இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, November 2, 2007

குஜராத் முஸ்லிம்கள் அழிப்பு!

குஜராத் முஸ்லிம்கள் அழிப்பு! அம்பலப்படுத்தியது தெஹல்கா புலனாய்வுக்குழு
அபூசாலிஹ்



























உலகம் தோன்றிய நாள் முதல் மனித உருவில் அலையும் மிருகங்கள் வந்திருக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களது அன்றாட நடவடிக்கைகள் இருந்தாலும் அவர்களது எண்ணத்தாலும் செயலாலும் ரத்தம் குடிக்கும் கொடிய மிருகங்களை விட மோசமாகவே நடந்து கொண்டார்கள்.
நாகரீகம் வளர வளர மனித உருவில் நடமாடும் மிருகங்களின் உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு, இத்தகையப் பிறவிகளால் பொது மக்களுக்கு ஆபத்து குறைய தொடங்கியது.
தனிமனிதர்களாக இருந்து மனித இரத்தத்தை சுவைத்தால் அடையாளம் காணப்படுவோம் சட்டத்தின் பிடியில் சுலபமாக சிக்கிக் கொள்வோம். தப்புவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்பதற்காக சக மனித உயிர்களை துன்புறுத்தி இன்பம் காண்பதற்காகவே 'இனவெறிக் கொள்கை கள்' உருவாக்கப்பட்டன.
ஜெர்மனி ஹிட்லரின் நாசிசமும், இத்தாலியின் பாசிசமும், இந்தியாவில் ஜனித்த ஹிந்துத்துவமும் இத்தகைய ரகத்தை சேர்ந்தவைகள் தான்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இனப்படுகொலைகளை நிகழ்த்திய நாசிச பாசிச சக்திகள் கடுமையாக தண்டிக்கப்பட்டன. மனித உரிமைக் கொள்கைகள் எழுச்சி பெற்றன. தனி மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது.
சுதந்திரம் பெற்ற இந்தியா தனது குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப் பையும் நிம்மதியையும் உறுதிப்படுத்த வேண்டிய கடுமையான சவால் நிறைந்த பணியை நிறைவேற்றும் வேளையில், எப்படி மனித குல விரோத 'சங்பரிவார்' சக்திகளின் மீதான கண்காணிப்பை கோட்டை விட்டார்கள் என்று உலகம் முழுவதும் உள்ள நடுநிலையாளர்களின் மனதில் தற்போது கேள்விகள் எழுகின்றன.
அறுபது ஆண்டுகளாக நாட்டில்
நிகழ்ந்த ரத்தக்கறை படிந்த (காந்தி கொலை தொடங்கி) சம்பவங்களில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையிலும் அவர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பதில் ஏன் அலட்சியம்?
கோத்ரா என்ற இடத்தில் நடை பெற்ற ரயில் பெட்டி விபத்து நடந்த சில மணி நேரங்களில் எவ்வாறு பாசிசவாதி கள் ஒருங்கிணைகிறார்கள். கச்சிதமாக திட்டமிடப்படுகிறது. முஸ்லிம்களின் உயிர்கள், முஸ்லிம் பெண்களின் மானம், அவர்களது பொருளாதாரம் எப்படி திட்டமிட்டு சூறையாடப்படுகிறது. அப்பாவிகளின் உயிர்களைக் குடிக்க வெறித்தனமாய் அலைந்த அந்த வெறி நாய்களை உருவாக்கிய அமைப்புகள், பிணங்கள் விழுந்து கொண்டிருக்கும் போதும் ராணுவத்தை அனுப்ப மறுத்த ஒரு மத்திய அரசு, குதறப்பட்ட மக்களின் கதறல்களையெல்லாம் ஆணவக்காரர் களின் வெறிக்கூச்சலால் வெளியே கேட்காமலேயே போய்விட்டது. சொந்த நாட்டிலேயே அகதிகளாய் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள்.... அது ஆயிற்று ஐந்து ஆண்டுகாலம்.
21லிம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய பயங்கரவாதிகள் பாதுகாப்புடன் உலா வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களைப் பார்த்து நாக்கை வெட்டு, தலையை வெட்டு என்று நரித்தனமாக ஊளையிடுகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு சதுர அடி நிலத்தையும் குஜராத்தாக மாற்றுவோம் எனக் கொக்கரிக்கிறார்கள்.
தாங்கள் செய்த படுகொலைகளை தாங்களே ஆண்டு கொண்டிருப்பதால் மறைத்தார்கள்.
இந்திய நாட்டை தலைகுனியச் செய்த இந்த நூற்றாண்டின் இனப்படு கொலையாளர்கள் எவ்வாறு அதைச் செய்தார்கள். எவ்வாறு சட்டத்தை மீறினார்கள். யாருடைய துணிச்சலில் இதைச் செய்தார்கள் என்பது குறித்து இந்தியத் திருநாட்டின் பெரும்பாலான ஊடகங்களுக்கு அக்கறையில்லை.
