இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, January 21, 2009

2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக...

-அபூசாலிஹ்

2009ஆம் ஆண்டு இந்திய ஜனநாயகத்திற்கு நாடாளுமன்ற தேர்தல் ஆண்டு. 115 கோடி மக்களுக்கான நிர்வாக தலைமையை தேர்ந்தெடுக்கும் ஆண்டாகும். சில மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தல்கள் முடிந்து கடைசி சுற்றும் முடிந்துவிட்டது. எதிர்வரப் போகும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அலசலை ஆரம்பிப்போம்.


கடைசியாக முடிந்த மாநில சட்ட மன்ற தேர்தல்களில் காங்கிரஸும், பாரதிய ஜனதாவும், தலா மூன்று மற்றும் இரண்டு மாநிலங்களை கைப்பற்றின. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ் தான், டெல்லி, மிசோரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களை வைத்து பார்க்கும் போது இரண்டு மாநிலங்களில் வென்ற பாஜக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பகுதியில் அமர்நாத் விவகாரத்தை வைத்து வெற்றியைப் பெற்றது. 37 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 11 தொகுதி களைக் கைப்பற்றியது. ஆனால் இரண்டே இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜம்முவில் பாஜக பெற்ற 11 சட்டமன்ற தொகுதிகளை வைத்து பிரமாதமாக சாதிக்க முடியாது.


மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ் கரில் பாஜகவும், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸும் பெருவாரி யான வெற்றியை பெற்றிருந்தாலும் இந்த நான்கு மாநிலங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனது வாக்கு வங்கியை விரிவு படுத்தியிருக்கிறது.


2004ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏழு மாநிலங் களில் தூள் கிளப்பியது. மக்கள் செல்வாக்கு இந்த ஏழு மாநிலங்களிலும் அமோகமாக இருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், ஜார்கண்ட், ஹரியானா, டெல்லி மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் முதலிய மாநிலங்களில் வெற்றி வாகை சூடியது. இந்த ஏழு மாநிலங்களில் உள்ள மொத்த தொகுதிகளில் 156ல் 129 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெற்ற வெற்றி வாக்கு சதவீதத்தில் 82 சதவீதமாகும்.


அதோடு மகராஷ்ட்ராவில் 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 23ஐ வென்றது. 26 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 12 தொகுதிகளைப் பெற்றது. 6 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் மூன்று தொகுதிகளையும், 14 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் 9 தொகுதிகளையும் பெற்றது.


உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மொத்தமுள்ள 249 தொகுதிகளில் 36 தொகுதி களையே காங்கிரஸ் கூட்டணியால் வெல்ல முடிந்தது.


2004ல் அமைந்த காங்கிரஸின் கனவுக் கூட்டணி அதே உறுதியுடன் இன்று இருக்கிறதா என்றால் ஆம் என்று சொல்லிவிட முடியாது. இடதுசாரிகள் மாநிலத்திற்கு மாநிலம் புதிய கூட்டணியை அமைத்து வருகிறார்கள்.


காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்த அளவில் கேரளா, ராஜஸ்தான், டெல்லி, ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாகாணங் கள் (அஸ்ஸாம் தவிர- அஸ்ஸாமில் பாஜக மற்றும் அஸ்ஸாம் கனபரிஷத் கூட்டணி வலுவாக இருப்பதாகக் கருதப்படுகிறது) வெற்றியைப் பெறலாம் என பொதுவாகக் கருதப் படுகிறது.


உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து வலுவான நிலையில் இருப் பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மாயாவதியின் வாக்கு வங்கி யின் நிலவரம் காங்கிரஸை மிரட்டி வரும் ஒரு அம்சமாக விளங்கி வருகிறது. எனினும் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கூட்டணி 50 தொகுதிகளை உத்தரப் பிரதேசத்தில் கைப்பற்றும் நம்பிக்கையில் இருக்கிறது. பீகாரைப் பொறுத்த அளவில் நிதீஷ்குமார் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவராகவே நீடித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான் இருவரும் காங்கிர ஸுடன் கை கோர்த்துக் கொண்டு பீகார் அரசியலில் வலம் வந்தால் ஒரு வேளை பலன் விளையலாம். இருப்பினும் பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே நிதீஷ் குமாரின் செல்வாக்கு சரிவை சந்திக்கும் என எதிர்பார்த்த அரசியல் நோக்கர் களின் கருத்துக்கு மாற்றமாக நிதீஷ் குமாரின் மக்கள் ஆதரவு குறைய வில்லை.


ஒரிஸ்ஸா கடும் வன்முறைகளாலும், கலவரங்களாலும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்பதோடு அம்மாநில அரசை காவு கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. பிஜு பட்நாயக்கின் பிஜு ஜனதாதளமும், பாஜகவும் அங்கு சரிவை நோக்கி செல்கின்றன. இங்கு காங்கிரஸுக்கு லாபம் விளையக் கூடும். இங்கு பாஜக கூட்டணிக்கு பலத்த அடி காத்திருக்கிறது. மேற்கு வங்காளத்தை பொறுத்த அளவில் அங்கு ஆளும் கூட்டணிக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது. நந்திகிராம் உதாரணம் ஒன்று போதாதா? இருப்பினும் மக்களின் ஆதரவைப் பெற்ற இடதுசாரி கட்சிகளுக்கு எதிரான எந்தக் கட்சியும் மேற்கு வங்காள அரசியலில் தற்போது வெற்றி பெரும் நிலையில் இல்லை என்பதே உண்மை.


மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப் பிடித்து சிறைக்குள் அடைத்து சித்திர வதைகள் செய்த செயலால் இரண்டு மாநில ஆளுங்கட்சிகளையும் கடும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. தெலுங்கு தேசமும், நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யமும் வாக்குகள் திரட்டும் விஷயத் தில் அறுவடை செய்யக் காத்திருக் கின்றன. பாஜகவுடன் கூட்டணி அமைத்த குற்றத்திற்காக தங்களுக்கு கிடைத்த தண்டனையிலிருந்து மீண்டு விட தெலுங்கு தேசம் கட்சி துடிக்கிறது. பாஜகவுடன் சேர்ந்த கூடா நட்பினால் மாட்டித் தவித்த தெலுங்கு தேசம் கட்சியைக் கண்டு பாடம் படித்த நடிகர் சிரஞ்சீவியோ பாஜகவைக் கண்டாலே அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார். தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்யம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி என்ற மூன்று கட்சிகளும் காங்கிரஸுக்கு கடும் போட்டியை உருவாக்கும் என கருதப்படுகிறது.


கர்நாடகாவைப் பொறுத்தவரை காங்கிரஸும் தேவகவுடாவின் மதச்சார் பற்ற ஜனதாதளமும் கூட்டணி அமைத் தால் பாஜகவை பஞ்சாக பறக்கச் செய்து விடலாம். ஆனால் ஒன்று சேராவிட்டால் பாஜக இந்த கட்சிகளை பதம் பார்த்து விடும் என்பதே. அண்மையில் நடை பெற்ற கர்நாடக இடைத் தேர்தல்களின் முடிவுகளின் வாயிலாக நாம் அறிந்தது.


