இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, July 20, 2010

போபால் துயரம் -ஆவண படம் (Video)

http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=551:bhopal-gas-tragedy&catid=82:indiia&Itemid=199

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு இல்லாத பாதுகாப்புத்துறை! அபூசாலிஹ்

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு இல்லாத பாதுகாப்புத்துறை!

E-mail Print PDF

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 80 சி.ஆர்.பி.எஃப். படையினர் கொல் லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியும் மற்றும் சுற்றிவளைத்து சரமாரியாக சுட்டும் கொன்று குவித்துள்ளனர்.
நக்சலைட்டுகளின் 43 ஆண்டு கால வரலாற்றில் இது படுபயங்கர தாக்குதலாக கருதப்படுகிறது.

8 மாநிலங்கள், 200 மாவட்டங்கள் என நக்சலைட்டுகளின் ஆதிக்கம் வனப்பகுதிகளில் கொடி கட்டிப் பறக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளின் செயல் பாட்டினை ஒடுக்க கிரீன் ஹன்ட் என்ற பெயரில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதல் நடவடிக்கையினைக் கண்டித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு நக்சல்கள் ஏழு மாநிலங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி னர். அதற்கு ஓரளவு ஆதரவும் கிடைத்தது கவலைக்குரிய ஒன்றாக கருதப்பட்டது.

நக்சல் தாக்குதலின்போது மலைபதுங்கு இடங்களில் இருந்து, கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நக்ச லைட்டுகளின் தாக்குதலின் போது சி.ஆர்.பி. எஃப். படையினர் பலர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

150க்கும் மேற்பட்டோர் இன்ன மும் காணவில்லை. கொடூர மான தாக்குதலின் போது தப்பிஓடி விட்டார்களா? அல்லது மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப் பட்டார்களா? என்ற விபரம் இன்னமும் கிடைக்கவில்லை என பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் வேட்டையோடு, காணாமல் போன பாதுகாப்புப்படையினரையும் தேட வேண்டிய கூடுதல் சுமை இப்போது அதிகரித்துள்ளது.

மறைந்திருந்து தாக்கும் நக்சல்கள் கோழைகள், அவர்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் துடைத்தெறியப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாக சூளுரைத்த மூன்றா வது நாளில் இந்தக் கொடூர தாக்குதலை நக்சலைட்டுகள் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் விரைவில் ஓய்வு பெற இருந்தார். மற்றொருவர் பணியில் இருந்து கொண்டு ஆசை ஆசையாக தனக்கென சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார்.

தான் கட்டிமுடித்த வீட்டிற்கு செல்ல ஆசைப்பட்ட அந்த பாதுகாப்புப்படை வீரரின் உயிரற்ற சடலம் தான் அவர் வீட்டினுள் நுழைய முடிந்தது.

நக்சல்களை ஒடுக்கியே தீரு வோம் என சூளுரைத்த மத்திய அரசு நக்சலைட்டுகளின் மீது வான்வெளி தாக்குதல் நடத்த ஆயுத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வான் வெளி தாக்குதல் சாத்தியமற்ற ஒன்று என இந்திய வான் படைத்தளபதி கூறியிருக்கிறார்.

நிலைமை இவ்வாறிருக்க கடந்த ஆறு ஆண்டுகளில் நிகழ்ந்த நக்சல் தாக்குதல்களில் சென்ற ஆண்டு (2009) 107 சதவீதம் தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. 317 பாதுகாப்பு படையினர் 2009&ம் ஆண்டு நக்சல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு (2010) தொடங்கி நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில் 131 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2005&ம் ஆண்டு தொடங்கி இன்று வரை 1225 பேர் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தொடர் தாக்குதல்களின் வழியாக நக்சலைட்டுகள் முக்கிய செய்தியை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

நக்சலைட்டுகள் துப்பாக்கிகள் மூலமே பேச விரும்புகிறார்கள்; அவர்களோடு பேச்சுவார்த்தை கள் பலன் அளிக்குமா? என அதிகார வட்டாரத்தில் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்த காரணங்களுக்கு வலுசேர்ப்பதைப் போல நக்சலைட்டுகள் தங்கள் ஆதரவுத் தளம் மிகுந்த மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர் களின் உயிருக்கு குறிவைத் திருப்பதாகவும் தங்களுக்கு செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் அடுத்தடுத்த அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்ட்டுகள் என அழைக்கப்படும் நக்சலைட்டுகள் வழக்கமாக காவல்நிலையங்கள், ராணுவக்கிடங்குகள் உள்ளிட்ட வற்றிலுள்ள ஆயுதங்களை கொள்ளையடித்தே தாக்குதலை நடத்தியதாக இதுவரை கருதப்பட்டு வந்தது.

