இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, May 8, 2009

ABUSALIH NEWS ABOUT CHENNAI CENTRAL NEWS

மத்திய சென்னை காணாமல் போன எம்.பி

கூவத்தின் தெறிப்பிலிருந்து (அம்பலப்படுத்துகிறது அவுட்லுக்)


2004ல் முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தயாநிதிமாறனால் தனது தொகுதியில் முத்திரை பதிக்க முடியவில்லை. மத்திய சென்னை என்ற நகர்ப்புற தொகுதியில் ஏராளமான பிரச்சினைகள் உண்டு. ஆனால் தொகுதி மக்கள் தாத்தா கருணாநிதிக்கும் பேரன்கள் கலாநிதி தயாநிதி சகோதரர்களுக்கும் இடையிலான யுத்ததில் (2007 மே முதல் 2008 டிசம்பர் வரை) தொகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. சக்திவாய்ந்த குடும்பத்தின் செல்லமாக கருதப்பட்டு வந்தாலும் தலைநகரின் மத்தியில் இருக்கும் தொகுதிக்கு எந்த பயனும் விளையவில்லை.


தயாநிதிமாறன் பங்கு கொள்ளும் கூட்டங்களிலெல்லாம் ஒரு ரூபாய் அரிசி. இலவச கலர் டி.வி. இலவச கேஸ் அடுப்பு போன்ற மாநில அரசின் திட்டங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார். தொகுதிக்கு இவர் என்னதான் செய்தார் என்பதை இவர் சொல்வதே இல்லை என்று கூறுகிறார் மத்திய சென்னை வாக்காளரான ராமச் சந்திரன்.


மோசமான சாலைகள். ஒழுங்கீனமான போக்குவரத்து எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்கள் கூவம் கரையில் வாழும் மக்களின் நிலை சொல்லக் கூடிய தரமல்ல. ஆனால் இங்குதான் திமுகவுக்கு வாக்கு அறுவடை.


தேர்தலுக்குப் பிறகு தயாநிதி மாறன் மிகவும் பிஸியாகி விடுவார். இவரை நாம் பார்க்க வேண்டுமானால் டெல்லிக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ செல்ல வேண்டியதுதான் என்கிறார் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் நடராஜன். கருணாநிதி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களின் இவரது நாடாளுமன்ற தொகுதிக்குள் வருவதால் இந்த சாதக அம்சங்களோடு ஒண்டிப் பிழைத்தே எம்.பியாகி விடுகிறார்.


2004ல் தயாநிதிமாறன் நாடாளுமன்ற உறுப்பினரான உடன் அமிஞ்சிகரையில் கூவக்கரையில் மேம்பாலம் ஒன்றை கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். அண்ணாநகர். வில்லிவாக்கம். கோயம்பேடு மற்றும் கொளத்தூர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக போடப்பட்டதிட்டம் ஆனால் அது தொடங்கப்படவே இல்லை.


பெரம்பூர் பாலம் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நடைபெறவே இல்லை. காரணம் தயாநிதி கருணாநிதி குடும்பசண்டை. இந்த திட்டங்கள் செயல்படுத்தப் படாமல் இருக்க முட்டுக்கட்டை போட்டது மாநில அரசுதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆன செலவுகளெல்லாம் வீண்.


இவர்கள் குடும்பச் சண்டை தீர்ந்த பின் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது. டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டது. வேலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் இன்னும் வேலை தொடங்கவில்லை.


இதே தொகுதியில் மூன்று தடவை எம்.பியாக இருந்த இவரதுதந்தை முரசொலி மாறன் காலத்தில் ஹாடோஸ் சாலை மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் பயனின்றி கிடக்கிறது என அப்பகுதிவாசிகள் கூறுகிறார்கள்.

Outlook May 4, 2009
மத்திய சென்னையில் போட்டியிடாமல் வேறு தொகுதி மாறினால்....
பேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல் அம்பலப் படுத்தும்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...

-சர்ஜீன்





''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சி தமிழக அரசியலில் காலகாலமாக கோலோச்சி வரும் ஏதேச்சதிகார வர்க்கத்தினரை பீதியடைய வைத்து புலம்ப வைத்தது.

பரம்பரை பரம்பரையாக மக்களின் தேவைகளை புறக்கணித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்து வரும் சக்திகளின் பதவி ஆசையையும், பணத்திமிரையும், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பேரம் பேசிய ஓர் இழி செயலை மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி தோலுரித்துக் காட்டியுள்ளார்.

