இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, July 20, 2010

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு இல்லாத பாதுகாப்புத்துறை! அபூசாலிஹ்

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பாதுகாப்பு இல்லாத பாதுகாப்புத்துறை!

E-mail Print PDF

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 80 சி.ஆர்.பி.எஃப். படையினர் கொல் லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியும் மற்றும் சுற்றிவளைத்து சரமாரியாக சுட்டும் கொன்று குவித்துள்ளனர்.
நக்சலைட்டுகளின் 43 ஆண்டு கால வரலாற்றில் இது படுபயங்கர தாக்குதலாக கருதப்படுகிறது.

8 மாநிலங்கள், 200 மாவட்டங்கள் என நக்சலைட்டுகளின் ஆதிக்கம் வனப்பகுதிகளில் கொடி கட்டிப் பறக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளின் செயல் பாட்டினை ஒடுக்க கிரீன் ஹன்ட் என்ற பெயரில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதல் நடவடிக்கையினைக் கண்டித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு நக்சல்கள் ஏழு மாநிலங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி னர். அதற்கு ஓரளவு ஆதரவும் கிடைத்தது கவலைக்குரிய ஒன்றாக கருதப்பட்டது.

நக்சல் தாக்குதலின்போது மலைபதுங்கு இடங்களில் இருந்து, கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நக்ச லைட்டுகளின் தாக்குதலின் போது சி.ஆர்.பி. எஃப். படையினர் பலர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

150க்கும் மேற்பட்டோர் இன்ன மும் காணவில்லை. கொடூர மான தாக்குதலின் போது தப்பிஓடி விட்டார்களா? அல்லது மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப் பட்டார்களா? என்ற விபரம் இன்னமும் கிடைக்கவில்லை என பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் வேட்டையோடு, காணாமல் போன பாதுகாப்புப்படையினரையும் தேட வேண்டிய கூடுதல் சுமை இப்போது அதிகரித்துள்ளது.

மறைந்திருந்து தாக்கும் நக்சல்கள் கோழைகள், அவர்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் துடைத்தெறியப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாக சூளுரைத்த மூன்றா வது நாளில் இந்தக் கொடூர தாக்குதலை நக்சலைட்டுகள் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் விரைவில் ஓய்வு பெற இருந்தார். மற்றொருவர் பணியில் இருந்து கொண்டு ஆசை ஆசையாக தனக்கென சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார்.

தான் கட்டிமுடித்த வீட்டிற்கு செல்ல ஆசைப்பட்ட அந்த பாதுகாப்புப்படை வீரரின் உயிரற்ற சடலம் தான் அவர் வீட்டினுள் நுழைய முடிந்தது.

நக்சல்களை ஒடுக்கியே தீரு வோம் என சூளுரைத்த மத்திய அரசு நக்சலைட்டுகளின் மீது வான்வெளி தாக்குதல் நடத்த ஆயுத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வான் வெளி தாக்குதல் சாத்தியமற்ற ஒன்று என இந்திய வான் படைத்தளபதி கூறியிருக்கிறார்.

நிலைமை இவ்வாறிருக்க கடந்த ஆறு ஆண்டுகளில் நிகழ்ந்த நக்சல் தாக்குதல்களில் சென்ற ஆண்டு (2009) 107 சதவீதம் தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. 317 பாதுகாப்பு படையினர் 2009&ம் ஆண்டு நக்சல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு (2010) தொடங்கி நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில் 131 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2005&ம் ஆண்டு தொடங்கி இன்று வரை 1225 பேர் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தொடர் தாக்குதல்களின் வழியாக நக்சலைட்டுகள் முக்கிய செய்தியை இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

நக்சலைட்டுகள் துப்பாக்கிகள் மூலமே பேச விரும்புகிறார்கள்; அவர்களோடு பேச்சுவார்த்தை கள் பலன் அளிக்குமா? என அதிகார வட்டாரத்தில் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்த காரணங்களுக்கு வலுசேர்ப்பதைப் போல நக்சலைட்டுகள் தங்கள் ஆதரவுத் தளம் மிகுந்த மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர் களின் உயிருக்கு குறிவைத் திருப்பதாகவும் தங்களுக்கு செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் அடுத்தடுத்த அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்ட்டுகள் என அழைக்கப்படும் நக்சலைட்டுகள் வழக்கமாக காவல்நிலையங்கள், ராணுவக்கிடங்குகள் உள்ளிட்ட வற்றிலுள்ள ஆயுதங்களை கொள்ளையடித்தே தாக்குதலை நடத்தியதாக இதுவரை கருதப்பட்டு வந்தது.