ஆனால் முதன்முறையாக சீனா, ரஷ்யா உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள அதிபயங்கர ஆயுதங்கள் அவர்களிடம் இருப்பது தெரியவந்துள்ளதாக வும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

போர்ப்படை, வானூர்திப் படை, கடற்படை போன்றவற்றை & நாட்டின் எல்லைகளுக்கு வெளியே இருந்து கொண்டு எதிரிகளின் இலக்குகளை தாக்குவதில் சிறந்த முறையில் பயிற்சி பெற்றவை. அது மட்டும் போதுமா?

இந்த சாகசப்படைகளை உள்நாட்டில் நக்சலைட்டுகளை ஒடுக்குவது போன்ற இலகுவான வேலைகளுக்கு பயன்படுத்த முடியாது. அதற்காக அவர்கள் பயிற்றுவிக்கப்டவில்லை என இந்திய வான்படை தளபதி பி.வி. நாயக் தெரிவித்திருக்கிறார்.

நமது கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியுடன் செயல்படவேண்டிய நேரமிது. இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நக்சல் இயக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டியது அவசியம்.

தேர்தெடுக்கப்பட்ட அரசுகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதே நக்சல்களின் நோக்கமாகும். அவர்கள் வெற்றி பெற நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எங்கோ தவறுகள் நடந்துள்ளது. அது விரைவில் கண்டறியப்படும் என்று விரிவான ஒரு செய்திகளை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டிருக்கிறார்.

பிரச்சினைகளை மட்டுமே தீர்க்க வேண்டும். பிரச்சினைக்குரியவர்களை தீர்க்க கூடாது என்பதில் முனைப்பாக இருக்கும் ப.சிதம்பரம் நடுநிலையாளர்களால் பாராட்டப்படுகிறார்.

இந்தியாவில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற சொற்கள் பிரயோகிக்கப்படும் போதெல்லாம். ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்துடனே அந்தப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுவரை பதவி வகித்த உள்துறை அமைச்சர்கள் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் எங்கு இருக்கிறது. என்பதை உணராமல் காற்றிலே சிலம்பம் ஆடியிருக்கிறார்கள் என்பதை சமீபத்திய நக்சல் தாக்குதலின் தீவிரம் புரிய வைத்திருக்கக்கும்.

சமீபகாலமாக இந்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் அதிக உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வருபவை நக்சல் தாக்குதல்களே.

2009&ம் ஆண்டு ஜம்முகாஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 133 பேர் கொல்லப்பட்டனர். அதே காலகட்டத்தில் நக்சல் தாக்குதலில் 908 பேர் (பலியானவர்களில் பாதுகாப்பு படையினரே அதிகம்) பலியாகி உள்ளனர்.

2010&ம் ஆண்டு தொடங்கி இதுவரை 30 பேர் ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். ஆனால் இதே காலகட்டத்தில் நக்சல்களின் தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் சிறிய வேட்டுச்சத்தம் கேட்டால் கூட வெகுண்டு எழும் பா.ஜ.க.வினர் நக்சல் தாக்குதல் விவகாரங்களில் வித்தியாசமான அமைதியை கடைப்பிடிக்கின்றனர்.

சாதாரண தாக்குதல்களுக்கு எல்லாம் அண்டை நாடான பாகிஸ்தானோடு போர் தொடுக்க வேண்டும் என முண்டா தட்டும் பா.ஜ.க.வினர் சீன ஆயுதங்கள் நக்சல்களின் தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்கள் வெளிவந்தபோதும் அடக்கியே வாசிப்பது அவர்களின் வீரத்தை(!) காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தேசியக் கொடிகள் பட்டொளி வீசி பறக்கும் ஜம்மு காஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாக ஜம்பம் அடித்து உச்சக்கட்ட காமெடி செய்த பா.ஜ.க.வினர் நக்சல்கள் உலவும் காடுகளுக்கு செல்லத் துணியவில்லையே ஏன் கேள்வி நாட்டு மக்களிடையே எழுகிறது.

தேசமே வெலவெலத்துப் போகும் அளவுக்கு பாதுகாப்புப் படையினரை படுகொலை செய்த நக்சல்களின் உண்மையான நோக்கம், லட்சியம் தான் என்ன?

உடைந்து நொறுங்கிய கனவுகள்..

உடைந்து நொறுங்கிய கனவுகள்...

E-mail Print PDF
மங்களூரில் ஏற்பட்ட விமான விபத்து இந்தியாவின் இதயத்தையே நொறுங்கச் செய்துவிட்டது.

