவ்லவி இம்ரான் அலி உள்பட மற்றவர் கள் விடுவிக்கப்படவில்லை. இது மனித உரிமையையும் அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் என ராஜஸ்தான் முஸ்லிம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் காரி மொயினுத்தீன் தெரிவித்துள்ளார்.

அப்பாவி முஸ்லிம்கள் 3000 பேர்களை போலி என்கவுண்டர் மூலமும் நெருப்பிலிட்டும் கொன்றும் கொன்ற குஜராத் அரசைப் போன்று ராஜஸ்தான் பாரதீய ஜனதா அரசும் மனித உரிமை களை காலில் போட்டு மிதிக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உடுப்பியை யும் மங்களூரையும் கலவரக் காடாக்கி யவர்கள் முதல்வர் பதவியை பிடித்துள்ள னர். இது சமூகநல ஆர்வலர்களையும் தேசப்பற்றாளர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இத்தகைய சக்திகள் தண்டிக்கப் படுவது எப்போது?

Saturday, November 10, 2007

குஜராத் இனப்படுகொலை: மோடி போலிஸின் சாதனைகள்(!)

சர்ஜுன்

பி.சி. பாண்டே (குஜராத் டி.ஜி.பி ஆக இருந்து தற்போது தேர்தல் ஆணைத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.

700லிருந்து 800 முஸ்லிம் சடலங் களை அஹ்மதாபாத் நகர் முழுவதும் சாக்கடைகளில் கொட்ட உத்தரவிட்டார்.

கொல்லப்பட்ட முஸ்லிம்களின் கணக்கை குறைத்துக் காட்டுவதற்காக அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.

• பாபு பஜ்ரங்கியையும் அவனது அடியாட்களையும் காவல்துறை இணை ஆணையர் பி.பி.பாண்டேயின் தலைமையிலான போலீஸ் படை கைது செய்தது. ஆனால் இது எல்லாமே 'சும்மா' நாடகம் தான் என காவல்துறை இணை ஆணையர் தெரிவித்ததாக பாபு பஜ்ரங்கி கூறினான்.

• உள்ளூர் சங்பரிவார் தலைவரை டி.எஸ்.பி சோலங்கி கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்ததாக செய்தி ஏடுகளும், அரசு கோப்புகளும் கூறின. ஆனால் உண்மையில் குற்றவாளி வி.எச்.பி அலுவலகத்தில் சகல சவுக்கியத் துடன் இருந்தான்.

• காவல்துறை காட்வி விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த காலுபர் ஜிலா மந்த்ரி ரமேஷ் தேவிடம் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார். குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து முஸ்லிம்களைக் கொல்வேன் என்று சொன்னதைச் செய்தாரா என வி.எச்.பி பிரமுகர் முஸ்லிம் பிணங்களை எண்ணிப் பார்த்து உறுதி செய்தார்.

• காவல்துறை ஆய்வாளர் எரடா குல்பர்க் சொஸைட்டி குடியிருப்புக்கு முன்னால் கூடியிருந்த கும்பலைப் பார்த்து கூறுகிறார். உங்களுக்கு மூன்று மணி நேரம் தருகிறேன். அதற்குள் உங்கள் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள். அடுத்த நிமிடமே வெறி முற்றிய அந்த வன்முறைக் கும்பல் பாய்கிறது. எரடாவின் கண்ணெதிரிலேயே ஒருவரை அந்தக் கும்பல் குத்திக் கொன்றது.

• காவல்துறையினர் எங்களுடனே இருந்தனர். அந்த நாள் மகத்தானது. காவல்துறையினர் எங்கள் முன்னிலை யில் துப்பாக்கியால் அவர்களை (முஸ்லிம்களை) நோக்கி சுட்டனர். நிச்சயம் அவர்கள் 70 அல்லது 80 பேருக்கு மேல் கொன்றிருப்பார்கள். அதைப் போன்று ஒரு பெண்ணைக் கூட சேதப்படுத்தாமல் விடவில்லை.

• எல்லாவற்றையும் எரித்து முடித்தோம் அப்போது காவல்துறையினர் எங்களை அழைத்தனர். முஸ்லிம்கள் சாக்கடைக்குள் ஒளிந்து கொண்டிருக் கிறார்கள் என்று காவல்துறையினர் கூறினர். நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். அவர்களது வீடுகள் எல்லாம் கொளுத்தப்பட்டதால் தரைமட்டமாகி யிருந்தது. ஆனால் ஏழு அல்லது எட்டு முஸ்லிம்கள் கழிவறை செல்லும் குழியில் பதுங்கிக் கிடந்தனர். நாங்கள் அதை அதற்கென உள்ள சாக்கடை மூடியால் மூடினோம் பத்திரமாக தப்பிப்பதற்காக அங்கே ஒளிந்து கொண்டார்கள். ஆனால் நாங்கள் அவர்களை காவல்துறை உதவியுடன் பிணங்களாக்கினோம்' என்றான் நரோடா பாட்டியா குற்றவாளி சுரேஷ்.

• நரேந்திரமோடி காவல்துறையை எங்கள் தரப்பாகவே அனுப்பி வைத்தார். அஹ்மதாபாத் வி.எச்.பி தலைவன் ராஜேந்திர வியாஸ்.

• என்னைப் போல் ஒரு 50 பேர்களை போலிஸ் கமிஷனரிடமிருந்து சிறப்பு அனுமதி வாங்கினோம். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட இடங் களுக்கு சென்று எங்கள் வேலையை(!) காட்டினோம். ஹிந்துக்கள் எங்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் தெரியுமா? அன்று ஒருவருடைய வீட்டிலும் ஒரு சிறிய மரக்குச்சி கூட கிடைத்திருக்காது. கையில் கிடைத்ததை யெல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பி னோம். மூன்று அடி இரும்புக் குழாய் களை ஒவ்வொருவரும் வைத்திருந்தோம். பஜ்ரங்தளத்துக்காரர்கள் திரிசூலம் தந்தனர். எல்லா ஆயுதங்களும் எங்களுக்கு விநியோகிக்கப்பட்டனலி திமந்த் பட் கூறியது.

• நாங்கள் வெடிகுண்டுகளை தயாரித்து எடுத்துக் கொண்டு அஹ்மதாபாத் சென்றோம். எந்த போலீஸ்காரரும் எங்களை தடுத்து நிறுத்தவில்லை. அது மட்டுமல்லாமல் 'நீங்கள் செல்லுங்கள். போலீஸ்காரர்களை பார்க்கும்போது ஜெய்ஸ்ரீராம் சொல்லுங் கள் நாங்கள் புரிந்து கொள்வோம்' என்றார்கள்லிதவால் ஜெயன்டி படேல் சொன்னது.

• எல்லா போலீஸ்காரர்களும் எங்களுக்கு உதவினார்கள். தோட்டாக் களைக் கூட தந்து உதவினார்கள். ரமேஷ் தவே.

காவல்துறையினர் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லைலிபிரஹலாத் ராஜு சொன்னது.

• காவல்துறையினர் எங்களுக்கு ஆயுதங்களை தந்தனர்லிஅனில் பட்டேல்.

• என்னை குற்றப்பிரிவு காவல் துறை (கண் துடைப்புக்காக) விசார ணைக்கு கொண்டு சென்றது.. லாக் அப்பில் கொசுத் தொல்லை அதிகமாக இருந்ததால் போலீஸ் அதிகாரியின் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டோம். எங்கள் வீட்டிலிருந்து தேநீரும், சாப்பாடும் வரவழைத்து சாப்பிட்டேன்லிகுல்பர்க் சொஸைட்டியில் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட பலரை எரித்துக் கொன்ற கயவன் மாங்கிலால் ஜெயின்

Thursday, November 8, 2007

முஸ்லிம்கள் முகத்தில் விழிப்பதற்கே அவமானமாக இருக்கிறது...

தமிழ்மாறன்


குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை நாட்டிற்கு அவமானம், நீதித்துறைக்கு அவமானம் என்று பரவலாக பேசப்படு கிறதே ஒழிய பெருமைக்குரிய ஹிந்து மதத்தின் பேரால் இத்தகைய காட்டு மிராண்டித்தனத்தை நிகழ்த்திய கயவர் களைக் கண்டிக்க யாருக்கும் நா எழவில்லை.

தமது மதத்தை களங்கப்படுத்திய வர்கள் குறித்து பெரும்பாலான ஹிந்து குரு பீடங்கள், மகா சன்னிதானங்கள் கண்டுகொள்ளவேயில்லை, (ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி அக்னிவேஷ் மட்டும் விதி விலக்கு) நமது நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு யார் காரணம் என்பது கண்டறியப்படுவதற்கு முன்பே முஸ்லிம் பெயர்கள் ஊடகங்களில் உச்சரிக்கப்படுகின்றன. ஊடகங்கள் குறிப்பிடும் நபர்களோ இயக்கங்களோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இருப்பினும் மனித உயிர்கள் பலியாவதைக் கண்டு மனம் பொறுக்காத முஸ்லிம் அமைப்புகள். தலைவர்கள் உடனடியாக தங்களது கண்டனங்களை பதிவு செய்வார்கள். இருந்தாலும் முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் வகையில் செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடும். எனது கேள்வி அது பற்றியதல்ல? முஸ்லிம்களைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்டது.

