இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, May 8, 2009

ABUSALIH NEWS ABOUT CHENNAI CENTRAL NEWS

மத்திய சென்னை காணாமல் போன எம்.பி

கூவத்தின் தெறிப்பிலிருந்து (அம்பலப்படுத்துகிறது அவுட்லுக்)


2004ல் முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தயாநிதிமாறனால் தனது தொகுதியில் முத்திரை பதிக்க முடியவில்லை. மத்திய சென்னை என்ற நகர்ப்புற தொகுதியில் ஏராளமான பிரச்சினைகள் உண்டு. ஆனால் தொகுதி மக்கள் தாத்தா கருணாநிதிக்கும் பேரன்கள் கலாநிதி தயாநிதி சகோதரர்களுக்கும் இடையிலான யுத்ததில் (2007 மே முதல் 2008 டிசம்பர் வரை) தொகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. சக்திவாய்ந்த குடும்பத்தின் செல்லமாக கருதப்பட்டு வந்தாலும் தலைநகரின் மத்தியில் இருக்கும் தொகுதிக்கு எந்த பயனும் விளையவில்லை.


தயாநிதிமாறன் பங்கு கொள்ளும் கூட்டங்களிலெல்லாம் ஒரு ரூபாய் அரிசி. இலவச கலர் டி.வி. இலவச கேஸ் அடுப்பு போன்ற மாநில அரசின் திட்டங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார். தொகுதிக்கு இவர் என்னதான் செய்தார் என்பதை இவர் சொல்வதே இல்லை என்று கூறுகிறார் மத்திய சென்னை வாக்காளரான ராமச் சந்திரன்.


மோசமான சாலைகள். ஒழுங்கீனமான போக்குவரத்து எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்கள் கூவம் கரையில் வாழும் மக்களின் நிலை சொல்லக் கூடிய தரமல்ல. ஆனால் இங்குதான் திமுகவுக்கு வாக்கு அறுவடை.


தேர்தலுக்குப் பிறகு தயாநிதி மாறன் மிகவும் பிஸியாகி விடுவார். இவரை நாம் பார்க்க வேண்டுமானால் டெல்லிக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ செல்ல வேண்டியதுதான் என்கிறார் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் நடராஜன். கருணாநிதி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களின் இவரது நாடாளுமன்ற தொகுதிக்குள் வருவதால் இந்த சாதக அம்சங்களோடு ஒண்டிப் பிழைத்தே எம்.பியாகி விடுகிறார்.


2004ல் தயாநிதிமாறன் நாடாளுமன்ற உறுப்பினரான உடன் அமிஞ்சிகரையில் கூவக்கரையில் மேம்பாலம் ஒன்றை கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். அண்ணாநகர். வில்லிவாக்கம். கோயம்பேடு மற்றும் கொளத்தூர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக போடப்பட்டதிட்டம் ஆனால் அது தொடங்கப்படவே இல்லை.


பெரம்பூர் பாலம் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நடைபெறவே இல்லை. காரணம் தயாநிதி கருணாநிதி குடும்பசண்டை. இந்த திட்டங்கள் செயல்படுத்தப் படாமல் இருக்க முட்டுக்கட்டை போட்டது மாநில அரசுதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆன செலவுகளெல்லாம் வீண்.


இவர்கள் குடும்பச் சண்டை தீர்ந்த பின் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது. டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டது. வேலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் இன்னும் வேலை தொடங்கவில்லை.


இதே தொகுதியில் மூன்று தடவை எம்.பியாக இருந்த இவரதுதந்தை முரசொலி மாறன் காலத்தில் ஹாடோஸ் சாலை மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் பயனின்றி கிடக்கிறது என அப்பகுதிவாசிகள் கூறுகிறார்கள்.

Outlook May 4, 2009

No comments:

Web Counter Code