இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, August 3, 2007

ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்

ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்
முஹம்மத் ஹனீஃபுக்கு தீவிரவாத பழி சுமத்தி திருதிருவென விழித்து திக்கு முக்காடி தவித்த ஆஸ்திரேலியாவைப் பற்றி தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது. ஆனால் டாக்டர் ஹனீஃபை விட பல மடங்கு வேதனையையும் துன்பங்களையும் அனுபவித்த இளைஞர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக இரண்டு இந்திய இளைஞர்களை குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை அமெரிக்க அரசு முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
முஹம்மது அய்யூப், ஜாவித் அஹ்மத் இருவரையும் இரட்டைக் கோபுர தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்கள் என பல ஆண்டுகளாக சிறையி லடைத்தது.
கடந்த ஆண்டு இருவரையும் அமெரிக்க அரசு விடுதலை செய்தது. இவர்கள் இருவர் மீதான தீவிரவாத தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்ப தால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
முஹம்மத் ஹனீஃப், அவரது மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நாங்களும் அதைப் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்த வர்கள் என்று ஜாவீத் அஸ்மத்தும் அவரது மனைவி தஸ்லீமும் கூறுகின் றனர்.
முஹம்மத் ஹனீஃப் என்ற கர்நாடக சகோதரருக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்தது தான் அமெரிக்காவில் எனக்கும் நடந்தது என்று குறிப்பிடும் ஜாவித் அஸ்மத், நான் உலக வர்த்தக வளாகத்தை தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவன் என என்னைக் கைது செய்தார்கள். நான் சவூதி அரேபியாவின் பிரஜை என்றார் கள். அதற்கு போலியாக பாஸ்போர்டும், பிறப்புச் சான்றிதழும் புனைந்தார்கள். எனக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்று பொய்யாக ஒரு ஆவணத்தை தயார் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் எனக்கு விமானம் ஓட்டத் தெரியாது. எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் எதையும் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்க முடிய வில்லை. வழக்கை இழுத்தடிக்கும் மிகக் கேவலமான தந்திரத்தை கையாண்டார் கள். இறுதியில் நீதிமன்றத்தால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
ஹனீஃபுக்கு ஆதரவாக இந்திய அரசு களம் இறங்கியது. ஹனீஃப் குறித்த அனைத்து வி'யங்களும் பகிரங்கப் படுத்தன. அதனால் புனையப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகள் மறைந்து உண்மைகள் வெளிவரத் துவங்கின என்று கூறிய ஜாவீத் இதற்கென இந்திய அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
தங்களை சிறையில் தள்ளியதற்கும் கண்ணியக் குறைவை ஏற்படுத்தியதற்கும் இழப்பீடு கோரி அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஜாவீத் அஸ்மத் விரைவில் வெற்றி கிடைக்கும் என்றும் நம்புகிறார்

No comments:

Web Counter Code