இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, July 26, 2007

today news

நாட்டின் முதல் சேவகி நான். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் எனது முயற்சிகள் அமையும் என வண்ணமிகு விழாவில் பதவியேற்ற புதிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்நாள் முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி முதலமைச்சர் கருணாநிதி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்து அப்துல் கலாம் டெல்லியிலிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நிதியமைச்சர் அன்பழகன், அமைச்சர் தாமோ.அன்பரசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.


புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்றுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தலைநகர் டெல்லியில் இருந்து வரும் சேதிகள் தெரிவிக்கின்றன. ராஜ்ய சபையின் துணைத் தலைவராக இருந்து வரும் ரஹ்மான்கான் ,கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட வந்த மரபின்படி எதிர்கட்சி கூட்டணிக்கு வழிவிட்டு தனது ராஜ்யசபைத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஹ்மான்கான் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த புதுமுக எம்.பி மத்திய அமைச்சராவார் என்றும் அவரது பெயர் கனிமொழி என்றும் டெல்லி மற்றும் சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். அதைப்பற்றி மேற்கொண்டு தெரிவிக்க விரும்பவில்லை. நல்லது நடக்க இருக்கும் நிலையில் அதுபற்றி இப்போது விவாதிக்க வேண்டாம் என முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.நதிகள் இணைப்பு தொடர்பாக முதல் அமைச்சர்கள் மாநாட்டை கூட்டுமாறு முதல் அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக் கொண்டதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஹமீத் அன்சாரி முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உடன் இருந்தார்.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.
நல்ல படிப்பு வருவதற்கு பூஜை செய்கிறேன் வா என்று கூறி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்துச் சென்று கற்பழிக்க முயற்சித்த சென்னை மேற்கு முகப்பேர் நடைபாதை கோவில் பூசாரி கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
காமவெறி பிடித்த பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

புதிய காவல்துறை உதவி ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தான் நன்றாக எழுத்துத் தேர்வு எழுதியுள்ளதாகவும் தன்னைவிட தகுதிக் குறைந்தவர்கள் மருத்துவ தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு அழைப்பு அனுப்பப்பட வில்லை என்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். இது குறித்து பதில் தருமாறு அரசுக்கு நீதிபதி கே. வெங்கட் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

புகைப்பட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்களை துல்லியமாக சரி பார்ப்பதால் இறுதிப்பட்டியல் வெளியிட மேலும் ஒரு மாதம் கால தாமதம் ஆகும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்திருக்கிறார்

Web Counter Code