இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, January 18, 2008

கே.ஆர்.நாராயணனுக்கு பாரத ரத்னா விருது

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு வழங்குவதாக அறிவிப்பதே பொருத்த மான தெரிவாக இருக்கும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கடின உழைப்பாலும், தேர்ந்த கல்வியறி வாலும் எளிமைப் பண்புகளாலும் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த கே.ஆர். நாராயணன் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்க வேண்டும் என்று கோரு கிறோம்.
இந்தியத் திருநாட்டில் வாழும் கோடான கோடி தலித் மக்கள், மற்றும் தலித் மக்களின் நலன் நாடும் சமூக உரிமை இயக்கங்களின் விருப்பமும் வேண்டுகோளும் இதுவே ஆகும்.
நாட்டு மக்களை சமய ரீதியாக பிளவு படுத்தும் பின்னணி கொண்டவர் அல்ல மறைந்த நம் கே.ஆர்.நாராயணன் 2002ல் நிகழ்ந்த குஜராத் இனப்படு கொலையைக் கண்டு மனம் பொறுக்காத கே.ஆர். நாராயணன் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக ராணுவத்தை ஏன் அனுப்ப வில்லை என நியாயம் கேட்டவர் என்பதை இந்த நாடு மறக்கவில்லை. தன் பதவிக்கு பெருமை சேர்த்த பெருமக னான கே.ஆர்.நாராயணனுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும்.

Wednesday, January 16, 2008

ஹஜ் கடமையை நிறைவேற்றிய முன்னாள் பாதிரியார்கள்
அபூசாலிஹ்

முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் என்னும் புனிதக் கடமையினை நிறைவேற்றி ஹஜ் பயணிகள் தாயகம் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
புனிதக்கடமையை நிறைவேற்றிய மகிழ்வுடன் திரும்பும் ஹாஜிகளிடையே புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முதன் முதலாக தங்களது இறைக்கடமையினை நிறைவேற்றியவர்கள் சிறப்பிடம் வகிக்கின்றனர். அத்தகைய சிறப்பிடம் பெற்ற ஹாஜிகளிடையே இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ்வின் விருந்தினர்களாக புனித ஹஜ் கடமையினை நிறை வேற்றினர்.

பலர் தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றினர். சில ஹாஜிகளின் பயணச் செலவுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளை நிறுவனங்களும் ஏற்றன.

அலி கவுதமலா என்ற முன்னாள் கிறிஸ்தவ பாதிரியாரும் தனது ஹஜ் கடமையை இவ்வாண்டு நிறைவேற்றினார்.

இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து 17 ஆயிரம் பேர் ஹஜ்ஜுக்காக சென்றனர்.

செவர்டோ ரோயிஸ் (அலி கவுதமலா கிறிஸ்தவராய் இருந்த போது உள்ள பெயர்) திருக்குர்ஆனை ஒதிய போது அதனால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவை ஓதிய போதே சத்தியதீனுல் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கிறார்.

தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் தனது வாழ்வே மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறுகிறார். குருமடம் என்ற பாதிரியார்களின் பயிற்சிக் கல்விக் கூடத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து கொண்ட செவர்டோ ரோயிஸ் அமெரிக்காவின் தெற்கு மாநிலத்தில் குயின் சிட்டியில் தனது பணியைத் தொடங்கினார்.

சிறைச்சாலைகளின் உள்ளே தனது பாதிரியார் பணியைத் தொடர்ந்தார். தனது பணியில் மிகுந்த தேர்ச்சி பெற்ற பின்னர் அனைத்து சமயங்களின் வேத நூல்களையும் படித்தார். அவர் ஆழ்ந்து படித்தவற்றில் திருக்குர்ஆனும் அடக்கம். நான் குர்ஆனை வாசித்த தருணங்களே என்வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது என தெரிவித்தார்.