எங்கேயோ எவனோ நிகழ்த்திய குண்டு வெடிப்பிற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இதயங்களையும் குத்திக் கிழிக்க குரு மூர்த்திகளின் எழுது கோல்கள் ரத்த தாகத்துடன் காத்திருக்கும்.

வெடிகுண்டு சம்வங்களில் தொடர்பு டையவன் என்று கூறுவோர்கள் கூட தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பெயர்களைத் தான் கூறுவது வழக்கம். நமது ஐயம் என்னவெனில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட இயக்கங்கள் அனைத்தும் நாட்டு மக்களிடையே செயல்படும் இயக்கங் களாகவே இருக்கின்றன. பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி.. பஜ்ரங்தள், ஏபி.வி.வி. போன்றவை பதிவு செய்யப் பட்ட இயக்கங்கள் பாஜக அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி. ஆளுங்கட்சியாக இருந்து விட்டு தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அது மட்டுமின்றி அடுத்து ஆளுங்கட்சியாக வரவும் அது துடித்துக் கொண்டிருக்கிறது.

இங்குள்ள பல பிரமுகர்கள், அமைப்பு கள் சாமியார்கள் என பல்வேறு தரப்பின ரும் சங்பரிவாருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள் ளனர். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் குரு பூஜைகளிலும், இந்து முன்னணியால் நடத்தப்படும் திரு விளக்கு பூஜைகளிலும் முக்கிய வர்த்தகப் புள்ளிகளும் கலந்து கொள்கின்றனர். பொது மனிதர்கள் வேடம் போடும் இவர்களோ, நாட்டின் பெரும் பான்மையான வெகுஜன ஊடகங்களோ குஜராத் இனப்படுகொலை குறித்து ஏதும் சொல்ல வில்லையே? என்பது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அது அவர்களுக்கு வியப்பாக இருக்கலாம் நமக்கு அவ்வா றல்ல, நம்முடைய சந்தேகங்களெல்லாம் கோத்ராவில் நிகழ்ந்த விபத்தை முஸ்லிம்கள் செய்த சதியாக செய்திகளை பரப்பி திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் சொன்னதெல்லாம் ஆதாரமற்ற கட்டுக்கதை என பானர்ஜி கமிஷன் ரிப்போர்ட் கூறியது. தற்போது தெஹல்காவின் பதிவுகளும் நிரூபிக் கின்றன. சாட்சிகளை மிரட்டி முஸ்லிம்கள் மீது பழிபோடச் சொன்ன குஜராத் காவல் துறையின் ஈனச்செயலும் அதனை முழுநேரக் கடமையாகச் செய்த சங்பரிவாரின் ஆண்மையற்ற செயல் குறித்த செய்திகள் வரத்தொடங்கியுள்ள நிலையில், பொய்யான ஒரு தகவலை கர சேவர்களின் பெயரால் ஹிந்து மதத்தின் பெயரால் பரப்பியதால் அநியாயமாக படுகொலைகள் நிகழ்த்தியது குறித்து இங்குயாரும் வெட்கப்படவில்லையே? ஏன்? முஸ்லிம்கள் தானே செத்துத் தொலையட்டும் என்று அவர்கள் ஆறுதலடைந்து தொலையட்டும். ஆனால் ஹிந்து மதத்தின் பெயர் உலக அளவில் மாசுபட்டு போனதே இது குறித்து இவர்களுக்கு சிறிதும் கவலை யில்லையே?

தெஹல்கா பதிவுகளில் கயவர்களின் வாக்கு மூலங்களைப் பார்க்கும் போது கோத்ராவில் நடந்தது விபத்தல்ல.

முஸ்லிம்கள் நடத்திய சதியுமல்ல. சங்பரிவார் சக்திகளால் நடத்தப்பட்ட கொடும் சதி என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது. ஹிந்து மதத்தின் பெருமை குறித்து பெருமிதம் அடைபவர்கள் இது குறித்து கவலைப்படவில்லை என்பது குறித்து விளைக்குறிகள் விடைத்து நிற்கின்றன.

இந்த கொடும் சதிகள் குறித்து இவர்கள் ஒன்றும் அறியாமல் இருந்திருக்க வேண்டும். அதாவது 2007 அக்டோபர் 25 ஆம் தேதியிலிருந்து (தெஹல்கா உண்மைகளை அம்பலப்படுத்தியதிலிருந்து) இவர்கள் கோமாவில் கிடந்திருக்க வேண்டும் அல்லது இந்த குற்றச் செயல்கள் குறித்து மானசீகமாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலான ஊடகங்களும் குஜராத் இனப்படுகொலை குறித்து மூச்சு கூட விடவில்லை. இவர்களின் இழிசெயலைக் காணும் போது அவமானம் தாங்க முடியவில்லை.

முஸ்லிம்களின் முகங்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை. ஏனெனில் நான் மனித மனம் படைத்தவன்

Wednesday, November 7, 2007

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் ஜனநாயகம்

பாகிஸ்தானில் பெயரளவுக்கு இருந்த ஜனநாயகம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டிருக்கிறது. எதிர்ப்பவர்கள் எவரும் இன்றி அதிபர் தேர்தலில் முஷாரஃப் ஜனநாயக (?) முறையில் வெற்றி பெற்ற பின்னரும் கூட நடுங்கி நிதானம் இழந்து அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.பாகிஸ்தானுக்கு ஜனநாயகம் என்பது எட்டாக்கனியாக இருந்தது மேலும் எட்டாத உயரத்தில் போய் விட்டது.
பாகிஸ்தான் என்றால் முஷாரஃப், பெனாசிர், நவாஸ்ஷரீஃப், அமெரிக்கா, தலிபான் ஆதரவாளர்கள் என்று கலவையான குழப்பம் என்ற நிலைமாறி பாகிஸ்தானில் மக்களின் ஜனநாயக விழிப்புணர்வு, நீதித்துறையின் சுறுசுறுப் பான செயல் பாடுகள் என மாறியதால் பழைய பாகிஸ்தானாக அது தற்போது இல்லை.
மதரஸா மாணவர்களிடையே இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசையே எதிர்க்கும் அளவிற்கு அவர்கள் சென்றனர்.
இஸ்லாமிய நெறியை பரப்ப, புரிந்து கொள்ள அவர்கள் காட்டிய விவேகமற்ற வேகம் சர்ச்சைக்குள்ளாகி லால் மஸ்ஜி தில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரைக் குடித்தது.
அரசும், மதரஸாக்களின் தலைமைப் பீடங்களும் நிதானம் இழந்து செயல் பட்டதின் விளைவு இரு தரப்புக்குமே தோல்வியாக முடிந்தது.நீதித்துறையின் சுறுசுறுப்பான செயல் பாடு பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் சவுத்ரி, நீதியை நிலை நாட்டும் முகமாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ஆடித்தான் போனார் அதிபர் முஷாரஃப்.
பாகிஸ்தானின் மாற்றங்கள் ஏற்றங் களை நோக்கிச் சென்றாலும், தமது அதிகார வரம்புக்கு ஏமாற்றங்களையே பரிசாக அளிக்கும் என்பதை உணர்ந்து கொண்டார்.பெனாசிருடன் வைத்துக் கொண்ட ரகசிய அதிகார பகிர்வு குறித்த உறவும் கராச்சி குண்டு வெடிப்பு சத்தத்தில் மாயமாய் மறைந்து போனது.
பாகிஸ்தானில் முஷாரஃபின் பிடி நழுவியதோடு இந்த துணைக் கண்டத் தில் அமெரிக்காவின் பிடி நழுவும் போக்கு நாளோருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யா, சீனா, உஸ்பெ கிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தி இப்பிராந்தியத்தில் சீனாவும், ரஷ்யாவும் வலுப்பெறுவதை அமெரிக்கா வெளிப் படையாகக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், உள்ளூர நடுக்கத்துடன் தன் கைவசம் உள்ள பாகிஸ்தானை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு பாகிஸ்தானின் ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க மறைமுக காரண மாகவே மாறிவிட்டது.
இந்தியாவில் அணு ஆற்றல் ஒப்பந்தத் தில் மறைமுக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் முஷாரஃபை கொம்பு சீவி விட்டிருக்கிறது விளைவு பாகிஸ்தான் ஜனநாயகம் அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது.
நாளை அது புதைபொருள் ஆராய்சிக் குரிய ஒன்றாக மாறக்கூடும்.பாகிஸ்தானின் ஒற்றைத் தனி மனிதராய் முஷாரஃப் விளங்குகிறார். அவருக்கு ஆத்மார்த்தமான நட்பாக அதிபர் புஷ் மட்டுமே விளங்குகிறார். ஜனநாயகம் என்பது இவர்கள் இருவரின் நட்பு மட்டும் அல்லவே!
பாகிஸ்தான் இன்று எரிமலையாய் தகித்துக் கொண்டிருப்பதாகவே அங்கி ருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எரிமலையின் மேலிருந்து மகுடி வாசிக்கும் முஷாரஃபை நினைத்தால் பரிதாபம் ஏற்படுகிறது