தமிழகத்தை பொறுத்த அளவில் திமுக கூட்டணிக்கு எதிரான அதிருப்தி நிலவுகிறது என்ற பிரச்சாரத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் திமுக ஆட்சி மீதான அதிருப்தி அதிமுக மீது ஆதரவாக மாறவில்லை என்பதும் உண்மை.


இந்நிலையில் இந்தியாவில் ஒருங் கிணைந்த ஒரு சமூகமாகவும், இரண் டாவது பெரிய சமூகமாகவும், முதலிடம் பெறும் சிறுபான்மை சமூகமாகவும் இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் நிலை என்ன? என்பதைப் பார்க்கும் முன்பாக 2004 நாடாளுமன்றத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எத்தனை பேர்? என்பதை பகுதி வாரியாகப் பார்ப்போம்.


31லிருந்து 36 நாடாளுமன்ற பிரதி நிதிகள்... என்ற நிலையே சமீபகாலமாக நிலவி வருகிறது.


ஆந்திராவில் 1. நிஜாமுத்தீன் (காங்கிரஸ்) 2. அசதுதீன் உவைஸி (அகில இந்திய மஜ்லிஸே இத்திஹாதில் முஸ்லிமின்) என்ற இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். அசதுத்தீன் உவைஸி முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.


நிஜாமுத்தீன் காங்கிரஸ் கட்சியின் விசுவாச உறுப்பினராக இருக்கிறார் அவ்வளவுதான். தற்போது அறிவிக்கப் பட்டிருக்கும் தொகுதி மறுசீரமைப் பினால் முஸ்லிம்களுக்கு 14 சட்டமன்ற தொகுதிகளில் பின்னடைவு ஏற்படும் என ஆந்திர மாநில அரசியல் திறனாய் வாளர்கள் கூறுகிறார்கள்.


அஸ்ஸாமில் 1. அன்வர் ஹுஸைன் (காங்கிரஸ்) 2. குலாம் உஸ்மானி (காங்கிரஸ்) . 30 சதவீத முஸ்லிம்கள் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் வெறும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் களா? என அதிர்ச்சியடைந்த அஸ்ஸாம் முஸ்லிம்களும், அரசியல் முனைப் பாளர்களும் சிந்தனையில் ஆழ்ந்ததால் எழுந்ததே ஹருனுகு அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி. முஸ்லிம் களிடையேயான ஒருங்கிணைப்பை அதிகரித்து உரிமைகளை காக்க மார்க்க அறிஞர் பத்ருதீன் அஜ்மல் தலைமையில் இந்த இயக்கம் எழுந்தது.


சமீபத்தில் நடைபெற்ற அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில் 10 சட்டமன்ற தொகுதிகளை தனித்து நின்றே கைப் பற்றினார்கள். இனி 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஹருனுகு-ன் அதிரடிகள் ஆரம்பம் ஆகும்.


பீகார் மாநிலத்தில் 1. டாக்டர் ஷகீல் அஹ்மத் (காங்கிரஸ்) 2. தஸ்லீமுத்தீன் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) 3. முஹம்மத் அஷ்ராஃப் பாத்மி (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். பீகார் மாநிலத்தில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். இருப்பினும் மூன்று எம்.பி.க்கள் மட்டும் தானா? என்ற அதிர்ச்சி எழுவது வாடிக்கைதான். காங்கிரஸின் டாக்டர் ஷகீல் அஹ்மத் உள்துறை இணையமைச் சராக இருக்கிறார். தஸ்லீமுதீன் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார். பீகாரில் அஸ்ஸாமைப் போன்ற ஒரு கட்சி இல்லை.


ஜம்மு காஷ்மீரில் 1. அப்துல் ரஷீத் ஷாஹீன் (தேசிய மாநாட்டுக் கட்சி) 2. உமர் அப்துல்லாஹ் (தேசிய மாநாட்டுக் கட்சி) என்ற இருவர் மட்டுமே. இதில் உமர் அப்துல்லாஹ் தற்போது ஜம்மு காஷ்மீரில் முதல்வராகி விட்டார்.


கர்நாடகாவில் ஒரே ஒரு முஸ்லிம் எம்.பி. அவர் காங்கிரஸைச் சார்ந்த அவரது பெயர் இக்பால் அஹ்மத் சர்தாகி.


கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இருவரும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஒருவரும் எம்பிக்களாக உள்ளனர். 1. அப்துல்லாஹ் குட்டி (மார்க்சிஸ்ட்) 2. டி.கே. ஹம்ஸா (மார்க்சிஸ்ட்) 3. அஹ்மது (முஸ்லிம் லீக்) இவர் மத்திய வெளியுறவுத்துறை குட்டி அமைச்சராக உள்ளார். 20 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் கேரளாவில் இது போதுமானதல்ல.


ஏறக்குறைய ஒன்றே முக்கால் கோடி முஸ்லிம்கள் வாழும் மகராஷ்ட்ராவில் ஒரே ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே இருக்கிறார். முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளில் குஜராத்துக்கு அடுத்து மகராஷ்ட்ரா மாநிலம் முன்னிலை வகிக்கிறது. ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் கர்கரே இல்லையே?...


உத்தரப் பிரதேசத்தில் 1. ருபாப் சய்யீதா (சமாஜ்வாதி) 2. சலீம் இக்பால் செர்வானி (சமாஜ்வாதி) 3. டாக்டர் சபீகுர் ரஹ்மான் (சமாஜ்வாதி) 4. அதீக் அஹ்மத் (சமாஜ்வாதி) 5. முனவர் ஹஸன் (சமாஜ்வாதி) 6. ரஷீத் மசூத் (சமாஜ்வாதி) 7. அப்சல் அன்சாரி (சமாஜ்வாதி) 8. முஹம்மது முகீம் (பகுஜன் சமாஜ்) 9. முஹம்மத் ஷகீத் (பகுஜன் சமாஜ்) மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் முர்ஷிதாபாத் மாவட்டம் 26 பர்கானாக்கள் போன்ற மாவட்டங்கள் உண்டு எனினும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து திமுக சார்பாக காதர் மொய்தீனும் காங்கிரஸ் சார்பாக ஹாரூண் ரஷீதும் இடம் பெற்றுள்ளனர்.


ஜார்கண்ட் மாநிலத்தில் புர்கான் அன்சாரி என்ற ஒரே முஸ்லிம் உறுப்பினர் லட்சத் தீவுகளில் ஒரே. ஒரு முஸ்லிம் உறுப்பினர் டாக்டர்.பி. பூக்குன்ஹி கோயா என மொத்தம் 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமுதாயத் தினருக்காக இருந்தும் கூட பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை என்பது நிஜம்.


சமுதாயம் சார்ந்த அமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் என்று கூறினால் கேரள மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஈ. அஹ்மதுவும், ஆந்திராவில் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசதுத்தீன் உவைஸி அவர்களையும் மட்டுமே குறிப்பிட முடியும். ஈ. அஹ்மது குறித்து பெரிதாகக் கூற ஒன்றுமில்லை. எனினும் அசதுத்தீன் உவைஸி சமுதாய நலன் குறித்து அவ்வப்போது போர்க் குரல் எழுப்பி வருகிறார். அவ்வப்போது ஒரே ஒருவர் போர்க் குரல் எழுப்பி வருவது மட்டும் 30 கோடி முஸ்லிம் களுக்கும், 115 கோடி இந்திய மக்களையும் நேர்வழிப்படுத்த இன்று நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி இல்லை என்பதே முகத்தில் அறையும் உண்மையாகும்.


இந்த அவலத்தைத் தீர்க்க என்ன வழி என நாடே தவிக்கும் சூழலில் மனிதநேய மக்கள் கட்சியின் தேவை ஒவ்வொரு மணித்துளியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


இந்தியாவின் ஒவ்வொரு சாலையும் தாம்பரத்தை நோக்கித் திரும்பட்டும்.



Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved.

Friday, January 16, 2009

காஸா துயரம் துடிக்கும் உயிர்களைக் காப்பாற்றத் தடை!
வெடிக்கும் மருத்துவர்கள்!!

-அபூசாலிஹ்




ஜோர்டானைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதி. அவர் மனம் இப்போது போல் எப்போதுமே வேதனை அடைந்திருக்காது. பாலஸ்தீனில் மக்கள் படும் துயரங்களைக் கண்டு வேதனையடைந்த ஹாலிதி, அவர்களுக்கு உதவுவதற்காக பல்லாயிரம் மைல்களைக் கடந்து பயணம் செய்தார்.


இஸ்ரேலின் தரைவழி தாக்குதல், வான்வழி தாக்குதல், கடல்வழி தாக்கு தலை சந்தித்து சொல்லொ ணாத் துயரங்களை அனுபவித்து வரும் அந்த அப்பாவி மக்களைக் காப்பாற்றலாமே என்ற தவிப்பில் அவர் பயணம் செய்தார். காஸா எல்லையை நெருங்கினார். ஆனால் எகிப்தின் அதிகாரிகள் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதியை தடுத்தனர். 14 நாட்களுக்கு மேலாக வேதனையில் வாடிவரும், கொடும் காயங்களால் அலறும் மக்களைக் காப்பாற்றச் சென்ற அவர், எகிப்திய அதிகாரிகளால் தடுக்கப் பட்டார்.


ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என காத்திருந்தார். காஸா - எகிப்திய எல்லையில் மூன்று நாள் காத்திருந்தும் பலனில்லை. தயவு செய்து என்னை காஸாவிற்குள் செல்ல அனுமதியுங்கள் என கெஞ்சினார். “நான் என்னுடைய சொந்த பொறுப்பில் செல்கிறேன், என்னுடைய உயிருக்கு நானே பொறுப்பு, தயவு செய்து எல்லை களைத் திறந்து விடுங்கள், அங்கே ஏராளமான குழந்தைகளும், முதியவர் களும், பெண்களும் மருத்துவ உதவி யின்றி இறந்து கொண்டிருக்கிறார்கள்’’ என கெஞ்சுகிறார்.


இந்த டாக்டர் மட்டுமல்ல. உலகெங் கிலுமிருந்து வந்த நூற்றுக்கணக்கான டாக்டர்களும் இவ்வாறு காஸா எல்லை யில் நுழைய முடியாமல் தவிக்கிறார்கள். மலேஷியா, இந்தோனேஷியா, துருக்கி, கிரீஸ் முதலிய நாடுகளிலிருந்து டாக்டர் கள் மனம் பதைபதைக்க நின்றனர்.


“காஸாவுக்கு செல்லும் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் தர முடியாத நிலையில் இருக்கிறோம்’’ என எகிப்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹாத்தம் அல் ஜபலி கூறினார்.


“அங்கு தாக்குதல் நிறுத்தப்படட்டும், பிறகு நாங்கள் உங்களை உள்ளே அனுமதிப்போம்’’ எனக் கூறி நிர்தாட் சண்யமாக மறுத்து விட்டார். அவர் மறுத்துக் கொண்டி ருக்கும் போது காஸாவில் 800 பேருக்கும் மேல் பலியாகி இருந்த னர். 220க்கும் மேற் பட்ட பெண்களும், 100க்கும் மேற்பட்ட குழந்தை களும் பலியாகி இருந்தனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்திருந்தனர்.


எகிப்து, ரஃபா எல்லையைத் திறந்து வைத்திருந்தது. காஸாவிலிருந்து மக்களுக்கு உலகைப் பார்க்கும் ஒரே கண்ணாடியாக ரஃபா எல்லை மட்டுமே அமைந்திருந்தது. அந்தப் பகுதி வழி யாகவே படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


அவசர சிகிச்சை செய்தால் பிழைக்க வாய்ப்புண்டு என்ற நிலையில் உள்ளவர்கள் ஏராளமானவர்கள் இறந்து போன செய்தியறிந்து எல்லையிலுள்ள நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வேதனையில் ஆழ்ந்தனர். சில நூறு மீட்டர் தூரம் மட்டுமே உள்ள பகுதியில் ஏராளமானவர்கள் அவதியில் இருக்கும் நிலையில் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே, இது வெட்கக்கேடாக இருக்கிறது என வேதனைப்படுகிறார் முஹம்மத் அல் ஹாலித்.


இஸ்ரேலின் அத்துமீறல்களையும், அராஜகங்களையும் மவுனமாக பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்க முடிகிறது.


எது எப்படியாயினும் ஒருநாள் நாங்கள் காஸாவில் நுழையத்தான் போகிறோம் என உறுதிபடக் கூறுகிறார் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதி.



Copyright © 2008 - 2009 www.tmmk.info All Rights Reserved.
இஸ்ரேல் தூதரகத்திற்கு செருப்பு மரியாதை!

நாசகார ஆயுதங்களின் மூலமாக மனிதகுலத்தினை அச்சுறுத்தி வரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மிகவும் கேவலமான அனுபவம் சமீபகாலமாக ஏற்பட்டு வருகிறது.


அணுஆயுதங்களை ஏராளமாக குவித்து வைத்திருக்கும் அமெரிக் காவும், அமெரிக்காவின் ஏவல் நாய் என வரலாற்றில் வர்ணிக்கப்படும் யூத இனவெறி இஸ்ரேலும் காலணி மரியாதைக்கு இலக்கானது.


ஈராக்கை குதறிய கொடூரன் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கின் இளம் பத்திரிகை யாளர் முன்ததர் அல் ஜைதி தனது காலணிகளை வீசி கௌரப்படுத்தி னார். அப்பாவி மக்களின் மீது பேரழிவு ஆயுதங்களை வீசிய சீரழிவின் நாயகன் ஜார்ஜ் புஷ் மீது காலில் போடும் செருப்புகளை வீசி அவரை வரலாறு காணாத அவமானத்தில் ஆழ்த்தினார்.


தற்போது காஸாவில் படுகொலை களை நிகழ்த்திவரும் இனவெறி இஸ்ரேலின் ஈனச் செயலைக் கண் டித்து உலகெங்கும் கண்டன ஆர்ப் பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


குறிப்பாக சிலி நாட்டில் இஸ்ரேலிய தூதரகத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத் தில் தலைநகர் சாண்டியாகோ-வில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம் செருப்பு களால் நிரம்பி வழிந்தது.