உலகை உலுக்கிய அந்த உண்மை களை வெளிக்கொண்டு வர, கடும் ஆயுதங்களுடன் நடமாடிய அந்த மனித மிருகங்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க ஆறு மாதங் கள் கடினமாக உழைத்து 'சங்பரிவார்' குறித்த மேற்படிப்பு ஆராய்சிக்காக வந்திருக்கிறோம் எனக்கூறி சங்பரிவார் கிரிமினல்களை நோக்கி தெஹல்கா புலனாய்வு பத்திரிகையாளர்கள் புறப்பட்ட னர்.
படுபயங்கர ஆயுதங்களையும் அதை விட பயங்கர நச்சு சிந்தனை களையும் கொண்ட சங் பரிவார் பயங்கரவாதிகளை சட்டைப் பட்டன் அளவே உடைய இரண்டு கேமராக் களுடன் சந்தித்தனர்.

அனைவருக்கும் தெரியும் 2002ல் நடந்த சதிகளின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? யார்? என்ற விவரம். ஆனால் இப்போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? செய்ததற்கு வருந்து கிறார்களா? அல்லது தாங்கள் செய்த குற்றச் செயல்களுக்கு யார் மீதாவது பழி போடுகிறார்களா? என்பதையெல்லாம் அறிவதற்காக அந்த நெஞ்சுரம் கொண்ட புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்.
அந்தக் கொடியவர்கள் வாய் திறந்தார்கள். இதயம் உள்ளவர்கள் அனைவரும் வாய்மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
''இந்தப் புலனாய்வில் காவல்துறை நீதித்துறை என்ற தூண்களுக்கு நடுவில் சராசரி இந்தியன் நிர்வாணமாக நிற்பதைப் போன்ற ஒரு நிலை ஏற்பட்டது'' என தெஹல்கா பத்திரிகையின் செய்தி ஆசிரியர் சகோதரி ஹரிந்தர் பவேஜா தெரிவித்தார்.
இரண்டு அரசு வழக்கறிஞர்கள் தங்கள் தொழில் தர்மத்துக்கு விரோதமாக கொடும் குற்றவாளிகள் தப்புவதற்கு உதவியதையும் குற்றவாளிகளின் தரகர் களாவும் செயல்பட்டனர். சட்டத்துறையே பணத்துக்காகவும், இனவெறிக்காவும் அப்பாவிகளின் உடல்களை கூறுபோடும் கொடு வாட்களாக மாறின.
அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அப்பாவி மக்களுக்கு தீங்கிழைக்கப்பட்டது. குஜராத் அரசு அமைத்த நானாவதி ஷா கமிஷன் ஐந்து ஆண்டுகாலம் ஆகியும் உண்மை நிலையை கண்டறியும் முயற்சியில் இறங்கவேயில்லை.
காவல்துறை மறுசீரமைக்க வேண்டும்; இது அவசியமான ஒன்று என புலனாய்வுக்குழு தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இனப்படுகொலையை நேரில் கண்ட சாட்சிகள். நீதி என்பது குஜராத்துக்கு வெளியில்தான் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக் கிறார்கள். நீதித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இந்திய தேசத்தின் இழிவு. இந்த இழிவை நீக்க ஒவ்வொரு இந்தியனும் போராட வேண்டும்.
இனப்படுகொலைகள் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின், அரசாங்கத்தின், காவல்துறையின், நீதித்துறையின், மனித உரிமை அமைப்புகளின் கருத்துக்களை இதுநாள் வரை கேட்டறிந்துள்ளோம்.
இனி தெஹல்காவின் சிறப்பு செய்தியாளர் ஆசிஸ்கெதானின் வேதனைக்குரிய ஆறு மாத காலம் நீட்டித்த புலனாய்வின் மூலம் குற்றவாளி களின் வாக்குமூலங்களை நாம் கண்டறியப் போகிறோம்.
ஜெர்மனியைப் போன்று, இத்தாலியைப் போன்று குஜராத்திலும் எவ்வாறு திடீரென்று பெருங்கூட்டம் ரத்த வெறி பிடித்து அலையும் கூட்டமாக மாறுகிறது.
ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டு களுக்குப் பிறகும் காங்கிரஸ் அரசு இந்த பாதகர்களின் செயல்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

இதைப்போன்ற விடை தெரியாத கேள்விகள் நம்முன் விஸ்வரூப மெடுக்கின்றன.மனிதகுல விரோதிகள் ஒவ்வொரு வரின் வாக்கு மூலங்களையும் படிக்கும் போது உங்களுக்கு பல சொற்றொடர் களுக்கு உங்களுக்கு பொருள் புரியத் தொடங்கும்.
• ஹிந்துத்துவ பயங்கரவாதம் உலகின் மிக மோசமான பாசிசவாதம்.