07.05.2009 ஆம் தேதி வெளியாகி உள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வேட்பாளர் ஹைதர்அலியின் நேர்காணல் வெளியாகியிருந்ததது. அதில் மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி பேட்டியளித்திருந்தார் அதில்,


ஹைதர் அலி எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இது குறித்து கூறும்போது ''தன்னையும் தனது சகாக்களையும் தயாநிதிமாறனின் ஆட்கள் அணுகி மத்திய சென்னையில் போட்டியிட வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிவித்தார். அதோடு பெரும் தொகை தருவதாகவும் வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்றும், அவ்வாறு வேறு தொகுதியில் போட்டியிட்டால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் அவர்களே (தயாகும்பல்) பார்த்துக் கொள்வதாகவும், கூறியதாகவும்'' ஹைதர் அலி தெரிவித்தார். மத்திய சென்னையில் தயாநிதிமாறனின் வெற்றி வாய்ப்பை மறுத்த ம.ம.க வேட்பாளர் எங்களைப் போல் மக்களோடு அவர்களால் ஒன்றிப் பழக முடியாது. இணைந்த பணியாற்ற முடியாது. கட்சிக்காரர்களோடு கூட நெருங்கிப் பழக முடியாத ஒருவர், சாதாரண மக்களோடு எவ்வாறு நெருங்கி வருவார் என்றும் செ. ஹைதர் அலி வினா விடுத்தார்.


இதற்கு முன்பு தயாநிதிமாறன் பெற்ற வெற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராதரவினால் கிடைத்த வெற்றியாகும். இந்த மக்களவைத் தேர்தலின் முடிவு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை வழங்கும். மக்கள் உண்மையை உணர்ந்து விட்டார்கள்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதின் மூலம் முஸ்லிம் வாக்காளர்களை விட்டு திமுக மேலும் அந்நியப்படுத்தி விட்டது. தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததனால் இதுவரை யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவெடுக்காமல் இருந்த வாக்காளர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். நேர்மையாளர்கள் யார்? என்பதை அது தெளிவு படுத்தும்' என்றார்.


அ.தி.மு.க வேட்பாளர் முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றி கூறும்போது வாக்காளர்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். முஸ்லிம் வாக்காளர்கள் தி.மு.கவுக்கு எதிராக வாக்களிப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலிக்கவே மாட்டார்கள். நாங்கள் மக்களுக்கு மாற்றத்தினை வழங்குவோம்' என்றார்
கிழக்கு இந்தியாவில் ஒரு ம.ம.க.

அபூசாலிஹ்

முஸ்லிம்கள் தங்களது அரசியல் உரிமைகளை மீட்டெடுக்க முயலும் காலமிது. இந்தியா முழுவதும் சிறுபான்மை சமூகத்தினரிடையே தங்களது அரசியல் உரிமையை மீட்டெடுக்க தங்களது முதல் கட்டப் பணிகளை துவக்கிவிட்டனர்.


இந்தியா முழுவதும் உரிமை முழுக்கம் கேட்கத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வெற்றிப் பாதை மிகவும் சுவாரசியமானது மட்டுமல்ல, புரட்சிகரமானதும் கூட.


எல்லை தாண்டி வந்த பங்களாதேஷ் அகதிகளைப் பிடித்து விசாரிக்கிறோம் என்ற பேரில் அஸ்ஸாமில் வாழும் அப்பாவி அஸ்ஸாமியர்களைக் கைது செய்து துன்புறுத்தியது. சட்டவிரோதக் கைதுகள், சித்திரவதைகள் தொடர்ந்தன. எல்லைப்புற பகுதிகளில் வாழும் அப்பாவி அஸ்ஸாமிய முஸ்லிம்களின் உரிமைகளை நிலைநாட்ட வெகுண் டெழுந்தது அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி. இயற்கைப் பேரிடரிலும் அஸ்ஸாமிய முஸ்லிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். வருடந் தோறும் ஏற்படும் பெரும் வெள்ளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து நடுவீதிக்கு வரும் நிலை ஏற்பட்டது. பேரிடரை எதிர்கொண்டு வீடிழந்த அப்பாவி அஸ்ஸாமிய மக்களுக்கு மறுவாழ்வுக்கு ஆவன செய்து சாதனைப் படைத்தது.


அத்தோடு அஸ்ஸாமிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இதுவரை ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த காங்கிரஸ், நேற்றுவரை ஆட்சி சுகம் அனுபவித்து மக்களுக்கு ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் வழங்கிய பாரதீய ஜனதா, அஸ்ஸாம் கனபரிஷத் போன்ற கட்சிகளுக்கு எதிராக தீவிர அரசியல் களம் கண்டது.


அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மாபெரும் வெற்றிக்கு வலுவான சான்றாக ஒரு குறிப்பிட்ட அம்சத்தை குறிப்பிடுகிறார்கள். கலவரங் களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததால் மாநில அரசு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கிவந்த நிலையில், அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கடும் போராட்டங் களுக்குப் பின் கலவரங்களில் பலியாகும் அப்பாவிகளுக்கு தலா எட்டு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு வருவதைக் கூறி அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியை நெகிழ்ச்சி யுடன் பாராட்டுகிறார்கள்.


அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வெற்றிப் பாதைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்களில் முக்கிய இடம்பெற்றுத் திகழும் அக்கட்சித் தலைவர் போட்டியிடும் மக்களவைத் தொகுதிகளின் நிலவரத்தைப் பார்ப்போம்.


அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மவ்லவி பத்ருதீன் அஜ்மல் துப்ரி மக்களவைத் தொகுதியில் காங்கிரசுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறார். காங்கிரஸ் தற்போதைய எம்.பி. அன்வர் ஹுஸைன் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகையுடன் சூறாவளி சுற்றுப் பிரச்சாரம் செய்து வருகிறார். இருப்பினும் காங்கிரசுக்கு இங்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது.


காங்கிரசுக்கு கடும் சவாலை ஏற்படுத்திய மவ்லவி பத்ருதீன் அஜ்மல் சில்சார் தொகுதியில் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சில்சார் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த அஸ்ஸாம் கனபரிஷத் பாஜக கூட்டணி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது வேறு வழியே இல்லாமல் பாஜக கூட்டணி ராஷ்ட்ரவாதி சேனா என்ற கட்சியின் அருண்தாஸ் என்பவரை ஆதரிக்க வேண்டிய நிலை. இவர் பிரபலமில்லாத வேட்பாளராதலால் இங்கும் காங்கிரசுடன் நேரடியாக மோதுகிறார் பத்ருதீன் அஜ்மல்.


மவ்லவி பத்ருதீன் அஜ்மல் போட்டி யிடும் மற்றொரு தொகுதியான துப்ரியில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 4 லட்சம் வாக்குகளை இக்கட்சி முன்பே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. துப்ரி சட்டமன்றத் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினராக மவ்லவி பத்ருதீன் அஜ்மல் பதவி வகித்து வருகிறார். அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய் மற்றும் அமைச்சர் ரகீப் ஹுசைன் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.


வெற்றி பத்ருதீனுக்குத்தான் என அடித்துச் சொல்கிறது களம்
தாடி, பர்தா, மதவாத அடையாளமா? கொதிக்கும் இந்தியா!

அபூசாலிஹ்


மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ கல்விக்கூடம் ஒன்றில் படித்துவந்த 16 வயது முஸ்லிம் மாணவனை தாடியை அகற்றிவிட்டு வருமாறு அந்த கல்விக்கூடம் உத்தரவு பிறப் பித்தது. மேலும் தனது உத்தரவை மதிக்க வில்லை என்று கூறி மாண வனை பள்ளியை விட்டும் நீக்கி யது நிர்வாகம்.


இதனை எதிர்த்து அந்த மாணவன் மத்தி யப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத்தில் மாணவனின் கோரிக்கை நிராகரிக் கப்பட்டது. உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து மாணவன் முஹம்மது சலீம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீட்டுக்குச் சென்றார்.
மார்ச் மாதம் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரவீந்திரன் மற்றும் மார்கண்டேய கட்ஜு அடங் கிய பெஞ்ச், முஹம்மது சலீமின் முறையீட்டினை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.


முறையீட்டை தள்ளுபடி செய்த தோடு உச்சநீதிமன்ற நீதிபதி மார் கண்டேய கட்ஜு தெரிவித்த கருத்து உலகெங்கும் பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது. ''இந்த நாட்டில் தாலிபான்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நாளை ஒரு மாணவி வந்து பர்தா அணிய அனுமதி கோரினால் அனுமதிக்க முடியாது'' என்று மார்கண்டேய கட்ஜு கூறியிருக்கிறார்.


இந்தக் கருத்து வெளியிடப்பட்ட உடன் நாடெங் கும் உள்ள சிறுபான்மை சமூகத்தின் தலைவர்கள் கடும் அதிருப்தி யையும், எதிர்ப்பையும், வேதனையையும் தெரிவித்தனர்.


மார்கண்டேய கட்ஜுவின் இந்தக் கருத்து குறுகிய மனப்பான்மை கொண்டதாகவும், சமயங்கள் குறித்த போதுமான ஆய்வில்லாமையையும் வெளிப் படுத்துகிறது. ஓர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கக்கூடியவர் சமயங் களின் முக்கிய விழுமியங்களை கற்றுத் தெரிய வேண்டியது அவசியம் என இமாரே ஷரியத் அமைப்பின் மவ்லவி அனிசுர் ரஹ்மான் காசிமி தெரிவித்தார்.


