இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, November 2, 2007

குஜராத் முஸ்லிம்கள் அழிப்பு!

குஜராத் முஸ்லிம்கள் அழிப்பு! அம்பலப்படுத்தியது தெஹல்கா புலனாய்வுக்குழு
அபூசாலிஹ்



























உலகம் தோன்றிய நாள் முதல் மனித உருவில் அலையும் மிருகங்கள் வந்திருக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களது அன்றாட நடவடிக்கைகள் இருந்தாலும் அவர்களது எண்ணத்தாலும் செயலாலும் ரத்தம் குடிக்கும் கொடிய மிருகங்களை விட மோசமாகவே நடந்து கொண்டார்கள்.
நாகரீகம் வளர வளர மனித உருவில் நடமாடும் மிருகங்களின் உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு, இத்தகையப் பிறவிகளால் பொது மக்களுக்கு ஆபத்து குறைய தொடங்கியது.
தனிமனிதர்களாக இருந்து மனித இரத்தத்தை சுவைத்தால் அடையாளம் காணப்படுவோம் சட்டத்தின் பிடியில் சுலபமாக சிக்கிக் கொள்வோம். தப்புவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்பதற்காக சக மனித உயிர்களை துன்புறுத்தி இன்பம் காண்பதற்காகவே 'இனவெறிக் கொள்கை கள்' உருவாக்கப்பட்டன.
ஜெர்மனி ஹிட்லரின் நாசிசமும், இத்தாலியின் பாசிசமும், இந்தியாவில் ஜனித்த ஹிந்துத்துவமும் இத்தகைய ரகத்தை சேர்ந்தவைகள் தான்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இனப்படுகொலைகளை நிகழ்த்திய நாசிச பாசிச சக்திகள் கடுமையாக தண்டிக்கப்பட்டன. மனித உரிமைக் கொள்கைகள் எழுச்சி பெற்றன. தனி மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது.
சுதந்திரம் பெற்ற இந்தியா தனது குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப் பையும் நிம்மதியையும் உறுதிப்படுத்த வேண்டிய கடுமையான சவால் நிறைந்த பணியை நிறைவேற்றும் வேளையில், எப்படி மனித குல விரோத 'சங்பரிவார்' சக்திகளின் மீதான கண்காணிப்பை கோட்டை விட்டார்கள் என்று உலகம் முழுவதும் உள்ள நடுநிலையாளர்களின் மனதில் தற்போது கேள்விகள் எழுகின்றன.
அறுபது ஆண்டுகளாக நாட்டில்
நிகழ்ந்த ரத்தக்கறை படிந்த (காந்தி கொலை தொடங்கி) சம்பவங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையிலும் அவர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதில் ஏன் அலட்சியம்?
கோத்ரா என்ற இடத்தில் நடை பெற்ற ரயில் பெட்டி விபத்து நடந்த சில மணி நேரங்களில் எவ்வாறு பாசிசவாதி கள் ஒருங்கிணைகிறார்கள். கச்சிதமாக திட்டமிடப்படுகிறது. முஸ்லிம்களின் உயிர்கள், முஸ்லிம் பெண்களின் மானம், அவர்களது பொருளாதாரம் எப்படி திட்டமிட்டு சூறையாடப்படுகிறது. அப்பாவிகளின் உயிர்களைக் குடிக்க வெறித்தனமாய் அலைந்த அந்த வெறி நாய்களை உருவாக்கிய அமைப்புகள், பிணங்கள் விழுந்து கொண்டிருக்கும் போதும் ராணுவத்தை அனுப்ப மறுத்த ஒரு மத்திய அரசு, குதறப்பட்ட மக்களின் கதறல்களையெல்லாம் ஆணவக்காரர் களின் வெறிக்கூச்சலால் வெளியே கேட்காமலேயே போய்விட்டது. சொந்த நாட்டிலேயே அகதிகளாய் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள்.... அது ஆயிற்று ஐந்து ஆண்டுகாலம்.
21லிம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகள் பாதுகாப்புடன் உலா வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களைப் பார்த்து நாக்கை வெட்டு, தலையை வெட்டு என்று நரித்தனமாக ஊளையிடுகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு சதுர அடி நிலத்தையும் குஜராத்தாக மாற்றுவோம் எனக் கொக்கரிக்கிறார்கள்.
தாங்கள் செய்த படுகொலைகளை தாங்களே ஆண்டு கொண்டிருப்பதால் மறைத்தார்கள்.
இந்திய நாட்டை தலைகுனியச் செய்த இந்த நூற்றாண்டின் இனப்படு கொலையாளர்கள் எவ்வாறு அதைச் செய்தார்கள். எவ்வாறு சட்டத்தை மீறினார்கள். யாருடைய துணிச்சலில் இதைச் செய்தார்கள் என்பது குறித்து இந்தியத் திருநாட்டின் பெரும்பாலான ஊடகங்களுக்கு அக்கறையில்லை.
உலகை உலுக்கிய அந்த உண்மை களை வெளிக்கொண்டு வர, கடும் ஆயுதங்களுடன் நடமாடிய அந்த மனித மிருகங்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க ஆறு மாதங் கள் கடினமாக உழைத்து 'சங்பரிவார்' குறித்த மேற்படிப்பு ஆராய்சிக்காக வந்திருக்கிறோம் எனக்கூறி சங்பரிவார் கிரிமினல்களை நோக்கி தெஹல்கா புலனாய்வு பத்திரிகையாளர்கள் புறப்பட்ட னர்.
படுபயங்கர ஆயுதங்களையும் அதை விட பயங்கர நச்சு சிந்தனை களையும் கொண்ட சங் பரிவார் பயங்கரவாதிகளை சட்டைப் பட்டன் அளவே உடைய இரண்டு கேமராக் களுடன் சந்தித்தனர்.