குஜராத் இனப்படுகொலை கொந்தளிக்கும் கண்டனக் குரல்கள்

குஜராத் இனப்படுகொலை கொந்தளிக்கும் கண்டனக் குரல்கள்
இந்துக்கள் இதுவரை இப்படி அறியப்படவில்லைலி
ரவிசங்கர் (இந்து ஆன்மீகத் தலைவர்)

'வாழும் கலை' என்ற அமைப்பின் குருவாக அழைக்கப்படுபவரும் ஹிந்து சமயத்தின் மரியாதைக்குரிய ஆன்மீக சாமியாராக போற்றப்படுபவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்கு மூலங்கள் குறித்த தெஹல்கா பதிவுகள் தம்மை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியதாகக் குறிப்பிட்டார்.
''ஹிந்துக்கள் இத்தகைய கொடும் செயல்களை செய்பவர்களாக இதுவரை அறியப்படவில்லை'' என்ற அவர், கொலை செய்வதும் எரிப்பதும் ஹிந்து சமுதாயத்தின் இயல்பு அல்ல என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்து மதத்திலிருந்து நீக்க வேண்டும்லி சுவாமி அக்னிவேஷ் (இந்து ஆன்மீகத் தலைவர்)
குஜராத் இனப்படுகொலையாளர்களை இந்து மதத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று சர்வதர்ம சன்சாத் அமைப்பு (இந்து மத நாடாளுமன்றம்) வலியுறுத்தி உள்ளது. சமூக சேவகர் சுவாமி அக்னி வேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற முக்கிய மதத் தலைவர்கள் இதில் அங்கம் வகிக்கின் றனர். 'ஹிந்து மதம் ஓர் அபாயம்' என்ற தவறான ஒரு கருத்துருவாக்கத்தை சுயநலத்துடன் செயல்படும் ஹிந்துத்துவ அரசியல் கிரிமினல்கள் உருவாக்கி விட்டதாகவும் நாகரீகம் முன்னேறிய சமூகத்தில் வாழும் நாம் இத்தகை யவர்களை தண்டிப்பதிலும் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என்றும் சுவாமி அக்னிவேஷ் கூறினார்.
பிரதமர் இதற்கு பதில் சொல்லட்டும்லி அருந்ததிராய் (பிரபல எழுத்தாளர்)
குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படு கொலை என்பது மதவெறியைக் கிளப்பி மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனே நடந்த தாகும். ஏனெனில் அதற்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோடி அங்கு படுதோல்வி அடைந்திருந்தார்.
குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை சில முக்கிய வினாக் களை எழுப்பியுள்ளது. குஜராத் இந்தியாவில் ஒரு அங்கம்தானா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டங்கள் குஜராத் துக்குப் பொருந்தாதா? குஜராத்தில் தற்போது முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர்.
முன்பு அங்கிருந்தவர்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள்? எப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள்? இக்கேள்விகளுக்கெல்லம் பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும்.
இந்தியா என்ற உடலின் ஒரு பகுதி அழுகிப் போய் அது இப்போது உடல் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டி ருக்கிறது. பாசிசம் வந்து விட்டால் நான் இந்துவாக இருந்தாலும் அது தனக்கு உதவாது என்று புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்திருக்கிறார்.
லி தீஸ்தா செடல்வாட் (மனித உரிமைப் போராளி
இந்த தெஹல்கா பதிவுகளை ஆதாரமாக வைத்து மோடி உள்ளிட்ட சங்பரிவரத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டம் குஜராத்திற்குப் பொருந்தாதா?
நியாய நெறி பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதை இல்லைலி பிரதமர் மன்மோகன்சிங்
குஜராத் இனப்படுகொலை குறித்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்த போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கினார் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி. இத்தகைய சக்திகளுக்கு நீதி நெறிகளைப் பற்றிப் பேச தகுதி கிடையாது.
பாஜக ஆட்சியில் நடந்த ஆக்ரா உச்சி மாநாடு குளறுபடிகளுக்கும் அந்நிய தீவிரவாதிகளின் ஊடுருவலின் போது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த இவர்களின் மத்திய ஆட்சி தூங்கிக் கொண்டிருந்தது என்றும் சூடாகக் கேட்டார்.
மனிதத்தன்மையற்ற செயல் லி சோனியா காந்தி
குஜராத்தில் நடைபெற்றவை மனித குல விரோதமானவை என காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்திருக் கிறார். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாளர்கள் தங்களது ஒப்புதல் வாக்குமூலங்களை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டதற்கு பின், முதன்முறையாக சோனியாகாந்தி தெரிவித்துள்ள கருத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திரா ஒருமைப்பாடு விருது வழங்கும் விழாவில் சோனியா காந்தி பேசினார். இந்திய சமூகமும் அனைத்து காங்கிரஸ்காரர்களும் இந்த தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.
நாம் இந்த மதவாத சமூக விரோத சக்திகளை எதிர்த்துப் போராடாமல் இருப்பின் அத்தகைய சக்திகள் நமது மதசார்பின்மை கொள்கைக்கும் நாட்டின் மக்களாட்சி கட்டமைப்புக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்திரா காந்தி ஒருமைப்பாட்டுக்கான விருது பந்துக்வாலா மற்றும் ராம்புன்யானி இருவருக்கும் விருது வழங்கப்பட்டது.
குஜராத் இனப்படுகொலை ஒட்டுமொத்த நாட்டிற்கே கேவலம் லி மாயாவதி
21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப்படு கொலை ஒட்டுமொத்த நாட்டுக்கே மிகப்பெரிய கேவலம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் செல்வி மாயாவதி தெரிவித்திருக்கிறார்.
2002ல் நிகழ்ந்த இனப்படுகொலை அனைத்துக்கும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறிய மாயாவதி தெஹல்கா வெளிப்படுத்திய உண்மைகளால் ஒரு மாநில அரசு உள்நோக்கத்துடன் செய்த படுகொலை களும், அதற்கு பாரதீய ஜனதா மற்றும் ஹிந்துத்துவ சக்திகள் ஈடுபடுத்தப்பட்ட விதமும் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் செல்வி மாயாவதி தெரிவித்திருக்கிறார்.
மோடியையும், அத்வானியையும் உடனே கைது செய்ய வேண்டும்!பிரதமரிடம் கொந்தளித்தார் லாலு
குஜராத் இனப் படுகொலையாளர் பாசிஷ மோடியையும் அவரது செயலுக்கு வக்காலத்து வாங்கிய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக்கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
தெஹல்கா ஊடகத்தின் வாயிலாக வெளியான உண்மைகள் உலுக்கத் தொடங்கிடயுள்ள சூழலில் மதசார்பின் மையை கடைப் பிடிக்கும் நாகரீக அரசியல்வாதியும், நெஞ்சுரமும் மிக்க தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது குமுறலை வெளிப்படுத்திய தோடு தனது கோரிக்கையையும் வலியுறுத்தினார்.
தெஹல்கா வெளியிட்ட வீடியோ பதிவுகளின் அடிப்படையில் நரேந்திர மோடியை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 302ன் படியும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி படியும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்வானியையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குஜராத் படுகொலைகள் குறித்து மோடி மற்றும் சங்பரிவார் சக்திகளை நோக்கி எங்கள் விரல்கள் நீண்டபோது. நாங்கள் பொய்யுரைப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் இன்று பாபு பஜ்ரங்கியும், குஜராத் அரசு வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியாவும் ஒப்புக் கொண்டிருப்பது நாங்கள் ஏற்கெனவே கூறியது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்.
ரயில்வே துறை கோத்ரா விபத்து குறித்து பானர்ஜி கமிஷனை அமைத்தது. அது தனது விசாரணை அறிக்கையின் முடிவில் கோத்ரா ரயில் எரிந்தது விபத்து தான் சதிச்செயலை அல்ல என்று தெரிவித்திருந்தது. இதைக் குறிப்பிட்ட லாலு, ''நாம் இதை அன்றே சொன்னோம். தெஹல்கா இரண்டாவது முறையாக நிருபித்துள்ளது'' என்றார்.
இந்திய மக்களை பிளவுப்படுத்த பாப்ரி மஸ்ஜிதை நோக்கி ர(த்)த யாத்திரை நடத்திய அத்வானியை தடுத்து நிறுத்தி முதன் முறையாக கைது செய்தவர் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச் செயல் ஒடுக்கப்பட வேண்டும் லி குல்தீப் நய்யார் பத்திரிக்கையாளர்
அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவது எப்படி ஒரு அல்ப சந்தோஷத்துக்குரிய விஷய மாக மாறி மோடிக்கு வாக்குகளை அதிகரிக்க உதவுகிறது? இது உண்மை என்றால் இந்த குற்றம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் தெரிவித் துள்ளார்.
தெஹல்கா புலனாய்வு: அரசியல் கட்சிகள் இதை செய்திருக்க வேண்டும்லிநீதியரசர் ராஜேந்திர சச்சார்
குஜராத் மாநிலத்தில் மதவெறி பாசிச சக்திகளுக்கு எதிராக உறுதியான வகையில் அங்குள்ள அரசியல் கட்சிகள் போராடாதது வருத்தத்தை அளிக்கிறது. பல்வேறு ஊடகங்களும் குஜராத் முஸ்லிம் மக்கள் மீதான இனப்படு கொலைகளை வெளியுல கிற்கு கொண்டு வந்திருந்த போதிலும் அடிப்படையில் அங்குள் அரசியல் கட்சிகள் தான் அதைச் செய்திருக்க வேண்டும் என நீதியரசர் ராஜேந்தர் சச்சார் கூறியுள்ளார்

