இளம்பெண்கள் கற்பழித்துக் கொலைபாதுகாப்பு படையினரை எதிர்த்து காஷ்மீர் மக்கள் கொந்தளிப்பு!நிலோஃபர் என்ற இளம்பெண் ணும் அவரது கணவர் ஷகீல் அஹமதின் தங்கையான ஆசியாவும் (11ஆம் வகுப்பு படிக்கிறார்) மே 29ஆம் தேதி தங்கள் ஆப்பிள் தோட்டத்தை பார்க்கச் சென்ற னர். சுற்றிப் பார்க்கச் சென்ற அவர்கள் திரும்பவே இல்லை. பீதியில் உறைந்த பெற்றோர்களும், உறவினர்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் நாலாபுறமும் தேடியும் இரண்டு இளம் பெண்களையும் கண்டுபிடிக்க முடிய வில்லை. மறுநாள் காலை இருவரின் உயிரற்ற உடல்களும் நல்லாரமிபாரா கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சோஃபியான் பகுதியே பரபரப்படைந்தது.
இரண்டு இளம் பெண்களின் உயிரற்ற உடல்களும் கிடந்த பகுதிக்கு வெகு அருகில்தான் மத்திய ரிசர்வ் படையின் முகாம் இருந்தது.
உடல்கள் கிடந்த நிலையைப் பார்த்த தும் இருவரும் பாயல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். குறிப்பாக இரண்டு இளம்பெண்களும் தங்களது பழத்தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் மத்திய ரிசர்வ் படை முகாமில் இருந்த சில கறுப்பு ஆடுகள் கடத்தி கற்பழித்துக் கொலை செய்தனரா என ஐயம் எழுப்பிய சோஃபியான் பகுதி மக்கள் பெரும் போராட்டத் தில் குதித்தனர்.
மாநில அரசுக்கு எதிராகவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு எதிராகவும் முழக்கங்களை சோஃபியான் பகுதி மக்கள் எழுப்பினர். வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப் பட்ட இரண்டு பெண்களின் உடல்களை யும் சோஃபியான் மாவட்ட மருத்துவ மனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை தாமதமானதால் மக்கள் மேலும் ஆத்திர மடைந்தனர். மருத்துவமனைப் பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காயின. உள்ளூர் மருத்துவர்கள் வேண்டாம், வேறு மாவட்டத்திருந்து மருத்துவர்களை வரவழைத்து உடல்களை ஆய்வு செய்ய வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக் கையை ஏற்று புல்வாமா மாவட்டத்தி ருந்து சிறப்பு மருத்துவர் படை அனுப்பப் பட்டது. இறுதியில், இளம்பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது மாவட்ட டாக்டர்கள் பிரிவு.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வெடித்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்பு படை முயன்றது பக்கவில்லை. அவர்களது போராட்டம் தொடர்ந்தது.
''காஷ்மீரில் வாழும் பெண்களின் கற்புக்கும் உயிருக்கும் பாதுகாப்பில்லை, இதை இந்த நாடு எவ்வாறு இன்னும் சகித்துக் கொண்டிருக்கிறது'' என காஷ்மீர் மாநில முக்கியப் பிரமுகரும், ஹுரியத் கமிட்டியின் தலைவருமான மீர் வாய்ஸ் உமர் பாரூக் தெரிவித்தார்.
மக்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ''எங்கள் அரசு வெளிப் படையான அரசு. சோஃபியான் பகுதி கற்பழிப்புக் கொலைகள் உள்ளிட்ட இதற்கு முன் நடைபெற்ற வன்கொடுமை களுக்கான முக்கியக் குற்றவாளிகளை யும் விரைவில் கொண்டு வந்து நிறுத்துவோம். சோஃபியான் கற்பழிப்புக் கொலைகாரர்களை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்து வோம்'' என உமர் அப்துல்லா தலைமை யிலான மாநில அரசு அறிவித்துள்ளது

No comments:
Post a Comment