பழைய செருப்புகள் அடங்கிய குப்பைக் கூடைகளை மலைபோல வீசியதால் இஸ்ரேல் தூதரகம் முடை நாற்றம் வீசுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
பிணங்கள் விழும்போது இஸ்ரேலில் விருந்து!
நியூயார்க் மேயரை உலுக்கும் முஸ்லிம்கள்!

கொலைகார கொடூர நாடான இஸ்ரேலைக் கண்டித்து உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும்போது எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாற் போன்ற ஒரு செயலை நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் செய்திருக்கிறார்.


நியூயார்க் மேயர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரே லியப் பிரதமர் யஹுத் உல்மர்ட் டையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹுத் பராக்கையும் சந்தித்து உரையாடினார். இஸ்ரே லில் உள்ள அஸ்ஹெலான், ஸ்டெராட் என்ற இரு நகரங் களுக்கும் சென்று அங்கு ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் வீச்சினால் பாதிக்கப்பட்ட இஸ்ரே லிய ராணுவத்தினருக்கு ஆறுதல் கூறினார். “நான் நிறைய பேச விரும்புகிறேன்; அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதர வாகவே இருக்கிறார்கள்; இஸ்ரேல் எதைச் செய்தாலும் நன்மைக்காகவே செய்யும். இஸ்ரேல் தனது பாதுகாப்புக் காக காஸாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது; இதில் தவறு இல்லை’’ என்று தெரிவித்தார்.


இது செய்தி ஊடகங்களில் வெளி யானதைத் தொடர்ந்து நியூயார்க் மக்களின் ஆத்திரம் கரையுடைத்த வெள்ளமென பொங்கியது. அமெரிக்க முஸ்லிம் கூட்டமைப்பு என்ற அமைப் பின் ஒருங்கிணைப்பில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.


சமாதானம் நாடும் நியூயார்க் மக்களை மைக்கேல் ப்ளூம்பெர்க் அவமானப்படுத்தி விட்டார் என்று கூறிய அந்த அமைப்பினர் நூற்றுக் கணக்கானவர்கள் நியூயார்க்கின் சிட்டி ஹால் முன்பு திரண்டனர். ஆவேசம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நியூ யார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம் பெர்க்கின் படத்தின் மீது காலணி களை வீசி மரியாதை(!) செய்தனர்.


போர் எதிர்ப்பு தொழிலாளர் அமைப்பு இந்த காலணி மரியாதையில் முக்கியப் பங்கு வகித்தது.


மைக்கேல் ப்ளூம்பெர்க் ஓர வஞ்சனை கொண்டவராக நடந்துள்ளார். ராக்கெட் வீச்சினால் தாக்கப்பட்ட இஸ்ரேலிய நகரங்களுக்கு சென்ற அவர் காஸாவின் எந்தப் பகுதிக்காவது சென்றாரா? எந்த பாலஸ்தீன மக்களை அல்லது தலைவரையாவது சந்தித் தாரா? இது அவரது ஒருதலைப்பட்ச மான ஆளுமையைக் காட்டுகிறது. இவர் அனைத்து நியூயார்க்கர்களுக்கும் பொதுவானவர். இஸ்ரேலிய தரப்புக்கு மட்டும் அவர் ஆதரவாகப் பேசக் கூடாது.


நாங்கள் இந்நாட்டு குடிமக்கள். நாங்கள் நியூயார்க் நகரத்தின் மேம் பாட்டுக்காக வரி செலுத்துகிறோம். அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் நாங் களே என்று கூறும் முஸ்லிம் கூட்ட மைப்பின் தலைவர் ஹாஜி கான், ப்ளூம் பெர்க் நியூயார்க் திரும்பியதும் அவரை நேரில் சந்தித்து தங்கள் கண்டனங் களை தெரிவிப்போம் என்றார்.


நியூயார்க்கில் 10 லட்சம் முஸ்லிம் கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது
நந்திகிராம் இடைத்தேர்தலில் படுதோல்வி:
இடதுசாரிகளுக்கு இது ஒரு பாடம்!

சர்ஜுன்

மார்க்சிஸ்டுகள் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தோல் வியை சந்தித்திருக்கிறது. தேர்தல்களில் வெற்றி தோல்வி சகஜம், எனினும் மார்க்சிஸ்டுகளின் கோட்டையான மேற்கு வங்காளத்தில் தற்போதைய அரசியல் சொல்லிக் கொள்ளும் படியாக எந்தவித வளர்ச்சியும் இல்லாத திரிணா மூல் காங்கிரஸ் கட்சியிடம் இடதுசாரி கள் தோல்வி அடைந்திருப்பது ஒரு அரசியல் அவலம் என்பதை இடது சாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங் கிரஸ் கட்சி அங்கு தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை 39 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக் கிறது.


நந்திகிராம் என்ற பகுதியைப் பற்றி வாசகர்களுக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை. ஏனெனில் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக நந்திகிராமில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்து வதற்காக அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தியது மாநில அரசு. தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் விளை நிலங்களை விட்டுத்தர மாட் டோம் என நந்திகிராமில் வாழும் அந்த பாமர மக்கள் போராடினர். ஏழைப் பாட்டாளிகளுக்காகப் பாடுபடுவதற் காகவே இயக்கம் கண்டோம் எனக் கூறியவர்கள் உரிமை காக்க போராடிய மக்களை மூர்க்கத்தனமாக நசுக்கினார் கள். ஆளும் கட்சியாக இருப்பதால் காவல்துறையினரை வைத்து காட்டுத் தனமாக நந்திகிராம் மக்களைத் தாக்கினார்கள். இதில் பல உயிர்கள் பலியாயின.


காவல்துறையினர் பொதுமக்களைத் தாக்குவதா? பொறுக்க முடியுமா காம்ரேடுகளுக்கு? காவல்துறையினர் தாக்க பார்த்துக் கொண்டிருப்பதா? பொறுமை இழந்த கம்யூனிஸ்ட் தொண் டர்களும் அப்பாவி மக்களைத் தாக்கினர்.


தாக்கப்படுபவர்கள் பல்வேறு முனை களிலும் வஞ்சிக்கப்படும் அப்பாவி மக்களாயிற்றே? பரிதாபத்துக்குரிய முஸ்லிம் சமூகத்தினராயிற்றே என அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் தான் மதச்சார்பின்மை பேசும் மாவீரர் களாயிற்றே. பாதிக்கப்பட்டவர்களை மேலும் மேலும் தாக்கும் வேலையைத் தொடர்ந்து செய்தார்கள். ஏழைப் பாட் டாளிகளின் கண்ணீருக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. கடந்த மே மாதம் நந்திகிராமில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி 2009ஆம் ஆண்டு நந்திகிராமில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தனது கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ.யிடம் தொகுதியை ஒதுக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நந்திகிராமில் மார்க் சிஸ்ட்களால் நிகழ்த்தப்பட்ட அரசு வன்முறையில் கொடூரமாக கொல்லப் பட்ட ஷேக் இம்தாதுல் என்ற ஒரு விவசாய இளைஞனின் தாயாரிடம் இடது சாரிகள் தோல்வியைத் தழுவினார்கள்.