Tuesday, November 6, 2007

இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த உலகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையில் (குஜராத் 2002) ஈடுபட்ட கயவர்களின் முகத்திரையை தெஹல்கா

இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த உலகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையில் (குஜராத் 2002) ஈடுபட்ட கயவர்களின் முகத்திரையை தெஹல்கா செய்தி ஏடு கிழித்தது. அதனைத் தொடர்ந்து குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சர், உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாட்டின் முன்னணி மனித உரிமை அமைப்புகள்லிகுடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.2002ல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையில் முதலமைச்சர் நரேந்திரமோடி அன்றைய உள்துறை அமைச்சர் கோர்தன் ஜடாஃபியா, அன்றைய அகமதாபாத் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்யவும், அவர்களது சொத்துக்களை அழிக்கவும் திட்டமிட்டு சதி செய்ததை தெஹல்கா புலனாய்வு குழு சந்தேகமின்றி நிரூபித்துள்ளது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் அவர்களது மொத்த நிர்வாகமும் இந்த இனப் படுகொலைகளுக்காக திட்டமிட்டது மட்டு மின்றி அவர்களை அழித்தது மட்டுமின்றி கொலை யாளிகள், கற்பழிப்புக் குற்றவாளிகள் அனைவருக்கும் பத்திரமாக மறைந்து வாழ்வதற்கும் உறுதி அளித்துள்ள னர்.
மதசார்பற்ற கொள்கையின் அடிப்படை அம்சங் கள் கூட மீறப்பட்டன. மக்களின் வாழ்வு, சுதந்திரம், கண்ணியம் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் அரசியல் சாசன பொறுப் புணர்வை துறந்தது மோடி அரசு. நீதித்துறையின் முழு இயக்கமும் கோத்ரா விஷயத்தில் கேள்விக் குறியாக்கப் பட்டது.
2002 குஜராத் இனப்படுகொலையின் போது மொத்த மாநில நிர்வாகம் எவ்வாறு ஈடுபட்டது என்பது குறித்தும் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் தெஹல்கா ஒளிப்பதிவு கோர்வைகளாக வெளி வந்துள்ளன.
அதில் 'குஜராத் மாநில அரசு வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியாவின் வாக்குமூலத்தில் முஸ்லிம் இனப்படு கொலை நாள் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிநாளாக கொண்டாடப் படவேண்டும் என்றும் ஒவ்வொரு நீதிபதியும் தன்னை தங்களது சேம்பருக்கே அழைத்து எனக்கு முழு அபிமானத்தையம் ஆதரவையும் தெரிவித்ததோடு, முழு ஒத்துழைப்பையும் தேவையான நேரத்தில் தருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக் கிறார்கள். ஏனெனில் அடிப்படையில் அவர்கள் ஹிந்துக்கள் என்றும் அவர் மதவெறிக் கொப்பளிக்க தெரிவித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்னை சிறையிலிருந்து வெளியே எடுப்பதற்காக நரேந்திரமோடி எனக்காக மூன்று முறை நீதிபதிகளை மாற்றினார் என பாபு பஜ்ரங்கி என்பவர் தெரிவித்துள்ள ஒப்புதலையும், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மோடி தங்களுக்கு மூன்று நாட்கள் வழங்கியதாகவும் நீங்கள் எந்த வன்முறை வேண்டுமானாலும் செய்து கொள்ள லாம் என்று அனுமதி அளித்ததையும் குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
நரேந்திரமோடியை உடனடியாக பதவி நீக்கம் செய்து குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.ய் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும். நடப்பு காலகட்டத்தில் குஜராத்தில் தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரணை மேற்கொண்டு பாரதீய ஜனதாவின் அரசியல் கட்சி ரத்து அங்கீகாரத்தை செய்ய தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெஹல்கா பதிவுகளில் கொலையாளிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் மற்றும் சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகள் என்று அறிவிக்க வேண்டும், தெஹல்கா ஒளிப்பதிவு ஆதாரங்களில், குற்றவாளிகள் தாங்கள் இத்தகைய அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் என்று பெருமையுடன் அறிவித்தார்கள். கொள்ளையடித்த திலும், குண்டுகள் உற்பத்தி செய்ததையும், ராக்கெட்டுகள் உற்பத்தி செய்ததையும் ஒப்புதல் வாக்குமூலமாக கூறியதன் அடிப்படையில் உச்சநீதி மன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை அமைக்கப் பட வேண்டும்.
நான்டெடில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் பெரிய அளவில் சங் பரிவார் சக்திகள் வெடிகுண்டுகள் தயாரித்து பிரத்தியேக பயிற்சி எடுத்து அப்பாவிகளைக் கொன்றதை தெஹல்கா ஒளிப்படப் பதிவுகள் உறுதி படுத்தியுள்ளன. எனவே நாட்டில் நடைபெற்றுவந்துள்ள சங்பரிவார் சதிகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் இப்போதே

Friday, November 2, 2007

குஜராத் முஸ்லிம்கள் அழிப்பு!