158 பேரின் உயிரிழப்பும் அதில் 73 பேர் முஸ்லிம்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
தங்களின் குடும்பத்தை வறுமையின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக இளம் வயதிலேயே திரைகடல் ஓடி திரவியம் தேடச் சென்ற அவர்கள் இன்று நெருப்பின் பிடியில் சிக்கி மாண்டுவிட்ட துயரம் நிகழ்ந்து விட்டது.

5000 ரூபாய் கட்டணம் குறைகிறதே! என்ற ஆறுதலோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்றவர்கள் பலியாகி விட்டார்கள்.

இன்னும் சில மணித்துளிகள் தான்; இதோ நம்முடைய அன்புக்குரியவர்களை நாம் பார்க்கப் போகிறோம்? என விமான நிலைய வளாகத்திலேயே காத்திருந்தவர்களுக்கு இடியென அந்தத்தகவல் இறங்கியிருக்கிறது.

விமான ஓட்டியான கேப்டன் குலுசிகா 10 ஆயிரம் மணிநேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியவர். 19முறை மங்களூர் விமானநிலையத்தில் பத்திரமாக தனது விமானத்தை தரை இறக்கியவர். கடந்த வாரமும் அவர் அற்புதமாகவே தரை இறக்கியிருக்கிறார்.

வானம் தெளிவாகவே இருந்தது. இருந்திருக்கிறது. இருப்பினும் எப்படி இந்த விபத்து நிகழ்ந்தது? விமான ஓடுபாதையின் தரம் என்ன?

இந்திய விமான ஓடுபாதைகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானதாக இருக்க முடியும்? என்பதை நினைக்கும்போது வேதனை மேலிடுகிறது.

1997லிருந்து உலகில் ஏற்பட்டுள்ள விமான விபத்துப் பேரழிவில் 20வது மோசமான விபத்தாகும். விமான விபத்துக்களில் நான்கில் ஒரு விபத்து விமானம் தரை இறங்கும்போது ஏற்படும் விபத்துக்கள் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மங்களூர் விமான விபத்து இந்திய விமான ஓடுதளங்களின் பாதுகாப்பற்ற நிலையை அம்பலப்படுத்தி இருப்பதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

40 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்த மங்களூர் விமான நிலைய ஓடுபாதையை சீர் செய்யக்கோரி பல பொது நல வழக்குகள் போடப்பட்டும் அது அலட்சியப் படுத்தப்பட்டன போயிங் 737&800 போன்ற விமானங்களின் வகைகள் கார்களில் மாருதியைப் போன்ற மாடலை சார்ந்தவையாக கருதப்படுகிறது.

தரையிறக்குவதற்கு இவை மிக எளிதானவையாம். இருப்பினும் இந்த கோர விபத்து நிகழ்ந்திருக்கிறது.

போயிங் 738-800 வரை விமானங்களின் இறக்கைகளின் தடிமன் 25 சதவீதம் மென்மையாக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தொழில் நுட்ப தகவல்கள் தெரிவிக்கிறது.

2000&ஆம் ஆண்டு இவ்வகையான விமாங்கள் மோசமான உதிரி பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக ஸ்கை நியூஸ் ஏஜென்சி அன்றே கூறியது.

நம்முடைய கேள்வி இதுதான். இன்னும் எத்தனைகாலம் மக்களின் உயிர்களோடு ஆளும் சக்திகள் விளையாடுவதாக உத்தேசம்?

பத்திரமான விமானப்பயணம் இந்தியாவில் சாத்தியமே இல்லையா?

இந்தியாவுக்கு கோடிக்கணக்கான அந்நிய செலாவணியை அள்ளித்தரும் உழைக்கும் மக்களின் உயிர்கள் அவ்வளவு மலிவானதா?

மத்திய அரசுநீதி விசாரணைக்கு உத்தரவிடட்டும் நாளைய பயணத்திற்கு உத்தரவாதம் வழங்கட்டும்.

அரசுகள் நிவாரணங்களை

காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்


2009 அக்டோபர் மாதம் ராபர்ட் பிராட் ராக் என்ற பிரிட்டன் அறி-ஞர் இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதி இரண்டிலும் சேர்த்து ஒரு கருத்துக்கணிப்பினை நடத்தினார். 37 பக்கங்களைக் கொண்ட அந்த கருத்துக் கணிப்பில் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர் மக்களில் 44 சதவீதம் பேர் காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என விரும்புகிறார்களாம். இந்தியாவில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த 43 சதவீதம் பேர் தனி காஷ்மீரக் கொள்கைக்கு பச்சைக் கொடி காட்டுபவர்கள் என அந்த கருத்துக் கணிப்பு குறிப்பிடுகிறது.