தாடி வைத்துக் கொள்வது சமயசார் பின்மைக்கு எதிரானது என்று கூறும் மார்கண்டேய கட்ஜு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்த்து இவ்வாறு கூறுவாரா? மன்மோகன்சிங் தாடியை அகற்றிவிட்டு, தலைப்பாகையை கழற்றி வைத்துவிட்டு தான் பிரதமர் அலுவலகத் திற்கு வரவேண்டும். ஏனெனில் நீங்கள் மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்ற வில்லை என மன்மோகன் சிங்கைப் பார்த்து கேள்வி கேட்க மார்கண்டேய கட்ஜு தயாரா? என்றும் அனிசுர் ரஹ்மான் வினா எழுப்பினார்.


''அரசியல் கட்சிகள், இதுபோன்ற தேசத்துரோக கருத்துக்களை எழுப்புவது வழக்கம். ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது தேசத்தின் எதிர்கால நலனுக்கு நல்ல தல்ல'' என முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் சையத் நிஜாமுத்தீன் தெரிவித்திருக்கிறார்.


''சீக்கியர்களுக்கு தாடி வைத்துக் கொள்ள அனுமதி உண்டு, முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி இல்லையா? ஒரே நாட்டில் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?'' என்றும் சையத் நிஜாமுத் தீன் ஆவேசமாக கேள்வி விடுக்கிறார்.


''மார்க்க உத்தரவைக் கூட தடுத்து நிறுத்தும் போக்கு சோகத்துக்குரியது. இந்திய அரசியல் சாசன சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைத் தடுப்பது வேதனையானது'' என தர்ஜமானே தேவ் பந்த் பத்திரிகை ஆசிரியர் மவ்லவி வாரிஸ் மஸ்ஹரி தெரிவித்தார்.


''இதற்கு மத்திய அரசு தலையிட்டு முடிவு காண வேண்டும், இல்லையெனில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர உத்தேசித்திருக்கிறோம்'' என பீகார் ஜமாஅத்தே இஸ்லாமி பொதுச் செயலாளர் ஹஸன் அஹ்மத் காதிரி தெரிவித்தார்.


மார்கண்டேய கட்ஜுவின் சர்ச்சைக் குரிய கருத்தினை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக பீகாரின் இதாரா ஷரியா அமைப் பின் தலைவர் சையத் சனா வுல்லாஹ் நாதிம் தெரிவித் திருக்கிறார்.


''மார்கண்டேய கட்ஜு வின் இந்தத் தீர்ப்பு சமய உரிமைக்கு எதிரானதாகும். உச்சநீதிமன்றம் எந்த மத நம்பிக்கைக்கும் எதிராக நட வடிக்கை எடுத்துவிட முடி யாது. எனவே உச்சநீதிமன் றம் தனது தீர்ப்பை மறுஆய்வு செய்யவேண்டும்'' என மேற்கு வங்காள மாநில ஜமாஅத்தே உலமாயே ஹிந்த்லின் பொதுச் செயலாளர் சித்தீக்குல்லாஹ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
''இது மார்கண்டேய கட்ஜுவின் சொந்தக் கருத்தாகவே இருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது'' என ஜமாஅத்தே உலமாயே ஹிந்த்லின் செய்தித் தொடர் பாளர் மவ்லவி அப்துல் ஹமீது நுஅமானி தெரிவித்தார்.


''மேற்கத்திய நாடுகளிலேயே தாடியும் பர்தாவும் அனுமதிக்கப்பட்டுள்ள போது, ஜனநாயக நாடான இந்தியாவில் இஸ்லாத் திற்கு எதிரான கருத்தை அனுமதிக்கக் கூடாது'' என டெல்லி ஜும்ஆ மஸ்ஜி தின் இமாம் சையத் அஹ்மத் புஹாரி தெரிவித்தார்.


''உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்ட வசமானது'' என அகில இந்திய மஜ்லிúஸ முஷாவராத்தின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் தெரிவித்தார்.


இஸ்லாம் அமைதியின் மார்க்கம், தாடிலிமுஸ்லிம்களின் அடையாளம். தாலிபானிசம் என்பது இப்போது ஒரு அடிப்படைவாதக் கொள்கையாக இருக் கிறது. தாடியையும் தாலிபானிசத்தையும் தொடர்புபடுத்திப் பேசியிருப்பது பெரும் தவறாகும் என ஜமியத்தே உலமாயே ஹிந்த்லின் தலைவர் மார்க்க அறிஞர் அர்ஷத் மதானி தெரிவித்தார்.


