அஹ்மதாபாத் படுகொலைகளின் நகரம்
நரோடா, குல்பர்க், கலுபர் மற்றும் தரியாபுர் கொலைக்கும்பல் சங்பரிவாரின் ஒவ்வொரு கண் அசைவுக்கும் ஏற்ப நடந்தது.
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்த நேரத்தில் அவர்கள் முஸ்லிம்களின் நொறுக்கப் பட்ட கொளுத்தப்பட்ட வீடுகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந் தார்கள். குஜராத்தில் மிகப் பயங்கர மான படுகொலைகள் நரோடா, காவ்ன் மற்றும் நரோடா பகுதிகளில் தான் நடந்தது. உள்ளூர் பஜ்ரங்கதள் தலைவர் பாபு பஜ்ரங்கி. இவன் சதிகாரர்களில் ஒருவன். பிப்ரவரி 27 ஆம் தேதி சதிச் செயலை திட்டமிடு கிறான். வெடிகுண்டுகள் சேகரிக்கப் படுகின்றன. பாபு பஜ்ரங்கி வாட்டசாட்ட மான முரடர்களை தேர்வு செய்கிறான். வி.எச்.பி, பஜ்ரங்தள்ளைச் சேர்ந்தவர்கள் நான், நீ என்று ஆர்வத்துடன் திரண்டனர். அதன் பிறகு நடந்தது சரித்திரம் மறக்காதது.இஹ்சான் ஜாஃப்ரி என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவரை எவ்வாறு துண்டு துண்டாக வெட்டினர். நெருப்பில் எரித்தனர். இது குறித்து தெஹல்கா செய்தி யாளர்கள் உண்மையை அம்பலப் படுத்தினர்.
தெஹல்கா: எவ்வாறு ஜாஃப்ரியைக் கொன்றீர்கள்?
சாவல்: ஓ. ஜாஃப்ரி பற்றிக் கூறுகிறீர்களா?
ரொம்ப நல்லது. அவரை ஒரு கும்பல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தது. அவரை முதுகுப்புறமாக உதைத்து நான் தள்ளினேன். உடனே எல்லோரும் அவரை உதைத்தனர்.
தெஹல்கா: நீங்கள் ஜாஃப்ரியை உதைத்தீர்களா?
சாவல்: ஆமாம் அவரை உதைத்தேன்.
தெஹல்கா: அப்புறம் அவர் கீழே விழுந்து விட்டாரா?
சாவல்: கீழே விழவில்லை. அவர் தனது கையால் தள்ளினார். ஐந்து அல்லது ஆறு பேர் அவரைப் பிடித்துக் கொண்ட னர். ஒருவர் வாள் ஒன்றை எடுத்து ஜாஃப்ரியைக் குத்தினார். முதலில் அவரது கைகளை நான் வெட்டினேன். பின்னர் கால்களை வெட்டினேன். பின்னர் அவரது ஒவ்வொரு உறுப்பு களையும் கண்டதுண்டமாக வெட்டி னோம். பின்னர் உயிருடன் எரித்துக் கொன்றோம்.
தெஹல்கா: ஜாஃப்ரியின் உடலை வெட்டிக் கொண்டிருந்த போது காவல் துறை அதிகாரி எர்டா ஜாஃப்ரியைக் காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லையா?
சாவல்: அந்த நேரத்தில் யாரும் எதுவும் செய்யவில்லை. எர்டா தனது வாகனத்தில் மெகானி நகர் சென்று விட்டார். ஜாஃப்ரி கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டது அவருக்குத் தெரியாது. இவையெல்லாம் ஒரு மணியிலிருந்து ஒன்றரை மணிக்குள் நடந்தது.
தெஹல்கா: ஜாஃப்ரியின் குடும்பத் தினர் தப்பிக்க முயற்சிக்கவேயில்லையா?
சாவல்: இல்லை ஆனால் அவரது மனைவி மட்டும் காப்பாற்றப்பட்டார். அவர் ஹிந்து போல் வேடமிட்டு தப்பித்தார்.
தெஹல்கா: ஆனால் அவரது மகள்கள் காப்பாற்றப்பட்டார்கள் இல்லையா?
சாவல்: இல்லை. அங்கிருந்து யாரும் தப்பிக்கவேயில்லை. ஜாஃப்ரியின் மனைவியைத் தவிர. அவர் ஒரு ஹிந்து வேலைக்காரப் பெண்மணியைப் போல உடையணிந்து தப்பித்தார்.
தெஹல்கா: அவர் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்காததால் தப்பித்தார் இல்லையா?
சாவல்: இருக்கலாம். நான் அவரை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை.
தெஹல்கா: குல்பர்க் சொஸைட்டி எவ்வளவு பெரியது. ஏராளமான மக்கள் வாழ்ந்தார்கள் இல்லையா? அவர்கள் மீண்டும் அங்கு வாழச் சென்றார்களா?
சாவல்: எவரும் அங்கு செல்ல வில்லை. அது மூடப்பட்டு, சிறைபோல ஆகிவிட்டது. யாரும் அங்கே திரும்பச் செல்லவில்லை.
தெஹல்கா: அந்த நேரத்தில் சில பேர் தப்பித்திருக்கிறார்களே?
சாவல்: நாற்பது பேர் தப்பித்தார்கள். நாங்கள் நுழைவதற்கு முன்பு அவர்கள் ஓடிப்பிழைத்தவர்கள்.
தெஹல்கா: எப்படி குல்பர்க் சொஸைட்டிக்குள் நுழைந்தீர்கள்?
சாவல்: சிலர் கேஸ் சிலிண்டர் களைக் கொண்டு வந்தார்கள். சிலிண் டரை வெடிக்கச் செய்து மதில் சுவரை உடைத்தோம். பின்பு உள்ளே நுழைந் தோம்.
தெஹல்கா: மதில் சுவர் மிகவும் உயரமோ?
சாவல்: 15லிருந்து 20 அடி உயரம் இருக்கும்.
தெஹல்கா: அது ஒன்று அல்லது இரண்டு சிலிண்டர்களை வைத்து உடைத்து விட முடிந்ததா?
சாவல்: இரண்டு சிலிண்டர்களால்.
தெஹல்கா: வீடுகள் கொளுத்தப் பட்டதும் அவ்வாறு தானா?
சாவல்: ஆமாம்.
தெஹல்கா: இதைப்போன்று தான் பாட்டியாவில் நடந்ததா?
சாவல்: ஆமாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment