இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, August 1, 2008

abusalih news on bangalooru and ahamedabad

தொடரும் குண்டுவெடிப்புகள்: உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய மோடி...

-தமிழ்மாறன்



மே மாதம் நிகழ்ந்த ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஜூலை 25ஆம் தேதி பெங்களூருவிலும், அதற்கு அடுத்த நாள் குஜராத் மாநிலத் தலைநகர் அஹ்மதாபாத்திலும் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

பெங்களூருவில் ஒரு பெண் உள்பட இருவர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். பலியானவர் களில் ஒருவரின் பெயர் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றொரு வர் யார் என்பதை இன்னும் வெளியிட வில்லை. ஜூலை 26ஆம் தேதி குஜராத் தலைநகர் அஹ்மதாபாத்தில் நிகழ்ந்த 16 தொடர் குண்டுவெடிப்பு களில் 49க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

நாட்டில் பயங்கரவாத தாக்குதல் கள் நடைபெறும்போதெல்லாம் பாரதீய ஜனதா, மத்திய அரசின் மீதும் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகளின் மீதும் சரமாரியாக குற்றச் சாட்டுக்கள் கூறுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. நாங்கள் மட்டுமே தீவிரவா தத்தை ஒழிப்பதில் முன்னிலை வகிக்கி றோம் என்று ஜம்பம் அடித்தவர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியா மல் தவித்ததோடு மத்திய அரசின் மீது மீண்டும் குற்றம்சாட்டும் முயற்சிகளை தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் பெருமை அடித்தவர்கள், பிறரைக் குறைகூறித் திரிந்தவர்கள் தாங்கள் ஆட்சி செய்யும் மாநில மக்களை காப்பாற்ற முடியாத அவல நிலை தொடர்கிறது.
இதற்கிடையில், 'இந்த குண்டுவெடிப்பு நாட்டுக்கே எதிரானது. நாட்டின் விரோதி கள் மஹாத்மா காந்தி பிறந்த மண்ணில் ரத்தம் சிந்தவைத்து விட்டனர் என குஜராத் முதலமைச்சர் மோடி அறிக்கை வெளியிட்டது அந்த துயரமான சூழ்நிலையிலும் நாடெங்கும் சிரிப்பு அலையைத் தோற்றுவித்தது.

மோடி 2002ல் குஜராத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைகளுக்கு பழிவாங்கும் முயற்சியாக இதனை சில பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருப்பார்கள் என ஊக செய்திகள் உலா வருகின்றன. இதனை உள்நோக்கத்தோடு பரப்புகிறார்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

குஜராத் 2002 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களில் ஏராளமானோர் இன்னும் நிவாரண முகாம்களில் வாழ்ந்து வரும் நிலையில் இதுபோன்ற இரக்கமற்ற குற்றச்சாட்டுக்கள் எழுவது நியாயம் தானா? என நடுநிலையாளர்கள் வினா எழுப்புகிறார்கள்.

வழக்கம்போல தற்போதும் கூட ஊடகங்கள் அனைத்தும் தங்களது ஒரு தலைப்பட்சமான நீதி விசாரணையை நடத்தத் துவங்கிவிட்டன. அவர்கள் மனம் போல் ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்தின் பெயரைக் குறிப்பிட்டு கதைவிடத் தொடங்கினார்கள். முஸ்லிம் களை வேதனைப்படுத்தும் விதமாக கற்பனைகள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின. இந்த நிலையிலும் நாட்டின் நெருக்கடியான சூழ்நிலை யில் நாட்டின் முன்னணி முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இது நாட்டு மக்களின் ஒற்றுமை யைக் குலைக்கும் செயல், மனித குலத்துக்கே விரோதமான செயல் என்றும் நாடு தழுவிய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜம்யிய்யத்தே உலமாயே ஹிந்த், தமுமுக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கர்நாடகா முத்தஹிதா தஹ்ரீக், கர்நாடகா போரம் டிக்னிட்டி, மஹராஷ்ட்ரா மாநிலத்தின் எம்.பி.ஜெ., பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா வில் செயல்ட்டு வரும் இமாரத் ஷரீஆ உள்ளிட்ட இயக்கங்களும் தங்களது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

இமாரத் ஷரீஆ அமைப்பின் பொதுச் செயலாளர் அனீசுர் ரஹ்மான் காசிமி தனது கண்டன அறிக்கையில் உளவுத் துறையின் சோம்பலே இத்தகைய குண்டு வெடிப்பு நிகழ முக்கியக் காரணம் என தெரிவித்திருக்கிறார்.

புதன்கிழமைக்கு அடுத்து வியாழக்கிழமை என்று கூறுவதைப் போல முதலில் குண்டு வெடிப்பு அதன் பிறகு சிமி அமைப்பின் மீது சந்தேகம் என காவல்துறையினர் பேட்டி கொடுப்பதும் வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கிறது.

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தபோது ''சிமி இதன் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கிறீர்களா?'' என ஆங்கில செய்திச் சேனலின் பெண் நிருபர் ஒருவர் கேட்கிறார். அதற்கு ''விசாரித்துக் கொண்டிருக்கிறோம்'' என அந்த அதிகாரி பதில் சொல்கிறார். அதாவது இவர்களாகவே யூகங்களை கேள்விகளாகக் கேட்டு அதை அமைச்சர்களையோ அதிகாரிகளையோ 'ஆம்' என்று சொல்ல வைத்து சிமிக்கு தொடர்பு ஏற்படுத்தி செய்தியை பரப்பி விடுவார்கள்.

நான்டெட்டிலும், நவி மும்பையிலும், தென்காசியிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய சங் பரிவார் பயங்கரவாத இயக்கங்கள் குறித்து எந்த செய்தி ஊடகமும் வாய் திறப்பதில்லை.

உண்மையை சாகடிக்கும் போக்கையே தொடர்கிறார்கள்.

விசாரணைகளை துவங்குவதற்கு முன்பே தீர்ப்பு களை எழுதும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். செப்டம்பர் 11, 2001ல் அமெரிக்காவில் நிகழ்ந்த நியூயார்க் வர்த்தக மையத் தாக்குதலின் போது எவ்வித முகாந்திரமும் இன்றி சிமி அமைப்பு தடை செய்யப் பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு சிமி மீதான தடையை நீக்க மறுத்து விட்டது. இரண்டு முறை காங்கிரஸ் அரசு தடையை நீட்டித்து உள்ளது.

பாஜகவை விட தாங்கள் ரொம்ப(!) நல்லவர்கள் (!) என்பதை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸ் அரசு நடந்து கொண்டது.

குற்றம் யார் செய்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இவர்கள் சமீப காலமாக நிகழும் குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டியவர்களை கொடுமைக்கு உள்ளாக்கியதைத் தவிர உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா?

சிமிக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என 2006ல் தெரிவித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வாலும் மும்பை தொடர் வண்டி குண்டு வெடித்த போது சிமி மீது குற்றம் சாட்டி செய்திகள் வந்தபோது சிமி மீது பயங்கரவாத குற்றச்சாட்டு ஆதாரமற்ற ஒன்று என மறுத்த முலாயம் சிங்கும் தற்போது வாய் மூடி இருப்பது ஏன்? இவர்களின் வாய்களை அடைத்தது எது? குரல் வளைகளுக்கு பூட்டு போட்டவன் எவன்?

குண்டு வெடிப்புகள் தற்போது ஆறு மாதத்துக்கு ஒரு தடவை ஏதோ பட்டாசு வெடிப்பதைப் போல நிகழ்வது எதனால்? யாரால்? விடை தெரியாத இந்தக் கேள்விக்கு அப்பாவி முஸ்லிம்களை பலிகடா ஆக்குவது எவ்வகையில் நியாயம்?

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு நிகழ்வைத் தொடர்ந்து பாஜகவின் பெருந்தலைவர்கள் முதல், அடிமட்ட தொண்டன் வரை பங்களாதேஷிலிருந்து இடம் பெயர்ந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள் தான் இதற்கு காரணம் என கூறத் தொடங்கினர்.

