இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, December 26, 2007

மோடியை வெற்றிபெறச் செய்த காங்கிரஸ்

அபூசாலிஹ்

குஜராத்தில் மீண்டும் பாசிசம் படர்ந்து விட்டது. மனு அதர்ம ஆட்சி குஜராத்தில் குடிகொண்டு விட்டது. இதற்கு முக்கிய மாக மோடி நன்றி கூற வேண்டியது காங்கிரஸ்காரர்களுக்குத்தான்.

மோடி தன் மீதான குற்றச்சாட்டு களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த அதேவேளையில்தான் நேற்று மோடியோடு கூடிக் குலாவியர் களை அழைத்துக் கொண்டு பிரச்சாரத் தில் ஈடுபட்டது காங்கிரஸ்.

மோடிக் கூட்டத்தையும் மோடி இல்லாத காங்கிரஸ் கூட்டத்தையும் தனித்தனியே பார்த்தவர்களுக்கு பெரிதாக வேறுபாடு ஒன்றும் தோன்றவில்லை.

மோடியின் கட்சி ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏ.பிரிவு அணி என்றால் குஜராத் மாநில காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்.ஸின் பி பிரிவு அணியாகவே கருதப்பட்டது. சங்கர்சிங் வகேலா உள்ளிட்ட நேற்றைய காக்கி டவுசர் பார்ட்டிகளுக்கு கதர் டவுசர் மாட்டி காங்கிரஸுக்கு அழைத்து வந்த போதே காங்கிரஸின் கொள்கை உறுதி(!) புலப்பட்டது.

காங்கிரஸ் தன் கொள்கை என்பது மதச்சார்பின்மை என்பதாக சொல்லிக் கொண்டது அவ்வாறே பாஜகவின் கொள்கை ஹிந்துத்துவா என்று சொல்லிக் கொண்டது.

காங்கிரஸின் கொள்கைக்கு பிதா மகன் 'காந்தி' என்பதைப் போல சங்கும்பல் கொள்கையின் பிதாமகன் கோட்சே என கருதப்படுகிறது.

57 வயதான நரேந்திர மோடி 1966ல் ஆர்.எஸ்.எஸ்.சில் சேர்கிறார். 1987ல் பாரதீய ஜனதாவில் முக்கிய செயலாற்றும் ஊழியராக உருவெடுக்கிறார்.
2001 அக்டோபரில் பாஜக சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, பாஜக தேசிய தலைமையினால் குஜராத் முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படு கிறார். அதுவரை பாஜகவின் முதல்வராக இருந்த சங்கர்சிங் வகேலாவும் கேசுவாய் கேசுபாய் பட்டேலும் ஓரங்கட்டப்பட்ட னர். அவ்வாறே 2002ல் நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலையில் தொடர்பு டையவர்களுக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இந்த செயல் எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதாக அமைந்தது.

காங்கிரஸ் கட்சிக்கென ஒரு ஓட்டு வங்கி உண்டு. சிறுபான்மையினர், தலித்துகள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள்தான் காங்கிரஸின் ஓட்டு வங்கியாக கருதப்பட்டது.

விடுதலைப் பெற்ற காலத்திலிருந்து காங்கிரஸ் இந்த அடிப்படையிலேயே வாக்குகளைப் பெற்று வெற்றிகளைக் குவித்தது.

காங்கிரஸ் ஓட்டுவங்கியில் ஓட்டையைப் போட்டு மதவாதம் பேசி பாரதீய ஜனதா அரசியலில் வளரத் தொடங்கியது. எதிர்வினை ஆற்ற வேண்டிய காங்கிரஸ் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் பாத்திரத்தை பாஜகவிடம் பறிகொடுத்துவிட்டு பாஜகவின் பின்னால் செல்லும் அவல நிலையை அடைந்தது.

குஜராத்தில் தொழிற்சங்சங்கள் காவிமயமாயின. ஆதிவாசி மக்களை ஆதிக்க சாதியினர் தங்களின் விருப்பத் திற்கேற்ப ஆடும் பொம்மைகளாக மாற்றினர். ஏறக்குறைய பல்வேறு பிரிவு மக்களிடையேயும் விஷத்தை விதைத்து ஆதரவை அறுவடை செய்த பாஜகவுக்கு மத்தியில் டெல்லிக்கும் அகமதாபாத்துக் கும் சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செல்வதையே முழுநேரக் கடமையாக குஜராத் காங்கிரஸார் கொண்டனர்.

பாஜகவினரால் வளைக்க முடியாதவர் கள் முஸ்லிம்கள் மட்டுமே என்பது தெள்ளிய நீரோடையாக தெரிய வரவும் முஸ்லிம்களை கருவறுக்கும் விதமாகவே திட்டமிடலைத் தொடங்கினர் ஹிந்துவ சக்திகள்.

மதவெறி பரப்பப்பட்டு மனித நேயம் மாய்க்கப்படும் போது அதற்காக கிளர்ந்து எழவேண்டிய காங்கிரஸ் அமைதி காத்தது.

மோடி ராஜ்ஜியம் எழுச்சிபெற காங்கிரஸ் மவுன சாட்சியானது.

2002ல் நிகழ்ந்த இனப்படுகொலை குறித்தும் காங்கிரஸ் தனது எதிர்ப்பை மூர்க்கமாக தெரிவிக்கவில்லை. பரபரப் பான அரசியல் சூழலில் காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியவில்லை.