• காட்டுமிராண்டித்தனம் என்பது இது தான்.
• இதயம் இரண்டாக நொறுங்கி இரத்தம் சொட்டுவது போன்ற உணர்வு என்றால் இதுதானா?
உங்கள் நினைவு அடுக்குகளில் ஏறிக்கொண்டு இனி எப்போதுமே கேள்விகளை எழுப்பி இம்சிக்கும் விவரங்களை படிக்கத் தொடங்குங்கள்

பெட்ரோல் டேங்கரால் பள்ளிவாசலை நொறுக்கினோம்...

பெட்ரோல் டேங்கரால் பள்ளிவாசலை நொறுக்கினோம்... பிரகாஷ் ரத்தோட் & சுரேஷ் ரிச்சர்ட்நரோடா பாட்டியாவில் சங்பரிவார் கலவரங்களை தாங்கள் நினைத்தபடி நடத்தி தங்களது(?) திறமையை நிரூபித் தனர். பிரகாஷ் ரத்தோட் மற்றும் சுரேஷ் ரிச்சர்ட் என்ற இரண்டு காவி தீவிரவாதி களும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஆகஸ்ட் 12, 2007 அன்று அளித்தனர்.
தெஹல்கா: பாட்டியா சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்களா?
ரத்தோட்: இல்லை. பிபின் வெளியே வந்து விட்டார். சசிகாந்த் என்ற டுனியா மட்டுமே உள்ளே இருக்கிறார்.
தெஹல்கா: பிபின் எங்கே இருக்கிறார்?
ரத்தோட்: எப்போதும் கிருஷ்ணா நகரில் இருப்பார். ஆனால் யாருக்கும் தெரியாது.தெஹல்கா: அவர் அந்த நேரமும் அங்குதான் இருந்தாரா?
ரத்தோட்: அவர் மட்டுமில்லை. எல்லா பையன்களும் அங்குதான் இருந்தார்கள். அவர் எல்லோருக்கும் சாமான் (ஆயுதங்கள்) விநியோகித்தார்.
தெஹல்கா: வாள்கள் போன்ற வையா?
ரத்தோட்: இல்லை. இல்லை. சிலருக்கு வாட்கள் மற்றும் திரிசூலங்கள் வழங்கப்பட்டன. சுரேஷ் ரிச்சர்டை தெரியுமா? அவரை சந்தியுங்கள். துப்பாக்கியைத் தவிர எல்லா ஆயுதங் களையும் அவர் வைத்திருந்தார்.
தெஹல்கா: இது போதுமா விநியோகிக்க?ரத்தோட்: குட்டா என்று ஒரு மனிதன் சிறையில் இருக்கிறார். அவர் பரோலில் வெளிவந்த போது ஓடி விட்டார். அவர் ஏராளமான பேரைக் கொன்றிருக்கிறார்.
தெஹல்கா: பிபின் அப்போது எங்கிருந்தார்?
ரத்தோட்: நாங்கள் முதலில் அவர்களை சிதறடித்தோம். பிபின் பஞ்சாபிடம் வந்தோம். ஏராளமான பேர் அவர்களோடு இருந்தார்கள். நாங்கள் நுழையும் போதே அவர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்றே கோஷம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) நாம் கற்பித்து கொடுக்க வேண்டிய பாடத்தை தொடங்கி விட்டோம். நெருப்பு எரியத் தொடங்கி விட்டது. முஸ்லிம்களை இழுத்து வரச் சொன்னோம்.
தெஹல்கா: முஸ்லிம்கள்?
ரத்தோட்: பின்னர் நாங்கள் அவர்களை அடித்தோம். அவர்கள் ஓடத் தொடங்கினார்கள். அவர்களில் ஒன்று அல்லது இரண்டு பேரை நெருப்பில் தூக்கிப் போட்டோம்.
தெஹல்கா: சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் அந்தக் கூட்டத்தில் உண்டா?
ரத்தோட்: அவர் மிக நன்றாக சண்டை போடுவார். குட்டா, நரேஷ் சரா, இந்த மூன்று பேரையும் பார்த்து
முஸ்லிம்கள் பயப்பட ஆரம்பித்தார்கள். ஏன் போலீஸ்காரர்களுக்கு கூட இவர்கள் மூவரைக் கண்டால் நடுக்கம் தான்.
தெஹல்கா: மோடி வந்தாரா?
ரிச்சர்ட்: கூட்டமாக அவர்களைக் கொன்று முடித்த அன்று மாலை 7.30 மணி இருக்கும் மோடி வந்தார். ரோஜா மாலைகளை எனது சகோதரிகள் மோடிக்கு அணிவித்தனர்.
தெஹல்கா: நரேந்திர மோடியா வந்தார்.
ரிச்சர்ட்: ஆமாம். நரேந்திர மோடி தனது கறுப்பு பூனைப் படைகளுடன் வந்திருந்தார். அவரது அம்பாசிடர் காரிலிருந்து இங்கு தான் இறங்கினார். என்னுடைய எல்லா சகோதரிகளும் அவருக்கு ரோஜா மாலைகள் அணி வித்தனர். பெரிய மனுஷன். ரொம்பப் பெரிய மனுஷன்.