1948-49 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் மக்களின் மனப்பான்மை இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்ற குறிக் கோள்களுடன் இருந்ததாகவும் ஆனால் தற்போது 75 சதவீதத்திலிருந்து 95 சதவீத மக்கள் ‘ஆஜாதி’ சுதந்திர இறுதித்தீர்வு எனக் கருதுவதாக சர்வே கூறுகிறது.

எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு நிரந்தரமாக இருப்பினும் தவறில்லை. ஆனால் இருபுறமும் உள்ள காஷ்மீர் மக்கள் சந்தித்துக் கொள்வதற்கும், வணிகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் அனுமதிக்க வேண்டும் என 58 சதவீத மக்கள் கூறுகின்றனர்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடா? தேவையே இல்லை என்கிறார்கள் ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள். 8 சதவீதமக்கள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை எதிர்க்கிறார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என ஜம்மு காஷ்மீரில் 20 சதவீதம் பேர் நம்புகிறார்கள். பாகிஸ்தான் காஷ்மீரில் 40 சதவீதம் ஆயுத வழிப்போராட்டமே தீர்வு என நம்புகிறார்கள்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.06.2010)

குறிப்பு: இக்கருத்து கணிப்பை கவனத்தில் கொண்டு காஷ்மீரிகளின் உள்ளங்களை வென்றெடுக்கும் பணிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள் ஹபீபா பாலன்

காஷ்மீர் : தொடரும் மனிதஉரிமை மீறல்கள்

ஓடுங்கள். பள்ளிவாசலுக்குள் நுழையாதே. தடுக்கப்பட்ட மக்கள். மறுக்கப்பட்ட ஜூம்ஆ தொழுகை. மூடப்பட்ட பள்ளிவாசல்கள்.

இவையெல்லாம் கடந்த ஆண்டு சீனாவின் ஜின்ஜியாங் மாகா ணம் என்று அழைக்கப்பட்ட துருக்மினிஸ்தானில் நடை பெற்ற காட்சியல்ல. 9.7.2010 வெள்ளிக் கிழமையன்று ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மஸ்ஜித்தை நோக்கி தொழச் சென்ற மக்கள் விரட்டப்பட்டனர்.
ஸ்ரீநகர் ஜாமியா மஸ்ஜித் மற்றும் ஹஜ்ரத்பால் தர்கா வளாகத்தில் உள்ள பெரிய மஸ்ஜித்திலும் ஜும் ஆ தொழுகை நடத்த விடாமல் தடுக்கப்பட்டது. ஓடுங்கள். இங்கே நுழைய உங்களுக்கு அனுமதி இல் லை எனக் கூறி விரட்டியதாக ஹஜ்ரத்பால் பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் கூறுகிறார்.

ஜாமியா மஸ்ஜிதை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு தடை செய்யப்பட்டி ருந்ததாக நவ்ஹாட்டா பகுதி மக்கள் தெரிவித் தனர். பள்ளிவாசலுக்கு யாரும் வரக்கூடாது. தெருவில் யாரும் நடமாடக்கூடாது. பள்ளி வாசலில் யாரும் உள்ளே தங்கிவிடவும் கூடாது என்று சி.ஆர்.பி.எப். காவல்துறையினரும் ராணுவத்தினரும் தடை விதித்துள்ளனர்.

பள்ளிவாசல்களில் யாரும் கூடக் கூடாது. பள்ளிவாசல் இருக்கும் பகுதியை நோக்கிக் கூட யாரும் கூட்டமாக சேர்ந்து போகக் கூடாது&என்று கண்டிப்பு காட்டும் பாதுகாப்பு படையினர் அவ்வாறு பள்ளிவாசலை நோக்கி செல்ல முயலும் மக்கள் கூட்டத்தை கடுமை யாகத் தாக்குகின்றனர். மாநிலத்தில் உள் பகுதிகளில் உள்ள சிறிய பள்ளிவாசல்களில் மட்டும் தொழ அனுமதிக்கப்பட்டதாகவும் செய்தி கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு&காஷ்மீரில் உள்ள அமர் நாத் என்ற ஹிந்துக்களின் புனித தலத்தில் கடந்த வாரம் வரை ஒரு லட்சம் ஹிந்து பெரு மக்கள் பத்திரமாக சகல சவுகரியத்துடன் அமர்நாத் யாத்திரையை மேற் கொண்டுவருகின்றனர்.