குஜராத் முஸ்லிம்கள் அழிப்பு! அம்பலப்படுத்தியது தெஹல்கா புலனாய்வுக்குழு
அபூசாலிஹ்



























உலகம் தோன்றிய நாள் முதல் மனித உருவில் அலையும் மிருகங்கள் வந்திருக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களது அன்றாட நடவடிக்கைகள் இருந்தாலும் அவர்களது எண்ணத்தாலும் செயலாலும் ரத்தம் குடிக்கும் கொடிய மிருகங்களை விட மோசமாகவே நடந்து கொண்டார்கள்.
நாகரீகம் வளர வளர மனித உருவில் நடமாடும் மிருகங்களின் உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு, இத்தகையப் பிறவிகளால் பொது மக்களுக்கு ஆபத்து குறைய தொடங்கியது.
தனிமனிதர்களாக இருந்து மனித இரத்தத்தை சுவைத்தால் அடையாளம் காணப்படுவோம் சட்டத்தின் பிடியில் சுலபமாக சிக்கிக் கொள்வோம். தப்புவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்பதற்காக சக மனித உயிர்களை துன்புறுத்தி இன்பம் காண்பதற்காகவே 'இனவெறிக் கொள்கை கள்' உருவாக்கப்பட்டன.
ஜெர்மனி ஹிட்லரின் நாசிசமும், இத்தாலியின் பாசிசமும், இந்தியாவில் ஜனித்த ஹிந்துத்துவமும் இத்தகைய ரகத்தை சேர்ந்தவைகள் தான்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இனப்படுகொலைகளை நிகழ்த்திய நாசிச பாசிச சக்திகள் கடுமையாக தண்டிக்கப்பட்டன. மனித உரிமைக் கொள்கைகள் எழுச்சி பெற்றன. தனி மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது.
சுதந்திரம் பெற்ற இந்தியா தனது குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப் பையும் நிம்மதியையும் உறுதிப்படுத்த வேண்டிய கடுமையான சவால் நிறைந்த பணியை நிறைவேற்றும் வேளையில், எப்படி மனித குல விரோத 'சங்பரிவார்' சக்திகளின் மீதான கண்காணிப்பை கோட்டை விட்டார்கள் என்று உலகம் முழுவதும் உள்ள நடுநிலையாளர்களின் மனதில் தற்போது கேள்விகள் எழுகின்றன.
அறுபது ஆண்டுகளாக நாட்டில்
நிகழ்ந்த ரத்தக்கறை படிந்த (காந்தி கொலை தொடங்கி) சம்பவங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையிலும் அவர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதில் ஏன் அலட்சியம்?
கோத்ரா என்ற இடத்தில் நடை பெற்ற ரயில் பெட்டி விபத்து நடந்த சில மணி நேரங்களில் எவ்வாறு பாசிசவாதி கள் ஒருங்கிணைகிறார்கள். கச்சிதமாக திட்டமிடப்படுகிறது. முஸ்லிம்களின் உயிர்கள், முஸ்லிம் பெண்களின் மானம், அவர்களது பொருளாதாரம் எப்படி திட்டமிட்டு சூறையாடப்படுகிறது. அப்பாவிகளின் உயிர்களைக் குடிக்க வெறித்தனமாய் அலைந்த அந்த வெறி நாய்களை உருவாக்கிய அமைப்புகள், பிணங்கள் விழுந்து கொண்டிருக்கும் போதும் ராணுவத்தை அனுப்ப மறுத்த ஒரு மத்திய அரசு, குதறப்பட்ட மக்களின் கதறல்களையெல்லாம் ஆணவக்காரர் களின் வெறிக்கூச்சலால் வெளியே கேட்காமலேயே போய்விட்டது. சொந்த நாட்டிலேயே அகதிகளாய் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள்.... அது ஆயிற்று ஐந்து ஆண்டுகாலம்.
21லிம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகள் பாதுகாப்புடன் உலா வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களைப் பார்த்து நாக்கை வெட்டு, தலையை வெட்டு என்று நரித்தனமாக ஊளையிடுகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு சதுர அடி நிலத்தையும் குஜராத்தாக மாற்றுவோம் எனக் கொக்கரிக்கிறார்கள்.
தாங்கள் செய்த படுகொலைகளை தாங்களே ஆண்டு கொண்டிருப்பதால் மறைத்தார்கள்.
இந்திய நாட்டை தலைகுனியச் செய்த இந்த நூற்றாண்டின் இனப்படு கொலையாளர்கள் எவ்வாறு அதைச் செய்தார்கள். எவ்வாறு சட்டத்தை மீறினார்கள். யாருடைய துணிச்சலில் இதைச் செய்தார்கள் என்பது குறித்து இந்தியத் திருநாட்டின் பெரும்பாலான ஊடகங்களுக்கு அக்கறையில்லை.
உலகை உலுக்கிய அந்த உண்மை களை வெளிக்கொண்டு வர, கடும் ஆயுதங்களுடன் நடமாடிய அந்த மனித மிருகங்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க ஆறு மாதங் கள் கடினமாக உழைத்து 'சங்பரிவார்' குறித்த மேற்படிப்பு ஆராய்சிக்காக வந்திருக்கிறோம் எனக்கூறி சங்பரிவார் கிரிமினல்களை நோக்கி தெஹல்கா புலனாய்வு பத்திரிகையாளர்கள் புறப்பட்ட னர்.
படுபயங்கர ஆயுதங்களையும் அதை விட பயங்கர நச்சு சிந்தனை களையும் கொண்ட சங் பரிவார் பயங்கரவாதிகளை சட்டைப் பட்டன் அளவே உடைய இரண்டு கேமராக் களுடன் சந்தித்தனர்.

அனைவருக்கும் தெரியும் 2002ல் நடந்த சதிகளின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? யார்? என்ற விவரம். ஆனால் இப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? செய்ததற்கு வருந்து கிறார்களா? அல்லது தாங்கள் செய்த குற்றச் செயல்களுக்கு யார் மீதாவது பழி போடுகிறார்களா? என்பதையெல்லாம் அறிவதற்காக அந்த நெஞ்சுரம் கொண்ட புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.
அந்தக் கொடியவர்கள் வாய் திறந்தார்கள். இதயம் உள்ளவர்கள் அனைவரும் வாய்மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
''இந்தப் புலனாய்வில் காவல்துறை நீதித்துறை என்ற தூண்களுக்கு நடுவில் சராசரி இந்தியன் நிர்வாணமாக நிற்பதைப் போன்ற ஒரு நிலை ஏற்பட்டது'' என தெஹல்கா பத்திரிகையின் செய்தி ஆசிரியர் சகோதரி ஹரிந்தர் பவேஜா தெரிவித்தார்.
இரண்டு அரசு வழக்கறிஞர்கள் தங்கள் தொழில் தர்மத்துக்கு விரோதமாக கொடும் குற்றவாளிகள் தப்புவதற்கு உதவியதையும் குற்றவாளிகளின் தரகர் களாவும் செயல்பட்டனர். சட்டத்துறையே பணத்துக்காகவும், இனவெறிக்காவும் அப்பாவிகளின் உடல்களை கூறுபோடும் கொடு வாட்களாக மாறின.
அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அப்பாவி மக்களுக்கு தீங்கிழைக்கப்பட்டது. குஜராத் அரசு அமைத்த நானாவதி ஷா கமிஷன் ஐந்து ஆண்டுகாலம் ஆகியும் உண்மை நிலையை கண்டறியும் முயற்சியில் இறங்கவேயில்லை.
காவல்துறை மறுசீரமைக்க வேண்டும்; இது அவசியமான ஒன்று என புலனாய்வுக்குழு தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இனப்படுகொலையை நேரில் கண்ட சாட்சிகள். நீதி என்பது குஜராத்துக்கு வெளியில்தான் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக் கிறார்கள். நீதித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இந்திய தேசத்தின் இழிவு. இந்த இழிவை நீக்க ஒவ்வொரு இந்தியனும் போராட வேண்டும்.
இனப்படுகொலைகள் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின், அரசாங்கத்தின், காவல்துறையின், நீதித்துறையின், மனித உரிமை அமைப்புகளின் கருத்துக்களை இதுநாள் வரை கேட்டறிந்துள்ளோம்.
இனி தெஹல்காவின் சிறப்பு செய்தியாளர் ஆசிஸ்கெதானின் வேதனைக்குரிய ஆறு மாத காலம் நீட்டித்த புலனாய்வின் மூலம் குற்றவாளி களின் வாக்குமூலங்களை நாம் கண்டறியப் போகிறோம்.
ஜெர்மனியைப் போன்று, இத்தாலியைப் போன்று குஜராத்திலும் எவ்வாறு திடீரென்று பெருங்கூட்டம் ரத்த வெறி பிடித்து அலையும் கூட்டமாக மாறுகிறது.
ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டு களுக்குப் பிறகும் காங்கிரஸ் அரசு இந்த பாதகர்களின் செயல்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

இதைப்போன்ற விடை தெரியாத கேள்விகள் நம்முன் விஸ்வரூப மெடுக்கின்றன.மனிதகுல விரோதிகள் ஒவ்வொரு வரின் வாக்கு மூலங்களையும் படிக்கும் போது உங்களுக்கு பல சொற்றொடர் களுக்கு உங்களுக்கு பொருள் புரியத் தொடங்கும்.
• ஹிந்துத்துவ பயங்கரவாதம் உலகின் மிக மோசமான பாசிசவாதம்.
• காட்டுமிராண்டித்தனம் என்பது இது தான்.
• இதயம் இரண்டாக நொறுங்கி இரத்தம் சொட்டுவது போன்ற உணர்வு என்றால் இதுதானா?
உங்கள் நினைவு அடுக்குகளில் ஏறிக்கொண்டு இனி எப்போதுமே கேள்விகளை எழுப்பி இம்சிக்கும் விவரங்களை படிக்கத் தொடங்குங்கள்

பெட்ரோல் டேங்கரால் பள்ளிவாசலை நொறுக்கினோம்...