தெஹல்கா: அவர் சாலையைக் தாண்டி வந்தாரா?
ரிச்சர்ட்: இங்குதான் அவர் வந்து போனார். நரோடாவில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க அவர் வந்திருக்கிறார்.
தெஹல்கா: அன்று தான் நரோடா சம்பவங்கள் நடந்தன இல்லையா?
ரிச்சர்ட்: அந்த மாலை நேரத்தில் தான்.
தெஹல்கா: அவர் வந்தது ஐந்து மணிக்கா? ஏழு மணிக்கா?
ரிச்சர்ட்: பிப்ரவரி 28 ஆம் தேதியன்று ஏழு மணியிலிருந்து ஏழரை மணிக்குள் மோடி வந்தார். நம்முடைய ஆதிவாசிகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். மோடி வந்த ஏழரை மணிக்கு மின்சாரம் இல்லை. எல்லாமே கலவரங் களால் சாம்பலாகிவிட்டன.
(மேலும் தொடர்கிறார் ரிச்சர்ட்)
ரிச்சர்ட்: நாங்கள் அனைத்தையும் கொளுத்தி முடித்து விட்டு திரும்பினோம். நாங்கள் களைப்படைந்து விட்டோம். பேட்டரிகள் எரிந்து கொண்டிருந்தன. கேஸ் சிலிண்டர்களும் எரிந்து கொண்டி ருந்தன. சில பன்றிகள் எங்களுடைய ட்ரக்குகளில் தூங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் பன்றிகளைக் கொன்றோம். நாங்கள் நான்கைந்து பேராகவே பல பன்றிகளைக் கொண்டு வந்தோம். பின்னர் அந்தப் பன்றிகளை பள்ளிவாசல் களில் தொங்கவிடப்பட்டன. பன்றி களுக்கு மேல் பள்ளிவாசல்களில் காவிக் கொடிகளை பறக்க விட்டோம். நாங்கள் பள்ளிவாசல்களை நொறுக்க முயற்சித் தோம். ஆனால் அவை எளிதில் உடைய வில்லை. டாங்கர் ஒன்று எங்கள் சகோதரர்களில் ஒருவர் தந்தார். பெட்ரோல் நிரப்பிய டேங்கரால் மோதச் செய்தோம். மிகவும் சிரமப்பட்டுதான் பள்ளிவாசலை நொறுக்கினோம்.
தெஹல்கா: கற்பழிப்புகள் நடந்த தாகச் சொல்கிறார்களே?
ரிச்சர்ட்: இங்க பாருங்க. நாங்க ஒன்றும் பொய் சொல்லவில்லை. எங்கள் அம்மன் சத்தியமா சொல்றேன் (பக்கத்தில் சாமி படம் இருக்கிறது) ஏராளமான முஸ்லிம் பெண்கள் கொல்லப்பட்டு கொளுத்தப்பட்டு வீசப்பட்டனர். எங்களது ஹிந்து சகோதரர்கள். வி.எச்.பி தோழர்கள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம் பெண்களை சுவைத்தோம். என் மனைவி அருகில் இருக்கிறாள். இருந்தாலும் சொல்கிறேன். பழங்களைப் போல இருந்த அவர்களை முழுக்கச் சாப்பிட்டோம். நன்றாக சுவைத்தோம். நான் ஒரு தடவை அந்தப் பழத்தினை சுவைத்தேன்.
தெஹல்கா: ஒரு தடவை தானா?
ரிச்சர்ட்: ஒரு தடவை தான். பின்னர் நான் கொல்ல புறப்பட்டு விட்டேன். (உடனே திரும்பிப் பார்த்து தனது உறவினர் பிரகாஷ் ரத்தோட் தான் பாலியல் வன்முறை செய்து கொலை செய்த பெண்ணைப் பற்றி பேசுகிறார்.) ஸ்கார்ப் டீலரின் பொண்ணு நஸீமா பழரசம் போலவே இருந்தாள். இருப்பதிலேயே டாப் ஆக இருந்த அவளை எடுத்துக் கொண்டேன்.
தெஹல்கா: நீங்கள் இருப்பதி லேயே டாப் ஆக இருப்பதை எடுத்துக் கொண்டீர்களா?
ரிச்சர்ட்: ஆமாம்.
தெஹல்கா: அவர் உயிரோடு இருக்கிறாளா?
ரிச்சர்ட்: இல்லை.மேலும் தொடருகிறான்.