அதே மாநிலத்தில் ஜும்ஆ தொழுகைக்கு தடைவிதிக் கப்பட் டுள்ளது. அதையும் மீறி வீதியில் இறங்கி தொழச்சென்றால் உயி ருக்கு உத்தரவாதமில்லாத நிலை.

காஷ்மீரிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை? அரசியல் திறனாய் வாளர்களைக் கேட்டால் அது 60 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பிரச்சினை. இந்தியா&பாகிஸ்தான் பிரிவினையின்போது வெடித்த பிரச் சினை என்கிறார்கள். நேரு வின் தவறால் விளைந்தது இது என்கிறார்கள்.

இன்னும் சில அரசியல் ஞானிக ளோ 20 ஆண்டுகளாக உள்ள சிறப்பு ஆயுதப்படை சட்டம் என்று கூறப்படும் கறுப்பு சட்டம் பயன் படுத்த தொடங்கியதிலிருந்து இந்த நிலை மிகவும் மோசமாகியது என்கிறார்கள்.

மற்றும் சில அரசியல் திறனாய் வாளர்கள், அல்ல அல்ல; கடந்த ஆண்டு சோபியன் என்ற இடத்தில் தங்கள் குடும்பத் தினருக்கு சொந்தமான ஆப்பிள் தோட்டத்தை பார்க்கச் சென்ற இளம்பெண்கள் கற்பழித்து படு கொலை செய்யப்பட்டு ஓடையில் வீசப்பட்டனர். இந்தக் கொடும் செயலை செய்தவர்கள் பாது காப்புப் படையினர் தான் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.- ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக் கப்படவில்லை. இது காஷ்மீர் மக்களின் ஆத்திரத்தையும் வேத னையையும் அதிகரித்ததாக சொல் லப்படுகிறது.

சோபியன் துயரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாகியும் நீதி கிடைக்காத நிலை நீடித்ததால் அம் மக்களின் கோபம் அதிகரித்தது.

ஆனால் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அந்தப் பனிமலையை பற்றவைக்கும் முயற்சியாக அடுத்தடுத்து சம்ப வங்கள் நடைபெற்றன.

ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப் பயணம் சென்றார். ஆனால் காஷ்மீர் மக் கள் அவரது பயணத்தை முழு மகிழ்ச்சியுடன் வரவேற்கவில்லை. மாறாக வெறிச்சோடிய வீதிகளை யும் மூடப்பட்ட கதவுகளையும் அவர்எதிர் நோக்க வேண்டி வந்தது.

சில நாட்களுக்கு முன்பு தான் காஷ்மீர் மக்கள் மிகுந்த மகிழ்ச் சியுடனும் கொண்டாட்டத் தில் திளைத்திருந்தனர். ஐ.ஏ.எஸ் என்ற ஆட்சி பணி தேர்வில் இந்தியா விலேயே முதலிடம் பெற்றார் ஷா பைசல் என்ற டாக்டர். இந்த மகிழ்ச்சிக்குரிய நிகழ்வில் நெகிழ் ந்திருந்த மக்களை வெகுண்டு எழச் செய்தது மச்சில் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் நிகழ்ந்த போலி என் கவுண்டர் சம்பவங்கள்.

வட காஷ்மீர் பகுதியில் அந்த சம்பவத்தில் மூன்று இளைஞர் கள் என்கவுண்டர் செய்யப்பட்ட னர். இவர்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு நுழையமுய ன்றவர்கள் என பாதுகாப்புப் படை யினர் குறிப்பிட்டனர். ஆனால் அவர்கள் அப்பாவி இளைஞர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

இது ஷேக் அப்துல்லாஹ் மற்றும் நேருவின் காலமும் அல்ல. இந்திரா ராஜீவ் காலத்து பத்திரிகைகளின் வாய்ப்பூட்டு காலமும் அல்ல.

கிளர்ந்து எழுந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் உள்ளக் குமுறலை உலக ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை படம்பிடித்தன. டைம்ஸ் ஆஃப் இந்தியா முதல் ஆம்னெஸ்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச அமைப்புவரை இந்தப்பிரச்சினையை விட்டு விடு வதாக இல்லை.

காஷ்மீரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தேசிய அளவில் மட்டும் அல்ல சர்வதேச அளவில் நீதி விசாரணை செய் யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

போலி என்கவுண்டரில் உண்மையாக கொல்லப்பட்ட அப்பாவி களின் எண்ணிக்கை வெளியே தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

அண்மைக்காலங்களில் போராட்டத்தில் ஈடுபடும் ஆர்ப் பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் இரக்கமற்ற முறை யில் சுட்டுக் கொல்லப்படும் அவலம். 67-க்கும் மேற்பட்டோர் பாது காப்பு படையினரால் கொல்லப் பட்டிருக்கின்றனர். கடந்த ஜூன் 27&ம் தேதியிலிருந்து ஜூலை 10&ம் தேதி வரை 30&க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகொலை செய் யப்பட்டுள்ளனர்.

இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களும் அடங்குவர்.

இந்த அநீதியை தட்டிக்கேட்க யாருமே இல்லையா? என்ற அவலக் குரல் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் எதிரொலிக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தாமதம் வேண்டாம் அபுசாலிஹ்

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தாமதம் வேண்டாம்

E-mail Print PDF

இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இவ்வாண்டு நடைபெற்று வருகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை காலகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது.

1931&ல் சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக நடத்தப்பட்டது. அதன் பிறகு அது கைவிடப்பட்டது. நாடு விடுதலையடைந்த பிறகு 60 ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதி தளத்தில் அவசியமான இந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இந்தியாவில் ஒவ்வொரு சமூக அமைப்பின் பின்புலம் அவர்களது வளர்ச்சி, பின்னடைவு, அவர்களது வளர்ச்சிக்கான அத்தியாவசிய இலக்கு போன்றவை குறித்து ஆய்வு செய்ய முடியும்.

ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கை குறித்து சிறிதும், அக்கறையின்றி அனைத்துக்கட்சிகளுமே செயல்பட்டன. துல்லியமான சாதிக் கணக்கெடுப்புகள் அரசு ஆவணங்களில் இல்லாததால் நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட அழுத்தப்பட்ட மக்களின் அவலநிலை குறித்து நிரந்தரத்தீர்வு என்ன-? உடனடி தீர்வு கூட எட்ட முடியவில்லை.

தலித் மக்கள் குறித்து கணக்கெடுப்பு இதுவரை தொய்வில்லாமல் பதிவு செய்யப்பட்டு வருவது மட்டுமே ஒரு ஆறுதல்.

சாதி அடிப்படையில் கணக்கெடுப்பா? இது அடுக்குமா? முறையா? சரியாகுமா? என வழக்கம்போல பிற்போக்குத் தனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆதிக்க சக்திகள் கண்டனம் தெரிவித்தன.

ஒரு புறம் கண்டனம் தெரிவித்துக் கொண்டே மறுபுறத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்றங்களில் தங்களது சித்து விளையாட்டினை தொடருகிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சாதிகளின் துல்லியப் பட்டியல் இல்லாதபோது எந்த அடிப்படையில் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீட்டினை வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் வழங்க திட்ட மிடுகிறீர்கள்? என நயவஞ்சகத்துடன் வாதப்போரை தொடுக்கிறார்கள்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகள் புறம் தள்ளப்பட்டது போல் இனியும் அனுமதிக்கக்கூடாது என சமூகநீதிகோரும் இயக்கங்கள் வெகுண்டு எழுந்தன.

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை என முழக்கங்கள் எழுந்ததைக் கண்ட மத்திய அரசு அது ஆலோசனைகளை மேற் கொள்ள மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

அந்தக்குழு அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கப் போவதாக அறிவித்துள்ளது. அறிவித்ததோடு நில்லாமல் அடுத்து அந்த குழு செய்த ஒரு செயல் அந்தக் குழுவின் வேகம்(!) குறித்த ஒரு தீர்மானமான கணிப்பை நோக்கி நாட்டிலுள்ள நடுநிலையாளர்களை இழுத்துச் சென்றுள்ளது.

அதாவது அனைத்துக் கட்சிகளின் கருத்தினை கேட்க கடிதங்கள் வரையப்போவதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார். தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது அனைவரின் சந்தேகத்தை அதிகரித் திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பினால் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் சமூக நிலை குறித்து துல்லிய தகவல்கள் பதிவு செய்யப்படுமானால் சமூகங்களுக்கு இடையே நலம் நாடு திட்ட ங்களை செயல்படுத்த முடியும் என்ற நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பினை தாமதப்படுத்த நினைப்பது நிச்சயம் நாட்டு மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாதது. இதனை தவிர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை

போபால் விழித்துக் கொள்வோம் சர்ஜுன்

போபால் விழித்துக் கொள்வோம்

E-mail Print PDF

போபால் விஷவாயு துயரம் நாட்டை உலுக்கியது. அது குறித்த தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து நாட்டு மக்களின் சோகத்தையும் ஆத்திரத்தையும் பன்மடங்கு அதிகமாக்கியது.

மும்பை தாஜ்ஹோட்டல் தாக்குதல் போன்ற மேல்தட்டு மக்கள் பாதிப்பு தொடர்பான வழக்குகள் ஓராண்டுக்குள் முடிந்து குற்றவாளியின் மீது தூக்குத்தண்டனையும் அறிவிக் கப்பட்டுவிட்டது.