பெட்ரோல் டேங்கரால் பள்ளிவாசலை நொறுக்கினோம்... பிரகாஷ் ரத்தோட் & சுரேஷ் ரிச்சர்ட்நரோடா பாட்டியாவில் சங்பரிவார் கலவரங்களை தாங்கள் நினைத்தபடி நடத்தி தங்களது(?) திறமையை நிரூபித் தனர். பிரகாஷ் ரத்தோட் மற்றும் சுரேஷ் ரிச்சர்ட் என்ற இரண்டு காவி தீவிரவாதி களும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஆகஸ்ட் 12, 2007 அன்று அளித்தனர்.
தெஹல்கா: பாட்டியா சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்களா?
ரத்தோட்: இல்லை. பிபின் வெளியே வந்து விட்டார். சசிகாந்த் என்ற டுனியா மட்டுமே உள்ளே இருக்கிறார்.
தெஹல்கா: பிபின் எங்கே இருக்கிறார்?
ரத்தோட்: எப்போதும் கிருஷ்ணா நகரில் இருப்பார். ஆனால் யாருக்கும் தெரியாது.தெஹல்கா: அவர் அந்த நேரமும் அங்குதான் இருந்தாரா?
ரத்தோட்: அவர் மட்டுமில்லை. எல்லா பையன்களும் அங்குதான் இருந்தார்கள். அவர் எல்லோருக்கும் சாமான் (ஆயுதங்கள்) விநியோகித்தார்.
தெஹல்கா: வாள்கள் போன்ற வையா?
ரத்தோட்: இல்லை. இல்லை. சிலருக்கு வாட்கள் மற்றும் திரிசூலங்கள் வழங்கப்பட்டன. சுரேஷ் ரிச்சர்டை தெரியுமா? அவரை சந்தியுங்கள். துப்பாக்கியைத் தவிர எல்லா ஆயுதங் களையும் அவர் வைத்திருந்தார்.
தெஹல்கா: இது போதுமா விநியோகிக்க?ரத்தோட்: குட்டா என்று ஒரு மனிதன் சிறையில் இருக்கிறார். அவர் பரோலில் வெளிவந்த போது ஓடி விட்டார். அவர் ஏராளமான பேரைக் கொன்றிருக்கிறார்.
தெஹல்கா: பிபின் அப்போது எங்கிருந்தார்?
ரத்தோட்: நாங்கள் முதலில் அவர்களை சிதறடித்தோம். பிபின் பஞ்சாபிடம் வந்தோம். ஏராளமான பேர் அவர்களோடு இருந்தார்கள். நாங்கள் நுழையும் போதே அவர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்றே கோஷம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) நாம் கற்பித்து கொடுக்க வேண்டிய பாடத்தை தொடங்கி விட்டோம். நெருப்பு எரியத் தொடங்கி விட்டது. முஸ்லிம்களை இழுத்து வரச் சொன்னோம்.
தெஹல்கா: முஸ்லிம்கள்?
ரத்தோட்: பின்னர் நாங்கள் அவர்களை அடித்தோம். அவர்கள் ஓடத் தொடங்கினார்கள். அவர்களில் ஒன்று அல்லது இரண்டு பேரை நெருப்பில் தூக்கிப் போட்டோம்.
தெஹல்கா: சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் அந்தக் கூட்டத்தில் உண்டா?
ரத்தோட்: அவர் மிக நன்றாக சண்டை போடுவார். குட்டா, நரேஷ் சரா, இந்த மூன்று பேரையும் பார்த்து
முஸ்லிம்கள் பயப்பட ஆரம்பித்தார்கள். ஏன் போலீஸ்காரர்களுக்கு கூட இவர்கள் மூவரைக் கண்டால் நடுக்கம் தான்.
தெஹல்கா: மோடி வந்தாரா?
ரிச்சர்ட்: கூட்டமாக அவர்களைக் கொன்று முடித்த அன்று மாலை 7.30 மணி இருக்கும் மோடி வந்தார். ரோஜா மாலைகளை எனது சகோதரிகள் மோடிக்கு அணிவித்தனர்.
தெஹல்கா: நரேந்திர மோடியா வந்தார்.
ரிச்சர்ட்: ஆமாம். நரேந்திர மோடி தனது கறுப்பு பூனைப் படைகளுடன் வந்திருந்தார். அவரது அம்பாசிடர் காரிலிருந்து இங்கு தான் இறங்கினார். என்னுடைய எல்லா சகோதரிகளும் அவருக்கு ரோஜா மாலைகள் அணி வித்தனர். பெரிய மனுஷன். ரொம்பப் பெரிய மனுஷன்.
தெஹல்கா: அவர் சாலையைக் தாண்டி வந்தாரா?
ரிச்சர்ட்: இங்குதான் அவர் வந்து போனார். நரோடாவில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க அவர் வந்திருக்கிறார்.
தெஹல்கா: அன்று தான் நரோடா சம்பவங்கள் நடந்தன இல்லையா?
ரிச்சர்ட்: அந்த மாலை நேரத்தில் தான்.
தெஹல்கா: அவர் வந்தது ஐந்து மணிக்கா? ஏழு மணிக்கா?
ரிச்சர்ட்: பிப்ரவரி 28 ஆம் தேதியன்று ஏழு மணியிலிருந்து ஏழரை மணிக்குள் மோடி வந்தார். நம்முடைய ஆதிவாசிகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். மோடி வந்த ஏழரை மணிக்கு மின்சாரம் இல்லை. எல்லாமே கலவரங் களால் சாம்பலாகிவிட்டன.
(மேலும் தொடர்கிறார் ரிச்சர்ட்)
ரிச்சர்ட்: நாங்கள் அனைத்தையும் கொளுத்தி முடித்து விட்டு திரும்பினோம். நாங்கள் களைப்படைந்து விட்டோம். பேட்டரிகள் எரிந்து கொண்டிருந்தன. கேஸ் சிலிண்டர்களும் எரிந்து கொண்டி ருந்தன. சில பன்றிகள் எங்களுடைய ட்ரக்குகளில் தூங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் பன்றிகளைக் கொன்றோம். நாங்கள் நான்கைந்து பேராகவே பல பன்றிகளைக் கொண்டு வந்தோம். பின்னர் அந்தப் பன்றிகளை பள்ளிவாசல் களில் தொங்கவிடப்பட்டன. பன்றி களுக்கு மேல் பள்ளிவாசல்களில் காவிக் கொடிகளை பறக்க விட்டோம். நாங்கள் பள்ளிவாசல்களை நொறுக்க முயற்சித் தோம். ஆனால் அவை எளிதில் உடைய வில்லை. டாங்கர் ஒன்று எங்கள் சகோதரர்களில் ஒருவர் தந்தார். பெட்ரோல் நிரப்பிய டேங்கரால் மோதச் செய்தோம். மிகவும் சிரமப்பட்டுதான் பள்ளிவாசலை நொறுக்கினோம்.
தெஹல்கா: கற்பழிப்புகள் நடந்த தாகச் சொல்கிறார்களே?
ரிச்சர்ட்: இங்க பாருங்க. நாங்க ஒன்றும் பொய் சொல்லவில்லை. எங்கள் அம்மன் சத்தியமா சொல்றேன் (பக்கத்தில் சாமி படம் இருக்கிறது) ஏராளமான முஸ்லிம் பெண்கள் கொல்லப்பட்டு கொளுத்தப்பட்டு வீசப்பட்டனர். எங்களது ஹிந்து சகோதரர்கள். வி.எச்.பி தோழர்கள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம் பெண்களை சுவைத்தோம். என் மனைவி அருகில் இருக்கிறாள். இருந்தாலும் சொல்கிறேன். பழங்களைப் போல இருந்த அவர்களை முழுக்கச் சாப்பிட்டோம். நன்றாக சுவைத்தோம். நான் ஒரு தடவை அந்தப் பழத்தினை சுவைத்தேன்.
தெஹல்கா: ஒரு தடவை தானா?
ரிச்சர்ட்: ஒரு தடவை தான். பின்னர் நான் கொல்ல புறப்பட்டு விட்டேன். (உடனே திரும்பிப் பார்த்து தனது உறவினர் பிரகாஷ் ரத்தோட் தான் பாலியல் வன்முறை செய்து கொலை செய்த பெண்ணைப் பற்றி பேசுகிறார்.) ஸ்கார்ப் டீலரின் பொண்ணு நஸீமா பழரசம் போலவே இருந்தாள். இருப்பதிலேயே டாப் ஆக இருந்த அவளை எடுத்துக் கொண்டேன்.
தெஹல்கா: நீங்கள் இருப்பதி லேயே டாப் ஆக இருப்பதை எடுத்துக் கொண்டீர்களா?
ரிச்சர்ட்: ஆமாம்.
தெஹல்கா: அவர் உயிரோடு இருக்கிறாளா?
ரிச்சர்ட்: இல்லை.மேலும் தொடருகிறான்.
ரிச்சர்ட்: 'நீங்கள் குழந்தைகளை வைத்திருந்தால் அவைகளை நான் நெருப்பில் எறிந்து விடுவேன். உங்கள் ஆன்மா கொளுத்தப்படும்' என்றேன். உயிர் பிழைத்தவர்கள் சிலர் தங்களது நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு குடிசைகளில் மறைந்து கொண்டனர். ஜெய் ஸ்ரீராம் என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டம் கோஷமிட்டது. ஆனால் அவர்கள் எந்த சமூகம் என்பதை அறிந்து கொண்டோம். பின்னர் நாங்கள் அவர்களை கொன்றோம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள்காரர் அவர்கள் எப்படி மாறினாலும் அவர்களைக் கொல்லு வார்கள். அவர்களை குறித்து வைத்துக் கொண்டு கொல்லுங்கள் என்றார்