ரிச்சர்ட்: 'நீங்கள் குழந்தைகளை வைத்திருந்தால் அவைகளை நான் நெருப்பில் எறிந்து விடுவேன். உங்கள் ஆன்மா கொளுத்தப்படும்' என்றேன். உயிர் பிழைத்தவர்கள் சிலர் தங்களது நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு குடிசைகளில் மறைந்து கொண்டனர். ஜெய் ஸ்ரீராம் என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டம் கோஷமிட்டது. ஆனால் அவர்கள் எந்த சமூகம் என்பதை அறிந்து கொண்டோம். பின்னர் நாங்கள் அவர்களை கொன்றோம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள்காரர் அவர்கள் எப்படி மாறினாலும் அவர்களைக் கொல்லு வார்கள். அவர்களை குறித்து வைத்துக் கொண்டு கொல்லுங்கள் என்றார்

நாங்கள் இங்கே ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்

நாங்கள் இங்கே ராக்கெட் லாஞ்சர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்கோத்ரா எம்.எல்.ஏ. ஹரிஷ்பட்
2002ல் குஜராத் கலவரங்களில் 2500 முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப் பட்டது சாதாரண ஆயுதங் களால் அல்ல. பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியிருக்கின்றனர் காவி பயங்கர வாதிகள்.
இது கோத்ராவின் எம்.எல்.ஏ ஹரிஷ்பட்டின் வாக்குமூலத்திலிருந்து தெரிய வருகிறது.
தனது பட்டாசு தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு குஜராத் மாநிலம் முழுவதும் அனுப்பி, முஸ்லிம் களை மேல் உலகத்துக்கு அனுப்பிய தாகக் கூறியிருக்கிறார்.
2007 ஜூன் ஒன்றாம் தேதி எடுக்கப்பட்ட பேட்டி.
ஹரிஷ்பட்: லத்தியெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு துப்பாக்கி மூலமே அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆயுதப் பயிற்சி தொடங்கினேன். பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் ஆயுதப் பயிற்சியில் சேர்ந்தனர். இந்தியாவில் முதன்முதலில் ஹிந்துத்துவ ஆயுதப் பயிற்சி முகாமைத் தொடங்கியவன் நான் தான். ஏழு பேர்களுடன் 1987ல் தொடங்கி னேன்.
தெஹல்கா: 1987லேயே?
ஹரிஷ்பட்: ஆமாம். 87ல் தான். அந்த (பாப்ரி மஸ்ஜித்) இடிப்புக்கு கூட நான் பயிற்சி கொடுத்து அனுப்பினேன். நாற்பது பேருக்கு பறிற்சி கொடுத்தது நான் தான். அருகிலுள்ள சர்கெஜ் பகுதியில் பஜ்ரங்தள்காரர்களுக்கு நாங்கள் ஆயுதப் பறிற்சி கொடுத்தோம். ராஜேஷ் பைலட் கூட நாடாளுமன்றத்தில் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பிற்காக சர்கஜியிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
தெஹல்கா : பாப்ரி மஸ்ஜித் குறித்தா சொல்கிறீர்கள்?
ஹரிஷ்பட்: ஆமாம். பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்காக அஹ்மதாபாத் அருகிலுள்ள சர்கேஜியிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டது.
தெஹல்கா: பைலட் இந்த வினா வினை எழுப்பினாரா?.
ஹரிஷ்பட்: சி.பி.ஜ விசாரணை கூட வந்தது, போனது.
தெஹல்கா: உங்களுக்கு எதிராகவா?
ஹரிஷ்பட்: தூண்டிவிட்டவர் களுக்கு எதிராக.
தெஹல்கா: அப்புறம்?
ஹரிஷ்பட்: அன்றிலிருந்து ஆயுதப் பயிற்சிக் கூடம் இருக்கத்தான் செய்கிறது. அதே பயிற்சியை நமது ராணுவத்துக்கு கொடுத்தோம். ஜுடோ, கராத்தே துப்பாக்கி சுடுதல் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேவையான தற்காப்பு பயிற்சிகளையும் கொடுத்தோம். முப்பது அடி நீள கயிறு வைத்துக் கொண்டு எவ்வாறு ஏறுவது. சுவரேறி குதிப்பது போன்ற பயிற்சிகளை 15 நாளில் கற்றுக் கொடுத்து விடுகிறோம்.தெஹல்கா: 2002 கோத்ராவுக்குப் பிறகு இங்குள்ள ஹிந்துக்கள் ஆயுதங் களுடன் அலைகின்றனர். எப்படி அவர்களுக்கு ஆயுதம் கிடைக்கிறது.
ஹரிஷ்பட்: எனக்கு சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையை துப்பாக்கி தொழிற்சாலையாக மாற்றினேன். எல்லா விதமான குண்டுகளும் தயாரிக்கிறோம். டீசல் குண்டுகள். வெடி குண்டுகள். நாங்கள் தயாரித்து நாடு முழுவதும் விநியோகிக்கிறோம். நாங்கள் இரண்டு ட்ரக்குகளில் வாள்களை பஞ்சாப்பிலிருந்து வரவழைத்தோம். தாரியா கிராமத்திலிருந்து குஜராத் முழுவதும் ஆயுதங்களை விநியோகித்தோம். அந்த நேரத்தில் எங்களுக்கு மேலும் மேலும் ஆயுதங்கள் தேவையாக இருந்தது.
