இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, August 20, 2010

காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

காஷ்மீர்-டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

அபுஸாலிஹ்

2009 அக்டோபர் மாதம் ராபர்ட் பிராட் ராக் என்ற பிரிட்டன் அறி-ஞர் இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதி இரண்டிலும் சேர்த்து ஒரு கருத்துக்கணிப்பினை நடத்தினார். 37 பக்கங்களைக் கொண்ட அந்த கருத்துக் கணிப்பில் பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர் மக்களில் 44 சதவீதம் பேர் காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என விரும்புகிறார்களாம். இந்தியாவில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த 43 சதவீதம் பேர் தனி காஷ்மீரக் கொள்கைக்கு பச்சைக் கொடி காட்டுபவர்கள் என அந்த கருத்துக் கணிப்பு குறிப்பிடுகிறது.

1948-49 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் மக்களின் மனப்பான்மை இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைவது என்ற குறிக் கோள்களுடன் இருந்ததாகவும் ஆனால் தற்போது 75 சதவீதத்திலிருந்து 95 சதவீத மக்கள் ‘ஆஜாதி’ சுதந்திர இறுதித்தீர்வு எனக் கருதுவதாக சர்வே கூறுகிறது.

எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு நிரந்தரமாக இருப்பினும் தவறில்லை. ஆனால் இருபுறமும் உள்ள காஷ்மீர் மக்கள் சந்தித்துக் கொள்வதற்கும், வணிகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் அனுமதிக்க வேண்டும் என 58 சதவீத மக்கள் கூறுகின்றனர்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடா? தேவையே இல்லை என்கிறார்கள் ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள். 8 சதவீதமக்கள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை எதிர்க்கிறார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என ஜம்மு காஷ்மீரில் 20 சதவீதம் பேர் நம்புகிறார்கள். பாகிஸ்தான் காஷ்மீரில் 40 சதவீதம் ஆயுத வழிப்போராட்டமே தீர்வு என நம்புகிறார்கள்.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா (23.06.2010)

குறிப்பு: இக்கருத்து கணிப்பை கவனத்தில் கொண்டு காஷ்மீரிகளின் உள்ளங்களை வென்றெடுக்கும் பணிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Web Counter Code