நான் திருக்குர்ஆன் முதல் அத்தியாயமான அல் பகறாவை வாசித்தபோது சந்தேகமே இல்லை. இது நிச்சயம் வழிகாட்டக் கூடிய நூல் தான் என்பதை உணர்ந்தேன். என் இதயம் அதை விட்டு வேறங்கும் நகர மறுத்தது.

குர்ஆன் மீதான தனது மரியாதை அதிகரித்துக் கொண்டதாகக் கூறும் அவர் தனக்கு நேர் வழி காட்டுமாறு வல்ல இறைவனிடம் வேண்டியதாகவும் தெரிவிக்கிறார்.

ஒரு நாள் நான் எனது மடத்தை விட்டு வெளியேறினேன். அப்போது ஒரு மனிதன் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் சலீம் பாகில் அவரிடம் நான் உங்களோடு பள்ளிவாசல் வர விரும்புகிறேன் என்று கூறினேன். என்னை அன்போடு அழைத்துச் சென்றார். அவர் தொழுகை குறித்து தெளிவாக விளக்கினார். நான் நாள்தோறும் பள்ளிவாசல் செல்லத் தொடங்கினேன்.

ஒரு நாள் நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது ஒரு சகோதரர் வந்து ஒளு செய்யும் முறை குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். உள்ளமும் உடலும் ஒரு சேர பரிசுத்த மானது போன்று உணர்ந்தேன்.

அன்றிலிருந்து அலி கவுதமாலா முஸ்லிம் ஆனார். அவருக்கு வீட்டிலிருந்தும், வெளியிலிருந்தும் பல பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன யூத மதத்தில் தீவிரப்பற்று வைத்திருந்த அலியின் சகோதரி முஸ்லிம்கள் உன்னை கொல்லத்தான் போகிறார்கள் என மிரட்டியும் இருக்கிறார். எதைப் பற்றியும் கவலைப்படாத அவர் தனது ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்தேன். ஆகா அப்புனித பயண நாட்கள் என் வாழ்வின் அற்புதமானவை மறக்க முடியாதவை என்ற அலி எனக்கு ஹஜ் பயணம் சிறப்பான சந்தோஷத்தையும் படிப்பினைகளையும் தந்தது. அண்ணல் பெருமானார் (ஸல்) காலடித்தடங்கள் பதிந்த அந்தப்பகுதிகளில் நடந்து சென்றபோதும் கஃபத்துல்லாஹ்வை கண்ணால் கண்ட போதும் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றும் செவர்டூ ரோயிஸ் ஆக இருந்து அலியாக மாறிய முன்னாள் கிறிஸ்தவ பாதிரியார் தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த முன்னாள் கிறிஸ்தவ பாதிரியார்கள் மூன்று பேரும் இந்த ஹஜ் புனிதக் கடமையினை நிறைவேற்றியுள்ளனர்.

இவர்கள் மூவரும் மார்க்க அழைப்பாளர் கமர் ஹுஸைன் அழைத்திருந்த மதம் குறித்த விவாதத்தில் பங்கேற்று இஸ்லாத்தின் பரிபூரணத்துவம் மீது நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களாக மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மூன்று முன்னாள் மத குருக்களுக்கும் முறையே அப்துல்காதர், அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம் எனப் பெயரிடப்பட்டது.

அழைப்பாளர் கமர் ஹுஸைன் அழைப்பு விடுத்த 'மார்க்கம்' பற்றிய விவாத அரங்கிற்கு 5000 பேர் வருகை புரிந்தனர். இதில் 147 பேர் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இந்த விவாத அரங்கை சவூதி தலைநகர் ரியாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாத்தினை அறிமுகப்படுத்தும் சர்வதேச அமைப்பு நெறிப்படுத்தியது. இத்தகவலை அஷ்ரக் அல் அஸ்வத் செய்தி ஏடும் அல் ஜஸீராஹ் அரபி நாளேடும் வெளியிட்டுள்ளன.

Tuesday, January 1, 2008

Web Counter Code