தெஹல்கா: துப்பாக்கிகளை எங்கிருந்து பெற்றீர்கள்?
ஹரிஷ்பட்: நாங்கள் பல நாடுகளிலிருந்து துப்பாக்கிகளை உத்தரப் பிரதேசம், மத்திப் பிரதேசம் வழியாக கடத்தினோம். கடத்திய துப்பாக்கிகளை மாநிலமெங்கும் விநியோகித்தோம். இங்கிருந்துதான் விநியோகித்தோம். முதன் முதலில் உங்களிடம் தான் இப்போது கூறுகிறேன். யாருக்கும் தெரியாத ரகசியம்.
தெஹல்கா: ஹிந்துக்கள் ஆயுதம் ஏந்துபவர்களல்ல. சமையல் கூடத்தில் மட்டுமே கத்தியை பயன்படுத்துபவர்கள் என்றே நான் அறிந்திருக்கிறேன்.
ஹரிஷ்பட்: நாங்கள் விதவிதமான ஆயுதங்களை விநியோகித்தோம். இவ்வளவு ரகங்கள் ஆயுதங்களில் உள்ளதா என மக்கள் ஆச்சரித்துடன் பார்த்தனர். எங்கள் தொழிற்சாலையில் ராக்கெட் லாஞ்சர்கள் கூட தயாரித்தோம். தெரியுமா?
தெஹல்கா: ஹரிஷ்பட் நீங்கள் கான்பூரில் இருந்து ஆயுதம் வாங்கிய தாகச் சொன்ன நேரத்தில் அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததே?
ஹரிஷ்பட்: ஏன் ஊரடங்கு உத்தரவு இருந்தால் என்ன? எதுவாக இருந்தாலும் நாங்கள் கொண்டு வருவோம்.
தெஹல்கா: எதுவாக இருந்தாலும்... ஊரடங்கு உத்தரவு அமலில் இருந் தாலுமா?
ஹரிஷ்பட்: இருந்தால் என்ன? நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் பீகாரில் இருந்தும் வாங்குவோம்.
தெஹல்கா: ஆனால் எப்படி? ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது எப்படி?
ஹரிஷ்பட்: எல்லா ஆயுதமும் வரும்.
தெஹல்கா: பக்கத்து மாநிலங்களிலிருந்தும் எல்லைக்கு அப்பாலிருந்துமா?
ஹரிஷ்பட்: ஆமாம். எல்லாவற் றையும் என்னிடம் கேட்காதீர்கள்.
தெஹல்கா: ஆனால் அவர்கள் நீங்கள் சொன்னது போல் செய்தார்கள்.
ஹரிஷ்பட்: ஆமாம் நிச்சயமாக. இது குறித்து நீங்கள் வி.எச்.பி. பொருளாளர்
ரோஹித்தை கேட்டுப்பாருங்கள். எல்லா ஏற்பாடுகளையும் அவர்தான் செய்தார்.
தெஹல்கா: அவர்களுக்கு வாள்கள் மட்டும் தான். அவர் கொடுத்தனுப்பினாரா?
ஹரிஷ்பட்: இல்லை. எல்லாம் தான். ஏற்கெனவே நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். ராக்கெட் லாஞ்சர்களை நாங்கள் தயாரித்தோம் என்று. அதனை நாங்கள் இந்த சூழ்நிலையை வைத்து பரிசோதித்துப் பார்த்தோம்.
தெஹல்கா: நீங்கள் உண்மையி லேயே ராக்கெட் லாஞ்சரைப் பற்றித்தான் கூறுகிறீர்களா?
ஹரிஷ்பட்: ஆமாம். நாங்கள் அதில் வெடி மருந்துகளை நிரப்பினோம். பின்னர் மூடி விட்டு கொளுத்தினோம். இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் பொருளாளர் ரோஹித் உங்களிடம் பேசுவார். என்று கோத்ரா எம்.எல்.ஏ வெறியன் ஹரிஷ்பட் தனது பேட்டியை முடிக்கிறார்

அஹ்மதாபாத் படுகொலைகளின் நகரம்

அஹ்மதாபாத் படுகொலைகளின் நகரம்
நரோடா, குல்பர்க், கலுபர் மற்றும் தரியாபுர் கொலைக்கும்பல் சங்பரிவாரின் ஒவ்வொரு கண் அசைவுக்கும் ஏற்ப நடந்தது.