எந்தக் காவல்துறையின் அராஜகத்தை நம்பி அவர்கள் நந்திகிராமில் வெறியாட் டம் போட்டார்களோ, அந்த காவல்துறையின் அராஜகம்தான் அவர்களை படு தோல்வி பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டி ருக்கிறது.


காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் தாயாரையே அந்தத் தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்து இடதுசாரிகளின் நோக்கம் தவறு என்பதை தங்கள் வாக்குச் சீட்டுகளின் மூலம் காட்டினார்கள்.


இதற்கு முன்பு நந்திகிராமின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த முகமது இல்யாஸ் மீதான லஞ்ச ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டதால் பதவி இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதவி இழந்ததால் நந்திகிராமில் இடைத் தேர்தல் நடைபெற்றது. ஃபெரோஸா பீவியை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பரமானந்த் படுதோல்வியை சந்தித்திருக்கிறார்.


நந்திகிராம் விவகாரத்தில் காம்ரேடு கள் மறந்துபோன கொள்கையை நந்தி கிராம் மக்கள் இந்தத் தேர்தல் முடிவு களின் மூலம் நினைவூட்டியுள்ளார்கள்.


இதில் இடதுசாரிகள் பாடம் கற்றுக் கொள்வார்களா
பாஜக தலைமையகத்தில் திருட்டுப்போன கோடிகள் தீவிரவாதிகளுடையதா? தொடரும் சந்தேகங்கள்



தமிழ்மாறன்

அரசியல் கட்சிகள் நடத்துவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. அதிலும் அகில இந்திய கட்சிகள் நடத்துவது என்பது கத்திமேல் நடப்பது போல் கந்தகக் கிடங்குகளில் உலவச் செல் வதைப் போல கடினமான ஒன்றுதான். எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் போடு போடு என வயிறு நிறையாமல் கத்தி மிரட்டும் ராட்சத யானை அது. காங்கிரஸ் கட்சி துவக்க காலத்தில் பல்வேறு தியாகங்களை நிதி ஆதாரங் களைப் பெருக்கும் விஷயத்திற்காக காங்கிரஸ் செய்ய வேண்டியிருந்தது. காந்தி, ஆஸாத், நேதாஜி போன்றோரின் தியாகம் அளவிட முடியாதவை. ஜவஹர் லால் நேரு தனது அலகாபாத் ஆனந்த பவனத்தையே கட்சிக்காக விற்றுத் தீர வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று காங்கிரஸ் அதிக காலம் இந்தியாவை ஆட்சி செய்த ஒரே ஆளும் கட்சி என்கிற விதத்திலும் அது செழிப்புடன் கொழிப் புடன் காட்சி அளிக்கலாம்.


இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சி செலுத்தும் இடதுசாரிகளின் நிலை இன்றும் வீதிக்கு வீதி உண்டியல் குலுக்கும் நிலையிலேயே உள்ளது. நிதி என்ற இரட்டை மிரட்டல் வார்த்தையைக் கண்டு அஞ்சியே இன்று எத்தனையோ அதிரடி முடிவுகளை எடுக்க முடியாமல் அடக்கி வாசிக்கின்றன.
ஆனால் பாஜக என்ற பழமைவாத, மதவாத, பிரிவினைவாத பாசிச கட்சிக்கு பணம் ஒரு பிரச்சினையாக என்றுமே இருந்ததில்லை. ஏனெனில் அவர்கள் இரண்டு எம்பிக்கள் கூட பெறாத கால கட்டங்களில் கூட தனி விமானங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பரந்த இந்திய தேசம் முழுவதும் பறந்தார்கள்.


பாஜகவின் தலைவர்கள் என்றாலே கட்டுக்கட்டாக பணம் வாங்கிய வீடியோ காட்சிகள் உங்களுக்கு நினைவு வராமல் போகாது.


எந்த அளவுக்கு அவர்கள் கீர்த்தி நிறைந்தவர்கள் (!) என்றால் ராணுவத்தி னருக்கான சவப்பெட்டிகள் விஷயத்தில் கூட கேவலமான முறையில் முறைகேடு களை நிகழ்த்தினார்கள். ஆட்சியில் இருந்தால்தான் இந்த லட்சணம். ஆட்சியில் இல்லாவிட்டால் வாலை சுருட்டிக் கொண்டு தேமே என உட்காரு வார்கள் என சிலர் நினைக்கலாம். அந்த நினைப்பையும் கெடுப்பதைப் போன்ற ஒரு கண்றாவிக் காட்சி பாஜகவின் அகில இந்திய தலைமையகத்தில் அரங்கேறியுள்ளது.


கதவு எண் 11, அசோகா சாலை, புது டெல்லி என்பது பாஜகவின் அகில இந்திய தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் முகவரியாகும்.
இங்கு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்கின் பிரத்யேக அறைக்கு அடுத்தபடியாக ஒரு சிறிய மர்மமான அறை அமைந்திருக்கிறது. இது அலுவலகத்திலேயே மிகவும் முக்கியத்துவம் (!) வாய்ந்த அறை. ஆம் கட்சிக்காக வழங்கப்படும் பணத்தில் கணக்கு (!) காட்டியது போக மீதமுள்ள கரன்சிக் கட்டுகள் பதுக்கி வைக்கப்படும் அறை அதுவாகும்.


கடந்த மாதம் 26ஆம் தேதி அந்த அறையில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட பணம் தான், பாஜகவின ரால், பாஜகவுக்கு வழங்கப்பட்ட பணம், பாஜக அலுவலகத்தில் இருப்பவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை யடிக்கப்பட்ட பணம் இரண்டு கோடியே அறுபது லட்சம் எனக் குறிப்பிடப்பட் டாலும் நிஜமான தொகை இதை விட அதிகமாக இருக்கும் என்றே கருதப் படுகிறது.


திருடுபோனதோ மிகப்பெரிய தொகை. ஆனால் இதுகுறித்து முறை யான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வில்லை.


காவல்துறையினரிடம் புகார் கொடுத் திருக்க வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்? மாறாக இவர்கள் தனியார் புலனாய்வு அமைப்பிடம் இது தொடர்பான விசாரணையை ஒப்படைத்துள்ளனர்.


வெளியுலகத்திற்கு தெரிய வேண் டாம் என்பதற்காக சில நிழல் உலக மனிதர்கள் செய்யும் வேலையை நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும், அடுத்தும் ஆட்சிக்கு வரப் போவது நாங்களே என எகிறிக் குதித்து எட்டாக்கனிக்கு ஏப்பம் விடுபவர்கள் செய்யலாமா? காவல்துறையினரை இன்னும் அணுகாதது ஏன்?


இந்திய நாட்டின் காவல்துறையின் மீது பாஜக தலைமைக்கு நம்பிக்கை இல்லையா?


திருட்டு போனது உண்மையில் இரண்டு கோடியே அறுபது லட்சம் தானா? அல்லது அதைவிட எத்தனை மடங்கு கோடிகள் திருட்டு போனது என்ற உண்மை அம்பலமாகி விடும் என்ற அச்சமா?