தீஸ்தா செதல்வாட்களும், அருந்ததி ராய்களும், எழுப்பிய போர்க்குரல் போல் காங்கிரஸ் குரல் எழுப்பவேயில்லை. முஸ்லிம்களின் குரல்வளைகள் நெறிக்கப்பட நெறிக்கப்பட, அதனை எதிர்த்து காங்கிரஸ் குரலெழுப்பவே இல்லை.

கோத்ரா சம்பவத்தைக்கூட லாலுவின் தீவிர முயற்சியால் நடுநிலையான நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்ட தால் கோத்ரா ரயில் எரிந்த சம்பவம் சதிச் செயல் அல்ல லி விபத்து என்ற விபரம் உலகிற்கு உணர்த்தப்பட்டது.

இம்மாதிரி ஒவ்வொரு நிகழ்வு களுக்கும் ஆர்த்தெழுந்து போர்க்களம் காணவேண்டிய காங்கிரஸ் பின்தங்கியது. காங்கிரசுக்கு மாற்றாக பிற சமூகநீதி இயக்கமோ அல்லது முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டு பிற சமுதாய மக்களோடு ஒற்றுமை பேணும் தமுமுக போன்ற சேவை அமைப்புகளோ குஜராத்தில் இல்லாமல் போனதால் குஜராத்தின் அப்பாவி முஸ்லிம்களுக்கு அடிமேல் அடிவாங்கும் நிலைக்கு கொண்டு சென்றது.

மோடி மீது குற்றம்சாட்டி காவல்துறை டி.ஜி.பி ஸ்ரீகுமார் 'நானாவதி கமிஷன்' முன் தொடர்ந்து வழங்கிய சாட்சியங்கள், ஜஹிரா ஷேக் பல்கிஸ் பானு, இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி யின் கோரிக்கைகள் போன்ற கருணை காட்டப்பட வேண்டிய பரிதாப ஜீவன்கள் விஷயத்தில் காங்கிரஸ் பாராமுகமாய் இருந்தது.

மோடியை வாக்குச்சீட்டின் மூலம் தண்டிக்கத் துடித்த முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் தவித்துக் கொண்டிருந்தனர். தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டதைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு யாரை நம்பி இவர்கள் தேர்தல் களத்தில் சென்றார் கள்?

சிங்கம் என்றால் கர்ஜனை புரிய வேண்டும். நரி என்றால் ஊளையிட வேண்டும். ஆனால் காங்கிரஸ் சிங்கம் கர்ஜனையை மறந்து காவி நரிகளைப் போல ஊளையிட முயன்றதுதான் பிரச்சினை.

தனக்கென உள்ள ஓட்டு வங்கியை பராமரிக்காமல் மோடிக் கூட்டத்தின் வாக்கு வங்கியைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த நிலை கண்டு நடுநிலை யாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளூர் தளபதிகளாக முன்னாள் காவி கனவான்களை நிறுத்தி விட்டு ஓட்டு வேட்டையாட சோனியாவும், ராகுலும் வந்தனர். இருவரும் மோடியைக் குறித்து பிளந்து கட்டும் போது பாஜக வினர் மட்டுமல்ல, காங்கிரஸ் மேடையில் நின்று கொண்டிருந்த முன்னாள் பாஜகவினரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர்.

உள்ளூரில் உருப்படியான தலைவர் களை வளர்தெடுக்காமல் விட்டதின் விபரீதத்தை காங்கிரஸ் இப்போதாவது புரிந்து கொண்டால் நலமாக இருக்கும்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆந்திராவில் அரசோச்சிக் கொண்டி ருந்த சந்திரபாபு நாயுடுவை எதிர் கொள்ள முடியாமல் காங்கிரஸ் திணறியது. ஆனாலும் ஆந்திர அரசிய லில் காங்கிரஸ் சார்பாக ராஜசேகர ரெட்டி முன்நிறுத்தப்பட்டார். அசைக்க முடியாத மலையென கருதப்பட்ட நாயுடு வீழ்த்தப் பட்டார்.

இவ்வாறே மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பாஜகவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வண்ணம் வளர்ந்தனர் திக்விஜய் சிங்கும், அசோக் கெலாட்டும். இவ்வாறு மக்கள் தலைவர் களை குஜராத்தில் வளர்க்காததின் பலனை காங்கிரஸ் இப்போது அனுபவிக் கிறது.

காங்கிரசுக்கான வாக்குகள் அந்த மாநிலத்தில் கொட்டிக் கிடக்கிறது களத்து மேட்டு நெல்லைப் போல. அதனை களஞ்சியத்தில் கச்சிதமாகக் கொண்டு சேர்க்கும் சரியான உழைப்பாளி தற்போது இல்லை என்பதுதான் நிதரிசனம்.

குஜராத்தில் மோடி வென்றதால் ஹிந்துத்துவா அங்கே வாகை சூடியதாக பொருள் கொள்ள முடியாது.

குஜராத் காங்கிரஸ் தங்க தாம்பாளத் தில் வைத்து மோடிக்கு வெற்றியை வழங்கியிருக்கிறது. மோடியும் அவர் சகாக்களும் மனதிற்குள் காங்கிரஸுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

எதிர்காலத்தில் சங்பரிவாரின் வெற்றி களுக்கு தொடர்புள்ளி வைப்பதோ அல்லது முற்றுப்புள்ளி வைப்பதோ காங்கிரஸின் 'கை'களில் தான் இருக்கிற

Web Counter Code