இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, May 8, 2009

தாடி, பர்தா, மதவாத அடையாளமா? கொதிக்கும் இந்தியா!

அபூசாலிஹ்


மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ கல்விக்கூடம் ஒன்றில் படித்துவந்த 16 வயது முஸ்லிம் மாணவனை தாடியை அகற்றிவிட்டு வருமாறு அந்த கல்விக்கூடம் உத்தரவு பிறப் பித்தது. மேலும் தனது உத்தரவை மதிக்க வில்லை என்று கூறி மாண வனை பள்ளியை விட்டும் நீக்கி யது நிர்வாகம்.


இதனை எதிர்த்து அந்த மாணவன் மத்தி யப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத்தில் மாணவனின் கோரிக்கை நிராகரிக் கப்பட்டது. உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து மாணவன் முஹம்மது சலீம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீட்டுக்குச் சென்றார்.
மார்ச் மாதம் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரவீந்திரன் மற்றும் மார்கண்டேய கட்ஜு அடங் கிய பெஞ்ச், முஹம்மது சலீமின் முறையீட்டினை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.


முறையீட்டை தள்ளுபடி செய்த தோடு உச்சநீதிமன்ற நீதிபதி மார் கண்டேய கட்ஜு தெரிவித்த கருத்து உலகெங்கும் பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது. ''இந்த நாட்டில் தாலிபான்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நாளை ஒரு மாணவி வந்து பர்தா அணிய அனுமதி கோரினால் அனுமதிக்க முடியாது'' என்று மார்கண்டேய கட்ஜு கூறியிருக்கிறார்.


இந்தக் கருத்து வெளியிடப்பட்ட உடன் நாடெங் கும் உள்ள சிறுபான்மை சமூகத்தின் தலைவர்கள் கடும் அதிருப்தி யையும், எதிர்ப்பையும், வேதனையையும் தெரிவித்தனர்.


மார்கண்டேய கட்ஜுவின் இந்தக் கருத்து குறுகிய மனப்பான்மை கொண்டதாகவும், சமயங்கள் குறித்த போதுமான ஆய்வில்லாமையையும் வெளிப் படுத்துகிறது. ஓர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கக்கூடியவர் சமயங் களின் முக்கிய விழுமியங்களை கற்றுத் தெரிய வேண்டியது அவசியம் என இமாரே ஷரியத் அமைப்பின் மவ்லவி அனிசுர் ரஹ்மான் காசிமி தெரிவித்தார்.


தாடி வைத்துக் கொள்வது சமயசார் பின்மைக்கு எதிரானது என்று கூறும் மார்கண்டேய கட்ஜு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்த்து இவ்வாறு கூறுவாரா? மன்மோகன்சிங் தாடியை அகற்றிவிட்டு, தலைப்பாகையை கழற்றி வைத்துவிட்டு தான் பிரதமர் அலுவலகத் திற்கு வரவேண்டும். ஏனெனில் நீங்கள் மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்ற வில்லை என மன்மோகன் சிங்கைப் பார்த்து கேள்வி கேட்க மார்கண்டேய கட்ஜு தயாரா? என்றும் அனிசுர் ரஹ்மான் வினா எழுப்பினார்.


''அரசியல் கட்சிகள், இதுபோன்ற தேசத்துரோக கருத்துக்களை எழுப்புவது வழக்கம். ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது தேசத்தின் எதிர்கால நலனுக்கு நல்ல தல்ல'' என முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் சையத் நிஜாமுத்தீன் தெரிவித்திருக்கிறார்.


''சீக்கியர்களுக்கு தாடி வைத்துக் கொள்ள அனுமதி உண்டு, முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி இல்லையா? ஒரே நாட்டில் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?'' என்றும் சையத் நிஜாமுத் தீன் ஆவேசமாக கேள்வி விடுக்கிறார்.


''மார்க்க உத்தரவைக் கூட தடுத்து நிறுத்தும் போக்கு சோகத்துக்குரியது. இந்திய அரசியல் சாசன சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைத் தடுப்பது வேதனையானது'' என தர்ஜமானே தேவ் பந்த் பத்திரிகை ஆசிரியர் மவ்லவி வாரிஸ் மஸ்ஹரி தெரிவித்தார்.


''இதற்கு மத்திய அரசு தலையிட்டு முடிவு காண வேண்டும், இல்லையெனில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர உத்தேசித்திருக்கிறோம்'' என பீகார் ஜமாஅத்தே இஸ்லாமி பொதுச் செயலாளர் ஹஸன் அஹ்மத் காதிரி தெரிவித்தார்.


மார்கண்டேய கட்ஜுவின் சர்ச்சைக் குரிய கருத்தினை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக பீகாரின் இதாரா ஷரியா அமைப் பின் தலைவர் சையத் சனா வுல்லாஹ் நாதிம் தெரிவித் திருக்கிறார்.