காவல்துறையும், அப்பாவி வங்காள மக்களை வேட்டையாடத் தொடங்கியது. பங்களாதேஷ் மக்களை வேட்டையாடத் தொடங்கிய அவர்கள் வங்காள மொழி பேசும் மேற்கு வங்காள மக்களையும் வேட்டையாடத் தொடங்கினர். இது ஏழை அப்பாவிகளை அல்லலுக்கு உள்ளாக்கியது. சுயேச்சையான சிறப்பு விசாரணைகள் அமைக்கப்படவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும் கூட பலன் ஏதும் விளையவில்லை.

ஒரு குறிப்பிட்ட நலிவுற்ற சமூகத்தை மட்டும் துன்புறுத்தும் போக்கை இன்னும் எத்தனை காலத்துக்கு தொடருவார்கள்? உண்மைகள் வெளிவரவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டா இல்லையா? யாரைக் காப்பாற்றுவதற்காக இந்த பம்மாத்து வேலைகள்.
மத்திய அரசும் உளவுத்துறையும் எத்தனை முறை எச்சரித்தும் மோடி அதனை அலட்சியப்படுத்தியிருக்கிறார்.
இத்தகவலை குஜராத்தின் முக்கிய காங்கிரஸ் பிரமுகர் ராஜீவ் சுக்லா கூறுகிறார்.
''இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நரேந்திர மோடி தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
குஜராத்தை நான் நன்றாக வைத்திருக்கிறேன். சிறப்பான பாதுகாப்பு உள்ளது என்று வானளாவ தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு திரிந்தார். அடிப் படை பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. மத்திய உளவுத் துறையின் எச்சரிச்கை அலட்சியப்படுத்தப்பட்டது. மத்திய அரசை பாய்ந்து பிராண்டியதற்கு காங்கிரஸின் சார்பில் சுடச்சுட பதிலடி கிடைத்திருக்கிறது.

குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப் புள்ளது எச்சரிக்கையாக இருக்கவும் என பலமுறை மத்திய அரசு எச்சரித்தும் மோடிக் கூட்டத்தின் கவன மின்மையால் அப்பாவி மக்கள் 49 பேர் பலியாகி உள்ளனர்.

ஒருநாள் முன்பு தான் பெங்களூருவில் குண்டு வெடித்தது. மோடிக்கூட்டம் குஜராத்தில் என்னவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார்கள் என்பதை விளக்கத் தயாராக இல்லை. இதுவரை 19 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட்டனரா? பின்னணியில் நின்று செயல்பட்டவர்கள். சூத்ரதாரிகள் யாரும் கண்டு பிடிக்கப்படவில்லை.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மட்டும் குறிவைக்கும் போக்கு மட்டும் தொடர்கிறது. அனைத்து முதலமைச்சர்களையும் கூட்ட வேண்டுமென்கிறார் மோடி. முதலமைச்சர்கள் மட்டுமல்ல, அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் புலனாய்வு செய்த, செய்து கொண்டிருக்கிற அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கூட்டி இதுவரை இவர்கள் செய்த விசாரணை முடிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் கைதுகள் குறித்து தீவிர ஆய்வுகள் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தீவிரவாத சிந்தனையோடு அலையும் பேர்வழிகளை ஒழிப்பதில் மக்கள் எப்போதுமே தயாராக இருக்கின்றனர். நிஜ தீவிரவாதிகளை ஒழிக்க அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப் படவேண்டும்

abusalih news on bosnia genocide

13 வருடம் தலைமறைவாக இருந்த போஸ்னிய இனப்படுகொலையாளன் பிடிபட்டான்

1992ல் இருந்து 1995 வரை போஸ்னி யாவில் 8,500 முஸ்லிம்கள் துள்ளத்து டிக்க கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர்.



கருணையின்றி கொடூரமாக கொல்லப் பட்டவர்கள் எத்தனை பேர்? பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானவர்கள் எத்தனை பேர்? உயிருக்கு அஞ்சி, ஓடி அடர்ந்த காடுகளில் ஒளிந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் திரும்பினார்களா? என தெரியாத நிலையில் போஸ்னியா-ஹெர்ச கோவினா, பிணங்களின் கூடார மாக விளங்கின.



இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த மிகப்பெரும் இனப் படுகொலையாக போஸ்னியா படுகொலைகள் வரலாற்றில் குறிக் கப்படுகின்றன.



போஸ்னியாவில் பலியானவர் களின் விவரங்களை செயற்கைக் கோள் படங்களின் வழியாக உலகம் உண்மையைத் தெரிந்து கொண்டது.



அதன்பிறகும் போஸ்னியா மக்களின் சோகம் சொல்லி மாளாது. கண்டெடுக்கப் பட்ட உடல்கள் தங்களுடைய உறவினர் களுடையதா? என அறிந்துகொள்ள மரபணு சோதனைகள் செய்யப்பட்டன. தோண்டப்பட்ட உடல்கள் மீண்டும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டன.



இந்நிலையில் இந்தப் படுகொலை களுக்கு காரணமான வன்கொலையாளி கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.



சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சர்வதேச காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. முன்னாள் செர்பிய அதிபர் சுலோபதன் மெலோசெவிக் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து சிறையில் தண்டனை நாட்களைக் கழித்து வந்த சுலோபதன் மிலோ செவிக் சிறையிலே மாண்டு போனான்.



பால்கன் யுத்தத்தின் முடிவுக் குப் பிறகு போஸ்னியாவை புரட்டிப் போட்ட மனித மிருகங் கள் போர்க் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக் கப்பட்டவர்களில் போஸ்னியா-ஹெர்சகோவினா பகுதியில் எல்லைப்புறத்தை ஒட்டிய நாட் டின் அதிபராக 1992ல் இருந்து 1995 வரை ரதவான் கார்ட்சிக் போஸ் னிய மக்களைக் கொன்று குவித்ததை வரலாறு மறக்காது. போஸ்னிய தலைநகர் சரஜிவோவை 43 மாதங்கள் முற்றுகை யிட்டு தனது கூலிப்படையினால் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற இந்த மாபாதகன் 13 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தான்.



சர்வதேச சமூகத்தால் தேடப்பட்டு வந்த இனப்படுகொலையாளன், 50 மில்லியன் டாலர்கள் தலைக்கு அமெரிக்காவில் விலை அறிவிக்கப்பட்ட ரதவான் கர்ட்சிக் பெல்கிரேடு நகரத்தில் நீண்ட தாடியுடன் போலியான பெயருடன் நடமாடிய முன்னாள் அதிபர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டான். உலகமகா கொலைகாரனைத்தான் தாங்கள் பிடித் தோம் என்பது அப்போது பெல்கிரேடு நகர காவலர்களுக்கு தெரிந்திருக்காது.



பிளாட்பாரத்தில் வாழ்ந்து கொண்டு நாடோடிக் கும்பலுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் போல் திரிந்த இனப்படுகொலையாளன் பிடிபட்டபோது அனைவரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள். இவன் கவிஞன், டாக்டர் என பல்வேறு வேடம் தரித்தும் வாழ்ந்து வந்திருக்கிறான்.



மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் டெனாவிக்கின் வீட்டின் அருகில்தான் ரதவான் கரட்சிக் இதுவரை தலைமறை வாக வாழ்ந்து வந்திருக்கிறான்.



செரப்னிக்கா படுகொலையில் மாண்ட மக்களின் உடல்களைக் கண்டுபிடித்து மீண்டும் புதைத்தவர் ஆவார். இவரது வீட்டின் அருகில் பிடிபட்டதைக் கூறும்போது ''இந்த மொடாக்குடியன் தானா?'' இந்த பெரும் இனப்படுகொலை யாளன் என வியந்து போனார் யாஸ்மின்.



ரதவான் கார்ட்சிக் என்ற இனப் படுகொலையாளன் பிடிப்பட்டிருக் கிறான். மற்றும் பல இனப்படுகொலை யாளர்கள் வெள்ளை மாளிகையிலும், ஏன் இந்தியாவில் குஜராத்திலும் இருக்கிறார்கள்.



அவர்களெல்லாம் பிடிப்பட்டு தண்டிக் கப்படுவது எப்போது?

Web Counter Code