அனைவருக்கும் தெரியும் 2002ல் நடந்த சதிகளின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? யார்? என்ற விவரம். ஆனால் இப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? செய்ததற்கு வருந்து கிறார்களா? அல்லது தாங்கள் செய்த குற்றச் செயல்களுக்கு யார் மீதாவது பழி போடுகிறார்களா? என்பதையெல்லாம் அறிவதற்காக அந்த நெஞ்சுரம் கொண்ட புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.
அந்தக் கொடியவர்கள் வாய் திறந்தார்கள். இதயம் உள்ளவர்கள் அனைவரும் வாய்மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
''இந்தப் புலனாய்வில் காவல்துறை நீதித்துறை என்ற தூண்களுக்கு நடுவில் சராசரி இந்தியன் நிர்வாணமாக நிற்பதைப் போன்ற ஒரு நிலை ஏற்பட்டது'' என தெஹல்கா பத்திரிகையின் செய்தி ஆசிரியர் சகோதரி ஹரிந்தர் பவேஜா தெரிவித்தார்.
இரண்டு அரசு வழக்கறிஞர்கள் தங்கள் தொழில் தர்மத்துக்கு விரோதமாக கொடும் குற்றவாளிகள் தப்புவதற்கு உதவியதையும் குற்றவாளிகளின் தரகர் களாவும் செயல்பட்டனர். சட்டத்துறையே பணத்துக்காகவும், இனவெறிக்காவும் அப்பாவிகளின் உடல்களை கூறுபோடும் கொடு வாட்களாக மாறின.
அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அப்பாவி மக்களுக்கு தீங்கிழைக்கப்பட்டது. குஜராத் அரசு அமைத்த நானாவதி ஷா கமிஷன் ஐந்து ஆண்டுகாலம் ஆகியும் உண்மை நிலையை கண்டறியும் முயற்சியில் இறங்கவேயில்லை.
காவல்துறை மறுசீரமைக்க வேண்டும்; இது அவசியமான ஒன்று என புலனாய்வுக்குழு தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இனப்படுகொலையை நேரில் கண்ட சாட்சிகள். நீதி என்பது குஜராத்துக்கு வெளியில்தான் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக் கிறார்கள். நீதித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இந்திய தேசத்தின் இழிவு. இந்த இழிவை நீக்க ஒவ்வொரு இந்தியனும் போராட வேண்டும்.
இனப்படுகொலைகள் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின், அரசாங்கத்தின், காவல்துறையின், நீதித்துறையின், மனித உரிமை அமைப்புகளின் கருத்துக்களை இதுநாள் வரை கேட்டறிந்துள்ளோம்.
இனி தெஹல்காவின் சிறப்பு செய்தியாளர் ஆசிஸ்கெதானின் வேதனைக்குரிய ஆறு மாத காலம் நீட்டித்த புலனாய்வின் மூலம் குற்றவாளி களின் வாக்குமூலங்களை நாம் கண்டறியப் போகிறோம்.
ஜெர்மனியைப் போன்று, இத்தாலியைப் போன்று குஜராத்திலும் எவ்வாறு திடீரென்று பெருங்கூட்டம் ரத்த வெறி பிடித்து அலையும் கூட்டமாக மாறுகிறது.
ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டு களுக்குப் பிறகும் காங்கிரஸ் அரசு இந்த பாதகர்களின் செயல்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