கோடானு கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுத்தது யார்? அவர் களைப் பற்றிய தகவல்களை பாஜக வெளியிடுமா?


கோடிகளைக் கொடுத்து தனிநபரா? குழுவா? குழுக்களா? குழுக்கள் என்றால் ஆயுதம் தாங்கிய குழுக்களா? அல்லது ஆயுதம் ஏந்துவதற்கு தூண்டும் குழுக்களா? மாலேகான் குண்டு வெடிப்புகளில் சிக்கிய தீவிரவாதி களுடன் பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் சகோதரர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் பாஜக தலைமையகத்தில் திருட்டு போனதாகக் கூறப்படும் கோடிக் கணக்கான ரூபாய்கள் குறித்த நியாய மான சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.


பாஜக அலுவலகத்தில் திருட்டு போன பணம், பயங்கரவாதிகளிட மிருந்து வந்த பணமா? அல்லது திருட்டு சம்பவம் என்ற பெயரில் பயங்கரவாதி களுக்கு கொண்டு செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமா? என பல்வேறு திடுக்கிடும் சந்தேகங்களை பாஜகவைப் பற்றி நன்கு அறிந்தவர்களே தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசும் டெல்லி மாநில அரசும் அலட்சி யம் காட்டுவது ஏன்? விசாரணைக்கு உத்திரவிடுவதில் தாமதம் ஏன்
ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்!

அபூசாலிஹ்




உலகின் ஒரே வந்தேறி ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் வன்கொடுமைகள் எல்லை மீறியது. டிசம்பர் 27, 2008ல் இஸ்ரேலின் வான்படை தாக்குதலில் அந்த ஒரே நாளில் மட்டும் 205 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் குழந் தைகள் கொல்லப்பட்ட கொடூரம் கண்டு உலகமே அதிர்ந்தது. 60 ஆண்டுக்கு முன்பு அமெரிக்க குழந்தையான இஸ்ரேல் என்ற அந்த முறையற்ற குழந்தை ஜனித் தது. பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் விரட்டப்பட்ட அவர்களிடம் எந்த பகைமையும் காட்டாது சமாதானத் துடன் வாழ்ந்து வந்த ஒரு தூய சமூகத் தினரை வதைத்து அவர்களது நிலப் பரப்பை முற்றிலும் அபகரித்து தாங்கள் ஒரு இழிமக்கள் கூட்டம்தான் என்பதை நிரூபித்தார்கள். எவ்வித உரிமைகளும் வழங்காது மேற்குலகின் வக்கிரப் புத்தி யுடன் கூடிய நிதி மற்றும் ராணுவ உதவியுடன் அப்பாவிகளை வதைத்தனர்.




இப்பூமி கிரகத்தின் முதல் பயங்கர வாத நாடு இஸ்ரேல். மோசமான பயங்கர வாதிகள் யூதர்கள் என்ற இழிபெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. முஸ்லிம்களின் மூன்றாம் புனிதத்தலம் அமைந்துள்ள தியாக பூமியாம் பாலஸ் தீனத்தை முழுமையாக மீட்கும் நாள் எந்நாளோ என உலக முஸ்லிம்களும் நீதி விரும்பும் அனைத்து மக்களும் ஏங்கித் தவித்தனர். உரிமை வேண்டி போராடிய இயக்கங்களுடன் இரக்கமற்ற முறையில் போர் தொடுத்தனர் யூத கோழைகள். போரின் கொடுமைக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடும் அப்பாவி மக்களைக் கூட யூதவெறிக் கூட்டம் விட்டு வைத்ததில்லை. அகதி முகாம் களைக் கூட, அதிலுள்ள குழந்தைக் கொழுந்துகளைக் கூட கொத்துக் குண்டுகளால் குதறிய கொடுமை இந்த உலகமே கனவிலும் நினைத்துப் பார்க் காதது. ஆம்புலன்ஸ்களைக் கூட குண்டு களால் துளைத்தது. இத்தனைக் கொடு மைகள் இழைத்த இஸ்ரேலைத்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் பிற ஐரோப் பிய நாடுகளும், ஏன் மன்மோகனின் அமெரிக்க காதல் அரசும் தலைமேல் தூக்கிப் பிடித்து வருகின்றன. கொண் டாடி, கூத்தாடி வருகின்றன.




இத்தகைய இக்கட்டான நிலையிலும் பாலஸ்தீன மக்களின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் ஆத ரவு வேண்டி நின்றனர். யாசர் அராஃபத் போன்ற வர்களுக்கு தார்மீக ரீதி யிலான ஆதரவினை வழங்கிய இந்தியா போன்ற நாடுகள் கூட அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு அணியில் இணைந்து விட்ட நிலையில் பாலஸ் தீன மக்களின் உரிமைப் போருக்கான சர்வதேச ஆதரவு என்பது அரசாங் கங்களின் மட்டத்தில் அறவே இல்லை என்ற நிலையில் உலகெங்கும் உள்ள வெகு ஜன மக்களின் ஆதரவு என்ற உயிர்க் காற்றை மட்டுமே பெற்று பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகம் உலகெங்கும் ஒரு ஏக்கப் பிரச்சாரமாக வெளிப்பட்டி ருக்கிறது.




இந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற விடுதலைப் போராளி களின் இயக்கம் தேர்தல் பாதைக்கு திரும்புவதாக அறிவித்தது. முதலில் உள்ளாட்சித் தேர்தல்கள் குதித்து பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இஸ்மாயில் ஹனியா, பாலஸ்தீனத்தின் பிரதமரானார்.