உச்சநீதிமன்றத்தின் கடமை சட்டத்தை பாதுகாப்பது, சட்டத்தை உடைப்பதல்ல என்றும் அர்ஷத் மதானி தெரிவித்தார்.


முஸ்லிம்களின் உரிமை மீது தாக்குதல் தொடுத்த இந்த செயலுக்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வழக்குகள் தொடுக்கவும் தயாராகி வருகின்றனர்.

அவரா இவர்?

திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வாழும் பகுதி வழியாக முஸ்லிம்கள் தங்கள் சமூகத்தினரின் ஜனாஸாவை கொண்டு செல்லக் கூடாது என ஒரு பிரிவினர் தடுத்து கலவரம் விளைவித்தனர்.

இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது இந்த விவகாரத்தில் எல்லோரும் பாராட்டும் வண்ணம் சிறந்த தீர்ப்பை வழங்கினார் அன்றைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு.

முஸ்லிம்களுக்கு, குறிப்பிட்ட பகுதி வழியாக தங்களது ஜனாஸா ஊர்வலத்தை நடத்திச் செல்ல உரிமை உள்ளது. யாருக்கும் தடுக்க உரிமை கிடையாது. இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அனைவருக்கும் சொந்தமானது என தீர்ப்பைக் கூறி அனைத்து மக்களாலும் பாராட்டப் பெற்றவர் மார்கண்டே கட்ஜு. அவரா இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார், என சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்கள் நடுநிலையாளர்கள்.



வருந்துகிறேன்!


''உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கட்ஜு குறிப்பிட்ட எந்த வாசகமும் இல்லை. இது மார்கண்டேய கட்ஜுவின் வாய்மொழியாக மட்டுமே உள்ளது'' என இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினர் பேராசிரியர் தாஹிர் மஹ் மூத் மற்றும் அவரது மகனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான சைஃப் மஹ்மூத் தெரிவித்திருக்கிறார்.


மார்கண்டேய கட்ஜுவின் சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பிறகு நாடெங்கும் சிறுபான்மையினரி டையே கடும் கொந்தளிப்பும் எதிர்ப் பும் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து மார்கண்டேய கட்ஜுவுடன் மேற் கண்ட சந்திப்பு நடைபெற்றது. இரண்டு மணி நேரம் நிகழ்ந்த இந்த சந்திப்பில் தனது நீதிமன்றப் பணியில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் தீர்ப்பளித்த ஏராளமான தீர்ப்புகளை, குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக் கைகள் குறித்த ஆதாரங்களை மார்கண்டேய கட்ஜு பேராசிரியர் தாஹிர் மஹ்மூதிடம் காட்டி, நடந்த வைகளுக்கு தான் வருந்துவதாகவும், இஸ்லாத்தின் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், எதிர்காலத்தில் இஸ்லாமிய மக்களின் உரிமைகளை அரசியல் சாசன ரீதியாக பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன் என்றும் மார்கண்டேய கட்ஜு தெரிவித்ததாகவும் தெரிய வந்துள்ளது
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஓர் ஆய்வு

அபூசாலிஹ்

நாடாளுமன்ற அவை விவாதங்களைப் பொறுத்த அளவில் இல்யாஸ் ஆஸ்மி 79 தடவையும் ஜே.எம்.ஹாரூன் மற்றும் ஹன்னான் மொல்லாஹ் தலா 66 தடவையும் விவாதங்களில் பங்கெடுத்தனர். 6 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த விவாதங்களிலும் பங்கெடுக்க வில்லை. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கெடுப்பின் சதவீதம் 20.84.


தனிநபர் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியவர்கள் இக்பால் அஹ்மத் சராத்கி எட்டு தடவையும் அப்துல்லாஹ் குட்டி ஆறு தடவையும் ஷாநவாஸ் ஹுஸைன் ஒரு தடவையும் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசி உள்ளனர். இதர முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் தனிநபர் மசோதா தாக்கல் செய்யவில்லை


முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவை செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் பக்கத்தில் உள்ள அட்டவணையாக உள்ளது.


முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐந்து வருட அவை செயல்பாடுகள் ஆகும்.


ஈ.அஹ்மத் (முஸ்லிம் லீக்), முஹம்மது அலி அஷ்ரஃப் பாத்திமி (ராஷ்ட்ரிய ஜனதாதளம்), தஸ்லீமுதீன் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) இவர்கள் அமைச்சர்களாக இருந்ததால் கேள்விகள் எழுப்புவதிலும் விவாதங்களில் பங்கேற்பதிலும் இடம் பெறாமல் தவிர்த்து விட்டார்கள். காபினெட் அமைச்சராக இருந்த போதிலும் ஒரு விவாதத்தில் பங்கெடுத்ததோடு ஏழு வினாக்களை தொடுத்தவர் அப்துல் ரஹ்மான் அந்துலே
கோவிலில் வெடிகுண்டு குவியல்

பதுக்கிய சங்பரிவார்!

