இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, March 4, 2011

லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை!

லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை!

E-mail Print PDF

லிபியாவில் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்டு தாயகத்திற்கு கொண்டு வருவதில் இந்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. லிபியாவில் வாழும் இந்திய மக்கள் 18 ஆயிரம் பேரையும் பாகுபாடு காட்டாமல் காக்க வேண்டிய இந்திய அரசு பொறியாளர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட உயர் பணியில் இருப்பவர்களை மட்டும் விமானங்களில் இந்தியாவிற்கு வரவழைப்பதாகவும் இதர கடைநிலை தொழிலாளர்களை கப்பல்கள் மூலம் வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகி வரும் தகவல்கள் தங்கள் உறவினர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அப்பாவி ஏழை மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

லிபியாவில் இந்தியர்கள் பலர் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் தலைவன்கோட்டையைச் சேர்ந்த முருகைய்யா மற்றும் அசோக் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பேராசிரியர்கள், மருத் துவர்கள், பொறியாளர்கள் உள் ளிட்டவர்கள் மட்டுமே விமானம் மூலம் இந்தியா வரவழைக்கப்படுவதாகவும், கடைநிலை மற்றும் நடுத்தர தொழி லாளர்கள் கப்பல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியா திரும்பிய மக்கள் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அலைகளை லிபியாவில் வாடும் இந்தியர்களின் குடும்பத்தினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

பாரபட்சமின்றி தொழிலாளர்களையும் விமானம் மூலம் விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் குமுற லுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக் கப்பட்ட கிராம மக்கள் மத்திய அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே லிபியா வில் போராட்டங்களில் பலியாகும் மக்களின் பிணங்கள் குப்பையில் வீசப்படுவதாக அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

லிபியாவில் வெடித்துள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தினால் மிகக் கடுமை யான தாக்குதல்கள் நடந்து வருகிறது. வீதி களெங்கும் உடல்களாகக் கிடக்கின்றன. அவை புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டு குப்பை களில் வீசப்படுவதாக அதிர்ச்சித் தகவலை மீண்டுவந்த இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க முதல்கட்டமாக இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கியது. இந்த விமானங்கள் லிபியா சென்று 528 இந்தியர்களை மீட்டுக்கொண்டு வந்துள்ளன.
முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் ஷ்வந்து சேர்ந்தது. இரு விமானங்களிலும் ஏராளமான தமிழர்களும் இருந்தனர்.

விமான நிலையத்தில் முகம்மது ஸாலிஹ் என்ற பொறியாளர் கூறுகையில், லிபியா வில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக் கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் பீதியில் உறைந் துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இறந்தவர்களின் உடல் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

மக்கள் கிளர்ச்சி பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு அறவே இல்லை என தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு திரும்பியுள்ள பலரும் வலி யுறுத்தியுள்ளனர்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, வெளியுறவுத்துறை செய லாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வர வேற்றனர்.

முதலில் வந்த விமானங்களில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள் ளிட்டோர் இருந்தனர்.

-ஹபீபா பாலன்

No comments:

Web Counter Code