போராளி அமைப்பு, தேர்தல் பாதைக்கு பிரவேசம் செய்து பெருவாரியான வெற் றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டவோ, வரவேற்கவோ பரந்த மனம் இல்லாத போலி ஜனநாயக தத்துவ வாதிகளான மேற்குலக அரசுகள் ஹமாஸை அங்கீகரிக்க மறுத்தன. சிறப் பான முறையில் ஆட்சி செய்த ஹமாஸ் அரசை செயல்பட விடாமல் முடக்கும் சதிச்செயலை ஃபத்தாஹ் அமைப்பை பகடைக்காயாகப் பயன்படுத்தி அமெரிக் காவும் இஸ்ரேலும் செய்தன. பாலஸ்தீன அதிபர் என்று அழைக்கப்படும் மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவுடனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கோண்டி என்ற கண்டலீசா ரைஸுடனும் அதிக மாக உறவு பாராட்டத் தொடங்கினார். பாலஸ்தீனத்தின் நிதி ஆதாரம் முடக்கப் பட்டது. அரசு அதிகாரிகளுக்குக் கூட மாதாந்திர ஊதியம் வழங்க முடியா அவலத்தை ஹமாஸ் தலைமையிலான அரசு சந்தித்தது. பிற்போக்கு ஆக்கிர மிப்பு சக்திகளின் தீய நோக்கத்தை முறியடிக்கும் விதமாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் ஒரு சமாதான முன்முயற்சியை மேற்கொண்டார். அதனடிப்படையில் சொந்த சகோதரர் களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையை ஒழித்துக்கட்ட வேண்டும் என விரும்பினார்.ஃபத்தாஹ்வின் அப்பாஸும், ஹமாஸின் தலைவர் ஹாலித் மிஷாலும், இஸ்மாயில் ஹனியா வும் சவூதி அரேபியாவுக்கு வரவழைக் கப்பட்டனர். உணர்ச்சிமிகு சந்திப்பில் எங்கள் மூத்த சகோதரரின் (மன்னர் அப்துல்லாஹ்வின்) கட்டளைக்கு கீழ்ப் படிவோம், சமாதானத்தைப் பேணுவோம் சகோதரச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உள்ளம் உருக உறுதிமொழி மேற்கொண்டனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத் தின்படி ஹமாஸுடன் பத்தாஹ் கூட்டு அமைச்சரவை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. சவூதியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு இரு பிரிவு தலைவர் களும் போய் சேர்ந்த சில நாட்களில் பிளவும் பிணக்கும் தோன்றின. இது எதிரிகளுக்கு கொண்டாட்டத்தைக் கொடுத்தது. மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவின் அடியொற்றி நடந்தார். ஹமாஸ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து முயன்று வந்தது. ஹமாஸின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டைகள் போடும் விதமாக பொருளாதாரத் தடையை விதித்து அமெரிக்கா தனது வக்கிரப் புத்தியைக் காட்டியது. பொருளாதாரத் தடையால் உயிர் காக்கும் மருந்துகள், எரிபொருள், உணவு, மின்சாரம் என அனைத்தையும் இழந்து பெரும் துயரத்தைச் சந்தித்தனர் காஸா பகுதி மக்கள். நிவாரணப் பொருட்களை சுமந்துகொண்டு சர்வதேச உதவிக் குழுக்கள் படகுகளில் வந்த போது அவர்களை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் அனுமதி மறுத்தது. பொறுமை இழந்த ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.




இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடை யிலான சமாதானப் பேச்சுவார்த்தையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எகிப்து முன்னெடுத்தது. இந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஹமாஸுக்கும் இஸ்ரேலுக் கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மாதம் 19ஆம் தேதி ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் தொட ருமா? என கேள்விகள் எழுந்தபோது போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட மாட்டாது; போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என அறிவித்தது. கடந்த நவம்பர் 4ம் தேதி இஸ்ரேல், எல்லைகளை மூடியது. சொல்லொணாத் துயரங்களை விளைவித்தது. 15 லட்சம் மக்கள் இன்று காஸாவில் வாழ்வாதார உதவிகள் ஏதுமின்றி வாடி வருகிறார்கள். உணவு, உயிர்காக்கும் மருந்துகள் ஏதுமின்றி தவிக்கும் நிலையில் ஹமாஸ் மற்றுமொரு இண்டிஃபாதாவை (மக்கள் போர்) அறிவித்திருக்கிறது.


இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கிய முதல் நாள் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியா னார்கள். இரண்டாவது நாள், மூன்றா வது நாள் என தொடர்ந்து தனது வன்தாக்குதலை இஸ்ரேலை தொடர்கிறது.


இதுகுறித்து காஸா பகுதியின் சமாதான ஆர்வலரும், புகைப்பட செய்தியாளருமான சாமெஹ் ஏ. ஹபீப் குறிப்பிடும் பொழுது “சனிக்கிழமை காலை 11 மணிக்கு எப்.16 வகையைச் சேர்ந்த குண்டுவீசும் 60 விமானங்கள் காஸா பகுதியில் குண்டுமழை பொழிந் தன. நூறு காவல் நிலையங்கள் மற்றும் காஸா பகுதியிலுள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின. முதல் குண்டு வீச்சில் 160 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர் களில் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கட்டடங்களின் இடிபாடுகளுக்கிடையில் ஏராளமான உடல்கள் சிக்கிக் கொண்டுள்ளன. அல்ஜவாஸத் காவல் நிலையத்தில் மட்டும் 70 இளம் காவல்துறை அதிகாரி கள் பலியானார்கள்.


ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக பலியானார்கள். பலியான வர்களில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர். ஏராளமான பெண்களும் பலியாகி உள்ளனர்.


காஸாவின் காவல்துறை இயக்குநர் தவ்ஃபீக் அல்ஜாபர் இந்த வன்தாக்குதலில் பலியாகி விட்டார். படுகாயம் அடைந்தவர் களில் மூவர் ஒரே படுக்கையில் கிடத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய பரிதாப நிலை. எழுபதுக்கும் மேற்பட்டோர் எகிப்தின் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.


மான் செய்தி நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் நாசர் அல் லஹாம் தெரிவிக்கும் போது முதல் நாள் தாக்குதலில் 60 போர் விமானங்கள் கண்மூடித்தனமாக தாக்கு தலை நடத்தின.


காஸாவின் அனைத்துப் பகுதிகளும் குறிவைத்து தாக்கப்பட்டன. மாநகரங்கள், பெருநகரங்கள், குக்கிராமங்கள் என எதனையும் விட்டுவைக்கவில்லை.


காஸா, ரஃபா, கான்யூனிஸ், நுசிரியாத் மஹாஜி, பைத்லஹியா, ஜபலிய்யா, பைத் ஹானூன், அல்ஷாதி, ரஃபா பகுதியில் உள்ள அகதி முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகள் கூட இந்தக் கொடியவர்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. நடைபெற்ற அக்கிரமம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.


பச்சிளம் குழந்தைகள் பள்ளிவிட்டு மதிய உணவுக்காக திரும்பிக் கொண் டிருக்கும் போது இந்தக் கொடுமைகள் நடந்து குழந்தைகள் குதறப்பட்டி ருக்கிறார்கள். பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருப் பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித் திருக்கிறது. காஸாவில் உள்ள 20 சதுர கிலோ மீட்டர் பகுதியை ராணுவ பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச் சர் எஹுத் பராக் அறிவித்திருக்கிறார்.


இஸ்ரேல் வான்தாக்குதலில் காஸாவின் உள்துறை அமைச்சக அலுவலகம் மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இரண்டும் தாக்கப் பட்டிருப்பதாக கடைசிக்கட்ட தகவலை பி.பி.சி. தெரிவிக்கிறது. இஸ்ரேலின் இந்த ஈனத்தனமான செயலை எதிர்த்து மூன்றாவது புரட்சிக்கு தயாராகுவோம் என ஹமாஸ் இயக்கத் தலைவர் காலித் மிஷால் தெரிவித்திருக்கிறார். இந்த நிமிடம் வரை அப்பாவி பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகள், அழித்தொழிப்பு வேலைகள் தொடர்கின்றன.

ஹனியாவின் கதி?