ஆனால் போபால் விஷவாயு படுகொலைகளுக்கு காரணமாக அன்னிய நாட்டை சேர்ந்த ஆண்டர்சனை நோக்கி அதிகார வர்க்கத்தின், நீதித்துறையின் சுண்டு விரல்கள் கூட அசையவில்லை.

அது மட்டுமின்றி எம் மக்களை ஆயிரமாயிரமாய் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமான பாதகனை நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட்டுக் கொண்டு காப்பாற்றி, பாராட்டி சீராட்டி சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

பாபரி பள்ளிவாசலை தகர்த்து, தேச வளர்ச்சியின் சக்கரங்களை பின்னோக்கி தடம் புரள வைத்த நயவஞ்சக ந(ரி)ரசிம்மராவ் தான் இந்த நல்ல காரியத்திலும் (?) முக்கியப் பங்காற்றியுள்ளார்.

போபால் விஷவாயு தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் செய்திஏடு "உலகத்திலேயே இவ்வளவு ஆமை வேக வழக்கினை பார்க்கவேயில்லை" என வேதனையுடன் குறிப்பிட்டது.

தீர்ப்பு வெளிவருவதற்கே இத்தனை ஆண்டுகாலம் ஆனது. இதற்கு மேல்&முறையீடு சென்று பின்னர் தீர்ப்பு வரும் போது நாங்கள் உயிரோடு இருப்போமா? என விரக்தியுடன் வினா விடுத்தவர் யார் தெரியுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டக்களம் கண்ட சமூகநல ஆர்வலரும் வழக்கறிஞருமான அப்துல் ஜப்பார்.

நீதித்துறையின் முகத்தில் அறைவதைப் போன்ற வினாக்கள் எழுப்பப்பட்டபின். பிரதமர் தலையிட்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 9 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்தார். அது 10 நாளில் தனது அறிக்கையினை தாக்கல் செய்யுமாறும் பணித்திருந்தார்.

ஒரு வழியாக தனது அறிக்கையை சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. அதில் போபால் விஷவாயு வழக்கை சீராய்வு செய்ய முடிவு செய்து சிபிஐ&க்கு உத்தரவிட்டுள்ளது. வாரன் ஆண்டர்சனை நாடுகடத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வருவது மட்டுமின்றி உயிர்களைப் பறிகொடுத்த மக்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாயும், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் ரூபாயும், ஓரளவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று லட்ச ரூபாயும் வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் 1,500 கோடி ரூபாய் நிவாரண நிதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இழப்பீடுகள் எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இனி இது போன்ற உலகப் பேரழிவுகள் நடைபெறா வண்ணம் தடுப்பதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? குமுறும் எரிமலைகளைப் போல் இன்னும் ஆபத்துக்கள் புறப்படுகின்றன.

கூடன்குளம், கல்பாக்கம் என பல்வேறு நடமாடும் ஆபத்துக்களை எதிர்கொள்ள என்ன செயல்திட்டங்களை; முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை & அரசுகள் செய்யப் போகின்றன?

போபால் போன்ற துயரங்கள் நிகழும் முன்பே விழித்துக் கொள்வோம்.

மூடநம்பிக்கையில் முடிந்தது கால்பந்துப் போட்டி! அபுசாலிஹ்

மூடநம்பிக்கையில் முடிந்தது கால்பந்துப் போட்டி!

E-mail Print PDF

உலகக் கால்பந்து போட்டி ஒரு வழியாக முடிவடைந்தது, தென் ஆப்பிரிக்கா என்ற கறுப்பர் பூமியில் நடந்ததால் அது பெருமிதத்துக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இருந்தும் ஆப்பி ரிக்க நாடு ஒன்று வாகை சூடியிருக்குமானால் நிச்சயம் அது பெருமைக்குரியதாக மாறியிருக்கும்.


மேற்கத்திய நாட்டில் ஒன்றான ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது. கால்பந்து உலக ஜாம்பவான்களான பிரேசில், அர்ஜெண்டினா போன்ற லத்தீன் அமெரிக்காவின் மிரட்டும் அணிகள் இந்த போட்டிகளில் மொக்கை பீஸாக போனது ஒரு வகையில் சோகமே. இறுதியில் ஸ்பெயினும் நெதர்லாந்தும் மிஞ்சின.