''மார்கண்டேய கட்ஜு வின் இந்தத் தீர்ப்பு சமய உரிமைக்கு எதிரானதாகும். உச்சநீதிமன்றம் எந்த மத நம்பிக்கைக்கும் எதிராக நட வடிக்கை எடுத்துவிட முடி யாது. எனவே உச்சநீதிமன் றம் தனது தீர்ப்பை மறுஆய்வு செய்யவேண்டும்'' என மேற்கு வங்காள மாநில ஜமாஅத்தே உலமாயே ஹிந்த்லின் பொதுச் செயலாளர் சித்தீக்குல்லாஹ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
''இது மார்கண்டேய கட்ஜுவின் சொந்தக் கருத்தாகவே இருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது'' என ஜமாஅத்தே உலமாயே ஹிந்த்லின் செய்தித் தொடர் பாளர் மவ்லவி அப்துல் ஹமீது நுஅமானி தெரிவித்தார்.


''மேற்கத்திய நாடுகளிலேயே தாடியும் பர்தாவும் அனுமதிக்கப்பட்டுள்ள போது, ஜனநாயக நாடான இந்தியாவில் இஸ்லாத் திற்கு எதிரான கருத்தை அனுமதிக்கக் கூடாது'' என டெல்லி ஜும்ஆ மஸ்ஜி தின் இமாம் சையத் அஹ்மத் புஹாரி தெரிவித்தார்.


''உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்ட வசமானது'' என அகில இந்திய மஜ்லிúஸ முஷாவராத்தின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் தெரிவித்தார்.


இஸ்லாம் அமைதியின் மார்க்கம், தாடிலிமுஸ்லிம்களின் அடையாளம். தாலிபானிசம் என்பது இப்போது ஒரு அடிப்படைவாதக் கொள்கையாக இருக் கிறது. தாடியையும் தாலிபானிசத்தையும் தொடர்புபடுத்திப் பேசியிருப்பது பெரும் தவறாகும் என ஜமியத்தே உலமாயே ஹிந்த்லின் தலைவர் மார்க்க அறிஞர் அர்ஷத் மதானி தெரிவித்தார்.


உச்சநீதிமன்றத்தின் கடமை சட்டத்தை பாதுகாப்பது, சட்டத்தை உடைப்பதல்ல என்றும் அர்ஷத் மதானி தெரிவித்தார்.


முஸ்லிம்களின் உரிமை மீது தாக்குதல் தொடுத்த இந்த செயலுக்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வழக்குகள் தொடுக்கவும் தயாராகி வருகின்றனர்.

அவரா இவர்?

திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வாழும் பகுதி வழியாக முஸ்லிம்கள் தங்கள் சமூகத்தினரின் ஜனாஸாவை கொண்டு செல்லக் கூடாது என ஒரு பிரிவினர் தடுத்து கலவரம் விளைவித்தனர்.

இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது இந்த விவகாரத்தில் எல்லோரும் பாராட்டும் வண்ணம் சிறந்த தீர்ப்பை வழங்கினார் அன்றைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு.

முஸ்லிம்களுக்கு, குறிப்பிட்ட பகுதி வழியாக தங்களது ஜனாஸா ஊர்வலத்தை நடத்திச் செல்ல உரிமை உள்ளது. யாருக்கும் தடுக்க உரிமை கிடையாது. இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அனைவருக்கும் சொந்தமானது என தீர்ப்பைக் கூறி அனைத்து மக்களாலும் பாராட்டப் பெற்றவர் மார்கண்டே கட்ஜு. அவரா இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார், என சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்கள் நடுநிலையாளர்கள்.



வருந்துகிறேன்!


''உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கட்ஜு குறிப்பிட்ட எந்த வாசகமும் இல்லை. இது மார்கண்டேய கட்ஜுவின் வாய்மொழியாக மட்டுமே உள்ளது'' என இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினர் பேராசிரியர் தாஹிர் மஹ் மூத் மற்றும் அவரது மகனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான சைஃப் மஹ்மூத் தெரிவித்திருக்கிறார்.


மார்கண்டேய கட்ஜுவின் சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பிறகு நாடெங்கும் சிறுபான்மையினரி டையே கடும் கொந்தளிப்பும் எதிர்ப் பும் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து மார்கண்டேய கட்ஜுவுடன் மேற் கண்ட சந்திப்பு நடைபெற்றது. இரண்டு மணி நேரம் நிகழ்ந்த இந்த சந்திப்பில் தனது நீதிமன்றப் பணியில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் தீர்ப்பளித்த ஏராளமான தீர்ப்புகளை, குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக் கைகள் குறித்த ஆதாரங்களை மார்கண்டேய கட்ஜு பேராசிரியர் தாஹிர் மஹ்மூதிடம் காட்டி, நடந்த வைகளுக்கு தான் வருந்துவதாகவும், இஸ்லாத்தின் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், எதிர்காலத்தில் இஸ்லாமிய மக்களின் உரிமைகளை அரசியல் சாசன ரீதியாக பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுப்பேன் என்றும் மார்கண்டேய கட்ஜு தெரிவித்ததாகவும் தெரிய வந்துள்ளது

No comments:

Web Counter Code