சர்வதேச போர் விதிமுறைகளை மீறி அப்பாவிகளைக் கொல்வது மட்டுமின்றி மக்கள் தலைவர்களையும் கொலை செய்ய முயன்று வருவதை உலகமே கண்டிக்கிறது. பல்கலைக் கழகங்களின் மீது தாக்குதல் நடத்திய தோடு காஸாவின் காவல்துறை தலைவர் தௌஃபிக் ஜாஃபரையும் படுகொலை செய்த இஸ்ரேல் இன வெறி படை பாலஸ்தீன மக்களின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை கொலை செய்யவும் கெட்ட எண்ணத் தோடு முயற்சி செய்தது. ஹனியா அலுவலகம் மீது இஸ்ரேலிய வான் படை வெறித்தனமாக குண்டுகளை வீசியது. ஹனியா அப்போது அங்கு இல்லாததால் அவர் உயிர் பிழைத்தார். யாசர் அராஃபத் அலுவலகத்தின் மீதும் இதுபோன்ற தாக்குதலை தான் இன வெறி இஸ்ரேலிய அரசு தொடுத்தது. மின்சாரத்தைத் துண்டித்தது. மெழுகுவர்த்தி ஒளியில் அந்தப் பெருந்தகை தனது அன்றாடப் பணி களை செய்ய வேண்டியதாயிற்று. இஸ்ரேலின் ஈனச் செயல்களுக்கு முடிவு எப்போது?

எதற்கும் தயார்! ஹிஸ்புல்லாக்கள அறிவிப்பு!!

“லெபனானுடனான போரில் ஹிஸ்புல்லாக்களால் முறியடிக்கப்பட்ட இஸ்ரேல் தற்போது பாலஸ்தீன மக்களின் மீது காஸா பகுதியில் அரச வன் முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாலஸ்தீனர்களுடனான கடும் தாக்கு தலை முறியடிக்க அரபு நாடுகளின் ஒற்றுமை அவசியம். பாலஸ்தீன தெருக்களில் கண்டன கோஷங்கள் எழுப்புவதை விட அந்நாடுகளின் அரசுகள் இஸ்ரேலை வன்மையாகக் கண்டித்து தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினால் அதன் விளைவுகள் வேறு விதமாக இருக்கும். இன்று எகிப்தின் தெருக்களில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் தகவல்கள் வெளிவந்திருக் கின்றன. அவர்கள் அவ்வாறு ஆர்ப் பாட்டம் செய்வதை விட காஸா எல்லை களைத் தகர்த்துவிட்டு பாலஸ்தீனத்திற் குள்ளே நுழையுங்கள். ஆயிரக்கணக் கானோரை, பல்லாயிரக்கணக்கா னோரை, பல லட்சக்கணக்கானோரை ஒரே அடியாகக் கொல்ல அவர்களுக்கு துணிவிருக்கிறதா பார்ப்போம். உங்கள் நாட்டின் எல்லைகளை உங்கள் இதயங்களால் முட்டி மோதி உடையுங் கள் எகிப்திய சகோதரர்களே!’’ என ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாஹ் அறைகூவல் விடுத்தி ருக்கிறார்.


லெபனானின் பகுதிகளை யூத விரோதிகள் தாக்குதல் நடத்தினால், மரண அடி நிச்சயம் என்ற ஹிஸ்புல் லாஹ் தலைவர், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் அரசுகளை இஸ் ரேலை எதிர்த்துப் போராட நிர்பந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
மாலேகான் வழக்கின் கதி?
தீவிரவாதத் தடுப்பு படையினர் அச்சம்!

மாலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் கோர முகத்தை தோலுரித் துக் காட்டியவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே. ஹிந்துத்துவ பாசிச சக்திகள் விஷயத்தில் நாட்டு மக்கள் எச்சரிக்கை காட்ட வேண்டிய முக்கியமான தருணத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.


கர்கரேயின் திடீர்மறைவு மகாரஷ்ட்ர மாநில தீவிரவாதத்தடுப்பு படையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள் ளது. மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கு முன்பு போல் துரித கதியில் இயங்குமா? மாநில அரசிடம் இருந்து முன்பு போலவே ஒத்துழைப்பு கிடைக் குமா என்ற அச்சத்தில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் ஆழ்ந்துள்ளனர்.


அஞ்சா நெஞ்சன் கர்கரே இன்று இல்லை. கர்கரேவுக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய தீவிரவாதத் தடுப்பு படைக்காக பிரத்யேகமாக விமானத்தையே வழங் கிய சரத்பவாரின் தேசியவாதக் கட்சியைக் சேர்ந்த துணை முதல்வர் ஆர்.ஆர் பாட்டீல் இன்று பதவியில் இல்லை. இத்தகைய நிலையில் இந்த வழக்கு குறித்த கவலை காவல்துறை வட்டாரத்தில் பரவலாக நிலவுகிறது.


இருப்பினும் கர்கரேயின் தியாகம், அவர் பாடுபட்டதற்கான உரிய பலனை அடையாமல் விடக்கூடாது என்ற உறுதியில் தீவிர தடுப்புப் படையினர் உள்ளனர்.


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்கிறார் தீவிர வாதத் தடுப்புப் படையின் கூடுதல் ஆணையர் சுக் விந்தர் சிங்
புஷ்ஷுக்கு செருப்படி!
இராக்கில் உச்சகட்ட மரியாதை!!


அபூசாலிஹ்






அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வீர பூமியான ஈராக்கில் கிடைத்துள்ள வழியனுப்பு மரியாதை(!) பூமிப் பந்தெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


அடிமேல் அடிவாங்கிய நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபருக்கு ஈராக்கில் கிடைத்த உச்சக்கட்ட அவமானம் அந்நாட்டு மக்களின் விடுதலை வேட்கைக்கு சான்று கூறுவதாக அமைந்தது. ஈராக்கில் அமெரிக்கப் படைகள் 2011ஆம் ஆண்டு வரை இருப்பதற்கான ஒரு அடிமை சாசனத்தை பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் தனது அடிமைகளான ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி மற்றும் அதிபர் ஜலால் தலபானி இருவரின் முன்னிலையிலும் நிறைவேற்றி அதுகுறித்து உரையாற்றும் போது அதிபர் புஷ் செருப்படி வாங்கினார்.






பத்திரிகையாளர் சந்திப்பில் புஷ் உரையாற்றும் போது அல் பக்தாதியா தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர் முன்ததர் அல் ஜைதி ஆவேசமாக எழுந்து “ஈராக் மக்களின் வழியனுப்பு முத்தம் இது நாயே’’ என அரபி மொழியில் சிங்கமென கர்ஜித்து தனது ஷூவை வீசினார். ஈராக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக, பாதிக்கப்பட்ட விதவைகளுக்காக, அநாதைகளுக்காக என கூறிக்கொண்டே அடுத்த ஷூவையும் அந்த மாவீரன் (ஷூவீரன்) முன்ததர் வீசினார். அந்த ஷூவின் அளவு 10 என்பது தெரிய வந்துள்ளது. புஷ்ஷுக்கு கிடைத்துள்ள உச்சபட்ச மரியாதை (!) உலகெங்கும் மகிழ்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கொடுங்கோலர்களின் வரிசையில் முதலிடம் பெறும் ஜார்ஜ் புஷ்ஷை இனி ஜார்ஜ் புஷ்-ஷூ என யாராவது அழைத்தால் அவர் வெறுப்படையக் கூடும். பேரிலேயே ஷூவை வைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வெறியனுக்கு கிடைத்த ஷூ மரியாதை (!) ஒரு தொடக்கம் என்றே கருதப்படுகிறது

Web Counter Code