அதிகாலை வேளை பீகார் மாநிலம் ஹத்ரிசராய் என்ற ஊரில் தேவி அஸ் தான் கோவிலில் பூஜைக்காக ஹிந்து மக்கள் கூடினார்கள். அமைதியாக வந்த மக்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. துப்பாக்கிகள், ஐந்து ரவுண்டுகள் சுடும் அளவுக்கு தோட்டாக் கள் இருந்தது, மற்றும் பயங்கர ஆயுதங்களைக் கண்டதும் கிராம மக்கள் அச்சத்தினால் அலறினார்கள்.





உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆயுதங்களை கைப்பற்றினர்.





நாடெங்கும் கலவரங்களை நடத்தி மக்களை பிளவு படுத்தி வரும் சங்பரிவார் அமைப்பினர் மர்மமான முறையில் வெடி குண்டு புதையல்களை குவித்துவைத் திருந்தனர் என்பது நாடறிந்த விசயம்.





மாலேகானிலும், தென்காசியிலும், கேரளாவின் கண்ணூரிலும், ஆந்திராவிலும் வெடிகுண்டு குவியல் வைத்தவர்கள் எப்போது பிடிபடுவார்கள்
அகில இந்திய அளவில் அனாதையான பாஜக!


சப்ரன் ஹபீப்

தமிழகத்தில் பாஜக அநாதையானதைப் போலவே அகில இந்திய அளவில் பாஜக அநாதையாகும நிலையும் ஏற்பட்டிருக்கிறது,


தமிழகத்தில் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவும் இடதுசாரிகளுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்து கைகழுவிவிட, அதேகதியாகி நிற்கிறது பாஜக.



தமிழகத்திலாவது பரவாயில்லை, பிற கட்சிகளின் தோளில் ஏறி நான்கைந்து இடங்களைத்தான் பாஜக வெற்றி பெற்றிருக்கும், அந்த இடங்களை மட்டும்தான் பாஜக இழந்திருக்கும் தமிழகத்தில் மட்டும். ஆனால் அகில இந்திய அளவில் கைவிடப்பட்ட சக்தியாக பாஜக விழி பிதுங்கி நிற்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என ஓட்டம் பிடித்தன.


ஓட்டம் பிடித்த கட்சிகளில் முத­டத்தை பிடித்தது பிஜு ஜனதா தளம். 11 ஆண்டுகள் ஒரிசாவை ஆண்ட பிஜு ஜனதா தளம் பாஜகவுடனான உறவை முறித்தது. பிஜு ஜனதா தளமும் பாஜகவும் ஒரிசாவில் மதவாதக் கொள் கையைப் புகுத்தி மாநிலத்தை சீரழித்தன.


பாஜகவுடன் சேர்ந்ததன் பலனாக ஒரிசாவில சங்பரிவார் கும்பல் இழைத்த அனைத்து குற்றங்களுக்கும் பிஜு ஜனதா தளமும் உடந்தையாக இருக்க வேண்டிய அவல நிலையை அடைந்தது.


11 ஆண்டுகள் ஒரிசா மாநிலத்தை ஆட்சி செய்த பிஜு ஜனதா தளம் மக்களின் அதிருப்தியை சம்பாதித் திருந்தது. பாஜகவோ தனது மக்கள் விரோதக் கொள்கையால் செல்வாக்கை இழந்தது. செல்வாக்கிழந்த இரு அணியும் கூட்டணியை முறித்துக் கொண்டன.


நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பாகவே பாஜகவின் தேர்தல் முடிவுகள் தெரிநது விட்டன என்கிறீர்களா
15வது பொதுத் தேர்தல்
இந்திய ஜனநாயகத்திற்கு சோதனைக் களம்



உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


71 கோடியே 40 லட்சம் மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த உள்ளனர். ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.


545 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 16ல் முதல் கட்டமாக 124 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும். ஏப்ரல் 23ல் இரண்டாவது கட்டமாக 141 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், ஏப்ரல் 30ஆம் தேதி மூன்றாவது கட்டமாக 107 தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி நான்காவது கட்டமாக 85 தொகுதிகளுக்கும், மே 13ஆம் தேதி ஐந்தாவது கட்டமாக 86 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.


இந்தத் தேர்தல் இதுவரை இல்லாத அளவு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும், 21 லட்சம் பாதுகாப்பு படை வீரர்களையும், 8 லட்சத்து 28 ஆயிரம் வாக்குச்சாவடிகளையும் அமைத்து தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது.


அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உள்ள மொத்த மக்கள் தொகையின் அளவைவிட நம் இந்தியத் திருநாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்களாட்சியின் மாண்பு பேணப்பட்டு வருவதாக கூறப்படும் நம்நாட்டில் 13வது மற்றும் 14வது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் நாட்டு மக்களை வேதனையில் ஆழ்த்தின.


வன்முறைகளிலும் பொருளாதார முறைகேடு களிலும் நாளுக்கு நாள் முன்னிலை பெற்றுவரும் இந்திய அரசியல் அரங்கம் எதிர்வரும் காலத்திலாவது இழந்த மாண்பினை மீட்கும் முனைப்பில் இறங்க வேண்டும்.


தேர்தல் களத்தில் ஒழுக்க மாண்புகளைக் காக்க அரசியல் கட்சிகளும், அரசுகளும் சூளுரை ஏற்க வேண்டும்.


தேர்தல் களத்தில் காட்சிகளும் கோலங்களும் மாறி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தனது அரசியல் கூட்டணி வலுவுடையதாக அமைய என்ன விலை கொடுக்கவும் தயாராகி வருகிறது. தனது தீவிர வைரியாகவும், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸுக்கு தீராத தலைவயாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க அந்தக் கட்சி முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றிருக்கிறது.


உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் காஙகிரஸ் செய்த துரோகத்தின் விளைவாக அக்கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அது முலாயம் சிங்கை பற்றிப் பிடித்து கரையேறலாம் என கனவு காண்கிறது. காங்கிரஸ்கார அண்ணாச்சி பர்ஹான் கமிஷன் என்னாச்சி? என உத்தரப்பிரதேச மக்கள் கேட்கத்தான் போகிறார்கள். அந்த முழக்கம் இந்தியாவெங்கும் எதிரொக்கத்தான் போகிறது.


குஜராத்தின் மோடி திடீரென்று மகாராஷ்ட்ர அரசியல் அரங்கில் ஆர்வம் காட்டுகிறார். மகாராஷ்டிராவின் பவார், பிரதமர் பதவிக்கு தான் தயார் என குட்டையைக் குழப்புகிறார்.


ஒரிஸ்ஸாவின் நவீன் பட்நாயக்கும், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் பாஜகவுடன் கைகுலுக்க தயாராக இல்லை.


கூட்டணிகளால் கழற்றி விடப்பட்ட பாஜகவும், இருக்கின்ற கூட்டணியை இறுகப் பற்றிக் கொண்டு காங்கிரசும் தேர்தலை சந்திக்க உள்ளன. இடது சாரிகள் அரசியல் சந்தியில் நிற்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.


பாஜகவோ அரசியல் அநாதையாக மாறிவிட்டது. காங்கிரஸ் அரசியல் மறுவாழ்வுக்கு ஏங்கித் தவிக்கிறது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வரலாற்றில் இந்தத் தேர்தலுக்கு மிகுந்த முக்கியத் துவம் உண்டு.


ஜூலை 2ம் தேதி உதயமாகப் போகும் 15வது நாடாளுமன்றத்தையும் புதிய அரசையும் தேர்ந்தெடுக்க பாரம்பரிய பெருமைமிக்க இந்தியா தயாராகிறது. அது இந்திய ஜனநாயகத்திற்கு மீண்டுமொரு சோதனைக் களம்
அடுத்த பிரதமர் யார்?


நாடாளுமன்றத்தில் 2009-10 ஆம் ஆண்டுக்கான ரயில்வே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பயணிகள் கட்டணம் இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டது. சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அவர்கள் சமர்ப்பித்த 6வது பட்ஜெட் இது. கடந்த நான்கு ஆண்டுகளில் பயணிகள் கட்டணம் உயர்த்தப் படவில்லை. அத்துடன் சென்ற ஆண்டு இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது இடைக்கால பட்ஜெட்டிலும் இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களைத்தவிர பிற நகர் ரயில்களில் 10 கிலோ மீட்டர் தூரத் துக்கு நான்கு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது ஏற்கனவே ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டது. இப்போது 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ரூ 50 வரையுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது.

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் ஐம்பது ரூபாய்க் கும் மேல் உள்ள கட்டணங்கள் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது.

குளிர்சாதன இருக்கை, முதல் வகுப்பு, இரண்டுஅடுக்கு குளிர்சாதன வகுப்பு, மூன்றடுக்கு குளிர்சாதன வகுப்பு ஆகியவற்றுக்கான கட்டணங் களும் இரண்டு சதவீதம் குறைக்கப்படு வதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் குளிர்சாதன முதல் வகுப்பு கட்டணம் 28 சதவீதமும் இரண்டு அடுக்கு குளிர் சாதன கட்டணம் 20 சதவீதமும் குறைக்கப்பட்டதால் ஆகாய மார்க்க மாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து ரயில்களில் உயர் வகுப்பில் பிரயாணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததோடு ரயில்வேத் துறைக்கு லாபமும் அதிகரித்தது.