ஆனால் முதன்முறையாக சீனா, ரஷ்யா உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள அதிபயங்கர ஆயுதங்கள் அவர்களிடம் இருப்பது தெரியவந்துள்ளதாக வும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

போர்ப்படை, வானூர்திப் படை, கடற்படை போன்றவற்றை & நாட்டின் எல்லைகளுக்கு வெளியே இருந்து கொண்டு எதிரிகளின் இலக்குகளை தாக்குவதில் சிறந்த முறையில் பயிற்சி பெற்றவை. அது மட்டும் போதுமா?

இந்த சாகசப்படைகளை உள்நாட்டில் நக்சலைட்டுகளை ஒடுக்குவது போன்ற இலகுவான வேலைகளுக்கு பயன்படுத்த முடியாது. அதற்காக அவர்கள் பயிற்றுவிக்கப்டவில்லை என இந்திய வான்படை தளபதி பி.வி. நாயக் தெரிவித்திருக்கிறார்.

நமது கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியுடன் செயல்படவேண்டிய நேரமிது. இந்திய ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நக்சல் இயக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டியது அவசியம்.

தேர்தெடுக்கப்பட்ட அரசுகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதே நக்சல்களின் நோக்கமாகும். அவர்கள் வெற்றி பெற நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எங்கோ தவறுகள் நடந்துள்ளது. அது விரைவில் கண்டறியப்படும் என்று விரிவான ஒரு செய்திகளை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டிருக்கிறார்.

பிரச்சினைகளை மட்டுமே தீர்க்க வேண்டும். பிரச்சினைக்குரியவர்களை தீர்க்க கூடாது என்பதில் முனைப்பாக இருக்கும் ப.சிதம்பரம் நடுநிலையாளர்களால் பாராட்டப்படுகிறார்.

இந்தியாவில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற சொற்கள் பிரயோகிக்கப்படும் போதெல்லாம். ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கத்துடனே அந்தப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுவரை பதவி வகித்த உள்துறை அமைச்சர்கள் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் எங்கு இருக்கிறது. என்பதை உணராமல் காற்றிலே சிலம்பம் ஆடியிருக்கிறார்கள் என்பதை சமீபத்திய நக்சல் தாக்குதலின் தீவிரம் புரிய வைத்திருக்கக்கும்.

சமீபகாலமாக இந்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் அதிக உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வருபவை நக்சல் தாக்குதல்களே.

2009&ம் ஆண்டு ஜம்முகாஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 133 பேர் கொல்லப்பட்டனர். அதே காலகட்டத்தில் நக்சல் தாக்குதலில் 908 பேர் (பலியானவர்களில் பாதுகாப்பு படையினரே அதிகம்) பலியாகி உள்ளனர்.

2010&ம் ஆண்டு தொடங்கி இதுவரை 30 பேர் ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். ஆனால் இதே காலகட்டத்தில் நக்சல்களின் தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் சிறிய வேட்டுச்சத்தம் கேட்டால் கூட வெகுண்டு எழும் பா.ஜ.க.வினர் நக்சல் தாக்குதல் விவகாரங்களில் வித்தியாசமான அமைதியை கடைப்பிடிக்கின்றனர்.

சாதாரண தாக்குதல்களுக்கு எல்லாம் அண்டை நாடான பாகிஸ்தானோடு போர் தொடுக்க வேண்டும் என முண்டா தட்டும் பா.ஜ.க.வினர் சீன ஆயுதங்கள் நக்சல்களின் தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்கள் வெளிவந்தபோதும் அடக்கியே வாசிப்பது அவர்களின் வீரத்தை(!) காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தேசியக் கொடிகள் பட்டொளி வீசி பறக்கும் ஜம்மு காஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாக ஜம்பம் அடித்து உச்சக்கட்ட காமெடி செய்த பா.ஜ.க.வினர் நக்சல்கள் உலவும் காடுகளுக்கு செல்லத் துணியவில்லையே ஏன் கேள்வி நாட்டு மக்களிடையே எழுகிறது.

தேசமே வெலவெலத்துப் போகும் அளவுக்கு பாதுகாப்புப் படையினரை படுகொலை செய்த நக்சல்களின் உண்மையான நோக்கம், லட்சியம் தான் என்ன?

No comments:

Web Counter Code