நாங்கள் இங்கே ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்

நாங்கள் இங்கே ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்கோத்ரா எம்.எல்.ஏ. ஹரிஷ்பட்
2002ல் குஜராத் கலவரங்களில் 2500 முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப் பட்டது சாதாரண ஆயுதங் களால் அல்ல. பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியிருக்கின்றனர் காவி பயங்கர வாதிகள்.
இது கோத்ராவின் எம்.எல்.ஏ ஹரிஷ்பட்டின் வாக்குமூலத்திலிருந்து தெரிய வருகிறது.
தனது பட்டாசு தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு குஜராத் மாநிலம் முழுவதும் அனுப்பி, முஸ்லிம் களை மேல் உலகத்துக்கு அனுப்பிய தாகக் கூறியிருக்கிறார்.
2007 ஜூன் ஒன்றாம் தேதி எடுக்கப்பட்ட பேட்டி.
ஹரிஷ்பட்: லத்தியெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு துப்பாக்கி மூலமே அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆயுதப் பயிற்சி தொடங்கினேன். பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் ஆயுதப் பயிற்சியில் சேர்ந்தனர். இந்தியாவில் முதன்முதலில் ஹிந்துத்துவ ஆயுதப் பயிற்சி முகாமைத் தொடங்கியவன் நான் தான். ஏழு பேர்களுடன் 1987ல் தொடங்கி னேன்.
தெஹல்கா: 1987லேயே?
ஹரிஷ்பட்: ஆமாம். 87ல் தான். அந்த (பாப்ரி மஸ்ஜித்) இடிப்புக்கு கூட நான் பயிற்சி கொடுத்து அனுப்பினேன். நாற்பது பேருக்கு பறிற்சி கொடுத்தது நான் தான். அருகிலுள்ள சர்கெஜ் பகுதியில் பஜ்ரங்தள்காரர்களுக்கு நாங்கள் ஆயுதப் பறிற்சி கொடுத்தோம். ராஜேஷ் பைலட் கூட நாடாளுமன்றத்தில் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பிற்காக சர்கஜியிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
தெஹல்கா : பாப்ரி மஸ்ஜித் குறித்தா சொல்கிறீர்கள்?
ஹரிஷ்பட்: ஆமாம். பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்காக அஹ்மதாபாத் அருகிலுள்ள சர்கேஜியிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டது.
தெஹல்கா: பைலட் இந்த வினா வினை எழுப்பினாரா?.
ஹரிஷ்பட்: சி.பி.ஜ விசாரணை கூட வந்தது, போனது.
தெஹல்கா: உங்களுக்கு எதிராகவா?
ஹரிஷ்பட்: தூண்டிவிட்டவர் களுக்கு எதிராக.
தெஹல்கா: அப்புறம்?
ஹரிஷ்பட்: அன்றிலிருந்து ஆயுதப் பயிற்சிக் கூடம் இருக்கத்தான் செய்கிறது. அதே பயிற்சியை நமது ராணுவத்துக்கு கொடுத்தோம். ஜுடோ, கராத்தே துப்பாக்கி சுடுதல் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேவையான தற்காப்பு பயிற்சிகளையும் கொடுத்தோம். முப்பது அடி நீள கயிறு வைத்துக் கொண்டு எவ்வாறு ஏறுவது. சுவரேறி குதிப்பது போன்ற பயிற்சிகளை 15 நாளில் கற்றுக் கொடுத்து விடுகிறோம்.தெஹல்கா: 2002 கோத்ராவுக்குப் பிறகு இங்குள்ள ஹிந்துக்கள் ஆயுதங் களுடன் அலைகின்றனர். எப்படி அவர்களுக்கு ஆயுதம் கிடைக்கிறது.
ஹரிஷ்பட்: எனக்கு சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையை துப்பாக்கி தொழிற்சாலையாக மாற்றினேன். எல்லா விதமான குண்டுகளும் தயாரிக்கிறோம். டீசல் குண்டுகள். வெடி குண்டுகள். நாங்கள் தயாரித்து நாடு முழுவதும் விநியோகிக்கிறோம். நாங்கள் இரண்டு ட்ரக்குகளில் வாள்களை பஞ்சாப்பிலிருந்து வரவழைத்தோம். தாரியா கிராமத்திலிருந்து குஜராத் முழுவதும் ஆயுதங்களை விநியோகித்தோம். அந்த நேரத்தில் எங்களுக்கு மேலும் மேலும் ஆயுதங்கள் தேவையாக இருந்தது.
தெஹல்கா: துப்பாக்கிகளை எங்கிருந்து பெற்றீர்கள்?
ஹரிஷ்பட்: நாங்கள் பல நாடுகளிலிருந்து துப்பாக்கிகளை உத்தரப் பிரதேசம், மத்திப் பிரதேசம் வழியாக கடத்தினோம். கடத்திய துப்பாக்கிகளை மாநிலமெங்கும் விநியோகித்தோம். இங்கிருந்துதான் விநியோகித்தோம். முதன் முதலில் உங்களிடம் தான் இப்போது கூறுகிறேன். யாருக்கும் தெரியாத ரகசியம்.
தெஹல்கா: ஹிந்துக்கள் ஆயுதம் ஏந்துபவர்களல்ல. சமையல் கூடத்தில் மட்டுமே கத்தியை பயன்படுத்துபவர்கள் என்றே நான் அறிந்திருக்கிறேன்.
ஹரிஷ்பட்: நாங்கள் விதவிதமான ஆயுதங்களை விநியோகித்தோம். இவ்வளவு ரகங்கள் ஆயுதங்களில் உள்ளதா என மக்கள் ஆச்சரித்துடன் பார்த்தனர். எங்கள் தொழிற்சாலையில் ராக்கெட் லாஞ்சர்கள் கூட தயாரித்தோம். தெரியுமா?
தெஹல்கா: ஹரிஷ்பட் நீங்கள் கான்பூரில் இருந்து ஆயுதம் வாங்கிய தாகச் சொன்ன நேரத்தில் அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததே?
ஹரிஷ்பட்: ஏன் ஊரடங்கு உத்தரவு இருந்தால் என்ன? எதுவாக இருந்தாலும் நாங்கள் கொண்டு வருவோம்.
தெஹல்கா: எதுவாக இருந்தாலும்... ஊரடங்கு உத்தரவு அமலில் இருந் தாலுமா?
ஹரிஷ்பட்: இருந்தால் என்ன? நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் பீகாரில் இருந்தும் வாங்குவோம்.
தெஹல்கா: ஆனால் எப்படி? ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது எப்படி?
ஹரிஷ்பட்: எல்லா ஆயுதமும் வரும்.
தெஹல்கா: பக்கத்து மாநிலங்களிலிருந்தும் எல்லைக்கு அப்பாலிருந்துமா?
ஹரிஷ்பட்: ஆமாம். எல்லாவற் றையும் என்னிடம் கேட்காதீர்கள்.
தெஹல்கா: ஆனால் அவர்கள் நீங்கள் சொன்னது போல் செய்தார்கள்.
ஹரிஷ்பட்: ஆமாம் நிச்சயமாக. இது குறித்து நீங்கள் வி.எச்.பி. பொருளாளர்
ரோஹித்தை கேட்டுப்பாருங்கள். எல்லா ஏற்பாடுகளையும் அவர்தான் செய்தார்.
தெஹல்கா: அவர்களுக்கு வாள்கள் மட்டும் தான். அவர் கொடுத்தனுப்பினாரா?
ஹரிஷ்பட்: இல்லை. எல்லாம் தான். ஏற்கெனவே நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். ராக்கெட் லாஞ்சர்களை நாங்கள் தயாரித்தோம் என்று. அதனை நாங்கள் இந்த சூழ்நிலையை வைத்து பரிசோதித்துப் பார்த்தோம்.
தெஹல்கா: நீங்கள் உண்மையி லேயே ராக்கெட் லாஞ்சரைப் பற்றித்தான் கூறுகிறீர்களா?
ஹரிஷ்பட்: ஆமாம். நாங்கள் அதில் வெடி மருந்துகளை நிரப்பினோம். பின்னர் மூடி விட்டு கொளுத்தினோம். இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் பொருளாளர் ரோஹித் உங்களிடம் பேசுவார். என்று கோத்ரா எம்.எல்.ஏ வெறியன் ஹரிஷ்பட் தனது பேட்டியை முடிக்கிறார்