இவ்வாண்டு புதிதாக 43 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ஐந்து புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஐந்து ஆண்டுகளாக பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமலே சாதனை படைத்தார் ஒடுக்கப்பட்ட சமுதாயத் தில் பிறந்த லாலு.

மிகவும் பின்தங்கிய நிலையில் தேறவே தேறாதோ என அனைவ ராலும் கைவிடப்பட்ட ஒரு துறையை மறு மலர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்று அசத்தியிருக்கிறார் லாலு.

சமீபத்திய சாதனையாளர்களில் முதலிடத்தில் வைத்து பாராட்டத் தக்கவர் லாலு.

இவர் மேட்டுக்குடி சமூகத்தில் பிறந் திருந்தால் இவரை தலைமேல் தூக்கி வைத்து உச்சி மோர்ந்து மெச்சிப் புகழ ஒரு கூட்டமே ஊடக வட்டாரத்தில் உருவாகியிருக்கும். ஆனால் உழைக் கும் பாட்டாளி வர்க்கத்தில் பிறந்ததி னால் லாலு சாதனை மேல் சாதனை நிகழ்த்தியிருந்தாலும் கூட அவரது சாதனைக்கு முழுமையான அங்கீகாரம் இந்த நாட்டில் கிடைத்ததா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலை.

கடந்த ஐந்தாண்டுகளில் தனது கடமைகளை சரிவர நிறைவேற்றிய அமைச்சர்களில் லாலு முதல் நிலை வகிக்கிறார் எனில் அது மிகையாகாது. உயர்கல்வி நிறுவனங்களின் இவரது சாதனைகளை பாடமாக வைக்கும் அள விற்கு சிறப்பு வாய்ந்தவராக மாறியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் வெகு அருகிலேயே இருக்கும் நிலையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் வேட் பாளர்களின் பெயர்களை பார்க்கும் போது வேதனை கலந்த சிரிப்புதான் ஏற்படுகிறது.

மதவெறி யாத்திரைகளின் மூலம் இந்த தேசத்தை 50 ஆண்டுகாலம் பின்னோக்கி தள்ளிய பழமைவாத, பிரிவினைவாத கூட்டத்தின் தலைவர் எல்.கே.அத்வானி, இருபதாம் நூற் றாண்டின் இணையற்ற இனப்படு கொலையாளரும் இரண்டாவது ஹிட்லருமான நரேந்திர மோடி போன்றவர்கள் பிற்போக்குவாதிகளால் முன் நிறுத்தப்படுகிறார்கள்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் புதிய பாத்திரத்தில் பழைய பதார்த்தம் என்பதைப் போல மன்மோகன் சிங் பெயர் முன்மொழியப்படுகிறது. இடதுசாரிகளோ மாயாவதியின் பெயரை பரிசீலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. செல்வி மாயாவதி யின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் த­த் சமூகத்தின் வளர்ச்சி யின் விரோதிகளுக்கு ஆனந்தத்தை அள்ளி வழங்கி வருகிற நிலையில் இடதுசாரிகளால் முன் நிறுத்தப்போகும் நபர் அவ்வளவு தெளிவான தெரிவாக இல்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது. சமாஜ்வாதி கட்சி சரத்பவாரை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினால் ஆதரிப் போம் என புதிய ஒரு குழப்பத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. செயலாற்றல் கொண்ட தலைவர் களுக்கு இந்த நாட்டில் பஞ்சம் இல்லை.

லாலுவும், சமூக நீதி தத்துவத்தில் சளைக்காத உறுதிகாட்டும் அர்ஜுன் சிங்கும் (உடல்நிலை தளர்ந்தவராயிற்றே என வினாக்கள் எழலாம் வாஜ்பாய் பிரதமராக இருந்திருக்கிறார் வாஜ்பேயை விட இவர் உடல்நிலை யில் சளைத்தவர் இல்லை என்பதே உண்மை)

ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற சமூக நீதிப் போராளிகளை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதில் இவர்களுக்கு ஏன் தயக்கம்?

செயலாற்றல் மிகுந்த அரசியல் தலைவர் ஒருவரை பிரதமர் வேட்பாள ராக முன்னிறுத்துவதே நாளைய இந்தியாவை வல்லமையுடன் கட்ட மைக்க உதவிகரமாக அமையும் என்பதே நாட்டு மக்களின் தற்போதைய ஒரே எதிர்பார்ப்பு

Web Counter Code