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்த நேரத்தில் அவர்கள் முஸ்லிம்களின் நொறுக்கப் பட்ட கொளுத்தப்பட்ட வீடுகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருந் தார்கள். குஜராத்தில் மிகப் பயங்கர மான படுகொலைகள் நரோடா, காவ்ன் மற்றும் நரோடா பகுதிகளில் தான் நடந்தது. உள்ளூர் பஜ்ரங்கதள் தலைவர் பாபு பஜ்ரங்கி. இவன் சதிகாரர்களில் ஒருவன். பிப்ரவரி 27 ஆம் தேதி சதிச் செயலை திட்டமிடு கிறான். வெடிகுண்டுகள் சேகரிக்கப் படுகின்றன. பாபு பஜ்ரங்கி வாட்டசாட்ட மான முரடர்களை தேர்வு செய்கிறான். வி.எச்.பி, பஜ்ரங்தள்ளைச் சேர்ந்தவர்கள் நான், நீ என்று ஆர்வத்துடன் திரண்டனர். அதன் பிறகு நடந்தது சரித்திரம் மறக்காதது.இஹ்சான் ஜாஃப்ரி என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவரை எவ்வாறு துண்டு துண்டாக வெட்டினர். நெருப்பில் எரித்தனர். இது குறித்து தெஹல்கா செய்தி யாளர்கள் உண்மையை அம்பலப் படுத்தினர்.
தெஹல்கா: எவ்வாறு ஜாஃப்ரியைக் கொன்றீர்கள்?
சாவல்: ஓ. ஜாஃப்ரி பற்றிக் கூறுகிறீர்களா?
ரொம்ப நல்லது. அவரை ஒரு கும்பல் பிடித்து வைத்துக் கொண்டிருந்தது. அவரை முதுகுப்புறமாக உதைத்து நான் தள்ளினேன். உடனே எல்லோரும் அவரை உதைத்தனர்.
தெஹல்கா: நீங்கள் ஜாஃப்ரியை உதைத்தீர்களா?
சாவல்: ஆமாம் அவரை உதைத்தேன்.
தெஹல்கா: அப்புறம் அவர் கீழே விழுந்து விட்டாரா?
சாவல்: கீழே விழவில்லை. அவர் தனது கையால் தள்ளினார். ஐந்து அல்லது ஆறு பேர் அவரைப் பிடித்துக் கொண்ட னர். ஒருவர் வாள் ஒன்றை எடுத்து ஜாஃப்ரியைக் குத்தினார். முதலில் அவரது கைகளை நான் வெட்டினேன். பின்னர் கால்களை வெட்டினேன். பின்னர் அவரது ஒவ்வொரு உறுப்பு களையும் கண்டதுண்டமாக வெட்டி னோம். பின்னர் உயிருடன் எரித்துக் கொன்றோம்.
தெஹல்கா: ஜாஃப்ரியின் உடலை வெட்டிக் கொண்டிருந்த போது காவல் துறை அதிகாரி எர்டா ஜாஃப்ரியைக் காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லையா?
சாவல்: அந்த நேரத்தில் யாரும் எதுவும் செய்யவில்லை. எர்டா தனது வாகனத்தில் மெகானி நகர் சென்று விட்டார். ஜாஃப்ரி கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டது அவருக்குத் தெரியாது. இவையெல்லாம் ஒரு மணியிலிருந்து ஒன்றரை மணிக்குள் நடந்தது.
தெஹல்கா: ஜாஃப்ரியின் குடும்பத் தினர் தப்பிக்க முயற்சிக்கவேயில்லையா?
சாவல்: இல்லை ஆனால் அவரது மனைவி மட்டும் காப்பாற்றப்பட்டார். அவர் ஹிந்து போல் வேடமிட்டு தப்பித்தார்.
தெஹல்கா: ஆனால் அவரது மகள்கள் காப்பாற்றப்பட்டார்கள் இல்லையா?
சாவல்: இல்லை. அங்கிருந்து யாரும் தப்பிக்கவேயில்லை. ஜாஃப்ரியின் மனைவியைத் தவிர. அவர் ஒரு ஹிந்து வேலைக்காரப் பெண்மணியைப் போல உடையணிந்து தப்பித்தார்.
தெஹல்கா: அவர் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்காததால் தப்பித்தார் இல்லையா?
சாவல்: இருக்கலாம். நான் அவரை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை.
தெஹல்கா: குல்பர்க் சொஸைட்டி எவ்வளவு பெரியது. ஏராளமான மக்கள் வாழ்ந்தார்கள் இல்லையா? அவர்கள் மீண்டும் அங்கு வாழச் சென்றார்களா?
சாவல்: எவரும் அங்கு செல்ல வில்லை. அது மூடப்பட்டு, சிறைபோல ஆகிவிட்டது. யாரும் அங்கே திரும்பச் செல்லவில்லை.
தெஹல்கா: அந்த நேரத்தில் சில பேர் தப்பித்திருக்கிறார்களே?
சாவல்: நாற்பது பேர் தப்பித்தார்கள். நாங்கள் நுழைவதற்கு முன்பு அவர்கள் ஓடிப்பிழைத்தவர்கள்.
தெஹல்கா: எப்படி குல்பர்க் சொஸைட்டிக்குள் நுழைந்தீர்கள்?