இதைப்போன்ற விடை தெரியாத கேள்விகள் நம்முன் விஸ்வரூப மெடுக்கின்றன.மனிதகுல விரோதிகள் ஒவ்வொரு வரின் வாக்கு மூலங்களையும் படிக்கும் போது உங்களுக்கு பல சொற்றொடர் களுக்கு உங்களுக்கு பொருள் புரியத் தொடங்கும்.
• ஹிந்துத்துவ பயங்கரவாதம் உலகின் மிக மோசமான பாசிசவாதம்.
• காட்டுமிராண்டித்தனம் என்பது இது தான்.
• இதயம் இரண்டாக நொறுங்கி இரத்தம் சொட்டுவது போன்ற உணர்வு என்றால் இதுதானா?
உங்கள் நினைவு அடுக்குகளில் ஏறிக்கொண்டு இனி எப்போதுமே கேள்விகளை எழுப்பி இம்சிக்கும் விவரங்களை படிக்கத் தொடங்குங்கள்

2 comments:

சிந்திக்க உண்மைகள். said...

மோடி இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை

தெஹல்கா தோலுரித்துக் காட்டிய குஜராத் கலவர உண்மைகள் குறித்து ?

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (அது ஒரு விபத்து என்று முடிவான வேறு விஷயம்) நடந்து முடிந்தவுடன் முஸ்லிம்களைப் பழி வாங்கும் திட்டம் அங்கிருந்த மத வெறியர்களிடம் தோன்றிவிட்டது. அவர்களுக்குத் தேவையெல்லாம் தலைவர் மோடியின் கண்ணசைப்புத்தான்.

வந்தார் மோடி. போலீஸ அழத்து அவர்களை ‘கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள், அல்லது இவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களை அடித்துக் கொல்லுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

இந்திய_ பாகிஸ்தான் பிரிவினைக்கு அப்புறம் மகா கோரமான இனப்படுகொலை ஆரம்பித்த. மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் வெறியுடன் பாய்ந்தன.

படுகொலைகளை, கற்பழிப்புகளை, உடல் உறுப்புகளை அறுத்து எறிந்ததை எவ்வளவு ஆனந்தத்துடன் தெஹல்காவிடம் சொல்கிறார்கள் அந்தக் கொலைகாரர்கள். (‘ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையைக் கொன்றேன்’).

ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கக் காப்பாற்ற வேண்டியவர் ரத்த வெறி பிடித்த வானரப்படையத் தூண்டி விட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொடூரம் காந்தி பிறந்த மாநிலத்திலா நடந்தது?

எத்தனை பேர் அந்தப் படுகொலைகளை சைக்கோத்தனத்துடன் விவரிக்கிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்த சம்பவங்களை அசை போடுகிறார்கள்.

ஒருவர் சொல்கிறார் ”மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்.’’

கொலைகாரர்களை வீடு தேடி வந்து பாராட்டிய ஒரு வெறிநாய், முதல்வர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை..

"அரசு பதில்" குமுதம் 7.11.2007
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-11-07/pg15.php

சிந்திக்க உண்மைகள். said...

மோடியின் ராம ராஜ்ஜியம்.

சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது.

இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும், அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.

எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது.

ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.

அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன் அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.

ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்” இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்? இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.

இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில் ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது.. ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்!

ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!

மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம் இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும் ஏன் தண்டிக்கவில்லை?

அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம் என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.

ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!

நன்றி: கார்கி KAARGIPAGES

Web Counter Code