இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, January 16, 2009

புஷ்ஷுக்கு செருப்படி!
இராக்கில் உச்சகட்ட மரியாதை!!


அபூசாலிஹ்






அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வீர பூமியான ஈராக்கில் கிடைத்துள்ள வழியனுப்பு மரியாதை(!) பூமிப் பந்தெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


அடிமேல் அடிவாங்கிய நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபருக்கு ஈராக்கில் கிடைத்த உச்சக்கட்ட அவமானம் அந்நாட்டு மக்களின் விடுதலை வேட்கைக்கு சான்று கூறுவதாக அமைந்தது. ஈராக்கில் அமெரிக்கப் படைகள் 2011ஆம் ஆண்டு வரை இருப்பதற்கான ஒரு அடிமை சாசனத்தை பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் தனது அடிமைகளான ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி மற்றும் அதிபர் ஜலால் தலபானி இருவரின் முன்னிலையிலும் நிறைவேற்றி அதுகுறித்து உரையாற்றும் போது அதிபர் புஷ் செருப்படி வாங்கினார்.






பத்திரிகையாளர் சந்திப்பில் புஷ் உரையாற்றும் போது அல் பக்தாதியா தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர் முன்ததர் அல் ஜைதி ஆவேசமாக எழுந்து “ஈராக் மக்களின் வழியனுப்பு முத்தம் இது நாயே’’ என அரபி மொழியில் சிங்கமென கர்ஜித்து தனது ஷூவை வீசினார். ஈராக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக, பாதிக்கப்பட்ட விதவைகளுக்காக, அநாதைகளுக்காக என கூறிக்கொண்டே அடுத்த ஷூவையும் அந்த மாவீரன் (ஷூவீரன்) முன்ததர் வீசினார். அந்த ஷூவின் அளவு 10 என்பது தெரிய வந்துள்ளது. புஷ்ஷுக்கு கிடைத்துள்ள உச்சபட்ச மரியாதை (!) உலகெங்கும் மகிழ்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கொடுங்கோலர்களின் வரிசையில் முதலிடம் பெறும் ஜார்ஜ் புஷ்ஷை இனி ஜார்ஜ் புஷ்-ஷூ என யாராவது அழைத்தால் அவர் வெறுப்படையக் கூடும். பேரிலேயே ஷூவை வைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய வெறியனுக்கு கிடைத்த ஷூ மரியாதை (!) ஒரு தொடக்கம் என்றே கருதப்படுகிறது

No comments:

Web Counter Code