இந்த விளையாட்டுப் போட்டியில் மூட நம்பிக்கை கொடி கட்டிப் பறந்தது. எந்த அணி ஜெயிக்கும்? எந்த அணி அரைஇறுதிவரை வரும்? என்பது போன்ற ஆரூட ங்களை ஆக்டோபஸ், கிளி, முதலை, குருவி, உள்ளிட்ட பல் வேறு உயிரினங்களும் ஆருடம் சொல்லி ரணகளப்படுத்தின.

பால் என்ற ஆக்டோபஸ் இதுவரை ஜெர்மனி ஜெயிக்கும் என்று ஆருடம் கூறியது. ஆனால் அரை இறுதியில் ஜெர்மனி ஜெயிக்காது ஸ்பெயினே வெல் லும் என அந்த ஆக்டோபஸ் ஆருடம் தெரிவித்ததாம். குருவி உட்கார பணம் பழம் விழுந்த கதையாக ஜெர்மனி அரை இறுதியில் தேறவில்லை. உடனே கடுப்பான ஜெர்மனி ரசிகர்கள் ஆக்டோபஸை கரித்துக் கொட்ட ஆரம்பித்தார்கள். ஒருவர் ஆக்டோ பஸை வறுத்து தின்பேன் என்று மிரட்டினார். மற்றொருவர் சூப் வைத்து குடிப்பேன் என்றார். இந்த மிரட்டலினால் இந்த ஆக் டோபஸுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. தேவைப்பட்டால் நாங்கள் பாதுகாப்பு வழங்கத் தயார் என ஸ்பெயின் பிரதமர் வேறு உணர்ச்சி வசப்பட்டு உறுதி அளித்தார். இந்தக் கூத்து ஒரு வழியாக முடிந்தது.

இறுதிப் போட்டி குறித்தும் ஆரூடங்கள் கணிக்கப்பட்டன. இப்போது இறுதிஆட்டம் குறித்து நாய், பன்றி, கன்று குட்டியைத் தவிர அனைத்து மிருகங்களையும் வைத்து ஆரூடங்கள் புறப்பட்டன.

ஸ்பெயின் வெற்றி பெறும் என ஆக்டோபஸ் பால் கூறியது என் றால் நெதர்லாந்து தான் வெல்லும் என சிங்கப்பூரைச் சேர்ந்த கிளி சீட்டு எடுத்துக் கொடுத்தது.

ஸ்பெயினுக்கு வெள்ளைக்கார ஆக்டோபஸ் ஆதரவு கொடுத்தது என்றால் நெதர்லாந்துக்கு கல் தோன்றி முன் தோன்றா காலத்து மூத்தகுடியைச் சேர்ந்த கிளியின் ஆதரவு கிடைத்தது. ஆம் கிளியின் பெயர் மணி. அது தமிழ்க்கிளி.

இந்த ஆரூடங்களை நம்பியவர்கள் நம்பாமல் சிரித்தவர்கள் என ஒரு வழியாக காமெடிக் காட்சிகள் அரங்கேறி முடித்தன. ஸ்பெயின் வாகை சூடிவிட்டது. கால்பந்து ரசிகர்களும் அடுத்த கால்பந்துக்காக காத்திருக்கலாம்.

ஆனால் கடந்த கால்பந்தாட்ட இறுதியில் நடந்த நிகழ்வை யாராலும் மறந்திருக்க முடியாது. பிரான்ஸ் அணி தலைவரான ஜைனுதீன் ஜிடேனை அவமானப்படுத்தும் நோக்கில் அவரது சகோதரியை இழிவாகப்பேசியும், தீவிரவாதி என் றும் இத்தாலிய வீரர் மாட்ரெஸி பேச, தலையால் முட்டினார் ஜிடேன். இந்த செயலுக்காக ஜிடேன் போட்டியிலிருந்து நீக்கப்ப ட்டார். ஒருவேளை ஜிடேன் நீக்க ப்படாமல் இருந்திருந்தால் பிரா ன்ஸ் அணி வென்றிருக்கும். அல் ஜீரியா வம்சா வளியைச் சேர் ந்த முஸ்லிம் ஒருவருக்கு அந்த பெருமை சென்று விடக்கூடாது என் பதற்காக இத்தாலி மாட்ரெஸி, ஜிடேனை ஆவேசப்படுத்தியதாக சொல்லப்பட்டது. எப்போதுமே ஆவேசப்படுபவர்கள் இவர்களாக வும், ஆவேசப்படுத்தி காரியம் சாதிப் பவர்கள் மேற்குலகைச் சார்ந்த அவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தக் காட்சி அமைந்தது.

எத்தனை உலகக்கோப்பை கால் பந்து போட்டிகள் நடந்து முடிந் தாலும் ஜைனுதீன் ஜிடேனை மறக்க முடியுமா?

Web Counter Code