சாவல்: சிலர் கேஸ் சிலிண்டர் களைக் கொண்டு வந்தார்கள். சிலிண் டரை வெடிக்கச் செய்து மதில் சுவரை உடைத்தோம். பின்பு உள்ளே நுழைந் தோம்.
தெஹல்கா: மதில் சுவர் மிகவும் உயரமோ?
சாவல்: 15லிருந்து 20 அடி உயரம் இருக்கும்.
தெஹல்கா: அது ஒன்று அல்லது இரண்டு சிலிண்டர்களை வைத்து உடைத்து விட முடிந்ததா?
சாவல்: இரண்டு சிலிண்டர்களால்.
தெஹல்கா: வீடுகள் கொளுத்தப் பட்டதும் அவ்வாறு தானா?
சாவல்: ஆமாம்.
தெஹல்கா: இதைப்போன்று தான் பாட்டியாவில் நடந்ததா?
சாவல்: ஆமாம்

இந்த திட்டம் மோடியிடமிருந்து தான் வந்தது! லி திமன் பட்

இந்த திட்டம் மோடியிடமிருந்து தான் வந்தது! திமன் பட்தலைமை ஆடிட்டர் (எம்.எஸ். பல்கலைக்கழகம்) திமன் பட் தாக்குதலுக் கான சதித்திட்டம் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். (பேட்டி பதிவான நாள் மே 19, 2007)திமன் பட்: என் மேல் இரண்டு குற்றச்சாட்டுகள். நான் பல்கலைக் கழகத்தின் (ஙஏம) தலைமை ஆடிட்டர் நான் ஒரு வெறி பிடித்த ஹிந்து. சில சங்பரிவார்காரர்கள் என்னிடம் வந்து ஹிந்துத்துவாவை வளர்க்க வேண்டும் என்பார்கள். அவர்களிடம் நான் சொல்வேன். குச்சிகளை தூக்கி எறிந்து விட்டு ஏ.கே. 56 ரக துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் ஹிந்துத்துவாவை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். எதிரிகள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஹிந்துக்களுக்கு எதிரானவர் களில் முஸ்லிம்கள் வெளிப்படையான வர்கள். ஆனால் கிறிஸ்துவர்கள் நச்சுக்கிருமிகளைப் போன்றவர்கள். மூன்றாவதாக கம்யூனிஸ்டுகள். இவர் களையெல்லாம் எதிர்க்க வேண்டுமானால் லத்திகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. தோட்டாக்களால் மட்டுமே பதிலடி கொடுக்க முடியும். நீங்கள் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக் கூடத்துக்கு செல்லுங்கள். லத்தியை தூக்கி எறிந்து விட்டு ஏ.கே 56 ரக துப்பாக்கிகளைக் கொண்ட பயங்கரவாதப் படையை உருவாக்குங்கள் என்றேன்.
கோத்ராவுக்குப் பிறகு அது குறித்து ஆலோசிப்பதற்காக முக்கிய சங்பரிவார் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்தனர். ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள், பாஜக, ஏ.பி.வி.பி மற்றும் துர்கா வாகினி போன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் குழுமி இருந்தனர். நமக்கு நரேந்திர மோடியின் முழு ஆதரவு உண்டு. அப்போது அங்கு கூடிய சங்பரிவார் பிரமுகர்கள் கீழ்கண்டவாறு ஆலோசித்தனர். நமக்கு ஹிந்துக்கள் அனைவரின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் ஹிந்துக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராகத் தான் சதிகாரர்கள் எரித்தார்கள் என்று ஆவேசப்படவேண்டும். ஆனால் எரிந்தது சபர்மதி எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டி மட்டும் தானே! எல்லா ஹிந்துக்களுக்கும் கோபம் வர வேண்டுமென்றால் நாம் அடுத்த நாள் ஒரு முழு ரெயிலையும் எரிக்க வேண்டும் என்று மோடி கூறினார். அப்போது நான் அங்கே இருந்தேன். உடனடியாக கூட்டம் கூட்டப்பட்டது. ஒன்று அஹ்மதா பாத்திலும் மற்றொன்று பரோடாவிலும் நடந்தது. பெரிய தலைவர்களின் கட்டளைப்படி சங்பரிவாரின் அடுத்தக் கட்ட தலைவர்கள் அனைவரும் அங்கு சேர்ந்து கொண்டனர். 65லிருந்து 70 தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நான் கூட்டம் எங்கு நடந்தது என்பதை சொல்ல மாட்டேன். நாம் நம்முடைய செயலைத் தொடங்குவோம். காவல் துறையினர் (உணர்ச்சி வசப்பட்டு) கைது செய்தால் விடுவிக்க, வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டது. தேவையான பணம் திரட்ட ஆலோசிக்கப்பட்டது. கலாட்டாக் களில் தப்பித்த தவறி சங்பரிவார்காரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஒரு குழு அமைப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது

Web Counter Code