அஹ்மதாபாத் படுகொலைகளின் நகரம்

அஹ்மதாபாத் படுகொலைகளின் நகரம்
நரோடா, குல்பர்க், கலுபர் மற்றும் தரியாபுர் கொலைக்கும்பல் சங்பரிவாரின் ஒவ்வொரு கண் அசைவுக்கும் ஏற்ப நடந்தது.
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்த நேரத்தில் அவர்கள் முஸ்லிம்களின் நொறுக்கப் பட்ட கொளுத்தப்பட்ட வீடுகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந் தார்கள். குஜராத்தில் மிகப் பயங்கர மான படுகொலைகள் நரோடா, காவ்ன் மற்றும் நரோடா பகுதிகளில் தான் நடந்தது. உள்ளூர் பஜ்ரங்கதள் தலைவர் பாபு பஜ்ரங்கி. இவன் சதிகாரர்களில் ஒருவன். பிப்ரவரி 27 ஆம் தேதி சதிச் செயலை திட்டமிடு கிறான். வெடிகுண்டுகள் சேகரிக்கப் படுகின்றன. பாபு பஜ்ரங்கி வாட்டசாட்ட மான முரடர்களை தேர்வு செய்கிறான். வி.எச்.பி, பஜ்ரங்தள்ளைச் சேர்ந்தவர்கள் நான், நீ என்று ஆர்வத்துடன் திரண்டனர். அதன் பிறகு நடந்தது சரித்திரம் மறக்காதது.இஹ்சான் ஜாஃப்ரி என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவரை எவ்வாறு துண்டு துண்டாக வெட்டினர். நெருப்பில் எரித்தனர். இது குறித்து தெஹல்கா செய்தி யாளர்கள் உண்மையை அம்பலப் படுத்தினர்.
தெஹல்கா: எவ்வாறு ஜாஃப்ரியைக் கொன்றீர்கள்?
சாவல்: ஓ. ஜாஃப்ரி பற்றிக் கூறுகிறீர்களா?
ரொம்ப நல்லது. அவரை ஒரு கும்பல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தது. அவரை முதுகுப்புறமாக உதைத்து நான் தள்ளினேன். உடனே எல்லோரும் அவரை உதைத்தனர்.
தெஹல்கா: நீங்கள் ஜாஃப்ரியை உதைத்தீர்களா?
சாவல்: ஆமாம் அவரை உதைத்தேன்.
தெஹல்கா: அப்புறம் அவர் கீழே விழுந்து விட்டாரா?
சாவல்: கீழே விழவில்லை. அவர் தனது கையால் தள்ளினார். ஐந்து அல்லது ஆறு பேர் அவரைப் பிடித்துக் கொண்ட னர். ஒருவர் வாள் ஒன்றை எடுத்து ஜாஃப்ரியைக் குத்தினார். முதலில் அவரது கைகளை நான் வெட்டினேன். பின்னர் கால்களை வெட்டினேன். பின்னர் அவரது ஒவ்வொரு உறுப்பு களையும் கண்டதுண்டமாக வெட்டி னோம். பின்னர் உயிருடன் எரித்துக் கொன்றோம்.
தெஹல்கா: ஜாஃப்ரியின் உடலை வெட்டிக் கொண்டிருந்த போது காவல் துறை அதிகாரி எர்டா ஜாஃப்ரியைக் காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லையா?
சாவல்: அந்த நேரத்தில் யாரும் எதுவும் செய்யவில்லை. எர்டா தனது வாகனத்தில் மெகானி நகர் சென்று விட்டார். ஜாஃப்ரி கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டது அவருக்குத் தெரியாது. இவையெல்லாம் ஒரு மணியிலிருந்து ஒன்றரை மணிக்குள் நடந்தது.
தெஹல்கா: ஜாஃப்ரியின் குடும்பத் தினர் தப்பிக்க முயற்சிக்கவேயில்லையா?
சாவல்: இல்லை ஆனால் அவரது மனைவி மட்டும் காப்பாற்றப்பட்டார். அவர் ஹிந்து போல் வேடமிட்டு தப்பித்தார்.
தெஹல்கா: ஆனால் அவரது மகள்கள் காப்பாற்றப்பட்டார்கள் இல்லையா?
சாவல்: இல்லை. அங்கிருந்து யாரும் தப்பிக்கவேயில்லை. ஜாஃப்ரியின் மனைவியைத் தவிர. அவர் ஒரு ஹிந்து வேலைக்காரப் பெண்மணியைப் போல உடையணிந்து தப்பித்தார்.
தெஹல்கா: அவர் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்காததால் தப்பித்தார் இல்லையா?
சாவல்: இருக்கலாம். நான் அவரை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை.
தெஹல்கா: குல்பர்க் சொஸைட்டி எவ்வளவு பெரியது. ஏராளமான மக்கள் வாழ்ந்தார்கள் இல்லையா? அவர்கள் மீண்டும் அங்கு வாழச் சென்றார்களா?
சாவல்: எவரும் அங்கு செல்ல வில்லை. அது மூடப்பட்டு, சிறைபோல ஆகிவிட்டது. யாரும் அங்கே திரும்பச் செல்லவில்லை.
தெஹல்கா: அந்த நேரத்தில் சில பேர் தப்பித்திருக்கிறார்களே?
சாவல்: நாற்பது பேர் தப்பித்தார்கள். நாங்கள் நுழைவதற்கு முன்பு அவர்கள் ஓடிப்பிழைத்தவர்கள்.
தெஹல்கா: எப்படி குல்பர்க் சொஸைட்டிக்குள் நுழைந்தீர்கள்?
சாவல்: சிலர் கேஸ் சிலிண்டர் களைக் கொண்டு வந்தார்கள். சிலிண் டரை வெடிக்கச் செய்து மதில் சுவரை உடைத்தோம். பின்பு உள்ளே நுழைந் தோம்.
தெஹல்கா: மதில் சுவர் மிகவும் உயரமோ?
சாவல்: 15லிருந்து 20 அடி உயரம் இருக்கும்.
தெஹல்கா: அது ஒன்று அல்லது இரண்டு சிலிண்டர்களை வைத்து உடைத்து விட முடிந்ததா?
சாவல்: இரண்டு சிலிண்டர்களால்.
தெஹல்கா: வீடுகள் கொளுத்தப் பட்டதும் அவ்வாறு தானா?
சாவல்: ஆமாம்.
தெஹல்கா: இதைப்போன்று தான் பாட்டியாவில் நடந்ததா?
சாவல்: ஆமாம்

இந்த திட்டம் மோடியிடமிருந்து தான் வந்தது! லி திமன் பட்

இந்த திட்டம் மோடியிடமிருந்து தான் வந்தது! திமன் பட்தலைமை ஆடிட்டர் (எம்.எஸ். பல்கலைக்கழகம்) திமன் பட் தாக்குதலுக் கான சதித்திட்டம் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். (பேட்டி பதிவான நாள் மே 19, 2007)திமன் பட்: என் மேல் இரண்டு குற்றச்சாட்டுகள். நான் பல்கலைக் கழகத்தின் (ஙஏம) தலைமை ஆடிட்டர் நான் ஒரு வெறி பிடித்த ஹிந்து. சில சங்பரிவார்காரர்கள் என்னிடம் வந்து ஹிந்துத்துவாவை வளர்க்க வேண்டும் என்பார்கள். அவர்களிடம் நான் சொல்வேன். குச்சிகளை தூக்கி எறிந்து விட்டு ஏ.கே. 56 ரக துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் ஹிந்துத்துவாவை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். எதிரிகள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு எதிரானவர் களில் முஸ்லிம்கள் வெளிப்படையான வர்கள். ஆனால் கிறிஸ்துவர்கள் நச்சுக்கிருமிகளைப் போன்றவர்கள். மூன்றாவதாக கம்யூனிஸ்டுகள். இவர் களையெல்லாம் எதிர்க்க வேண்டுமானால் லத்திகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. தோட்டாக்களால் மட்டுமே பதிலடி கொடுக்க முடியும். நீங்கள் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக் கூடத்துக்கு செல்லுங்கள். லத்தியை தூக்கி எறிந்து விட்டு ஏ.கே 56 ரக துப்பாக்கிகளைக் கொண்ட பயங்கரவாதப் படையை உருவாக்குங்கள் என்றேன்.
கோத்ராவுக்குப் பிறகு அது குறித்து ஆலோசிப்பதற்காக முக்கிய சங்பரிவார் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்தனர். ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள், பாஜக, ஏ.பி.வி.பி மற்றும் துர்கா வாகினி போன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குழுமி இருந்தனர். நமக்கு நரேந்திர மோடியின் முழு ஆதரவு உண்டு. அப்போது அங்கு கூடிய சங்பரிவார் பிரமுகர்கள் கீழ்கண்டவாறு ஆலோசித்தனர். நமக்கு ஹிந்துக்கள் அனைவரின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் ஹிந்துக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராகத் தான் சதிகாரர்கள் எரித்தார்கள் என்று ஆவேசப்படவேண்டும். ஆனால் எரிந்தது சபர்மதி எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டி மட்டும் தானே! எல்லா ஹிந்துக்களுக்கும் கோபம் வர வேண்டுமென்றால் நாம் அடுத்த நாள் ஒரு முழு ரெயிலையும் எரிக்க வேண்டும் என்று மோடி கூறினார். அப்போது நான் அங்கே இருந்தேன். உடனடியாக கூட்டம் கூட்டப்பட்டது. ஒன்று அஹ்மதா பாத்திலும் மற்றொன்று பரோடாவிலும் நடந்தது. பெரிய தலைவர்களின் கட்டளைப்படி சங்பரிவாரின் அடுத்தக் கட்ட தலைவர்கள் அனைவரும் அங்கு சேர்ந்து கொண்டனர். 65லிருந்து 70 தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நான் கூட்டம் எங்கு நடந்தது என்பதை சொல்ல மாட்டேன். நாம் நம்முடைய செயலைத் தொடங்குவோம். காவல் துறையினர் (உணர்ச்சி வசப்பட்டு) கைது செய்தால் விடுவிக்க, வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டது. தேவையான பணம் திரட்ட ஆலோசிக்கப்பட்டது. கலாட்டாக் களில் தப்பித்த தவறி சங்பரிவார்காரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஒரு குழு அமைப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது

Web Counter Code