நவீன நீரோ மன்னன் மோடி பேட்டியிலிருந்து ஓட்டம்
ஹபீபா பாலன்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சி.என்.என்லிஐ.பி.என் தொலைக்காட்சியில் பிரபல இதழியலாளர் கரண்தாப்பரிடம் பேட்டியளிக்க வந்தபோது கோத்ரா முஸ்லிம்கள் கோரக் கொலைகள் பற்றியும், அப்பாவி முஸ்லிம்கள், பெண்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரங்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஓடினார்.
நவீன நீரோ மன்னன் என்று உங்களை உச்சநீதிமன்றம் கூறியிருக் கிறதே போன்ற பல்வேறு கேள்வி கணைகளுக்கு மோடி திக்கினார் திணறினார். மூன்று நிமிடத்துக்குள் பேட்டியை முடித்துக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார் மோடி பேட்டி முடித்து விட்டது. மோடி ராஜ்யம் இந்த சட்டமன்றத் தேர்தலுடன் முடிந்து விடுமா?
மோடியின் பேட்டி...
கரண்தாப்பர்: நீங்கள் இனப்படுகொலைகளை நிகழ்த்தியதற்காக வெறுக்கப்படுகிறீர்கள். முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்கள் இதை ஒரு இமேஜ் பிரச்சினையாக படவில்லையா?நரேந்திர மோடி: இரண்டு அல்லது மூன்று நபர்கள் இந்த பாணியில் பேசிக்கொள்கிறார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்.
கரண்தாப்பர்: இது உங்களுக்கு எதிரான இரண்டு அல்லது மூன்று நபர்களின் சதி என்று சொல்கிறீர்களா?
நரேந்திர மோடி: நான் அதைப் பற்றி பேசவில்லை?
கரண்தாப்பர்: ஆனால் வெறும் இரண்டு அல்லது மூன்று பேர் பற்றிய விஷயம் என்று கூறுகிறீர் களா?
நரேந்திர மோடி: இது எனக்கு வந்த தகவல். இது மக்களின் குரல்.
கரண்தாப்பர்: 2003 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் 'குஜராத் அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறியது. பெண்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி செப்டம்பர் 2004ல் 'நவீன நீரோ மன்னன் போல நீங்கள் நடந்து கொண்டதாக கூறினார். பிரச்சினை உங்களிடம் தான் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
நரேந்திர மோடி: கரண், உங்களிடம் நான் சிறிய வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பு விஷயத்திற்குப் போகவேண்டாம். அதில் என்னைப் பற்றி என்ன எழுதியிருந்தாலும் எனக்கு சந்தோஷமே.
கரண்தாப்பர்: அதில் உங்களைப் பற்றி நல்லவை எதுவும் எழுதப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் கருத்து இது.
நரேந்திர மோடி: இதுதான் தீர்ப்பு என்றால் அதற்கு பதில் கூறுவதில் எனக்கு சந்தோஷமே.கரண்தாப்பர்: தலைமை நீதிபதியின் விமரிசனம் ஒரு 'பெரிய விஷயமே இல்லை என்று சொல்கிறீர்களா?நரேந்திர மோடி: தயவு செய்து நீதிமன்ற விஷயத்தை விட்டு விடுங்கள். அந்த வாசகங்களையும், உதாரணங்களை யும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
கரண்தாப்பர்: ஒ.கே. இது தலைமை நீதிபதியின் வெளிப்படையான கருத்து இல்லையா? 4,600 வழக்குகளில் 2,100 வழக்குகளை மறுவிசாரணை செய்ய உச்சநீதிமன்றம் கூறுகிறது. குஜராத்தில் நீதி கிடைக்காது என்றே மக்கள் நம்புகிறார்கள்.
நரேந்திர மோடி: .....?
கரண்தாப்பர்: இந்தியாடுடே உங்களை சிறந்த முதல்வர் என்று கூறினாலும் ராஜிவ்காந்தி அறக்கட்டளை குஜராத் சிறந்த நிர்வாகத்துடன் செயல்படுகிறது என்று கூறினாலும் வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்றே கூறுகிறார்கள். ஏன் இதை உங்களது இமேஜ் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை.நரேந்திர மோடி: நான் குஜராத்துக் காகவே என் வாழ்வை அர்ப்பணித்து விட்டேன் (அடங்கப்பா) போதும் ப்ளீஷ் கரண்.கரண்தாப்பர்: ஆனால் மோடி நான் ஒன்றும் தவறாக பேசி விடவில்லை. உங்கள் இமைஜை சரி செய்ய முயலாதது ஏன் என்பதுதான் என் கேள்வி?நரேந்திர மோடி: அதற்கு இது நேரமல்ல என்று மழுப்பிய மோடி தண்ணீர் வேண்டும் என்று கேட்டு மிடறு விழுங்கினார்.
குஜராத் இனப்படுகொலைகள் குறித்த கேள்வியால் திணறிய மோடி, உச்சநீதி மன்றத்தின் கருத்து குறித்த கேள்விக்கு ஆத்திரம் அடைந்தார். ஆத்திரமும் அவமானமும் ஒருசேர மோடி கோழை போல ஓடினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment